Aggregator

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
அர்ச்சுனா பெண்கள் மீது மேற்கொண்ட அதே இழிவான செயல் அவரது கட்சியை சேர்ந்த பெண் மீதும் மேற்கொள்ளபட்டுள்து கண்டனத்துக் குரியது

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months 2 weeks ago
இதை வெளிநாட்டில் நேரிலேயே கண்டோமோ 😂 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் உண்மையான தமிழனாக பிறந்தவன் அரியநேத்திரனுக்கு தான் வாக்கு போட வேண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்கலவனுக்கும் வாக்களிக்க முடியாது என்று நெருப்பு பறக்க பேசி கொண்டு திரிந்த தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதும் தமிழர்களை காக்க வந்த கதாநாயகனாக நீதி மகனாக அவரை கட்டமைத்து புகழ் பாடினார்கள். தமிழ் தேசிய கோட்பாடு என்றால் என்ன என்பதும் விளங்க தொடங்கியது 🤣

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னான் தானே பெரிசுக‌ள் இதுக்கை எங்க‌ளுட‌ன் சேர்ந்து குப்பை கொட்ட‌ மாட்டின‌ம் நாங்க‌ள் 5பேர் தான் அதிக‌ம் குப்பை கொட்டுவ‌து😁........................

'4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை

3 months 2 weeks ago
பட மூலாதாரம், ALLAHABADHIGHCOURT.IN படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் அதிகளவிலான பணம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போடார் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நேற்று, மார்ச் 22 அன்று அதுதொடர்பான அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் அதற்கு வர்மா அளித்துள்ள பதிலறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அந்த அறிக்கைகளில் உள்ளன. எனினும், அந்த அறிக்கையின் சில பகுதிகள் கருப்பு நிறத்தில் மறைக்கப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புது டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து பெருமளவு பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் அவருடைய வீட்டின் சேமிப்பு அறையில் கடந்த 14-ஆம் தேதி தீ பரவியது. இதுதொடர்பாக, முதல் கட்ட விசாரணை நடத்துமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய்-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து 'விரிவான விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார் டிகே உபத்யாய். அதேசமயம், தானோ அல்லது தன்னுடைய குடும்பத்தினரோ சேமிப்பு அறையில் ஒருபோதும் பணத்தை வைத்ததில்லை என்றும் தனக்கு எதிரான சதி இது என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, எரிந்த பணம் தொடர்பான படங்களும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் உள்ளன மார்ச் 15 அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ பரவியதாக, டெல்லி காவல் ஆணையரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் அதில் என்ன சொன்னார் என்பது அறிக்கையில் கருப்பு நிறத்தால் மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று, இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் நீதிபதி டிகே உபத்யாய். மார்ச் 15 அன்று காலையில் நீதிபதி வர்மா வீட்டின் சேமிப்பு அறையில் இருந்து எரிந்த நிலையில் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்ததாகவும் நீதிபதி டிகே உபத்யாய் கூறியுள்ளார். பிள்ளைகளுக்கு தான பத்திரம் வழங்கியதை பெற்றோர் மீண்டும் ரத்து செய்ய முடியுமா? - நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன? சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன? 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதா? அதன்பிறகு, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டுக்கு தன்னுடைய செயலாளரை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல் ஆணையரால் அனுப்பப்பட்ட சில அறிக்கைகளையும் டிகே உபத்யாய் தன் அறிக்கையுடன் இணைத்துள்ளார். அதில், சேமிப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த 4-5 சாக்கு மூட்டைகளில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த வீட்டில் வசிப்பவர்கள், வேலையாட்கள் மற்றும் தோட்டக்காரர்கள் மட்டும் தான் சேமிப்பு அறைக்கு செல்ல முடியும் என டிகே உபத்யாய் கூறியுள்ளார். எனவே, இதுதொடர்பாக மேலதிக விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டிகே உபத்யாயிடம் சில படங்கள் மற்றும் வீடியோக்களையும் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார். அவற்றில், அந்த அறையில் ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்ததை காண முடிகிறது. அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு அனுப்பியதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் டிகே உபத்யாய். சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை7 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, அந்த அறையில் எரிந்த நிலையில் பணத்தை தீயணைப்பு துறையினர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் யஷ்வந்த் வர்மாவிடம் கீழ்க்கண்ட 3 கேள்விகளை முன்வைத்துள்ளனர். அந்த பணம் எப்படி சேமிப்பு அறைக்கு வந்தது? அந்த பணத்தின் ஆதாரம் என்ன? மார்ச் 15 அன்று காலை அந்த பணம் எப்படி அகற்றப்பட்டது? இதற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்துள்ள பதிலில், வீட்டில் தீப்பற்றிய போது தான் மத்திய பிரதேசத்தில் இருந்ததாகவும் மார்ச் 15 மாலை தான் டெல்லி திரும்பியதாகவும் கூறியுள்ளார். வீட்டில் தீ பரவிய போது தனது மகளும் பணியாட்களும் வீட்டில் இருந்ததாகவும் ஆனால் தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்கள் சேமிப்பு அறையில் பணம் எதையும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரியவந்ததாக யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார். நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே vs மும்பை: ஐபிஎல்லின் மாபெரும் இரு துருவ மோதலின் தொடக்கப் புள்ளி எது?4 மணி நேரங்களுக்கு முன்னர் இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்றும், இவ்விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தன்னுடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பதிலில், "திறந்த நிலையில் இருக்கக்கூடிய, எல்லோரும் சென்று வரக்கூடிய ஓர் அறையில் யாராவது பணம் வைப்பார்களா என்பது நம்ப முடியாததாக உள்ளது." என தெரிவித்துள்ளார். தான் வங்கியில் இருந்து மட்டும் தான் பணத்தை எடுப்பதாகவும் தன்னுடைய பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியிலிருந்து அந்த அறை முற்றிலும் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கும் அந்த அறைக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகவும் யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார். இதில் தொடர்புபடுத்தப்படும் பணத்தை தன்னிடம் காட்டவோ அல்லது கொடுக்கவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பணியாட்களிடமும் இதுதொடர்பாக தான் விசாரித்ததாகவும், எந்த பணமும் அந்த அறையிலிருந்து அகற்றப்படவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் வர்மா கூறியுள்ளார். இந்த முழு வழக்கும் தனக்கு எதிரான சதி என அவர் தெரிவித்துள்ளார். "பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து உருவாக்கிய என்னுடைய புகழை இந்த சம்பவம் சிதைத்துள்ளது." என அவர் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் டிகே உபத்யாய் விரும்பினால் தான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதையும் விசாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?5 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 அடுத்தது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட குழுவிடம் வழங்கப்படுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த ஆறு மாத கால போன் பதிவுகளை தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்த்வாலியா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 1999-ல் உச்ச நீதிமன்றத்தில் உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். விசாரணையின் அடிப்படையில், நீதிபதி குற்றமற்றவர் என்றோ அல்லது அந்த நீதிபதியை பதவி விலகுமாறோ அக்குழு கூறும். அவர் பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அக்குழு தகவல் அளிக்கும். சில சந்தர்ப்பங்களில், நீதிபதிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இப்போதைக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எவ்வித நீதித்துறை சார் பணிகளும் வழங்கப்படக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவெடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7980dldpq2o

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு

3 months 2 weeks ago
அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால் இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 11:17 AM அனுர அரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் சாருஜன் பத்மநாதன் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த போராட்டத்தை போயா தினத்தில் தான் நடத்திக்கொண்டிருந்தோம், போராட்டம் வலுப்பெற்ற நிலையில அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில், யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் 20 ம் திகதி எங்களை அழைத்து, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். பௌத்த சாசன அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின் காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று. இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம். இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் சொல்லியுள்ள நிலையில அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம், மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும், சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/209969

நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!

3 months 2 weeks ago
நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்! நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் போது இரண்டு, சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது 8 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளினால் நெல் வயல்கள் சேதமடைவதால், விளைச்சல் மேலும் குறையும் என்றும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரிசி கையிருப்பு குறையுமாயின் நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426171

நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!

3 months 2 weeks ago

rice.webp?resize=750%2C375&ssl=1

நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் போது இரண்டு, சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது 8 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளினால் நெல் வயல்கள் சேதமடைவதால், விளைச்சல் மேலும் குறையும் என்றும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும்  அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரிசி கையிருப்பு குறையுமாயின் நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426171

பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

3 months 2 weeks ago
பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது. பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக மூன்று பெண்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த விருந்தில் பங்கேற்றிருந்த 12 இளம் பெண்களும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1426143

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...

3 months 2 weeks ago
இராமேஸ்வரம்- தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து. இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1965-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இக் கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்து ஆரம்பமானது. இக்கப்பல் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ”ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரை அருகே 22.15கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடைய பயணிகள் இறங்குதளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி இராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426137

முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்!

3 months 2 weeks ago
முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! கடந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426160

முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்!

3 months 2 weeks ago

parliment-2.jpg?resize=720%2C375&ssl=1

முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்!

கடந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில்  சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426160

மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு!

3 months 2 weeks ago
மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426164

பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

3 months 2 weeks ago
பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426179

பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

3 months 2 weeks ago

girls.jpg?resize=750%2C375&ssl=1

பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும்  தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில்  ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும்,  அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426179