Aggregator
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு
காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு
காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு
Published By: RAJEEBAN 27 MAR, 2025 | 01:44 PM
கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்,ஹமாசின் இலக்குகளை தாக்குவதாக அது தெரிவிக்கின்றது.
இந்த தாக்குதல்கள் காரணமாக காசாவில்இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை கடந்துள்ளது,என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இ;ஸ்ரேலின் இராணுவதந்திரோபாயங்கள்குறித்து கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவருடன் சிபிஎஸ் சமீபத்தில் உரையாடியது.டொம்மி ,உண்மையான பெயரில்லை,தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் சிபிஎஸ் உடன் பேசுவதற்கு இணங்கினார்,
காசாவிற்குள் போரிட்ட இவர், இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தியாக தெரிவித்த சில தந்திரோபாயங்கள் கேள்வியை எழுப்பகூடியவையாக காணப்பட்டன.
'நாங்கள் காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரித்தோம்,இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்" என அவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்தார்.'நாங்கள் பாதுகாப்பிற்காக மனிதக்கேடயங்களை பயன்படுத்தினோம்"
கட்டிடங்களிற்குள் உள்ள வெடிபொருட்களை தேடுவற்கு நாய்களிற்கு பதில் பொதுமக்களை பயன்படுத்துமாறு எனக்கு பொறுப்பாகயிருந்த அதிகாரி தெரிவித்தார் என டொம்மி குறிப்பிட்டார்.
'அவர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்த அவர் கட்டிடங்கள் ஆபத்தானவையா என பார்ப்பதற்காக முதலில் அவர்களை அனுப்பினோம்,கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்காக அவர்களை அனுப்பினோம் அவர்கள் அச்சத்தி;ல் நடுங்கினார்கள்" என அவர் தெரிவித்தார்.
நாங்கள் எங்கள் தளபதியிடம் சென்று இதனை நிறுத்துமாறு கேட்டோம், ஆனால் அவர் அதனை தொடருமாறு உத்தரவிட்டார் அது தற்போது கொள்கையாகவிட்டது என டொம்மி சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?
ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், ருஷ்டி அபௌலூஃப் & அலெக்ஸ் பாய்ட்
பதவி, பிபிசி செய்திகள்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து வெளியேறக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர்.
துப்பாக்கி, தடி போன்றவற்றை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைத்து, அவர்களில் பலரைத் தாக்கினர்.
ஹமாஸை விமர்சிக்கும் ஆர்வலர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ பதிவுகளில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் லாஹியாவின் தெருக்களில் "வெளியேறு, வெளியேறு, ஹமாஸ் வெளியேறு", என்று முழக்கமிட்டுக் கொண்டே இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றதை காட்டின.
"சந்தேகத்துக்குரிய அரசியல் நோக்கங்களை" முன்னெடுப்பதாகவும், இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப இந்த போராட்டக் குழு முயற்சி செய்து வருவதாகவும் கூறி, ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் குழுவின் ஆதரவாளர்கள், இந்த போராட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை 'துரோகிகள்' என்று குற்றம் சாட்டினர்.
மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025
இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?5 மணி நேரங்களுக்கு முன்னர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஏன் போராட்டம்?
வடக்கு காஸாவில் நடைபெற்ற இந்த போராட்டங்கள், இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்திய மறுநாள் நடைபெற்றன. இதனால் பெய்ட் லாஹியாவின் இந்த தாக்குதல் பெய்ட் லாஹியா நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகிய சுமார் இரண்டு மாதத்துக்குப் பிறகு காஸாவில் ராணுவ தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹமாஸ், ஜனவரி மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்க தவறியதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல்களுடன் இஸ்ரேல் மீண்டும் அதன் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவது என்ன?
போராட்டக்காரர்களில் ஒருவரான பெய்ட் லஹியாவைச் சேர்ந்த முகமது தியாப், போரில் தனது வீட்டை இழந்துள்ளார், மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது சகோதரரையும் இழந்தார்.
"எந்தவொரு நபருக்காகவும், எந்தத் தரப்பினரின் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டு நாடுகளின் நலன்களுக்காகவும் நாங்கள் இறக்க மாட்டோம்", என்று அவர் கூறினார்.
"ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் மற்றும் துயரத்தில் இருப்பவர்களின் குரலைக் கேட்க வேண்டும், இடிபாடுகளில் இருந்து எழும் குரல் - அதுதான் மிகவும் உண்மையான குரல்."
"ஹமாஸ் ஆட்சி ஒழிக, இஸ்லாமிய சகோதரத்துவ ஆட்சி ஒழிக" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிடுவதை அந்த நகரத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் காட்டின.
பாலத்தீன தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் காஸாவில் ஒரே ஆட்சியாளராக இருந்து வருகிறது, அதற்கு ஒரு வருடம் முன்புதான் தேர்தலில் தனது போட்டியாளர்களை வன்முறையான முறையில் ஹமாஸ் வெளியேற்றியது.
அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?26 மார்ச் 2025
மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஹமாஸ் கூறுவது என்ன?
இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸுக்கு எதிரான வெளிப்படையான விமர்சனம் தெருக்களிலும் இணையத்திலும் அதிகரித்துள்ளது. ஆனால், ஹமாஸுக்கு இன்னும் தீவிரமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஹமாஸுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை துல்லியமாக அளவிடுவது கடினம்.
போர் தொடங்குவதற்கு முன்பே ஹமாஸுக்கு எதிர்ப்பு இருந்து வந்தது, ஆனால் பழிவாங்கும் பயத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தனர்.
காஸாவைச் சேர்ந்த முகமது அல்-நஜ்ஜார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மன்னிக்கவும், ஆனால் ஹமாஸ் உண்மையில் எதை நம்பி இருக்கிறது? அவர்கள் மக்களின் உயிர்களை நம்பி அதன் மீது பந்தயம் கட்டுகிறார்கள்", என்று பதிவிட்டுள்ளார்.
"ஹமாஸ் கூட எங்களை வெறும் உயிர்களாகத்தான் எண்ணுகிறது. ஹமாஸ் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். எங்கள் காயங்களுக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்கிறோம்", என்று கூறினார்.
ஹமாஸ் அதிகாரி டாக்டர் பாசெம் நைம் பிபிசியிடம் பேசுகையில், மக்களுக்கு "வலிமிகுந்த நிலையில் கதறி அழ உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால் அவர் போராட்டக்காரர்கள் "சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள்" மேற்கொள்வது போல இருப்பதாக குற்றம் சாட்டினார், மேலும் ஏன் காஸாவின் மேற்குக் கரையில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
காஸாவில் உள்ள மனிதாபிமான சூழ்நிலையை இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?27 மார்ச் 2025
ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதான் மூலம் இஸ்ரேல்-ஸா போர் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, ஹமாஸை அழிப்பதற்காக இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவின் 21 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தனர், அவர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்தனர்.
காஸாவில் சுமார் 70% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு, தண்ணீர் வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்தன. மேலும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி
இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM
(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார்.
களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை இல்லையா என்று பிரித்தானிவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது.
தமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்காது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவே இவ்வாறு எமது படையினருக்கு எதிராக தடை விதித்துள்ளது.
சிறுவர்களையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.
50 ஆயிரம் பேருக்கு டைபாய்டு தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு
50 ஆயிரம் பேருக்கு டைபாய்டு தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு
50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM
(செ.சுபதர்ஷனி)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார்.
தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைராய்டு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது.
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தைராய்டு தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
தைராய்டு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர்
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர்
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:15 PM
(எம்.வை.எம்.சியாம்)
திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அந்த அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களம் சார்பில் தனக்கு உள்ளதென பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் மல்லிகா சூரியப்பெரும உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இராணுவப் படை, கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 515 பேருக்கும் சிவில் பிரஜைகள் அறுவருக்கும் சுமார் 29 மில்லியன் ரூபா பணம் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.
இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட 140 அதிகாரிகளுக்கு இங்கு 24 மில்லியன் ரூபா பரிசுத்தொகையும் கௌரவ பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உரையாற்றுகையில்,
இத்தகைய நிகழ்வுகள் ஊடாக அதிகாரிகளை நாம் ஊக்கப்படுத்துகின்றோம். உயர்ந்தபட்ச ரீதியில் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கோவைகளை திரட்டி பணப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு பணிப்பரிசில்களை வழங்குமாறு இந்த வருடத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். அண்மைய நாட்களாக பொலிஸார் பல விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
எதிர்வரும் தேர்தலின் பின்னரும் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகளையும் கைதுகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் பாராட்டு செலுத்தி பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எத்தகைய சவால்கள் இருந்தாலும் பொலிஸ் திணைக்களத்தில் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறை உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.
அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு திணைக்களம் சார்பில் எனக்கு உள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கலந்துரையாடி அதற்கான தீர்வை பெற்றுத் தருவதற்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.