2 months 1 week ago
தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது! கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல் காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்காகவும் பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாகவும் இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளது வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மயங்கிக் கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார். இதேவேளை சான்ரேச்சல் இறப்பதற்கு முன்னர் தனது கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதங்களில் ‘தான் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், அக் கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை எனவும், தனது உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், தற்கொலைக்கு தன்னை அனைவரும் மன்னித்து விடவேண்டும் எனவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார். சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1439001
2 months 1 week ago
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களை மேலும் அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1438998
2 months 1 week ago
வாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன. எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும். எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை. உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.
2 months 1 week ago
RESULT 2nd T20I (N), Dambulla, July 13, 2025, Bangladesh tour of Sri Lanka BAN 177/7 SL (15.2/20 ov, T:178) 94 Bangladesh won by 83 runs Powered by Smart Stats Fan Ratings Summary Scorecard MVP
2 months 1 week ago
இருவரும் தனியாக நிற்கப்போவகாகவே தெரிகிறது. பார்ப்போம்… சொதப்புவது யார்… சாதிப்பது யார் என… (2026 சீமான் வாக்கு வங்கி பற்றிய என் சவாலை ஏற்ற ஒரே மானஸ்தன் வாத்தியார் அண்ணா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது 🤣).
2 months 1 week ago
ஆதாரம்… என்ன ஆதாரம் வேண்டும்… தமிழ் தேசிய முகமூடியை போட்டு கொண்டு அப்படியே ஆர் எஸ் எஸ் கொள்கைகளை முன் தள்ளியமைக்கான எத்தனையோ ஆதாரங்கள் யாழில் கொட்டி கிடக்கிறன. நான் சீமானை பற்றி இதுவரை எழுதியதை எல்லாம் மீள படித்துபார்க்கவும். ஆதாரம் போதியளவு கிடைக்கும் 🤣.
2 months 1 week ago
இதில் நாங்கள் ஊருக்கு அவ்வப்போது அனுப்புகின்ற நிதியும் அடங்குகின்றதோ? வெளிநாடுகளுக்கு செல்லும் இலன்கையர்கள் தாய்நாட்டுக்கு நிதி அனுப்புகின்றார்கள். ஆனால், பலரின் வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் உள்ளது. அதிகளவு குடும்ப உறவு விரிசல்கள் என தொடங்கி கொலைகள் வரை பிரச்சனைகள் செல்கின்றன. இவை பற்றி அவ்வப்போது செய்திகளில் அறிகின்றோம்.
2 months 1 week ago
https://i2.res.24o.it/pdf2010/Editrice/ILSOLE24ORE/ILSOLE24ORE/Online/_Oggetti_Embedded/Documenti/2025/07/12/Preliminary%20Report%20VT.pdf ஏயார் இந்தியா விபத்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை.
2 months 1 week ago
கிந்தியா என்பது யாருக்குமே உதவாத நாடாக போய் விட்டது. சொந்த நாட்டு மக்களுக்கும் பிரயோசனமில்லை. அயல் நாடுகளுக்கும் பிரயோசனமில்லை.
2 months 1 week ago
தவறுதலாக சக்தியினை நிறுத்த முடியாதவாறு வடிவமைத்துள்ளார்கள் என கூறுகிறார்கள் ஆழி (சுவிட்ச்) பக்கவாட்டில் இரண்டு தடுப்புக்கள் தற்செயலாக ஆழியின் மீது கை படுவதனை தவிர்ப்பதற்கு வைத்துள்ளார், மற்றது ஆழியின் இயங்கு நிலையில் இருந்து இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவதற்கு முதலில் ஆழியினை மேல் நோக்கி இழுத்து பின்னர் இயக்கமற்ற நிலைக்கு மாற்றவேண்டும் அதனால் தற்செயலாக கை படுவதன் மூலம் இயங்காநிலைக்கு மாறாது என கூறுகிறார்கள். ஆனால் இவற்றின் செயற்பாட்டுத்தன்மை (பாதுகாப்பு பொறிமுறை) சரியான நிலையில் இயங்கு நிலையில் இருந்ததா என முழு அறிக்கையில் தெரியவரும், விமான பயணத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் விமானம் இயங்கு நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள் அந்த அறிக்கை முழுமையான பரிசோதனை அறிக்கையாக இருந்திருக்குமா என்பது முழுமையான விசாரணையின் பின்னர் வெளிவரும். விமானிகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்கள், இந்த நிலையில் முழுமையான அறிக்கை வெளிவரும் வரை மக்கள் பொறுபுணர்வுடன் செயற்படவேண்டும்.
2 months 1 week ago
என்னதொரு கொடுமையான இஸ்ரேல் அரசு? அதுவும் தாகம் தீர்க்க நின்ற நிலையிலும் கூட.... வைத்தியசாலைகளில் குண்டு வீச்சு என்றால்....அரைசாண் வயிற்றுக்கு போராடும் அப்பாவிகளின் மீதுமா? புலம்பெயர் மேற்குலக புருஷர்கள் வாயும் திறக்க மாட்டார்கள். உக்ரேன் என்றால் மட்டும் அவர்களுக்கு வாய்திறக்குமாம். நாஷிகளால் கொடுமையாக அழிக்கப்பட்ட யூத இனம்.....அதையே பலஸ்தீன் மண்ணிலும் விதைப்பது சரியா? இங்கே ஹிட்லர் செய்தது எல்லாம் நியாயமாக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.
2 months 1 week ago
வாழ்த்துக்கள்! எப்படியும் வென்று வருவீர்கள் என்று தெரியும்.
2 months 1 week ago
ஆடு, மாடுகளின் வாய்வை அப்படியே சிறைப்பிடித்துத் தான் நீங்கள் முன்னர் எழுதியது போல "பின்விளைவுகள் இல்லாத இயற்கை உரம்" செய்கிறீர்களா😂? சீமான் தம்பிகள் என்றாலே யோசிக்காமல் ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதைத் தூக்கி நிறுத்த வேறொன்றை எழுதுவது வழமை. வெட்டினால் மொட்டை, வளர்த்தால் கூந்தல் என்ற ரீதியிலான தீர்வை இதற்கு இங்கே யாரும் முன்மொழியவில்லை. அப்படிப் புரிந்து கொள்வது "நிலம் எல்லாம் விவசாய நிலமாகத் தான் இருக்க வேண்டுமென்ற" சீமான் தம்பிகளின் மூளையின் பிரச்சினை! பேச்சு வாக்கில் உங்கள் "நலியும் தமிழக பாலுற்பத்தி" பற்றிய ஆதாரத்தைத் தர மறந்து விடாதீர்கள்! காத்திருக்கிறேன்😎.
2 months 1 week ago
சீமானுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட பினாமி அரசியல் தான் விஜய் அரசியல்.
2 months 1 week ago
👍 நான் இரண்டிற்காகவும் பூமி வெப்பமடைவதை குறைப்பதற்கான பங்களிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்கிறேன் இறைச்சியை முடிந்தளவு தவிர்த்தல் கோழி இறைச்சியை குறைப்பது வீகன் உணவை அதிகரிப்பது
2 months 1 week ago
குற்றவாளிகளான பொலிஸ்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்றது சிபிஐயிடம் விசாரணை கொடுக்கபட்டுள்ளது முதல்வர் வருத்தம் தெரிவித்து உள்ளார் கொலைசெய்யபட்டவரின் அம்மா சகோதருடனும் பேசி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்ன வேண்டும்😇
2 months 1 week ago
சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க..... சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது??????? கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு.... இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁
2 months 1 week ago
2 months 1 week ago
ஆடுமாடுகளின் வாய்வு என்பது கழிவுதானே. அவற்றின் வெளிச்சுவாசத்தினால் வருவதும் கழிவுதானே.உங்கள் கருத்துப்படி உலகில் உள்ள ஆடுமாடுகளை எல்லாம் அழித்தால் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டலாம் அப்படித்தானே! நான் முட்டாள்தனமாக எழுதிதுகிறேன் அதிபுத்திசாலிகள் அதற்கு எதிர்வினையாற்றாமல் விடுவதே நல்ல அறிவாளிக்கு அழகு.
2 months 1 week ago
உங்களைப் பற்றிப் பேசுகிறீர்களா🤣? அப்படியெல்லாம் ஆட்டு, மாட்டிறைச்சியை "பிடி பிடி"ப்பதைக் குறையுங்கள். கோழி இறைச்சி ஆரோக்கியமானது. பூமி வெப்பாகும் என்ற அக்கறையினால் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நாடி இதைச் செய்ய வேண்டும்!
Checked
Sat, 09/27/2025 - 12:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed