தமிழகச் செய்திகள்

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின்

Mon, 20/02/2017 - 15:56
அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின்

 

 
 சிவ சரவணன்
ஸ்டாலின் | கோப்புப் படம்: சிவ சரவணன்
 
 

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும், ஜனநாயக விதிமீறலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறைகாக அறிக்கை தரவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. ஜெ.மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்த பிறகு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை அனுப்பியது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று, ஓபிஎஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஜெ.மறைவுச் செய்தியை வெளியிட்டனர். ஆளுநர் மாளிகைக்கு பேருந்தில் சென்ற அதிமுக அமைச்சரவை அன்றைய நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டது.

அதற்குப் பிறகு ஓபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் மெரினாவில் ஜெ.நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு பேசினார். அப்போது வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்ற ஓபிஎஸ், ''ஜெ.மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என்றார். மேலும், சசிகலா குடும்பம் குறித்து 10% மட்டும்தான் கூறினேன். 90% இன்னும் உள்ளது என்றார்.

அதற்குப் பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டனர். இந்த நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நான் மனு அளித்தேன். ஆளுநர் எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அவகாசம் கொடுத்தார். ஆனால், 48 மணிநேரத்துக்குள் சட்டப்பேரவை கூடுவதாக செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.

இந்த நிலையில் கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். 18-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு கோரினர்.

செம்மலை, ''நான் கூவத்தூரில் இருந்த அறை சாவி இது என எடுத்துக்காட்டினார். இங்கே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அச்சத்தோடு உள்ளதால் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம். எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பு முக்கியம்'' என்றார்.

நானும் எம்.எல்.ஏக்களுக்கு சுதந்திரம் தேவை. எனவே அவர்கள் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தைக் கேட்டு வாக்கெடுப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றேன்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் அழைத்து என் சட்டையை திமுக உறுப்பினர் கிழித்துவிட்டார். இது நியாயமா? என்று கேட்டார். நியாயம் இல்லை. அதை திமுகவினர் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றேன். வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரிய போது முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறினார். மீண்டும் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது மரபு இல்லை. அப்படி வெளியேற்ற முடியாது. அதுகுறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி அளித்தோம். ஆனால், எதிர்க்கட்சி இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது ஜனநாயகப் படுகொலை என்பதை வலியுறுத்தி மெரினா - காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.

குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்க நேரம் கேட்டுள்ளோம். வரும் 22-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இது தொடர் போராட்டமாக நடைபெறும். இது திமுகவின் பிரச்சினை என்று மட்டும் கருதிவிடக் கூடாது. மக்கள் பிரச்சினை.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் தொகுதிப் பக்கம் செல்ல முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ளது. சசிகலாதான் ஜெ.மரணத்துக்கு காரணம் என்று மக்கள் அடிமனதில் ஓர் எண்ணம் உள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த தமிழகத்தைக் காப்பாற்ற ஆட்சியைத் தூக்கியெறிய, இளைஞர்கள், மாணவர்கள், மக்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வரும் 22-ம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆதரவு தர வேண்டும். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம். அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்.

திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன். காஞ்சிபுரம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு துரைமுருகன் தலைமை ஏற்கிறார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும். பேரவையில் நடந்தவற்றை அப்படியே ஒளிபரப்பாமல், வெட்டப்பட்ட காட்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். உடல் வலி உள்ளது. எனவே,ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்துள்ளேன்.

கருணாநிதி உடல்நிலை

திமுக தலைவர் கருணாநிது வயது மூப்பு காரணமாக சில சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் டிரக்டாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குணமடைவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'' என்று ஸ்டாலின் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-ஆட்சியைத்-தூக்கியெறிய-திமுகவின்-அறப்-போராட்டத்தில்-மக்கள்-இணைய-வேண்டும்-ஸ்டாலின்/article9552044.ece?homepage=true

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?

Mon, 20/02/2017 - 13:51
ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?

 

 

Categories: Tamilnadu-news

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!' -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive

Mon, 20/02/2017 - 12:43
'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive

ஜெயலலிதா உடல்

" மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப்பிரமணியம், 'மறு கதிர்வீச்சு சிகிச்சை வேண்டாம்' என்று எச்சரித்தார். ' ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சின் உச்சபட்ச அளவினை அண்ணா பெற்றிருக்கின்றபடியால், அதனை மீண்டும் கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தால் கடுமையான பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்” என்பதே அவரது எச்சரிக்கையின் சாரம். 

ஆனாலும், வெளிநாட்டு மருத்துவர்களின் பரிந்துரையே நடைமுறைப்படுத்தப்பட்டது. எங்கள் ஆசிரியரின் எச்சரிக்கை உண்மையாகியது. கதிர்வீச்சால் உருவான பெர்கார்டிடிஸ்(Pericarditis) நோயால் அண்ணா தாக்கப்பட்டார். 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதியன்று அவரது உயிர் பிரிந்தது. 'இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்கள். ஏனெனில் அதனைப் பொதுவெளியில் வைத்து விவாதிக்க எவரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்' என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கிச் சென்றார், மக்கள் மீதும் மருத்துவத்தின் மீதும் காதல் கொண்ட எங்கள் ஆசிரியர் சுப்பிரமணியம். அவரது கூற்றுப்படியே ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்" - கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும், ' தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்' என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர். 

 

மெட்ரோ விழாவும் ஜெயலலிதாவும்...! 

ரமேஷ்" தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மரணம் நிகழ்ந்து 60 நாட்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவக் குழுவினர். அந்த நிகழ்வில் பேசிய மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ' முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர். 'திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்' என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், 'கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்' என்ற முடிவை எட்டினர்.

 'இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்' என்று கருதினர். இதனை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. 'இந்தக் கிருமிகள் அவரது இருதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' என்றார். 

“அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்டபோது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார். முதல் ஆறு நாட்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு(intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது. இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாட்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது”- இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று.

“முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுபடுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்து  கொண்டோம்”-இது டாக்டர். பாலாஜியின் வாதம்.

இவர்கள் மூன்றுபேரும் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன என்பதை நாம் இங்கு கூறியே ஆக வேண்டும். இதே பத்திகைகளில், 'முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்' என்ற செய்திகள் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்துகொண்டார் என்பதும் அவருக்கு இருந்துவந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது. 'அவருக்கு ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்' என்ற வாதத்தை மேம்போக்காகக் கடந்துசென்றுவிட முடியாது" என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் மருத்துவர் புகழேந்தி. தொடர்ந்து ஆய்வு முடிவுகளை நம்மிடம் பட்டியலிட்டார். 

சசிகலா செய்த தாமதம்?

புகழேந்திதனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், ' மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார். ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, “முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்கு பதிலளிக்க முடியாது; மேலும் எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார். ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல. அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறிவருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்?

அலைக்கழித்த அப்போலோ!

செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாட்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை. “அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இருதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள்” -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில்  கலந்துகொண்ட டாக்டர் பீலே மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர். இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால் அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை. மாறாக. 'காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்'  என்ற குறிப்புகளையே காணமுடிகிறது. முதலாம் காலகட்டத்தின்போது, 'முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவிற்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆனால் அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம். முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது. இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது-அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-'முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே' கூறப்பட்டது. ஆனால் முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, 'முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது' என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர்.

முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை. 

எப்போது இயங்கியது எக்மோ? 

அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ' அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இருதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது' என்றும் அவர்கள் கூறினர். நின்றுபோன இருதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது. இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இருதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பீலேயும், பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். ' முதல்வரின் வயது, அவரது இருதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது' என்று டாக்டர் பீலே கூறினார்.

