Aggregator

இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

3 months 2 weeks ago
தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றி தாய் சகோதரத்தின் சிதைகளுக்கு கிரியைகள் செய்த பிள்ளைகள் பாராட்டுக்குரியவர்கள் . ........!

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு

3 months 2 weeks ago
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன? March 24, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை 15.03.2025 அன்று உருவாக்கியுள்ளனர். ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்பது சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருடைய சிந்தனையில் முகிழ்ந்த முத்தல்ல. 2018ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவநாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். கிழக்குத் தமிழர் ஒன்றியமானது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தில் எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் கிழக்கில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரு கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது. அங்கு நடந்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது என்றும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடான கட்சிகள் அதில் கையொப்பம் இட்டு கூட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதுக்கு இணங்க கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உருவாக்கம் பெற்றது. இந்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டபோது அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி,(TULF) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP), வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் தங்களுடைய உடன்பாட்டைத் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் பின்பு வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொண்டன. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கைச்சாத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்துக் கொண்டது. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாபையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் அங்கீகாரத்துக்காக 2019ம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தது. எனவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மேற்படி இரு கட்சிகளுக்கும் உரியதே தவிர இதனை புறக்கணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இன்று கிழக்குத் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் தங்களது கட்சி நலன் சார்ந்தே சிந்தித்தார்கள். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதை அவர்கள் விரும்பவேயில்லை. தங்களுடைய கட்சியின் பெயரும் படகுச் சின்னத்தையும் கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக மட்டக்களப்பில் தன்னை தியாகம் செய்யத் தீர்மானித்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் தனித்து தேர்தலில் போட்டியிடாது படகுச் சின்னத்தை ஆதரிப்பது என்றும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் தங்களுடைய இரு வேட்பாளர்களை நியமிப்பது என்றும் இது போன்று அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது சின்னமான கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரித்து தனது வேட்பாளர்களை கப்பல் சின்னத்தில் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது வேட்பாளர்களை படகுச் சின்னத்தில் நிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குச் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர் பட்டியலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை நியமிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அத்தோடு வி.முரளிதரன் (கருணா) அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டதையும் ஆட்சேபித்தார்கள். இவர்களுடைய இவ்வாறான சுயநலமான நடத்தையினால் அம்பாறையில் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரேயொரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இத்தேர்தலில் இழக்கப்பட்டது. அதற்கான பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டிருந்தால் 2020ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இரு பிரதிநிதித்துவமும் அம்பாறையில் ஒரு பிரதிநிதித்துவமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப் பெற்று அத்துடன் மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கப் பெற்று கிழக்கில் தனித்துவம் பேணும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பை அப்போது இல்லாமலாக்கியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும். தேர்தலில் வெற்றியீட்டிய பின் மாற்று அரசியல் கலாசாரத்தினையும் கிழக்கிற்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்ற தூர சிந்தனை கொண்டு உழைத்த த.கோபாலகிருஸ்ணன் அவர்களை தேர்தலில் வென்றியீட்டிய சிவநேசதுரை சந்திரகாந்தன் எள்ளவும் பொருட்படுத்தாது தன்னுடைய நலனுக்காக எல்லாரும் சேர்ந்து உழைத்த வெற்றியினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை 2024ம் ஆண்டு மக்கள் அவருக்கு வழங்கினர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டில் அவர்களுக்கிருந்த அனுதாப அலையினையும் அபிவிருத்தி நோக்கையும் வைத்து தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையில் கிழக்கின் அரசியல் ஒற்றுமையினைச் சீர்குலைத்தார்கள். ஆனால் இன்று 2024ம் ஆண்டுத் தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஒற்றுமை, எதிர்கால நலன் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகின்ற இந்த ஒற்றுமை, நலன் என்பவை தாம் இழந்த அரசியல் நலன்களையும் சுகபோகங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக போடப்படும் அரசியல் கபட நாடகமேயாகும். எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்தக் கபட நாடகத்துக்குப் பின்னால் உள்ள சுயநல நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமக்கான அரசியல் திசையை எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11912

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு

3 months 2 weeks ago
கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு; கிழக்குத் தமிழருக்கு ஆபத்தான கூட்டு கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற,வடக்கு,கிழக்கில் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யம் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம் .ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரனின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றன. எனவே கொலை,கொள்ளை,கப்பம்,கடத்தல்,காணாமல் ஆக்குதல்,திருட்டு, லஞ்சம்,தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும். ஆகவே நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என்றார். https://akkinikkunchu.com/?p=317491

புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார்

3 months 2 weeks ago
புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- பல நாடுகளில் உயிர் தியாகம் செய்தே சுதந்திரம் பெற்றனர். எமக்கு இலகுவில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதால் சுதந்திரத்தின் பெறுமதி எமக்குச் சரியாகப் புரியவில்லை. அதனால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு நாடு பின்நோக்கிச் சென்றது. அண்மையில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின்போது இளைஞர்கள் இன, மத, குல பேதங்களை முழுமையாக நிராகரித்தனர். காலிமுகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் அதைக் கண்டோம். நாடாளுமன்றத்தில் இன்றுள்ள கட்சிகள் இனவாதத்தை நிராகரித்துள்ளன. இது வரவேற்ககூடிய விடயமாகும். இதனை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவேண்டும். அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிறு குழுவொன்று முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது. அன்று அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி பயின்றனர், ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 1960களில்தான் இந்தநிலைமை மாறுபட்டது. இன, மத ரீதியாக மாணவர்கள் பிளவுபட்டனர். இன நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பேசுகின்றது. இதற்குரிய பணிகள் விரைவில் செய்யப்பட்டால் நல்லது-என்றார். https://newuthayan.com/article/புதிய_அரசமைப்பு_உருவாக்கம்_விரைவாக_நடப்பது_அவசியம்!_கரு_ஜயசூரிய_வலியுறுத்துகின்றார்

புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார்

3 months 2 weeks ago

புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார்

1231823729.jpeg

இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
பல நாடுகளில் உயிர் தியாகம் செய்தே சுதந்திரம் பெற்றனர். எமக்கு இலகுவில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதால் சுதந்திரத்தின் பெறுமதி எமக்குச் சரியாகப் புரியவில்லை. அதனால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு நாடு பின்நோக்கிச் சென்றது.

அண்மையில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின்போது இளைஞர்கள் இன, மத, குல பேதங்களை முழுமையாக நிராகரித்தனர். காலிமுகத்திடலிலும்  ஏனைய இடங்களிலும்  அதைக் கண்டோம். நாடாளுமன்றத்தில் இன்றுள்ள கட்சிகள் இனவாதத்தை நிராகரித்துள்ளன. இது வரவேற்ககூடிய விடயமாகும். இதனை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்.

இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவேண்டும். அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது.

இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிறு குழுவொன்று முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது.  

அன்று அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி பயின்றனர், ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 1960களில்தான் இந்தநிலைமை மாறுபட்டது. இன, மத ரீதியாக மாணவர்கள் பிளவுபட்டனர்.

இன நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பேசுகின்றது. இதற்குரிய பணிகள் விரைவில் செய்யப்பட்டால் நல்லது-என்றார்.

https://newuthayan.com/article/புதிய_அரசமைப்பு_உருவாக்கம்_விரைவாக_நடப்பது_அவசியம்!_கரு_ஜயசூரிய_வலியுறுத்துகின்றார்

இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

3 months 2 weeks ago
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர். நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!

இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

3 months 2 weeks ago

இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

565155566.jpeg

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது  மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!

”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ்

3 months 2 weeks ago
”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லாத போதிலும், அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக நடைப்பிணமாக டக்ளஸ் மாறியிருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கவலை கொண்டுள்ளனர். https://www.samakalam.com/அரசியலை-கைவிட-மாட்டேன்/

”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ்

3 months 2 weeks ago

”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ்

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லாத போதிலும், அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக நடைப்பிணமாக டக்ளஸ் மாறியிருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

