Aggregator
மனதுக்கு பிடித்த BGM Background Music
மனதுக்கு பிடித்த BGM Background Music
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
பயந்தாங்கொள்ளி
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர்
கிளிநொச்சியில் எரிபொருள் தாங்கி வாகனம் தடம் புரண்டது
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
Highlights | West Indies v Australia | 1st Test Day 1
14 Wickets Fall On Day 1
Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள்
செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள்
26 JUN, 2025 | 05:03 PM
செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ் செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது,
செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான நிதியை தாமதமின்றி தடையின்றி இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சேமிப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் போதியளவு இல்லாததால் நீண்டகால தீர்வு காணப்படும் வரை மனித எச்சங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும்.
மனித எச்சங்களை சேமித்து வைப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகளிற்கு அதனை கொண்டு செல்வதற்கும் யாழ்ப்பாணத்தில் தடயவியல் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்தவேண்டும்.
முறையான அகழ்வாராய்ச்சி மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண அதிநவீன தடயவியல் கருவிகள் சாதனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் அவசியம்.
பக்கசார்பின்மை மற்றும் தலையீடுகளை தவிர்ப்பதற்காக செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும்.
புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது
புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0 - 52
இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது.
குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tamilmirror Online || ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை
French scientists discover new blood type in Guadeloupe woman - CBS News