Aggregator
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மதுபான ஊழலுக்கு எதிராக இன்று (17) திட்டமிட்ட போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே தலைவர்கள் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.
தனது தடுப்புக்காவல் குறித்து பேசிய சௌந்தரராஜன்,
அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எனது 300 காரியகர்த்தாக்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வெளியே செல்வதை அவர்கள் விரும்பவில்லை.
டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் 1,000 கோடி (இந்திய ரூபா) ஊழலை நாங்கள் கண்டிக்கிறோம்.
நான் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார்.
இந்தக் கைதுகளைக் கண்டித்து, திமுக அரசு பயத்தில் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பதிவில் அவர்,
“பயத்தால் நடுங்கும் திமுக அரசு, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தை அறிவித்ததாலா நீங்கள் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? திகதி அறிவிக்காமல், திடீரென்று ஒரு நாள் போராட்டம் நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிக விலை நிர்ணயம், கையூட்டு மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று குற்றப் பத்திரிகைகளை ED பதிவு செய்துள்ளது.
இதில் டாஸ்மாக் நடவடிக்கைகளில் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல சோதனைகளை இந்த நிறுவனம் நடத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசு கடுமையாக மறுத்து, அவற்றை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்துள்ளது.
பாஜகவின் இந்தப் போராட்டம் சர்ச்சையைத் தூண்டும் முயற்சி என்றும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களை மத்திய அமைப்புகள் குறிவைப்பதாகவும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் - பாப்பரசர் அனுமதி வழங்கினார்
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் - பாப்பரசர் அனுமதி வழங்கினார்
17 MAR, 2025 | 03:27 PM
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை.
கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் சேர்ப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை ஆராயவுள்ளது.
இந்த சீர்திருத்தங்களை ஆயர்கள் பேரவை என்ற அமைப்பு ஆராயும்.பரிசுத்த பாப்பரசர் தனது பதவிக்காலத்தில் பணி நிகழ்ச்சி நிரலை இந்த குழு மூலமே முன்னெடுத்துவருவார்.
சமீபகாலமாக பாப்பரசர் தனது புதுப்பித்தல் செயற்பாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை ஈடுபடுத்த முயன்றுவந்துள்ளார்.
இதேவேளை பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது படத்தை முதல்தடவையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் திருப்பலியை நிறைவேற்றினார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடைத்து வைப்பதற்காக, பயன்படுத்தப்பட்ட வனப்பகுதியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள தனிமை சிறையிலேயே அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் இப்படி கைதிகளை வேறு நாட்டு சிறைக்கு அனுப்பிய நடவடிக்கை இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் சட்டத்தை 14 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை சிறையில் வைத்து பராமரிக்கத் தேவையான நிதியுதவியையும் அளிக்க எல் சால்வடார் நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
5 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போர் நேரத்தில் நாஜி பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இன்னமும் ஒரு அடிப்படையில் ரேடியோ சேவையாகவே தொடர்கிறது. ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இதன் சேவைகளைப் பெறுவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் உள்ளனர்
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ராமோவிட்ஸ் பேசுகையில், அவர் உட்பட அந்நிறுவனத்தின் 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"டிரம்பின் இந்த உத்தரவால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அதன் கடமையை செய்ய முடியவில்லை. குறிப்பாக இரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான செய்திகளை பரப்ப பில்லியன் டாலர் பணத்தை செலவிட்டு வருகின்றன." என்று அப்ராமோவிட்ஸ் கூறுகிறார்.
"இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான ஊடகங்களுக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுகிறது" என்று அமெரிக்க ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய தேசிய பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.
"ஒரே இரவில் ஒட்டுமொத்த செய்தியறையும் முடக்கப்படுமானால், பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்து என்ன சொல்ல முடியும்" எனவும் கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு, "ஒரு நிறுவனம் துண்டாடப்பட்டுள்ளது. இது வெறும் ஊழியர் தொடர்புடையது அல்ல மாறாக சுதந்திரமான இதழியலின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அடிப்படை மாற்றம்" என குற்றம் சாட்டியுள்ளது.
மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக இந்த முகமைகள் செயல்படுகின்றன
அதிபரின் நடவடிக்கையானது விஓஏ எனப்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிறுவனமான உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமையை (US Agency for Global Media) குறிவைக்கும் விதமாக உள்ளது. இந்நிறுவனம் Radio Free Europe மற்றும் Radio Free Asia போன்ற லாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. கம்யூனிஸ்ட் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் இவற்றின் செயல்பாடு இருக்கும்.
உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமை (USAGM) தனது மேலாளர்களை "பணியை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மனித வளத்தை குறைத்துக் கொண்டு விதிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்" என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் கூற்றுப்படி, யூஎஸ்ஏஜிஎம் மனிதவள இயக்குநர் கிரிஸ்டல் தாமஸின் மின்னஞ்சல் மூலம் விஓஏ பணியாளர்களுக்கு இந்த விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்-க்கு கிடைத்த தகவலின்படி, அனைத்து நிரந்தரமற்ற பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குவதற்கான பணம் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் ரேடியோ ஃப்ரீ யூரோப் அல்லது ரேடியோ லிபர்டி ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சிபிஎஸ்-க்கு கிடைத்துள்ளது. அந்நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்ஏஜிஎம் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விஓஏ மற்றும் இதர நிலையங்களின் கூற்றுப்படி தங்களுக்கு 400 மில்லியன் நேயர்கள் இருப்பதாக கூறுகின்றன. இது பிரிட்டன் அரசின் பகுதி நிதியோடு செயல்படும் பிபிசியின் உலக செய்தி சேவைக்கு இணையானது.
ஆலோசகராக நியமிக்கப்பட்ட டிரம்பின் விசுவாசி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,டிரம்ப்பின் தீவிர விசுவாசியான கரி லேக் யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்
செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சரான ஜான் லிப்பாவ்ஸ்கி, பராகுவே-யில் இயங்கி வரும் ரேடியோ ஃப்ரீ யுரோ/ரேடியோ லிபர்ட்டியை தொடர்ந்து இயங்கச் செய்ய ஐரோப்பிய யூனியன் உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
திங்கட் கிழமை நடைபெறும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த ஒலிபரப்பு சேவைகளை பகுதி அளவாவது இயங்கச் செய்ய வழிகளை காணுமாறு கேட்டுக் கொள்வேன் என செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
பெரும் பணக்காரரும் டிரம்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவருமான ஈலோன் மஸ்க் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் தமது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் விஓஏ மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
வீடற்றவர்களை பாதுகாக்கும் திட்டம், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கான நிதி உள்ளிட்ட அமெரிக்க அரசின் பிற ஃபெடரல் முகமைகளுக்கான நிதியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
டிரம்ப் தமது முதல் ஆட்சிக்காலத்தின் போதும் விஓஏ குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னுடைய தீவிர விசுவாசியான கரி லேக்-ஐ யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமித்தார்.
அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் பலவும் தனக்கு எதிராக பக்கச் சார்புடன் செயல்படுவதாக அதிபர் டிரம்ப் வழக்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். நீதித்துறையில் பேசும் போது சிஎன்என் மற்றும் எம்எஸ்என்பிசி ஆகிய செய்தி முகமைகளை "ஊழல்" என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டார்.
நாஜி மற்றும் ஜப்பானிய பிரசாரங்களை எதிர்கொள்வதற்கான உத்தரவோடு 1942 ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்டது. இதன் முதல் ஒளிபரப்பு பிபிசியால் கடனாக வழங்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மீட்டரில் தொடங்கப்பட்டது என்பதன் மூலம் இதன் குறைந்தபட்ச நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜெரால்டு ஃபோர்டு , விஓஏவின் தலையங்க சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொது சாசனத்தில் 1976-ஆம் ஆண்டு கையெழுத்திட்டார்.
ராணுவ தொடர்பற்ற ஒளிபரப்புகளை மேற்பார்வையிடும் நிர்வாகிகள் வாரியம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டத் திருத்தம் ஒன்று விஓஏ மற்றும் துணை நிறுவனங்கள் அமெரிக்காவில் ஒளிபரப்பைத் தொடங்க அனுமதி வழங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விமானப்படை கோப்பிரல் உட்பட இருவர் வெடிகுண்டுகளுடன் கைது
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விமானப்படை கோப்பிரல் உட்பட இருவர் வெடிகுண்டுகளுடன் கைது
வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது
கனகராசா சரவணன்
மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிசர் சோதனையிட்டனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒருகிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்ததுடன், டபிள்யூ பி.கே.ஜே. 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை
பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை
17 MAR, 2025 | 05:15 PM
பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது.
1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன.
37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது.
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே இது போன்ற வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார்.
இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டது.
ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது.
சித்திரவதை என்பது சாதாரன விடையமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும் ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடையங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச் சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன.
ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும்.
ஆனால் உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியைத் தேடுகின்றீர்கள்; எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்போம் என்கிறார் சாமர சம்பத்
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என பட்டலந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம்.
1989 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா?
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையும் ஆராய வேண்டும்.
மேலும் தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்
17 MAR, 2025 | 04:27 PM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19) முதல் சனிக்கிழமை (22) வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றது.
இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அதன் முழு விபரமும் வருமாறு:
வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர்.
மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.
சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka - 1871-2022)” என்ற தலைப்பிலும், மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.