Aggregator

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 week 4 days ago
கொழும்பில் காலையில் ம‌ழை பெய்து இருக்கு போல் அது தான் குறைந்த‌ ஓவ‌ரோட‌ விளையாட்டு முடிந்து இருக்கு...................இல‌ங்கை இந்த‌ மைச்சை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................

நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.

1 week 4 days ago
33 வயதான சோறான் மம்டானி கார்த்திகை மாதம் நடக்க இருக்கும் நியூயோர்க் மேயர் தேர்தலுக்கு பலத்த போட்டிக்கு மத்தியில் நேற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். இந்திய வம்சாவளியான இவர் உகண்டாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறினார்.இவர் முஸ்லீம் என்பதால் தோற்கலாம் என்று பலரும் சொன்னார்கள். இப்போது இளம் வயது ஆட்கள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.முன்னர் இப்படியான நிலை இல்லை. மனைவியும் நானும் இவருடன் போட்டியிட்ட மற்றவருக்கே வாக்கு போட எண்ணினோம்.ஆனாலும் மகள் தான் கட்டாயப்படுத்தி இவருக்கு வாக்கு போட வைத்தார். Takeaways from New York City’s mayoral primary: Mamdani delivers a political earthquake. CNN — Zohran Mamdani delivered a political earthquake Tuesday in New York City’s Democratic mayoral primary, riding progressive demands for change in a city facing an affordability crisis to the brink of a stunning victory. Democratic voters rejected a scandal-plagued icon of the party’s past, former Gov. Andrew Cuomo. Instead, they backed a 33-year-old democratic socialist who energized young voters and progressives with a campaign that could come to represent the first draft of a new playbook. I will fight for a city that works for you, that is affordable for you, that is safe for you,” Mamdani said in his celebratory speech just after midnight. We can be free and we can be fed. We can demand what we deserve,” he said. Mamdani’s viral, go-anywhere, talk-to-anyone style of campaigning could send shockwaves through the Democratic Party nationally as its leaders and incumbents face calls from frustrated voters for authenticity and aggressiveness. Republicans, meanwhile, moved immediately to elevate Mamdani, seeing an opportunity to campaign against ideas they see as unpopular with swing voters nationally. The formal outcome won’t be known until at least July 1, when New York City releases the initial ranked-choice results. But Mamdani held a clear lead Tuesday night, and Cuomo told supporters he had called Mamdani and conceded the primary. “Tonight is his night. He deserved it. He won,” Cuomo said. Writing a new playbook Mamdani’s upstart campaign had a lot to overcome — Cuomo’s universal name recognition, massive financial backing, endorsements from party leaders and unions — and he acted like it. https://www.cnn.com/2025/06/25/politics/zohran-mamdani-new-york-mayor-takeaways

நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.

1 week 4 days ago

33 வயதான சோறான் மம்டானி கார்த்திகை மாதம் நடக்க இருக்கும் நியூயோர்க் மேயர் தேர்தலுக்கு பலத்த போட்டிக்கு மத்தியில் நேற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

இந்திய வம்சாவளியான இவர் உகண்டாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறினார்.இவர் முஸ்லீம் என்பதால் தோற்கலாம் என்று பலரும் சொன்னார்கள்.

இப்போது இளம் வயது ஆட்கள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.முன்னர் இப்படியான நிலை இல்லை.

மனைவியும் நானும் இவருடன் போட்டியிட்ட மற்றவருக்கே வாக்கு போட எண்ணினோம்.ஆனாலும் மகள் தான் கட்டாயப்படுத்தி இவருக்கு வாக்கு போட வைத்தார்.

Takeaways from New York City’s mayoral primary: Mamdani delivers a political earthquake.

CNN — 

Zohran Mamdani delivered a political earthquake Tuesday in New York City’s Democratic mayoral primary, riding progressive demands for change in a city facing an affordability crisis to the brink of a stunning victory.

Democratic voters rejected a scandal-plagued icon of the party’s past, former Gov. Andrew Cuomo. Instead, they backed a 33-year-old democratic socialist who energized young voters and progressives with a campaign that could come to represent the first draft of a new playbook.

I will fight for a city that works for you, that is affordable for you, that is safe for you,” Mamdani said in his celebratory speech just after midnight.

We can be free and we can be fed. We can demand what we deserve,” he said.

