Aggregator

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

3 months 2 weeks ago

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

மார்ச் 16, 2025

-கு.கணேசன்

32-9.jpg?resize=678%2C395&ssl=1

சிகரெட், பீடி, மது… இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “Tonic எழுதிக் கொடுங்க, டொக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டொக்டர்களிடம் ஓடிவருவார்கள்.

“நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டொக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்!

அதே பெற்றோர், குழந்தை பருவ வயதுக்கு வந்த பிறகு ஒல்லியாகிவிட வேண்டும் என்பார்கள். “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான், டொக்டர். எப்பவும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஏதாவது மருந்து கொடுத்து உடம்பைக் குறைங்க” என்று மறுபடி டொக்டரிடம் வருவார்கள்.

அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் இந்தப் பரபரப்பு அதிகமாகிவிடும். குழந்தை குண்டாக இருப்பதால் வரக்கூடிய திருமணத் தடை, கேலி, கிண்டல் போன்ற சமூகக் கவலைகள் பெற்றோருக்கு அதிகரித்துவிடும். அதேநேரம், உடல் எடை அதிகமானால் சமூகக் கவலைகளைத் தாண்டி மருத்துவரீதியாகக் கவலைப்படுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மறந்துபோகும் திசுக்கொழுப்பு:

மை இல்லாமல் பேனாவால் எழுத முடியாது. அது மாதிரிதான், கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேநேரம், வெள்ளைத்தாளில் பேனாமை கொட்டிவிட்டால் பார்க்கச் சகிக்காது. அது மாதிரிதான், கொழுப்பின் அளவு கூடினாலும் அது தரும் ஆரோக்கிய ஆபத்துகளைத் தடுக்க முடியாது. கொழுப்பு என்றதும் வயிற்றுக் கொழுப்புதான் நம் நினைவுக்கு வருகிறது.

உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம். குறிப்பாக, இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றித் தேவையில்லாமல் படர்ந்திருக்கிற திசுக்கொழுப்பும் நமக்கு எதிரிதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

கொழுப்பைச் சுமப்பவர் யார்?

உடலில் கொழுப்பு கூடுகட்டுவதைப் பொறுத்து நம் உடல் அமைப்பை ‘Apple, pear, inverted triangle, ruler, hour-glass’ என ஐந்து வகையாகப் பிரிக்கிறது நவீன மருத்துவம். இவற்றில் நான்காவது வகையினர்தான் (Ruler) சரியான உடல் அமைப்பைப் பெற்றவர்கள்; தலையிலிருந்து பாதம்வரை அளவெடுத்து வடித்த சிலை மாதிரி இருப்பவர்கள். அதாவது, தேவை இல்லாமல் கொழுப்பைச் சுமக்காதவர்கள். மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் உடலில் கொழுப்பைச் சுமப்பவர்கள்தான் (Obesity). இவர்களில்கூடக் கொழுப்பை வயிற்றில் சுமக்கிறார்களா, இடுப்பில் சுமக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

ஏனெனில், இடுப்பில் கொழுப்பு சேருகிறவர்களுக்குத்தான் இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிகச் சாத்தியம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ‘இடுப்பின் அளவு அதிகரித்தால் வாழும் நாள் குறைந்துவிடும்’ (Increase in waist line will decrease the life line) என்கின்றன இந்த ஆய்வுகள். இதனால்தான் இப்போதெல்லாம் “வயிற்றில் சேரும் கொழுப்பை மட்டும் பார்க்காதீர்கள்; உங்கள் இடுப்பின் அளவையும் கவனியுங்கள்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

33-11.jpg?resize=450%2C453&ssl=1

உங்கள் எடை சரியா?

மருத்துவத்துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உயரத்துக்கு இருக்க வேண்டிய சராசரி எடை அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கணக்கு இருக்கிறது: ஆண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 100. பெண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 105. உதாரணமாக, நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் உயரம் 157 செ.மீ. என்றால், அதிலிருந்து 100ஐக் கழியுங்கள். 57 கிலோ கிராம் என்பது உங்கள் சராசரி உடல் எடை. இதில் 20% எடை அதிகமாக இருந்தால் அதை ‘உடல் பருமன்’ என்கிறோம்.

