3 weeks 3 days ago
“புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆
3 weeks 3 days ago
காசாவின் கான் யூனிஸில் மனிதாபிமான மண்டலத்தை நிறுவ தீர்மானம்! Published By: Digital Desk 1 06 Sep, 2025 | 12:28 PM காசாவின் கான் யூனிஸின் அல் - மவாசி பகுதியில் ஒரு மனிதாபிமான மண்டலத்தை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை (இன்று) அதிகாலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கள வைத்தியசாலைகள், நீர் குழாய்கள், உப்புநீக்கும் வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற உட்கட்டமைப்புகள் இந்தப் பகுதியில் இருக்கும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதிக்கு வெளியேறுமாறு இராணுவத்தின் செய்தியாசிரியர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224359
3 weeks 3 days ago
இந்த திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதனை இந்த காட்சியின் இறுதியில் வரும் நகைச்சுவையினை பார்த்த பின்பே புரிந்தது.
3 weeks 3 days ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். (இரண்டாம் கட்டம் 44 வது நாள்) ST Suman - Journalist
3 weeks 3 days ago
மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும். அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.
3 weeks 3 days ago
ஆழ்ந்த இரங்கல்கள் .......... !
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. https://athavannews.com/2025/1446263
3 weeks 3 days ago
எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்! எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது. மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446248
3 weeks 3 days ago
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு அமெரிக்க ஜனதிபதியை சந்திக்க நேரிடும். எனவே, வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://athavannews.com/2025/1446258
3 weeks 3 days ago
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446250
3 weeks 3 days ago
உறுதிகொண்ட விடுதலை வீரர்களை உலகின் ஆதிக்க சக்திகள் ஏற்பதில்லை. விடுதலையை விரும்பும் மக்களும் உலகும் இருக்கும் விடுதலை வீரர்கள் மறைவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
3 weeks 3 days ago
05 Sep, 2025 | 03:30 PM (எம்.மனோசித்ரா) 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் ஆகஸ்ட் 31 – செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மாநாடொன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகில் பலவந்த நாடுகள் பலவும் பங்கேற்றன. அத்தோடு 10 நாடுகள் அந்த மாநாட்டில் நிரந்தர அங்கத்துவத்தையும் பெற்றுள்ளன. அத்தோடு 25 நாடுகள் பேச்சாளராகவும் பங்கேற்கின்றன. 1999இல் இந்த மாநாடு ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்று வருகிறது. ஆனால் இம்முறை இலங்கையில் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை நிராகரித்துள்ளதாக லங்கா கார்டியன் இணையதளம் தெரிவித்துள்ளது. வெளியக அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த மாநாட்டை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகமும், பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகமும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரமில்லாததால் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அழைப்பு கிடைக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அதனை வெளிவிவகார அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் விவகாரங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் அரசாங்க பேச்சாளர் அறிவார். இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் அனைத்தும் இதில் பங்கேற்றன. இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன? இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது அப்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அமெரிக்க ஆதரவாளர்கள் என விமர்சித்தனர். வல்லரசுகள் கூறுவதற்கமையவே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் விமர்சித்தனர். ஆனால் அந்த அரசாங்கங்கள் அனைத்தும் இவ்வாறான மாநாடுகளை புறக்கணிக்காது அவற்றில் பங்கேற்று நாட்டுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தன. யாரும் அமெரிக்காவுக்கு பயந்து எந்தவொரு மாநாட்டிலும் பங்கேற்றாமல் இருக்கவில்லை. அவ்வாறெனில் அநுர அரசாங்கம் ஏன் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை? சீனாவைப் போன்று ஒரு கட்சி ஆட்சியை அங்கீகரிக்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வாவின் கட்சி அமைத்துள்ள அரசாங்கத்திலுள்ளோர் இதனைப் புறக்கணித்துள்ளனர். அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதே தற்போது கிடைத்துள்ள தகவலாகும். ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்வதை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர அவர் நேரமற்ற வகையில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஜனாதிபதிக்கு செல்ல முடியாவிட்டால் வெளிவிவாகார அமைச்சர் அல்லது வேறு அமைச்சர்கள் பங்கேற்றிருக்க முடியுமல்லவா? அல்லது குறைந்தபட்சம் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரையாவது பங்குமற்றுமாறு ஆலோசனை வழங்கியிருக்கலாமல்லவா? அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து இவர்கள் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இதேபோன்று தான் இவர்கள் பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்தனர். இவர்களது வெளிநாட்டு கொள்கை என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்திடுகின்றனர். ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை. மறுபுறம் ரஷ்யர்களுக்கு இலவச வீசாவை வழங்குகின்றனர். அதிகாரத்துக்கு வர முன்னர் அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இன்று அந்நாட்டின் சகாக்களாகியுள்ளனர். இது ஜே.வி.பி.க்கு பாதிப்பல்ல, ஆனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பாகும் என்றார். https://www.virakesari.lk/article/224286
3 weeks 3 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ரெஹான் ஃபாசல் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார். அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை. பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார். ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் அவரை ஓர் இளம் பிரெஞ்சு அறிவுஜீவி என்று தவறாக நினைத்திருப்பார்கள். அவர் உயரத்தில் குள்ளமாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தார். அவரது கறுப்பு முடியும் கருப்பு கண்களும் மக்களை கவர்ந்தன. " என்று எழுதுகிறார். மேலும் "அவர் மோண்ட்மார்ட்ரே பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒரு அழுக்கு பிடித்த அறையில் வசித்து வந்தார். பழைய புகைப்படங்களை பழுது பார்த்து பெரிதாக்குவது அவரது தொழில். அவர் கையில் எப்போதும் ஷேக்ஸ்பியர் அல்லது எமிலி ஜோலாவின் புத்தகம் இருக்கும். அவர் ஒரு அமைதியான மனிதர், ஆனால் பயந்த மனிதர் அல்ல. நாடகம், இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டங்களில் சரளமாக பிரெஞ்சு மொழியில் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார். அவர் மேற்கின் செல்வாக்கை உள்வாங்கியிருந்தார், ஆனால் அதன் ஆதிக்கத்திற்கு தயாராக இல்லை." என்றும் குறிப்பிடுகிறார். ஹோ சி மின் கொல்கத்தா வருகை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஜூலை 4-ம் தேதி அப்போதைய வியட்நாம் பிரதமர் நுயென் தான் ஜங் மற்றும் அவரது மனைவி த்ரான் தான் கீம் ஆகியோர், கொல்கத்தாவில் உள்ள மறைந்த வியட்நாம் அதிபர் ஹோசிமின் சிலைக்கு அருகில் நிற்கின்றனர். 1941-ம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திடீரென அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக கட்சி அலுவலகத்தை அடைய வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின என்பது ஒரு பிரபலமான கதை. கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட், தி ஜர்னி ஆஃப் அன் இந்தியன் கம்யூனிஸ்ட்' (பயணியும், பாதையும் : ஒரு இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கைப் பயணம்) புத்தகத்தில், "நாங்கள் அலுவலகத்தை அடைந்தபோது, சிரித்த கண்களும் மெல்லிய தாடியும் கொண்ட ஒரு ஒல்லியான தோற்றம் கொண்ட மனிதர் எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பின்னர் அணியத் தொடங்கிய ஆடைகளை அவர் அப்போதே அணிந்திருந்தார். அவர் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவர் பெயர் ஹோ சி மின். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச பாரிஸ் செல்வதாகக் கூறினார். கிரேட்-ஈஸ்டர்ன் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள ஒரு பணியாளரின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடைந்தார்." என்று எழுதுகிறார். வியட்நாமுக்கு சுதந்திரம் பெற்று தந்தார் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1965-ல் வியட்நாம் பிரதமர் பாம் வான் டோங்குடன் ஹோ சி மின் ஹோ சி மின்னை குறிப்பிடும் போதெல்லாம், எதிர்ப்பு, புரட்சிகர உணர்வு போன்ற சொற்கள் தானாகவே நினைவுக்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒருபுறம் மதிக்கப்பட்ட ஒரு