Mamdani’s viral, go-anywhere, talk-to-anyone style of campaigning could send shockwaves through the Democratic Party nationally as its leaders and incumbents face calls from frustrated voters for authenticity and aggressiveness. Republicans, meanwhile, moved immediately to elevate Mamdani, seeing an opportunity to campaign against ideas they see as unpopular with swing voters nationally.

The formal outcome won’t be known until at least July 1, when New York City releases the initial ranked-choice results. But Mamdani held a clear lead Tuesday night, and Cuomo told supporters he had called Mamdani and conceded the primary.

“Tonight is his night. He deserved it. He won,” Cuomo said.

Writing a new playbook

Mamdani’s upstart campaign had a lot to overcome — Cuomo’s universal name recognition, massive financial backing, endorsements from party leaders and unions — and he acted like it.

https://www.cnn.com/2025/06/25/politics/zohran-mamdani-new-york-mayor-takeaways

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 week 4 days ago
இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் : பகல்போசன இடைவேளையின்போது பங்களாதேஷ் 72 - 2 விக். 25 JUN, 2025 | 12:49 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் 5ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அனாமுல் ஹக் (0) ஆட்டம் இழந்தார். (5 - 1 விக்.) தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக் ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் பந்துவீச்சில் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதலாவது பந்திலேயே மொமினுள் ஹக்கை (21) ஆட்டம் இழக்கச் செய்தார். பகல் போசன இடைவேளையின்போது ஷத்மான் இஸ்லாம் 43 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சொனால் தினூஷ அறிமுகமானதுடன் உபாதைக்குள்ளான மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218410

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
(இது பொதுவானதும் கூட) எனது விளக்கம் ஏலவே இருக்கிறது. இந்த இணைப்பை வசித்து பார்க்கவும். இதை தான் அமெரிக்கா தவிர்க்க முனைகிறது (அதனால் காலம் செல்ல இஸ்ரேல் தனியே மாட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது). எனது விளக்கம், என் சொந்த அரசியல், வரலாறு ..., அறிவு, ஆய்வும், சிந்தனை, புரிவும். இந்த இணைப்பை அடிப்படையாக கொண்டது அல்ல. Asia TimesWhy China's sitting on the Iran war sidelines - Asia TimesOn a visit to Shanghai some years ago, I asked a leading Chinese strategist how Beijing would view a war between the US and Iran, which even back then

