Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
இஸ்ரேல் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஈரான் போர் நிறுத்தத்தை மதிக்கும் Published By: VISHNU 24 JUN, 2025 | 08:18 PM அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேலும் அதே நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மதிக்கப்படும் என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெகியான் கூறியுள்ளார். "சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் அதை மீறாது" என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் பெசெகியான் கூறியதாக வெளிநாட்டு வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218366

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

1 week 5 days ago
இரான் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லையா? அமெரிக்காவின் தாக்குதல் பற்றி கசியும் புதிய தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கூற்றுகளில் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடு சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை "பதுங்கு குழி" குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் "அப்படியே" இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. "இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன." என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் இரான் அணுசக்தி திட்டத்தை "சில மாதங்கள்" பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது சேதங்களை சரி செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொருத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலனாய்வுத் தகவல்கள் கசிவு - டிரம்ப் விமர்சனம் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார். "போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'தேசத்துரோகம்' என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை "தேசத் துரோகம்" என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார். "இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் "அழிக்கப்பட்டன" என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அவர் கூறினார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் டிவிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு கிளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார். "ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!" விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்: - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c056mjgqp8go

இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?

1 week 5 days ago
எதைச் சொல்ல? sudumanal இஸ்ரேல்- ஈரான் கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது. இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது. அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர். அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். 2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார். அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது. இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது. அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ? ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது. ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல். ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர். வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான். ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும். ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது. ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?. ravindran.pa 23062025 https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/

இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?

1 week 5 days ago

எதைச் சொல்ல?

sudumanal

இஸ்ரேல்- ஈரான்

iran.jpeg?w=288

கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது.

இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது.

அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர்.

அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார்.

அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது.

இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது.

அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ?

ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது.

ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல்.

ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர்.

வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான்.

ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும்.

ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது.

ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?.

https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்

1 week 5 days ago
கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது. "அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218301

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்

1 week 5 days ago

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர்

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2025 | 11:39 AM

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10  பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது.

"அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/218301

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் - யுத்த நிறுத்தத்திற்கு இணங்குகின்றோம் - இஸ்ரேல் 24 JUN, 2025 | 12:19 PM ஈரான் குறித்த தனது இலக்குகளை எய்திய பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானிடமிருந்து இஸ்ரேலிற்கு உருவாகிய இருப்பு குறித்த இரட்டை ஆபத்துக்களான அணுவாயுத ஆபத்து மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை ஆபத்து ஆகியவற்றை அகற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவதலைமைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம்,அந்த நாட்டின் பல இலக்குகளை அழித்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218307

