Aggregator
பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்
பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்
Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார்.
1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே.
மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார். லண்டனிற்கான கேஜிபியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது.
1990 இல் ஒலெக் கோர்வ்டிஸ்கியும், பிரிட்டனின் புலனாய்வு வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.''
ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம், தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை, மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது, சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார்.
பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார்.
1983ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல் தலைமை மிகுந்த அச்சம் கொண்டுள்ளது, முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார்.
அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது.
எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான ஒத்திகையல்ல என மொஸ்கோவின் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார்.
அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார்.
அவர் விசாரிக்கப்பட்டார், ஆனால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.
இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது.
கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி இவர்.
பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார்.
எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது,
இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது.
மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை.
ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி
பட மூலாதாரம்,BBC SINHALA
படக்குறிப்பு, இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.
கட்டுரை தகவல்
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சிறிய ரக வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றின் துப்பாக்கி ரவைகள் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
தேவேந்திரமுனை - கப்புகம்புர பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இரண்டு நண்பர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்த வேன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியொன்றில் தீக்கிரையான நிலையில் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், வேனை தீக்கிரையாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்23 மார்ச் 2025
சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025
துப்பாக்கி பிரயோகத்தில் தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்துவதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம்,BBC SINHALA
2025 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பான ஒரு பார்வை
2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 27 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 18 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏனைய 9 துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களிலும் இதுவரை 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிபபிடுகின்றனர்.
சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025
சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.
கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூட்டில் விசாரணைக்காக நின்றுகொண்டிருந்த தருணத்தில், வழக்கறிஞர் வேடத்தில் வருகை தந்த துப்பாக்கிதாரியினால் நீதிமன்றத்தில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர்கள், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற போதிலும், 8 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர்.
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025
மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச்சீட்டு யார்?23 மார்ச் 2025
எனினும், இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
இஷாரா செவ்வந்தி, இந்தியா அல்லது மாலத்தீவுக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புப்பட்டுள்ளமையை போலீஸார் உறுதி செய்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி நடவடிக்கை
கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் - 15 பேர் கைது; என்ன நடந்தது?22 மார்ச் 2025
மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025
பட மூலாதாரம்,PMD MEDIA
இலங்கையில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 18ம் தேதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகளையே ஜனாதிபதி இவ்வாறு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாது, புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.
சட்ட ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் திணைக்களம் வசமானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் சட்ட ஆட்சியை பாதுகாக்காது, சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்
யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்
23 MAR, 2025 | 09:09 PM
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மோதலில் ஈடுபடுவதை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. பவுன்சர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோஷித ராஜபக்சவுடன் சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றது சந்தேகநபர்கள் திம்பிரிகசாய, தெகிவள அத்திடியவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.