Aggregator

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

1 day 12 hours ago
03 Jul, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர | Virakesari.lk

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

1 day 12 hours ago

03 Jul, 2025 | 03:11 PM

image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர  | Virakesari.lk

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்

1 day 12 hours ago
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர் | Virakesari.lk

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்

1 day 12 hours ago

03 Jul, 2025 | 04:46 PM

image

இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன.

ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம்.

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது.

இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது.

எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. 

இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்  | Virakesari.lk

நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு

1 day 12 hours ago
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது. 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு | Virakesari.lk

நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு

1 day 12 hours ago

03 Jul, 2025 | 05:40 PM

image

நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க,

2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி  கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை  உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது.

2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 

ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது.

தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது  100,000 ஆக அதிகரிக்க வேண்டும்.  இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்.

தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு  பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட  வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாய்க்கடி அதிகரிப்பு :  நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு  | Virakesari.lk

யுக்ரேன் போர் வீரர்களின் உயிரை காப்பாற்ற காந்தம் உதவுவது எப்படி?

1 day 12 hours ago
பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார். கட்டுரை தகவல் அனஸ்தேசியா கிரிபனோவா மற்றும் ஸ்கார்லெட் பார்டர் பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது. அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர். ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் போராடியபோது இந்த துண்டு அவரது உடலில் நுழைந்தது. "முதலில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் பின்னர் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்" என்று பகிர்கிறார் செர்ஹி மெல்னிக். யுக்ரேன் போரில் டிரோன் பயன்பாடு தீவிரமடைந்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. டிரோன்கள் வெடிக்கும்போது, இதுபோன்ற சிறிய உலோகத் துண்டுகள் மக்களைக் காயப்படுத்தக்கூடும். போர்க்களத்தில் ஏற்படும் காயங்களில் 80 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என்று யுக்ரேன் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். செர்ஹியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும். "இந்த துண்டு கத்தியைப் போல கூர்மையாக இருந்தது. இந்தத் துண்டு பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்" என்று கூறுகிறார் செர்ஹி. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு புதிய மருத்துவ தொழில்நுட்பம் உள்ளது. அதுதான் 'உலோக துண்டை எடுக்கும் காந்தக் கருவி'. அறுவை சிகிச்சை எப்படி செய்யப்பட்டது? பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ செர்ஹி மெல்னிக்கின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டின் காட்சிகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஹி மக்ஸிமென்கோ காட்டினார். அந்த உலோகம், நுனியில் காந்தம் கொண்ட ஒரு மெல்லிய கருவியின் உதவியுடன் மிகக் கவனமாக அகற்றப்பட்டது. "இந்த சாதனம் இதயத்தில் பெரிய கீறல்கள் இடுவதற்கான தேவையை நீக்குகிறது," என்று மருத்துவர் மக்ஸிமென்கோ விளக்குகிறார். "நான் ஒரு சிறிய கீறலைச் செய்து, ஒரு காந்த கருவியை உள்ளே செருகினேன். அது உலோகத் துண்டை வெளியே இழுத்தது."என்கிறார் மக்ஸிமென்கோ. மருத்துவர் மக்ஸிமென்கோவும் அவரது குழுவினரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் 70 வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர். போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பார்வையை இந்தச் சாதனம் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, உடலில் நுழைந்த அத்தகைய துண்டுகளை அகற்றுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் போர் முனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மிகச் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, அத்தகைய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. வழக்கறிஞராக பணிபுரியும் ஓலே பைகோவ், இந்த காந்த சாதனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2014 முதல் யுக்ரேன் ராணுவத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார். போர் முனையில் பணியாற்றும் மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார் பைகோவ். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காந்தத்தைப் பிரித்தெடுக்கும் இந்த கருவி உருவாக்கப்பட்டது இருப்பினும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற காந்தங்களைப் பயன்படுத்துவது 1850களில் நடந்த கிரிமியன் போரில் கூட பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஓலே பைகோவ் மற்றும் அவரது குழு இந்த பழைய கருத்துக்கு ஒரு நவீன வடிவத்தை வழங்கினர். வயிற்று அறுவை சிகிச்சைக்காக அதன் நெகிழ்வான மாதிரிகளை அவர் உருவாக்கினார். மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அருமையான யோசனை பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, இந்த காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, இது ஒரு கனமான சுத்தியலைக் கூட தூக்கும். அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் துல்லியமானவையாகவும், குறைந்த கீறல்களுடன் நடைபெறும் வகையிலும் மாறியுள்ளன. காயத்தின் மேற்பரப்பில் ஒரு காந்தத்தை மெதுவாக இயக்குவதன் மூலம், உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை வெளியே இழுக்க முடியும். பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், உலோகத் துண்டு அகற்றப்படும். ஒரு மெல்லிய பேனா அளவிலான கருவியைப் பிடித்துக்கொண்டு, ஓலே அதன் சக்தியை நிரூபிக்கிறார். அதில் உள்ள காந்தத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு சுத்தியலைக் கூட தூக்கிக் காட்டுகிறார். அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. டேவிட் நோட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். "பொதுவாக, யோசிப்பதற்கு கூட கடினமான சில விஷயங்கள் போரில் உருவாகின்றன," என்று அவர் கூறுகிறார். இப்போது போரின் முகம் மாறிவிட்டது, இதுபோன்ற துண்டுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடலில் சிக்கிய அத்தகைய உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், இந்த சாதனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார் நோயாளிகளின் உடலுக்குள் இதுபோன்ற சிறிய துண்டுகளைத் தேடுவது "வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவது போன்றது" என்கிறார் அவர். அதேபோல், இந்தக் கருவியும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பல நேரங்களில், இது காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தும். "இதுபோன்ற சிறிய துண்டுகளை கையால் தேடுவது ஆபத்தானது. இதற்காக, பெரிய கீறல்கள் செய்யப்பட வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. எனவே அவற்றை ஒரு காந்தத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது மிகவும் நல்ல யோசனையாகும்" என்று டேவிட் கூறுகிறார். இந்தக் கருவி யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவில் விழுந்த ஏவுகணை துண்டு (கோப்பு படம்) போர் முனையில் சோதிக்கப்பட்ட இந்தக் கருவி, இப்போது யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளிலும் போர் முனையிலும் பணிபுரியும் ஆண்ட்ரி ஆல்பன் போன்ற மருத்துவர்களுக்கு இதுபோன்ற 3000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது இந்தக் கருவியைச் சார்ந்து உள்ளார்கள். இந்த மருத்துவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலும், பதுங்கு குழிகளிலும், தற்காலிக வெளிப்புற மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் மயக்க மருந்து இல்லாமலும் பணி புரிகிறார்கள். "வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களின் காயங்களுக்குக் கட்டு போடுவதும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதும் எனது வேலை" என்கிறார் ஆண்ட்ரி ஆல்பன். இருப்பினும், இந்தக் கருவிக்கு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று யுக்ரேன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், போர், ராணுவச் சட்டம் மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற சான்றளிக்கப்படாத சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. "போரின் உச்சத்தில் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு நேரமில்லை" என்கிறார் ஓலே. "யாராவது என்னுடைய வேலையை குற்றம் என்று நினைத்தால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தேவைப்பட்டால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அப்படியானால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைத்து மருத்துவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று ஓலே நகைச்சுவையாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் (சாதனத்தின்) சான்றிதழ் ஒரு முன்னுரிமை அல்ல என்று டேவிட் நாட் நம்புகிறார். காஸா போன்ற பிற போர் பகுதியிலும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். "போரில், இது (சான்றிதழ்) தேவையில்லை. மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்." லிவிவில் உள்ள செர்ஹியின் மனைவி யூலியா, தனது கணவர் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறார். "இந்தக் கருவியை உருவாக்கியவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிய யூலியா, "அவர்களால்தான் என் கணவர் இன்று உயிருடன் இருக்கிறார்" என்று கண்களில் கண்ணீருடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3njpl13gjo