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு — கருணாகரன் —

1 week 5 days ago
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு June 24, 2025 — கருணாகரன் — “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன். “என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எந்தளவுக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும்?.. என்று கேள்வி உண்டு. அதனால் இந்தக் கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? அல்லது நீடிக்கும் என்று தெரியாமலிருக்கு. அதைப்பொறுத்துத்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்” என்றார் அவர். ஆகவே, தன்னுடைய கருத்தை – கணிப்பை – சரிபார்த்துக் கொள்வதற்காகவே என்னிடமும் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். ‘என்னிடமும்‘ என்று நான் பிரத்தியேகமாக இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிச்சயமாக நண்பர் இந்தக் கேள்வியை வேறு ஆட்களிடத்திலும் கேட்டிருப்பார். இதே கேள்வி, இந்தக் கூட்டணியைப் பற்றியும் அது கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி – தமிழ்த்தேசியப் பேரவை தொடர்பாகவும் பலரிடத்திலும் உண்டு. ஏன், தமிழ்த் தேசியப் பேரவைக்குள்ளும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளும் கூட இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வியை நாம் வகைப்படுத்தலாம். 1. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும். 2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களும் செயற்பாடுகளும். 3. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும். 4. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவும். 5. தமிழ்த்தேசியப் பேரவையோடு எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்வது? அந்த உறவு முறிந்தால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் அடுத்து என்ன என்ற நிலைப்பாடு. இதைவிட மேலும் சில கேள்விகளும் உண்டு. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA), ஐந்து கட்சிகளின் கூட்டாகும். ஐந்து கட்சிகளுக்கும் தனித்தனியான அரசியற் கட்டமைப்பும் அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. கூடவே, அவற்றுக்கான செல்வாக்குப் பிராந்தியங்களும் உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவை பெற்றிருந்த வாக்குகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதேச மட்டத்திலான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலம் இதை மேலும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஐந்து கட்சிகளும் சில அடிப்படைகளில் புரிந்துணர்வோடு ஒரு பொது மையத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த இணைவுக்காக ஒவ்வொரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புகளையும் சில ஏற்றுக் கொள்ளுதல்களையும் செய்துமுள்ளன. இல்லையெனில் ஐக்கியமோ கூட்டோ சாத்தியமாகியிருக்காது. ஐக்கியம், கூட்டு என்று வரும்போது விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் தவிர்க்க முடியாதது. இந்த விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் இரண்டு வகையில் பிரதானமாக அமையும். அ) தமது (கட்சியின்) இருப்பையும் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையில் வெளிச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பையும் ஏற்றுக் கொள்ளலையும் மேற்கொள்ளுதல். இங்கே கட்சியின் நலனே முதன்மை பெற்றிருக்கும். ஆ) மக்களின் நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதால் அமைவது. மக்களுடைய நலன், அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம் சேர்த்தல், அவர்களுடைய அரசியல், சமூகப் பொருளாதார எதிர்காலத்தைப் பலப்படுத்துதல், அதை வெற்றியடையச் செய்தலுக்காக பொதுத் தளமொன்றில் அவசியப்படும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளதல்களையும் செய்தல். இங்கே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளும் மேற்படி இரண்டின் அடிப்படையிலும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்துள்ளன என்றே கொள்ள முடியும். இந்த விட்டுக் கொடுப்புகளின் – ஏற்றுக் கொள்ளல்களின் எல்லை (வரம்பு) எதுவென்று தெரியாது. அதை அந்தந்தக் கட்சியினரே சொல்ல வேண்டும். அல்லது அதைக் காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கும். இதற்கப்பால் சரியான – தீர்க்க தரிசனமுடைய தலைமைத்துவம் இருக்குமானால், தமது அரசியல் உறுதிப்பாட்டுடன் ஐக்கியத்துக்காக – ஒற்றுமைக்காக – முடிந்தளவுக்கு பொறுமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும். அத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஐக்கியத்தை அல்லது கூட்டை வளப்படுத்தும். இந்தப் பின்னணியில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் எப்படி அமையவுள்ளன? எப்படி அமைய வேண்டும்? என்று பார்க்கலாம். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) உள்ள கட்சிகள் ஐந்தும் ஆயுதந் தாங்கிய அரசியல் வழிமுறையின் வழியாக வந்தவை. அதாவது சரிபிழைகளுக்கு அப்பால், செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. தமது அரசியல் இலக்கை அடைவதற்கு செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான வழிமுறையையும் கொண்டிருந்தவை. குறிப்பாக நடைமுறை அரசியலை உள்ளடக்கியவை. அதேவேளை உட்கட்சி ஜனநாயகப் பற்றாக்குறையை அகத்தில் கொண்டிருப்பவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.. துரதிருஸ்டவசமாகக் கடந்த 15 க்கு மேற்பட்ட ஆண்டுகால அரசியற் சூழலில் இவையும் முற்றுமுழுதாக தமிழ் மிதவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டவையாகி விட்டன. அதாவது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போலாகி விட்டன. ஒரு பொதுமகன் அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண முடியும்? அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது மக்களுக்கு ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?அதில் உள்ள ஒவ்வொரு கட்சியினதும் தனித்தன்மைகள் என்ன? என அறிய முடியாது. இந்த வேறுபாட்டை ஒருவர் அல்லது மக்கள் சமூகம் அறியும் (உணரும்) போதுதான் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியை நோக்கித் தமது ஆதரவைத் திருப்ப முடியும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் வெற்றிக்கான திசையை நோக்கி நகரலாம். ஏனைய தரப்போடு பேரம்பேசும் ஆற்றலைப் பெறலாம். இல்லையெனில் தமிழரசுக் கட்சியும் காங்கிரசுமே தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும். இது காலப்போக்கில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலுள்ள கட்சிகளை மங்கச் செய்து இல்லாதொழித்து விடும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது, இதுவரையில் தன்னை வேறுபடுத்திக் காட்டக் கூடிய எந்த அடையாளத்தையும் (வேறுபாட்டையும்)உணர்த்தவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பை அது உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான அனுபவமும் ஆற்றலும் அதற்கு உண்டு. ஆனால், அதை நோக்கி செயற்படுவதற்கு அது ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி காணாமல் போய் விடும். தமிழ் மிதவாத அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகள் எதையும் கொண்டவை அல்ல. அதனால் அவற்றுக்கு இதில் அனுபவமும் இல்லை. வெறுமனே சம்பிரதாயமான ‘தமிழ்க்கட்சிகள்‘ என்ற லேபிளை வைத்தே 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை நடத்தியுள்ளன. அவற்றுக்கு அரசியல் முதலீடாக இருந்தது, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலும் அது மேற்கொண்ட தமிழின ஒடுக்குமுறையுமே. இதற்கு மேலும் வாய்ப்பாக இருந்தது, தமிழ்ச்சமூகத்தில் நிலவும் சாதிய மனோபாவமாகும். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த்தேசியவாதத்தைக் கூர்ந்து நோக்கினால், அது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய உணர்வின் வளர்ச்சியும் நீட்சியுமாகும். சாதியத்தில் உள்ள வேறுபாடுகளையும் வேறுபடுத்தல்களையும் தேசியவாதத்தில் அப்படியே பிரயோகித்துத் தன்னை வடிவமைத்துள்ளது தமிழ்த்தேசியவாதம். அதில் ஜனநாயகத் தன்மையோ, ஜனநாயக மயப்படுத்தலுக்கான வெளிகளோ வாய்ப்புகளோ இல்லை. எப்போதும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, எதிர்த்தரப்பின் மீது அனைத்து நீதியின்மைகளையும் தேடிச் சோடித்துப் சேகரித்துப் பட்டியற்படுத்துவதோடு, வெளிப்பரப்பைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதுமாக உள்ளது. இதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஆதரித்துப் பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மேல் மத்தியதரத்தினரும் மத்திய வகுப்பினருமாகும். இதை எதிர்க்கக் கூடிய, எதிர்த்து வெற்றியைப் பெறக்கூடிய எத்தகைய பொறிமுறை வடிவத்தையும் மேற்படி இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அவை அப்படிச் செயற்படப்போவதுமில்லை. ஏனென்றால், அவை பிரதிநிதித்துவம் செய்வதே அந்த வர்க்கத்தினரையே. என்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்ப் பெருந்திரள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கோடு இருப்பது ஆச்சரியமானது. துக்கத்துக்குரியது. ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் (தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட) தவறுகளை எதிர்த்தே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் (முன்பு விடுதலை இயக்கங்கள்) தமது அரசியற் பயணத்தை ஆரம்பித்தன. 1970 களில் விடுதலை இயக்கங்களாகத் தமது அரசியற் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தரப்பு, தமிழரசுக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயற்பாட்டு அரசியல் முறைமையை அரங்கில் அறிமுகப்படுத்தியது. அது தனியே ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமல்ல. அப்படி யாரும் வியாக்கியானப்படுத்தக் கூடாது. அதற்குமப்பால், மக்களுக்கான பன்முகத் தன்மையுடைய அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அடிப்படைகளில் கரிசனை வைத்து செயற்பாட்டு வடிவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமாக மறுவாக்கம் செய்து மேலும் தொடர்வதே உண்மையில் மாற்று அரசியலாகும். இதற்குரிய (பொருத்தமான) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பேரமைப்பை விரிவாக்கி, பலப்படுத்தி, வலுவாக்கம் செய்ய வேண்டும் என்றால், இது அவசியமாகும். முப்பது ஆண்டுகளுக்கு மேலான போரும் 50 ஆண்டுகளுக்கு மேலான ஒடுக்குமுறையும் ஈழத் தமிழ்ச்சமூகத்தைப் பல வகையிலும் நிலைகுலைவுக்கு உள்ளாக்கியுள்ளன. இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களில் 70 விழுக்காட்டினர் பாதிப்புக்குள்ளாகியவர்களாகும். இவர்களை மீட்டெடுக்கக் கூடிய, இவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். அதை ஒருபோதும் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும் செய்யப்போவதில்லை. அவற்றின் செல்வாக்குப் பிராந்தியம் (வாக்காளர்கள்) அநேகமாக படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர். அவர்களே அடித்தட்டு மக்களின் மீதும் கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர். இதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் அல்லது கீழ் மத்தியதர வர்க்கம் சுய பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தை வலுவாகக் கொண்டதல்ல. அதனால் அது தனக்கு மேலுள்ள தரப்பின் இழுவிசைக்கு தவிர்க்கமுடியாமல் உட்பட வேண்டியுள்ளது. அதனுடைய இழுவிசைக்கு வெளியிலுள்ள இன்னொரு தொகுதி மக்கள் தென்னிலைங்கைக் கட்சிகளையும் அவற்றோடு உறவான பிராந்தியக் கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர். இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் ஆய்வு (பரிசீலனை) செய்ய வேண்டியது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்பாகும். கதிரைகளை விட்டுக் களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே இதனுடைய பொருள். தன்னுடைய இளைய உறுப்பினர்களைப் புதிய – செயற்பாட்டு அரசியலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். களம் என்பது மக்கள் மட்டத்தில் என்று பொருள்படும். மக்களுடனான உறவு வலுப்படும்போது செல்வாக்கு மண்டலம் விரிவு பெறும். தன்னை வேறுபடுத்திக் காட்டுவது வேலைகளால், நடைமுறைகளால், வித்தியாசங்களால், பயன்பொருத்தமான பெறுமானங்களால் என்பதை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உணர வேண்டும். அது சரியாக உணர்ந்து செயற்பட்டால், அந்த உணர்கை மக்களிடத்திலும் நிச்சயமாக நிகழும். அதுவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை விரிவாக்கிப் பலப்படுத்தும். இதில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றின் அரசியலை ஏற்காத தரப்பினரும் இணைந்து கொள்வர். இது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அரசியலையும் அதனுடைய கட்டமைப்பையும் புத்தாக்கம் செய்வதாக அமையும். மக்களிடத்திலே செல்வாக்கைப் பெறும் தரப்பு ஒன்றுதான் தன்னுடைய அரசியலை மக்களிடத்திலே துணிச்சலாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தடுமாற்றம் உள்ளதைக் காண முடிகிறது. அவர்கள், வெளியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், மணிவண்ணன், விக்கினேஸ்வரன் போன்ற தரப்பினரால் பேசப்படுகின்ற தமிழ்த்தேசியவாத அரசிலையையே தாமும் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் மக்கள் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற தவறான எண்ணமுள்ளது. இல்லையென்றால் தமது கடந்தகாலக் குறைபாடுகள் மேலெழுந்து கருந்திரையாக எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று அஞ்சுகிறார்கள். இது தேவையற்ற அச்சமாகும். ஈழத் தமிழ் அரசியலில் எவரும் – எந்தத் தரப்பினரும் தங்களை வெற்றிகரமான தரப்பு என்று சொல்ல முடியாது. அனைத்துத் தரப்பும் தோல்விகளையும் பலவீனங்களையும் பாதிப்புகளையும் மக்களுக்குப் பரிசளித்தவையே. எல்லாத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் சிங்கள மேலாதிக்கத் தரப்பிடம் தோற்றவையே. எல்லாத் தரப்பினரும் ஏதோ சந்தர்ப்பங்களில் இலங்கை – இந்திய அரசுகளோடு ஒத்துழைத்தவை அல்லது சேர்ந்து நின்றவையே. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால், எவரும் சுத்தவாளிகளில்லை. எவரும் வெற்றிவீரர்களில்லை. இந்த யதார்த்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மக்களிடம் துணிச்சலாக முன்வைப்பது அவசியம். அதற்கு வலுவானதொரு ஊடகக் கட்டமைப்பு தேவை. அது இன்றைய சூழலில் இலகுவானது. அதற்கான தொழில் நுட்பமும் அதில் தேர்ச்சியுள்ளோரும் தாராளமாக உதவுக் கூடிய நிலையில் உள்ளன. விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாமற்போய் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவர்களுடைய அரசியல் நினைவலைகளும் அரசியற் தொடர்ச்சியும் அடையாளங்களும் அவர்கள் உருவாக்கிய பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் தமிழ் மனங்களிலும் சமூக வெளியிலும் பலமாகவே உள்ளன. இதற்குக் காரணம், 30 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாக மக்களிடம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு புலிகள் மேற்கொண்ட கரிசனையும் உத்திகளுமே. அதை மேவிச் செல்ல வேண்டுமானால், அல்லது இன்றைய காலகட்டத்துக்குரிய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குரிய ஊடகப் பொறிமுறை அவசியம். இதைப்பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். ஆனால், இன்று வரையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கோ அதில் உள்ள எந்தவொரு கட்சிக்குமோ திறனுடைய இணையத் தளங்கூட இல்லை. அதிகமேன், சமூக வலைத்தளங்களில் ஊட அதற்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில் எப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தன்னை ஒரு வலுவான தரப்பாக அரசியல் அரங்கிலும் சமூக வெளியிலும் முன்னிறுத்த முடியும்? இந்தக் குறைபாட்டினால்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள இளைய – புதிய முகங்கள் எவையும் பரந்து பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போதுள்ள வெகுஜன ஊடகங்களில் (mainstream media) தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கான சார்பு வெளிகளே அதிகமாக உண்டு. இதை இன்னொன்றால்தான் சமப்படுத்தவும் மேலோங்கவும் முடியும். இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் குறித்து ஒரு தீர்க்கமான – சமனிலைப்படுத்தப்பட்ட உரையாடலைச் செய்வதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதும் அது மேற்கொள்ளக் கூடிய புத்தாக்க அரசியலினால்தான் அமையும். அதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தமது தரப்பை முழுவதுமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர். அதாவது புத்தாக்கச் சிந்தனையோடு கடுமையான உழைக்க வேண்டிய நிலையில் – நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். மாற்று அரசியலைத் தேடி அலையும் தமிழ்ச்சமூகம் இறுதியாக வந்து சேர்ந்துள்ள இடம் தேசிய மக்கள் சக்தியாகும். நாளை அவர்கள் இன்னொரு சக்தியைத் தேடக் கூடும். மடிக்குள் மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேட வேண்டிய தேவை என்ன என்று தன்னை மாற்றுச் சக்தியாக உருவாக்கி நிரூபிப்பதே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேலை. இதில் அது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, கிழக்கின் அரசியல் உணர்வையும் யதார்த்தத்தையும். கிழக்கு மாகாணம் வரவர தமிழ்த்தேசியவாதத் தரப்பின் அரசியலில் இருந்து விடுபடும் – விலகிச் செல்லும் ஒரு யதார்த்தத்தில் உள்ளது. அங்குள்ள பிள்ளையான் – கருணா – வியாழேந்திரன் போன்றோரின் அரசியலோடு மட்டும் சம்மந்தப்படுத்தி இதைக் குறிப்பிடவில்லை. கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் போன்ற பிற தரப்புக் குரல்களையும் உணர்வுகளையும் ஏனைய அரசியல் ஈடுபட்டாளர்களையும் கவனித்தே இந்தக் கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது. கிழக்கிற்கென – கிழக்கை மையப்படுத்திய – ஒரு இணைய ஊடகத்தைக் கூட தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டு வெளியும் யதார்த்தமும் வேறானது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே இந்த விடுபடலும் விலக்கலுமாகும். இதை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி புரிந்து செயற்படுவது அவசியமாகும். தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும். https://arangamnews.com/?p=12114