https://www.samakalam.com/அரசியலை-கைவிட-மாட்டேன்/

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்: சென்னையை திணறடித்த மும்பையின் இளம் சுழல் 'மாயாவி' விக்னேஷ் யார்? பட மூலாதாரம்,X/CSK கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்த இந்த ஆட்டத்தில் எளிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை மும்பை அணி தள்ளிப்போட்டது. சிஎஸ்கே கையில் எடுத்த அதே ஆயுதத்தை மும்பை இந்தியன்ஸும் எடுத்து கடைசிவரை போராடியது. சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருப்பதைப் போல், மும்பை இந்தியன்ஸில் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர். இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அவர் தனது மந்திர சுழலால் சென்னை அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். மும்பையின் டாப்ஆர்டரை காலி செய்த கலீல் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே கலீல் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கெல்டனையும் கிளீன் போல்டு செய்து அவர் அசத்தினார். மறுபுறம் இளம் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 4.4. ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையை திணறவைத்த நூர்அகமது மும்பை அணிக்கு சூர்யகுமார், திலக்வர்மா இருவரும் சேர்ந்து ஓரளவு ஸ்கோரை நிலைப்படுத்தி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் 51 ரன்கள் சேர்த்து நங்கூரமிட்டநிலையில் அதை நூர் அகமது உடைத்தார். நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 மைக்ரோ வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. அடுத்துவந்த புதிய பேட்டர் ராபின் மின்ஸ் சரியாகக் கணிக்காமல் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் ஸ்லோ பாலை அடிக்க முற்பட்டு கேட்சாகி 3 ரன்னில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் திலக் வர்மா கால்காப்பில் வாங்கி 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மும்பை அணியின் ரன்ரேட் ஓரளவு உயர்ந்தநிலையில் அதற்கு நூர்அகமது வலுவான பிரேக்போட்டார். அடுத்துவந்த நமன்திர்(17), சான்ட்னர்(17) இருவரும் ஓரளவு பங்களிப்பு செய்தனர். சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் இருந்து, தற்போது மும்பைக்காக விளையாடும் தீபக் சஹர் தன்னாலும் பேட் செய்ய முடியும் என்பதை நேற்று வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடிய தீபக் சஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தீபக் சஹரின் இந்த பங்களிப்பால்தான் மும்பை அணியால் 150 ரன்களைக் கடக்க முடிந்தது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 முக்கிய வீரர்கள்21 மார்ச் 2025 கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன?16 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கெய்க்வாட், ரவீந்திரா சிறப்பான ஆட்டம் 156 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை என்பதை மும்பை அணி தொடக்கத்தில் இருந்து வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே திரிபாதி விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். 3வது வீரராக வந்த கெய்க்வாட், ரவீ்ந்திராவுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். ரச்சின் ரவீந்திரா ஆங்கர் ரோலில் ஆட, கெய்க்வாட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். தீபக் சஹர், சான்ட்னர், ராஜீ பந்துவீச்சை வெளுத்துவாங்கவே பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 62 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES எளிதான வெற்றி கடினமானது கடைசி 13 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 83 ரன் தேவைப்பட்டது. கெய்க்வாட், ரவீந்திரா இருந்த ஃபார்மில் விரைவாக எட்டிவிடுவார்கள் நிகர ரன் ரேட்டை உயர்த்திவிடுவார்கள் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், சிஎஸ்கே எடுத்த அதே ஆயுதத்தை, அவர்களுக்கு எதிராக மும்பையும் பயன்படுத்தியது. 4 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமார், 13 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களுக்கே வழங்கினார். பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து சிறப்பாக கேப்டன்சியையும் ஸ்கை செய்தார். சிஎஸ்கேவை கட்டிப்போட்ட புத்தூர் அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்கள் எளிதாக எடை போட்டனர். இயல்புக்கும் குறைவான வேகத்தில் விக்னேஷ் பந்துவீசியதால் அவரின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது கவனத்துடன் ஆட வேண்டும். கேப்டன் கெய்க்வாட் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, 53 ரன்னில் ஜேக்ஸிடம் கேட்சாகினார். அடுத்துவந்த ஷிவம் துபே(9), தீபக் ஹூடா(3) ஆகியோரும் புத்தூரின் ஸ்லோ ரிஸ்ட் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பலிகொடுத்தனர். சாம்கரன் 4 ரன்னில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சிஎஸ்கேவின் வேகமான வெற்றிப் பயனத்துக்கு விக்னேஷ் புத்தூர், உள்ளிட்ட 4 சுழற்பந்துவீச்சாளர்களும் பிரேக் போட்டனர். நமன் திர், வில் ஜேக்ஸ், சான்ட்னர், புத்தூர் என பலமுனை தாக்குதல்களை சிஎஸ்கே பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டது. சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES டென்ஷனைக் குறைத்த ரவீந்திரா புத்தூர் வீசிய 18-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இரு சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு தேவைப்படும் ரன்களைக் குறைத்தார். இடையே போல்ட் ஓவரில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் சற்று பின்னடைவாக மும்பைக்கு அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது, நமன்திர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 17ரன்னில் ரன்அவுட்டாகினார். அரங்கமே அதிர்ந்தது ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த சம்பவம் நடந்தது, தோனி களமிறங்கும்போது, அரங்கில்இருந்த "டீஜே" ஒலிக்கவிட்ட பாடல்கள், அரங்கை அதிர வைத்தன. அதைவிட ரசிகர்களின் கரஒலியும், விசில் சத்தமும் பெரிதாக இருந்தது. தோனி கடைசி இரு பந்துகளைச் சந்தித்தும் ரன் சேர்க்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரவீந்திரா சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே வென்றது. ரவீந்திரா 65 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் இளம் வீரர் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆண்டாக தொடரும் சோகம் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெல்ல முடியாமல் தவிக்கிறது. இந்த போட்டியில் தோல்வியுடன் சேர்த்து 13 ஆண்டாக முதல் போட்டியில் தோற்று வருகிறது மும்பை அணி. அதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்திலும் மும்பை தோற்றது. ஆட்டத்தின் நாயகன் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் இருவர் முக்கியக் காரணம். ஒருவர் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, மற்றொருவர் ஆப்கானிஸ்தான் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது. இதில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார். நூர் அகமதுவுக்கு ஐபிஎல் வாழ்க்கையில் இதுதான் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 3 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில் அதைவிட சிறப்பாக இந்தப் போட்டியில் பந்துவீசியுள்ளார். பேட்டிங்கில் கேப்டன் கெய்க்வாட்(53), ரச்சின் ரவீந்திரா(65) இருவரைத் தவிர சிஎஸ்கே அணியில் பெரிதாக யாரும் பங்களிப்பு செய்யவில்லை. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துச் சென்றார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மின்னல் 'மகி' சிஎஸ்கே அணியில் நேற்று 43 வயது இளைஞர் என செல்லமாக அழைக்கப்படும் தோனி களமிறங்கிய போது அரங்கமே கைதட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்தது. எம்எஸ் தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது அவருக்கு 43 வயதுபோன்று தெரியவில்லை. உடற்தகுதியை அற்புதமாக பராமரிக்கும் தோனி நேற்று செய்த ஸ்டெம்பிங் கவனத்தை ஈர்த்தது. நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்துவிட்டு தோனி சிரித்துக்கொண்டே சென்றார். தோனியின் ஸ்டெம்பிங் வேகம் பற்றி அறிந்த ஸ்கை சிரித்துக்கொண்டே பெவிலியன் சென்றார். ஒரு பேட்டரின் பேட்டிங் ஆக்சன் கூட முழுமையாக முடியாத நிலையிலேயே, சில மைக்ரோ வினாடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை தோனி செய்துள்ளார். மின்னல் மகியின் ஆகச்சிறந்த ஸ்டெம்பிங் முதல் ஆட்டத்திலேயே தெரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி குறித்து ருதுராஜ் கூறியது என்ன? வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில் " நான் ஆட்டமிழந்தவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. சில போட்டிகள் கடைசி ஓவர்வரை செல்லும், வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் அப்படித்தான் உணர்கிறேன். அணியில் 3வது வீரராகக் களமிறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் வந்தேன். புதிய அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். திரிபாதி தொடக்க வீரராக சிறப்பாக ஆடக்கூடியவர். எங்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே கலீல் அகமது சிறப்பாக விளையாடி வருகிறார், அனுபவம் அதிகம்வந்துவிட்டது. நூர் அகமதுதான் அணியின் துருப்புச்சீட்டு. தோனி இப்போதும் ஒரே மாதிரியான உடல்தகுதியுடன் இருக்கிறார், வலைப்பயிற்சியில் பல சிக்ஸர்களை விளாசினார், இந்த ஆண்டும் பல சிக்ஸர்களை விளாசுவதைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி ஸ்டம்பிங் பற்றி நூர் அகமது கூறியது என்ன? ஆட்டநாயகன் விருது பெற்ற நூர் அமகது பேசுகையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினா. எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்த அவர், "ஐபிஎல்லில் இங்கு விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். அணியில் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்வதில் கவனம் செலுத்தினேன். சூர்யகுமாரின் விக்கெட் சிறப்பு வாய்ந்தது. தோனியின் ஸ்டம்பிங் ஆச்சர்யமானதாக இருந்தது. தோனி போன்ற ஒருவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருப்பது ஒரு பவுலராக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஆண்டுகளுக்குப் பின் 'யெல்லோ அஸ்வின்' 10 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நேற்று மீண்டும் மஞ்சள் ஆடை அணிந்து உற்சாகமாக, அதிலும் சொந்த மண்ணில் விளையாடினார். தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்லிய அஸ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ்(11) விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் அதே கேரம்பால், ஸ்லோபால், பந்துவீச்சில் வேரியேஷன் என சரியான லென்த்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு வழக்கம்போல் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம்23 மார்ச் 2025 சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 யார் இந்த விக்னேஷ் புத்தூர்? பட மூலாதாரம்,GETTY IMAGES எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியை திணறடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். 23 வயதேயான இவரை 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி வாங்கியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக்கில் அலெப்பி ரிப்பிள்ஸ் (Aleppey Ripples) அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவராக அவர் இருப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நம்புகிறது. கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனாலும், அவரது சுழலில் இருந்த மாயாஜாலம் மும்பை இந்தியன்ஸ் அணியை கவர, 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படைய விலையில் அவரை வாங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட் லீக்கில் எம்ஐ கேப்டவுன் அணியின் பயிற்சியில் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமாகியுள்ளார். முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்துள்ளார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளம் கூறுகிறது. நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjryx9r879zo

இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM

image

இந்தியாவில்,  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது,  152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன.

இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் வீதியோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டுள்ளனர். 

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு  இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/209999

இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது, 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் வீதியோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டுள்ளனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/209999

யுக்ரேன் - ரஷ்யா போரை டிரம்ப் உறுதியளித்தபடி துரிதமாக நிறுத்த முடியாதது ஏன்? 5 காரணங்கள்

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ் பதவி, 24 மார்ச் 2025, 03:58 GMT கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் . யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தது. முன்னதாக நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், "நான் அதிபராக பதவியேற்கும் முன்பே இதை தீர்த்து வைப்பேன்" என்று டிரம்ப் உறுதியளித்தார். இது, 2023 மே மாதத்தில், "அதிபராக பதவியேற்ற பிறகு முதல் 24 மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி விடுவேன்" என்ற பேச்சு அவர் அளித்திருந்த முந்தைய உறுதிப்பாட்டை விட ஒரு படி மேலானதாகும். தற்போது, டிரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வெள்ளை மாளிகையில், இந்த அளவுக்கு கடுமையான மற்றும் சிக்கலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை டிரம்ப் தற்போது உணரத் தொடங்கியிருக்கலாம். ஒரு நாளில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என சொன்னது, 'சற்று கிண்டலாகவே' இருந்தது என கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஒரு நேர்காணலில் ஏற்றுக்கொண்டார். டிரம்பின் குழுவினர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் ஏற்படாததற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. 1. டிரம்பின் அதீத நம்பிக்கை முதலில், டிரம்ப் தனது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் ராஜ தந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, தவறானதாக இருக்கக் கூடும். மற்றொரு நாட்டின் தலைவருடன் அமர்ந்து நேரில் பேசி, ஒப்பந்தத்துக்கு வருவதன் மூலம், எந்த சர்வதேச பிரச்னையையும் தீர்க்க முடியும் என்பதே அவரது நீண்ட நாள் நம்பிக்கையாக இருந்து வந்தது. டிரம்ப், பிப்ரவரி 12ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முதலில் பேசினார். ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலை அவர் "மிகவும் பயனுள்ளதாய் இருந்தது" என்று கூறினார். பிறகு, மார்ச் 18ஆம் தேதி மீண்டும் இருவரும் பேசினர். ஆனால், டிரம்ப் விரும்பிய 30 நாட்கள் இடைக்கால போர்நிறுத்தம் இந்த தொலைபேசி உரையாடல்களில் உறுதி செய்யப்படவில்லை என்பது தற்போது தெளிவாகிறது. புதினிடமிருந்து அவர் பெற்ற ஒரே முக்கிய ஒப்பந்தம் என்னவென்றால், யுக்ரேனிய மின்சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துவதாகக் கூறிய வாக்குறுதி தான். ஆனால், அந்த உரையாடல் முடிந்த சில மணி நேரங்களுக்குள் ரஷ்யா அந்த வாக்குறுதியை மீறியது என்று யுக்ரேன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கக் கல்வித் துறையின் பணிகள் என்ன? டிரம்பால் அதை அகற்ற முடியுமா?21 மார்ச் 2025 டிரம்ப், புதின் பேச்சுவார்த்தையால் பலன் ஏதும் இல்லையா?20 மார்ச் 2025 கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், சீனா பற்றிய அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விகளுக்கு மோதி பதில் என்ன?18 மார்ச் 2025 2. அவசரம் காட்ட விரும்பாத புதின் இரண்டாவதாக, ரஷ்ய அதிபர் அவசரப்பட விரும்பவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஒரு மாதம் கழித்து மட்டுமே, கடந்த வாரம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்தார். நீண்ட கால தீர்வைப் பற்றி பேசுவதற்கு முன்பு இடைக்கால போர் நிறுத்தத்தை கோரும் அமெரிக்காவின் இரண்டு கட்ட திட்டத்தை தான் உறுதியாக எதிர்ப்பதாக புதின் வெளிப்படுத்தியுள்ளார். மாறாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும், "போரின் மூலக் காரணங்கள்" என்று அவர் கருதும் விஷயங்களை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார். நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பது ஆகியவை ஏதாவது ஒரு வகையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். எந்தவொரு உடன்பாடும் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்பு, ரஷ்யா முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றும் புதின் வலியுறுத்துகிறார். பட மூலாதாரம்,GENYA SAVILOV/AFP படக்குறிப்பு, இந்த உபகரணங்கள் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட பின்னர் யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு கீவ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 3. அமெரிக்காவின் அணுகுமுறை மூன்றாவது, ஆரம்பத்தில் யுக்ரேன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனும் அமெரிக்காவின் திட்டம் தவறானதாக இருக்கலாம். ஏனென்றால், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பது அதிபர் ஸெலென்ஸ்கி தான் என வெள்ளை மாளிகை நம்பியது. ஆனால், டிரம்பின் ஆட்சி தொடங்கிய பிறகு உலகின் அரசியல் சூழல் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்பதை யுக்ரேன் அரசு புரிந்து கொள்ள தாமதித்துவிட்டது என்று மேற்கத்திய ராஜ தந்திரிகள் கூறுகின்றனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் அழுத்தம், அதிபர் அலுவலகத்தில் நடந்த கடுமையான உரையாடலுக்கு வழிவகுத்தது. இதனால் அதிக