Aggregator

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 6 days ago
பின்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் பூச்சிய‌த்தில் அவுட் ஆகின‌தால் தோல்வி....................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் நிதான‌மாக‌ நின்று விளையாடுவார் , அவ‌ரை விளையாட‌ விட்டு இருக்க‌னும் , பெடிய‌ன் ப‌ந்தும் போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்............................

மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்

1 week 6 days ago
Mossad Operations: போலியாக Resort; பகலில் ஹோட்டல் ஊழியர்கள் வேஷம் ; மொசாத் செய்தது என்ன? இஸ்ரேல் இரான் இடையேயான மோதலில், தலைநகர் டெஹ்ரான் உட்பட இரானின் முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாத் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் மொசாத்தின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே பொதுவெளியில் பேசுகிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாத் நிகழ்த்திய முக்கிய ‘ஆப்ரேஷன்கள்’ என்ன? அதனின் வெற்றி, தோல்வ் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது - அருட்தந்தை மா.சத்திவேல்

1 week 6 days ago
24 JUN, 2025 | 05:43 PM ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது. பிரஜைகளுக்கும் விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சினை வரும்" என அண்மையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அவரது அரசாங்கத்தின் நிலைப்பாடுமாக மட்டும் கணிக்க முடியாது. அதனை சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் என்று தமிழர்களை எச்சரிக்கும் தொனியாகவே நாம் கொள்ளலாம். அது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் சிங்கள பௌத்தத்தை கவசமாகக் கொண்டு தமிழர் தேசத்தில் முன்னெடுக்கும் சட்டவிரோத சமய ஆக்கிரமிப்புகளுக்கு திறந்த அனுமதி பத்திரமாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும். இதுவா தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணம்? என இன நல்லிணக்கத்தையும் அரசியல் நீதியையும் விரும்பும் மக்கள் அமைப்புகள் தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தல் வேண்டும். தையிட்டியில் அரசியல் நோக்கம் கொண்டு அரச பயங்கரவாத இராணுவத்தால் சட்ட விரோத விகாரையினை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் துணையோடு வெற்றி அடையாளமாகவே கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் எனக் கூறி ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது. தற்போதைய ஜனாதிபதி நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தை விரும்பினால் முதலில் நாட்டின் நடைமுறை சட்டங்களை மீறி தமிழர்களின் சுமுக வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் நடந்து முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். "விகாரைப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" எனக் கூறும் ஜனாதிபதி சிங்கள பௌத்த அரசியலை மையப்படுத்தி அவ்விகாரை பிரதேசத்தில் வேறெந்த கட்டடங்களோ அல்லது சிங்கள குடியேற்றங்களோ உருவாக்க மாட்டோம் என உறுதி கூறாது தவிர்த்தது ஏன்? அப்பிரதேசத்தில் தமிழர்களின் வாழ்விற்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எத்தனையும் செய்ய மாட்டோம் என உறுதி கூறாதது ஏன்? அதேபோன்று மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இறக்குமதி செய்யப்படும் சிங்கள பௌத்தர்களை குறித்து வாய் திறக்காது ஏன்? கடந்த கால நாட்டின் தலைவர்களைப் போலவே தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் பங்கேற்று சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்தும் அரசியலை முன்வைத்து தமிழர்களை குற்றவாளிகளாக்கி அரசியல் கொலைக்கு உட்படுத்த முனைவது நாட்டின் எதிர்கால நலனையே பாதிக்கும். தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்படும் சமூக புதைகுழிகள் இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ளதைப் போன்று சிங்கள பௌத்த தமிழின அழிப்புக்கு சாட்சியாக தையிட்டி விகாரை எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் வருகையோடு இடம்பெறும் “அணையா விளக்கு” போராட்டம் இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் தேசம் என்றும் விரிவடைய வேண்டும். அதேபோன்று சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் பௌர்ணமி போராட்டமும் மக்கள் மயமாக வேண்டும். அதுவே தமிழர் தாயக அரசியலை நோக்கி மக்கள் மீள் எழ வழி சமைக்கும் எனலாம். அதிகார கதிரைகளுக்குள் அரசியலை தேடிக்கொண்டிருக்கும் சக்திகள் மக்கள் அரசியலை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல அணையா விளக்கு போராட்டமும், பௌர்ணமி போராட்டமும் விடுக்கும் அழைப்பை ஏற்காவிடின் அதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218355

ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது - அருட்தந்தை மா.சத்திவேல்

1 week 6 days ago

24 JUN, 2025 | 05:43 PM

image

ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது. பிரஜைகளுக்கும் விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சினை வரும்" என அண்மையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அவரது அரசாங்கத்தின் நிலைப்பாடுமாக மட்டும் கணிக்க முடியாது. அதனை சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் என்று தமிழர்களை எச்சரிக்கும் தொனியாகவே நாம் கொள்ளலாம்.

அது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் சிங்கள பௌத்தத்தை கவசமாகக் கொண்டு தமிழர் தேசத்தில் முன்னெடுக்கும் சட்டவிரோத சமய ஆக்கிரமிப்புகளுக்கு திறந்த அனுமதி பத்திரமாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும். இதுவா தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணம்? என இன நல்லிணக்கத்தையும் அரசியல் நீதியையும் விரும்பும் மக்கள் அமைப்புகள் தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தல் வேண்டும்.

தையிட்டியில் அரசியல் நோக்கம் கொண்டு அரச பயங்கரவாத இராணுவத்தால் சட்ட விரோத விகாரையினை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் துணையோடு வெற்றி அடையாளமாகவே கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் எனக் கூறி ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது.

தற்போதைய ஜனாதிபதி நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தை விரும்பினால் முதலில் நாட்டின்  நடைமுறை சட்டங்களை மீறி தமிழர்களின் சுமுக வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் நடந்து முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

"விகாரைப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" எனக் கூறும் ஜனாதிபதி சிங்கள பௌத்த அரசியலை மையப்படுத்தி அவ்விகாரை பிரதேசத்தில் வேறெந்த கட்டடங்களோ அல்லது சிங்கள குடியேற்றங்களோ உருவாக்க மாட்டோம் என உறுதி கூறாது தவிர்த்தது ஏன்? அப்பிரதேசத்தில் தமிழர்களின் வாழ்விற்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும்  பாதிப்பு ஏற்படும் வகையில் எத்தனையும் செய்ய மாட்டோம் என உறுதி கூறாதது ஏன்? அதேபோன்று மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இறக்குமதி  செய்யப்படும் சிங்கள பௌத்தர்களை குறித்து வாய் திறக்காது ஏன்? 

கடந்த கால நாட்டின் தலைவர்களைப் போலவே தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் பங்கேற்று சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்தும் அரசியலை முன்வைத்து தமிழர்களை குற்றவாளிகளாக்கி அரசியல் கொலைக்கு உட்படுத்த முனைவது நாட்டின் எதிர்கால நலனையே பாதிக்கும்.

தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்படும் சமூக புதைகுழிகள் இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ளதைப் போன்று சிங்கள பௌத்த  தமிழின அழிப்புக்கு சாட்சியாக தையிட்டி விகாரை எழுந்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர்ஸ்தானிகர் வருகையோடு இடம்பெறும் “அணையா விளக்கு” போராட்டம் இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் தேசம் என்றும் விரிவடைய வேண்டும். அதேபோன்று சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் பௌர்ணமி போராட்டமும் மக்கள் மயமாக வேண்டும். அதுவே தமிழர் தாயக அரசியலை நோக்கி மக்கள் மீள் எழ வழி சமைக்கும் எனலாம்.

அதிகார கதிரைகளுக்குள் அரசியலை தேடிக்கொண்டிருக்கும் சக்திகள் மக்கள்  அரசியலை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல அணையா விளக்கு போராட்டமும், பௌர்ணமி போராட்டமும் விடுக்கும் அழைப்பை ஏற்காவிடின் அதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/218355

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்புக்கு மாற்றம்

1 week 6 days ago
24 JUN, 2025 | 05:11 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்தஹ் 12 ஆண்டுகளாக என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்த கோபி சங்கர், பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும், என்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய நிபுணருக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/218347 @நிழலி அண்ணை கதைகள் வருமா?

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்புக்கு மாற்றம்

1 week 6 days ago

24 JUN, 2025 | 05:11 PM

image

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். 

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்தஹ் 12 ஆண்டுகளாக என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்த கோபி சங்கர், பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும், என்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். 

இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய நிபுணருக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. 

3__1___1_.jpg

3__3___1_.jpg

https://www.virakesari.lk/article/218347

@நிழலி அண்ணை கதைகள் வருமா?

மன்னார் பேசாலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம்; இந்திய மீனவர் அத்துமீறலை முற்றிலும் தடுக்க முடியும் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை

1 week 6 days ago
Published By: DIGITAL DESK 2 24 JUN, 2025 | 05:11 PM இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அத்துடன், கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது." என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில் மீனவர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மன்னார், பேசாலையில் 2026 இல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்." என்றார். இந்திய மீனவர்களின் வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள் மற்றும் கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218346

மன்னார் பேசாலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம்; இந்திய மீனவர் அத்துமீறலை முற்றிலும் தடுக்க முடியும் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 2

24 JUN, 2025 | 05:11 PM

image

இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன், கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது." என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, 

வடக்கு, கிழக்கில் மீனவர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

மன்னார், பேசாலையில் 2026 இல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்." என்றார்.

இந்திய மீனவர்களின் வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள் மற்றும் கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Photo__1_.jpgPhoto__10___1_.jpgPhoto__7___2_.jpgPhoto__6___2_.jpgPhoto__5___1_.jpgPhoto__12_.jpgPhoto__2___3_.jpgPhoto__3___1_.jpg

https://www.virakesari.lk/article/218346

அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

1 week 6 days ago
அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர். ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார். "நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார். சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்) மூளை அனீரிஸம் என்றால் என்ன? ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது. வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன. இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி மூளை மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது. மூளை அனீரிஸத்தின் வகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும். ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன. மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம். மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள் மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும். மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்: திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல) நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு குமட்டல் மற்றும் வாந்தி வெளிச்சத்தை பார்க்கும்போது வலி வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது? ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. புகைப்பிடித்தல் உயர் ரத்த அழுத்தம் குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்) சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன தலையில் ஏற்பட்ட காயம் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது. இதற்கு என்ன சிகிச்சை? அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது. மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை. சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும். சர்ஜிகல் கிளிப்பிங் இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது. சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும். எண்டோவாஸ்குலர் சிகிச்சை இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன. சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம். ஃப்லோ டைவர்சன் இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது. இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி? ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான். இந்த விஷயங்களை தவிருங்கள்: புகைப்பிடித்தல் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது கூடுதல் எடை அல்லது உடல் பருமன் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o

அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

1 week 6 days ago

அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.

தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார்.

"நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார்.

சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்)

மூளை அனீரிஸம் என்றால் என்ன?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது.

இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது.

வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன.

  • இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி

  • மூளை

மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது.

மூளை அனீரிஸத்தின் வகைகள்

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும்.

ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன.

மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம்.

மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள்

மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்:

  • திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல)

  • நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு

  • குமட்டல் மற்றும் வாந்தி

  • வெளிச்சத்தை பார்க்கும்போது வலி

வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.

அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது?

ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

  • புகைப்பிடித்தல்

  • உயர் ரத்த அழுத்தம்

  • குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்)

  • சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன

  • தலையில் ஏற்பட்ட காயம்

  • மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது.

மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை.

சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும்.

சர்ஜிகல் கிளிப்பிங்

இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது.

சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

எண்டோவாஸ்குலர் சிகிச்சை

இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன.

சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.

ஃப்லோ டைவர்சன்

இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது.

இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி?

ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான்.

இந்த விஷயங்களை தவிருங்கள்:

  • புகைப்பிடித்தல்

  • பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது

  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது

  • கூடுதல் எடை அல்லது உடல் பருமன்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 6 days ago
இங்லாந் வெற்றி....................இந்தியா பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது...............தோல்விக்கு இதுவும் ஒரு கார‌ண‌ம் , ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டி மைச்சை தோத்து விட்டின‌ம் இந்தியா வீர‌ர்க‌ள்....................சுல்ம‌ன் கில் க‌ப்ட‌ன‌ ஆன‌ பின் முத‌ல் மைச்சு தோல்வியில் முடிந்து இருக்கு.................இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ அவுஸ்ரேலியாவால் ம‌ட்டும் தான் முடியும்.............................

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

1 week 6 days ago
பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் கொலை - இரட்டை சகோதரிகள் கைது Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 05:08 PM கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218345

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

1 week 6 days ago
“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம் 24 JUN, 2025 | 09:29 PM (எம்.நியூட்டன்) “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. செம்மணியில் நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தெடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: செம்மணியில் அண்மைக்காலத்தில் புதிதாக அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை முறையாக அகழ்வு செய்ய வேண்டும் எனக் கோரி, நேற்றிலிருந்து மூன்று நாட்கள் “அணையா விளக்கு” என்ற பெயரில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்றது. பதினாறு வருடங்களாக தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் செம்மணியில் புதைகுழிகள் அண்மையில் மீளக் கண்டறியப்பட்டதும் அதன் அகழ்வின்போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. பொறுப்புக்கூறலுக்கான தேவையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் நீதியின் முன்னால் கொண்டு நிறுத்தப்படவேண்டிய தேவையையும், பொறுப்புக்கூறல் தொடர்பிலான தமிழ் மக்களுடைய அவாவினையும் குறித்த மனிதப் புதைகுழிகள் மீள ஞாபகமூட்டுகின்றன. மனிதப் புதைகுழிகளை மனித கௌரவத்தோடும் (human dignity) இறந்தவர்களுக்கு உரிய மரியாதையோடும் (respect for the dead) அணுகுவது என்பது அவசியமானது என சர்வதேச சட்டம் கூறுவதோடு, அவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை முறையாக அகழ்வது தொடர்பிலும், அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எச்சங்களை முறையான விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், முறையான விசாரணையின் தொடர்ச்சியாக, அந்த மனிதப் புதைகுழிகளில் இடப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விசாரித்து பொறுப்புக்கூறலை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச சட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகள் தாராளமாக உண்டு. அவற்றைப் பின்பற்றி குறித்த அகழ்வு நடைபெற வேண்டும் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. மேலும், செம்மணியில் மாத்திரம் அல்லாமல் மன்னாரிலும் கொக்கட்டிச்சோலையிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அப்புதைகுழிகளும் முறையாக விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், உண்மைகள் வெளிக்கொணரப்படுவதும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் அரசினுடைய அங்கங்கள் தொடர்பில் நம்பிக்கையற்று இருப்பது புதிய விடயமல்ல. எனவே இவ்வாறான மனிதப் புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பங்குபற்றலும், சர்வதேச கண்காணிப்பும், சர்வதேச உள்ளீடும் இருப்பது அவசியம் என தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகிறது. மனிதப் புதைகுழி அகழ்வு, அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தல், பின்னர் அது தொடர்பிலான குற்ற முறை, விசாரணை ஆகிய மூன்று கட்டங்களின் போதும் சர்வதேச கண்காணிப்பும் பங்களிப்பும் உள்ளீடும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகின்றது. மேலும், இவ்விடத்தில் தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறல் தொடர்பான தேவையானது ஒரு சர்வதேச விசாரணை மூலமாகவே பூர்த்தியடையும் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் இவ்விடத்தில் மீள ஞாபகப்படுத்துவதோடு, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீள ஞாபகப்படுத்தி, அதாவது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து முறையாக இலங்கை பொறுப்புக்கூறல் விடயமானது ஐ.நா பொதுச்சபைக்கு பலப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டு, ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்துகிறோம். குறித்த விடயங்களை இந்த போராட்டம் நடைபெறுகின்ற மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தில் கொண்டு இது தொடர்பிலான தனது பரிந்துரைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகிறது. இறந்தவர்களுடைய நினைவுக்கும் இறந்தவர்கள் மீது எங்களுக்கு உள்ள மரியாதையையும், அந்த இறப்புக்கான காரணங்களை தேடி அறிவதற்கான எமது தொடர் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் பெருமளவில் நாம் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென தமிழ் சமூக அமையம் தமிழ் மக்களை உரிமையோடு கேட்டு நிற்கிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218336

வலி. வடக்கில் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரும் போராட்டம்

1 week 6 days ago
காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் 24 JUN, 2025 | 06:15 PM (எம்.நியூட்டன்) “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்கள். சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். “நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்", "எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள். இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் முதலாளியாக ஆகிவிடுவேன் என்கிறார். நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில், நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார். நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218339

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் நீங்கள் எவ்வளவு தூரம் சாதாரண செய்திகளைக் கூட வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரேலின் வடக்கு முனைக்கும், ஹிஸ்பல்லா அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் தென் லெபனானிற்குமிடையே தூரம் ஆயிரம் அல்ல, நூறு கிலோ மீற்றர்கள் கூடக் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில், ஹிஸ்பல்லாவிற்கு ஏன் 1000 கிலோமீற்றர் செல்லும் ஏவுகணை தேவை? ஹிஸ்பல்லா அமைப்பின் ஒரே நோக்கம் வடக்கு தெற்காக 420 கிலோ மீற்றர்கள் நீண்டிருக்கும் இஸ்ரேலை அழிப்பது மட்டும் தான். இதற்கேன் 1000 கிலோமீற்றர் போகும் கணை? ஆனால், ஈரானிடம் இந்த இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்திற்காக பல வகை ஏவுகணைகளை ஹிஸ்பல்லா அமைப்புப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில், Qadr-1 என்ற 300 கிலோமீற்றர்கள் செல்லும் ஈரானிய தயாரிப்பு ஏவுகணையை முதன் முதலாக இஸ்ரேல் நோக்கி ஹிஸ்பல்லாக்கள் ஏவினார்கள். இவையெல்லாம் சாதாரண செய்திகளில் காணக்கிடைக்கும் தகவல்கள்! எப்படி இவை தெரியாமல் இங்கே வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறீகள்🙄?

இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

1 week 6 days ago
24 JUN, 2025 | 03:38 PM இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு, 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய் 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய் 2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய் 2024 ஆம் ஆண்டில் 16,476 ரூபாய் 2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய் https://www.virakesari.lk/article/218324