Aggregator

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்.......! சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா சந்திர கலாதரா சர்வ செவாதரா உன் பாதம் பணிந்தேன் ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு Black'ல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான் Market தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான் Theatre ticket விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா உந்தன் பேரில் கோயில் உண்டா பெண்கள் கூட சாமி தாண்டா ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா உங்க city பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான் ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் CM தான் வேண்டாமடா வெவகாரம் தான் ஆட்சி வந்தா அதிகாரம் தான் ......! --- ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ---

லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 months 2 weeks ago
லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து பல கைதிகளை மிரட்டியிருந்தார். இந்நிலையில் இச் சம்பவங்களை விசாரிக்கவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்த நிலையில் அக்குழு லொஹான் ரத்வத்த குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிவித்திருந்தது. மேலும் அவர் மீது பி ரிப்போர்ட் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸிற்கு பரிந்துரை செய்தும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1368061

லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 months 2 weeks ago
Lohan-Ratwatte-750x375-1.jpg?resize=750, லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து பல கைதிகளை மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் இச் சம்பவங்களை விசாரிக்கவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்த நிலையில் அக்குழு லொஹான் ரத்வத்த குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிவித்திருந்தது.

மேலும் அவர் மீது பி ரிப்போர்ட் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸிற்கு பரிந்துரை செய்தும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1368061

ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்

3 months 2 weeks ago
ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் போன்றது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். https://athavannews.com/2024/1368079

ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்

3 months 2 weeks ago
hhs-1.jpg?resize=750,375&ssl=1 ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் போன்றது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

https://athavannews.com/2024/1368079

இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு!

3 months 2 weeks ago
இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு!

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த இசை நிகழ்வு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி நிகழ்ச்சியை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்வு, கடந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இதனையடுத்து இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது. (N)
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இளையராஜா-இசை-நிகழ்ச்சி-புதிய-திகதிகள்-அறிவிப்பு/175-332532

ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம்

3 months 2 weeks ago
ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம் புதியவன். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கை 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. பூஜ்ய புள்ளி பெறும் நாடுகள் ஊழல்கள் மிக்க நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பட்டியலுக்கு அமைய இலங்கை 2023 ஆம் ஆண்டு 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தோனேஷியா , மலாவி, துருக்கி, ஈக்வடோர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளதோடு தொடர்ந்து நியூசிலாந்து, நோர்வே, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் தெற்கு சூடான், வெனிசுலா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இறுதி இடங்களைப் பிடித்துள்ளன. நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/ஊழல்_நிறைந்த_நாடுகளில்_இலங்கைக்கு_115_இடம்:

ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம்

3 months 2 weeks ago
ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம்
1343660752.jpeg

புதியவன்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிக்க  நாடுகளின் பட்டியலில் இலங்கை 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. பூஜ்ய புள்ளி பெறும் நாடுகள் ஊழல்கள் மிக்க நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலுக்கு அமைய இலங்கை 2023 ஆம் ஆண்டு 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர்   இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தோனேஷியா , மலாவி, துருக்கி, ஈக்வடோர் மற்றும்  பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளதோடு தொடர்ந்து நியூசிலாந்து, நோர்வே, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும் தெற்கு சூடான், வெனிசுலா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இறுதி இடங்களைப் பிடித்துள்ளன.

நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

https://newuthayan.com/article/ஊழல்_நிறைந்த_நாடுகளில்_இலங்கைக்கு_115_இடம்:

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

3 months 2 weeks ago
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை 2 பிப்ரவரி 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது. சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். பட மூலாதாரம்,SAATTAIDURAI/X படக்குறிப்பு, 'சாட்டை' துரைமுருகன் அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் இந்தச் சோதனைகள் எதற்காக? கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்குத் தொடர்பாகத்தான் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஓமலூர் காவல்துறையினர் புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து ஓமலூர் நோக்கிவந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை இட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடிமருந்து, முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் சேலம் செட்டிச்சாவடியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரையும் காவல்துறை கைதுசெய்தது. இந்த வழக்கை முதலில் சேலம் மாவட்ட 'க்யூ' பிரிவு காவல்துறை விசாரித்து வந்தது. அந்த விசாரணையில், பணத்திற்காக இயற்கையைச் சீரழிப்பவர்களை அழித்தொழிப்பதற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த அந்த இளைஞர்கள் முடிவெடுத்திருந்ததாகவும் இதற்காக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளைச் சேகரித்ததாகவும் தெரியவந்தது. இதற்குப் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இப்போது இந்த வழக்கு தொடர்பாகத்தான், சோதனைகளும் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/ceqjyqw74gxo

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

3 months 2 weeks ago
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
February 2, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள்  வெளியாகி உள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி  உள்ளது.

இந்நிலையில்  நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து  என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர்  சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது.
 

https://globaltamilnews.net/2024/200289/

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

3 months 2 weeks ago
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை! February 2, 2024 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது. தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது. https://globaltamilnews.net/2024/200289/

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
ஒரு 8 பக்கமாவது போவணுமே....கந்தையர் பொய் குற்றச் சாட்டெனில்..சுமந்திரனை அணுகவும்...ஆனால் வெற்றி உங்களுக்கு கிடைக்காது...😁

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
அப்படி என்றால் எல்லா வழக்கின் தீர்ப்புகளும் ஒரே மாதிரியா??? மேலும் வழக்கில் தோற்றால். என்ன?? எங்கள் பக்க நியாயத்தை எடுத்து சொல்லும் இடங்களில் ஒன்று சர்வதேச நீதிமன்றமும் ஆகும். அதை செய்ய முடியுமானால் செய்யலாம் எங்களுக்கு வழக்கு தாக்கல் செய்ய ஆள்கள். இல்லை எனபது பற்றி நான் இங்கு கதைக்கவில்லை வழக்கு போடலாமா?? இல்லையா?? என்பது பற்றி தான் கதைக்கிறேன்.

இறைவனிடம் கையேந்துங்கள்

3 months 2 weeks ago
சின் முஸ்திரகஸ்தன் சிவ விஸ்ணு மைந்தன் புங்குடு தீவின் பூர்விக இறைவன் சின் முஸ்திரகஸ்தன் சிவ விஸ்ணு மைந்தன் புங்குடு தீவின் பூர்விக இறைவன்

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

3 months 2 weeks ago
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் Sri Lanka PoliceSri Lankan TamilsCanada 1 மணி நேரம் முன் Kamal in உலகம் Report Share விளம்பரம் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார். எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார். இன அழிப்பு அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி அபகரிப்பு இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார்.