Aggregator

இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?

1 week 4 days ago
கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படம் மாதிரி "இந்தா வருகுது வருகுது" என்று எத்தனை வருடங்களாக இந்த பிரிக்ஸ் இன்னும் வந்து கொண்டிருக்குது😂? இந்த "பல்துருவ" உலகை நாடும் எழுத்தாளர்களும் அதை ஒரு காரணியாக எடுத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂? அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook. சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
'கிரெடிட் ரேட்டிங்' விழுந்தது அதிபட் ட்ரம்ப் அவர்களின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் பொருட்டான அவசர நடவடிக்கைகளால். அமெரிக்க - சீன போட்டியால் அல்ல. இந்த அரிதான உலோகங்கள் மீதான சீனாவின் அதிகாரம் என்பது மிகவும் சமீபமாக நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு பல வருடங்கள் முன்னரேயே அமெரிக்கவும் சீனாவும் ஒன்றும் இரண்டும் என்று உலகில் போட்டாபோட்டியில் இருக்கின்றன. இதன் அடிப்படையே ரஷ்யாவோ அல்லது வேறு எவருமோ அருகில் கூட இல்லை என்பதே. இன்று சீனாவிடம் அரிதான உலோகங்களின் மீதான அதிகாரம் இருக்கலாம். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. ஒரு சாதாரண பயணிகள் விமானத்தை கூட சீனா பாதுகாப்பாக செய்து விற்க, அதை உலக நாடுகள் வாங்கும் நிலை இன்னும் வரவில்லை. நாங்களும் சீனா செய்யப் போகும் விமானங்களில் பயணிக்கும் நிலையிலும் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுவே தான் மைக்ரோ பிராசசர் தொழில்நுட்பத்திலும். இந்த இருவரும் தொழில்நுட்பத்தில் உலகெங்கும் போட்டி போடுவார்கள். ஆனால் இராணுவ ரீதியாக இன்னொரு கண்டம் போய், இன்னொரு நாடு போய், அங்கே நின்று போரிடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எவரிடமும் அந்த வளங்களும், திறமைகளும் இல்லை.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 week 4 days ago
இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும்; தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும் - வோல்கர் டேர்க் கருத்து Published By: VISHNU 25 JUN, 2025 | 07:49 PM தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இதனை தெரிவித்தார். திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர். இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும். அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/218468

ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது, மலையக தமிழரையும் கை விடாதீர்கள்

1 week 4 days ago
ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். https://adaderanatamil.lk/news/cmcbzrn6100dxqp4knhzanbhr

ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது, மலையக தமிழரையும் கை விடாதீர்கள்

1 week 4 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

https://adaderanatamil.lk/news/cmcbzrn6100dxqp4knhzanbhr

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
அங்கு வருவது பெரும்பாலும், இஸ்ரேல் இளம் சமூகத்துக்கு கட்டாய இராணுவ சேவையில் உருவாகும் அழுத்தத்தை குறைபதத்திற்கு. இவர்களில் கணிசமானோர் புலனாய்வு, உளவுத்துறைக்கு உள்வாங்கப்பட்டு இருப்பார்கள். இப்படி இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசதிலும் நடக்கிறது.

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 week 4 days ago
அறிமுக டெஸ்டில் பந்துவீச்சில் சொனால் தினூஷ அபாரம்; பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 220 - 8 விக். Published By: VISHNU 25 JUN, 2025 | 07:16 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இரண்டு பிரதான வீரர்களின் விக்கெட்களை அறிமுக வீரர் சொனால் தினூஷ கைப்பற்றியதால் பங்களாதேஷினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது. சொனால் தினூஷ மட்டுமல்லாமல் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களும் பங்களாதேஷின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் மிரட்டலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இலங்கை வீரர்கள் களத்தடுப்பில் 3 பிடிகளை தவறவிட்டது பங்களாதேஷுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. இந்தப் போட்டியில் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் அமினுள் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக் (21) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு சிறு தெம்பைக் கொடுத்தானர். மொமினுள் ஹக் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ (8) ஆட்டம் இழந்தார். காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஷன்டோவிடம் இருந்து பங்களாதேஷ் நிறைய எதிர்பார்த்தபோதிலும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அவரால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. ஷன்டோ ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (76 - 4 விக்.) இந் நிலையில் அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொத்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சொனால் தினூஷ ஆட்டம் இழக்கச் செய்தார். அறிமுக வீரர் தினூஷ முதல் 3 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காதது விசேட அம்சமாகும். லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் பெற்றனர். அதன் பின்னர் சகலதுறை வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் (31), நயீம் ஹசன் (25) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், அவர்கள் இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையின் வேகபந்து வீச்சாளர்களால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டனர். ஆட்ட நேர முடிவில் தய்ஜுல் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஈபாடொத் ஹுசெய்ன் 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் சொனால் தினூஷ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய ஆட்ட நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மழையினால் தடைப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாவதுடன் நாளைய தினம் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/218467

புலியும் சிறுத்தையும் மனிதரை உண்ணும் ஆட்கொல்லியாக எப்போது மாறும்?

1 week 4 days ago

புலி, சிறுத்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 25 ஜூன் 2025, 08:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

மனிதன் - காட்டுயிர் மோதல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது.

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள்

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ்

  • கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது.

  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.

  • 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார்.

  • நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை

  • 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

  • 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது.

  • 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார்.

காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன?

ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி,

  • சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது.

  • வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு.

  • சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ்.

ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார்.

''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி.

"ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை"

106ca070-50c1-11f0-8c47-237c2e4015f5.jpg

படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம்

பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார்.

இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்"

புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார்.

"சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார்.

''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ்.

சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார்.

குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்?

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,SCIENTIST RAMESH

படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர்.

ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார்.

புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ்.

மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி

இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார்.

இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி?

மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o

புலியும் சிறுத்தையும் மனிதரை உண்ணும் ஆட்கொல்லியாக எப்போது மாறும்?

1 week 4 days ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 25 ஜூன் 2025, 08:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். மனிதன் - காட்டுயிர் மோதல் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது. கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன. காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள் பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ் கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார். நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன. பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது. 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார். காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன. 'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன? ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி, சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது. வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு. சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு. பட மூலாதாரம்,NCF ''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ். ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். 1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார். ''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி. "ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை" படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம் பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார். இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்" புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார். "சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார். ''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார். குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,SCIENTIST RAMESH படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ் சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர். ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார். புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ். ''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ். மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார். இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர். மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி? மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார். பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ் வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். ''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
அப்போது ஏன் சீனா எல்லா கோளங்களிலும் அச்சறுத்தல் என்று அமெரிக்கா பார்க்கிறது? சீனாவை, சோவியத்தை போல தனிமைப்படுத்தி உடைக்க முயல்கிறது? (இவற்றை நன்கு அவதானித்தே சீனாவும் அதன் நகர்வுகள், அதை தடுப்பதை நோக்கமாக கொண்டே அமெரிக்கா நகர்வுகள். ) இது போன்றவற்றை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு எத்தனை கோளங்களில் சீன, அமெரிக்கா (ஆயுதம் இல்லாமல்) மோதுகிறது தெரியாது இருக்கிறது. கடலுக்கு அடியேயும் மோதுகின்றன. ஏன் அமெரிக்கா பில்லியன் கணக்கில் சீனாவை பற்றி பூச்சாண்டி காட்டும் பிரச்சாரத்துக்கு உத்தியோகப்பூர்வமாக செலவிடுகிறது? இப்படி பல அமெரிக்கா செய்வது, சொல்வது உங்களின் புரிவு பிம்பத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது. இதில் முக்கியமானது ஒன்று தொடங்கி விட்டது, credit rating விழுந்தது. நீங்கள் எதிர்பார்ப்பது மற்ற அமெரிக்கர்களும், இன்று கதைத்தால், நாளை விளைவுகள் என்பது. அனால் சீனாவும், அமெரிக்கா (கூட), மேற்கு, மற்ற நட்டுகள் அவ்வாறு அப்படியான காலத்தில். நோக்கவில்லை. (அனல், இதில் குறிப்பாக சீனா ஒன்றும் செய்ய தேவை இல்லை, முன்பே சொன்ன யுக உற்பதி அரிதான உலோக பிடி சீனாவிடம் உள்ளது. வேண்டுமாயின் அது பாவிக்கும்.)

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல்

1 week 4 days ago
உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம். 2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmcbwbtmh00dkqp4kyv46edvj