எது உடல் பருமன்?

ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பதற்கு மூன்றெழுத்துச் சமன்பாடு ஒன்றும் இருக்கிறது. அது தான் ‘பி.எம்.ஐ’ (BMI – Body Mass Index). அதாவது, உடல் திண்மக் குறியீடு. பி.எம்.ஐ (BMI) = உடல் எடை (கிலோ கிராமில்) / உயரம் 2 (மீட்டரில்). உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 23-24.9க்குள் இருந்தால், அது அதிக உடல் எடை (Over weight); 25 இற்கும் அதிகமாக இருந்தால், அது உடல் பருமன் (Obesity). ஆனால், உடல் பருமனை இப்படிக் கணிப்பது துல்லியமானதா என்பது இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

ஒருவருடைய ‘பி.எம்.ஐ’ அளவானது, அவருடைய தசை எடை எவ்வளவு, திசுக்கொழுப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, எடை தூக்கும் வீரருக்கு அதிக எடை இருந்தால், அதற்கு அவரது கட்டுக்கோப்பான தசைகள் காரணமாகலாம்; திசுக்கொழுப்பு காரணமாகச் சாத்தியமில்லை. இன்னொன்று, ‘பி.எம்.ஐ’ அளவு சரியாகவே இருக்கிறவர்களுக்கும் திசுக்கொழுப்பு கூடுதலாக இருக்கச் சாத்தியம் இருக்கிறது. ஒருவர் உடலில் 10% திசுக்கொழுப்பு இருப்பது இயல்பு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2023 இல் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒல்லியாகவும் இருந்து, ‘பி.எம்.ஐ’ ஆரோக்கிய வரம்புக்குள் இருந்த பலருக்கும் திசுக்கொழுப்பு 20%க்கும் கூடுதலாக இருப்பது தெரிந்தது. இப்படி இருப்பவர்களுக்கு ‘டோஃபி’ (TOFI) என்று தனிப்பெயர் உண்டு. அதாவது, Thin Outside and Fat Inside. இப்படி ஒல்லியாக இருப்பவர்கள், தங்கள் ‘பி.எம்.ஐ’ அளவு சரியாக இருந்தாலும், உடல் பருமன் உள்ளவர்கள்போலவே இதய ஆரோக்கியம் காப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி.

கவனம் கோரும் ஒல்லி உடம்பு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவை உறுதிப்படுத்தும் விதமாக என்னிடம் வந்தவர் 50 வயதுள்ள மந்திரமூர்த்தி. அவர் ஒல்லியாக இருப்பதால் உடலில் திசுக்கொழுப்பு சேரவும், இதயப் பிரச்சினைகள் ஏற்படவும் தனக்குச் சாத்தியம் இல்லை என்று நம்பினார். அதனால், அவரது வயதுக்குத் தேவையான உடல் பரிசோதனை எதையும் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள், நடு நெஞ்சில் வலிக்கிறது என்று என்னிடம் வந்தார் மந்திரமூர்த்தி. ‘இசிஜி’ (Electrocardiogram – ECG) எடுத்துப் பார்த்தேன். மாரடைப்பு பாதிப்பு அதில் தெரிந்தது. மற்ற பரிசோதனைகளையும் பார்க்கச் சொன்னேன். அவருக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 22.