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
இரான், இஸ்ரேல் சண்டையில் நடந்த 8 சம்பவங்கள் : 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், சீன் செடன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 13 முதல், இஸ்ரேல் இரானின் ராணுவ உள்கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி அடுத்து 24 மணி நேரத்தில், இன்னும் வேகமாக பல நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின. ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்கா இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்து விடும் நிலையில் இருந்தது. இப்படித்தான் அந்த நாள் முழுதும் நிலையற்ற சூழல் காணப்பட்டது. ' பாதுகாப்பாக இருங்கள் ' பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம். இந்தப் புகைப்படம் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 23 ஜூன் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் மத்திய கிழக்கை பாதிப்புக்கு உள்ளாக்கும் மோதல் வளைகுடாவிற்கும் விரைவில் பரவலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு, அமைதியான மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்க அரசு, "நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குங்கள்" என பரிந்துரை செய்தது. இது "அதிக எச்சரிக்கைக்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கத்தாரில் அமெரிக்கா மீது பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு, இரானுக்கு எப்போதும் இருந்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய அளவிலான அல்-உதெய்த் ராணுவத் தளத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமான நடவடிக்கைகள் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன. மலைக்கு அடியில் அமைந்துள்ள இரானின் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளம் உட்பட, இரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, கடந்த வார இறுதியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர். இரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமனெயி பதுங்கு குழியில் தங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாயத் தளங்களில் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று அவர் ஒரு உத்தரவை வெளியிட்டதாகத் தெரிகிறது. 'உண்மையான அச்சுறுத்தல்' 12:00 வாஷிங்டன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ் / 19:30 டெஹ்ரான் கத்தாரின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்தது. தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசரமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கினர். மேலும் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின. பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது இரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்று ஒரு "உண்மையான அச்சுறுத்தல்" இருப்பதாக பிபிசி அறிந்து கொண்டது. கத்தார் திசையை நோக்கி ஏவுகணைகள் குறிவைத்து வருவதைக் கண்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், இரானிய ஆயுதங்களை இடைமறித்துத் தாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் உருவான ஒளிப்பாதைகளால் நிரம்பியிருந்தது. 'பலம் அல்ல, பலவீனம்' 13:00 வாஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 டெஹ்ரான் இரான் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது நேரத்தில், இரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது. "இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பலம் அல்ல, மாறாக பலவீனங்கள்" என அது தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதல் விரைவில் முடிவடைந்தது. அமெரிக்காவிற்கு முன்பாக, கத்தார் அந்தத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றியது. தாக்குதலின் இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளம் தான் என்றாலும், அதன் இறையாண்மை இந்த "தீவிரமான தாக்குதல்" மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது. ஆனால் முக்கியமாக, தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்தத் தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை. அதே நேரத்தில், இரான் உச்ச தலைவரின் எக்ஸ் தளப்பதிவில், ஒரு சர்ச்சைக்குரிய படம் பகிரப்பட்டது. அந்தப் படம், ஒரு அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிவதையும் சித்தரித்தது. இருப்பினும், அழிவைப் பற்றி எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், "நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்று அவர் பதிவிட்டார். அதனையடுத்து, இரான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வெளிப்புற ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தத் தாக்குதல் இரான் தலைவர்கள் தங்களின் மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆனால் மோதலைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றியது. அமெரிக்கர்களுக்கு எதிராக தாங்கள் பழிவாங்கியதாக தங்களது மக்களிடம் கூற இரானுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த எதிரியை நேரடியாகச் சண்டைக்கு இழுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தாமல் அந்த தாக்குதலை மேற்கொண்டனர். பிறகு பதற்றம் தணிவதற்கான சூழல் உருவாவதைப் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எப்போது தோன்றுவார் என்பதை எதிர்பார்த்து உலகம் காத்திருந்தது. 'அமைதிக்கான நேரம்' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜூன் 15 அன்று டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஷரன் எண்ணெய் கிடங்கு உட்பட இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது. 16:00 வாஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 டெஹ்ரான் "பலவீனமானது." "எதிர்பார்க்கப்பட்டது." "திறம்பட எதிர்கொள்ளப்பட்டது." இரானின் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் விவரித்தார். ஆனால் அதன் பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனி காணப்பட்டது. தாக்குதல் குறித்து "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக" நன்றி என, இரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், "அவர்கள் தங்களது கோபத்தை வெளியிட்டுவிட்டனர்" என்று கூறினார். "ஒருவேளை இரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம். இஸ்ரேலும் அவ்வாறே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரான் அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் இரானுக்கு எதிராக இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த காலங்களில் உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், தீய சக்தியாகவும் அந்த நாட்டை விவரித்திருந்த டிரம்ப், சண்டை நிறுத்தம் குறித்து, அதன் தலைவர்களிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வெளியிட்ட தொடர் பதிவுகளை நிறுத்திவிட்டு, "உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!" என்று பின்னர் பதிவிட்டார் டிரம்ப். '12 நாள் போர்' பட மூலாதாரம்,MAXAR படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய பின்னர், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்தது. 18:00 வாஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 டெஹ்ரான் அமெரிக்கா, இரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரான் உடன் நடைபெற்ற மோதலில் சிறிது காலம் இணைந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசினார். இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் அதன் செய்தி எனத் தெளிவாக தெரிந்தது. இதற்கிடையில், டிரம்பின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும், இரானியர்களை நேரடியாகவும் ரகசிய ராஜ்ஜீய வழிகளிலும் அணுகினர். மத்திய கிழக்கில் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும், டிரம்ப் மிகவும் மதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க, அமெரிக்காவில் இருந்து அவரது குழு அவசரமாக செயல்பட்டது. அந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல்களும் அதற்கெதிரான மறுப்புகளும் பரவத் தொடங்கின. ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்தவுடன், நிலைமை முன்னேறத் தொடங்கியது. பின்னர், பிஎஸ்டி நேரப்படி காலை 11:00 மணிக்குப் பிறகு, அதிபர் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். "அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று அவரது செய்தி தொடங்கியது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான சண்டை நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். "செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள் "நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும். இனி, இந்த மோதல் "12 நாள் போர்" என்று அழைக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அங்கிருந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில், அடுத்த நாள் விடியத் தொடங்கியது. 'ஏவுகணைத் தாக்குதல்களின் கடைசி சுற்று' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் பீர்ஷெபாவில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. 22:00 வாஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 டெஹ்ரான் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்ல மக்கள் உத்தரவிடப்பட்டனர். இரானிலிருந்து ஏவுகணைகள் வந்துகொண்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன. 60 நிமிடங்களுக்குள், இரான் மூன்று சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. காலைக்குப் பிறகு, மேலும் பல ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இரானிய ஏவுகணை நேரடியாக தாக்கியது. பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்த மூன்று பேர் உட்பட, நால்வர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இரான், தங்களின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றை குடியிருப்புகள் மீது பயன்படுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், இரானிய ஊடகங்கள், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேவில் இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபேரியும் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் "முற்றிலும் அழிக்கப்பட்டன. அங்கு ஏற்பட்ட வெடிப்பால் சுற்றியுள்ள வீடுகளும் பல சேதமடைந்தன" என்று பிராந்திய துணை ஆளுநர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் தெளிவாகக் காணப்பட்டன. பட மூலாதாரம்,BBC PERSIAN படக்குறிப்பு, இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இரானின் காட்சி. சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குமுன், இஸ்ரேல் 'கடைசி சுற்று' ஏவுகணைகளை ஏவியதாக இரான் குற்றம் சாட்டியது." இஸ்ரேலிய ராணுவம் இரவு முழுவதும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக பின்னர் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இராக் அரசு, டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள தளங்களைக் குறிவைத்ததாகக் கூறியது. இரானிய ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள் இராக்கில் செயல்பட்டு வருகின்றன. எந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கடைசி நிமிடம் வரை மோதல் தொடர்ந்து நடைபெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ' சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திங்கட்கிழமை இரவு படம்பிடிக்கப்பட்டன. 01:00 வாஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 டெஹ்ரான் "சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!' என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கம் சண்டை நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது. இரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழித்ததன் மூலம், இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றியதாகவும், இப்போது அது 'உலக வல்லரசுகளின்' வரிசையில் இணைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இரான் தயாராக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி, நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:00 மணிக்குள் நிறுத்தினால், "அதற்குப் பிறகு எங்கள் பதிலடியை தொடர எங்களுக்கு எந்தவித எண்ணமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த சண்டை நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் ஆகவில்லை. இரானிலிருந்து ஏவுகணை பாய்ந்ததையடுத்து, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இரான் அந்த கூற்றுகளை மறுத்தபோதிலும், டெஹ்ரானின் மையத்தில் உள்ள ஆட்சியின் இலக்குகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களுக்கு" உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், "தெஹ்ரான் அதிர்ச்சியடையும்" என்று எச்சரித்தார் வலதுசாரி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச். அதனையடுத்து, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் விரைவாக ஏற்படுத்திய ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது போல் தோன்றியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானின் தலைநகரை நோக்கிச் சென்ற நிலையில், "அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் வீசினால், அது ஒரு பெரிய ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனே நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!" என்று டிரம்ப் மீண்டும் பதிவிட்டார். ' இஸ்ரேலும் இரானும் அமைதியடைய வேண்டும்' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் வாஷிங்டன் டிசியில் மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்து வந்தார். அங்கு ஒரு ஹெலிகாப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது. அறிவிப்புகள், கூற்றுகள் மற்றும் மறுப்புகளால் குழப்பமடைந்த இரவிற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க செய்தியாளர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இஸ்ரேலும் இரானும் சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் அவர்களிடம் கூறினார். ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். ஜெட் விமானங்களைத் திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதைக் குறிப்பிட்ட டிரம்ப், "ஒரு [இரானிய] ஏவுகணை இருந்தது, அது காலக்கெடுவுக்குப் பிறகு கடலில் ஏவப்பட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கச் செல்கிறது. இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்" எனக் கூறினார். இரானிய ஏவுகணை "ஒருவேளை தவறுதலாக" ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அது "தரையிறங்கவில்லை" என்றும் டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்ப் கோபமாகக் காணப்பட்டார். ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், "நான் இதற்கு முன்பு பார்த்திராத" அளவிலான தாக்குதல்களை நடத்தியதற்காக, "இஸ்ரேலிடம் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார். "இரானைக் குறித்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை," என்றும் டிரம்ப் கூறினார். டிரம்ப் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, இஸ்ரேல் மற்றும் இரான் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 'இவர்கள் இவ்வளவு நாட்களாக சண்டையிட்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை' என்று அவர்களைக் கடுமையாகச் சாடினார். நெதர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்கவிருந்தார். விமானத்தில் ஏறிய பிறகு, டிரம்ப் நெதன்யாகுவை அழைத்தார். அந்த உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிகிறது. இஸ்ரேலிய பிரதமருடன் அதிபர் "மிகுந்த உறுதியுடனும் நேரடியாகவும்" பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரம் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தது. நெதன்யாகு, சூழ்நிலையின் தீவிரத்தையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கவலைகளையும் புரிந்து கொண்டார்" எனக் கூறப்பட்டது. இரானைத் தாக்க தயாராக இருந்த இஸ்ரேலிய விமானங்களை திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதாக, விமானப் பயணத்தின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இரானில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை உருவாக்குவது, இப்போது அவர்களின் மனதில் "கடைசி விஷயமாக"இருக்கும் என்று கூறினார் டிரம்ப். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3en488x5dko

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
ந‌ண்பா நீ க‌ல‌க்கு , உக்கிரேனுக்கு சிங்சாங் போட்டு ஓய்ந்து விட்டின‌ம் , இப்போது ஈரான் மீது கை வைத்து இருக்கின‌ம்........................ஈரான் அவ‌ன் பாட்டுக்கு எங்கையோ இருந்து அணுகுண்டு செய்து முடிக்கும் நிலை வ‌ரும் போது இஸ்ரேல் மூக்கை நுழைத்து அடி வேண்டி அவ‌மான‌ப் ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம்................ வாயை கொடுத்து எங்கையோ வாங்கிக் க‌ட்டி கொண்ட‌ க‌தையா அமெரிக்கா ர‌ம்ப்.................முற்ப‌க‌ல் செய்யின் பிற்ப‌க‌ல் விளையும்..................... நீ எழுதின‌தை தான் இந்த‌ திரியில் நான் ப‌ல‌ த‌ர‌ம் எழுதி இருந்தேன் ஈரான் அணுகுண்டு செய்வ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்கென‌................................. இந்த‌ போரில் வென்ற‌து ஈரான் , ஈரான் மீண்டும் அணுகுண்டு செய்வ‌தை மீண்டும் ஆர‌ம்பிப்பின‌ம் , அடுத்த‌ முறை ஈரான் மீது இஸ்ரேல் கை வைத்தால் அழிவு வேறு கோன‌த்தில் இருக்கும்......................ஈரானிய‌ர்க‌ள் துணிந்த‌வ‌ங்க‌ள் ந‌ண்பா......................சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் முத‌ல் எங்கு உருவாகுது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் இருந்து தான்😁......................