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு — கருணாகரன் —

1 week 5 days ago

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு

June 24, 2025

— கருணாகரன் —

“ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன்.

“என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எந்தளவுக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும்?.. என்று கேள்வி உண்டு. அதனால் இந்தக் கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? அல்லது நீடிக்கும் என்று தெரியாமலிருக்கு. அதைப்பொறுத்துத்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்” என்றார் அவர். 

ஆகவே, தன்னுடைய கருத்தை – கணிப்பை – சரிபார்த்துக் கொள்வதற்காகவே என்னிடமும் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். ‘என்னிடமும்‘ என்று நான் பிரத்தியேகமாக இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிச்சயமாக நண்பர் இந்தக் கேள்வியை வேறு ஆட்களிடத்திலும் கேட்டிருப்பார். 

இதே கேள்வி, இந்தக் கூட்டணியைப் பற்றியும் அது கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி – தமிழ்த்தேசியப் பேரவை தொடர்பாகவும் பலரிடத்திலும் உண்டு. ஏன், தமிழ்த் தேசியப் பேரவைக்குள்ளும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளும்  கூட இந்தக் கேள்வி உண்டு. 

இந்தக் கேள்வியை நாம் வகைப்படுத்தலாம். 

1.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

2.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

3.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும்.

4.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவும்.

5.   தமிழ்த்தேசியப் பேரவையோடு எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்வது? அந்த உறவு முறிந்தால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் அடுத்து என்ன என்ற நிலைப்பாடு. 

இதைவிட மேலும் சில கேள்விகளும் உண்டு. 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA), ஐந்து கட்சிகளின் கூட்டாகும். ஐந்து கட்சிகளுக்கும் தனித்தனியான அரசியற் கட்டமைப்பும் அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. கூடவே, அவற்றுக்கான செல்வாக்குப் பிராந்தியங்களும் உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவை பெற்றிருந்த வாக்குகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதேச மட்டத்திலான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலம் இதை மேலும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஐந்து கட்சிகளும் சில அடிப்படைகளில் புரிந்துணர்வோடு ஒரு பொது மையத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த இணைவுக்காக ஒவ்வொரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புகளையும் சில ஏற்றுக் கொள்ளுதல்களையும் செய்துமுள்ளன. இல்லையெனில் ஐக்கியமோ கூட்டோ சாத்தியமாகியிருக்காது. ஐக்கியம், கூட்டு என்று வரும்போது விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் தவிர்க்க முடியாதது.

இந்த விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் இரண்டு வகையில் பிரதானமாக அமையும்.

அ) தமது (கட்சியின்) இருப்பையும் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையில் வெளிச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பையும் ஏற்றுக் கொள்ளலையும் மேற்கொள்ளுதல். இங்கே கட்சியின் நலனே முதன்மை பெற்றிருக்கும்.

ஆ) மக்களின் நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதால் அமைவது. மக்களுடைய நலன், அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம் சேர்த்தல், அவர்களுடைய அரசியல், சமூகப் பொருளாதார  எதிர்காலத்தைப் பலப்படுத்துதல், அதை வெற்றியடையச் செய்தலுக்காக பொதுத் தளமொன்றில் அவசியப்படும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளதல்களையும் செய்தல்.

இங்கே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளும் மேற்படி இரண்டின் அடிப்படையிலும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்துள்ளன என்றே கொள்ள முடியும். இந்த விட்டுக் கொடுப்புகளின் – ஏற்றுக் கொள்ளல்களின் எல்லை (வரம்பு) எதுவென்று தெரியாது. அதை அந்தந்தக் கட்சியினரே சொல்ல வேண்டும். அல்லது அதைக் காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கும். 

இதற்கப்பால் சரியான – தீர்க்க தரிசனமுடைய தலைமைத்துவம் இருக்குமானால், தமது அரசியல் உறுதிப்பாட்டுடன் ஐக்கியத்துக்காக – ஒற்றுமைக்காக – முடிந்தளவுக்கு பொறுமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும். அத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஐக்கியத்தை அல்லது கூட்டை வளப்படுத்தும். 

இந்தப் பின்னணியில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் எப்படி அமையவுள்ளன? எப்படி அமைய வேண்டும்? என்று பார்க்கலாம்.

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) உள்ள கட்சிகள் ஐந்தும் ஆயுதந் தாங்கிய அரசியல் வழிமுறையின் வழியாக வந்தவை. அதாவது சரிபிழைகளுக்கு அப்பால், செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. தமது அரசியல் இலக்கை அடைவதற்கு செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான வழிமுறையையும் கொண்டிருந்தவை. குறிப்பாக நடைமுறை அரசியலை உள்ளடக்கியவை. அதேவேளை உட்கட்சி ஜனநாயகப் பற்றாக்குறையை அகத்தில் கொண்டிருப்பவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.. 

துரதிருஸ்டவசமாகக் கடந்த 15 க்கு மேற்பட்ட ஆண்டுகால அரசியற் சூழலில் இவையும் முற்றுமுழுதாக தமிழ் மிதவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டவையாகி விட்டன. அதாவது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போலாகி விட்டன. ஒரு பொதுமகன் அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண முடியும்? அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது மக்களுக்கு ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?அதில் உள்ள ஒவ்வொரு கட்சியினதும் தனித்தன்மைகள் என்ன? என அறிய முடியாது.  

இந்த வேறுபாட்டை ஒருவர் அல்லது மக்கள் சமூகம் அறியும் (உணரும்) போதுதான் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியை நோக்கித் தமது ஆதரவைத் திருப்ப முடியும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் வெற்றிக்கான திசையை நோக்கி நகரலாம். ஏனைய தரப்போடு பேரம்பேசும் ஆற்றலைப் பெறலாம். இல்லையெனில் தமிழரசுக் கட்சியும் காங்கிரசுமே தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும். இது காலப்போக்கில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலுள்ள கட்சிகளை மங்கச் செய்து இல்லாதொழித்து விடும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது, இதுவரையில் தன்னை வேறுபடுத்திக் காட்டக் கூடிய எந்த அடையாளத்தையும் (வேறுபாட்டையும்)உணர்த்தவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பை அது உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான அனுபவமும் ஆற்றலும் அதற்கு உண்டு. ஆனால், அதை நோக்கி செயற்படுவதற்கு அது ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி காணாமல் போய் விடும். 

தமிழ் மிதவாத அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகள் எதையும் கொண்டவை அல்ல. அதனால் அவற்றுக்கு இதில் அனுபவமும் இல்லை. வெறுமனே சம்பிரதாயமான ‘தமிழ்க்கட்சிகள்‘ என்ற லேபிளை வைத்தே 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை நடத்தியுள்ளன. அவற்றுக்கு அரசியல் முதலீடாக இருந்தது, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலும் அது மேற்கொண்ட தமிழின ஒடுக்குமுறையுமே. இதற்கு மேலும் வாய்ப்பாக இருந்தது, தமிழ்ச்சமூகத்தில் நிலவும் சாதிய மனோபாவமாகும். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த்தேசியவாதத்தைக் கூர்ந்து நோக்கினால், அது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய உணர்வின் வளர்ச்சியும் நீட்சியுமாகும். 

சாதியத்தில் உள்ள வேறுபாடுகளையும் வேறுபடுத்தல்களையும் தேசியவாதத்தில் அப்படியே பிரயோகித்துத் தன்னை வடிவமைத்துள்ளது தமிழ்த்தேசியவாதம். அதில் ஜனநாயகத் தன்மையோ, ஜனநாயக மயப்படுத்தலுக்கான வெளிகளோ வாய்ப்புகளோ இல்லை. எப்போதும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, எதிர்த்தரப்பின் மீது அனைத்து நீதியின்மைகளையும் தேடிச் சோடித்துப் சேகரித்துப் பட்டியற்படுத்துவதோடு, வெளிப்பரப்பைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதுமாக உள்ளது. இதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஆதரித்துப் பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மேல் மத்தியதரத்தினரும் மத்திய வகுப்பினருமாகும். 

இதை எதிர்க்கக் கூடிய, எதிர்த்து வெற்றியைப் பெறக்கூடிய எத்தகைய பொறிமுறை வடிவத்தையும் மேற்படி இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அவை அப்படிச் செயற்படப்போவதுமில்லை. ஏனென்றால், அவை பிரதிநிதித்துவம் செய்வதே அந்த வர்க்கத்தினரையே. என்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்ப் பெருந்திரள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கோடு இருப்பது ஆச்சரியமானது. துக்கத்துக்குரியது.

ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் (தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட) தவறுகளை எதிர்த்தே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் (முன்பு விடுதலை இயக்கங்கள்) தமது அரசியற் பயணத்தை ஆரம்பித்தன. 1970 களில் விடுதலை இயக்கங்களாகத் தமது அரசியற் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தரப்பு, தமிழரசுக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயற்பாட்டு அரசியல் முறைமையை அரங்கில் அறிமுகப்படுத்தியது. அது தனியே ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமல்ல. அப்படி யாரும் வியாக்கியானப்படுத்தக் கூடாது. அதற்குமப்பால், மக்களுக்கான பன்முகத் தன்மையுடைய அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அடிப்படைகளில் கரிசனை வைத்து செயற்பாட்டு வடிவங்கள்  உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமாக மறுவாக்கம் செய்து  மேலும் தொடர்வதே உண்மையில் மாற்று அரசியலாகும். இதற்குரிய (பொருத்தமான) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பேரமைப்பை விரிவாக்கி, பலப்படுத்தி, வலுவாக்கம் செய்ய வேண்டும் என்றால், இது அவசியமாகும். 

முப்பது ஆண்டுகளுக்கு மேலான போரும் 50 ஆண்டுகளுக்கு மேலான ஒடுக்குமுறையும் ஈழத் தமிழ்ச்சமூகத்தைப் பல வகையிலும் நிலைகுலைவுக்கு உள்ளாக்கியுள்ளன. இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களில் 70 விழுக்காட்டினர் பாதிப்புக்குள்ளாகியவர்களாகும். இவர்களை மீட்டெடுக்கக் கூடிய, இவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். அதை ஒருபோதும் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும் செய்யப்போவதில்லை. அவற்றின் செல்வாக்குப் பிராந்தியம் (வாக்காளர்கள்) அநேகமாக படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர். அவர்களே அடித்தட்டு மக்களின் மீதும் கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர். 

இதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் அல்லது கீழ் மத்தியதர வர்க்கம் சுய பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தை வலுவாகக் கொண்டதல்ல. அதனால் அது தனக்கு மேலுள்ள தரப்பின் இழுவிசைக்கு தவிர்க்கமுடியாமல் உட்பட வேண்டியுள்ளது. அதனுடைய இழுவிசைக்கு வெளியிலுள்ள இன்னொரு தொகுதி மக்கள் தென்னிலைங்கைக் கட்சிகளையும் அவற்றோடு உறவான பிராந்தியக் கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர். 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் ஆய்வு (பரிசீலனை) செய்ய வேண்டியது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்பாகும். கதிரைகளை விட்டுக் களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே இதனுடைய பொருள். தன்னுடைய இளைய உறுப்பினர்களைப் புதிய – செயற்பாட்டு அரசியலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். களம் என்பது மக்கள் மட்டத்தில் என்று பொருள்படும். மக்களுடனான உறவு வலுப்படும்போது செல்வாக்கு மண்டலம் விரிவு பெறும்.

தன்னை வேறுபடுத்திக் காட்டுவது வேலைகளால், நடைமுறைகளால், வித்தியாசங்களால், பயன்பொருத்தமான பெறுமானங்களால் என்பதை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உணர வேண்டும். அது சரியாக உணர்ந்து செயற்பட்டால், அந்த உணர்கை மக்களிடத்திலும் நிச்சயமாக நிகழும். அதுவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை விரிவாக்கிப் பலப்படுத்தும். இதில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றின் அரசியலை ஏற்காத தரப்பினரும் இணைந்து கொள்வர். 

இது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அரசியலையும் அதனுடைய கட்டமைப்பையும் புத்தாக்கம் செய்வதாக அமையும். மக்களிடத்திலே செல்வாக்கைப் பெறும் தரப்பு ஒன்றுதான்  தன்னுடைய அரசியலை மக்களிடத்திலே துணிச்சலாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தடுமாற்றம் உள்ளதைக் காண முடிகிறது. அவர்கள், வெளியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், மணிவண்ணன், விக்கினேஸ்வரன் போன்ற தரப்பினரால்  பேசப்படுகின்ற தமிழ்த்தேசியவாத அரசிலையையே தாமும் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் மக்கள் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற தவறான எண்ணமுள்ளது. இல்லையென்றால் தமது கடந்தகாலக் குறைபாடுகள் மேலெழுந்து கருந்திரையாக எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இது தேவையற்ற அச்சமாகும். ஈழத் தமிழ் அரசியலில் எவரும் – எந்தத் தரப்பினரும் தங்களை வெற்றிகரமான தரப்பு என்று சொல்ல முடியாது. அனைத்துத் தரப்பும் தோல்விகளையும் பலவீனங்களையும் பாதிப்புகளையும் மக்களுக்குப் பரிசளித்தவையே. எல்லாத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் சிங்கள மேலாதிக்கத் தரப்பிடம் தோற்றவையே. எல்லாத் தரப்பினரும் ஏதோ சந்தர்ப்பங்களில் இலங்கை – இந்திய அரசுகளோடு ஒத்துழைத்தவை அல்லது சேர்ந்து நின்றவையே. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால், எவரும் சுத்தவாளிகளில்லை. எவரும் வெற்றிவீரர்களில்லை. 

இந்த யதார்த்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மக்களிடம் துணிச்சலாக முன்வைப்பது அவசியம். அதற்கு வலுவானதொரு ஊடகக் கட்டமைப்பு தேவை. அது இன்றைய சூழலில் இலகுவானது. அதற்கான தொழில் நுட்பமும் அதில் தேர்ச்சியுள்ளோரும் தாராளமாக உதவுக் கூடிய நிலையில் உள்ளன.

விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாமற்போய் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவர்களுடைய அரசியல் நினைவலைகளும் அரசியற் தொடர்ச்சியும் அடையாளங்களும் அவர்கள் உருவாக்கிய பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் தமிழ் மனங்களிலும் சமூக வெளியிலும் பலமாகவே உள்ளன. இதற்குக் காரணம், 30 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாக மக்களிடம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு புலிகள் மேற்கொண்ட கரிசனையும் உத்திகளுமே. அதை மேவிச் செல்ல வேண்டுமானால், அல்லது இன்றைய காலகட்டத்துக்குரிய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குரிய ஊடகப் பொறிமுறை அவசியம். இதைப்பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். 

ஆனால், இன்று வரையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கோ அதில் உள்ள எந்தவொரு கட்சிக்குமோ திறனுடைய இணையத் தளங்கூட இல்லை. அதிகமேன், சமூக வலைத்தளங்களில் ஊட அதற்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில் எப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தன்னை ஒரு வலுவான தரப்பாக அரசியல் அரங்கிலும் சமூக வெளியிலும் முன்னிறுத்த முடியும்? இந்தக் குறைபாட்டினால்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள இளைய – புதிய முகங்கள் எவையும் பரந்து பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போதுள்ள வெகுஜன ஊடகங்களில் (mainstream media) தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கான சார்பு வெளிகளே அதிகமாக உண்டு. இதை இன்னொன்றால்தான் சமப்படுத்தவும் மேலோங்கவும் முடியும்.  

இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் குறித்து ஒரு தீர்க்கமான – சமனிலைப்படுத்தப்பட்ட உரையாடலைச் செய்வதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதும் அது மேற்கொள்ளக் கூடிய புத்தாக்க அரசியலினால்தான் அமையும். அதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தமது தரப்பை முழுவதுமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர். அதாவது புத்தாக்கச் சிந்தனையோடு கடுமையான உழைக்க வேண்டிய நிலையில் – நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். 

மாற்று அரசியலைத் தேடி அலையும் தமிழ்ச்சமூகம் இறுதியாக வந்து சேர்ந்துள்ள இடம் தேசிய மக்கள் சக்தியாகும். நாளை அவர்கள் இன்னொரு சக்தியைத் தேடக் கூடும். மடிக்குள் மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேட வேண்டிய தேவை என்ன என்று தன்னை மாற்றுச் சக்தியாக உருவாக்கி நிரூபிப்பதே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேலை. இதில் அது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, கிழக்கின் அரசியல் உணர்வையும் யதார்த்தத்தையும்.  

கிழக்கு மாகாணம் வரவர தமிழ்த்தேசியவாதத் தரப்பின் அரசியலில் இருந்து விடுபடும் – விலகிச் செல்லும் ஒரு யதார்த்தத்தில் உள்ளது. அங்குள்ள பிள்ளையான் – கருணா – வியாழேந்திரன் போன்றோரின் அரசியலோடு மட்டும் சம்மந்தப்படுத்தி இதைக் குறிப்பிடவில்லை. கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் போன்ற பிற தரப்புக் குரல்களையும் உணர்வுகளையும் ஏனைய அரசியல் ஈடுபட்டாளர்களையும் கவனித்தே இந்தக் கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது.

கிழக்கிற்கென – கிழக்கை மையப்படுத்திய –  ஒரு இணைய ஊடகத்தைக் கூட தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டு வெளியும் யதார்த்தமும் வேறானது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே இந்த விடுபடலும் விலக்கலுமாகும். இதை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி புரிந்து செயற்படுவது அவசியமாகும்.

தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=12114

"செம்மணியில் உங்களின் பிரசன்னம் வலுவான செய்தியை சொல்லும்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்

1 week 5 days ago
"செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம் Published By: RAJEEBAN 25 JUN, 2025 | 10:37 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான உங்களது விஜயத்தினையும் நாட்டிற்குள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னகர்த்துவது குறித்த உங்கள் அர்ப்பணிப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம். உங்களது விஜயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டது என்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ள அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி குறித்த விடயங்கள் உங்கள் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செம்மணி மனித மனித புதைகுழிக்கான விஜயத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம். செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும், இந்த விடயத்தின் தீவிரதன்மையை மீண்டும் வலுப்படுத்தும். https://www.virakesari.lk/article/218393

"செம்மணியில் உங்களின் பிரசன்னம் வலுவான செய்தியை சொல்லும்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்

1 week 5 days ago

"செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்

Published By: RAJEEBAN

25 JUN, 2025 | 10:37 AM

image

செம்மணி மற்றும் ஏனைய மனித  புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது.

கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான உங்களது விஜயத்தினையும் நாட்டிற்குள்  நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னகர்த்துவது குறித்த உங்கள் அர்ப்பணிப்பையும்  நாங்கள் வரவேற்கின்றோம்.

உங்களது விஜயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டது என்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ள அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி குறித்த விடயங்கள் உங்கள் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செம்மணி மனித மனித புதைகுழிக்கான  விஜயத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும், இந்த விடயத்தின் தீவிரதன்மையை மீண்டும் வலுப்படுத்தும்.

https://www.virakesari.lk/article/218393

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

1 week 5 days ago
அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதபின்னடைவே - முற்றாக அழிக்கப்படவில்லை - பென்டகன் 25 JUN, 2025 | 10:20 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றாக அழிக்கப்படவில்லை சில மாதபின்னடைவை சந்தித்துள்ளது என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. போர்டோ நட்டன்சா மீதான அமெரிக்காவின் தாக்குதலால் அமெரிக்கா எதிர்பார்த்த அளவிற்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஈரான் அமெரிக்க தாக்குதலிற்கு முன்னரே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அங்கிருந்து அகற்றவிட்டது என பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது. இலக்குவைக்கப்பட்ட அணுஉலைகளின் வாயில்கள்குண்டுவீச்சினால் மூடப்பட்டுள்ளன,நிலத்தடியில் இருந்த கட்டிடங்கள் அழிக்கப்படவில்லை,ஈரானின் அணுசக்தி திட்டம் ஆறுமாதகால பின்னடைவை சந்தித்துள்ளது என பாதுகாப்பு புலனாய்வு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218391

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

1 week 5 days ago
காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி 25 JUN, 2025 | 10:57 AM காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள். https://www.virakesari.lk/article/218395

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

1 week 5 days ago

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

25 JUN, 2025 | 10:57 AM

image

காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள்.

https://www.virakesari.lk/article/218395

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

1 week 5 days ago
"அணையா விளக்கு" : எழுச்சி பேரணிக்கு பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள் - ஏற்பாட்டாளர்கள் 25 JUN, 2025 | 09:02 AM அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை (25) மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள "அணையா விளக்கு" போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.10 மணியளவில் சுடரேற்றல் உடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெறும். தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் யாழ். வளைவுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்தில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு , செம்மணி வீதி வழியாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்திற்குசென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது. அங்கிருந்து தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். அங்கிருந்து தமிழாராய்ச்சி படுகொலை நினைவிடம் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு சதுக்கம் ஆகியவற்றுக்கும் சென்று, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். இறுதியாக அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கவிடப்படும். குறித்த பேரணி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி , மக்களின் இயல்வு வாழ்க்கையை குழப்பாத வகையில் மனித சங்கிலி முறையில் இடம்பெறவுள்ளமையால் , அனைத்து தரப்பினரும் ஒருமித்த ஆதரவை வழங்கி பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/218383