இது இயல்பான அளவுதான். ஆனால், இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருந்தது. இரத்தப் பரிசோதனைகளில் அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; கெட்ட கொலஸ்டிரால் (LDL) கூடியிருந்தது; நல்ல கொலஸ்டிரால் (HDL) குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஆக மொத்தத்தில், ஒல்லியாக இருந்த மந்திரமூர்த்தி தன்னுடைய உடலைக் கவனிக்கத் தவறியதால், உடலுக்குள் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணரத் தவறிவிட்டார். இதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். “ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புத்தன்மை இருக்கும்; கொலஸ்டிரால் கூடும்; சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வரக்கூடும்; இதயம் பழுதாகிற சாத்தியமும் உண்டு” என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மந்திரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

35-2.jpeg?resize=678%2C285&ssl=1

சரியான இடுப்புச் சுற்றளவு:

உடல் பருமனை நிர்ணயிப்பதில் ‘பி.எம்.ஐ’ பிரச்சினை ஆனதால், இப்போது இடுப்புச் சுற்றளவைக் (Waist circumference) கணிப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கும் வயிற்றுக் கொழுப்பு, உறுப்புக் கொழுப்பின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஆகவே, இனிமேல் ‘பி.எம்.ஐ’ அளவோடு இடுப்புச் சுற்றளவையும் கவனிப்பது அவசியமாகிறது. ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவைத் தாண்டுபவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். இன்னும் சொன்னால், இவர்கள் இதய பாதிப்பு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இன்னும் 3 அளவுகள்!

‘பி.ஆர்.ஐ’ (BRI – Body Roundness Index): உங்கள் உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை, இணையத்தில் இதற்கென உள்ள கல்குலேட்டரில் பதிவேற்றினால், ‘பி.ஆர்.ஐ’ அளவைக் காண் பிக்கும். இது 4.45 – 5.46க்குள் இருக்க வேண்டும். இது 10ஐத் தாண்டினால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்குச் சாத்தியம் உண்டு.

‘பிசிஏ’ (BCA – Body Composition Analysis): எடை பார்க்கும் இயந்திரம் போன்று இருக்கும் இந்த இயந்திரத்தின் மீது நீங்கள் ஏறி நின்றால், உங்கள் உடலுக்குள் இருக்கும் உறுப்புக் கொழுப்பு, தசைக் கொழுப்பு, வயிற்றுக் கொழுப்பு எனத் தனித்தனியாகத் திசுக் கொழுப்பின் அளவைச் சொல்லிவிடும்.

வயிற்றுப் பகுதி எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையிலும் வயிற்றுக் கொழுப்பின் அளவை அறியலாம்.

https://chakkaram.com/2025/03/16/நீங்கள்-கொழுப்பைச்-சுமப்/

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 months 2 weeks ago
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க’ என்று தலைப்பு. இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட — ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில் கருத்து வெளியிட்டார். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாக கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு இடதுசாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும். ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’ என்ற தலைப்புடன் நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான வர்க்கக் கண்ணோட்டத்தில் திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும் அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும் கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’ என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு. ‘அநுரா குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ் ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்; “அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே. “டொனால்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார். “லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு’ மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.” இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change ) இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. தன்னை ஒரு மார்க்சிய — லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த — ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும் உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்த தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்த கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சி அமைந்தது. கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின் பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று, கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும் எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும் கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட அவ்வாறு கூறவில்லை. இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள். ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார். “இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்த தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட — மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது. “காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது ; அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும். “குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான — இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார். ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ‘ முறைமை மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’ ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும் மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள். உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. https://arangamnews.com/?p=11905

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 months 2 weeks ago

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

March 17, 2025

புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில்  எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு  ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க’ என்று  தலைப்பு. 

இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட — ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து  மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து  எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை  நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில்  கருத்து வெளியிட்டார்.

திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாக  கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு  இடதுசாரி என்று  அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு  வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும். 

 ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’  என்ற தலைப்புடன்  நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான  வர்க்கக் கண்ணோட்டத்தில்  திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும்  அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும்  கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’  என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு. 

‘அநுரா குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ்  ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்; 

“அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே.

“டொனால்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை  முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார்.

“லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு’ மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.”

இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர்.  

அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான  திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change )  இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.  தன்னை ஒரு மார்க்சிய — லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம். 

ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த —  ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும்  உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க  முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்த தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி  மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட  படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்த கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சி அமைந்தது. 

கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக  ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,   பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின்  பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று,  கோட்டாபய  நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு  கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும்  எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான  முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை  தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும்  கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட  அவ்வாறு கூறவில்லை. 

இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும்  ஆதரவாளர்களில்  ஒரு  பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள். 

ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான  பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார்.

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்த தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட — மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான  பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத  சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது. 

“காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது ;  அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும்.

“குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான — இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான  வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார்.

‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ‘ முறைமை  மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த  ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘  ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’  ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில்  வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய  திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். 

ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும்  மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. 

இலங்கையில் புதிய அரசியல்  கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும்  அதிகார துஷ்பிரயோகமும்  இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய  மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக்  காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை  தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. 

பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை  நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள். 

உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது.

https://arangamnews.com/?p=11905

வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்

3 months 2 weeks ago
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம் இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழாவை ஆய்வு செய்ய வந்தது. கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மற்றும் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இரண்டு தனித்தனி அமர்வுகளாக நுவரெலியா டவுன் ஹால் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்த "இயேசு வாழ்கிறார் சுவிசேஷ சர்வதேசத்தின் 47ஆவது வருடாந்திர பைபிள் கருத்தரங்கு" என்ற நிகழ்வை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் ஞாயிற்றக்கிழமை (16) டெய்லிமிரரிடம், சபையில் இருந்த இந்திய மற்றும் மலேசிய ஆண் போதகர்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் நாட்டில் மத நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த போதகர் மற்றும் இசைக்கலைஞர் ஜோயல் தாமஸ்ராஜ் மற்றும் மலேசியாவில் உள்ள பெட்ரா எவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் சர்ச்சின் நிறுவனர் மற்றும் தலைவர் போதகர் மோசஸ் மெல்கிசெடெக் ஆகியோர் ஆசீர்வாத விழாக்களில் பங்கேற்க எளிய வருகையின் போது சுற்றுலா விசாவில் கடந்த வாரம் கொழும்புக்கு வந்ததாகக் கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஆசீர்வாத விழாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்ததை டெய்லிமிரர் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. அங்கு வருகை விசாக்கள் மட்டுமே வைத்திருந்த இரண்டு இந்திய போதகர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது, ஒரு வாரம் கழித்து நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழா திட்டமிடப்பட்டிருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் அறிந்து, வெள்ளிக்கிழமை அதைக் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மத போதகர்களிடம், அவர்கள் நாட்டில் இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டது, மேலும் இலங்கையில் ஏதேனும் மத விளம்பரப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சிறப்பு மத விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியிருந்தனர். இரண்டு போதகர்களும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை விட்டு வெளியேறியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர்களின் உள்ளூர் அழைப்பாளர்களுக்கு கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெளிநாட்டு-மதபோதகர்கள்-வெளியேற்றம்/175-353864

வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்

3 months 2 weeks ago

வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்

இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின்  புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழாவை ஆய்வு செய்ய வந்தது.

கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மற்றும் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இரண்டு தனித்தனி அமர்வுகளாக நுவரெலியா டவுன் ஹால் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்த "இயேசு வாழ்கிறார் சுவிசேஷ சர்வதேசத்தின் 47ஆவது வருடாந்திர பைபிள் கருத்தரங்கு" என்ற நிகழ்வை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் ஞாயிற்றக்கிழமை (16) டெய்லிமிரரிடம், சபையில் இருந்த இந்திய மற்றும் மலேசிய ஆண் போதகர்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் நாட்டில் மத நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த போதகர் மற்றும் இசைக்கலைஞர் ஜோயல் தாமஸ்ராஜ் மற்றும் மலேசியாவில் உள்ள பெட்ரா எவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் சர்ச்சின் நிறுவனர் மற்றும் தலைவர் போதகர் மோசஸ் மெல்கிசெடெக் ஆகியோர் ஆசீர்வாத விழாக்களில் பங்கேற்க எளிய வருகையின் போது சுற்றுலா விசாவில் கடந்த வாரம் கொழும்புக்கு வந்ததாகக் கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஆசீர்வாத விழாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்ததை டெய்லிமிரர் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. அங்கு வருகை விசாக்கள் மட்டுமே வைத்திருந்த இரண்டு இந்திய போதகர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது, ஒரு வாரம் கழித்து நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழா திட்டமிடப்பட்டிருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் அறிந்து, வெள்ளிக்கிழமை அதைக் கண்டறிந்தனர்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மத போதகர்களிடம், அவர்கள் நாட்டில் இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டது, மேலும் இலங்கையில் ஏதேனும் மத விளம்பரப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சிறப்பு மத விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியிருந்தனர்.

இரண்டு போதகர்களும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை விட்டு வெளியேறியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர்களின் உள்ளூர் அழைப்பாளர்களுக்கு கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/வெளிநாட்டு-மதபோதகர்கள்-வெளியேற்றம்/175-353864

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்

3 months 2 weeks ago
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல் பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர் ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கோவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னர் வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றனர். அதிகாலை 06.00 பிறகு கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர் சம்பவம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் போதிலும் நடவடிக்கை எடுக்க தவறியதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெற்றிலைக்கேணியில்-மீனவர்கள்-முறுகல்/175-353868

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்

3 months 2 weeks ago

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்

image_2587f7b650.jpg

பு.கஜிந்தன்

 வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர்

ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது 

வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கோவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது 

குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது

ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னர் வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றனர்.

அதிகாலை 06.00 பிறகு கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்

இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர்

சம்பவம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் போதிலும் நடவடிக்கை எடுக்க தவறியதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/வெற்றிலைக்கேணியில்-மீனவர்கள்-முறுகல்/175-353868

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

3 months 2 weeks ago
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
போட்டியிடுகின்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி வெல்லும் editorenglishMarch 17, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோம். அந்த வகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். https://globaltamilnews.net/2025/213534/

மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!

3 months 2 weeks ago
மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது! மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425382

மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!

3 months 2 weeks ago

New-Project-220.jpg?resize=750%2C375&ssl

மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!

மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1425382

உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!

3 months 2 weeks ago
உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும். இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. மேலும், இன்று தொடங்கும் க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். https://athavannews.com/2025/1425405

உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!

3 months 2 weeks ago

New-Project-226.jpg?resize=750%2C375&ssl

உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது.

இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

மேலும், இன்று தொடங்கும் க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்.

https://athavannews.com/2025/1425405

கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு!

3 months 2 weeks ago
கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு! கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) கொஹுவலாவில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மாணவனை மிரட்டி, அந்த நபர் மாணவனின் பணப்பையைத் திருட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், அருகிலுள்ள மக்கள் குறித்த நபரை கற்களால் தாக்கினர், அதையடுத்து அவர் தப்பிச் சென்றார். இருப்பினும், நேற்று (16) மாலை நுகேகொடையில் உள்ள நடைபாதையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையின் பின்புறம் மற்றும் காதுகளுக்கு அருகில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425475

கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை!

3 months 2 weeks ago
கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை! கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக கேதார்நாத் சட்டமான உறுப்பினர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பொறுப்பு அமைச்சர் சவுரப் பகுகுணா அண்மையில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் நௌடியல் குறிப்பிட்டார். இதன் போது சில பங்கேற்பாளர்கள், இந்து அல்லாத நபர்கள் கேதார்நாத் தாமின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறினர். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அந்த இடத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பாஜக தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார். சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30 ஆம் திகதி அக்ஷய திருதியை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படும். கேதார்நாத் ஆலயத்தின் வாயில்கள் மே 2 ஆம் திகதியும், பத்ரிநாத் ஆலயத்தின் வாயில்கள் மே 4 ஆம் திகதியும் திறக்கப்படும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1425385