1 week 4 days ago
நலமா அண்ணா🙏👍 மீண்டும் யாழில் கண்டது மகிழ்ச்சி🥰 நல்ல கருத்தோட வந்து இருக்கிறீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ👍.....................உங்களை நினைப்பது உண்டு....................பெரிசா யார் கூடவும் முன்பு போல் எழுதுவதில்லை போனில் இருந்து...............பிள்ளைகள் அண்ணி நலமாய் இருப்பினம் என நம்புகிறேன்👍......................தொடர்ந்து எழுதுங்கள் , உங்களின் எழுத்துக்கு நான் ரசிகன்👍..................................
1 week 4 days ago
25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/218406
1 week 4 days ago
25 JUN, 2025 | 12:04 PM

அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில்,
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது.
தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.
https://www.virakesari.lk/article/218406
1 week 4 days ago
ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.
1 week 4 days ago
இல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு, https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754 இதயம் பலவீனமல்ல மூளைதான்😉
1 week 4 days ago
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437036
1 week 4 days ago

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது.
ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1437036
1 week 5 days ago
இப்ப இருக்கிற இளம் வையாபுரிகள் எதுக்கெடுத்தாலும் ,எந்த விசயம் அறியோணும் எண்டாலும் உடனை கூகிள் சாமிட்டத்தான் கேப்பினம்.சாடையாய் தலையிடிச்சாலும் உடனை கூகுள்.வயித்தாலை போகாட்டிலும் கூகிள். சோறு சமைக்கவும் கூகிள்.றோட்டாலை நடந்து போகவும் கூகிள்.போற போக்கிலை வாத்திமாருக்கே வேலையில்லாமல் போகும் போலை கிடக்கு.🤣 கேட்டால் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி என்கிறார்கள்.அந்த தொழில்நுட்ப அறிவை வைச்சு உலகம் முழுக்க போரும் இரத்த சகதியும் தானே இப்ப நடக்குது? மனிதன் பேசாமல் ஆட்டுமந்தைகளாகவே இருந்து விட்டு போயிருக்கலாம் என்றே தோன்றுகிறது.☹️ விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர வளர போரும்,பஞ்சமும்,சீரற்ற காலநிலைகளுமே எஞ்சி நிற்கின்றன.😎