நேரமும், முயற்சியும், அரசியல் மூலதனமும் வீணாகியது. அந்தச் சந்திப்பில் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தனர். இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராக மாறின. இதுவும் ஒரு முக்கிய ராஜ்ஜீய சிக்கலாகி, அதை சரி செய்ய நேரம் எடுத்தது. அந்த நேரத்தில், விளாதிமிர் புதின் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, தன்னுடைய தருணத்துக்காக காத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 4. ரஷ்யா - யுக்ரேன் நேரடியாக பேசாமல் இருப்பது நான்காவதாக, இந்த போரின் மிகுந்த சிக்கலான தன்மை, எந்தவொரு தீர்வையும் எளிதாக்கவில்லை. யுக்ரேன் முதலில் வழங்கிய யோசனை, வான்வழித் தாக்குதல் மற்றும் கடல் வழித் தாக்குதலுக்கான ஒரு இடைக்கால போர் நிறுத்தம் என்பதாக இருந்தது. இது கண்காணிக்க எளிதாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்குப் பகுதியிலுள்ள 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான முன்னணிப் போர் பகுதியையும் உட்படுத்தி உடனடி போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இதனால், அந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்கு இன்னும் கடினமாகிவிட்டது. இதை விளாதிமிர் புதின் உடனே நிராகரித்தார். ஆனால், மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற அந்த எளிமையான முன்மொழிவுக்கு புதின் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதிலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இந்த முன்மொழிவின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்களே, சவுதி அரேபியாவில் இன்று (திங்கட்கிழமை )நடைபெறவுள்ள தொழில்நுட்ப விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ மற்றும் ஆற்றல் துறையின் நிபுணர்கள், அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் உட்பட பாதுகாப்பு வழங்க வேண்டிய மின் நிலையங்களின் விரிவான பட்டியலை தயாரிக்க உள்ளனர். அவர்கள் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதற்கும் ஒருமித்த முடிவுக்கு வர முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஆற்றல் உள்கட்டமைப்புக்கும் பிற பொதுமக்கள் வசதிகளுக்கும் இடையிலான எல்லையை வரையறுப்பது சுலபமல்ல. அதனால் அந்த விவாதம் கூட சிறிது நேரம் எடுக்கும். முக்கியமாக, யுக்ரேன் மற்றும் ரஷ்யா நேரடியாக பேசுவதில்லை. இருவரும் தனித்தனியாக அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. இதுவும் கால தாமதத்திற்கு காரணமாகிறது. இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்15 மார்ச் 2025 அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?11 மார்ச் 2025 சௌதியில் இன்று பேச்சுவார்த்தை: அமெரிக்கா, யுக்ரேன், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்ன நினைக்கின்றன?11 மார்ச் 2025 5. பொருளாதார நன்மைகளில் அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா ஐந்தாவது, போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் அமெரிக்கா அதிகமாக கவனம் செலுத்துவதாகும். டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களுக்கு யுக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை பெற வாய்ப்பு அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சித்தார். யுக்ரேனின் எதிர்காலத்தில் அமெரிக்கா முதலீடு செய்வதாக சிலர் இதைப் பார்த்தனர் . ஆனால், மற்றவர்கள் இதை நாட்டின் இயற்கை வளங்களை மிரட்டி லாபம் பெறுவது போல இந்த அணுகுமுறையை கருதினர். ஆரம்பத்தில், எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில், யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வேன் என்று அதிபர் செலென்ஸ்கி கூறினார். ஆனால் வெள்ளை மாளிகை அதனை நிராகரித்து, அமெரிக்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் யுக்ரேனில் இருப்பதே பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என தெரிவித்தது. இறுதியில், ஸெலென்ஸ்கி தனது நிலைப்பாட்டை மாற்றி , பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமலேயே கனிம ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க தயாராகிவிட்டார். ஆனாலும், அமெரிக்கா இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. யுக்ரேனிய அணுமின் நிலையங்களுக்கான அணுகல் அல்லது உரிமை பெறுவதற்கான வாய்ப்பையும் சேர்த்து மீண்டும் விதிமுறைகளை மேம்படுத்தலாம் என்று அமெரிக்கா நம்புகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 டிரம்ப் தொனியில் மாற்றம் - ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போகிறாரா?8 மார்ச் 2025 உலகையே அச்சுறுத்தும் டிரம்பின் 'வரி விதிப்பு' ஆயுதம் எவ்வாறு செயல்படும்? எளிய விளக்கம்8 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னும் கடினமானதாக வாய்ப்பு போர்களை முடிவுக்கு கொண்டு வருவது கடுமையானதும், அதிக நேரம் எடுக்கும் செயல்முறையாகவும் இருக்கும். டிரம்பின் அழுத்தம் இல்லாமல், போர் நிறுத்த விஷயத்தில் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. ஆனால், அவர் நினைத்ததுபோல் முன்னேற்றம் வேகமாகவோ எளிதானதாகவோ இல்லை. 2018 டிசம்பரில், அதிபர் பதவிக்கு பரப்புரை செய்துகொண்டு இருந்த போது, விளாதிமிர் புதினுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எளிதாக இருக்கும் என ஸெலென்ஸ்கி கூறினார். "மிகவும் எளிமையான முறையில் பேச வேண்டும்," என்று அவர் யுக்ரேனிய பத்திரிகையாளர் டிமிட்ரோ கார்டனிடம் கூறினார். "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் நிபந்தனைகள் என்ன?" எனும் கேள்விக்கு, "இதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று நான் பதிலளிப்பேன். பிறகு, இருவருக்கும் பொதுவான ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம்." என்றார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அது ஸெலென்ஸ்கி நினைத்ததைவிட மேலும் கடினமாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c798gjr3p8qo

