Aggregator
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?
முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும்.
அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும்.
நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு)
இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன.
வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது.
இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை.
பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும்.
சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்:
21.6.90: 20 தமிழர்கள் சுடப்பட்டனர். பின் வீரமுனையில் கைது செய்யப்பட்ட 90 தமிழர்கள் சம்மாந்துறை சந்தியில் வைத்து எரிக்கப்பட்டனர். 60 வீடுகள் எரிக்கப்பட்டன.
வீரமுனையில் கைதுசெய்யப்பட்ட 40 தமிழர்கள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் எரிக்கப்பட்டனர்.
25.6.90 சம்மாந்துறையில் 80 தமிழ் மக்கள் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.
1.7.90 சம்மாந்துறையில் 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 வீடுகள் எரிக்கப்பட்டன.
12.08.90 சம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீரமுனைக் கிராமத்தில் கோயில் ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த தமிழ் அகதிகளில் 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள் சிலர் தாக்கிக் கொலைசெய்தனர். மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்
19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள், 16 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்ட 9 பெண்கள், திருமணமான பெண்கள் 33பேர், மற்றும் வயோதிபர்கள் உட்பட 19 ஆண்கள் இந்தச் சம்பவத்தில் குத்தியும், வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டிருந்தனர்.)
27.6.90 வீரமுனையில் 360 வீடுகள் எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்:
06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா.
முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய: