Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 377 online users.
» 0 Member(s) | 374 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,468
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம்
Posted by: மேகநாதன் - 01-26-2006, 08:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் </b>
[<i>வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006</i>

இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் மீண்டும் இவ்விருசாராருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று நண்பகல் முதல் பேருவளை மற்றும் அழுத்கம பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

<b><i>தகவல் மூலம்- புதினம்.கொம்</i></b>

Print this item

  அமைதிமுயற்சி - பின்தொடரும் சிங்களத்தின் சீண்டல்கள்
Posted by: மேகநாதன் - 01-26-2006, 08:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='color:red'><b>வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் </b>
[வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 19:01 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார்.

தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர்.

இந்த பதில் தாக்குதலிலிருந்து இராணுவத்தினரையும் துணைப்படையையும் விடுவிக்க வெலிக்கந்த சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து செல் தாக்குதல், விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறினார்.

யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் இணங்கி 24 மணிநேரத்துக்குள் விடுதலைப் புலிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் இது தொடர்பில் கூறியதாவது:

கிழக்கில் எமது போராளிகள் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டு இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் இரட்டை வேடமிட்டுச் செயல்படுகிறது.

சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து எமது போராளிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக நாம் சிறிலங்கா காவல்துறையினர் ஒருவரை இன்று விடுதலை செய்துள்ளோம் என்றார் புலித்தேவன்</span>.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

Print this item

  wmv to 3gp
Posted by: arun - 01-26-2006, 07:53 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (5)

wmv இல் உள்ள பாடலை ஐ 3gp or mp4 க்கு மாற்றுவது எப்படி

Print this item

  யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்
Posted by: Danklas - 01-26-2006, 06:01 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (80)

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந்த விடயத்தைப்பற்றி வீட்டில் சொல்லவில்லை அந்த மாணவி, இப்பொழுது அந்த பெண்ணுக்கு 3 மாதம். இது பற்றி வீட்டில் விசாரித்தபொழுது நடந்தவற்றை சொல்லி இருக்கிறார் அந்த பெண், சரி நடந்தது நடந்துபோய்ச்சு எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,, :evil: :evil:

இந்த விடயத்தைப்பற்றி சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லுவோமா? அல்லது சொல்லாமல் விடுவமா எண்ட குழப்பத்தில் இப்பொழுது பெண்ணின் குடும்பம். இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கிறோம் எண்ட தினாவெட்டில் செய்ததவறையும் உணராது, அதற்கு 20 லட்சம் கேட்கும் அந்த கேனையை என்ன செய்யலாம்? இந்த செய்தியை வாசிக்கும் (???) உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தகுந்த தண்டனை குடுக்கவேண்டும், இந்த தண்டனை மற்றையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.. Idea

Print this item

  கைதிகள்சட்ட விரோதமாக கடத்தப்படுவதை நியாயப்படுத்தும் USA
Posted by: adsharan - 01-26-2006, 11:20 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தர வேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில் தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய விமர்சகர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிப்போடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான நிலையங்களை CIA விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும் CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார்.
மூன்றாம் தரப்பு நாடுகளில் கைதிகளை கடத்தும் நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களுக்கு எதிராக எந்த நீதிமன்ற நடைமுறையும் இல்லாமல் அமெரிக்காவின் சட்டங்கள் செயல்படாது என்று அமெரிக்க அரசாங்கம் கருதுகிறதோ அத்தகைய நாடுகளில் கைதிகளை கடத்துகின்றது. அமெரிக்க வெளியுறவுத் துறையினால் சித்திரவதையை கடைப்பிடிக்கும் நாடுகள் என்று சுட்டிக் காட்டும் நாடுகளுக்கு வாஷிங்டன் வழக்கமாக இக்கைதிகளை அனுப்புகிறது. "அசாதாரணமான கடத்துதல்" என்பது வெளிநாட்டு மண்ணில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வெளிநாடுகளில் அமைந்திருக்கும் சிறைச்சாலைகளில் காணாமற்போவதற்கு முன்னர் அந்த நபரையே கடத்திச் செல்லும் நடவடிக்கையை குறிப்பதாகும்.
ரைஸ் தமது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை பேர்லினில் ஆரம்பிக்கிறார் மற்றும் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பிரஸ்சல்ஸ் செல்கிறார். அவரது விஜயத்திற்கு முன்னர் குறைந்த பட்சம் எட்டு ஐரோப்பிய நாடுகள் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கடத்தல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட CIA விமான நிலையங்களை பயன்படுத்தியதா என்பது பற்றி விளக்கம் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜேர்மன் மற்றும் பிரிட்டனின் விமான நிலையங்கள் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
ஜேர்மனிக்கு புறப்படுதவதற்கு முன்னர் ஆன்ரூஸ் விமானப்படைத்தளத்தில் திங்களன்று உரையாற்றிய போது வெளிநாடுகளுக்கு விமானத்தின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களை உண்மையில் அமெரிக்கா கொண்டு சென்றது மற்றும் பல தசாப்தங்களாக இப்படித் தான் செய்து வருகிறது என்று ரைஸ் குறிப்பிட்டார். இது சித்திரவதையை செய்வதற்கு வசதியாக அல்ல என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இரகசிய சிறைகளை CIA நடத்தி வருகிறதா என்பதை கூற மறுத்துவிட்டார். "புலனாய்வு சட்ட அமுலாக்கம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஊறு விளைவிக்கும் தகவலை நாம் விவாதிக்க முடியாது. இதே கருத்தை இதர நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டார். அத்தகைய CIA சிறைகள் போலந்து மற்றும் ரூமேனியாவுடன் இதர ஆறு நாடுகளிலும் இருக்கக்கூடும் என்று அறியப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்குப் பின்னர் ரைஸ் தனது தாக்குதலை நேரடியாக ஐரோப்பா மீது திருப்பினார். அடிக்கடி ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் உதவியிருக்கின்றன. அவற்றால் பயனும் அடைந்திருக்கின்றன என்று வலியுறுத்திய அவர் "சில அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் புலனாய்வு, சட்ட செயற்பாடு அல்லது ராணுவ விவகாரங்களில் ஒத்துழைத்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பு என்பது ஒரு இரு வழிப்பாதையாகும்" என குறிப்பிட்டார்.
"அமெரிக்கா இதர நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறது. மற்றும் தொடர்ந்தும் மதித்துவரும்" என்று அவர் மேலும் கூறினார். மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது தீங்கு எதுவுமில்லாத சொற்றொடராக காணப்படும். இது உண்மையில் ஐரோப்பாவிற்கு எதிராக விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகும். இதர நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா மறுக்கிறது என்று சொல்வதன் மூலம் CIA விமானங்கள் பறப்பது பற்றி ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு தகவல் தரப்பட்டது என்று பொருள் பட ரைஸ் குறிப்பிட்டார். சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறுகின்ற இதர நடைமுறையில் கடத்துதல் உட்பட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அழைக்கப்படுவதன் ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்காவோடு ஐரோப்பா ஒத்துழைத்ததை அவர் மிகப் பொதுவாக நினைவூட்டுகிறார்.
டிசம்பர் 4 இல் உரையாற்றிய ஜனாதிபதி புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லே அதே கருத்துப்பட பேசினார், "எங்களோடு ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நாடுகளை ஆபத்திற்கு உள்ளாக்கும் வகையில்" பகிரங்கமாக கடத்துதல் பற்றி பேசுவது அமைந்துவிடும். அவர் குறிப்பிட்டது நேரடியாக CIA இனால் "கடத்தப்பட்டு" கைது மற்றும் சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபடுகின்ற எட்டு நாடுகளுக்கும் அப்பால் செல்கின்ற நோக்கில் அமைந்தவை.
ஐரோப்பாவின் தலைநகர்களில் அத்தகைய அச்சுறுத்தல்கள் கேட்காமல் விடப்படபோவதில்லை மற்றும் ரைஸ் ஐரோப்பிய அதிகாரிகளுடன் நடத்தும் தனிப்பட்ட கூட்டங்களில் இதைவிட அதிகமாக வெளிப்படையாக ரைஸ் கூறுவார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஒரு ஐரோப்பிய இராஜதந்திரி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் "ஐரோப்பிய அரசாங்கங்கள் இதை வற்புறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக உள்ளது. பல வாரங்கள் அவர்கள் நியாயப்படுத்துவதிலேயே உறுதியாக நின்றனர். ஆனால், திடீரென்று அந்த எல்லைக்கோடு நம்ப முடியாத அளவிற்கு கடுமையாகிவிட்டது" என கூறினார்.
தங்களது அமெரிக்க நண்பரிடமிருந்து சம்பிரதாய முறையில் ஒதுங்கி நின்று கொள்ள ஐரோப்பிய அரசாங்கங்கள் விரும்புகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மற்றும் அதே நேரத்தில், அமெரிக்கா தாங்கள் உடந்தையாக செயல்பட்டதை அம்பலப்படுத்திவிடக் கூடும் என்ற சாத்தியக் கூறு பற்றி பயப்படுகின்றனர். கடத்துதல் தொடர்பாக பொது மக்களின் ஆத்திரம் வளர்ந்து வருகிறது.
எடுத்துக்காட்டாக பிரிட்டனில் லிபர்டி Liberty என்கிற மனித உரிமைகள் குழு சிவில் விமானப் போக்குவரத்து மசோதாவிற்கு ஒரு திருத்தத்தை தாக்கல் செய்யவிருக்கிறது. அதன்படி பிரிட்டனின் விமான வான்வெளி வழித்தடத்தில் பறக்கின்ற எந்த விமானத்திலாவது வழக்கத்திற்கு மாறான கடத்துதல் கைதிகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள் என்று சந்தேகிப்பார்களானால் அந்த விமானத்தை தரையிறங்க கட்டளையிட்டு பொலிஸாரும் சுங்க அதிகாரிகளும் சோதனையிட செய்யுமாறு உள்துறை செயலர் கடமைப்படுவார். அமெரிக்காவின் சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒரு இரகசிய CIA சிறைக்கு ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஆணை ஏற்றிச் சென்று சித்திரவதை செய்ததாக கூறப்படுகின்ற அந்த நபரின் சார்பில் CIA மீது அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியதாக வழக்கு தொடரப் போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கைதிகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற விமானங்களை இயக்குகின்ற அல்லது சொந்தமாக வைத்திருக்கின்ற பெருநிறுவனங்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் ACLU அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் விட மிகுந்த கவலை தருவது பிரிட்டனின் சர்வக்கட்சி நாடாளுமன்றக் குழு கடத்துதல் மோசடி தொடர்பாக புலன் விசாரணை செய்து ஒரு அறிக்கை தருவதற்கு நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியை சார்ந்த மனித உரிமைகள் மற்றும் பூகோள நீதி மையத்தை ஏற்பாடு செய்தது தான். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பிரதமர் ரொனி பிளயரின் பிரிட்டிஷ் அரசாங்கம், பிரிட்டனின் விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு CIA கடத்தும் விமானங்களை அனுமதித்திருக்குமானால் அது சர்வதேச சட்டத்தை மீறிய குற்றமாகும்.
அந்த அறிக்கை முடிவுரையில் கூறியிருப்பது: "ஒரு தவறான செயலை புரிவதற்கு ஒரு அரசிற்கு உதவுகின்ற அல்லது ஒத்துழைக்கின்ற மற்றொரு அரசு சர்வதேச அளவில் அப்படிச் செய்ததற்கு பொறுப்பாகும். நூரம்பேர்க் விசாரணைகளிலிருந்து குறைந்த பட்சம் சர்வதேச குற்றவியல் சட்டத்தில் உடந்தையாக செயல்பட்டவர்களின் சட்ட பூர்வமான பொறுப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு குற்றவியல் சதியாலோசனையில் பிரிட்டனும் பல பிற ஐரோப்பிய அரசாங்கங்களும் உடந்தையாக உண்மையில் செயற்பட்டது பற்றிய விவரங்கள் தொடர்ந்து பகிரங்கமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகளுக்கு பல அமெரிக்க ஊடகங்கள் தான் மூலமாகவுள்ளன.
ஜேர்மனியில் CIA விமானங்கள் அடிக்கடி மிகப் பெருமளவில் குறைந்த பட்சம் 437 தடவைகள் இறங்கியிருக்கின்றன. இவ்வளவு விமானங்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் இறங்கியிருக்கும் என்பது நம்பகத்தன்மை கொண்டதல்ல. அத்தகைய சந்தேகங்கள் Washington Post டிசம்பர் 4 இல் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தனது குடிமக்களில் ஒருவர் பிடிக்கப்பட்டு மூன்றாவது நாட்டில் ஒப்படைக்கப்பட்டு CIA இனால் தவறான முறையில் கைது செய்யப்பட்டது பற்றி ஜேர்மனி மௌனம் சாதித்தது என்று அந்த செய்தி குற்றம் சாட்டியது. CIA பின்னர் அந்த மனிதர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
2003 டிசம்பர் 31 இல் மாசிடோனியாவில் காலித் எல் மாஸ்ரி கைது செய்யப்பட்டு அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஆப்கானிஸ்தானிலுள்ள இரகசிய சிறைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். Washington Post தந்துள்ள தகவலின்படி விமான குறிப்பு புத்தகம் காட்டுவது போல் CIA இன் முன்னோடி நிறுவனத்தின் பெயரில் விமான பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாஸ்ரி சொல்லியபடி அவர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அன்று அந்த விமானம் மாஸிடோனியாவிலிருந்து பறந்திருக்கிறது. CIA தான் ஒரு தவறான மனிதரை கைது செய்திருப்பதை அறிந்ததும் ஐந்து மாதங்களுக்கு பின்னர் அவர் ஐரோப்பாவிற்கு திரும்ப கொண்டுவரப்பட்டார்.
அந்த செய்தி பத்திரிகை வெளியிட்டிருப்பது; `CIA இன் அல்-ஹைடா பிரிவின் பயங்கரவாத எதிர் நடவடிக்கை மையத்தலைவர் `அவர் தேவையான ஒருவர் என்று நம்பியதால்' மாஸ்ரி ஐந்து மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு முன்னாள் CIA அதிகாரி குறிப்பிட்டார். அவருக்கு உண்மையில் தெரியாது. அவர் ஒரு அனுமானத்தின் பெயரில் தான் கைது செய்தனர்.
மாஸ்ரி விடுதலை செய்யப்படுவதற்கு முன்னரே, 2004 மேயில் ஜேர்மனியின் அமெரிக்க தூதர் டானியல் கோட்ஸ் உள்துறை அமைச்சர் ஒட்டோ ஷில்லியிடம் மாஸ்ரி தவறான முறையில் கைது செய்யப்பட்டார்" என்று கூறினார். "மாஸ்ரி பகிரங்கமாக இதுபற்றி வெளியிட்டாலும் கூட, ஜேர்மன் அரசாங்கத்திடம் சொல்லப்பட்டதை ஜேர்மன் அரசாங்கம் வெளியிடக் கூடாது என்ற ஒரு கோரிக்கையும் விடப்பட்டது" என்று போஸ்ட் எழுதுகிறது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் உட்பட ஜேர்மன் அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு மதிப்பளித்தனர்.
TIME சஞ்சிகையும் இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது. "பகிரங்கமாக அமெரிக்காவின் கண்களில் குத்துகின்ற நாடுகள் கூட பின்னணியில் அமெரிக்காவோடு கைகோர்த்து செயல்படுகின்றன. ஈராக் கொள்கை தொடர்பாக பிரான்சின் எதிர்ப்பிற்கு எந்த விளக்கமும் சுருக்க உரையும் தர வேண்டியதில்லை. அது ஒரு இரகசிய கூட்டு நடவடிக்கை நிலையத்தை CIA உடன் பாரிஸ் நகரில் கூட்டணியினரின் தளம் (Alliance Base) என்றழைக்கப்படும் நிலையத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறது. மற்றும் அந்த அமைப்புடன் உள்ள உறவு "சுதந்திரத்தை நாடும்" கும்பல்களுக்கு வியப்பூட்டுவதாக அமையும்.
Washington Post கட்டுரை வாஷிங்டனுடன் ஐரோப்பிய வல்லரசுகள் உடந்தையாக செயல்பட்டதன் மூலம் புரிந்த பாரிய குற்றங்களை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
அதன் மதிப்பீட்டின் படி CIA உம் மற்ற இதர புலனாய்வு அமைப்புகளும் அவர்களது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் 3,000 மக்களை பிடித்தார்கள். அவர்களில் பலர் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் மற்றும் அவர்கள் மிக அற்பமான சாக்குப் போக்குகள் மூலம் கைது செய்யப்பட்டனர். CIA அப்படிச் சொல்கிறது என்பதைத் தவிர அவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிரான சாட்சியத்தை சோதித்து பார்ப்பதற்கு எந்த அமைப்பும் இல்லை . வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு அதிகாரி Washington Post இடம் கூறியது என்னவென்றால் தவறாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் ஒரு அல்-ஹைடா உறுப்பினருக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கினார் என்பதால் அவரை சுட்டிக்காட்டினர்.
CIA நடவடிக்கையை பயங்கரவாத எதிர்ப்பு நிலையம் (CTC) நடத்தி வருகிறது. Post தந்துள்ள தகவலின் படி வழக்கு அதிகாரிகள், இணை இராணுவத்தினர், ஆய்வாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை கொண்ட கடத்தல் குழு ஆட்களை கடத்துவதையும், ஆட்கள் காணாமல் போவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஒரு நகரத்தின் தெருவிலோ அல்லது ஒரு தொலை தூரத்து மலைக்குன்று பகுதியிலோ அல்லது உள்ளூர் அதிகாரிகள் காத்திருக்கையில் ஒரு விமான நிலையத்தின் ஒதுக்குப்புறத்திலோ யாராவது ஒருவரை எப்படி பிடிப்பது என்பது தான் அவர்களது பணி.
"கடத்தும் குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒரு எளிய ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றுகின்றனர். முகமூடிகள் உட்பட உச்சந்தலையிலிருந்து கால் பாதத்தின் விரல்கள் வரை கறுப்பு உடையால் கைது செய்யப்பட்டவர்களை மூடி அவர்களது கண்களைக் கட்டி புதிதாக பிடிக்கப்பட்டவர்களின் ஆடைகளை வெட்டி அதற்குப் பின்னர் குடல் கழுவும் மருந்தையும், தூக்க மருந்துகளையும் தருவார்கள். கைதிகள் அவர்களது பின்பகுதியில் வைத்துக் கொள்வதற்கு ஒரு துணியையும், ஒரு நாள் பயணத்திற்கு தேவைப்படுகின்ற ஆடையையும் தருவார்கள்.
9/11 க்குப் பின்னர் பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட CIA அதிகாரிகளின் எண்ணிக்கை 300 இலிருந்து 1,200 ஆக நான்கு மடங்கு பெருகிவிட்டது. வெள்ளை மாளிகையோடும் ஜனாதிபதி புஷ்சோடும் நேரடியாக தொடர்பு வைத்திருந்த ஜே.காப்பர் பிளாக் தொடக்கத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நிலைய (CTC) தலைவராக பணியாற்றியவர்.
Post விளக்குகிறது. "9/11 தாக்குதல்களுக்கு ஆறு நாட்களுக்கு பின்னர் புஷ் ஒரு முக்கிய இரகசிய ஜனாதிபதி குறிப்பில் கையெழுத்திட்டார். இதற்கு முன்னர் கண்டிராத அளவில் இரகசிய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அது அதிகாரமளித்தது. அதில் படுபயங்கரமான நடவடிக்கைகளும் மூன்றாவது நாடுகளில் கைதிகளை கடத்துவதும், தவறான தகவல் தரும் பிரசாரங்களும் மற்றம் அல்-ஹைடா எதிரிக்கு எதிராக வலைத்தள தாக்குதல்களும் அட்ஙகியிருந்தன என்பதை நடப்பு மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் பிளாக்கின் அணுகுமுறை சில CIA அதிகாரிகள் நம்பியதைப் போன்று அந்தப் பணியை முடிப்பதற்கு தேவைப்படும் சரியான நடவடிக்கைகளாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...6/Article-1.htm

Print this item

  பலஸ்தீனத் தேர்தலில் கமாஸ் வெற்றி
Posted by: kuruvikal - 01-26-2006, 11:07 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41258000/jpg/_41258456_hamas_ap203body.jpg' border='0' alt='user posted image'>

பலஸ்தீன தேசத்தில் நடந்த தேர்தலில் தீவிரவாதக் கட்சியான கமாஸ் (Hamas), பலஸ்தீன விடுதலை இயக்க (PLO) சார்புடைய ஆளும் தரப்பை தோற்கடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக வரும் செய்திகளை அடுத்து கமாஸை பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ள இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை விழி புதுங்கி நிற்கின்றன..!

கமாஸ் தற்போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அழுத்ததுக்குப் பணிந்து ஆயுதங்களைக் களையாது பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்துவரும் ஒரு பலஸ்தீன சார்பு விடுதலை இயக்கமாகும்..!

இதற்கிடையே கமாஸுடன் தாம் தொடர்புகளை வைக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் அமெரிக்க வால்பிடி ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளன. மேற்குலக சார்பு பலஸ்தீன பிரதமர் தேர்தல் தோல்வியை அடுத்து பதவி விலகுகிறார்..!

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் (EU) போன்றவை எனியாவது போராடும் மக்களின் மனநிலையறியாத பயங்கரவாத பட்டியல் வீண் என்பது குறித்து சிந்திப்பது நல்லது..!

தகவல் மூலம் - பிபிசி.கொம்

Print this item

  மனசாட்சி சொல்லுது..
Posted by: aathipan - 01-26-2006, 09:03 AM - Forum: நகைச்சுவை - Replies (12)

விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா.

அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..

Print this item

  வணக்கம்
Posted by: starvijay - 01-26-2006, 06:26 AM - Forum: அறிமுகம் - Replies (17)

வணக்கம். இன்று முதல் இங்கே எனது பிறப்பு ஆரம்பம்..ஆதரவு தாரீர் அன்பர்களே! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  அப்பிடி போடு..... போடு.....
Posted by: வர்ணன் - 01-26-2006, 04:25 AM - Forum: நகைச்சுவை - Replies (3)

<b>ஆசிரியர்:</b> கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு!

<b>மாணவன்:</b> சரி சார்

<b>ஆசிரியர்:</b> நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil:
----------------------------------------------------
<b>லெக்சர்:</b> என்னப்பா ஸ்டூடண்ட் நீ?
நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :?

<b>ஸ்டூடண்ட்:</b> நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink:
----------------------------------------------------
<b>ஆசிரியர்</b> : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல

"எப்படி சொல்லுறீங்க?"

<b>ஆசிரியர்</b> : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்!
--------------------------------------------------

<b>ஒரு மாணவன்:</b> வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன்னு சொல்லுறியே நீ அவ்ளோ புத்திசாலியா?
[
<b>மற்றவன்:</b> நீ வேற :evil: அவர் சரியா சொல்லி குடுக்காததால எல்லா மாணவர்களும் வெளியில போய்விட்ட பிறகு- வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன் இவன் ஒருத்தன் தான்னு சொன்னன்! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--------------------------------------------------
<b>ஆசிரியர்:</b> ரெளடியோட பையன ஸ்கூல்ல சேர்த்தது தப்பா போச்சு! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

"ஏன்?"

<b>ஆசிரியர்:</b> தலையை சீவிக்கிட்டு வாடான்னா- யார் தலையை என்கிறான்! :?
----------------------------------------------------
"கள்ளநோட்டு அடிச்சதுக்கான தண்டனையை இரட்டிப்பாக்கிட்டாங்களா? ஏன்? "

"கோர்ட்ல போட்ட ஃபைன் 10000 தயும் கள்ள நோட்டிலயே கட்டினாராம்"
---------------------------------------------
<b>வக்கீல்:</b> மை லார்ட்.... என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் -நேர்மையானவர்-யாரிடமும் கொடுமையாக நடந்து கொள்வதை வெறுப்பவர்-எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில்- என் கட்சிக்காரர் சிறந்தவர்...

<b>கட்சிக்காரர்</b>: (சத்தமாக) யோவ் வக்கீல் என்ன விளையாடுறியா? காசு வாங்கிட்டு என்ன பத்தி சொல்லுய்யானு சொன்னா வேற யாரோ பத்தி சொல்லிகிட்டு இருக்கியே தொலைசிடுவன் தொலைச்சு :evil:
----------------------------------------------------
<b>நீதிபதி:</b> திரும்ப திரும்ப ஒரே தப்பை செஞ்சிட்டுவந்து இப்பிடி கோர்ட்ல நிக்கிறியே உனக்கு வெக்கமாயிலயா?
<b>திருடன்:</b> திரும்ப திரும்ப என்னை நீங்களே விசாரிக்கிறீங்களே- உங்களூக்கு வெக்கமா இல்லையா எஜமான்?
------------------------------------------------
<b>ஒரு ஊழல் வழக்கில்!</b>

<b>வக்கீல் 1 :</b> அந்த ஊழல் வழக்கில் சமரசம் பேச ரூபா 10000 வாங்கினீங்களா?

<b>வக்கீல்-2 </b> (இரண்டு மூன்றுமுறை கேட்டபோது கூட காதில விழாததுபோல் பேசாம இருக்கிறார். உடனே நீதிபதி பேசுகிறார்)

<b>நீதிபதி:</b> கேள்விக்கு பதில் சொல்லணும் தெரியுமா?

<b>வக்கீல்-2 </b>: தெரியும்- ஆனா அவர் கேள்விய உங்ககிட்ட கேட்டதா நினைச்சன்! :roll:
----------------------------------------------------
நன்றி: வெப்-உலகம்[/b]

Print this item

  வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன
Posted by: தூயா - 01-26-2006, 04:25 AM - Forum: நூற்றோட்டம் - Replies (3)

[size=20]<b>வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன்</b>

<img src='http://www.sankathi.net/ads/Capt_Vaamakanth.jpg' border='0' alt='user posted image'>

Source :Sankathi

Print this item