Aggregator

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

3 months 2 weeks ago

newproject-2024-09-24t073344-516-1727143

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

பணிக்கு வருகை தராமல்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425746

அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா!

3 months 2 weeks ago

skynews-donald-trump-trump_6857115.jpg?r

அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா!

ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை  உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு  தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425726

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago

New-Project-251.jpg?resize=750%2C375&ssl

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன.

லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன.

இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“இது டெஸ்லா வசதியின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்” என்று லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தீப்பிடித்த வாகனங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, சம்பவத்தை “பயங்கரவாதம்” என்று அழைத்தார்.

அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எலோன் மஸ்க் அழுத்தம் கொடுத்ததற்காக அவர் எதிர்விளைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் வந்துள்ளன.

இந்த சம்பவங்கள் டெஸ்லாவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன, நிறுவனம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக விற்பனை சரிவை எதிர்கொள்கிறது.

கடந்த வாரம், எலோன் மாஸ்க்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக ட்ரம்ப் ஒரு டெஸ்லா வாகனத்தை வாங்கினார்.

இதற்கிடையில், டெஸ்லாவின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘Dogequest’ என்ற டாக்ஸிங் வலைத்தளம், டெஸ்லா உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தளம் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா உரிமையாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படுத்துகிறது.

https://athavannews.com/2025/1425732

மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு

3 months 2 weeks ago

honduras-plane-crash.jpg?resize=750%2C37

மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக  விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும்  ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1425697

போதை  மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி!

3 months 2 weeks ago
போதை மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி! குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸ் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது. எனவே, அதை உணர்ந்து பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/போதை_%C2%A0மாபியாக்களை_அழிக்க_புதிய_சட்டங்கள்:_ஜனாதிபதி_அநுர_உறுதி!

போதை  மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி!

3 months 2 weeks ago

போதை  மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி!

1371447251.jpeg

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலிஸ் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது. எனவே, அதை உணர்ந்து பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற  அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

https://newuthayan.com/article/போதை_%C2%A0மாபியாக்களை_அழிக்க_புதிய_சட்டங்கள்:_ஜனாதிபதி_அநுர_உறுதி!

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

3 months 2 weeks ago
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாராளுமன்றம் நடவடிக்கை! பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது. குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார். https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பிக்கு-எதி/

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

3 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் editorenglishMarch 19, 2025 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை. அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும். அந்தச் சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்த வகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகிறது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம். எனவே மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். https://globaltamilnews.net/2025/213621/

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

3 months 2 weeks ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

editorenglishMarch 19, 2025

Nalinda-Jayathissa.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில்  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை.

அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.

அந்தச் சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்த வகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகிறது.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.

கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம்.

எனவே மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

https://globaltamilnews.net/2025/213621/

பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

3 months 2 weeks ago
இதே கல்வி முறைதான் ஜேர்மனியில் உள்ளது. ஐந்தாம் வகுப்பில்... பிள்ளைகளை ஏற்ற கல்விக்கு பிரித்து அனுப்பி விடுவார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகளை ஒரு பாடசாலைக்கும், நடுத்தரமானவர்கள் மற்றைய பாடசாலைக்கும், அதற்கு கீழானவர்கள் வாகனம் திருத்துதல், கட்டிடிட வேலை போன்ற தொழில் கல்விக்கும் தயார் படுத்தத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகுப்புகளில், இரண்டு வருடங்களில் தமது திறமையை காட்டினால் நன்றாக படிக்கும் பாடசாலைக்கும் அவர்களின் விருப்பத்துடன் அனுப்பி வைப்பார்கள். இது... மாணவர்களுக்கு சிறந்த பலனை தருகின்றது. தொழில் கல்வி பயின்ற பல மாணவர்கள்... தமது சொந்தக்காலில் பலரை வைத்து வேலை வழங்கும் முதலாளிகளாகவும் பரிணமித்து உள்ளார்கள்.