யுக்ரேன் - ரஷ்யா போரை டிரம்ப் உறுதியளித்தபடி துரிதமாக நிறுத்த முடியாதது ஏன்? 5 காரணங்கள்

3 months 2 weeks ago

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ்

  • பதவி,

  • 24 மார்ச் 2025, 03:58 GMT

கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் .

யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

"நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தது.

முன்னதாக நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், "நான் அதிபராக பதவியேற்கும் முன்பே இதை தீர்த்து வைப்பேன்" என்று டிரம்ப் உறுதியளித்தார்.

இது, 2023 மே மாதத்தில், "அதிபராக பதவியேற்ற பிறகு முதல் 24 மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி விடுவேன்" என்ற பேச்சு அவர் அளித்திருந்த முந்தைய உறுதிப்பாட்டை விட ஒரு படி மேலானதாகும்.

தற்போது, டிரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வெள்ளை மாளிகையில், இந்த அளவுக்கு கடுமையான மற்றும் சிக்கலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை டிரம்ப் தற்போது உணரத் தொடங்கியிருக்கலாம்.

ஒரு நாளில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என சொன்னது, 'சற்று கிண்டலாகவே' இருந்தது என கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஒரு நேர்காணலில் ஏற்றுக்கொண்டார்.

டிரம்பின் குழுவினர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் ஏற்படாததற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன.

1. டிரம்பின் அதீத நம்பிக்கை

முதலில், டிரம்ப் தனது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் ராஜ தந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, தவறானதாக இருக்கக் கூடும்.

மற்றொரு நாட்டின் தலைவருடன் அமர்ந்து நேரில் பேசி, ஒப்பந்தத்துக்கு வருவதன் மூலம், எந்த சர்வதேச பிரச்னையையும் தீர்க்க முடியும் என்பதே அவரது நீண்ட நாள் நம்பிக்கையாக இருந்து வந்தது.

டிரம்ப், பிப்ரவரி 12ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முதலில் பேசினார்.

ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலை அவர் "மிகவும் பயனுள்ளதாய் இருந்தது" என்று கூறினார்.

பிறகு, மார்ச் 18ஆம் தேதி மீண்டும் இருவரும் பேசினர்.

ஆனால், டிரம்ப் விரும்பிய 30 நாட்கள் இடைக்கால போர்நிறுத்தம் இந்த தொலைபேசி உரையாடல்களில் உறுதி செய்யப்படவில்லை என்பது தற்போது தெளிவாகிறது.

புதினிடமிருந்து அவர் பெற்ற ஒரே முக்கிய ஒப்பந்தம் என்னவென்றால், யுக்ரேனிய மின்சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துவதாகக் கூறிய வாக்குறுதி தான்.

ஆனால், அந்த உரையாடல் முடிந்த சில மணி நேரங்களுக்குள் ரஷ்யா அந்த வாக்குறுதியை மீறியது என்று யுக்ரேன் குற்றம் சாட்டுகிறது.

2. அவசரம் காட்ட விரும்பாத புதின்

இரண்டாவதாக, ரஷ்ய அதிபர் அவசரப்பட விரும்பவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஒரு மாதம் கழித்து மட்டுமே, கடந்த வாரம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்தார்.

நீண்ட கால தீர்வைப் பற்றி பேசுவதற்கு முன்பு இடைக்கால போர் நிறுத்தத்தை கோரும் அமெரிக்காவின் இரண்டு கட்ட திட்டத்தை தான் உறுதியாக எதிர்ப்பதாக புதின் வெளிப்படுத்தியுள்ளார்.

மாறாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும், "போரின் மூலக் காரணங்கள்" என்று அவர் கருதும் விஷயங்களை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார்.

நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பது ஆகியவை ஏதாவது ஒரு வகையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

எந்தவொரு உடன்பாடும் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்பு, ரஷ்யா முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றும் புதின் வலியுறுத்துகிறார்.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம்,GENYA SAVILOV/AFP

படக்குறிப்பு, இந்த உபகரணங்கள் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட பின்னர் யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு கீவ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

3. அமெரிக்காவின் அணுகுமுறை

மூன்றாவது, ஆரம்பத்தில் யுக்ரேன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனும் அமெரிக்காவின் திட்டம் தவறானதாக இருக்கலாம்.

ஏனென்றால், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பது அதிபர் ஸெலென்ஸ்கி தான் என வெள்ளை மாளிகை நம்பியது.

ஆனால், டிரம்பின் ஆட்சி தொடங்கிய பிறகு உலகின் அரசியல் சூழல் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்பதை யுக்ரேன் அரசு புரிந்து கொள்ள தாமதித்துவிட்டது என்று மேற்கத்திய ராஜ தந்திரிகள் கூறுகின்றனர்.

யுக்ரேன் மீதான அமெரிக்காவின் அழுத்தம், அதிபர் அலுவலகத்தில் நடந்த கடுமையான உரையாடலுக்கு வழிவகுத்தது. இதனால் அதிக நேரமும், முயற்சியும், அரசியல் மூலதனமும் வீணாகியது.

அந்தச் சந்திப்பில் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராக மாறின.

இதுவும் ஒரு முக்கிய ராஜ்ஜீய சிக்கலாகி, அதை சரி செய்ய நேரம் எடுத்தது.

அந்த நேரத்தில், விளாதிமிர் புதின் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, தன்னுடைய தருணத்துக்காக காத்திருந்தார்.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4. ரஷ்யா - யுக்ரேன் நேரடியாக பேசாமல் இருப்பது

நான்காவதாக, இந்த போரின் மிகுந்த சிக்கலான தன்மை, எந்தவொரு தீர்வையும் எளிதாக்கவில்லை. யுக்ரேன் முதலில் வழங்கிய யோசனை, வான்வழித் தாக்குதல் மற்றும் கடல் வழித் தாக்குதலுக்கான ஒரு இடைக்கால போர் நிறுத்தம் என்பதாக இருந்தது.

இது கண்காணிக்க எளிதாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால், கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்குப் பகுதியிலுள்ள 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான முன்னணிப் போர் பகுதியையும் உட்படுத்தி உடனடி போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

இதனால், அந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்கு இன்னும் கடினமாகிவிட்டது. இதை விளாதிமிர் புதின் உடனே நிராகரித்தார்.

ஆனால், மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற அந்த எளிமையான முன்மொழிவுக்கு புதின் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதிலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

இந்த முன்மொழிவின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்களே, சவுதி அரேபியாவில் இன்று (திங்கட்கிழமை )நடைபெறவுள்ள தொழில்நுட்ப விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ மற்றும் ஆற்றல் துறையின் நிபுணர்கள், அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் உட்பட பாதுகாப்பு வழங்க வேண்டிய மின் நிலையங்களின் விரிவான பட்டியலை தயாரிக்க உள்ளனர்.

அவர்கள் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதற்கும் ஒருமித்த முடிவுக்கு வர முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், ஆற்றல் உள்கட்டமைப்புக்கும் பிற பொதுமக்கள் வசதிகளுக்கும் இடையிலான எல்லையை வரையறுப்பது சுலபமல்ல.

அதனால் அந்த விவாதம் கூட சிறிது நேரம் எடுக்கும்.

முக்கியமாக, யுக்ரேன் மற்றும் ரஷ்யா நேரடியாக பேசுவதில்லை. இருவரும் தனித்தனியாக அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. இதுவும் கால தாமதத்திற்கு காரணமாகிறது.

5. பொருளாதார நன்மைகளில் அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா

ஐந்தாவது, போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் அமெரிக்கா அதிகமாக கவனம் செலுத்துவதாகும்.

டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களுக்கு யுக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை பெற வாய்ப்பு அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சித்தார்.

யுக்ரேனின் எதிர்காலத்தில் அமெரிக்கா முதலீடு செய்வதாக சிலர் இதைப் பார்த்தனர் .

ஆனால், மற்றவர்கள் இதை நாட்டின் இயற்கை வளங்களை மிரட்டி லாபம் பெறுவது போல இந்த அணுகுமுறையை கருதினர்.

ஆரம்பத்தில், எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில், யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வேன் என்று அதிபர் செலென்ஸ்கி கூறினார்.

ஆனால் வெள்ளை மாளிகை அதனை நிராகரித்து, அமெரிக்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் யுக்ரேனில் இருப்பதே பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என தெரிவித்தது. இறுதியில், ஸெலென்ஸ்கி தனது நிலைப்பாட்டை மாற்றி , பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமலேயே கனிம ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க தயாராகிவிட்டார்.

ஆனாலும், அமெரிக்கா இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

யுக்ரேனிய அணுமின் நிலையங்களுக்கான அணுகல் அல்லது உரிமை பெறுவதற்கான வாய்ப்பையும் சேர்த்து மீண்டும் விதிமுறைகளை மேம்படுத்தலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்னும் கடினமானதாக வாய்ப்பு

போர்களை முடிவுக்கு கொண்டு வருவது கடுமையானதும், அதிக நேரம் எடுக்கும் செயல்முறையாகவும் இருக்கும். டிரம்பின் அழுத்தம் இல்லாமல், போர் நிறுத்த விஷயத்தில் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. ஆனால், அவர் நினைத்ததுபோல் முன்னேற்றம் வேகமாகவோ எளிதானதாகவோ இல்லை.

2018 டிசம்பரில், அதிபர் பதவிக்கு பரப்புரை செய்துகொண்டு இருந்த போது, விளாதிமிர் புதினுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எளிதாக இருக்கும் என ஸெலென்ஸ்கி கூறினார்.

"மிகவும் எளிமையான முறையில் பேச வேண்டும்," என்று அவர் யுக்ரேனிய பத்திரிகையாளர் டிமிட்ரோ கார்டனிடம் கூறினார். "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் நிபந்தனைகள் என்ன?" எனும் கேள்விக்கு, "இதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று நான் பதிலளிப்பேன். பிறகு, இருவருக்கும் பொதுவான ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம்." என்றார்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அது ஸெலென்ஸ்கி நினைத்ததைவிட மேலும் கடினமாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c798gjr3p8qo

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் தனியார் பஸ் சாரதிகள் : அச்சத்தில் மக்கள்

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 11:18 AM யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டி போட்டு ஓடும் தனியார் பஸ்களினால் பயணிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதியும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதியுமே போட்டி போட்டுக்கொண்டு பஸ்ஸை செலுத்தியுள்ளனர். இதில் கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தி பஸ்ஸை செலுத்தியபோதும் காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தாது பஸ்ஸை செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/210041