Aggregator
பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!
எரிமலையில் விழுந்த பெண் – உயிருடன் இருப்பது தெரிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்?
பட மூலாதாரம்,FAMILY HANDOUT
படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ்.
கட்டுரை தகவல்
ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன்
பிபிசி செய்திகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அலறிய சத்தம் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த நாட்களில், கடுமையான நிலப்பரப்பாலும் மூடுபனி வானிலையின் காரணமாகவும், 26 வயதான அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று மீட்புக் குழு அவரது உடலை கண்டடைந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
"மிகுந்த சோகத்துடன், அவர் உயிர் பிழைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மரின்ஸின் குடும்பத்தினர் கூறினர்.
"நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்து பிரார்த்தனைகளுக்கும், அன்பும் ஆதரவும் மிக்க செய்திகளுக்காகவும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தோனீசியாவின் லோம்போக் தீவுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்குப் பயணம் செய்திருந்தார் மரின்ஸ்.
சனிக்கிழமை (உள்ளூர் நேரப்படி 06:30 மணி) ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, "எரிமலையின் பள்ளத்திற்கு அருகிலுள்ள பாதையைச் சுற்றியுள்ள பாறையிலிருந்து" மரின்ஸ் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலப்பரப்பு வழுக்கும் தன்மையுடனும், ஏறுவதற்கு "மிகவும் கடினமாகவும்", சுற்றியுள்ள பகுதியைப் பார்ப்பதற்கு சிரமமாகவும் இருந்தது என்று அந்தக் குழுவில் பயணித்த ஒருவர் பிரேசிலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மலையேறுபவர்களால் படம்பிடிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் இணையதளத்தில் பரவி, பிரேசிலிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில், சனிக்கிழமையன்று மரின்ஸ் கவலையுடன் காணப்பட்டாலும் உயிருடன் இருந்ததும், சாம்பல் நிற மண்ணில் உட்கார்ந்து நகர்ந்து கொண்டிருந்ததும் காணப்படுகிறது. அவர் இருந்த இடம் மலையேற்றப் பாதைக்குக் கீழே அமைந்திருந்தது.
ஆனால் மீட்புப் பணியாளர்கள் 300 மீ (984 அடி) கீழே இறங்கிய போது, மரின்ஸ் இருப்பதாக நம்பிய இடத்திற்கு அருகே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை அழைத்தபோதும் மரின்ஸ் பதிலளிக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் அந்த இடத்தில் இல்லை என்பதை டிரோன் காட்சிகள் சுட்டிக்காட்டின.
எனவே மீட்பு பணிகள் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டதாகவும், வெப்பமான இடங்களில் பயன்படுத்தப்படும் டிரோனின் பயன்பாட்டைக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமையன்று, மீட்புப் பணியாளர்களால் மரின்ஸைக் மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவர் முன்பு இருந்த இடத்தில் இருந்து இன்னும் கீழே விழுந்து விட்டதாகத் தோன்றியது.
ஆனால், 'பருவ நிலை'யின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலை (கோப்புப்படம்)
அவரைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியபின், மீட்புப் பணியாளர்கள் ஒரு பள்ளத்தாக்கில் 600 மீட்டர் கீழே இறங்கி, இறுதியாக அவரது உடலை அடைந்ததாக இந்தோனீசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவரது உடலை மீட்க முடியவில்லை.
3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இருப்பினும், கடந்த மாதம் ஒரு மலேசிய சுற்றுலாப் பயணி உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் அதில் ஏற முயன்ற பலர் இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரின்ஸ் விழுந்த பிறகு அந்தப் பாதை இன்னும் மூடப்படாதது குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!
உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!
உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!
யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, விசேட அமர்வுக்காக இன்றையதினம் (27) திகதியிடப்பட்டிருந்தது.
இதனடிடையில் இன்று காலை(27) முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு இன்று நடைபெற்றது.
அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிவடைந்த பின் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் முன்னதாக சபையின் உறுப்பினர் தர்சானந்த், கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று(27) அதன் தொடர்ச்சி நடைபெற்றது.
ஆனால் அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது எவ்விதத்தில் நியாயமானது. தமக்கு தமது கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என சபையின் உறுப்பினர் தர்சானந்த் கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும் முதல்வர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பை காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை என கூறியதுடன் சபையில் வெளி நபரது ஆதிக்கம் வலுவாக இருப்பதாகவும் இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!
காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!
காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!
ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.
ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 12 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடு சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.