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 5 days ago
வெற்றியை தாரை வார்த்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்தும் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தனர். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், முதல் இன்னிங்ஸில் பெற்ற 6 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 371 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து ஆட்டத்தை முடித்தது. கடைசி நாளான நேற்று 350 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பேஸ்பால் ஃபார்முலாவை கையில் எடுத்து இங்கிலாந்து அணி பெறும் வெற்றியாகும். லீட்ஸ் மைதானம் மீண்டும் சேஸிங்கிற்கு சொர்க்கபுரி என்பதை நிரூபித்துள்ளது . இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆன்டர்ஸன்-டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்னும் புள்ளிக்கணக்கை தோல்வியால் தொடங்கவில்லை. இங்கிலாந்து சாதனை தொடக்கம் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட், கிராவ்லி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். புதிய பந்தை பயன்படுத்திய போதும் இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா மாறிமாறிப் பந்துவீசியும் இருவரின் விக்கெட்டுகளை நீண்டநேரம் எடுக்க முடியாதபோதே ஆடுகளத்தின் தன்மை புலப்பட்டது. பென் டக்கெட் ஒருநாள் போட்டி போன்று பேட் செய்து 66 பந்துகளில் அரைசதத்தையும், 121 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எந்தவிதமான சிரமத்தையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வழங்கவில்லை. ஓவருக்கு சராசரியாக 3 முதல் 4 ரன்களை பவுண்டரி மூலமோ அல்லது ஒற்றை அல்லது இரு ரன்கள் மூலம் எடுக்க வழியமைத்துக் கொடுத்தனர். ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து பென் டக்கெட், ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது, ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. உயிரைக் கொடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 121 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த பென் டக்கெட் பென் டக்கெட் சேர்த்த 149 ரன்கள் என்பது டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக எந்த பேட்டரும் சேர்க்காத அதிகபட்சமாகும். இதற்கு முன் ஜோ ரூட் 142 ரன்களை 2022ம்ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களில் 4வது இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தவர் என டக்கெட் பெருமை பெற்றார். இதற்கு முன் 1995ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மைக் ஆதர்டன் 185 ரன்களை கடைசி நாளில் தொடக்க வீரராக இருந்து சேர்த்தார். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸில் சேர்க்கப்பட்ட 5வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இங்கிலாந்தைப் பொருத்தவரை கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இதற்கு முன் 1991ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரஹாம் கூச் - ஆதர்டன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோல்விக்கான காரணம் என்ன? இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதங்கள் ஒரே டெஸ்டில் விளாசப்பட்டன. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை விளாசியிருந்தார். 5 சதங்களை விளாசியும், ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றது என்பது வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். இந்த டெஸ்டில் சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இந்த 4 பேட்டர்களைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் ரன்கள் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் என்று சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஜடேஜாவும் ஏமாற்றினர், ஸ்பெஷெலிஸ்ட் பேட்டர்களாக எடுக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனும் ஜொலிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் சுப்மன் கில்லுடன் உரையாடும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி வரிசை 4 பேட்டர்கள் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 ரன்கள்தான் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது, பேட்டிங்கில் மற்ற வீரர்களால் ஏற்பட்ட தோல்வியாகும். அதிலும், லீட்ஸ் போன்ற தட்டையான ஆடுகளத்தில் பேட்டர்கள் இந்த அளவு மோசமாக பேட் செய்தது தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும். அடுத்ததாக கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டது தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்று. கடந்த 20ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் இதுபோன்று அதிகமான கேட்சுகளை ஒரு போட்டியில் கோட்டைவிட்டதில்லை என்ற பெயரை இந்திய வீரர்கள் பெற்றனர். பும்ரா பந்துவீச்சில் மட்டும் முதல் இன்னிங்ஸில் 3 கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. மோசமான பந்துவீச்சு அடுத்ததாக பும்ரா, சிராஜ் தவிர 3வது, 4வது பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பங்களிப்பு குறித்து பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது. ஐபிஎல் தொடரில் கூட 3 ரன் ரேட்டில் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பந்தவீசியுள்ளார். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா உருவெடுத்து, ஓவருக்கு 6.28 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார். அதேபோல, ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து ஓவருக்கு சராசரியாக 5.60 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இருவரின் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ரன்கள் சேர்க்க ஏதுவாக இருந்தது, இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 310 ரன்கள் வரை வாரி வழங்கியுள்ளனர். பந்துவீச்சில் ஒருவிதமான கட்டுப்பாடு, ஒழுங்கு இருக்க வேண்டும். ஆனால், பிரசித், ஷர்துல் இருவரும் இங்கிலாந்தின் காலநிலை, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பந்துவீசவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார் பும்ரா எனும் பிரமாஸ்திரம் பந்துவீச்சில் பும்ரா ஒருவரை நம்பித்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பயணித்து வருகிறது. அடுத்த 2 போட்டிகளுக்குப்பின் பும்ரா இல்லாத நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, எப்படி தயாராகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சர்வதேச பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பும்ரா மட்டுமே பந்துவீசி எகானமி ரேட்டை 3 ரன்களுக்குள் இரு இன்னிங்ஸிலும் வைத்திருந்தார். கடைசி நாளில் 350 ரன்களை டிஃபெண்ட் செய்வதற்காக எந்த மாதிரியான திட்டத்துடன் பந்துவீச்சாளர்கள் வந்தனர் என்பது புலப்படவில்லை. இதில் பும்ரா மட்டுமே சரியான அளவில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறவிட்டார். முகமது சிராஜ் கடைசி நாளில் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல, புதிய பந்து எடுத்தபின் கடைசி 15 ஓவர்களில் பும்ராவுக்கும் அவர் ஓவர் வழங்கவில்லை. பீல்டிங் மோசம் பீல்டிங்கில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக மோசமாக செயல்பட்டனர். அதிலும், ஸ்லிப்பில் நின்று ஏராளமான கேட்சுகளை தவறவிட்டு அவப்பெயரைப் பெற்றனர். அடிக்கடி ரிஷப் பந்த் பேசியது மைக்கில் நன்றாக எதிரொலித்தது, "பீல்டிங்கை தவறவிட்டீர்கள், பரவாயில்லை, சீக்கிரம் தவறை திருத்தி மீண்டு வாருங்கள், தொடர்ந்து தவறு செய்யாதீர்கள்" எனப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலிருந்து பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எதையுமே முறையாக பயன்படுத்தவில்லை. அது வெற்றிக்கான வாய்ப்புகளாக வீரர்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது சிராஜ் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது தவறவிட்ட வாய்ப்புகளால் தோல்வி இந்திய அணியைப் பொருத்தவரை இளம் வீரர்கள், அனுபவமற்ற வீரர்கள் என்ற ஒற்றை வார்த்தையுடன் தோல்விக்கான காரணத்தை பூசி மெழுகிவிட முடியாது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு தொடக்கம் முதல் கடைசிவரை ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை அனைத்தையுமே இந்திய வீரர்கள் பயன்படுத்தவில்லை, தவறவிட்டனர் என்பதுதான் நிதர்சனம். ஒரு அணியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 சதங்கள் அடிக்கப்பட்டும், அந்த அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது இதுதான் வரலாற்றில் முதல் முறையாகும். ஏராளமான கேட்ச் மிஸ்ஸிங், பீல்டிங்கில் கோட்டை, டி20 போட்டியைவிட ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள், கடைசி வரிசை வீரர்களின் மட்டமான பேட்டிங் முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட் என தோல்விக்கான காரணங்களாகப் பட்டியலிடலாம். டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக முதல்முறையாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு வெற்றி பெற கிடைத்த அருமையான வாய்ப்பை தனது அனுபமின்மையால் வெற்றியாக மாற்ற தவறவிட்டார். பும்ரா இன்னும் இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யப் போகிறது இந்திய அணி என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு 6-வது வெற்றி, ஸ்டோக்ஸ் நிம்மதி லீட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பெறும் 7வது தோல்வியாகும். டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது, இந்திய வீரர்கள் இரு இன்னிங்ஸிலும் அடித்த சதம் ஸ்டோக்ஸின் முடிவை கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஆனால், இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் ஸ்டோக்ஸுக்கு பெருத்த ஆறுதலையும், நிம்மதியையும் இப்போது கொடுக்கும். இங்கிலாந்து சாதனை ஹெடிங்லி மைதானத்தில் 371 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்தது என்பது டெஸ்ட் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்ச சேஸிங்காகும், இந்திய அணிக்கு எதிராக 2வது பெரிய சேஸிங்காகும். 2022ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக 378 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹெடிங்லி மைதானத்தில் கடைசி நாளில் 350 ரன்களை இங்கிலாந்து அணி எட்டி வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் இதுவரை கடைசிநாளில் பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலியா மட்டுமே 404 ரன்களை 1948ம் ஆண்டு எட்டியிருந்தது. அதன்பின், இப்போது இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டியுள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியி்ல் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 835 ரன்களைச் சேர்த்து தோற்றுள்ளது. அதிகமான ஸ்கோர் செய்தும் இந்திய அணிக்கு ஏற்பட்ட 4வது தோல்வியாகும். இரு அணிகளும் சேர்ந்து இந்த டெஸ்டில் 1673 ரன்கள் சேர்த்தனர். இது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 1990ம் ஆண்டில் மான்செஸ்டரில் 1614 ரன்கள் சேர்க்கப்பட்டு அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1673 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது அதிகபட்ச ஸ்கோர், டிராவில் முடியாத டெஸ்டாகும். லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் 5-வது முறையாக சேஸ் செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 2வது முறையாக 350 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் சேஸ் செய்துள்ளது இங்கிலாந்து. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpd1xdq6pvxo

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

1 week 5 days ago
யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம் ‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை. அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது. கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடைய பேச்சின் கருத்து என்னவென்று எல்லோருக்கும் புரிந்தாலும் அதற்கு விளக்கம் கொடுப்பதானால் விடுவிக்கக்கூடியவை என அவர்கள் நினைக்கும் அல்லது தீர்மானிக்கும் காணிகள் மாத்திரம்தான் விடுவிக்கப்படும் மற்றையவைகள் அல்ல என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான், தையிட்டி விகாரைக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிக்குப் பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. விகாரை அமைக்கப்பட்ட காணிக்கு உரிமை கோருவோர் தங்களுடைய காணிக்கு மாற்றுக்காணி கோரவும் இல்லை அதற்கு இழப்பீடு வழங்கும்படி அரசாங்கத்தைக் கேட்கவுமில்லை என்றிருக்கையில் இந்தவிதமான அறிவித்தலொன்று வெளிவந்திருக்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), தையிட்டி விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நடத்திவரும் காணி உரிமைக்கான போராட்டத்தின்போது, அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரைக் காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிவருகின்றனர். ஜூன் 12ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத்தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும். தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே நேரம், “தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை. தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்கத் தீர்மானித்துள்ளோம். ஏனென்றால், தையிட்டி விகாரையை உடைக்க ஏலுமா? ஏலாது?. அப்படியாயின் ஒன்று, விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிகுதிக் காணிகளை விடுவிப்பது. இந்த விடயம் அரச அதிபரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பார். பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள் விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்க முடியும்” என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே இந்த மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டுத் திட்டம் வெளிவந்திருக்கிறது என்பதே நிலைமை. 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்திவரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். விகாரை அமைக்கப்பட்ட காணிக்குரிய உரிமையைக் கோருவோரில் ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் இந்த மாற்றுக் காணி, இழப்பீட்டுத் தீர்மானத்தைக் கடுமையாக நிராகரித்திருக்கிறார். காணி உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்குக் காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார். திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாகக் காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது, காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள் காணி வேண்டும் என்றும் பத்மநாதன் சாருஜன் கூறியிருக்கிறார். இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும். இருந்தாலும், நடைபெறுவது தமிழ் மக்களுக்கு நன்மையாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம். திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. காங்கேசன்துறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது. இதற்கிடையில், பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்குத் தேவையான காணியைத் தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத் தானே வேண்டும். அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றைய காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாகப் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலாலியில் விமானப்படைத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கெனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார். இவ்வாறிருக்கையில்தான், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், தையிட்டி விகாரை அகற்றப்படாதிருக்கும் என்ற முடிவும் கிடைக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-தையிட்டி-விகாரை-அகற்றப்படாது-என்பதே-நிச்சயம்/91-359848

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

1 week 5 days ago

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை.

அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது.
கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள.

தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடைய பேச்சின் கருத்து என்னவென்று எல்லோருக்கும் புரிந்தாலும் அதற்கு விளக்கம் கொடுப்பதானால் விடுவிக்கக்கூடியவை என அவர்கள் நினைக்கும் அல்லது தீர்மானிக்கும் காணிகள் மாத்திரம்தான் விடுவிக்கப்படும் மற்றையவைகள் அல்ல என்பதாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான், தையிட்டி விகாரைக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிக்குப் பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

விகாரை அமைக்கப்பட்ட காணிக்கு உரிமை கோருவோர் தங்களுடைய காணிக்கு மாற்றுக்காணி கோரவும் இல்லை அதற்கு இழப்பீடு வழங்கும்படி  அரசாங்கத்தைக் கேட்கவுமில்லை என்றிருக்கையில் இந்தவிதமான அறிவித்தலொன்று வெளிவந்திருக்கிறது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), தையிட்டி விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நடத்திவரும் காணி உரிமைக்கான போராட்டத்தின்போது, அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரைக் காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிவருகின்றனர்.

ஜூன் 12ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத்தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. 

விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும். தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே நேரம், “தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை.

தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்கத் தீர்மானித்துள்ளோம். ஏனென்றால், தையிட்டி விகாரையை உடைக்க ஏலுமா? ஏலாது?. அப்படியாயின் ஒன்று, விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிகுதிக் காணிகளை விடுவிப்பது. இந்த விடயம் அரச அதிபரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பார்.

பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள் 
விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு 
வழங்க முடியும்” என்றும் தெரிவித்திருந்தார். 

அதன்படியே இந்த மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டுத் திட்டம் வெளிவந்திருக்கிறது என்பதே நிலைமை. 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்திவரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.  விகாரை அமைக்கப்பட்ட காணிக்குரிய உரிமையைக் கோருவோரில் ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் இந்த மாற்றுக் காணி, இழப்பீட்டுத் தீர்மானத்தைக் கடுமையாக நிராகரித்திருக்கிறார்.

காணி  உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்குக் காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார்.

திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாகக் காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது, காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை 
நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள்  காணி வேண்டும் என்றும் 
பத்மநாதன் சாருஜன் கூறியிருக்கிறார்.

இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில் 
அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும். இருந்தாலும், நடைபெறுவது தமிழ் மக்களுக்கு 
நன்மையாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம்.

திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

அதே நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்குத் தேவையான காணியைத் தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத் தானே வேண்டும்.

அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றைய காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு  மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாகப் 
பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பலாலியில் விமானப்படைத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கெனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இவ்வாறிருக்கையில்தான், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், தையிட்டி விகாரை அகற்றப்படாதிருக்கும் என்ற முடிவும் கிடைக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-தையிட்டி-விகாரை-அகற்றப்படாது-என்பதே-நிச்சயம்/91-359848