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

1 week 4 days ago
பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன் - தேசபந்து தென்னக்கோன் 25 JUN, 2025 | 12:40 PM “2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன்” என தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவில் தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த போதே தேசபந்து தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னை கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.” “பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் நான் குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் தான் இருந்தேன்.” “ஆனால் பொலிஸார் என்னை தவறான இடங்களில் தேடினர்.” “குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தினேன்.” “நான் அந்த வீட்டில் தனியாக தான் இருந்தேன்” என தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் சார்பில் 15 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. விசாரணை குழு நாளை வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் கூடும். https://www.virakesari.lk/article/218412

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 week 4 days ago
மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் : ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 25 JUN, 2025 | 12:58 PM நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படாமல் இருத்தலானது சமாதானத்தின் நிலைபேறான தன்மையைப் பாதிக்கும். மாறாக என்ன நேர்ந்தது என்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் பயணிக்க முடியும் என அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செவ்வாய்க்கிழமை (24) மாலை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித உரிமைகளே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் முன்நோக்கிப் பயணிப்பதற்குமான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் நீண்டகால உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது நிலவும் சமாதானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது அவசியம். உள்நாட்டு மோதல், தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட சகல உரிமைகளையும் அழுத்தங்களின்றிப் பேண வேண்டும். தற்போது இலங்கை தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டு பொறிகளுக்குள் சிக்கியிருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய வழிமுறைகளை இலங்கையர்கள் ஆராய வேண்டும். நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என்றார். அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் “தீர்வுகளை நோக்கிய பாதையாக மனித உரிமைகள்” எனும் தலைப்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218420

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

1 week 4 days ago
ஆக்ஸியம் 4: 28,000 கிமீ வேகத்தில் சென்றாலும் 400 கிமீ உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ்சை அடைய 28 மணி நேரமாவது ஏன்? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீகாந்த் பாக்‌ஷி பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் விண்வெளி பயணத்தில் இந்தியா மற்றுமொரு சாதனையை புரிய உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 27 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவர் கூட இந்தியர் இல்லை. அந்த சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், பூமியில் இருந்து வெறும் 400 கி.மீ. உயரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இந்த குழுவுக்கு ஏன் 28 மணி நேரமாகிறது? பட மூலாதாரம்,X/INTERNATIONAL SPACE STATION படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் குழுவினர் நீண்ட பயணம் ஏன்? ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு மணிநேரத்தில் 28,000 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் அதனால் பயணிக்க முடியும். ஆக்ஸியம் 4 திட்டம், பூமிக்கு மேலே தோராயமாக 370 முதல் 400 கி.மீக்கு மேலே பூமியின் தாழ்வட்டப் பாதையில் (low-Earth orbit) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். இன்று மதியம் 12 மணியளவில் செலுத்தப்படும் ஃபால்கான் 9 ராக்கெட் 28 மணிநேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 26 அன்று மாலை 5 மணிக்கு தான் அடையும். மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட், 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஏன் 28 மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதற்கான காரணத்தை இங்கே அறியலாம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, கணக்கு பாடத்தில் காலம், வேகம் மற்றும் தொலைவு குறித்து படித்திருப்போம். அதன்படி, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு கார், 400 கி.மீ. தொலைவை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை கணக்கிட்டிருப்போம். அதாவது, 4 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த கணக்கு விதிமுறைகள் பூமியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும், விண்வெளி பயணத்துக்கு அல்ல. ஏனெனில், பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது அது மாறாத, நிலையான ஒன்றாக உள்ளது. அந்த இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு மாறாது. ஆனால், விண்வெளி பயணம் அப்படியல்ல. விண்வெளியில் உள்ள எந்தவொரு பொருளும் நிலையானது அல்ல. அவை, ஒவ்வொரு சுற்றுப் பாதையிலும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. உதாரணமாக, கோள்கள் சூரியனையும் செயற்கைக்கோள்கள் கோள்கள் மற்றும் சிறுகோள்களையும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. அவை அப்படி சுழலவில்லை என்றால், அவை கோள்களின் ஈர்ப்புவிசைக்கு உட்பட்டு, அவற்றின் திசையிலேயே சென்று அவற்றுடன் மோதிவிடும். இதே விதிமுறை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் பொருந்தும். சர்வதேச விண்வெளி நிலையம், தாழ்வட்டப் பாதையில் பூமியை மணிக்கு 28,000 கி.மீ எனும் வேகத்தில் சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் அது சுழலவில்லை என்றால், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழுந்துவிடும். அதனால்தான் அது நிலையான வேகத்தில் பூமியை சுற்றிவருகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார் (கோப்புப்படம்) பயணத்தின் வெவ்வேறு கட்டங்கள் ஆக்ஸியம் 4 திட்டத்தின்படி, பூமியின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதிலிருந்து தப்பிக்க (escape velocity) ஃபால்கான் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்தால் தான் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குள் நுழைய முடியும். இந்த பாதை நேரானது அல்ல. அந்த பாதை ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும். புவியீர்ப்பு புலத்தைக் கடந்து பயணித்த பின், அந்த ராக்கெட்டில் உள்ள முதல் கட்ட உந்துகலன்கள் அதிலிருந்து பிரிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கும். ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டதிலிருந்து ராக்கெட் இரண்டாம் கட்டத்தை அடைய சில நிமிடங்களே எடுக்கும். அங்கிருந்து ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என்கிறார், தி பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன். முதல் கட்டத்தில் புவியீர்ப்பு விசையை தாண்டி பயணிக்க ராக்கெட்டுக்கு அதிகளவிலான எரிபொருள் தேவை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து பயணித்த பின், குறைந்த எரிபொருள் மூலமாகவே நீண்ட தொலைவு மிக வேகமாக பயணிப்பது சாத்தியம். ஃபால்கான் 9 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடு என்பது சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும். இதன்பின், அந்த ராக்கெட் பூமியை தொடர்ந்து சுற்றி, அதன் வேகம், திசை மற்றும் சுற்றுவட்டப் பாதையை மாற்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும். எனினும், இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டில் உள்ள வழிகாட்டும் அமைப்பே கவனித்துக்கொள்ளும். இத்திட்டத்தின் தலைவர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் சுபான்ஷு சுக்லா ராக்கெட்டில் தங்கள் முன்பு உள்ள மானிட்டர்கள் மூலம் இதை கண்காணித்து, அது சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள். சில நிமிடங்களில் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், இரண்டாம் கட்டம் நிறைவடைய 23 முதல் 25 மணி நேரமாகும் என ரகுநந்தன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. கடினமான கட்டம் நாசாவால் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய படங்கள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் மிக குறைவான வேகத்தில் நகர்வது போன்று காட்டுகின்றன. ஆனால், உண்மையில் அது மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கும். பயணம் தொடங்கி 25 மணிநேரம் கழித்து, டிராகன் விண்கலம் அதே வேகத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும். அதன்பின், மெதுவாக வேகத்தை அதிகரித்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணையும் செயல்முறை தொடங்கும். அந்த சமயத்தில், இரண்டும் விண்வெளியில் நிலையாக உள்ளது போன்று தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டும் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலை பூமியில் நடப்பதாக கற்பனை செய்து பார்ப்போம். அருகருகே மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால், ஒரு காரில் உள்ளவர்கள் மற்றொரு காருக்குள் செல்வதைப் போன்றது. அதனால்தான் டிராகன் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நெருக்கமாக செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது. அனைத்து சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும். இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் உடனடியாக திறக்காது. சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சேர்ந்து, விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகு, காற்று வெளியேறாமல் தடுக்கும் வகையில் மூடப்பட்ட பின்னரே, இரண்டுக்கும் இடையேயான கதவுகள் (hatches) திறக்கப்படும். இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglz0knxe8wo

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 week 4 days ago
பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆற சில காலம் தேவை - அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 12:19 PM பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை செவ்வாய்க்கிழமை (24) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218408

சர்வதேச நிபுணர்கள் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே இனப்படுகொலைக்கு நீதி சாத்தியம் : தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம்

1 week 4 days ago

25 JUN, 2025 | 12:16 PM

image

யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

511271174_711640048388047_47164135170200

https://www.virakesari.lk/article/218407

சர்வதேச நிபுணர்கள் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே இனப்படுகொலைக்கு நீதி சாத்தியம் : தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம்

1 week 4 days ago
25 JUN, 2025 | 12:16 PM யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது. தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, https://www.virakesari.lk/article/218407

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
ந‌ல‌மா அண்ணா🙏👍 மீண்டும் யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🥰 ந‌ல்ல‌ க‌ருத்தோட‌ வ‌ந்து இருக்கிறீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்கோ👍.....................உங்க‌ளை நினைப்ப‌து உண்டு....................பெரிசா யார் கூட‌வும் முன்பு போல் எழுதுவ‌தில்லை போனில் இருந்து...............பிள்ளைக‌ள் அண்ணி ந‌ல‌மாய் இருப்பின‌ம் என‌ ந‌ம்புகிறேன்👍......................தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் , உங்க‌ளின் எழுத்துக்கு நான் ர‌சிக‌ன்👍..................................

அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - பெற்றோலிய கூட்டுத்தாபனம்

1 week 4 days ago
25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/218406

அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - பெற்றோலிய கூட்டுத்தாபனம்

1 week 4 days ago

25 JUN, 2025 | 12:04 PM

image

அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில்,

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. 

தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/218406

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
இல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு, https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754 இதயம் பலவீனமல்ல மூளைதான்😉

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 4 days ago
அடுத்த‌ மைச் பிரின்ஹ‌ம் மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்..........பாப்போம் போட்டி முடிவில்...................................