யுக்ரேன் போர் வீரர்களின் உயிரை காப்பாற்ற காந்தம் உதவுவது எப்படி?

1 day 12 hours ago

யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக்

பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC

படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார்.

கட்டுரை தகவல்

  • அனஸ்தேசியா கிரிபனோவா மற்றும் ஸ்கார்லெட் பார்டர்

  • பிபிசி செய்தியாளர்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது.

அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர்.

ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன.

கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் போராடியபோது இந்த துண்டு அவரது உடலில் நுழைந்தது.

"முதலில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் பின்னர் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்" என்று பகிர்கிறார் செர்ஹி மெல்னிக்.

யுக்ரேன் போரில் டிரோன் பயன்பாடு தீவிரமடைந்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

டிரோன்கள் வெடிக்கும்போது, இதுபோன்ற சிறிய உலோகத் துண்டுகள் மக்களைக் காயப்படுத்தக்கூடும்.

போர்க்களத்தில் ஏற்படும் காயங்களில் 80 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என்று யுக்ரேன் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

செர்ஹியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும்.

"இந்த துண்டு கத்தியைப் போல கூர்மையாக இருந்தது. இந்தத் துண்டு பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்" என்று கூறுகிறார் செர்ஹி.

ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு புதிய மருத்துவ தொழில்நுட்பம் உள்ளது. அதுதான் 'உலோக துண்டை எடுக்கும் காந்தக் கருவி'.

அறுவை சிகிச்சை எப்படி செய்யப்பட்டது?

மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ.

பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC

படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ

செர்ஹி மெல்னிக்கின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டின் காட்சிகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஹி மக்ஸிமென்கோ காட்டினார். அந்த உலோகம், நுனியில் காந்தம் கொண்ட ஒரு மெல்லிய கருவியின் உதவியுடன் மிகக் கவனமாக அகற்றப்பட்டது.

"இந்த சாதனம் இதயத்தில் பெரிய கீறல்கள் இடுவதற்கான தேவையை நீக்குகிறது," என்று மருத்துவர் மக்ஸிமென்கோ விளக்குகிறார்.

"நான் ஒரு சிறிய கீறலைச் செய்து, ஒரு காந்த கருவியை உள்ளே செருகினேன். அது உலோகத் துண்டை வெளியே இழுத்தது."என்கிறார் மக்ஸிமென்கோ.

மருத்துவர் மக்ஸிமென்கோவும் அவரது குழுவினரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் 70 வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.

போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பார்வையை இந்தச் சாதனம் முற்றிலுமாக மாற்றியுள்ளது.

இதற்கு முன்னதாக, உடலில் நுழைந்த அத்தகைய துண்டுகளை அகற்றுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் போர் முனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மிகச் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, அத்தகைய சாதனங்கள் உருவாக்கப்பட்டன.

வழக்கறிஞராக பணிபுரியும் ஓலே பைகோவ், இந்த காந்த சாதனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2014 முதல் யுக்ரேன் ராணுவத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார்.

போர் முனையில் பணியாற்றும் மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார் பைகோவ். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காந்தத்தைப் பிரித்தெடுக்கும் இந்த கருவி உருவாக்கப்பட்டது

இருப்பினும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற காந்தங்களைப் பயன்படுத்துவது 1850களில் நடந்த கிரிமியன் போரில் கூட பயன்படுத்தப்பட்டது.

ஆனால் ஓலே பைகோவ் மற்றும் அவரது குழு இந்த பழைய கருத்துக்கு ஒரு நவீன வடிவத்தை வழங்கினர்.

வயிற்று அறுவை சிகிச்சைக்காக அதன் நெகிழ்வான மாதிரிகளை அவர் உருவாக்கினார்.

மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

அருமையான யோசனை

மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டன.

பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC

படக்குறிப்பு, இந்த காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, இது ஒரு கனமான சுத்தியலைக் கூட தூக்கும்.

அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் துல்லியமானவையாகவும், குறைந்த கீறல்களுடன் நடைபெறும் வகையிலும் மாறியுள்ளன.

காயத்தின் மேற்பரப்பில் ஒரு காந்தத்தை மெதுவாக இயக்குவதன் மூலம், உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை வெளியே இழுக்க முடியும்.

பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், உலோகத் துண்டு அகற்றப்படும்.

ஒரு மெல்லிய பேனா அளவிலான கருவியைப் பிடித்துக்கொண்டு, ஓலே அதன் சக்தியை நிரூபிக்கிறார். அதில் உள்ள காந்தத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு சுத்தியலைக் கூட தூக்கிக் காட்டுகிறார்.

அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. டேவிட் நோட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.

"பொதுவாக, யோசிப்பதற்கு கூட கடினமான சில விஷயங்கள் போரில் உருவாகின்றன," என்று அவர் கூறுகிறார்.

இப்போது போரின் முகம் மாறிவிட்டது, இதுபோன்ற துண்டுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடலில் சிக்கிய அத்தகைய உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், இந்த சாதனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார்

நோயாளிகளின் உடலுக்குள் இதுபோன்ற சிறிய துண்டுகளைத் தேடுவது "வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவது போன்றது" என்கிறார் அவர்.

அதேபோல், இந்தக் கருவியும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பல நேரங்களில், இது காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தும்.

"இதுபோன்ற சிறிய துண்டுகளை கையால் தேடுவது ஆபத்தானது. இதற்காக, பெரிய கீறல்கள் செய்யப்பட வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. எனவே அவற்றை ஒரு காந்தத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது மிகவும் நல்ல யோசனையாகும்" என்று டேவிட் கூறுகிறார்.

இந்தக் கருவி யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது

ஏவுகணை துண்டு (கோப்பு படம்)

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவில் விழுந்த ஏவுகணை துண்டு (கோப்பு படம்)

போர் முனையில் சோதிக்கப்பட்ட இந்தக் கருவி, இப்போது யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகளிலும் போர் முனையிலும் பணிபுரியும் ஆண்ட்ரி ஆல்பன் போன்ற மருத்துவர்களுக்கு இதுபோன்ற 3000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது இந்தக் கருவியைச் சார்ந்து உள்ளார்கள்.

இந்த மருத்துவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலும், பதுங்கு குழிகளிலும், தற்காலிக வெளிப்புற மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் மயக்க மருந்து இல்லாமலும் பணி புரிகிறார்கள்.

"வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களின் காயங்களுக்குக் கட்டு போடுவதும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதும் எனது வேலை" என்கிறார் ஆண்ட்ரி ஆல்பன்.

இருப்பினும், இந்தக் கருவிக்கு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று யுக்ரேன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இருப்பினும், போர், ராணுவச் சட்டம் மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற சான்றளிக்கப்படாத சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது.

"போரின் உச்சத்தில் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு நேரமில்லை" என்கிறார் ஓலே.

"யாராவது என்னுடைய வேலையை குற்றம் என்று நினைத்தால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தேவைப்பட்டால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அப்படியானால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைத்து மருத்துவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று ஓலே நகைச்சுவையாகக் கூறுகிறார்.

இந்த நேரத்தில் (சாதனத்தின்) சான்றிதழ் ஒரு முன்னுரிமை அல்ல என்று டேவிட் நாட் நம்புகிறார். காஸா போன்ற பிற போர் பகுதியிலும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

"போரில், இது (சான்றிதழ்) தேவையில்லை. மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்."

லிவிவில் உள்ள செர்ஹியின் மனைவி யூலியா, தனது கணவர் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

"இந்தக் கருவியை உருவாக்கியவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிய யூலியா, "அவர்களால்தான் என் கணவர் இன்று உயிருடன் இருக்கிறார்" என்று கண்களில் கண்ணீருடன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3njpl13gjo

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

1 day 12 hours ago
03 Jul, 2025 | 05:40 PM செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

1 day 12 hours ago

03 Jul, 2025 | 05:40 PM

image

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து  ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

1 day 12 hours ago
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

1 day 12 hours ago

03 Jul, 2025 | 07:14 PM

image

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த  27 வயதுடையவர் ஆவார்.

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர்  தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

1 day 13 hours ago
ஏராளன், இவ்வாறான ஒரு சம்பவத்தின் / செய்தியின் புதிய தகவல்கள் பல நாட்கள் கழித்து வருமாயின், அவற்றை புதிய திரி திறந்து பகிருங்கள். ஏற்கனவே உள்ள, பல நாட்களுக்கு முன்னர் திறந்த திரியில் இணைத்தால் அது பலரைச் சேர்ந்தடைய வாய்ப்புகள் குறைவு. நான் இந்த செய்தியை புதிய திரியாக மாற்றியுள்ளேன்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

1 day 13 hours ago
வாழ்த்துக்கள் விக்டோரியா. எனது அப்பாவின் ஆரம்பபாடசாலை விக்டோரியா, எனது தாய் வழி மூதாதைகள் பெயர் பலகையில் இடம்பிடித்திருக்கும் பரியோவானோடு மோதுகிறது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

1 day 13 hours ago
மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் : விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் அமைதிப் பேரணி 03 JUL, 2025 | 04:57 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219124

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

1 day 13 hours ago

மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் : விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் அமைதிப் பேரணி

03 JUL, 2025 | 04:57 PM

image

கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு  பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-07-03_at_4.45.19_PM.

WhatsApp_Image_2025-07-03_at_4.45.19_PM_

WhatsApp_Image_2025-07-03_at_4.45.21_PM_

WhatsApp_Image_2025-07-03_at_4.45.20_PM.

WhatsApp_Image_2025-07-03_at_4.45.21_PM.

https://www.virakesari.lk/article/219124

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

1 day 13 hours ago
மாத கட்டணம் 15,000 ரூபா (Light use: 12,000 per month) கொஞ்சம் ஓவர் தான், தொடக்க கட்டணமும் மிக அதிகம் 118,000 ரூபா 🙂 இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை - அறிவித்தார் இலோன் மாஸ்க் ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும். இலங்கைக்கான குடியிருப்பு தொகுப்பின் விலை மாதத்திற்கு ரூ. 15,000 ஆகும், மேலும் தேவையான வன்பொருளுக்கு ரூ. 118,000 கூடுதல் செலவாகும். இந்தத் தொகுப்பு வரம்பற்ற செயற்கைக்கோள் இணையத்தை வழங்குகிறது, இருப்பினும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. Selvakumar Natkunasingam

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

1 day 15 hours ago
2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது. எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும். அணிக்காக உழைத்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கள்! https://www.facebook.com/61550105270847/posts/122320356524003509/?rdid=uIRiwNPYoFHeoH2U#