' முதல்வரின் இருதயம் செயலிழந்து நின்ற பிறகு அதனை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது' என்று பாபு ஆப்ரஹாம் கூறினார். இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest - CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இருதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த ( உடம்பிற்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவினை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation)  கருவியுடன் முதல்வரின் ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன' என்றார்; 'அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இருதயத்தால் மீண்டும் இயங்கமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்' என்று கூறினார். இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். 'இருதயம் செயலிழந்து போயுள்ளது' என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நின்றுபோன இருதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. ரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள்.  

மீறப்பட்ட 200 ஆண்டு நடைமுறை! 

'முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். '75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின. இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்துவிட்டனர். தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பீலே அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது. 'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன, திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை, உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது? 

எம்பால்மிங் சீக்ரெட்! 

உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ,  முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை. என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றிற்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போல்லோ நிர்வாகமோ, சிகிச்சை மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் ரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்துவிடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன? 

ஒருவேளை, அவரது இறப்பிற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக உடலினைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவினை நீதிமன்றம் எடுக்கும்பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது ரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்? அந்த திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டது என்பதை உறுதி செய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போல்லோ நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன? இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்? மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகிற்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை? தமிழக - இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை, அப்புறப்படுத்தப்பட்ட அந்த ரத்தத்தை சாக்கடையில் கொட்டிவிட்டனர்.

சொல்வீர்களா சுதா சேஷய்யன்? 

2016 டிசம்பர் 5 ஆம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அதனை அடுத்த ஐந்து நிமிடத்தில் (இரவு 11.35 மணி) தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையின் தலைவரான டாக்டர். சுதா சேஷய்யனிடம், 'முதல்வர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை உடனடியாகப் பதப்படுத்தியாக வேண்டும்' என்றும் அதற்காக அவர் அவரது பணியாளர்களுடன் அப்போலோ மருத்துவமனைக்கு விரைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டாக்டர். சுதா சேஷய்யனும் அவரது பணியாளர்களும் அடுத்த 45 நிமிடங்களில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 6-ம் தேதியன்று அதிகாலை 12.20 மணிக்கு முதல்வரின் உடலைப் பதப்படுத்தும் பணி துவங்கியது. வலது தொடையில் உள்ள ஃபெமோரல் தமணியின் வாயிலாக அவர்கள் 5.5 லிட்டர் பதப்படுத்தும் திரவத்தினை உடலுக்குள் செலுத்தினர். இதற்காக அவர்கள் தானியங்கி பம்ப் ஒன்றை உபயோகித்தனர். இந்தப் பணி அடுத்த 15 நிமிடங்களில் - அதாவது, செப்டம்பர் 6-ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு - முடிவுக்கு வந்தது. வழக்கமாகப் பயன்படுத்தும் உடல் பக்குவத் திரவத்தினை (embalming fluid) முதல்வரின் தோல் நிறத்தை மனதில் கொண்டு  சற்று மாற்றி அமைக்க மருத்துவர்.சுதா முடிவு செய்தார். '5.5 லிட்டர் திரவத்தில் 2.5 லிட்டர் அளவிற்கு ஃபார்மலின் திரவத்தையும் கூடுதலாக ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலையும் கலந்தது இதற்காகத்தான்' என்று கூறினார். ரத்தக் குழாய்களைத் தவிர, நெஞ்சு - வயிறு - கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் இந்த உடல் பக்குவத் திரவத்தை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்டதா என்பது பற்றி 6 பிப்ரவரி 2016 அன்று தமிழக அரசால் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் தெளிவுபடுத்தவில்லை. முதல்வர் அவர்களின் இடது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகளுக்கான காரணம் என்ன என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை.

105 கிலோ எடையும் 5.5 லிட்டர் திரவமும்! 

முதல்வர் அவர்களின் எடை 105 கிலோ என்று கூறப்படுகிறது. இந்த எடையைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பதப்படுத்தப்படும் திரவத்தின் அளவு என்ன? வெறும் 5.5 லிட்டர் திரவத்தால் இது சாத்தியம்தானா? முதல்வரின் உடலைப் பக்குவப்படுத்தும் செயலைத் தொடங்கும் முன்பு அதற்கான விண்ணப்பப் படிவம் யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றியோ, காவல்துறையிடமிருந்து ‘இந்த உடம்பைப் பதப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனை நடத்த அப்போலோ நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அவர் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டாரா என்பது பற்றியோ மருத்துவர் சுதா ஏதும் பேசவில்லை. முதல்வரின் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் எத்தனை நாட்களுக்கு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது என்பது பற்றியும் சிந்தித்து அதற்கேற்ற உடல்பக்குவ திரவத்தை அவர் தேர்வு செய்தாரா என்பது பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை? இறந்தவர் ஒருவரின் உடலைப் பக்குவப்படுத்தும்போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை பக்குவப்படுத்தும் குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது நியதி. ஏனெனில், மரணமடைந்தவர் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது ரத்தம் மற்றும் உடலில் இருக்க வாய்ப்புள்ள கிருமிகளால் பக்குவப்படுத்தும் பணியினை மேற்கொள்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முடியும். முதல்வர் அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த நோய்த்தொற்று குறித்து அப்போலோ மருத்துவர்கள் சுதா சேஷய்யனிடம் விளக்கினார்களா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. முதல்வரின் ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு  அதற்குப் பதிலாக உடலைப் பதப்படுத்தும் நச்சுத் திரவத்தை அவரது உடலுக்குள் செலுத்தும் பணியை சுதா சேஷய்யன் குழுவினர் அப்போலோ மருத்துவமனையில் எங்கு மேற்கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.

ஏன் இவ்வளவு அவசரம்? 

இறந்தோரின் உடல் இரண்டு காரணங்களுக்காகப் பக்குவப்படுத்தப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த உடம்பு கெட்டுப்போய்விடக்கூடாது என்பது ஒரு காரணம். உடற்கூறு கல்விக்காக நீண்டகாலம் பதப்படுத்த வேண்டியது மற்ற காரணம். முதலாவது காரணத்திற்காகவே முதல்வரின் உடல் பக்குவப்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று டாக்டர். சுதா சேஷய்யன் குறிப்பிடுகிறார். அடுத்த 19 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்படவுள்ள, இரண்டு கம்ப்ரெஸ்ஸர்களைக் கொண்ட சிறப்பு குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்படவுள்ள ஒரு உடலினைப் பதப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? முதல்வர் அவர்கள் ஐயங்கார் இனத்தை சார்ந்தவர் என்பதால் அவரது உடல் எரியூட்டப்படுவதே மரபு. அப்படி இருக்கும்போது அதற்கேற்ற பதப்படுத்தும் வேதிப்பொட்களை தேர்வு செய்யாமல், எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட ஐசோபுரப்பைல் ஆல்கஹால்(Iso propyl alchohol)ஐ உடலைப் பதப்படுத்தும் திரவத்தில் கலந்ததற்கான காரணம்தான் என்ன, சொல்வீர்களா சுதா சேஷய்யன்?

முதல்வர் அவர்களின் தோலின் நிறத்தை நாள் முழுதும் குன்றாமல் வைக்கவேண்டுமென்றால், அதற்கான சிறப்பு பதப்படுத்தும் திரவங்கள் அனேகம் உள்ளனவே… அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் மிகவும் விலை குறைந்த, மலிவான வேதிப்பொருள் ஒன்றை அவர் தேர்வு செய்தது எதற்காக? உடலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தது 3-4 மணி நேரமாவது தேவை. மிக விரைவில் அதனை முடிக்க வேண்டும் என்றால்கூட குறைந்தது ஒரு மணி நேரமாவது அவசியமாகும். உடலைப் பதப்படுத்தக் கோரும் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்க வேண்டும். உடலைப் பதப்படுத்தும் திரவத்தை ரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு முன்பாக ரத்தத்ததை வெளியேற்ற வேண்டும். பின்னர் வயிறு, நெஞ்சு மற்றும் கபால உள் வெளிகளுக்குள்ளும் திரவத்தை செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் பணியாளர்களுக்குக் கேடு ஏற்படாத வண்ணம் செய்து முடிக்க வேண்டும். திரவத்தினை உடலுக்குள் ஏற்றிய பிறகு அது எங்காவது கசிகிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அந்த உடம்பினை சுத்தம் செய்து, அடக்கத்திற்குத் தயார் செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்பாடுகளையும்  வெறும் 15 நிமிடங்களில் முடித்து விட்டதாக அவர் கூறுகிறார். அதுதான் பல கேள்விகளை எழுப்புகின்றது" என்றவர், இறுதியாக, 

" ஒரு மாநிலத்தின் முதல்வரது உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் உள்ள தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை அந்த மாநிலத்தின் மக்களுக்கு உண்டு. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அவரின் தனி நபர் சுதந்திரத்தையும் தாண்டி அனைத்து மக்களையும் பாதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவற்றை மறைக்க முயலும் ஒவ்வொரு செயலும் பொதுமக்களுக்கு அரசு ஆற்றும் சேவையை  மாற்றியமைக்கும், மடைமாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது" என ஆதங்கத்தோடு பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி. 

http://www.vikatan.com/news/tamilnadu/81435-jayalalithaas-blood-was-mixed-with-waste-water-doctors-reveal-the-embalming-secrets.html

Categories: Tamilnadu-news

சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

Mon, 20/02/2017 - 12:42
சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

ttv_dinakaran-_sasikala_17430.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா உள்பட மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் பணியைத் தொடங்கினார். இதனிடையே, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு சென்றார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் செயல்பாடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

சசிகலாவுடன், எடப்பாடி பழனிசாமி நாளை சந்திப்பு

இதனிடையே, சசிகலாவை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக இருக்கும் ஒருவர், சிறையில் இருக்கும் ஒருவரை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

http://www.vikatan.com/news/tamilnadu/81438-ttv-dinakaran-meets-sasikala-at-central-jail.html

Categories: Tamilnadu-news

கொலைகார தமிழக முதல்வர் - ஒரு வீர வரலாறு

Mon, 20/02/2017 - 11:00

ஜெயலலிதா மறைந்த நிமிடங்களில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முதல் வரிசையில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் கலகக்குரல் எழுப்பியப் பிறகு... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் கனவைச் சிதைக்க...  இப்போது, முதல்வர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யார்? 

``நெடுங்குளம் கன்னங்கூட்டம் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் பங்காளிகள் மூன்று பேரை ஈட்டியால் குத்திக் கொன்று அந்த சமூகத்துக்கே அவப்பெயர் வாங்கிக் கொடுத்தார். அந்த இளைஞன்தான் பின்னாளில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி. சொந்த சமூகமே அன்று அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்கியது. ஆனால், இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்.’’ இதுதான் எடப்பாடி வட்டாரத்தில் அவர் பற்றி சொல்லும் அறிமுகம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் இருக்கும் நெடுங்குளம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் - தவுசாயம்மாள் தம்பதிக்கு ரஞ்சிதம், கோவிந்தராஜ், பழனிசாமி என மூன்று பிள்ளைகள். கடைக்குட்டிதான், எடப்பாடி பழனிசாமி. இவருடைய மனைவி, ராதா. ஒரே மகன் மிதுன். மருமகள் திவ்யா.

பழனிசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருந்தது. அதில், அண்ணன் கோவிந்தராஜ் விவசாயம் செய்ய, பழனிசாமி அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். ஆங்காங்கே வெல்லம் காய்ச்சுபவர்களிடம் சென்று வெல்லம் வாங்கி... அதை சித்தோடு, பூதப்பாடி, அந்தியூர் உள்ளிட்ட ஏரியாக்களுக்கு எடுத்துச் சென்று, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் கிடைக்கும். இதனால் இவருக்கு, ‘சக்கரை மூட்டை’ என்ற புனைப் பெயரும் உண்டு. 

 உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான கோபால், ‘‘இவன் நம்ம பையன். உனக்கு விசுவாசமாக இருப்பான்’’ என்று பழனிசாமியைக் கூட்டிச் சென்று அப்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய செங்கோட்டையனிடம் அறிமுகம் செய்துவைத்தார். அதையடுத்து, சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளராக ஆனார் பழனிசாமி.  

பழனிசாமி குடும்பத்துக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் இடத்தகராறு இருந்துவந்தது. இந்தத் தகராறு முற்றியபோது, பழனிசாமியும் அவருடைய அண்ணன் கோவிந்தராஜும் மற்றும் சிலரும் சேர்ந்து, பங்காளிகளான சோமசுந்தரம், கருப்பண்ண கவுண்டர், துரை ஆகிய மூன்று பேரை ஈட்டியால் குத்தினர். சம்பவ இடத்திலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருப்பண்ண கவுண்டரும், துரையும் சில நாட்களில் இறந்துவிட்டனர். இதில், முதல் குற்றவாளியாக பழனிசாமியின் பெயர் பதிவுசெய்யப்பட்டது. போலீஸுக்குப் பயந்து பழனிசாமியும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் தலைமறை வானார்கள். பழனிசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துசாமி, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். எனவே, அவர் தயவை நாடினார்கள். அதன்மூலமாக சமரசத்துக்கு ஏற்பாடு நடந்தது. பழனிசாமி தரப்பு விட்டுக்கொடுக்க முன்வந்தது. அதையடுத்து, இவர்கள் மீதான வழக்கை பங்காளிகள் வாபஸ் வாங்கினர். 

ஆனாலும், இது அழியாத கறையாகப் படிந்தது. ‘இவர்கள் குடும்பத்துக்குப் பொண்ணு கொடுக்கக் கூடாது’ என்று எடப்பாடி எட்டுப்பட்டி கவுண்டர்களும் முடிவெடுத்தனர். பழனிசாமிக்கு சொந்த ஊரில் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராதாவைத் திருமணம் செய்தார். அவர், செங்கோட்டையனுக்கு உறவினர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெ. அணி - ஜா. அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து, 1989 தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட பழனிசாமிக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார், செங்கோட்டையன். சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றிபெற்றார். அதன்பின் அவருக்கு கிடுகிடு வளர்ச்சிதான். 1990-ல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக ஆனார் பழனிசாமி. 1991 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அப்போது, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பனுக்கு நெருக்கமானார். சேலத்தில் வீடு, கார், சொத்துக்கள் என பழனிசாமியின் பொருளாதார கிராஃப் உயரத்தொடங்கியது.

 1996 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட பழனிசாமி, தோல்வியடைந்தார். அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அர்ஜுனனிடம் வழங்கப்பட்டது. 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் ஆனார். திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, பழனிசாமி எம்.பி ஆனார். வாஜ்பாயின் 13 மாத கால மத்திய அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். பின்னர், 1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 

 ஜெயலலிதா, 2000-ம் ஆண்டு, கட்சியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். ஒருங்கிணைந்த சேலம் புறநகர் மாவட்டத்தை சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு என இரண்டாகப் பிரித்து, கிழக்கு மா.செ-வாக மஞ்சனி முருகேஷனையும், மேற்கு மா.செ-வாக செம்மலையையும் நியமித்தார். ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த பழனிசாமி, சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எனப் பதவி இறக்கம் செய்யப்பட்டார். 

