Aggregator

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

3 months 1 week ago
25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது. எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/210186

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

3 months 1 week ago

25 MAR, 2025 | 06:33 PM

image

(எம்.நியூட்டன்)

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.

எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/210186

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்

3 months 1 week ago
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம் Published By: VISHNU 25 MAR, 2025 | 08:46 PM இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 48, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியரின் ஆலோசனையின் படி ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். அவருக்கு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210193

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
PBKS vs GT, 5th Match at Ahmedabad, IPL, Mar 25 2025 - Live Cricket Score Innings break 5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League PrevNext Punjab Kings (20 ov) 243/5 Gujarat Titans GT chose to field.Stats view Current RR: 12.15 • Last 5 ov (RR): 87/1 (17.40) Win Probability:PBKS 86.36% • GT 13.64% என்னா அடியிது! போறவன் வாறவனெல்லாம் ராஷித் கானுக்கும் சிராஜுக்கும் போட்டு தாக்கிறாங்கள்!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

3 months 1 week ago
வியாழேந்திரன் கைது கடந்த ஆண்டு 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அமைப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக இன்று (25) எஸ். வியாழேந்திரன், கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்து, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றதற்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகியோர் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், அந்தச் சம்பவத்திற்கு அமைச்சரும் உடந்தையாக இருந்துள்ளார் எனக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரணை விபரங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று (25) புதுக்கடை நீதிமன்றப் பகுதியில் வைத்து எஸ். வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி, அவரது பிரத்தியேக செயலாளராக இருந்த அவரது சகோதரர், ஒரு காணிக்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற நிலையில், மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm8og367300bz10a6r60xxfpf

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 1 week ago
ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று. இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
நன்றி! "எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறான்" என்று யாழ் களத்தில் திட்டு வாங்கித் தான் எனக்குப் பழக்கம்😂. இப்படியான துலங்கலை எதிர்பார்க்கவில்லை.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்

3 months 1 week ago
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார். மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார். 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பின்னர் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மகா நடிகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தியின் நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் நடித்திருந்தார். மாரடைப்பால் உயிரிழப்பு 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு நந்தனா என்ற பெண்ணுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. https://news.lankasri.com/article/director-bharathirajas-son-manoj-passes-away-1742915335

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
👍............. இவ்வளவு நுணுக்கங்களா................ ஆச்சரியமாக இருக்கின்றது. இங்கு விளையாடப்படும் பேஸ்பால் கிரிக்கெட்டின் சாயல் கொண்டது. ஆனால் இந்த நுணுக்கங்கள் குறைவானது........

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 1 week ago
தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசியலமைப்புச் சபையில் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்களித்ததைத் தடுக்க, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் SJB முதன்முதலில் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பை மீறி தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதாகவும், இந்த அரசியலமைப்பு மீறலுக்கு முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, சபாநாயகரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு சபையில் நடந்த நிகழ்வுகள் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டு, நாட்டின் உச்ச சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். தேசபந்து தென்னகோன் அரசியலமைப்பை மீறி நியமிக்கப்பட்டபோதும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்பட்டபோதும், இப்போது அவரை விமர்சிப்பவர்கள் முற்றிலும் அமைதியாக இருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். தாமதமாக இருந்தாலும் கூட, நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது கொண்டு வரப்படுவதைப் பற்றி அவர் திருப்தி தெரிவித்தார், மேலும் அதற்கு தனது கட்சியின் முழு ஆதரவையும் மீண்டும் வலியுறுத்தினார். இன்று காலை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசபந்து தென்னகோனை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426400

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி – வெளிநடப்பு செய்தார் ஸ்ரீதரன் எம்பி! தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன் நிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது. வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட விடையங்களை முன்னிறுத்தியதாக மாறியது. குறிப்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்கள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடையங்களை முன்னிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார். ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதாகவும், இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றிருந்தமையையும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியிருந்தார். https://athavannews.com/2025/1426402

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

3 months 1 week ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2025/1426414

கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!

3 months 1 week ago
கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற அரசுக்கு எதிரான மாணவர்களின் கிளர்ச்சியின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426387

கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!

3 months 1 week ago

ban.jpg?resize=750%2C375&ssl=1

கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட்  அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின்  சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற அரசுக்கு எதிரான மாணவர்களின்  கிளர்ச்சியின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு  நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ்  அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக  விளையாடி மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426387

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
மாவட்ட அபிவிருத்திக்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வார்த்தைகளை அபிவிருத்தி செய்ய முற்பட வேண்டும். தனிநபர்கள் தங்களின் அந்தரங்களை பொது வெளியில் போட்டுத்தாக்குவது எதிர்கால இளவல்களுக்கு நல்ல முன் உதாரணம் அல்லவே. எங்கே செல்லும் இந்தப் பாதை ?