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

3 months 2 weeks ago
உண்மைதான் ஏராளன். பொலிஸ்காரன் இன்னுமொரு போலிஸ்காரனை காட்டிக் கொடுக்க மாட்டான். அவர்கள் தமிழர்களைப் போல்... கோடாலிக் காம்புகள் அல்ல. 😂

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண் Published By: DIGITAL DESK 3 19 MAR, 2025 | 09:23 AM முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பல நாட்களாக லைமறைவாக இருந்து வந்த தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை கோரி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை 17 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து, தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். https://www.virakesari.lk/article/209607

பாஜகவுடன் கூட்டணி சேர பழனிசாமிக்கு அழுத்தம் தரப்படுகிறதா? அதிமுகவில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? பின்னணியில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மார்ச் 2025 "தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்." செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது. அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது. அப்போது, "எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது," எனக் கூறினார். இரண்டு நாள் இடைவெளியில் என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? செங்கோட்டையன் தரப்பு சொல்வது என்ன? அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 15) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம் பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல் ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 17) உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின. சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 16 பேர் முன்மொழிந்தனர். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டுத் தனது இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றுவிட்டார். பின்னர் துணை சபநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது குரல் வாக்கெடுப்பு தொடர்பாக துணை சபாநாயகர் கூறிய அறிவிப்பு, அ.தி.மு.க சார்பில் தேர்வான புதிய உறுப்பினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. "ஆனால் இதுதான் நடைமுறை" என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். "மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்" என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை" எனக் கூறினார். ஷேக் ஹசீனா இந்தியாவில் மாதக்கணக்கில் தங்கியிருப்பது ஏன்? அடுத்து என்ன?18 மார்ச் 2025 கனடாவின் புதிய பிரதமர் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவாரா? குடியேற்ற கெடுபிடிகள் தளருமா?18 மார்ச் 2025 சமாதானம் பேசிய சீனியர்கள் பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு,அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேல் இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் பேசிய கருத்துதான் எங்களின் நிலைப்பாடு. ஒன்றும் இல்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார். "கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறதே?" எனக் கேட்டபோது, "கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்," எனக் கூறினார். டாஸ்மாக்: அமலாக்கத் துறை சோதனை ஏன்? மது விற்பனையில் உள்ள பிரச்னைகள் என்ன?18 மார்ச் 2025 சென்னையில் புதிதாக கார் வாங்க விரும்புவோர் அறிய வேண்டிய புதிய கொள்கை18 மார்ச் 2025 செங்கோட்டையனுக்கு நெருக்கடியா? பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN ஆனால், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் கருத்து வேறாக இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அ.தி.மு.க கொறடா முடிவுக்கு மாறாக எதிர்த்து வாக்களித்து இருந்தால் செங்கோட்டையனின் பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதி நீக்க முடிவை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோபிச்செட்டிபாளையம் தொகுதியைக் காலியானதாக அறிவித்து தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கிறது," என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். "இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் என அறிவித்தாலும் 2019ஆம் ஆண்டுதான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது" எனக் கூறுகிறார் ஷ்யாம். அதேநேரம், தனியார் ஊடக நிறுவனம் நடத்திய விழாவில் செங்கோட்டையன் பேசியதைக் குறிப்பிடும் ஷ்யாம், "அவர் பிரதமர் மோதி, நிதி அமைச்சர் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். தான் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அடுத்து வந்த நாள்களில் அவருக்கான சமிக்ஞை வராமல் போனதால் சமாதானம் ஏற்பட்டிருக்கலாம்," எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய ஷ்யாம், "எடப்பாடி பழனிசாமியை போல அதிரடி அரசியல் காட்டக்கூடிய நபர் செங்கோட்டையன் அல்ல. மேற்கு மண்டலத்தில் சமூகரீதியாக அவருக்கு நெருக்கடிகள் வந்திருக்கலாம்," எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதை மறுத்துப் பேசும் பாபு முருகவேல், "கட்சிதான் பெரிது. தனி நபர்கள் அல்ல. கட்சிக்கு விரோதமாகவோ பொதுச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டையோ செங்கோட்டையன் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் பேசலாம்," என்கிறார். 'சமாதானம் ஏற்பட்டுவிட்டது' - செங்கோட்டையன் தரப்பு இதுதொடர்பாக, கே.ஏ.செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் சார்பாகப் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், "இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்" என்று மட்டும் பதில் அளித்தார். இதன் பின்னணி குறித்த மேலதிக கேள்விகளை எழுப்பியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y0899ew0lo

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்

3 months 2 weeks ago
அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும் செல்லவில்லை ; ரணில் தரப்பு விளக்கம் 18 MAR, 2025 | 09:40 PM (எம்.மனோசித்ரா) அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டில், அரச செலவில் லண்டன் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். 2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் லண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி லண்டனுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான இரண்டாவதாக லண்டன் சென்றிருந்தார். அதனையடுத்து ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தார். மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இந்த பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார். https://www.virakesari.lk/article/209586

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை - முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 06:37 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார். உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209604

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை - முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 06:37 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார்.

உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.

GmWCv9bWMAAZyK5__1_.jpeg

https://www.virakesari.lk/article/209604