Aggregator
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!
இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!
இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!
கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்
கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்
இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது
மேலும் இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!
மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!
எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக விமர்சித்தார்.
ஆதித்யநாத், செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கருத்துக்கள் வந்துள்ளன.
“நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய அரசியல் தேசத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்த பேட்டியில் கூறியிருந்தார்.
எல்லை நிர்ணயம் குறித்த ஸ்டாலினின் கவலைகளையும் அவர் நிராகரித்து, அதை ஒரு “அரசியல் நிகழ்ச்சி நிரல்” என்று அழைத்தார்.
இது குறித்த எக்ஸ் பதிவில் ஸ்டாலின்,
இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்ப்பையும், நியாயமான நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணய செயல்முறைக்கான அதன் கோரிக்கையையும் அவர் ஆதரித்தார்.
இருமொழிக் கொள்கை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த மாநிலத்தின் “நியாயமான மற்றும் உறுதியான குரல்” நாடு முழுவதும் வேகம் பெற்று வருவதாகவும், இது பாஜகவை வெளிப்படையாகவே சங்கடப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
“இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு பற்றி எங்களுக்குப் போதிக்க விரும்புகிறீர்களா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, இது அரசியல் ரீதியாக மிகவும் மோசமான நகைச்சுவை,” என்று அவர் பதிவிட்டார்.
அதேநேரம், தமிழ்நாடு முதல்வர் தனது கட்சி எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் மொழியியல் திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறது என்று தெளிவுபடுத்தினார்.
“இது வாக்குக்காக கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்றும் ஸ்டாலின் பதிவில் சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக தொடர்ந்து பதட்டங்கள் நிலவுவதைத் தொடர்ந்து இரு மநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைப் போர் வெடிக்கிறது.
இந்தியை ஒரு ஆதிக்க தேசிய மொழியாக ஊக்குவிக்கும் பாஜகவின் முயற்சிகளை திமுக நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது.
இது இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை அச்சுறுத்துகிறது என்று வாதிடுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக நிர்வகித்த தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எல்லை நிர்ணயம் குறைக்கக்கூடும் என்ற கவலைகளையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி
AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!
AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!
AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார்.
நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் திறன் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட உளவு ட்ரோன்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
“ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்” என்று மேற்பார்வையின் போது வடகொரியத் தலைவர் கூறியுள்ளார்.
அணு ஆயுதம் ஏந்திய வடக்கு கொரியா, முதன்முறையாக வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விமானத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தருணம் இதுவாகும்.
இது அதன் பழமையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தக்கூடிய திறன் கொண்டது.
நான்கு எஞ்சின்கள் மற்றும் உடற்பகுதியில் பொருத்தப்பட்ட ரேடார் குவிமாடம் கொண்ட ஒரு பெரிய விமானத்தின் கதவை நோக்கி கிம் படிகளில் ஏறி, குறைந்த உயரத்தில் விமானத்தைப் பார்ப்பதை அரசு ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
வணிக செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியா ரஷ்ய தயாரிப்பான Il-76 சரக்கு விமானத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் பணிக்காக மாற்றுவதாக ஆய்வாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
அத்தகைய விமானம் வட கொரியாவின் நில அடிப்படையிலான ரேடார் அமைப்புகளை அதிகரிக்க உதவும், அவை சில நேரங்களில் தீபகற்பத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பால் வரையறுக்கப்படுகின்றன என்று லண்டனின் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் செப்டம்பரில் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.
புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
இரசித்த.... புகைப்படங்கள்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார்.
காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.
நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும்.
அதேவேளை 2 ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
https://oruvan.com/announcement-that-19-missing-persons-have-been-found/