சமூகவலை உலகம்

கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்

16 hours 50 minutes ago

யாழ்ப்பாணத்தில, கல்வி முறையில ஒரு விசித்திரமான மனப்பாங்கு வேரூன்றி பெருமரமாக வளர்ந்து வாறதை நான் அவதானிக்கிறன். என்னை போல நீங்களும் அவதானிச்சிருக்கலாம். அது என்னெண்டா, ஆங்கில ஊடகத்தில படிக்கிறது மேதாவிலாசத்தின்ர அடையாளம் எண்டும் தாய்மொழியில படிக்கிறது ஒருவித பின்தங்கிய நிலை என்றும் ஒரு மாயையான நினைப்பு. இந்த நினைப்பு மாணவர்கள் மத்தியில மட்டுமில்லாமல், சமூகத்தின்ர வழிகாட்டிகளாக இருக்கிற ஆசிரியர்கள் மத்தியிலும் ஆழ ஊடுருவியிருப்பது கவலையாக இருக்கு.

சிந்திக்கிற மொழியில படிக்கிறது தான் அறிவை வினைத்திறனோட உள்வாங்க உதவும் எண்டதால என்ர இரண்டு பிள்ளைகளையும் தாய்மொழி மூலமாக தான் கல்வி கற்க தெரிவு செய்தன். பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். மொழிமூலத் தெரிவு எண்டது எங்கட தனிப்பட்ட விருப்பே தவிர அது பிறப்புடன் வந்த அறிவு வெளிப்பாடு இல்லை. அது மாணவர்களை மேல் கீழ் இடங்களில் வைப்பதற்கான அனுமதிச் சீட்டும் இல்லை.

ஆசிரியர்களின் இந்த பாகுபாடான அணுகுமுறையால, பாவம் ஆங்கிலமொழி மூலமாக கல்வி கற்கும் மாணவர்களும் தங்களுக்கு பின்னால ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் இருக்குதெண்டு நம்பினம். அந்த நம்பிக்கையை தங்கட நடத்தையிலும் காட்டினம். தமிழ் மீடிய மாணவர்களோடு ஒட்டி உறவாடும் தன்மையை வலிந்து நிறுத்துகின்றார்கள் ( விதிவிலக்கான பிள்ளைகளும் இருக்கினம்) இது ஒருவிதமான சாதீய மனநிலையை பள்ளிக்கூடங்களில, ரியூசனுகளில உருவாக்குது. "நீங்கள் எவடம்?" எண்ட கேள்விக்கும் "நீங்கள் எந்த மீடியம்?" எண்டிற கேள்விக்கும் பின்னால இருக்கிற மனநிலை ஒண்டு தான்.

மகள் தன்ர பத்தாம் வகுப்பில ஆங்கில இலக்கியத்தை ஒரு விருப்புக்குரிய தொகுதிப்பாடமாக தெரிவு செய்தாள். அதற்கான தனியார் வகுப்புக்கு ஆசிரியை ஒருவரிடம் அனுமதி எடுக்க செல்லும் போது, அவர் நடத்திய "நேர்முகத்தேர்வில்" என்னிடம் கேட்ட கேள்வி "இவ எந்த மீடியம்?". தமிழ் எண்டதும், ஆசிரியையின் முகம் மாறி, "தமிழ்மீடிய பிள்ளைகள் இந்த பாடத்துக்கு கஷ்டப்படுவினம்" எண்டு ஒரே போடாக போட்டார். "இல்லை... இவ A எடுப்பா " எண்டு சிரித்தபடியே தான் சொன்னேன்.

அதை விட இன்னொரு படி மேல போய் ஒரு ஆசிரியப்பெருந்தகை சொல்லி இருக்கிறார், "இது சரியான கஷ்டமான பேப்பர் தான். இங்கிலீஷ் மீடிய பிள்ளைகளே இந்த கேள்விக்கு சரியா ஆன்ஸர் எழுதேல்ல" இதில பகிடி என்னெண்டா அவர் சொன்னது வரலாற்று சோதினை பேப்பரை. அவரும் படிப்பிக்கிறது வரலாறு தான். பாவம் வரலாறு அவருக்கு வழிகாட்டேல்ல 😜

இந்த மாயையான மனநிலை எங்க வரை கொண்டு வந்து விடுகின்றது என்றால், கற்பித்தலுக்கான ஆசிரிய வளங்களை வகுப்புகளிடையே பிரித்தளிக்கும் போது, ஆங்கில மொழிமூலமான வகுப்புகளுக்கு திறன் கூடிய ஆசிரியர்கள் வழங்கப்படுவது வரை.

இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மொழிமூலமான வகுப்புகளும் பிள்ளைகளும் அணுகப்படுகின்றமை அனேகமான பாடசாலைகளில் தூலமாக அவதானிக்க முடிகின்றதை பலர் கூற கேட்டிருக்கிறேன்.

