விளையாட்டுத் திடல்

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான உலக சாதனையை முறியடித்தார் லீதுவேனியாவின் அலெக்னா

1 month 4 weeks ago
17 APR, 2024 | 05:42 PM
image

(நெவில் அன்தனி)

ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார்.

முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது.

இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.

ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார்.

முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.

பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும். 

எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது.

செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும்.

https://www.virakesari.lk/article/181320

"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"

1 month 4 weeks ago
"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"
 
 
சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.
 
சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.
 
மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .
 
"தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "
 
என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை
 
‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’
 
என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,
 
‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’
 
என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.
 
பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை
 
'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',
 
அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.
 
பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்
 
"நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.
 
"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே".
[ஐங்குறுநூறு 124]
 
முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.
 
"தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி"
[கலித்தொகை 59]
 
இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,
 
‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”
 
என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.
 
பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
 
ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,
 
"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று".
 
[குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்

2 months ago

Published By: VISHNU  14 APR, 2024 | 10:18 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த்  பெயரிடப்பட்டுள்ளார்.

1404_chaarith_asalanka_vice_captain.png

இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

1404_wanindu_hasarnga_captain.png

அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

1404_vijayakanth_viyaskanth...png

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் சில வீரர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்துடன் குழாத்தில் இணைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை முன்னோடி குழாம்

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார, லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசாய், துனித் வெல்லாலகே, விஜயகாந்த் வியாஸ்காந்த்.

https://www.virakesari.lk/article/181078

2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் - மத்தியஸ்தர் இரேஸ்மஸ்

2 months 1 week ago
'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ்
05 APR, 2024 | 06:20 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த இங்கிலாந்து உலக சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த இறுதிப் போட்டியில் மராயஸ் இரேஸ்மஸ், குமார் தர்மசேன ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர்.

3__marais_erasmus_and_kumar_dharmasena.p

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக்கு கடைசி ஒவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ட்ரென்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசினார் பென் ஸ்டோக்ஸ்.

அடுத்த பந்தை பென் ஸ்டோக்ஸ் விசுக்கி அடிக்க மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசை திரும்பிய பந்து எல்லைக் கோட்டை கடந்து சென்றது.

அவ்வேளையில் ஸ்கொயார் லெக் மத்தியஸ்தராக இருந்த இரேஸ்மஸ், தலைமை மத்தியஸ்தராக இருந்த குமார் தர்மசேனவிடம் 6 ஓட்டங்கள் என சைகை செய்தார். இதனை அடுத்து எண்ணிக்கை பதிவாளர்களை நோக்கி 6 ஓட்டங்கள் என தர்மசேன கைகை செய்தார்.

பென் ஸ்டோக்ஸும் ஆதில் ராஷித்தும் 2 ஓட்டங்களை எடுத்ததாகவும் எறிபந்தினால் 4 ஓட்டங்கள் கிடைத்ததாகவும் அப்போது கருதப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களுக்கு பதிலாக 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது தவறு என இப்போது இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பதால் 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவரது 'காலம் கடந்த ஞானம்' தெரிவிக்கிறது.

மாட்டின் கப்டில் பந்தை எறிந்தபோது பென் ஸ்டோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் 2ஆவது   ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பது சலன அசைவுகளில் நிரூபணமாகியது.

இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிகைக்கு அண்மையில் இரேஸ்மஸ் தெரிவித்திருந்ததாவது:

''மறுநாள் காலை நான் காலை வுக்கு செல்வதற்காக எனது அறைக் கதவைத் திறந்த அதேநேரம் குமார் தர்மசேனவும் அவரது அறைக் கதவைத் திறந்தார். அப்போது அவர் 'நாங்கள் பாரிய தவறு இழைத்தோம் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' என என்னிடம் கூறினார். அப்போதுதான் நான் அதை அறிந்தேன். ஆனால், மைதானத்தில் நாங்கள் வெறுமனே ஆறு என எங்களுக்குள்ளே கூறிக்கொண்டோம். ஆறு, ஆறு, அது ஆறு என கூறினோமே தவிர துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்களா என்பதை கவனிக்கவில்லை. அவ்வளவுதான்' என்றார்.

இந்தத் தவறுக்காக மட்டும் அவர் வருந்தவில்லை. இன்னும் ஒரு தவறை 'தவறுதலாக' செய்திருந்தார் இரேஸ்மஸ்.

நியூஸிலாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரொஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார். பந்துவீச்சுப் பகுதி விளிம்பில் (wide of the crease) இருந்து மார்க் வூட் வீசிய பந்து ரொஸ் டெஸ்லரின் முழங்காலுக்கு மேல் பட்டது. களத்தடுப்பில் எல்.பி.டபிள்யூ.வுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் ரொஸ் டெய்லர் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பிட்டார். நியஸிலாந்து தனது மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவுசெய்திருந்ததால் ரொஸ் டெய்லர் மீளாய்வு செய்ய முடியாதவராக களம் விட்டகன்றார். 2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வெற்றிகர மீளாய்வுக்கான வாய்ப்பே அனுமதிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக இரேஸ்மஸ் என்ன கூறினார் தெரியுமா?

'அது சற்று உயர்வாக இருந்தது. ஆனால் அவர்கள் மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவு செய்திருந்தார்கள். ஏழு வாரங்கள் நீடித்த உலகக் கிண்ணப் போட்டியில் நான் இழைத்த ஒரே ஒரு தவறு அதுதான். அதனால் நான் பின்னர் மிகுந்த கவலை அடைந்தேன். ஏனெனில் அதனை நான் சரியாக தீர்மானித்திருந்தால் தவறு இழைக்காதவனாக உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருப்பேன். மேலும் எனது அந்தத் தீர்ப்பு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் சிறந்த வீரர்களில் அவரும் (ரொஸ் டெய்லர்) ஒருவர்' என இரேஸ்மஸ் குறிப்பிட்டார்.

இந்த மத்தியஸ்தர்தான் (இரேஸ்மஸ்) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு 'டைம்ட் அவுட்' தீர்ப்பு வழங்கியவர் ஆவார்.

அவரேதான் இப்போது 'டைம்ட் அவுட்' ஆன நிலையில் 2019 உலகக் கிண்ண தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோன்று ஏஞ்சலோ மெத்யூஸின் டைம்ட் அவுட் ஆட்டம் இழப்பு தொடர்பாக இரேஸ்மஸ் காலம் கடந்து தவறை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

ஆனால், குமார் தர்மசேன அப்போது என்ன கூறியிருந்தார் தெரியுமா?

உலகக் கிண்ணப் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் 'எனது தீர்மானம் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை'  என  குறிப்பிட்டிருந்தார்.

'போட்டிக்கான சகல மத்தியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது' என அவர் கூறியிருந்தார்.

2__kumar_dharmasena.png

https://www.virakesari.lk/article/180545

2ஆவது ரி20 ஹெட்-ட்ரிக் பதிவுசெய்து வரலாறு படைத்தார் பரிஹா; ராமநாயக்கவின் ஆலோசனைகளே சாதனைக்கு காரணமாம்

2 months 2 weeks ago

Published By: VISHNU   02 APR, 2024 | 10:06 PM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிர்பூர், ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை பரிஹா ட்ரிஸ்னா, ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார்.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். அதன் மூலம் மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்-ட்ரிக்குகளைப் பதிவுசெய்த முதலாவது வேகப்பந்துவீச்ச வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பரிஹா படைத்தார்.

0204_fariha_trisna_2nd_t20_hat-trick.png

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பரிஹா ட்ரிஸ்னா முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்திருந்தார்.

அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் கடைசி 3 பந்துகளிலேயே ஹெட்-ட்ரிக்கை பரிஹா ட்ரிஸ்னா பதிவுசெய்தார்.

எலிஸ் பெரி, சொஃபி மொலினொக்ஸ், பெத் மூனி ஆகியோரையே கடைசி 3 பந்துகளில் பரிஹா ஆட்டம் இழக்கச் செய்தார்.

உபாதை காரணமாக சுமார் 6 மாதங்கள் சிகிச்சையுடன் ஒய்வு பெற்றுவந்த பரிஹா, தனது மீள்வருகையில் ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து அரங்கில் இருந்த சிறுதொகை இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

கடந்த அக்டோபர் மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக  பரிஹா  சுமார் 6 மாதங்களாக போட்டிகளில் பங்குபற்றாதிருந்தார்.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சம்பக்க ராமநாயக்க வழங்கிய   ஆலோசனைகளின் பலனாக மீண்டு வந்து திறமையை சாதிக்கக்கூடியதாக இருந்ததென பரிஹா குறிப்பிட்டார்.

'உபாதையிலிருந்து மீள வேண்டும் என்பதே எனது முதலாவது திட்டமாக இருந்தது. சம்பக்க ராமநாயக்கவின் ஆலோசனையுடன் புனர்வாழ்வு செயற்பாடுகள் சிலவற்றை பின்பற்றி வந்தேன். அவரால் தான் நான் இவ்வளவு விரைவாக குணமடைந்து மீண்டும் விளையாடுகிறேன்' என்றார்.

எனினும் இன்றைய போட்டியில் பங்களாதேஷை 58 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.  

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைக் குவித்தது.

ஜோஜியா வெயாஹம் 57 ஓட்டங்களையும் க்றேஸ் ஹெரிஸ் 47 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 29 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஜோஜியாவும் க்றேஸும் 2ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்னர்.

பந்துவீச்சில் பரிஹா ட்ரிஸ்னா 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பஹிமா காத்துன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தடுப்பாட்டத்தில் டிலாரா அக்தர் (27), ஷொர்ணா அக்தர் (21) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி மொலினொக்ஸ் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷ்லி காட்னர் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/180280

கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை

2 months 2 weeks ago
59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை

Published By: DIGITAL DESK 7   01 APR, 2024 | 04:16 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

5.jpg

தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

சாவக்கச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021ல் இராணுவத்தில் இணைந்தார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாயாக பணியாற்றுகிறார்.

1_a_puvitharan_pole_vault_national__reco

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

2_4_x_200_mens_relay_national_record.jpg

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம், 29.93 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் இந்தப் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர்.

புதிய தேசிய சாதனை படைத்த 4 x 200 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் பொம்படியர் ஜீ.டி.கே.கே. பபாசர நிக்கு, பொம்படியர் பீ.எம.;பீ.எல். கொடிகார, லான்ஸ் பொம்படியர் ஏ.எஸ்.எம். சபான் மற்றும் பணி நிலை சார்ஜன்ட் எஸ்.  அருண  தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர்.

இதனைவிட ஆண்களுக்கான 100 மீ., 200 மீ., 400  மீ.,  3000 மீ. தடைதாண்டல், 4 x 400 மீ. தொடர் ஓட்டம், பெண்களுக்கான 400 மீ., 10000 மீ., 4 x 100 மீ. தொடர் ஓட்டம், 4 x 800 மீ. தொடர் ஓட்டம், 4 x 1500 மீ. தொடர் ஓட்டம், பத்து அம்ச நிகழ்ச்சி ஆகிய போட்டிகளில் இராணுவ வீர வீராங்கனைகள் மொத்தமாக 11 புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டினர்.

8_a.jpg

4_best_athlete_women_nadeesha_ramanayakaபோட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீரராக இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜன் எஸ். அருண தர்ஷனவும் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதிஷா ராமநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு விருதுகளைப் பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை சூடியதுடன் இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஒட்டுமொத்த சம்பியனானதுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

9.jpg

https://www.virakesari.lk/article/180153

Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

3 months ago
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

 

யாழில் ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயது மூதாட்டி!

3 months ago
news-6.jpg

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.

போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

news-02-9.jpg

https://thinakkural.lk/article/295984

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்

3 months ago
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
12 MAR, 2024 | 11:47 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன.

இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. 

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ghgj.gif

சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால்,  9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

இப்போட்டிக்கு முன்னதாக நடை‍பெற்ற  அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

fhgd.gif

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

https://www.virakesari.lk/article/178508

700 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை!

3 months 1 week ago
james-anderson.jpg

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை குறித்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் 173 ரங்களை விட்டுக் கொடுத்த ஷோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் அண்டசன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 700ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஜேம்ஸ் எண்டர்சனின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295064

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் எனும் சாதனைக்கும் உரியவராகிறார்.

james.jpg

james1.jpg

ஜேம்ஸ் அண்டர்சனின் பந்துவீச்சு பெறுதியின் அட்டவணை.

அஸ்வினின் 100வது டெஸ்ட்

3 months 1 week ago
அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்?
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

“ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.”

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதனையான செயல்தான். பேட்டராக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் 100 போட்டிகளிலும் திறமையில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினால்தான் தன் இருப்பை அணியில் வெளிப்படுத்த முடியும்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது பேட் செய்த எத்தனையோ வீரர்கள் 50 டெஸ்ட் போட்டிகளைக்கூட கடக்க முடியாமல் ஓய்வை அறிவித்துச் சென்ற கதைகள் உண்டு. ஆனால், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டிப் பிடிக்க, முதல் போட்டியில் அறிமுகமாகும்போது இருந்த உற்சாகத்தை 100வது போட்டிவரை கடத்தி வந்தால்தான் இத்தகைய மைல்கல்லை அடைய முடியும்.

 

கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்டர் கோலின் கோவ்ட்ரே இந்த மைல்கல்லை முதலில் எட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று உலகளவில் பல வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துவிட்டார்.

தரம்சாலாவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவில் இதுவரை 313 டெஸ்ட் வீரர்கள் வந்துள்ள நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதுவரை அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 93.21 , எகானமி ரேட் 2.79 , ஸ்ட்ரைக் ரேட் 51.3 என அஸ்வின் வைத்துள்ளார்.

 
உள்நாட்டில் சாதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 விக்கெட்டுகளில் 358 விக்கெட்டுகள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. இந்திய அணியைச் சேர்ந்த இதுவரை எந்த பந்துவீச்சாளரும் எட்ட முடியாத உயரத்தை அஸ்வின் எட்டியுள்ளார்.

அதாவது ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்நாட்டில்(350) விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங்(265), கபில் தேவ்(219) விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அஸ்வின் 350 விக்கெட்டுகளையும் கடந்து பயணித்து வருகிறார்.

அஸ்வினின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டால் சேனா நாடுகளுக்கு எதிராக சுமாராகவும், ஆசிய நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாகவும் வைத்துள்ளார்.

சேனா(SENA) நாடுகளில் சறுக்கல்

வேகப்பந்துவீச்ச மைதானங்கள் அதிகம் இருக்கும் சேனா நாடுகளில் சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எளிதான காரியம் அல்ல. அங்கு அஸ்வின் தனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினாலும், சேனா நாடு அணிகளுக்கு எதிராக பெரிதாக விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சேனா நாடுகளின் மைதானங்களில் நடந்த போட்டிகளிலும் அஸ்வினின் 71 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, சராசரி 39.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 83.7 ஆகவும் வைத்துள்ளார்.

அதுவே, கரீபியன் நாடுகளின் மைதானங்களில் அஸ்வின் சராசரி 19.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.4 ஆகவும் இருக்கிறது. இலங்கையில் அஸ்வினின் சராசரி 21.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.1 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி 21.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 46.6 ஆகவும் இருக்கிறது.

வேகப்பந்துவீச்சு மைதானங்களாகப் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 
இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது உண்மைதான். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சௌத்பா எனப்படும் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 254(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 டெஸ்ட் விக்கெட்டுகளில் 254 விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 49.7% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. ஆனால், அஸ்வின் இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் உலகில் திகழ்ந்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லேயான் இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை இரையாக்கியுள்ளார். அடுத்தாற்போல் டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டார் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என இடதுகை பேட்டர்கள் பெயர் பட்டியல் நீள்கிறது. சர்வதேச அளவிலான இடதுகை பேட்டர்கள் 15 பேரில் ஆன்டர்சன், நேதன் லேயான், மோர்க்கல் ஆகியோர் மட்டுமே டெய்லெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் பந்துவீச வருகிறார் என்றாலே இடதுகை பேட்டர்களுக்கு தொடை நடுங்கும் என்று கூறலாம்.

 
ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பு
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 பந்துவீச்சாளர்கள் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். ஒரு பந்துவீச்சாளரின் ஸ்ட்ரைக் ரேட்தான், அவர் எத்தகைய திறமையான பந்துவீச்சாளர் என்பதை அறிய முடியும். பொதுவாக ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்களைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வைத்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களில் சிறப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். முதல் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். இது முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் ஸ்ட்ரைக் ரேட்டைவிட அதிகம்.

வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்ன் 54.7 ஸ்ட்ரைக் ரேட்டையும், வேகப்பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின் 45.5 ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக வைத்துள்ளனர்.

அஸ்வின் இவர்களைவிட சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 62.1 ஆக இருக்கிறது. அதாவது 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துகிறார்.

 
உள்நாட்டில் தவிர்க்க முடியாத வீரர்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூறு டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் விளையாடுகிறார் என்றால், அவரின் ‘டிராக் ரெக்கார்டு’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு டெஸ்ட் போட்டி அல்லது வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் என்றாலே தானாகவே ‘ப்ளேயிங் லெவனில்’ இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத வீரராக அமைய வேண்டும்.

அந்த வகையில் அஸ்வின் இந்திய அணிக்குள் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் போட்டி என்றாலே தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அஸ்வின் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டும் அல்ல, எப்போதுமே இந்திய அணியின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.

அதற்கு சேனா(SENA) நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளும், சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் ஆசிய நாடுகளுக்கு எதிராக அஸ்வினின் முத்தாய்ப்பான விக்கெட்டுகளுமே சாட்சி.

ஆனால், இந்தியாவுக்கு வரும் சேனா நாடு அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினால், சேனா நாடுகளில் நடந்த போட்டிகளில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் அவர் திறமையின் மீது தொக்கி நிற்கும் கேள்வி.

நுட்பமான பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களான குலாம் அகமது முதல் எர்ரபள்ளி பிரசன்னா வரை, ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராகவன் முதல் ஹர்பஜன் சிங் வரை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டில் நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், டாஸ் செய்வது, நக்குல் பால் என ஒரு ஒவரில் 6 பந்துகளையும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வீசக்கூடிய திறமை படைத்தவர், அஸ்வின் என்று கூற முடியும்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனித்து நிற்கக் காரணம், அவரின் பந்துவீச்சில் செய்யும் பரிசோதனை முயற்சி, தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சைச் சிறப்பாக மாற்றச் செய்யும் முயற்சி, போராட்ட குணம், ஒவ்வொரு பந்திலும் விக்கெட் வீழ்த்த வேண்டும், பேட்டரை ஷாட் அடிக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நுட்பத்துடன் பந்துவீசும் உத்வேகம்தான் காரணம்.

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டும் அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சேனா நாடுகளின் ஆடுகளங்களில் பெரிதாக அஸ்வினால் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அஸ்வினுக்கு குருநாதராகக் கருதப்படும் அனில் கும்ப்ளே சேனா நாடுகளிலும் தனது பந்துவீச்சால் கோலோச்சியுள்ளார் என்பது அவரின் பந்துவீச்சு தரத்துக்குச் சான்று.

அஸ்வின் பந்துவீச்சு என்பது கடினமான, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மெல்போர்ன், வான்டரர்ஸ், சிட்னி, நியூசிலாந்து மைதானங்களுக்கு சரிவராது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மைதானங்களில்கூட நேதன் லேயான், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே போன்ற பந்துவீச்சாளர்கள் பந்தை பம்பரம்போல் சுழலவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அஸ்வின் திறமையான பந்துவீச்சாளர்தான், ஆனால் சிறந்த பந்துவீச்சாளரா என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கும் கேள்வி.

"தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தமிழர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது போன்றவை என்றென்றும் பெருமைக்குரியது. ஆனால், இவை அனைத்தும் சிறந்த பந்துவீச்சாளராக அவரை உருவகப்படுத்திவிடுமா?" என்று விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளரான ஆர். முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
பெருமைக்குரிய விஷயம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அவர் கூறுகையில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. சிவராமகிருஷ்ணன், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் எனப் பல ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடினாலும் யாரும் 100 டெஸ்ட் விளையாடியதில்லை. இதை அஸ்வின் செய்திருப்பது மகத்தான சாதனை.

இந்திய ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் இல்லாமல் இந்திய அணி வெல்வது என்பதை கடந்த காலங்களில் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பந்தை டர்ன் செய்வதில் சிறந்த பந்துவீச்சாளர் என்று அஸ்வினை குறிப்பிட முடியாது," என்கிறார் அவர்.

முரளிதரன், நேதன் லேயன் போன்று பந்தை டர்ன் செய்யும் வீரர் அஸ்வின் என்று கூற முடியாது எனும் ஆர். முத்துக்குமார் "அரவுண்ட் தி விக்கெட்டில் அஸ்வின் பந்துவீசி வலது கை பேட்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறந்தவர்தான். ஆனால், அஸ்வினிடம் சிறந்த விஷயம் என்னவென்றால், கற்றுக்கொண்டே இருப்பார், புதிது புதிதாக நுட்பங்களைப் பயன்படுத்துவார். நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வினால், முறையான ஆஃப் ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை," என்றார்.

மேலும் அவர், "ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் அந்த ஆஃப் ஸ்பின்னை எந்த அளவுக்கு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும் என்பதில் இருக்கிறது. அனில் கும்ப்ளே மாதிரி துல்லியம், லைன் லென்த்தில் பந்தைச் சிதறவிடாமல் அஸ்வின் பந்துவீசுவது சிறப்பு. இதனால், அஸ்வின் பந்துவீச்சை பேட்டர் கவனமாகக் கையாள வேண்டும், சிறிது கவனக் குறைவாக விளையாடினால்கூட பேட்டர் விக்கெட்டை இழக்க நேரிடும். இதுதான் அஸ்வினின் சிறப்பு,” எனத் தெரிவித்தார்.

பந்தை டர்ன் செய்யாமலே சாதிக்கும் வீரராக அஸ்வின் இருப்பதுதான் அவருக்குரிய தனிச்சிறப்பு என்று முத்துக்குமார் தெரிவித்தார். அவர் அதுகுறித்துக் கூறுகையில், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிம்மசொப்பனம்தான் என்பதை மறுக்கவில்லை. இடதுகை பேட்டர்களை ஆட்டமிழக்க வைக்க லேசான டர்ன் பந்தில் இருந்தால் போதும், அதைத்தான் அஸ்வின் செய்கிறார். மற்ற வகையில் நல்ல டர்ன் செய்யக்கூடிய பந்துகளை வீசவில்லை,” எனத் தெரிவித்தார்.

 
சேனா நாடுகளில் சோதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ஆடுகளங்களின் உதவியுடன்தான் 500 விக்கெட்டுகளை அஸ்வினால் தொட முடிந்தது என்று முத்துக்குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஆடுகளின் தன்மையால்தான் அஸ்வின் 350 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அஸ்வின் சாதனைக்கு இந்திய ஆடுகளங்கள் உதவியுள்ளன. ஆனால், சேனா நாடுகளில் சென்று அஸ்வினால் பெரிதாக விக்கெட்டுகளை ஏன் வீழ்த்தமுடியவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

கும்ப்ளே முதலில் இந்திய ஆடுகளங்களில் மட்டும்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மெல்போர்னில் முதல் டெஸ்ட் முதல் நாளிலேயே கும்ப்ளே 5 விக்கெட்டை வீழ்த்தினார். கும்ப்ளே பந்துவீச்சைப் பார்த்து ஷேன் வார்னே பாராட்டினார்.

ஆனால், "அஸ்வின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகாமல் இருப்பதால்தான் அவரால் சேனா நாடுகளின் அணிகளுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை. அஸ்வின் தன்னுடைய ஆஃப் ஸ்பின்னை வளர்த்தெடுக்காமல், ஓவருக்கு 6 பந்துகளையும் பலவிதமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தினார். அஸ்வின் நல்ல வீரர். ஆனால், சிறந்த வீரர் என்று ஏற்க முடியாது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/crgv609x1l3o

யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.

3 months 1 week ago
DSC_2222-750x375.jpg ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்தார் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை

3 months 1 week ago

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2 ஆவது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

Capture-9.jpg

இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.

இதற்கு முன்னதாக 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 63 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

https://thinakkural.lk/article/294615

பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை!

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 11:01 PM

image

(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.


குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன இலங்கை வெற்றி அடைவதற்கு உதவின.

குறிப்பாக தசுன் ஷானக்க கடைசி ஓவரை சிறப்பாக வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை அணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.


மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (4), 37 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் (19) ஆகிய இருவரும் களம் விட்டகழ இலங்கை ஆட்டம் கண்டது.


ஆனால், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.


குசல் மெண்டிஸ் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.


அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.


சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 61 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 21 பந்தகளில் 6 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.


207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.


ஆனால், 17 மாதங்களின் பின்னர் ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹ்முதுல்லாவும் தனது 5ஆவது ரி20 போட்டியில் விளையாடும் ஜாக்கர் அலியும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.


மஹ்முதுல்லா 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.


அவர் ஆட்டம் இழந்தபின்னர் ஜாக்கர் அலி, மஹேதி ஹசன் (16) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். (180 - 6 விக்.)கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் பங்களாதேஷுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.


ஆனால் அவர் பந்துவீச்சு எல்லையில் இருந்ததால் இலங்கைக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
கடைசி ஓவரை வீசிய தசுன் ஷானக்க முதல் பந்தில் ரிஷாத் ஹொசெய்னின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.


ஆனால், தசுன் ஷானக்கவின் அடுத்த பந்து வைடானது. 2ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை ஷானக்க கொடுக்க, ஜாக்கர் அலி துடுப்பாட்ட எல்லைக்கு வந்தார். ஆனால், அவரது விக்கெட்டை அடுத்த பந்தில் தசுன் ஷானக்க கைப்பற்றினார். ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் புகுந்த ஷொரிபுல் இஸ்லாம் பவண்டறி ஒன்றை விளாசினார்.
இந் நிலையில் கடைசி 2 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு ஒரு சிக்ஸ் தேவைப்பட்டது.

ஆனால் தசுன் ஷானக்க அடுத்து இரண்டு பந்துகளையும் சரியான இலக்குகளில் வீசி லெக் பை ஒன்றையும் ஒரு ஓட்டத்தையும் மாத்திரம் கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


ஆட்டநாயகன்: சரித் அசலன்க

https://www.virakesari.lk/article/177913

நியூஸிலாந்து - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்

3 months 2 weeks ago
ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல் 174 : நியூஸிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள்
01 MAR, 2024 | 04:18 PM
image

(நெவில் அன்தனி)

வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் கெமரன் க்றீன் தனித்து ஆட்டம் இழக்காமல் 174 ஓட்டங்களைக் குவிக்க, நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 116 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த இணைப்பாட்டமானது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக 2004ஆம் ஆண்டு க்ளென் மெக்ராவும் ஜேசன் கிலெஸ்பியும் 10ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 114 ஓட்டங்களே முன்னைய சாதனையாக இருந்தது.

மேலும் கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் பகிர்ந்த இணைப்பாட்டமே அவுஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

போட்டியின் முதாலாம் நாளான வியாழக்கிழமை (29) மொத்த எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர்.

கடைசி விக்கெட் இணைப்பாட்டத்தில் ஹேஸ்ல்வூடின் பங்களிப்பு 22 ஓட்டங்களாகும்.

கெமரன் க்றீன் 6 மணித்தியாலங்கள, 36 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 275 பந்தகளை எதிர்கொண்டு 174 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 41 உதிரிகள் அமைந்தது.

மிச்செல் மாஷ் 40 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கொட் குகெலின் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில்லியம் ஓ'றூக் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டொம் லெதம் (5), கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்த்ரா (0), டெரில் மிச்செல் (11), வில் யங் (9) ஆகிய 5 முன்வரிசை வீரர்களும் ஆஸி.யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். (29 - 5 விக்.)

எனினும் டொம் ப்ளெண்டலும் க்ளென் பிலிப்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

டொம் ப்ளெண்டல் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஸ்கொட் குகேலின் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (113 - 7 விக்.)

இந் நிலையில் க்ளென் பிலிப்ஸ், மெட் ஹென்றி ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர்.

எனினும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது  க்ளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கடைசியாக ஆட்டம் இழந்த மெட் ஹென்றி 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நேதன் லயன் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க 217 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

0103_cameren_green_aus_vs_nz.png

0103_matt_henry_nz_vs_aus.png

0103_josh_hazlewood_aus_vs_nz.png

https://www.virakesari.lk/article/177689

அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை - நமிபியா வீரர் ஈட்டன்

3 months 2 weeks ago
நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை
27 FEB, 2024 | 04:54 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில்  லொஃப்டி ஈட்டன்  33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.

நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும்.

சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து முன்னைய  உலக   சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

கடந்த 32 ரி20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் சாதனை படைத்து ஹீரோவானார்.

ஆரம்ப வீரர் மாலன் க்ருஜர் 48 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அப் போட்டியில் நமிபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ரி20 அதிவேக சதங்கள் (முதல் 5 வீரர்கள்)

லொஃப்டி ஈட்டன் (நமிபியா) - 33  பந்துகளில்

குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகளில்

டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா), ரோஹித் ஷர்மா (இந்தியா), இலங்கை வம்சாவளி சுதேஷ் விக்ரமசேகர (செக் குடியரசு) - மூவரும் 35 பந்துகளில் சதம்.

https://www.virakesari.lk/article/177436

Checked
Mon, 06/17/2024 - 10:19
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed