Aggregator
தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர
தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?,
ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.
சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது.
ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்
பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM
இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.
இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.
2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;
தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர்.
இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.