Aggregator

செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம்

4 days 21 hours ago
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடை, புத்தகப்பை மீட்பு நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. மண் மாதிரி சேகரிப்பு புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது. இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர். https://newuthayan.com/article/செம்மணியில்_இதுவரையில்_33_என்புத்_தொகுதிகள்!_புத்தகப்பை,_ஆடை,_வளையலுடன்_சிறுகுழந்தையின்_என்பு_நேற்று_அடையாளம்

செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம்

4 days 21 hours ago

செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம்

834765640.jpg

செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. 

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆடை, புத்தகப்பை மீட்பு
நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மண் மாதிரி சேகரிப்பு
புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது.
இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர்.

https://newuthayan.com/article/செம்மணியில்_இதுவரையில்_33_என்புத்_தொகுதிகள்!_புத்தகப்பை,_ஆடை,_வளையலுடன்_சிறுகுழந்தையின்_என்பு_நேற்று_அடையாளம்

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

4 days 22 hours ago
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததும் வெற்றிதான். ஆனால் அங்கே வந்த சிவஞானம்,சாணக்கியன்,சந்திரசேகரன் போன்றவர்களை ஒரு தரப்பினர் அவமதித்தமை தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.அங்கிருந்து வெளியேறிய பின் சந்திரசேகரன் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த போராட்டத்தின் நியாயத்தை சந்திரசேகரன் உட்பட அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தமை என்பது அடிப்படை வெற்றி.அவர்களுடைய வாயாலயே அந்த போராட்டத்தின் நியாயத்தையும் அந்தப் போராட்டக் கோரிக்கைகளின் நியாயத்தையும் ஒப்புக்கொள்ள வைத்திருந்தால் அது மேலும் வெற்றியாக அமைந்திருக்கும். அரசியல்வாதிகளை அந்த இடத்திலிருந்து அவமதித்து வெளியேற்றியமை தங்களுடைய கைகளை மீறி நிகழ்ந்த ஒன்று என்ற பொருள்பட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மக்கள் செயல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏற்பாட்டுக் குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும்.அந்த அமைப்பு செம்மணியில் அரசியல் அடர்த்தி மிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம் அல்ல. தளர்வானது. அந்த தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் அங்கே அரசியல்வாதிகளை அவமதிக்கும் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.அதுபோலவே அந்தத் தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் யுரியூப்பர்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அந்தப் போராட்டத்தின் நோக்கத்துக்கு வெளியே போய் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். செம்மணிப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் அது. காணொளி ஊடகங்களும் குறிப்பாக யுரியூப்பர்களும் ஒரு போராட்டத்தைத் தமது காணொளி உள்ளடக்கத் தேவைகளுக்காகத் திசை திருப்ப அனுமதிக்கக்கூடாது என்பது.இந்த விடயம் கடந்த 15 ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாக்கள்,மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் தொகுத்துக் கவனிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சில யுரியூப்பர்களும் காணொளி ஊடகக்காரர்களும் சர்ச்சைகளைத் தேடுகிறார்கள். சர்ச்சைகள் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை வலிந்து உருவாக்குகின்றார்கள். அல்லது ஏற்கனவே உள்ள சர்ச்சை ஒன்றை எப்படிச் சூடான காணொளி உள்ளடக்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.அவர்களுடைய இலக்கு டொலர்கள்தான்.எந்த உள்ளடக்கத்தை விவகாரம் ஆக்கிப்போட்டால் அது அதிகம் பார்வையாளர்களைக் கவருமோ அந்த உள்ளடக்கத்தை அவர்கள் தேடித் திரிகிறார்கள். அல்லது அதனை உருவாக்குகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்கள்,சில மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தன்னியல்பாக அங்கே தோன்றும் முரண்பாடுகளை நோக்கிக் கமராக்கள் குவியத் தொடங்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களின் அனுமதியின்றி சம்பவங்களை படம்பிடிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களும் யுரியூப்பர்களும் தடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பு காசைச் செலவழித்து ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வில் உள்ளே வரும் ஊடகவியலாளர்கள் அந்த அமைப்பின் அனுமதியின்றி மோதல்களைப் படம் பிடிக்கிறார்கள். அந்த மோதல்கள் லைஃபில் விடப்படுகின்றன. அல்லது அவை காணொளி உள்ளடக்கங்களாக,விவகாரமாக மாற்றப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவை போன்ற நிகழ்வுகளில் காணொளி ஊடகங்களை அனுமதியின்றி படம்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.