6 days 23 hours ago
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது - ஜனாதிபதி 28 JUN, 2025 | 06:44 PM தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கல் என்றவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அது நிலையானதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய நிலைக்கு உயர்த்தவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. என்றும், சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். அதேசமயம் பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக மேலும் சுட்டிக்காட்டினார். வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக, வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'Clean Sri Lanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக (Public-Private Partnership) நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். வீதிப்பாதுகாப்பு செயல் திட்டத்தை (The Road Safety Action Plane 2025 – 2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் கருத்துத்தெரிவித்த, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வீதி நெரிசலால் மட்டும் ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%-3% இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார். 2012 ஆம் ஆண்டு முதல், மக்கள் பெருமளவில் பொது போக்குவரத்தை கைவிட்டு வருகின்றனர், அதன்படி, எதிர்காலத்தில் மைதானங்கள் போன்ற அகலமான சாலைகள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்படாது என்பதால், அதற்கு பதிலாக பொது போக்குவரத்தை வலுப்படுத்துவது கட்டாயமாகியுள்ளது என்று கூறினார். இதற்காக, எதிர்காலத்தில், தனது அமைச்சு கொட்டாவயிலிருந்து அவிசாவெல்ல வரை இரட்டைப் பாதையையும், அவிசாவெல்லவிலிருந்து இரத்தினபுரி வரை புதிய ரயில் பாதையையும் அமைக்கவும், சரக்கு போக்குவரத்துக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தவும், ரயில் பாதையின் உரிமையை ரயில்வேயின் கீழ் இருக்கும் வகையில் கைவிடப்பட்ட நுவரெலியா-நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறைக்காக மேம்படுத்தவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல புதிய ரயில்களைக் கொண்டுவரவும் முன்மொழிய எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, மீரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, NIO அமைப்பின் சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமட, விளக்கினார். மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். இதனுடன் இணைந்ததாக, அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் (429) இருப்பதாகவும், அவற்றில் 134 கடவைகளை முதல் சுற்றில் பாதுகாப்பானதாக மாற்றுவதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடியும் என்று இலங்கை ரயில்வே பிரதம பொறியாளர் (சமிக்ஜைகள் மற்றும் தொலைத்தொடர்பு) வீ.சீ.ஈ. ஜெயசேகர சுட்டிக்காட்டினார். ‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, இலங்கை ரயில்வே பிரதம பொறியாளர் (சமிக்ஜை மற்றும் தொலைத்தொடர்பு) வீ.சீ.ஈ. ஜெயசேகர, மென்பொருள் பொறியாளர் சுமுது ரத்நாயக்க மற்றும் தனியார் துறையில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/218719 Riding the Train or Subway in Japan in a Wheelchair
6 days 23 hours ago
செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் - சபா குகதாஸ் தெரிவிப்பு! 28 JUN, 2025 | 06:45 PM செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவு படுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும் கடந்த காலத்தில் பேரினவாத அரசுக்கு மீண்டு கொடுத்த தமிழ்க் குழுக்களும் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிசார் உடையது எனவும் அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர். இனவாதி விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது. செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சம காலத்தில் அப்பகுதி இராணுவ முகாமில் இருந்த சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும் தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218718
6 days 23 hours ago
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார். #Shakuntalapandya #Sports #Athlatic இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
1 week ago
28 JUN, 2025 | 06:19 PM (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை (28) காலை மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது. மேலும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218722
1 week ago
28 JUN, 2025 | 06:19 PM

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை (28) காலை மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.
மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.
மேலும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


https://www.virakesari.lk/article/218722
1 week ago
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது. இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcfywyos00huqp4kvb8hv3bo சீற்பெல்ற் பயணிகளுக்கும் அணிய ஏற்பாடு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது.
1 week ago

ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது.
இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
https://adaderanatamil.lk/news/cmcfywyos00huqp4kvb8hv3bo
சீற்பெல்ற் பயணிகளுக்கும் அணிய ஏற்பாடு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது.
1 week ago
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே ‘Dream Destination’ திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். இதன்போது, வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, இக்ரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, தேசிய புலமைச் சொத்துரிமை அமைப்பின் (NIO) சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமடா, விளக்கினார்.மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். ‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. https://adaderanatamil.lk/news/cmcfw1soo00hqqp4kmp1pxvs0
1 week ago

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார்.
தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே ‘Dream Destination’ திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, இக்ரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, தேசிய புலமைச் சொத்துரிமை அமைப்பின் (NIO) சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமடா, விளக்கினார்.மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். ‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
https://adaderanatamil.lk/news/cmcfw1soo00hqqp4kmp1pxvs0