புதிய பதிவுகள்2

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

3 weeks 3 days ago
கைது செய்யப்படுகின்ற சிங்கள அரசியல் வியாதிகள் எல்லோரும் நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். நம்ம பிள்ளையான்தான் கெத்து. ஒரு நோயும் இல்லாத ஆரோக்கியமான மனுசன், சிறையிலேயே... கம்மென்று குந்திக் கொண்டு இருக்கின்றார்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

3 weeks 3 days ago
கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து! போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பத் மனம்பேரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பத் மனம்பெரிக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50,000 கிலோ மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சம்பத் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தங்கள் கட்சி ஒருபோதும் மென்மையான கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்றும் அதன்படி, அவரது கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446284

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

3 weeks 3 days ago
காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை! காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது. இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன. காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. யுத்ததிற்கு முன்னதாக காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள மக்களை காசாவில் உள்ள கான் யூனிஸின் நியமிக்கப்பட்ட கடலோரப் பகுதிக்கு செல்லுமாறும் அவ்வாறு அங்கு தப்பி செல்லும் மக்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று முன்தினம் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த வண்ணம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1446288

வட கொரியாவின் அடுத்த தலைவர் இந்த சிறுமியா? - கிம் ஜோங் உன்னின் வாரிசாக முன்னிறுத்தப்படுபவர் யார்?

3 weeks 3 days ago
பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் Flora Drury BBC News 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை. முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார். அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார். 'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார். பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார். 'கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு' இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது. கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது. ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார். ஆனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டியுள்ளன. 1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo

அழகான புத்தகக்கடை

3 weeks 3 days ago
அட நம்ம ஊரைப் பற்றியும் அவருக்கு தெரிந்திருக்குமோ? என்ன தேடினால் ஆறுமுகநாவலர் சேனாதிராச முதலியார் இப்படிப்பட்ட பெயருகள் தான் வரும். 10 யூரோ போச்சா? “புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும் இதற்கெல்லாம் முதல் பிரச்சனை முன்னணியில் அழகான பெண்களை விட்டிருப்பார்கள். அப்புறம் என்ன உருவி எடுத்து விடுவார்கள்.

நான் அரசியலில் இருக்கும் வரை அனுரகுமார ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்க மாட்டேன் - லொகான் ரத்வத்தையின் கருத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

3 weeks 3 days ago
அறிக்கை விட்ட மனுசன் கவலையில போய்ச்சேர்ந்திட்டார்.

அதிக எடையில் பிறந்த ஆண் குழந்தை

3 weeks 3 days ago
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாயும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/largest-newborn-ever-recorded-was-born-in-world-1757133988

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

3 weeks 3 days ago
23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து 23 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் நடந்த மற்றுமொரு மோசமான விபத்தை நினைவூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், பேருந்து முதலில் ஒரு ஜீப்புடன் மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது. இதே நாளில் இந்த நிலையில், நேற்றைய பேருந்து விபத்து, 2002 செப்டம்பரில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தை ஒத்துப்போவதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவிக்கின்றனர். 2002 விபத்தின் போது, பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்திருந்துடன், அந்த விபத்தும் இதே நாளிலும், கிட்டத்தட்ட அதே நேரத்திலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தொடர் பேருந்து விபத்துகள் இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. இவ்வருடம் மே மாதத்தில், கதிர்காமத்தில் இருந்து குருணாகலை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியானார்கள். அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு பஸ்ஸரவில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர். இவ்விரு விபத்துகளும் சமீபத்திய எல்ல – வெல்லவாய விபத்து நிகழ்ந்த அதே மாவட்டத்தில் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ella-bus-accident-similar-to-2002-bus-accident-1757080927#google_vignette

கிருஷாந்தி நினைவேந்தல்

3 weeks 3 days ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். காலங்கள் கடந்தாலும் கொலையாளிகள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சாமாதான தேவதையாக வந்த சந்திரிகா இதற்காக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

"மூன்று கவிதைகள் / 06"

3 weeks 3 days ago
"மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெருங்க சொல்ல முடியா இன்பம் பொழிந்ததே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .................................................. 'படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே' படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே கடிக்க கடிக்க போதை இழுக்கிறதே நடிக்க நடிக்க பொய் வளர்கிறதே! உண்மையை உணர்ந்து உலகத்தைப் படித்தால் மண்ணின் வாசனையில் உன்னை நிறுத்தினால் பண்பாடு நிலைத்து மகிழ்ச்சி மலருமே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 06" https://www.facebook.com/groups/978753388866632/posts/31179991941649379/?
Checked
Wed, 10/01/2025 - 03:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed