Aggregator
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்!
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்!
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இசை நிகழ்வின் போது வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!
அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது.
பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது.
செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தனர்.
சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது.
ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார்.
மேலும் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்கிறார் அன்னலிங்கம் பிரேமசங்கர்!
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
பாஜகவுடன் கூட்டணி சேர பழனிசாமிக்கு அழுத்தம் தரப்படுகிறதா? அதிமுகவில் என்ன நடக்கிறது?
கட்டுரை தகவல்
எழுதியவர், சிராஜ்
பதவி, பிபிசி தமிழ்
16 மார்ச் 2025
"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்" என கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியலில் கவனம் பெறக் காரணம், சில மாதங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' என உறுதியாக கூறிவந்தனர்.
கடந்த ஆண்டு(2024) நவம்பரில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி "திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதேசமயம் பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?
செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?
ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா?
தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் என்ன?
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது." என்றார்.
கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்." என கூறியிருந்தார், பிறகு "தான் அதிமுகவை குறிப்பிட்டுப் பேசவில்லை" என விளக்கமும் அளித்தார்.
அதேநேரத்தில், அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடும் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, அதிமுக- பாஜக குறித்து வெளியாகும் இத்தகைய கருத்துகளும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளும் '2026 தேர்தலுக்காக, அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா?', 'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா' போன்ற கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக- பாஜக கூட்டணியும் பிரிவும்
படக்குறிப்பு,தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்த இந்த கூட்டணியால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.
ஆனால், தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது.
2023, ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அதிகரித்து வரும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள்15 மார்ச் 2025
ஔரங்கசீப் கல்லறையை அகற்றும் கோரிக்கை: மத ஒற்றுமை பற்றிய கவலையில் குல்டாபாத் மக்கள்15 மார்ச் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக, 2023 செப்டம்பரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
இதன் காரணமாக, 'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,' 2023 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பிறகு, 2024 பிப்ரவரியில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருந்தார்.
ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தது அதிமுக.
தமிழ்நாட்டில் அரசர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைத்த நெடுஞ்சாலைகளும் மைல்கற்களும் - ஒரு வரலாற்றுப் பார்வை15 மார்ச் 2025
தமிழில் ரூபாயை குறிக்க 'ரூ' பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?14 மார்ச் 2025
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை.
12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. சில தொகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே பெற்றிருந்த வாக்குகளின் கூட்டுத்தொகை அதிகமாக இருந்தது.
உதாரணமாக, தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம்.
ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை14 மார்ச் 2025
மாநில அரசின் சுமையும் மத்திய அரசு பங்களிப்பு குறைவும் - தமிழ்நாடு பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்15 மார்ச் 2025
'திமுக தான் ஒரே எதிரி'
பட மூலாதாரம்,@BABUMURUGAVEL
படக்குறிப்பு,திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம் என்கிறார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்
"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்." என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் கேட்டோம்.
"திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி கூறியது போலவே, 2026 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எங்களுடன் சேரலாம்." என்று கூறினார்.
ஆனால், எந்தக் கட்சி சேர்ந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று உறுதியாகக் கூறும் பாபு முருகவேல், "பாஜக குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. ஆனால், போட்டி எப்போதும் போல, அதிமுக Vs திமுக தான். அதில் எந்தவித சந்தேகமுமில்லை" என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டபோது, "அதிமுக-வுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இங்கு எந்தக் கட்சியும் இல்லை, கொடுக்கவும் முடியாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தலைமையின் முடிவு இருக்குமே தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களது கட்சியை வளைக்க முடியாது" என்று கூறினார்.
பட மூலாதாரம்,FACEBOOK/SRSEKAR
படக்குறிப்பு,ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்கிறார் எஸ்.ஆர்.சேகர்
இதுகுறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, "பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதன் ஆதரவு ஊடகங்களும் தெளிவாக உள்ளன. அதனால், இரு கட்சிகளின்ன் தலைவர்களும் பேசுவதை பலவாறாக திரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதையெல்லாம் கடந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு 'மெகா கூட்டணியை' பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். அதில் அதிமுக இருக்குமா என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் இணையலாம்." என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஓரணியில் சேரும் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், "அதற்கான பணிகளை பாஜக முன்னெடுக்கும். அந்தக் கூட்டணியை பாஜக ஒன்றிணைக்கும்" என்கிறார்.
சீனாவின் பிரபல உணவகத்தில் சூப்பில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் - நிறுவனம் செய்தது என்ன?15 மார்ச் 2025
இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்15 மார்ச் 2025
படக்குறிப்பு,கோப்புப் படம்
அதிமுகவில் செங்கோட்டையன் தனித்து செயல்படுகிறாரா?
கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.
அவைத் தலைவரை தனியே சந்தித்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று பதிலளித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்." என்றார்.
அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம்'
படக்குறிப்பு,அதிமுக- பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற அழுத்தம் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைத் தாண்டி தேர்தல் கணக்கு என்று பார்க்கையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைவதே இரு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும்" என்கிறார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும், தனித்தனியாக பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டும் பிரியன், "திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள் மக்களவைத் தேர்தலில் பார்த்துவிட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தோல்வி, இதை உணர்த்தியிருக்கும். எனவே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
செங்கோட்டையன் உள்பட அதிமுகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அவர்களும் அழுத்தம் கொடுக்கிறார்கள், அதனால் தான் 'திமுக மட்டுமே எதிரி' என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்." என்கிறார்.
நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஒருபுறம், சீமானின் 'நாம் தமிழர்' ஒருபுறம் என இருப்பதால், இவற்றைத் தவிர்த்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொண்டு அதிமுக- பாஜக 2026 தேர்தல் கூட்டணி அமையலாம் என்று பிரியன் கூறுகிறார்.
"ஒருவேளை 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட, மத்தியில் பாஜக 2029 வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் அவர்களை அதிமுக பகைத்துக் கொள்ள விரும்பாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாஜகவுடன் கூட்டணி சேர பழனிசாமிக்கு அழுத்தம் தரப்படுகிறதா? அதிமுகவில் என்ன நடக்கிறது?
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்; முன்னனி சோசலிசக் கட்சி
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்; முன்னனி சோசலிசக் கட்சி
Published By: VISHNU
17 MAR, 2025 | 04:49 AM
(எம்.வை.எம்.சியாம்)
பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுக்கு கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன. மேலும் காலம் தாழ்த்த வேண்டாம். சாட்சி வழங்கியவர்கள் வயது சென்று மரணிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? எனவே பார்த்து கொண்டிருக்க வேண்டாம். தற்போதைய அரசாங்கம் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் போது இரண்டு சட்டங்கள் உள்ளன. ஒன்று 1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம். மற்றையது 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டம். 1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் அந்த ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமை இரத்து செய்யுமாறு கூறும் அதிகாரம் இல்லை. அந்த 1978 ஆம் ஆண்டும் சட்டத்தில் அந்த அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவை சந்திரிக்கா ஆராய்ந்தார். அவரது நண்பரை பாதுகாப்பதற்காக 1978 கொண்டு வந்த சட்டம் அதுவல்ல. ஆனால் அது 1948 ஆம் ஆண்டு சட்டத்துக்கு அமையவே அது இடம்பெற்றது.
பட்டலந்த விவரகாம் தொடர்பான அதிகாரம் மேற்கொண்ட ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமையை நீக்குவதற்கான அதிகாரம் வழங்க்படபவில்லை. இங்கு ஆட்கொலை இடம்பெற்றுள்ளது. ஆட்கொலை, அரச துரோகங்களுக்கு வேறு சட்டங்கள் தேவையில்லை. அது அறிந்த காலப்பகுதியில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இங்கு வேறு விடயங்களை கூறிக்கொண்டிருக்க தேவையில்லை. ஆட்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுங்கள்.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு விட முடியும்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூற முடியும். எனவே ரணிலை கைது செய்யுங்கள். டக்லஸ் பிரீஸை கைது செய்யுங்கள். தான் மரணித்து விட்டதாக பகிரங்கப்படுத்தியுள்ளார். எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் இன்னும் உயிரிழக்கவில்லை. தாம் வாழும் போது உயிரிழந்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்புவது பாரிய குற்றமாகும். அங்கு இடம்பெற்ற துன்புறுத்தலில் சுனில் தெல்கொட பிரதான நபர்.அவரையும் கைது செய்யுங்கள். அங்கு கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுங்கள்.
அங்கு பணியாற்றி ஒய்வுப்பெற்ற ஒருவர் அண்மையில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். சிலர் பாலியல் ஆசைகளை நிறைவேற்றி விட்டு அந்த இளைஞர்களுக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன.
அதேபோன்று சுதத் சந்திரசேகரை கைது செய்யுங்கள். ரணிலின் சீடராகவே சுதத் சந்திரசேகர செயற்பட்டார். அந்த பதவியில் இருந்து விலகிச்செல்லும் அவர் கடிதமொன்றை எழுதி இருந்தார். நான் உங்களுக்காக பல விடயங்களை செய்துள்ளேன். பட்டலந்தவில் மக்களை நீங்கள் கொலை செய்யுமாறு கூறியதன் பின்னர் நான் அதனை செய்தேன் என அவரது கையெழுத்தினால் அவர் கடிதமொன்றை எழுதியுள்ளார். ஒருவர் தாம் கொலை செய்துள்ளதாக பகிரங்கமாக கூறும் போது ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை வேண்டுமா? எனவே நீதியை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள்.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல. இது ரணில் அல்லது வேறு எவரிடமோ மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல் அல்ல. எமது ஆயிரம் கணக்கான இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமானால் நாம் அதற்கு மன்னிப்பு வழங்குவோம். பட்டலந்த சித்திரவதை முகாம் ஆட்கொலை விவரகத்துடன் ரணில் மத்திரம் தொடர்பு படவில்லை. மாத்தளை விஜய கல்லூரி புதைகுழி சம்பவம் தொடர்பில் கோட்டாபய பொறுப்புக்கூற வேண்டும். எனவே நீதி கிடைக்கவேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். அப்பாவி மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை சமூக அறிந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது அரசியல் பழிவாங்கல அல்ல என்றார்.
தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடாத்தி நீதி வழங்குமா தேசிய மக்கள் சக்தி?
தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடாத்தி நீதி வழங்குமா தேசிய மக்கள் சக்தி?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்த இருட்டில் இருந்து சூரிய ஒளிக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜேவிபியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள் ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன.
வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 -2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகளை மிஞ்சிய சத்துருக் கொண்டான் கொக்கடிச்சோலை கொண்ட வட்டவான், கரடியனாறு, கல்லடி போன்ற பல முகாம்கள் சித்தரவதை படுகொலைகள் என்பவற்றுக்குப் பெயர் போன முகாம்களாக இருந்தன.
ஒரே இரவில் 4 கிராமங்களைச் சேர்ந்த 186 பொதுமக்களை சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலைகள் செய்த பெருமை சத்துருக் கொண்டான் இராணுவ வதை முகாமுக்குண்டு. குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள்,உடல் ஊனமுற்றவர்கள் என்ற பேதமில்லாமல் சமத்துவப் படுகொலை செய்த கொடூரம் சத்துருக் கொண்டான் வதைமுகாமுக்கு உண்டு.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. கொலைகள் சித்திரவதைகள் ஸ்ரீலங்காவின் வன்மக்கலைகள் என்று சொலத்தக்க விதத்தில் சட்டபூர்வமான அதிகாரம் பெற்ற சக்திகளாலும் துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன.
ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - நிராகரித்தார் ரணில்
அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
16 MAR, 2025 | 05:16 PM
(இராஜதுரை ஹஷான்)
பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இந்த முரண்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழு வரை தொடர்கிறது. இதனால் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது. நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என்று ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்கள் கருதுகின்றனர்.
தமக்கு இணக்கமானவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கும் அளவுக்கு பொலிஸ் சேவை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை மாத்திரமல்ல, பாதுகாப்பு சேவை உட்பட புலனாய்வு பிரிவும் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கு பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இது உலக நகைச்சுவையாகும். தேசபந்து தென்னகோனை பொலிஸார் கைது செய்யமாட்டர்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெற்றுக்கொள்வதற்கு தேசபந்துக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதுவரையில் அவர் கைது செய்யப்படமாட்டார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் பென்சில் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.