2001 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், பழனிசாமிக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்தத் தருணத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. எடப்பாடி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு அப்போது எடப்பாடி நகரச் செயலாளராக இருந்த மணியை அ.தி.மு.க., தலைமை அறிவித்தது. அதனால், ஜெ. பேரவைத் துணைத் தலைவராக இருந்த முருகேசனை நிற்க வைத்து, மணியைத் தோற்கடித்தார் பழனிசாமி. இது ஜெயலலிதா கவனத்துக்குச் சென்றதும், பழனிசாமி வகித்து வந்த மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியைப் பறித்தார்.   

அதன்பின், செங்கோட்டையனுக்கு வெண்சாமரம் வீசி வந்ததால், 2003-ம் ஆண்டில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோடன் நீக்கப்பட்டு, பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்தார் பழனிசாமி. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். தொடர் தோல்விகளால், 2007-ல் இவரிடம் இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு,        எஸ்.கே.செல்வத்திடம் தரப்பட்டது. 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, 2010  இறுதியில் சசிகலாவின் உறவுவட்டத்தில் ராவணனைப் பிடித்து மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார் பழனிசாமி. அதிலும், ரெண்டாவது லட்டும் சேர்த்துக் கிடைத்தது. அதாவது, சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக இருந்ததை மீண்டும் ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி, புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். மூன்றாவது லட்டு, 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் கிடைத்தது. அது, சசிகலா குடும்பத்து உதவியுடன் கிடைத்த அமைச்சர் பதவி.   

அமைச்சர் ஆன பிறகு, அ.தி.மு.க-வின் ஐவர் அணியில் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். சமீபத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு நடந்ததை அடுத்து பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அப்போது, ‘அடுத்த குறி எடப்பாடி பழனிசாமி’ என்று பரவலாகப் பேசப்பட்டது.  

அரசியல் அரிச்சுவடியே தெரியாத ஆரம்பக் காலத்தில் இவருக்காக உதவி செய்த கோபால், சண்முகம், பாலாஜி, கருணாநிதி போன்றவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே பழனிசாமி ஒதுக்கினார். எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டங்களில் இவர் கூடவே விசுவாசிகளாக இருந்த எடப்பாடி முன்னாள் நகரச் செயலாளர் மணி, எடப்பாடி தொகுதிச் செயலாளர் பெருமாள், எடப்பாடி மீனவர் பிரிவுச் செயலாளர் சுரேஷ் போன்றவர்களை அமைச்சர் ஆனதும் கழற்றிவிட்டார். சிலரை அவமானப்படுத்தி அடித்ததாகவும் குமுறல்கள் எழுந்ததுண்டு. தனக்கென புதியதாக அதிகார வட்டம் ஒன்றையும் வளர்த்துக்கொண்டார்.

ஐவர் அணியில் ஓர் அமைச்சர் என்ற தகுதிக்கு உயர்ந்தபிறகு பழனிசாமியிடம் நிறைய மாற்றங்கள். தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு தொகுதிக்குள் எந்தப் பிரச்னைக்கும் சென்றதில்லை. ஆனால், அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் பெயர், பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், அமைச்சரின் அண்ணன் வீட்டருகே சைக்கிளில் இருந்து இறங்காமல் சென்றார் என்பதற்காக அவரைக் கட்டிப் போட்டு அடித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

எக்குத்தப்புக்காரர்கள்தான் அரியணையில் அமர்வார்களா? 

அமர்ந்து விட்டார்கள்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=128831&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

Categories: Tamilnadu-news

முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி

Mon, 20/02/2017 - 06:43

முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி

 

 சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் கமல் ஹாஸனை, 'முதுகெலும்பில்லாத முட்டாள்' என்று ட்விட்டரில் திட்டியுள்ளார் சுப்பிரமணிய சாமி.

Subramanya Swamy blasts Kamal as pompous idiot


ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் தமிழர்களை 'பொறுக்கிகள்' எனத் தொடர்ந்து திட்டி வந்தார் சு சாமி. இதைக் கண்டித்து ட்விட் போட்டிருந்தார் கமல் ஹாஸன். பதிலுக்கு கமல் ஹாஸனையும் 'பொர்க்கி' என்று குறிப்பிட்டார் சாமி. இதற்கு பதிலளித்த கமல், 'சாமியின் கேவலமான பதிவுகளுக்கு பதில் தர விரும்பவில்லை.

காமராஜ், அண்ணா & ராஜாஜி எல்லாம் நீ சொன்ன 'பொர்க்கி' இனத்தில் இணையற்ற தலைவர்கள். மோதி மிதித்துவிடு பாப்பா..' என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும் கமலை வம்புக்கு இழுத்துள்ளார் சு சாமி. அவரது ட்விட்டரில் ஒருவர், "எப்படியாவது கமல் ஹாஸனை சமாதானப்படுத்தி பாஜகவில் இணைத்துவிடுங்கள்.

அவரைப் போன்ற ஒருவர் அக்கட்சிக்குத் தேவை", என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சு சாமி, "எனக்கு பாஜக பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கமல் ஹாஸன் என்ற முதுகெலும்பில்லாத கோழையை, சுயதம்பட்ட முட்டாளை கடுமையாக எதிர்க்கிறேன்," என்று கூறியுள்ளார்.

சு சாமியின் இந்த பதில் கட்சி பேதம் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/subramanya-swamy-blasts-kamal-as-pompous-idiot-274655.html

Categories: Tamilnadu-news

பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்... -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

Mon, 20/02/2017 - 06:31
பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்...  -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

'அறப்போருக்குத் தமிழக மக்களும் தொண்டர்களும் அமோக ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். எம்.ஜி.ஆரின் புகழை நிலைநிறுத்தவும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டவும் நாம் மேற்கொண்டுள்ள தர்மயுத்தம் தொடரும்' - சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள் இவை. 'அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்ததால், அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 ஓட்டுக்களைப் பெற்று முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார், எடப்பாடி பழனிசாமி. நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடத்தப்படாததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தி.மு.க., ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை விளக்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். புதிய அரசு தன்னுடைய பணிகளைத் தொடக்கினாலும், தி.மு.க தரப்பில் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஆளுநரும் மும்பைக்குப் பயணமாகிவிட்டார். "அரசியல் களத்தில் கடந்த இரண்டு வாரங்களாக லைம் லைட்டில் இடம் பெற்ற பன்னீர்செல்வத்தின் கீரின்வேஸ் பங்களாவில் தற்போது எந்தக் கூட்டமும் இல்லை. ஆவடி தொகுதிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 'முதல்வர் பதவியை இழந்த பன்னீர்செல்வத்துக்கு, எம்.எல்.ஏ பதவியாவது மிஞ்சுமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவருக்கும் கொறடா ராஜேந்திரன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். 'நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என்றார். 

எடப்பாடி பழனிசாமி

கொறடா உத்தரவுக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் வாக்களித்தனர், பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள். வாக்கெடுப்பைப் புறக்கணித்துவிட்டு, சபாநாயகர் மீது பாய்ந்தனர் தி.மு.க உறுப்பினர்கள். தி.மு.க உறுப்பினர்கள் சீறிப் பாய்ந்தபோதும், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் மௌனம் காத்தனர். கொறடா உத்தரவை மீறியதால், பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார், வாக்கெடுப்பைப் புறக்கணித்துவிட்டு கோவை சென்றுவிட்டார். பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன், செம்மலை, நட்ராஜ், வி.சி.ஆறுக்குட்டி, சரவணன், மனோகரன், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், சின்னராஜ், மனோரஞ்சிதம் உள்ளிட்டவர்களின் பதவி பறிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் வேகப்படுத்த இருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக, கடந்த இரண்டு வாரங்களாக பன்னீர்செல்வம் நடத்திய ஆட்டத்தை, அவர்கள் எளிதில் மறந்துவிடவில்லை. 'நாம் யார் என்பதை அவருக்குக் காட்ட வேண்டும்' என ஆலோசித்துவருகின்றனர்" என்றார் விரிவாக. 

"அ.தி.முக. சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்த அதேநேரத்தில், பன்னீர்செல்வம் அணி சார்பாக கொறடாகவாக நியமிக்கப்பட்டார் செம்மலை. அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர் உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் பார்த்தால் பன்னீர்செல்வத்தின் பதவி தப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கின்றனர். ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் பன்னீர்செல்வம் உள்பட 11 பேரின் பதவி பறிக்கப்படுவதை அ.தி.மு.க நிர்வாகிகள் விரும்பவில்லை. இதைப் பற்றி கார்டன் வட்டாரத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. 'பன்னீர்செல்வம் உள்பட 11 பேரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டால், விரைவில் இடைத் தேர்தல் வரும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது. தேர்தலை எதிர்கொண்டால், விளைவுகள் எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக இருப்பதே எதிர்காலத்துக்கு நல்லது' என விவரித்துள்ளனர். கார்டன் நிர்வாகத்தில் உள்ளவர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டனர். சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றம் செய்யும் வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்" என்கிறார், தலைமைக்கழக நிர்வாகி ஒருவர். 

'சட்டசபையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஒருமுறைதான் முன்மொழிய வேண்டும். இரண்டு முறை முன்மொழிந்ததால், எடப்பாடி பழனிசாமி தேர்வுபெற்றது செல்லாது' என அதிர வைத்திருக்கிறார் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. தி.மு.க-வும் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. 'புதிய அரசு இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?' என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், தமிழக மக்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/81384-edapaadi-palanisaamys-next-move-against-opanneerselvam.html

Categories: Tamilnadu-news

நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு

Mon, 20/02/2017 - 05:33
 

 

 

 
Tamil_News_large_1714700_318_219.jpg
 
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு

 

 

 

சென்னை : சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது.

 

அவசரவழக்கு :

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறைகேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714700

Categories: Tamilnadu-news

என் ஓட்டை (வாக்கை) திருப்பி தாங்கடா

Mon, 20/02/2017 - 00:22

என் ஓட்டை (வாக்கை) திருப்பி தாங்கடா

 

 

Categories: Tamilnadu-news

M L A யை அடித்த காவல் துறை அதிகாாி

Mon, 20/02/2017 - 00:11

M L A யை அடித்த காவல் துறை அதிகாாி

 

 

 

Categories: Tamilnadu-news

வாக்கெடுப்பின் போது நடந்தவை

Sun, 19/02/2017 - 23:44

வாக்கெடுப்பின் போது நடந்தவை 

 

Categories: Tamilnadu-news

சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

Sun, 19/02/2017 - 20:25

சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

 

 

சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

 

சட்டசபையிலிருந்து கிழித்த சட்டையுடன் வந்த ஸ்டாலின்-வீடியோ அப்போது மார்ஷல்கள் (அவைக் காவலர்கள்) உடையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கிழிந்த சட்டையுடன் சென்ற ஸ்டாலின் அங்கு சட்டசபையில் நடந்த கலவரம் குறித்து விளக்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தெளிவான பதில் கொடுத்ததாக தெரியவில்லை.

 

இதனால்தான் மெரீனா கடற்கரைக்கு வந்து மு.க.ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். ஆனால் போலீஸார் துரிதமாக செயல்பட்டு அவரைக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது சட்ட ரீதியான போராட்டத்தில் திமுக குதித்துள்ளது.

திமுக தரப்பு தற்போது 2 முக்கிய அம்சங்களை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. 1. சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சட்டப்படி தவறாகும். 2. அவைக் காவலர்கள் போர்வையில் காவல்துறை அதிகாரிகளை உள்ளே அனுப்பியுள்ளனர். முதல்வரே இதைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரண்டு வலுவான அம்சங்களையும் கையில் எடுத்து கோர்ட் படியேற திமுக தீர்மானித்து விட்டது. இதைத்தான் இன்று ஆளுநரை நேரில் சந்தித்த திமுக எம்.பிக்களும் தெளிவாக வலியுறுத்திக் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. திமுக தரப்பு இதுபோல வலுவான அம்சங்களை கையில் எடுத்துக் கொண்டு கோர்ட் படியேறினால் ஆளுநர் தரப்புக்கும், சபாநாயகர், முதல்வருக்கும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவசரம் அவசரமாக சட்டசபை செயலாளரிடம் நடந்தது என்ன என்று அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-pressurizes-governor-act-274626.html

Categories: Tamilnadu-news

அப்பல்லோவில் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரை: ஆளுநர் எழுதப் போகும் புதிய புத்தகம்!

Sun, 19/02/2017 - 19:52
அப்பல்லோவில் ஜெயலலிதா  முதல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரை: ஆளுநர் எழுதப் போகும் புதிய புத்தகம்!

 

 
ch

 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தன்னுடைய பங்கு குறித்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகமாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களும், பரபரப்பான சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

அதன் உச்சமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வெகுவாக வதந்தி பரவியது. அதனால் உடனே மும்பையில் இருந்து சென்னைகு விரைந்து  வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜெயலலிதாவை பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் தமிழகத்தில் எதிர்பாராத விதமா சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக பொறுப்பேற்றுக் கொ ண்டார்.

இந்த பரப்பான தொடர் நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் சி.எச். வித்யாசாகர் ராவ் ஒரு புத்தகம் எழுத உள்ளார். அந்த புத்தகத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவரது மரணத்துக்குபின் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிகழ்வுகள் வரை குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டது குறித்தும் அதில் தனது பங்கு குறித்தும் பல உண்மை நிலவரங்களை அவர் விளக்கியுள்ளதாக கூறப்பகிறது. .

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பல தரப்பிலும் இருந்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கவர்னர் என்ற முறையில் தான் ஆற்றிய பங்கு குறித்து பல விளக்கங்களை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  இப்புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

http://www.dinamani.com/

Categories: Tamilnadu-news

'துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு தாங்கய்யா!' அதிகாரியிடம் கெஞ்சிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,

Sun, 19/02/2017 - 19:43
'துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு தாங்கய்யா!'
அதிகாரியிடம் கெஞ்சிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,
 
 
 

கோவை:கொங்கு மண்டலத்தில், தொகுதி பக்கம் செல்ல பயந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் இருவர், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் உயரதிகாரியிடம் போனில் கெஞ்சி உள்ளனர்.

 

Tamil_News_large_171414620170220000644_318_219.jpg

சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில், இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனி, அமைச்சர்கள் மற்றும் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி பக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூவத்துாரில் அடித்த கூத்தும், கும்மாளமும் குக்கிராமங்கள் வரை எட்டி விட்டதால், சொந்த ஊருக்கு செல்லும்போது, தொகுதி மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில், இன்னமும் சென்னையிலேயே பலரும் முகாமிட்டுள்ளனர்.

மொபைல் போனில் இவர்களை தொடர்பு கொள்ளும் வாக்காளர்கள், 'மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், தொகுதி பக்கம் வராதீர்கள்' என, வாய்க்கு வந்தபடி வசைபாடுகின்றனர்.

இரு வாரங்களுக்கு பின், நேற்று முன் தினம்

ஊர் திரும்பிய கோவை தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், சொந்த தொகுதி மக்களின் வசைபாட்டுக்கு ஆளாகி நேற்று பத்திரிகையாளர்கள் முன் குமுறினார். அவரது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 

'எனக்கு 15 கோடி'


கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை போனில் தொடர்பு கொண்ட வாக்காளர் ஒருவர், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்ததை பாராட்டுகிறார். அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஆறுக்குட்டி, 'இடைப்பாடியை ஆதரிக்குமாறு, கூவத்துாரில் தங்கியிருந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா, அஞ்சு கோடி ரூபாய் கொடுத்தாங்க.

எனக்கு, 15 கோடி தர்றதா சொன்னாங்க. காசும் வேணாம்; ஒண்ணும் வேணாம். தொகுதி மக்களிடம் இருக்கும் மரியாதை போதும்' என்கிறார். இதுவும், 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வருகிறது.
 

துப்பாக்கி பாதுகாப்புதொகுதி மக்களின் கோபம், சொந்த கட்சியினரின் கொந்தளிப்பால் மிரண்டு போயிருக்கும் ஆளுங் கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர், நேற்று போலீஸ் உயரதி காரி ஒருவரை தொடர்பு கொண்டு, 'நாங்கள் தொகுதிக்குள் செல்லலாமா? வந்தால், சொந்த கட்சியினரே தாக்கினாலும் தாக்குவர். துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியுமா?' என, கேட்டுள்ளார்.

அதற்கு அதிகாரி, 'தொகுதி மக்களால் உங்களுக்கு ஆபத்து இருக்குன்னு சொல்லி நீங்கள் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கேட்டால், நாளை கடும் விமர்சனங்கள் எழும்; அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். அதனால், உங்கள் ஆதரவாளர்களை

 

கொண்ட பாதுகாப்பு வளையத்துடன் தான் எங்கும் செல்ல வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோன்று, மற்றொரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.' தொகுதிக்குள் செல்லவே, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கேட்கும் நிலைமை, எம்.எல்.ஏ.,க் களுக்கு வந்துவிட்டது துரதிருஷ்டம்' என, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

விரும்பி தங்கினாங்களாம்!


அம்மன் அர்ஜுனன் அளித்த பேட்டி: நாங்கள் அனைவரும் விரும்பித்தான் கூவத்துாரில் தங்கினோம். பல எம்.எல்.ஏ.,க்கள் விமான சேவை இல்லாத தொலைதுார பகுதிகளை சேர்ந்தவர்கள். கவர்னர் அழைத்தால் உடனடி யாக வர முடியாது என்ற காரணத்தால், கூவத் துாரில் தங்கினோம். எனக்கும், என் குடும்பத்தி னருக்கும் கட்சியினர் போனில் மிரட்டல் விடுக்கின்றனர். அது பற்றி போலீசில் புகார் அளிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714146

Categories: Tamilnadu-news

ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் தவறா?

Sun, 19/02/2017 - 19:40
ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள்
எண்ணிக்கையில் தவறா?
 
 
 

சட்டசபையில் நடந்த, ஓட்டெடுப்பில் பங்கேற்ற, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் குளறுபடி நிகழ்ந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தவறானது என, தெரிய வந்துள்ளது.

 

Tamil_News_large_171413620170219232549_318_219.jpg

தமிழக சட்டசபையில், மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 234. ஜெயலலிதா மரணத்தால், ஆர்.கே.நகர் தொகுதி, காலியாக உள்ளது.

மீதம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நேற்று முன்தினம், நம்பிக்கை ஓட்டு கோரியது. அப்போது, ஏற்பட்ட அமளி யால், 88 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளி யேற்றப்பட்டனர். தி.மு.க.,வின் மற்றொரு

எம்.எல்.ஏ.,வான, அக்கட்சி தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், சபைக்கு வரவில்லை. அத் துடன், காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ., ஒருவரும், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மீதமுள்ள, 135 பேர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள். கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சட்டசபைக்கு வரவில்லை. அவசியம் ஏற்படாத தால், சபாநாயகர் தனபால் ஓட்டு போடவில்லை. அதனால், 133 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டனர்.

இதில், பன்னீர்செல்வம் அணியில் உள்ள, 11 எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். அரசுக்கு ஆதரவாக, 122 எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டு போட்டனர். இதன்படி, 133 ஓட்டுகளின் எண்ணிக்கை யும் சரியாக உள்ளது. விபரம் தெரியாதபலர், ஓட்டுப் போட்டவர்கள், எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக, சமூக வலைதளங்களில், தகவல்களை பரப்பினர். இதனால், பரபரப்பு உருவானது.
 

குளறுபடி ஏன்?


* மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., ஆறுமுகம் ஓட்டு

 

போடவில்லை என, தகவல் பரவியது. சில நாட்களுக்கு முன், 'டிஸ்சார்ஜ்' ஆன அவர், சபையில், அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார்

* ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ.,வையும் சேர்ந்து, 235 எம்.எல்.ஏ.,க்கள் என, பதிவாக இருந்தது. இந்த நியமன எம்.எல்.ஏ.,வுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை

* அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் மொத்த எண்ணிக்கை, 135. ஆனால், 134 பேர் என குறிப்பிட்டு, எண்ணிக்கை தவறு என, தகவல்கள் பரவின.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714136

Categories: Tamilnadu-news

'கிழியாத எங்க ஊர் பனியன்' ஸ்டாலினை வைத்து காமெடி

Sun, 19/02/2017 - 19:39
'கிழியாத எங்க ஊர் பனியன்'
ஸ்டாலினை வைத்து காமெடி
 

 

  • gallerye_232512266_1714119.jpg

 

 
 

திருப்பூர்:சட்டசபையில் நடந்த அமளியில், ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில், கலகலப்பூட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

 

Tamil_News_large_171411920170219232408_318_219.jpg

சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கிழிந்த சட்டையோடு, பனியன் வெளியே தெரிய நடந்து வந்து, பேட்டியளித்தார்.

இந்த காட்சிகளுக்கு, 'நெட்டிசன்கள்' சிலர்,

'மீம்ஸ்' உருவாக்கி வெளியிட்டனர். சட்டைகிழிந்த நிலையில், பனியன் தெரிய ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ காட்சியுடன், திருப்பூர் பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பர பாடலை இணைத்து, வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதேபோல், 'இவ்வளவு களேபரத்திலும், எங்கவூர் பனியன் கிழியலை. ஸ்ட்ராங் ஆனது... மென்மையானது... எந்த கலவரத்திலும் கிழியாதது, திருப்பூர் பனியன்கள்...ஆர்டர் வரவேற்கப்படுகிறது' என்ற வாசகங்கள் இடம் பெற்ற, படமும் பதிவேற்றப்பட்டுள்ளது.

தங்கள் செயல் தலைவரை விளம்பர மாடலாக்கி விட்டார்களே என, தி.மு.க.,வினர் ஒருபுறம் புலம்பினாலும், பலரும் இதை ரசிக்கின்றனர். தொடர்ந்து, அடுத்தடுத்து பலருக்கும் பகிர்ந்தும் வருகின்றனர்.

மெரினா போராட்டம்: ஸ்டாலின் மீது வழக்கு

மெரினாவில், அனுமதியின்றி போராட்டம்

 

நடத்தியதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட, 2,000 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, ரகளை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட, தி.மு.க, - எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேறப்பட்டனர்.

அப்போது, போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக, ஸ்டாலின் குற்றம் சாட்டினார்; கவர்னர் வித்யாசாகர் ராவிடமும் முறையிட்டார். பின், மெரினா கடற்கரை காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காமராஜர் சாலை போக்குவரத்து முடங்கியது.
அவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.

இது குறித்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், ஸ்டாலின் உட்பட, 2,000 பேர் மீது, மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714119

Categories: Tamilnadu-news

எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் கொந்தளிப்பு வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Sun, 19/02/2017 - 19:38
எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் கொந்தளிப்பு
வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
 

 

  • gallerye_234538813_1714117.jpg

 

 
 

சட்டசபையில், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_1714117_318_219.jpg

கூவத்துார் விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி, தொகுதி மக்கள், சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

மக்கள் கருத்தை மதித்து, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம், மேட்டுப்
பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் மனம் மாறினர்.தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு புறம்பாக, கோவை தெற்கு, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, சூலுார், வால்பாறை, பொள்ளாச்சி தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.
 

சமூக வலைதளங்கள்


இதனால் கொந்தளித்துள்ள கோவை மக்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான அதிருப்தியை, சமூக

வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்ற னர். இதையடுத்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.சுகுணா புரத்தில் அமைச்சர் வேலுமணி யின் வீடு, ஆர்.எஸ். புரத்தில் கட்சி அலுவலகம், திப்பம்பட்டியில் துணை சபாநாயகர் ஜெயராமன் வீடு மற்றும் கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மற்றும் தொகுதி அலுவலகங்களில், பாதுகாப்புக்கு போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.பன்னீர்செல்வம் ஆதரவு நிலை எடுத்த கவுண்டம்பாளையம்,
எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம், எம்.எல்.ஏ., சின்னராஜ், ஓட்டெடுப்பை புறக்கணித்த வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் ஆகியோரது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

சேலத்தில் செருப்பு மாலை


சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., சக்திவேல், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி ஆதரவில்,
'சீட்' வாங்கி ஜெயித்தவர். நேற்று மதியம் வரை, அவர் சேலம் திரும்பவில்லை. அவருக்கு,
அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை பைக்கில் வந்த இருவர், சக்திவேல் வீட்டின் கேட்டில், செருப்பு மாலை அணிவித்து சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக செருப்பு மாலையை கழற்றி விட்டு, சம்பவம் நடக்காதது

 

போல் இருந்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

ஆனால், உளவுத்துறை போலீசார் அளித்த தகவல்படி, எம்.எல்.ஏ., சக்திவேல், சேலம் எம்.பி., பன்னீர்செல்வம் வீடுகளுக்கு, கூடுதல் பாது காப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, சக்திவேல் வீட்டை, தி.மு.க., மகளிர் அணியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை யிட்டனர்.

அப்போது, 'எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என, கூச்சலிட்டனர்.தொடர்ந்து, வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அம்மா பேட்டை போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், 'முதல்வரின் சொந்த மாவட்டத் தில், எதிர்ப்பு கிளம்பியதாக வெளியே தெரிந் தால், தமிழகம் முழுவதும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கான எதிர்ப்பு அதிகரிக்கும் என்பதால், இச்சம்பவத்தை மறைக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்' என்றனர்.

தற்போது, சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் தங்கியுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை, சேலம் திரும்ப வேண்டாம் என, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தெரிவித்துள் ளார். பிப்., 22க்கு பின், அவர்கள், சேலம் திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வீடுகளில் கறுப்பு கொடி


தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அ.தி. மு.க., - எம்.எல்.ஏ., கதிர்காமுவை கண்டித்து, நேற்று வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, கறுப்பு கொடிகளை கழற்றினர். - நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714117

Categories: Tamilnadu-news

மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்

Sun, 19/02/2017 - 19:37
மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்!
கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்
 

 

  • gallerye_23325150_1714084.jpg

 

 
 

'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர்.

 

Tamil_News_large_171408420170219230709_318_219.jpg

முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகளை நடந்தது. பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்தனர். அப்போது, 'சட்டசபையில் மீண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.
 

இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:


சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கவர்னரிடம் கூறினோம். எம்.எல்.ஏ.,க்கள், ஒரு வாரம் தொகுதிக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும்; அதன் பின், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, விரிவான மனுவை அளித்தோம்.

பரிசீலித்து நல்ல முடிவுஎடுப்பதாக அவர் கூறினார். நல்ல முடிவை எடுப்பார் என, நம்புகிறோம். ஓட்டெடுப்பில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

தி.மு.க., கோரிக்கை


இதை தொடர்ந்து, தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவரிடம், செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் போது சபை ஒத்திவைக்கப்பட்டால், தீர்மானத்தை கைவிட வேண்டும். அந்த விதியை, சபாநாயகர் புறக்கணித்து விட்டார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும்,

 

வெளிநடப்பு செய்தும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் வெளியில் இருந்தனர்.

அப்போது, அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானம், வெளிப்படை யானஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த செயல், ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சி கள் இன்றி ஓட்டெடுப்பு நடத்தியது நியாயமற்றது; சட்ட விரோதம்.

சபாநாயகர், நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இது போன்ற சூழலில், 1988ல், அப்போதைய கவர்னர், நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவித்தார். எனவே, ஜனநாயத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் உரிய நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

வழக்கறிஞர்களுடன்அவசர ஆலோசனை


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று கட்சி வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறிய தாவது: போலீஸ் அதிகாரிகளை, சட்டசபைக் குள் அழைத்து, எங்கள் மீது தாக்குதல் நடத்தி னர். அதில், ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., மயக்க மடைந்து பேச்சு, மூச்சு இன்றி, மருத்துவமனை யில் உள்ளார். பல எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

என் சட்டை கிழிந்து, தோள் பட்டையில் அடி பட்டதற்கு, மருத்துவமனை சென்று, 'ஸ்கேன்' எடுக்க உள்ளேன். சட்டபையில் நடந்த சம்பவங் களை, ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்து வோம்.சட்ட ரீதியாக, கோர்ட்டில் வழக்கு தொடுக்க ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714084

Categories: Tamilnadu-news

ஒட்டுப்புல்

Sun, 19/02/2017 - 19:35

ஒட்டுப்புல்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும்,
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்வதால், கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று கவர்னரை சந்தித்த போதும்,அவர் உடன் இருந்ததால், முக்கிய நிர்வாகிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.

 

Tamil_News_large_171411020170219231655_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, தன்னுடன் இருந்த, சசிகலா, அவரது சொந்தங்களான டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட, 18 பேரை, 2011ல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். 'சதிகாரர்கள், துரோகிகள்' என, முத்திரை குத்தி, வீட்டை விட்டும் விரட்டினார்.

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின், சசிகலாவை மட்டும், கட்சியில் சேர்த்துக் கொண்டார். மற்ற யாரையும், கட்சியில் சேர்க்கவில்லை. டிசம்பர் 5ல், ஜெ., மறைந்த பின், கட்சியிலும், ஆட்சியிலும், சசியின்

மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம் துவங்கி விட்டது.

கடும் அதிருப்தி: ஜெயலலிதா மறைந்து, தற்காலிக பொதுச்செய லரான சசிகலா, ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், டாக்டர் வெங்கடேசையும் கட்சியில் சேர்த்தார். கட்சி யில் சேர்த்த அடுத்த நாளே, தினகரனுக்கு கட்சி யில், துணை பொதுச்செய லர் பதவியை சசிகலா வழங்கினார். இதற்கு, தொண்டர்கள் மட்டுமல்ல, முக்கிய நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில்உள்ளனர்.

கட்சியின், சட்டசபை குழு தலைவராக தேர் வான, சசிகலா, முதல்வராக பதவியேற்கும் படி, கவர்னரை சந்தித்த போது, அவருடன், தினகரனும் உடன் சென்றார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா சிறை சென்றதால், அ.தி.மு.க., சட்டசபைக்குழு தலை வராக, இடைப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டார்.அவர், தன் தலைமையில் ஆட்சி அமைக்க, அனுமதி கோரி, கவர்னரை சந்தித்த போதும், தினகரன் உடன் சென்றார். பெங்களூரு சிறைக்கு செல்லும் முன், சசிகலா, ஜெ., நினை விடம் சென்று, சபதம் ஏற்றார். அப்போதும், தினகரன் அவருடன் பங்கேற்றார்.

நேற்று முன்தினம், முதல்வர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின், ஜெ., நினை விடம் சென்ற போதும், அவருடன் ஒட்டிக் கொண்டார்.சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெப் பில் வெற்றி பெற்ற பின், நேற்று மரியாதை

 

நிமித்தமாக, கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல்வர் இடைப்பாடி பழனிசாமியும், முக்கிய அமைச்சர்களும் சந்தித்தனர். அப்போதும் முதல்வருக்கு அடுத்ததாக, தினகரன் அமர்ந்திருந்தார்.

இப்படி, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களுக்கு எல்லாம், 'ஒட்டுப்புல்' போல், தினகரன் ஒட்டிக் கொள்வதால், கட்சியி னர் அதிருப்தி அடைந்து உள்ளனர். முக்கிய நிர்வாகிகளும், கடும் விரக்தியில் உள்ளனர்.
 

பின்னடைவு


இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஆட்சி என் தலைமையில் தான் நடக்கிறது; இடைப்பாடி பழனிசாமி, எங்களின், 'பினாமி' தான் என, காட்டும் வகையில், தினகரன் செயல்படுகிறார். இது, கட்சியில், யாருக்கும் பிடிக்கவில்லை. அதைப்பற்றி கவலைப் படாமல் தினகரன் செயல்படுவது, கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்' என்றார். இத்தனை ஆண்டுகள் எங்கிருந்தார் என்பதே தெரியாமல், வழக்கு விசாரணை களின் போது மட்டும் நீதிமன்றங்களில் காட்சி யளித்த தினகரன், இப்போது முதல்வருடன் ஒட்டிக் கொண்டுள்ளது, அவருக்கும் பிடிக்கவில்லை;

கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் பிடிக்கவில்லை எனவும், கூறப்படுகிறது. இதனால், கட்சி மேலும் வலுவிழக்கும் என, கவலை தெரிவிக்கின்றனர், விசுவாசிகள்.
- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/

Categories: Tamilnadu-news

பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ.,

Sun, 19/02/2017 - 19:31
 
 
 

 

 

Tamil_News_large_1714294_318_219.jpg
 
பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ.,

 

 

 

 

மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.

இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, அவர் யதார்த்தத்தைக் கூறியதாவது:
எல்லோரும் எங்கள் நிலை புரியாமல் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். எங்கள் மனநிலையில் அல்லது, எங்களுக்கு அமைந்த சூழ்நிலையில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பர். ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டது என் போன்ற எம்.எல்.ஏ.,க்கள்தான். இதற்காகவே, அவர் இல்லம் சென்று, அவருக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும்; பாராட்டுதல்களையும் சொல்லி வந்தோம். என்றைக்கும் உங்கள் பின்னால், பக்கபலமாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறி வந்தோம்.

அதற்கு தகுந்தார் போல, அவரும், ஒரு முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். சில விஷயங்களில், மறைந்த ஜெயலலிதாவை விட சிறப்பாகவும்; சாதுர்யமாகவும் செயல்பட்டார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக நலன் களுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டது ரொம்பவே பிடித்திருந்தது. பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.

ஆனால், என்னதான் சசிகலா தரப்பு நெருக்கடி என்றாலும், அவர், தனது முதல்வர் பதவியை பொசுக்கென்று ராஜினாமா செய்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மிரட்டி ராஜினாமா எழுதி வாங்கி இருந்தால், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்த மறு நொடியே, அவர் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, என்னுடைய முழு சம்மதத்தோடு, ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை; மிரட்டி எழுதி வாங்கி, கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களையும் அழைத்து நடந்ததையெல்லாம் விவரித்திருக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாத பன்னீர்செல்வம், போயஸ் தோட்டத்தில், ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்த கையோடு, தலைமைக் கழகத்துக்கு வந்து, சட்டசபை கட்சித் தலைவராக சின்னம்மாவை முன்மொழிகிறேன் என்று சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் ஆதரவையும் கோரியபோது, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.

இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? பன்னீர்செல்வமே, விருப்பப்பட்டுத்தான், சசிகலாவுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டார் என நாங்கள் இருந்து விட்டோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அங்கு தியானம் செய்த பின்னால், பத்திரிகையாளர்களிடம், நடந்ததையெல்லாம் சொல்கிறார்.
அதற்கு, தமிழக மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டதே தவிர, கவர்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதுதானே. ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை, காபந்து முதல்வராகவும் செயல்பட கேட்டுக் கொண்டு விட்டார்.

இந்த சூழ்நிலையில் கவர்னராலோ, ஊர் உலகமெல்லாம் பேசும் பன்னீருக்கு ஆதரவான மத்திய அரசாலோ என்ன செய்து விட முடியும். பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை திரட்டி வந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என நிலைத்து, காலம் கடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், 10 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்ப முடிந்ததே தவிர, பன்னீர்செல்வத்தால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை.

ஆனால், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் என்றதும், சசிகலா தரப்பினர் எவ்வளவு வேகமாக செயல்பட்டனர் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்.

கிட்டத்தட்ட 127 எம்.எல்.ஏ.,க்களை குண்டுகட்டாக, கூவத்தூர் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களை பதினோரு நாட்கள் தங்க வைத்தனர். அங்கு, எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. அதெல்லாம், விவரமாக பட்டியல் போட முடியாது; வெளியிலும் சொல்ல முடியாது. துவக்கத்தில் எங்களுடைய சுதந்திரம் பறிபோவதாகத்தான் நினைத்தோம்.

ஆனால், நாட்கள் நகர நகர அவர்கள் தரப்பில் இருந்து வந்த செங்கோட்டையன், தினகரன், திவாகரன், பழனிச்சாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு என மூத்த தலைவர்களெல்லாம் கொடுத்த தகவல்களும்; அளித்த உறுதி மொழிகளும், அது நிறைவேற்றப்படும் வேகமும் எங்களை முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியது.

முக்கியமாக அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்களையெல்லாம் ரொம்பவும் யோசிக்க வைத்தது. பழனிச்சாமிக்கு கிட்டதட்ட 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பது நிஜம் என்று சொல்லி, அங்கு கூடியிருந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் பெயரையும் வாசித்து, அதை நிஜம் என நம்ப வைத்தனர்.

இப்படி ஒருபக்கம் 125 எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக இருக்கும்போது, அவர்களை விடுத்து வேறு யாரால் ஆட்சி அமைக்க முடியும்? வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து, சில மாதங்களிலேயே தேர்தலை கொண்டு வருவதில் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?

ஆக, இந்த இக்கட்டைப் பயன்படுத்தி, எங்கள் தரப்பிலிருந்தும் பணம், தங்கம், வாகனம், அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சிலவற்றை யாராலும், செய்து கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதனால், சில விஷயங்களில் நாங்களும் கெடுபிடி காட்டவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை.

எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்…

இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று. அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே… அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது.

எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம். அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம்.

எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா… தர்மமா என்று எப்படி கேட்க முடியும்.
இவ்வாறு நடந்த நிகழ்வுகள் குறித்து கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714294

Categories: Tamilnadu-news