Aggregator
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!
இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும்.
மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது.
இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர்.
மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார்.
தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை.
அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு
வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
Published By: DIGITAL DESK 3
03 JUL, 2025 | 10:15 AM
தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.