Aggregator
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
Published By: RAJEEBAN
04 JUL, 2025 | 11:00 AM
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை" என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது.
செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன்
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன்
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன்
04 JUL, 2025 | 02:46 AM
வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தேசியமக்கள் சக்தி அரசு எடுத்துள்ளது.
அந்தவகையில் கடந்த 2012ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் கூகுள் வரைபடத்தின் மூலம் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது. அவை அனைத்தையும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது.
அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும் காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையினை நாம் மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளது. அதில் 221 குளங்கள் வனவளதிணைக்களத்தின் எலைக்குள் அமைந்துள்ளது. இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை மீளவும் புணர்நிர்மானம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும்.இந்த வருடத்திற்குள் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்பாசன குளங்கள் உள்ளன. அவற்றை புணரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணி விடுவிப்பின் முதற்கட்டமாக நெடுங்கேணியில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நேற்றயதினம் ஆரம்பித்து வைத்தோம். வவுனியா வடக்கு பிரதேச்செயலாளர்,வனவளதிணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கியானது ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவோம். என்று தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்
04 JUL, 2025 | 06:03 AM
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர்.
குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.
நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் காலமானார். https://www.virakesari.lk/article/219143
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது
04 JUL, 2025 | 10:55 AM
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04 ) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் மற்றும் IMF இன் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டன.
விரிவான கடன் வசதி திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வுகளின் போது செலுத்தப்படாத செலவுகள் தொடர்பாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் நடைபெற்றது.
IMF இற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை வேண்டுமென்றே நடைபெறவில்லை. இதற்கு காரணம், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களால் செலுத்தப்படாத தொகைகள் குறித்து உரிய நேரத்தில் அறிக்கையிடப்படாத பலவீனங்கள் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‘செலுத்தப்படாத தொகைகள்’ என்பதன் வரையறை தொடர்பாக அதிகாரிகளின் தவறான புரிதல் ஆகும்.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள், அதாவது, செலுத்தப்படாத தொகைகளை தற்போதைய நிதி கட்டமைப்பிற்குள் திருப்பிச் செலுத்துதல், மற்றும் எதிர்காலத்தில் செலுத்தப்படாத தொகைகள் குவிவதையோ அல்லது தவறான தகவல்கள் அறிக்கையிடப்படுவதையோ தவிர்க்க, புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க பொது நிதி முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை நிர்வாகக் குழுவால் நேர்மறையாக பரிசீலிக்கப்பட்டன.
இதன்படி, ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல்களுக்கு காரணமான அளவு செயல்திறன் அளவுகோல்களை பின்பற்றாதமைக்கு விலக்கு அளிக்க நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது, மேலும் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டது," என ஒகமுராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தில்ஷி அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம்
தில்ஷி அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம்
அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்?
பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவி 15 வயது தில்ஷி அம்சிகாவின் துயர தற்கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல உயர் மட்ட விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகும், இந்த வழக்கில் பொலிஸார் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
2024 ஒக்டோபரில் தனது முன்னாள் கணித ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்ஷி அம்ஷிகா ஏப்ரல் 29, 2025 அன்று கொட்டாஞ்சேனையில் உள்ள தனது வீட்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கூட்டம் அலரி மாளிகையில் கூட்டப்பட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சினாலும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராலும் நியமிக்கப்பட்ட குழுவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"ஆண் ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்படாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தனியார் கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் இடமாற்ற உத்தரவுகளைப் பெற்ற எட்டு ஆசிரியர்கள், அதிகாரிகளின் உத்தரவுகளைப் புறக்கணித்து, ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்னும் பணியாற்றி வருவதாகவும் CTU கவலை தெரிவித்துள்ளது.
ஜூலை 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதற்கு முன்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
https://www.tamilmirror.lk/செய்திகள்/அம்ஷிகா-விவகாரத்தில்-தாமதம்-ஏன்/175-360447
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!
வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்று நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் - என்றார்.
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்
இதுவரை 40 என்புத்தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் நான்கு மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 34 மனிதச் சிதிலங்கள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://newuthayan.com/article/சிறுவர்களின்_2_என்புத்தொகுதிகள்_செம்மணியில்_நேற்று_அடையாளம்