நபராகவும், மறுபுறம் எதிரிகளால் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தார். நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த தனது நாட்டிற்கு அவர் சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜாக்சன் ஹார்டி தனது 'ஹோ சி மின் ஃப்ரம் எ ஹம்பிள் வில்லேஜ் டு லீடிங் எ நேஷன்ஸ் ஃபை ஃபார் ஃப்ரீடம்' (ஹோசிமின் - சாதாரண கிராமத்தில் இருந்து, விடுதலைப் போராட்டத்தின் தலைமை வரை) என்ற புத்தகத்தில், "மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக உருமாறிய அவரது பயணம், போராட்டம் மற்றும் தைரியத்தின் கதை மட்டுமல்ல, உலகின் வலிமையான சக்திகளால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நபரின் கதையும் கூட. அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அவர்களை ஆதரித்த வல்லரசான அமெரிக்காவையும் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்." என்று எழுதுகிறார். ஆரம்பத்தில் புறக்கணித்த அமெரிக்கா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அமெரிக்க துருப்புகள் பயன்படுத்தின. ஆகஸ்ட் 29, 1945 அன்று, வியட்நாமின் சுதந்திரத்திற்காக போராடிய வியட் மின் எனும் குழு ஹனோயை ஜப்பானிடமிருந்து விடுவித்தது. செப்டம்பர் 2-ம் தேதி வியட்நாம் என்ற சுதந்திர நாடு நிறுவப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா பங்கேற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் வியட்நாமை மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கவில்லை. வியட்நாமை ஐ.நா. பாதுகாப்பின் கீழ் அல்லது தற்காலிகமாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க அவர் தயாராக இருந்தார். ஆகஸ்டின் போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின்படி, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பனிப்போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் பார்வையில், ஹோ சி மின் ஒரு தேசியவாத தேசபக்தர் அல்ல, ஒரு உறுதியான கம்யூனிஸ்டாகவும், 'மாஸ்கோவின் முகவராகவும்' இருந்தார். வி.கே.சிங் தனது 'ஹோ சி மின் அண்ட் ஹிஸ் வியட்நாம்' (ஹோ சி மின் மற்றும் அவரது வியட்நாம்) என்ற புத்தகத்தில், "மார்ச் 27, 1947 ட்ரூமன் கோட்பாடு, உள்நாட்டு கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது கம்யூனிச ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்கா எந்த வகையிலும் உதவும் என்றது. மே 8, 1950 அன்று, அமெரிக்கா வியட்நாமில் பிரான்சுடன் ஒரு மூலோபாய உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செப்டம்பர் 1953 -ல், அமெரிக்க நாடாளுமன்றம் 900 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அங்கீகரித்தது. 1954 வாக்கில், வியட்நாமில் பிரான்சின் போருக்கான செலவில் 80 சதவீதத்தை அமெரிக்கா ஏற்கத் தொடங்கியது." என்று எழுதுகிறார். 1954 -ல், பிரான்ஸ் தியென் பியென் ஃபூவில் (வியட்நாமில் உள்ள ஒரு நகரம்) தோல்வியை சந்தித்தது. 7500 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டனர், 10,000 பேர் போர்க் கைதிகளாக பிடிபட்டனர். ஜூலை 19, 1954 -ல், பிரான்ஸ்-வியட்நாம் போர் ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது. தன்னை விட பல மடங்கு பெரிய சக்திகளுக்கு எதிராக போர்களை நடத்தி வெல்ல முடியும் என்பதை வியட்நாம் கற்றுக்கொண்டது. அமெரிக்கா தனது முழு பலத்தையும் பிரயோகித்தது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் (கோப்புப் படம்) ஜெனீவா ஒப்பந்தங்களைத் தொடர்ந்து வியட்நாமை ஒன்றிணைப்பதற்கான பாதையைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது வெளியுறவுச் செயலர் ஜான் போஸ்டர் டல்லெஸும் பிராந்தியத்தில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தெற்கு வியட்நாமை ஒரு தனி நாடாக உருவாக்க முடிவு செய்தனர். வியட்நாமில் நேரடியாக அமெரிக்கத் தலையீட்டைத் தொடங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஐசனோவர் ஆவார். அதைத் தொடர்ந்து, கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தது. ஜனவரி 27, 1965 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் கெவர்ஸ் பண்டி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக் நமரா இருவரும் அதிபர் ஜான்சனிடம் வியட்நாமில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவத் தலையீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினர். இப்போது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அது இந்தப் போரில் முழுமையாகக் குதிக்க வேண்டும் அல்லது அங்கிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். பிப்ரவரி 6, 1965 அன்று, ஜான்சன் 'ஆபரேஷன் ஃபிளேமிங் டார்ட்' க்கு ஒப்புதல் அளித்தார். அமெரிக்கப் படைகள் பலமாக இருந்தபோதிலும், வடக்கு வியட்நாமின் ராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டது. ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் லேன் பாம் , "ஹோ சி மின்னின் மூலோபாய தலைமையும் வடக்கு வியட்நாமின் கம்யூனிச ஆட்சியும் வியட்காங்கிற்கு (ஆயுதக் குழு) சண்டையைத் தொடர தேவையான வளங்களையும் கருத்தியல் ஆதரவையும் வழங்கின. அமெரிக்கர்கள் விரைவிலேயே தாங்கள் ஒரு ராணுவப் படையை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மக்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்ந்தனர். இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு புதைகுழியானது, அங்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்க ராணுவம் வியட்நாமில் ஹோ சி மின்னின் துருப்புகளிடம் இருந்து எதிர்ப்பை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை, மாறாக போரின் அறநெறி மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அவர்களது சொந்த நாட்டிலேயே ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் வேகம் பெற்று வந்தது." என்று குறிப்பிடுகிறார். கொரில்லா போர் முறைக்கு முக்கியத்துவம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் வியட்நாம் பெண்கள் (கோப்புப் படம்) போர்க்காலம் முழுவதும், ஹோ சி மின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கும் அசாதாரண திறனை வெளிப்படுத்தினார். வில்லியம் ஜே.டைக் தனது 'ஹோ சி மின் எ லைஃப்' (ஹோ சி மின் : ஒரு வாழ்க்கை ) என்ற நூலில், "போரின் போது வடக்கு வியட்நாமின் உறுதியைப் பேணுவதிலும், தேசியவாதம் மற்றும் சோசலிசம் என்ற பதாகையின் கீழ் வியட்நாம் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஹோவின் தலைமை முக்கிய பங்கு வகித்தது. மோதல் குறித்த அவரது புரிதல் மற்றும் கடினமான காலங்களில் அவரது உறுதியான தலைமை ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன." என்று எழுதுகிறார். ஹோ சி மின்னின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் கொரில்லாப் போருக்கு அளித்த முக்கியத்துவமாகும். வியட்நாம் போன்ற காடுகள் சூழ்ந்த நாட்டில் வழக்கமான போர் நடத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். கிராம மக்களுடன் வியட்காங் வீரர்கள் கலந்து அமெரிக்க வீரர்களை திடீரென தாக்கி காடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் மறைந்து விடுவது என்பதே அவரது உத்தியாக இருந்தது. அமெரிக்க வீரர்களுக்கு இந்த வகை போருக்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சோவியத் தலைவர்களுடன் ஹோ சி மின் ஹோ சி மின்னின் வெற்றிக்கு மற்றொரு காரணம் சோவியத் யூனியனும் சீனாவும் வழங்கிய முழு ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாகும். 1957 -ல், ஹோ சி மின் சீனா சென்றார். முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்ற நூலில் , "ஹோ பெய்ஜிங் சென்ற போது, மா சே துங் முதல் சூ என் லாய் மற்றும் லியு ஷாவோ சி வரை சீனாவின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றனர். செருப்பு அணிந்து கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார். அவர் வெளியில் இருந்து மிகவும் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அவரது எலும்புகள் இரும்பைப் போல வலுவாக இருந்தன. 1953 -ல் ஸ்டாலின் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாஸ்கோவில் அவரை ஹோ சி மின் சந்தித்தார்" என்று குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, ஹோவிடம் கேட்டார், இந்த நாற்காலிகளில் ஒன்று தேசியவாதிகளுக்கும் மற்றொன்று சர்வதேசியவாதிகளுக்கும் சொந்தமானது. இவற்றில் எதில் நீங்கள் அமர விரும்புகிறீர்கள்? 'தோழர் ஸ்டாலின், நான் இரண்டு நாற்காலிகளிலும் அமர விரும்புகிறேன்' என்று ஹோ பதிலளித்தார். ஹோவின் புத்திசாலித்தனத்தை ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். ஹோ சி மின் மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வழியாக ரயிலில் ஹனோய்க்குத் திரும்புகையில், தன்னுடன் வந்த மா சே துங் மற்றும் சூ என் லாய் ஆகியோரிடம் இந்த சம்பவத்தை விவரித்தபோது, ஸ்டாலினிடமிருந்து எதையோ பெறுவது சிங்கத்தின் வாயிலிருந்து இறைச்சியைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்." என்று வில்லியம் டைக் எழுதுகிறார். 79 வயதில் மரணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1958-ல் ஹோசிமின் இந்தியா வந்த போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் காட்சி ஹோ சி மின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் அபிமானி. நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை ஹோவை சந்தித்தார். 1954-ல் ஹனோயில் ஒரு முறையும், 1958-ல் டெல்லியில் ஒரு முறையும், ஹோ சி மின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்தபோது சந்தித்தார். அதே பயணத்தின் போது, ஹோ சி மின்னை இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சந்தித்தார். தனது சுயசரிதையான ராசிடி டிக்கெட்டில் அவர், "ஹோ சி மின் என் நெற்றியில் முத்தமிட்டு, 'நாம் இருவரும் வீரர்கள். நீங்கள் பேனாவால் சண்டையிடுகிறீர்கள். நான் வாளால் போரிடுகிறேன்" என்று கூறியதாக குறிப்பிடுகிறார். 1969-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நோய் தீவிரமடைந்தது, செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர். அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். வியட்நாமுக்கு 121 நாடுகள் இரங்கல் செய்திகளை அனுப்பின. அமெரிக்கா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நாள் வியட்நாம் மீது குண்டு வீசுவதை நிறுத்தியது. அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1975- ல் அமெரிக்கா அவரது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgj14l5jqqqo
3 weeks 3 days ago
சிரியாவைச் சேர்ந்த பலர் நான் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அதில் குர்திஸ் இனத்தவர்களும் உள்ளனர். ஒருவர் புதிதாக வந்தபோது அவரும் சிரிய குர்திஸ்ஸாக இருக்கலாம் என்று கேட்போது அவர் 'அரபா' என்றார். அப்போ சிரியா இல்லையா என்று கேட்டதற்கு.. சிரியாதான் ஆனால் நான் 'அரபா' என்றார். இவர்கள் மதத்தாலும், நிலத்தாலும் ஒன்றானபோதும் ஒரு இனமாக இல்லை. ஆனால் இலங்கைச் சோனகரே தம்மை மதத்தால் இனமாக அடையாளம் கொள்கின்றனர். மதங்களால் வேறானாலும் மொழியால் ஒன்றாகி அவரவர் பண்பாடுகளைத் தனித்துவமாகப் பேணும் அலகுகளை அணியமாக்கி வாழ்தவதே தமிழ்பேசும் தரப்புக்குப் பாதுகாப்பானது என்ற புரிதல் சோனகருக்குத் தலைமை தாங்கிய முன்னைய தலைவர்களுக்கு இருந்தது. சில கசப்பான சூழல்களையும் பேசித்தீர்த்துக் இணைந்து செல்லும் முயற்சி சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதை நினைவு கொள்ளல் வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
3 weeks 3 days ago
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
3 weeks 3 days ago
கருணாநிதி பேரூந்து நிலையம் என்று வைத்துக் கொண்டு… பஸ்சுக்கு ரிக்கற் எடுக்கச் சொன்னால், வடக்கனுக்கு கோபம் வரும் தானே. கருணாநிதி ரயிலுக்கே ரிக்கற் எடுக்காமல் கக்கூசில் ஒளித்து பயணம் செய்யும் ஓசி பிரயாணி. அதே வழியை… வடக்கன்சும் பின்பற்றுவதில் தவறு இல்லையே. 😂
3 weeks 3 days ago
இருக்கும் முறையை பார்க்கும் போது, அப்படித்தான் நடந்து இருக்கும் போல் உள்ளது. எவ்வளவு கொடுமையை அனுபாவித்து இருப்பார். மேற்கொண்டு எழுத மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
3 weeks 3 days ago
தமிழர்களுக்கு அடித்தாலே புத்தி வரும்.
3 weeks 4 days ago
“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு! கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பூவை செங்குட்டுவன் (90) இன்று மாலை சென்னை பெரம்பூரில் காலமானார். வயது மூப்பே அவரது மரணக்காரணமாகக் கூறப்படுகிறது. செங்குட்டுவன் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 4,000-க்கும் அதிகமான சுயாதீனப் பாடல்களையும், 5,000 பக்திப் பாடல்களையும் இயற்றி தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வரிகளில் இலக்கிய நயமும், ஆன்மீக உணர்வும், பொதுமக்களின் வாழ்வியல் மொழியும் கலந்து காணப்பட்டதால் பரவலான வரவேற்பைப் பெற்றது. அவரது படைப்புகளில் சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை பெற்றன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற்சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா”, “இறைவன் படைத்த உலகை” போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தவை. இன்றும் அவை பக்தி நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கின்றன. திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள் மற்றும் சுயாதீன இசைத் துறைகளிலும் அவர் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தம் படைப்புகளில் எளிமையான சொற்களையும், நுண்ணிய உணர்ச்சியையும் கலந்து அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் அமைத்தது அவரது வித்தியாசமான பலம். செங்குட்டுவனின் மறைவு தமிழ்ச் சங்கீத உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு இசைக்கலைஞர்களும், பாடகர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். https://www.seithipunal.com/tamilnadu/poets-poovai-senkuttuvan-passed-away
Checked
Wed, 10/01/2025 - 00:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed