Aggregator
முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!
முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!
சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவத்தினர் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும், 72 கடற்படை வீரர்களும் அடங்குவர்.
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.
கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் பனிப்போர் காலத்தில் சிஐஏயின் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன அதில் இலங்கை உட்பட பல நாடுகளில் சிஐஏயின் இரகசிய தளம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இது இலங்கை அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் தொடர்பிலும் பேசப்படுகின்றதுடன் 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை சுங்கத்தில் சிக்கிய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானியில் உள்ள திருத்தங்கள், அனைத்து நாடுகளிலிருந்தும் வாகன இறக்குமதிகளுக்கு Bureau Veritas ஆய்வுச் சான்றிதழ்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடுகின்றன.
புதிய விதிமுறைகளின்படி, மோட்டார் வாகனங்களை விடுவிக்கும் முன், இலங்கை சுங்கத்துறை ஆவணங்களின் நம்பகத்தன்மையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.
உரிமம் பெற்ற வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் சரிபார்ப்பு மூலம் சான்றளிக்கப்படுவதை இலங்கை சுங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தமானி கூறுகிறது.
சமீபத்தில், இறக்குமதி விதிமுறைகள் குறித்த தவறான முடிவின் விளைவாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டினர்.
உற்பத்தி ஆண்டு அல்லது சரியான உற்பத்தி திகதியை குறிப்பிட வேண்டிய தேவை இணக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டிருந்தார்.
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன் எனும் விமானம் தாங்கிக் கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாக்குதல் போர்க் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெறும் போரில், ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
அந்த வகையிலேயே, இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட இரண்டு கப்பல்கள் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸாவை இஸ்ரேல் தாக்கும் செயற்பாடு கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவர்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்தியில் யேமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஐந்து பேர் பெண்கள்; என்றும் 2 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தாக்குதலின் பரபரப்பு அடங்கும் முன்னரே, செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.