அவ்வாறு கேட்பதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு. அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம். அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல கட்சிக்காரர்களையும் உணர்ச்சிக் கொதிப்படையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் உள்ளே விடும் பொழுதும்கூட அது தொடர்பாக விழிப்பு இருக்க வேண்டும். ஒரு கட்சி நிகழ்வில் கட்சிக்காரர்கள் எதையும் செய்யட்டும்.அதற்கு கட்சி பொறுப்பு. ஆனால் கட்சிசாரா நிகழ்வுகளில் இவ்வாறு கட்சிக்காரர்களும் அந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவோடு சம்பந்தப்படாதவர்களும் அந்த நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவதற்கு அனுமதிக்க முடியாது. செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது. அப்படித்தான் சந்திரசேகரனை அவமதித்த விடயத்திலும் அந்தக் காணொளியில் சில கட்சிக்காரர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இடத்தில் மூன்று நாட்களாகக் காணப்பட்டவர்கள். குறிப்பாக சிவஞானம் அவமதிக்கப்பட்டதை சுமந்திரனின் எதிரணி நியாயப்படுத்துகின்றது. அதற்கு அவர்கள் பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.அணையா விளக்கு போராட்டத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக காணப்பட்ட, காவி உடுப்போடு காணப்பட்ட ஒரு சாமியார் தமிழரசுக் கட்சியை மறைமுகமாகச் சுட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.அந்த நேர்காணலில் பெருமளவுக்கு மறைமுகமாகக் குற்றஞ் சாட்டப்படுவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிதான். அந்தக் காணொளிக்கு சிவஞானம் பின்னர் பதில் கூறியிருந்தார்.இந்தப் பதில்தான் சிவஞானம் அங்கே அவமதிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் அந்தச சாமியார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் அமைப்பாளர் ஆகும். 2015க்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலில் காவியோடு துருத்திக் கொண்டு தெரியும் ஒரு சாமியார் அவர். மூன்று நாட்களாக ,தொடர்ச்சியாக அவர் செம்மணியில் இருந்தார். அங்கே தொடர்ச்சியாக மூன்று நாட்களும் காணப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் அல்ல. சுமந்திரன் அணிக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சூழ்ச்சிகளின் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன் முதன்மையை தொடர்ந்தும் பேண முயற்சித்து வருகிறார். இதனால் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அவர் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அதிருப்தியைச் சரி செய்வதற்கு அவர் பல வழிகளிலும் முயற்சிக்கின்றார். அண்மையில்கூட சர்ச்சைக்குரிய காணி வர்த்தமானிக்கு எதிராக அவர் வழக்கு போட்டு அதில் அவர் பெற்ற முதற் கட்ட வெற்றியை அவருடைய விசுவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டு உளவியலின் ஒரு பகுதி சுமந்திரனுக்கு எதிராகவே காணப்படுகிறது.அந்த உளவியலின் பிரதிபலிப்பாகத்தான் செம்மணி போன்ற உணர்ச்சிகரமான போராட்டக் களங்களில் அது வெடித்துக் கிளம்புகிறது. ஆனால் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் தாங்கள் ஒழுங்குபடுத்தாத ஒரு போராட்டக் களத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அவர்கள் ஒரு விளக்கம் கூறுவார்கள், “சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிராகச் செல்கிறார், எனவே தமிழ்த் தேசியத்திற்கு நீதியைக் கேட்கும் போராட்டக் களங்களில் அவருடைய அணிக்கு இடமில்லை, அவர்களை அந்தக் களத்திற்குள் விட முடியாது” என்று. ஆனால் அணையா விளக்கை அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதை ஒழுங்குபடுத்திய அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் அதற்குள் புதிய நிகழ்ச்சி நிரலை நுழைக்க முடியாது. அணையா விளக்கு பொது எதிரிக்கு எதிரானது. அது அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டம். அங்கே உள்ளூர் மோதல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனவே இனிவரும் காலங்களில் கட்சிசாரா மக்கள் அமைப்புக்கள் போராட்டக் களங்களைத் திறக்கும்பொழுது செம்மணியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் காணொளிக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுவதற்கான புதிய பொறிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.மாறாக தமிழ் மக்களை கட்சி சாராது இனமாக,தேசமாக திரட்ட முற்படுவது மக்கள் அமைப்புகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் ஆகும். அவ்வாறான அமைப்புக்கள் கட்சிசாரா போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொழுது கட்சிகள் அல்லது கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தப் போராட்டக் களங்களை “ஹைஜாக்” செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியிலும் இந்த சர்ச்சை எழுந்தது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விடையத்திலும் இப்படிச் சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்களும் ஒன்றுபட மாட்டார்கள். அதேசமயம் தன்னார்வமாக மக்களை ஒன்று திரட்டும் மக்கள் அமைப்புகளின் போராட்டக் களங்களையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. ஒரு கட்சி சாரா மக்கள் இயக்கம் பலமடையும் பொழுதுதான் இந்தக் குழப்பத்தைத் தடுக்கலாம்? https://athavannews.com/2025/1437504

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

4 days 22 hours ago

Anaivilakku.jpg?resize=750%2C375&ssl=1

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததும் வெற்றிதான்.

ஆனால் அங்கே வந்த சிவஞானம்,சாணக்கியன்,சந்திரசேகரன் போன்றவர்களை ஒரு தரப்பினர் அவமதித்தமை தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.அங்கிருந்து வெளியேறிய பின் சந்திரசேகரன் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த போராட்டத்தின் நியாயத்தை சந்திரசேகரன் உட்பட அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தமை என்பது அடிப்படை வெற்றி.அவர்களுடைய வாயாலயே அந்த போராட்டத்தின் நியாயத்தையும் அந்தப் போராட்டக் கோரிக்கைகளின் நியாயத்தையும் ஒப்புக்கொள்ள வைத்திருந்தால் அது மேலும் வெற்றியாக அமைந்திருக்கும்.

அரசியல்வாதிகளை அந்த இடத்திலிருந்து அவமதித்து வெளியேற்றியமை தங்களுடைய கைகளை மீறி நிகழ்ந்த ஒன்று என்ற பொருள்பட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மக்கள் செயல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏற்பாட்டுக் குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும்.அந்த அமைப்பு செம்மணியில் அரசியல் அடர்த்தி மிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம் அல்ல. தளர்வானது. அந்த தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் அங்கே அரசியல்வாதிகளை அவமதிக்கும் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.அதுபோலவே அந்தத் தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் யுரியூப்பர்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அந்தப் போராட்டத்தின் நோக்கத்துக்கு வெளியே போய் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.

செம்மணிப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் அது. காணொளி ஊடகங்களும் குறிப்பாக யுரியூப்பர்களும் ஒரு போராட்டத்தைத் தமது காணொளி உள்ளடக்கத் தேவைகளுக்காகத் திசை திருப்ப அனுமதிக்கக்கூடாது என்பது.இந்த விடயம் கடந்த 15 ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாக்கள்,மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் தொகுத்துக் கவனிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சில யுரியூப்பர்களும் காணொளி ஊடகக்காரர்களும் சர்ச்சைகளைத் தேடுகிறார்கள். சர்ச்சைகள் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை வலிந்து உருவாக்குகின்றார்கள். அல்லது ஏற்கனவே உள்ள சர்ச்சை ஒன்றை எப்படிச் சூடான காணொளி உள்ளடக்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.அவர்களுடைய இலக்கு டொலர்கள்தான்.எந்த உள்ளடக்கத்தை விவகாரம் ஆக்கிப்போட்டால் அது அதிகம் பார்வையாளர்களைக் கவருமோ அந்த உள்ளடக்கத்தை அவர்கள் தேடித் திரிகிறார்கள். அல்லது அதனை உருவாக்குகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்கள்,சில மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தன்னியல்பாக அங்கே தோன்றும் முரண்பாடுகளை நோக்கிக் கமராக்கள் குவியத் தொடங்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களின் அனுமதியின்றி சம்பவங்களை படம்பிடிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களும் யுரியூப்பர்களும் தடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பு காசைச் செலவழித்து ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வில் உள்ளே வரும் ஊடகவியலாளர்கள் அந்த அமைப்பின் அனுமதியின்றி மோதல்களைப் படம் பிடிக்கிறார்கள். அந்த மோதல்கள் லைஃபில் விடப்படுகின்றன. அல்லது அவை காணொளி உள்ளடக்கங்களாக,விவகாரமாக மாற்றப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவை போன்ற நிகழ்வுகளில் காணொளி ஊடகங்களை அனுமதியின்றி படம்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.அவ்வாறு கேட்பதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு.

அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம்.

அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

மேலும் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல கட்சிக்காரர்களையும் உணர்ச்சிக் கொதிப்படையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் உள்ளே விடும் பொழுதும்கூட அது தொடர்பாக விழிப்பு இருக்க வேண்டும். ஒரு கட்சி நிகழ்வில் கட்சிக்காரர்கள் எதையும் செய்யட்டும்.அதற்கு கட்சி பொறுப்பு. ஆனால் கட்சிசாரா நிகழ்வுகளில் இவ்வாறு கட்சிக்காரர்களும் அந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவோடு சம்பந்தப்படாதவர்களும் அந்த நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவதற்கு அனுமதிக்க முடியாது.

செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படித்தான் சந்திரசேகரனை அவமதித்த விடயத்திலும் அந்தக் காணொளியில் சில கட்சிக்காரர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இடத்தில் மூன்று நாட்களாகக் காணப்பட்டவர்கள். குறிப்பாக சிவஞானம் அவமதிக்கப்பட்டதை சுமந்திரனின் எதிரணி நியாயப்படுத்துகின்றது. அதற்கு அவர்கள் பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.அணையா விளக்கு போராட்டத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக காணப்பட்ட, காவி உடுப்போடு காணப்பட்ட ஒரு சாமியார் தமிழரசுக் கட்சியை மறைமுகமாகச் சுட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.அந்த நேர்காணலில் பெருமளவுக்கு மறைமுகமாகக் குற்றஞ் சாட்டப்படுவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிதான். அந்தக் காணொளிக்கு சிவஞானம் பின்னர் பதில் கூறியிருந்தார்.இந்தப் பதில்தான் சிவஞானம் அங்கே அவமதிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் அந்தச சாமியார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் அமைப்பாளர் ஆகும். 2015க்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலில் காவியோடு துருத்திக் கொண்டு தெரியும் ஒரு சாமியார் அவர். மூன்று நாட்களாக ,தொடர்ச்சியாக அவர் செம்மணியில் இருந்தார். அங்கே தொடர்ச்சியாக மூன்று நாட்களும் காணப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் அல்ல.

சுமந்திரன் அணிக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சூழ்ச்சிகளின் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன் முதன்மையை தொடர்ந்தும் பேண முயற்சித்து வருகிறார். இதனால் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அவர் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அதிருப்தியைச் சரி செய்வதற்கு அவர் பல வழிகளிலும் முயற்சிக்கின்றார். அண்மையில்கூட சர்ச்சைக்குரிய காணி வர்த்தமானிக்கு எதிராக அவர் வழக்கு போட்டு அதில் அவர் பெற்ற முதற் கட்ட வெற்றியை அவருடைய விசுவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டு உளவியலின் ஒரு பகுதி சுமந்திரனுக்கு எதிராகவே காணப்படுகிறது.அந்த உளவியலின் பிரதிபலிப்பாகத்தான் செம்மணி போன்ற உணர்ச்சிகரமான போராட்டக் களங்களில் அது வெடித்துக் கிளம்புகிறது.

ஆனால் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் தாங்கள் ஒழுங்குபடுத்தாத ஒரு போராட்டக் களத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அவர்கள் ஒரு விளக்கம் கூறுவார்கள், “சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிராகச் செல்கிறார், எனவே தமிழ்த் தேசியத்திற்கு நீதியைக் கேட்கும் போராட்டக் களங்களில் அவருடைய அணிக்கு இடமில்லை, அவர்களை அந்தக் களத்திற்குள் விட முடியாது” என்று. ஆனால் அணையா விளக்கை அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதை ஒழுங்குபடுத்திய அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் அதற்குள் புதிய நிகழ்ச்சி நிரலை நுழைக்க முடியாது. அணையா விளக்கு பொது எதிரிக்கு எதிரானது. அது அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டம். அங்கே உள்ளூர் மோதல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

எனவே இனிவரும் காலங்களில் கட்சிசாரா மக்கள் அமைப்புக்கள் போராட்டக் களங்களைத் திறக்கும்பொழுது செம்மணியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் காணொளிக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுவதற்கான புதிய பொறிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.மாறாக தமிழ் மக்களை கட்சி சாராது இனமாக,தேசமாக திரட்ட முற்படுவது மக்கள் அமைப்புகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் ஆகும். அவ்வாறான அமைப்புக்கள் கட்சிசாரா போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொழுது கட்சிகள் அல்லது கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தப் போராட்டக் களங்களை “ஹைஜாக்” செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியிலும் இந்த சர்ச்சை எழுந்தது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விடையத்திலும் இப்படிச் சர்ச்சைகள் எழுந்தன.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்களும் ஒன்றுபட மாட்டார்கள். அதேசமயம் தன்னார்வமாக மக்களை ஒன்று திரட்டும் மக்கள் அமைப்புகளின் போராட்டக் களங்களையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. ஒரு கட்சி சாரா மக்கள் இயக்கம் பலமடையும் பொழுதுதான் இந்தக் குழப்பத்தைத் தடுக்கலாம்?

https://athavannews.com/2025/1437504

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

4 days 22 hours ago
பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்! பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்துமாறும் அவரை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் பேத்தாழை பிரதான வீதியில நேற்று (28) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1437529

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

4 days 22 hours ago

25-686081128e376.jpg?resize=600%2C375&ss

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்துமாறும் அவரை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் பேத்தாழை பிரதான வீதியில நேற்று (28) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1437529

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

4 days 22 hours ago
காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு! காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437497

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

4 days 22 hours ago

thumbs_b_c_64983d41a775d38dc862d7efcf528

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1437497

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு

4 days 22 hours ago
அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு. இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் (19:30 GMT) கோயூர் டி’அலீன் நகருக்கு வடக்கே உள்ள கேன்ஃபீல்ட் மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குழுவினர் பதிலளிக்கும் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1437553

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

4 days 23 hours ago
வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?

வணக்கம்

4 days 23 hours ago
எல்லோருக்கும் வணக்கம் நான் பழைய ஆள் பழைய ஐடி மூலம் உள்நுழைய முடியவில்லை, நீண்ட காலம் ஆக பயன்பாட்டில் இல்லாததால் புதிய ஐடி மூலம் வந்துள்ளேன். நன்றி

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

5 days ago
எதற்கான வீரவணக்க நினைவாலயம் எனத் தெரியவில்லை யாழில் (ஏதேனும் துயிலுமில்லத்தில் இருந்த சின்னமோ என்பதும் ஐயமே)

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

5 days 1 hour ago
கணக்குபோடுவோம். நீயும் நானும் கணக்குபோடுவோம் வாழ்க்கையை இப்படி வாழனும் அப்படி வாழணும் என்று ஆனால் வாழ்க்கை அது பாட்டுக்கு ஒரு கணக்கைப்போட்டு நம்கையில் கொடுக்கும் பாருங்க அப்போது தான் புரியும் இயற்கையையும் கடவுளையும் யாரும் ஏமாற்ற முடியாது. என்று

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

5 days 2 hours ago
"துரியோதனனை " போல நண்பனைத்தேடு உலகிற்கு தீயவனாக இருந்தாலும் உனக்காக கடைசி வரை போராடுவான். " கர்ணனை "போல நண்பனைத்தேடு ஆண்டவனே எதிர்த்தாலும் நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக உயிரையே தருவான் படித்ததும் பகிர்ந்ததும்