Aggregator

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விமானப்படை கோப்பிரல் உட்பட இருவர் வெடிகுண்டுகளுடன் கைது

3 months 2 weeks ago
வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது கனகராசா சரவணன் மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிசர் சோதனையிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒருகிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்ததுடன், டபிள்யூ பி.கே.ஜே. 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316131

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விமானப்படை கோப்பிரல் உட்பட இருவர் வெடிகுண்டுகளுடன் கைது

3 months 2 weeks ago

வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது

கனகராசா சரவணன்

மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிசர் சோதனையிட்டனர்.

இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒருகிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்ததுடன், டபிள்யூ பி.கே.ஜே. 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/316131

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை

3 months 2 weeks ago
17 MAR, 2025 | 05:15 PM பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது. 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன. 37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே இது போன்ற வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார். இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டது. ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது. சித்திரவதை என்பது சாதாரன விடையமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும் ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடையங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச் சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன. ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும். ஆனால் உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியைத் தேடுகின்றீர்கள்; எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209467

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை

3 months 2 weeks ago

17 MAR, 2025 | 05:15 PM

image

பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி  வெளிக்கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசும் பொருளாக  ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை  முகாம் வெளியில் வந்திருக்காது.

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே  இது போன்ற  வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு  சத்திருக்கொண்டான் படைமுகாமில்  4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார்.

இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு  கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல  முகாம்கள் காணப்பட்டது.

ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது.

சித்திரவதை என்பது சாதாரன விடையமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.  

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும்  ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடையங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச்  சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன.

ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும்.

ஆனால்  உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம்  நீதியைத் தேடுகின்றீர்கள்;  எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/209467

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்போம் என்கிறார் சாமர சம்பத்

3 months 2 weeks ago

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என பட்டலந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம்.

1989 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா?

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையும் ஆராய வேண்டும்.

மேலும் தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார்.

https://thinakkural.lk/article/316085

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 2025

3 months 2 weeks ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்

17 MAR, 2025 | 04:27 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும்  புதன்கிழமை (19)  முதல்  சனிக்கிழமை (22)  வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றது. 

இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

அதன்  முழு விபரமும் வருமாறு: 

வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

39வது பட்டமளிப்பு விழாவுக்குப்  பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று  மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38  மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176  மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70  மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17  மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147  மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177  மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110  மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். 

இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று  மாணவர்களும் பெறவிருக்கின்றனர். 

இவர்களுடன்,  கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும்,  சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

மேலும்,  சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும்  பெறவிருக்கின்றனர். 

வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர். 

பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன. 

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம்  கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர். 

மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.

சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka - 1871-2022)” என்ற தலைப்பிலும்,  மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/209459

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை; திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது இந்தியா

3 months 2 weeks ago

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

  • தமிழீழ விடுதலைப் புலிகள்,

  • பாபர் கால்சா இன்டர்நேஷனல்,

  • காலிஸ்தான் கமாண்டோ படை,

  • காலிஸ்தான் ஜிந்தாபாத் படை,

  • சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு,

  • லஷ்கர் இ தொய்பா,

  • ஜெய்ஷ் இ முகமது,

  • மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி,

  • ஹர்கத் உல் முஹாஜூதின்,

  • அல் உம்ர் முஹாஜூதின்,

  • ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி,

  • அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி,

  • சிமி,

  • தமிழ்நாடு விடுதலைப் படை,

  • தமிழ் தேசிய மீட்புப் படை,

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர்

உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றமாகும்.

அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/316136

பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!

3 months 2 weeks ago
பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கினர், ஆனால் பெருவின் கடல்சார் ரோந்துப் படையினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஈக்வடார் ரோந்துக் கப்பலான டான் எஃப் அவரை கடற்கரையிலிருந்து 1,094 கிமீ (680 மைல்) தொலைவில், நீரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையில் கண்டுபிடித்து மீட்டது. மாக்சிமோ தனது படகில் மழைநீரை நிரப்பி அருந்தியும், கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் பிழைத்ததாகவும் கூறினார். வெள்ளிக்கிழமை, ஈக்வடார் எல்லைக்கு அருகிலுள்ள பைட்டாவில் தனது சகோதரருடன் ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பில், கடல் ஆமைகளை நாடுவதற்கு முன்பு கரப்பான் பூச்சிகள் மற்றும் பறவைகளை எப்படி சாப்பிட்டேன் என்பதை விவரித்தார். அவரது கடைசி 15 நாட்கள் உணவு இல்லாமல் கழிந்ததாகவும் படகில் தத்தளித்த போது, தனது இரண்டு மாத பேத்தி உட்பட தனது குடும்பத்தினரை நினைத்தது வருந்தியதாகவும் கூறினார். மீட்பின் பின்னர் மாக்சிமோ, பெருவியன் தலைநகர் லிமாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக பைட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425522

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
சட்டமா அதிபர் வீட்டில் மறைந்திருக்கிறாரோ தெரியவில்லை. தேசபந்து தென்னகோனை கைது செய்ய வேண்டாமென உத்தரவிட்டிருக்கிறார் சட்டமா அதிபர். சட்டத்திற்கு முரணான உத்தரவுகளை வைக்கிறார் சட்டமா அதிபர். இவர் முன்னைய அரசுகளின் காவலன் போல் தெரிகிறது. இவரை முதல் கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வளவு நாளாக அவரை கைது செய்ய முடியவில்லையா பொலிஸாரால்? அல்லது கைது செய்ய மறுக்கிறார்களா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
போட்டி ப‌திவு ப‌தியும் போது சில‌ கேள்விக‌ளுக்கான‌ அணிய‌ நான் கூட‌ தெரிவு செய்யாம‌ ம‌ற்ற‌ கேள்விக‌ளுக்கு ச‌ரியா செய்து இருக்கிறேன்...................90கேள்விக்கு அணிக‌ளை தெரிவு செய்யும் போது சில‌ அணிக‌ளை நான் தொட்டு சில‌ உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளும் ஒரு இரு அணிக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகின‌ம் த‌லைவ‌ரே................. அதுவும் கைபேசியில் இருந்து தெரிவு செய்வ‌து மிக‌ சிர‌ம‌ம் க‌ண‌ணியில் இருந்து செய்வ‌து மிக‌ ஈசி நான் க‌ண‌ணி பாவிக்காம‌ விட்டு 9வ‌ருட‌ம் ஆக‌ போகுது..............................

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

3 months 2 weeks ago
இதை (BMI) பல வைத்தியர்களுடன் வாதம் செய்து இருக்கிறேன், இந்த visceral (இதன் அர்த்தம் உள்ளார்ந்த) கொழுப்பை சொல்லி (மிருகங்கள், பெரிய மீன்களை அறுவையை பார்த்தத்தில்). இப்பொது, மேலும் விபரமான சுட்டி கொண்டுவரப்படுட்டு இருக்கிறது (போல). ஏனெனில், பொதுவாக BMI சுட்டி, caucasian மக்களுக்கே பொருத்தமும், பிரச்சனை உள்ளதை வெளிப்படையாக அடையாளம் காண்பதற்கு, அவர்களின் சராசரி உடல் அமைப்பால். மறவர்களுக்கு, BMI பிரச்னை உள்ளதை மறைத்து விடும் (false negative ஆ) உள்கொழுப்பு படிவதில் மனிதனுக்கும், மிருகங்கள், மீன்களுக்கு அவ்வளவு வேறுபாடு இல்லை, ஆனால், மிருகங்களுக்கு உருவாகும் suet எனப்படும் கடின கொழுப்பு (இது மிருகங்களில் சிறுநீரக, மற்றும் உள் கவடுப் பகுதியிலும் படிவது, குறிப்பாக குளிர் பிரதேச விலங்குகளுக்கு), மனிதரில் இல்லை.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் பெண் : உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்..........! --- உயிரே உயிரே ---