இதுக்கு என்ன வழி என்று கல்விசார் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான பரிந்துரையை மிக நிச்சயமாக கொடுக்க வேண்டும்.

அவை ஆய்வு செய்ய முதல், A/L க்கு வந்து பௌதீகவியலுக்கு ரியூசனுக்கு போகும் போது குமரன் சேர் செய்தது தான் thug life. 😜

"நீ இங்கிலீஷ் மீடியமோ தமிழ் மீடியமோ என்னவாவெண்டாலும் இரு. இப்ப தலையங்கம் போடு,

திருகாணி நுண்மானியில் பூச்சியவழு"

சமரசம் உலாவும் இடம் இப்ப அவற்ர ரியூசன் தான் 😜

https://www.facebook.com/share/18K5RsDhag/?mibextid=wwXIfr

சோதனைகளை கடந்து பாராலிம்பிக்கில் சாதித்த கதை - Deepa Malik Interview

4 days 7 hours ago

பிபிசியின் இந்தாண்டுக்கான ISWOTY விருதின் தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் தீபா மாலிக் அளித்த நேர்காணல்.

#BBCISWOTY #Changethegame

Report: Sumedha Pal | Shot: Sandeep Yadav & Prabhat Tiwari

Edit: Shaad Midhat

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

1 week 1 day ago

எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பேட்டி

1 week 4 days ago

''மத்தியவங்கியின் ஆளுநராக என்னை நியமித்தமை இன்னொருவர் கூறியே எனக்கு தெரியும்''

#indrajitcoomaraswamy #formergovernor #centralbank #powermoves #srilanka #lka

தனிமையும் துணிச்சலும்

1 week 5 days ago

தனிமையும் துணிச்சலும்

January 31, 2026

AVvXsEimZyZvKefUUewsTu_t03rECN3Cf94Wo0qzTo9BXFqYW8bcFdcQc3pKMOQwH_Z6BGL_hxkZmc34YNLLZlB9iWPBVVGvLOqpOVNu8wHya-gi25QVdx2Ixm9GnXmcXADyyl95E8oNl_VnJ0s2GOiT2qV853R7-8fL_DAbb-lgs1jKk_fzrBmfkC1JdS1v_Np4=w400-h393


துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்."

இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள்.

மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை.

ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது.

இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை.

தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை.

அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம்.

https://www.writerabilash.in/2026/01/blog-post_31.html

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,

1 week 6 days ago

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

உதாரணமா பார்த்தீங்க என்றால்,

* ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால்

* டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால்

* எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால்

* கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால்

* கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால்

*யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால்

தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால்

*செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா

* அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா

என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !!

இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!!

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

#அழகியதொருவாழ்வு

முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

கள்ளத்தீனி - T. கோபிசங்கர்

2 weeks 1 day ago

கள்ளத்தீனி

ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான்.

சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு.

எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது.

கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது.

மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும்.

மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும்.

ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும்.

வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும்.

வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”.

புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும்.

Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள்.

பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான்.

சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும்.

ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது.

மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும்.

என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான்.

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

3 weeks ago

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 22, 2026 1 Minute

21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில்  மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

aa7ca5bc-f636-4e0d-97b3-6c07526c1332.jpg

சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல்  வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும்.

உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை.

ஆபத்தான சுற்று சூழல்  வெப்பநிலை

  • 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும்.

  • 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.

  • -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும்.

நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை  -7°C ஆக இருக்கும்.

oip.jpg?w=474

குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள்

1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses)

உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது:

  • இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும்.

  • நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

  • சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.

  • மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 

3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses)

  • பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும்.

  • ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. 

உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக

  • முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார்.

  • பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம்.

சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள்

பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும்.

  1. முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள்.

  2. குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும்.

  3. மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும்.

  4. சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும்.

  5. தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும்.

  6. நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன.

  7. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

  8.  சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள்

  • வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.

  • நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும்.

  • சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death)

உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு:

1. அனுசேபச்சிதைவு  (Metabolic Breakdown)

உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன.

2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம்

குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன:

  • இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை.

  • இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது.

3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression)

ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும்

  •  கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும்.

  • ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும்.

  • ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும்.

  • உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.

  • மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும்.

  • போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள்.

நன்றி

Dr. கனகசபாபதி வாசுதேவா

MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine)

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

குடிநீரில் மலக்கழிவு !!

3 weeks 3 days ago

குடிநீரில் மலக்கழிவு !!

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minute

அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும்.

sources-of-drinking-water-contamination-

நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது.

தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும்.

யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன.

E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது.

நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது.

அவற்றின் விபரம் வருமாறு

வகை

நோய்

 முக்கியத்துவம்

ETEC

நீர் வயிற்றுப்போக்கு

நீரிழப்பு மரணம்

EPEC

குழந்தைகளில் வயிற்றுப்போக்கு

குழந்தை மரணம்

EHEC (O157:H7)

இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS)

திடீர் மரணம்

EAEC

நீடித்த வயிற்றுப்போக்கு

ஊட்டச்சத்து குறைபாடு

மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம்.

E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின் குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது.

E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும்.

நன்றி

Dr. கனகசபாபதி வாசுதேவா 

MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine)

https://tamilforensic.com/about/

அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயும்

1 month ago

அதீத செயற்கைவழி விவசாயமும்  நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 28, 2025 1 Minute

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது.   இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

image_f43e06e588.jpg?w=700

1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை?

சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) –    நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய்  என்றால்  என்ன?

அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக   chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும்.

3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்

இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.

4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்?

இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும்  பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.

இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள்

•          இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.

•          விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்

•          சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.

•          குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்

•          கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள்.

•          கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.

•          இந்நோயானது  பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.

•          பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

•          ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.

•          இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள்.

5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும்  நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?

1.         ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்

மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.

அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்

குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆ) உணவுச்சங்கிலி மூலம்

நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.

2.  அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்

சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.

குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.

3.  களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்

புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.

முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.

4.  நீரின் கடினத் தன்மை (Hardness of Water)

உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது

மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.

•          கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை

•          உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை

•          அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen)   போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.

7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்?

1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.

2.  வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.

3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.

4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.

5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல்  உடலை  அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.

6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.

7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.

உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டுள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

13412_2022_780_fig1_html.jpg?w=730

8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ  சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.

1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.

2)   அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.

3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.

4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.

5)   புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல்.

6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல்.

9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்?
உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும்.

10. ஆறுதல் தரும் விடயம்
2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம்.

நன்றி

அதீத செயற்கைவழி விவசாயமும்  நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்

நாட்டு நடப்பு.

1 month 1 week ago

யாழ் ஆழ்வார் கோவிலை இலக்கு வைத்த பிக்கு.

சூறாவளி வரும்போது என்னையே ஜனாதிபதி அழைத்தார்-சாணக்கியன்.

6000 ரூபா சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்கள்

தமிழில் வகுப்பெடுத்துவிட்டு ஆங்கிலத்தில் பரீட்சை என்று முறைப்பாடு.

2026 புத்தாண்டு நிகழ்வுகள்

1 month 2 weeks ago

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது

Dec 31, 2025 - 04:11 PM

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது

உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. 

இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 

2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. 

நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. 

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இலங்கைக்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.

https://adaderanatamil.lk/news/cmjtvzin303cgo29n86esvuya

உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை

1 month 2 weeks ago

உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை

Dec 30, 2025 - 04:24 PM

உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை

உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகக் கடுமையாக உழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாகப் பாதிக்கப்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து மத்துகமவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. 

மத்துகம, பெலவத்தை பகுதியைச் சேர்ந்த இசுரி கௌசல்யா மீகஹபொல என்ற இந்த மாணவி, மத்துகம அதிகாரம் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார்.  

தனது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவருக்கு, தற்போது மிகப்பெரிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. 

அவர் 'லுகேமியா' (Leukemia) எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும்.  

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், இந்தத் திடீர் நோய் நிலைமை காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. 

இந்த மாணவியின் சிகிச்சைக்கு உதவ அல்லது அவருக்குத் தோள் கொடுக்க விரும்பும் எவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்: 

072 8441 223 

078 3953 506

https://adaderanatamil.lk/news/cmjsgzk5n03aro29nbnzw7dq4

பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்

1 month 2 weeks ago

ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள்.

ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்!

வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள்.

சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள்.

அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.

அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது.

யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர்.

வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள்.

அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள்.

இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள்.

புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள்.

நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும்.

https://www.facebook.com/share/1DZd5Dn3j9/?mibextid=wwXIfr

ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?

1 month 2 weeks ago

ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?

மது பானம், மது அல்லாத பானங்கள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • கேடி ஜோன்ஸ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது.

மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

மது அல்லாத பானங்கள் பிரபலமடைவதற்கான காரணம் என்ன?

அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் காம்ஹியான் லோக், மது இல்லாமல் இரவைக் கழிப்பது தொடர்பான அணுகுமுறையில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்புகிறார்.

"மதுபான நுகர்வு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் கிடைப்பதால் மக்கள் மது அல்லாத பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எழுந்துள்ள தேவைகளை மதுபான நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன," என்றார்.

எப்போதுமே சமூகத்தில் பழக விரும்புபவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்திற்கான தேவை இருந்ததாகக் கூறுகிறார் உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயடிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான டுவெய்ன் மெல்லோர்.

"முன்னர் அத்தகைய பானங்கள் சிறப்பானதாக இல்லை என்பது தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் மதுவிற்கு பின்பற்றப்படும் அதே குறைவான அழுத்தம் கொண்ட தயாரிக்கும் முறைகளால் தற்போது சிறந்த பியர் அல்லது வைன் தயாரிக்க முடியும்." என்று கூறுகிறார் டுவெய்ன்.

மது அல்லாத பானங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மது அல்லாத பானங்களில் முற்றிலும் மது இருக்காதா?

மது பானம், மது அல்லாத பானங்கள்

பட மூலாதாரம்,Getty Images

"ஆல்கஹால் அல்லாத பானங்கள் என விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் அனைத்திலும் ஆல்கஹால் இல்லை என நாம் அனுமானிக்கக்கூடாது. ஏனெனில் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அவற்றை அனுமதிக்கின்றன," எனக் குறிப்பிடுகிறார் லோக்.

'ஆல்கஹால் அல்லாத' பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம் என ட்ரிங்க்அவேர் தெரிவிக்கிறது. அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம்.

மது அல்லாத பானங்களில் கலோரிகள் குறைவாக உள்ளனவா?

"ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன," என்கிறார் பிரிட்டிஷ் நியூட்ரிஷன் ஃபவுண்டேஷனின் ஊட்டச்சத்து விஞ்ஞானியான ப்ரட்ஜெட் பெனலெம்.

"ஆல்கஹாலில் ஒவ்வொரு கிராமில் ஏழு கலோரிக்கள்" இருப்பதாக மெல்லோர் குறிப்பிடுகிறார்.

எனினும் மது அல்லாத பானங்களில் கலோரிக்கள் இல்லாமல் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்கிறார் பெனலெம்.

"அவற்றில் கலோரிக்கள் உள்ளன, அவை எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன. அந்த பானங்களை இனிப்பானதாக ஆக்க தேவையான அளவு சக்கரை அதில் இருக்கும்," என விளக்கினார்.

மது அல்லாத பானங்கள் கல்லீரலுக்கு நல்லதா?

மது பானம், மது அல்லாத பானங்கள்

பட மூலாதாரம்,Getty Images

"நீண்ட கால நோக்கில் அதிக அளவில் மது எடுத்துக் கொள்வது கல்லீரலை பாதிக்கும்," எனக் குறிப்பிடுகிறார் லோக். "இதிலிருந்து மதுவை நீக்கினால் அந்த தாக்கம் இருக்காது." என்றும் தெரிவித்தார்.

அதே வேளையில் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மீது கவனம் செலுத்துகிறார் லோக்.

இது உணவு அல்லது பானங்கள், சிரப்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை, தேன், பழச்சாறு, காய்கறி சாறு மற்றும் ஸ்மூத்திகளில் உள்ள சர்க்கரைகளை உள்ளடக்கும்.

மது அல்லாத பானங்கள் மூலம் கூடுதல் அளவிலான சர்க்கரை நுகரப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். "அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம்." என்றார்.

மது அல்லாத பானங்கள் நமது பொது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்கிறார் லோக்.

சில மது அல்லாத பியர்களில் பி வைட்டமின்கள் இருக்கலாம் எனக் பெனலெம் கூறுகிறார். "பியர் போன்ற தயாரிப்புகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில உள்ளீடுகள் இருக்கலாம்," என மெல்லோர் குறிப்பிடுகிறார்.

எனினும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரமாக கருதப்படாது என்கிறார் பெனலெம். "உணவில் ஊட்டச்சத்து என நாம் பார்க்கிறபோது அவை ஆரோக்கியமான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குறிக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் ஏற்படும் ஆபத்துகளையும் மெல்லோர் சுட்டிக்காட்டுகிறார்.

சொந்தமாக தயாரிக்க முடியுமா?

மது பானம், மது அல்லாத பானங்கள்

பட மூலாதாரம்,Getty Images

சந்தைகளில் கிடைக்கும் மது அல்லாத பானங்கள் உங்களை கவரவில்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே ஒன்றை தயாரிக்கலாம். "மது பானங்களில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்தை மது அல்லாத பானங்களின் மீதும் காட்ட வேண்டும்," என்கிறார் காக்டெய்ல் நிபுணரான ப்ரிதேஷ் மோடி.

"ஆப்பிள் சாறு, எலுமிச்சை மற்றும் இஞ்சி பியர் ஒரு சுவையான பானம் ஆகும்" என்கிறார் ப்ரிதேஷ். மேலும் அவர் கொம்புசா மற்றும் விர்ஜின் எஸ்ப்ரெஸோ மார்டினியைக் குறிப்பிடுகிறார். சைடர் வினிகர், ஆப்பிள் சாறு மற்றும் சோடாவை ஒரு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz685wqv821o

Checked
Sun, 02/15/2026 - 00:19
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed