வண்ணத் திரை

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

6 days ago

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!


ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது.

ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை.

வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும்.

தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை.

"காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை.

hindutamil-prod%2F2025-12-19%2F1e5isibl%

ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.

சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்.

2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

அசாத்தியமான சாதனையாளர் : ஹாலிவுட் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்

1 week 4 days ago

'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

கட்டுரை தகவல்

  • ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ்

  • பிபிசி ரேடியோ 4

  • 13 டிசம்பர் 2025

அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது.

அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது.

ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான்.

ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார்.

காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர்.

மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images

படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார்.

காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை

டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர்.

அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று.

"அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்."

பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார்.

"ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே.

காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார்.

லிண்டா  கார்ட்டர்

பட மூலாதாரம்,CBS via Getty Images

படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார்.

சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை

கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை.

வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார்.

ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது.

அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது.

தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.

அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது.

ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார்.

ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது.

காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது.

அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார்.

பிரபலமான சண்டைக் காட்சிகள்

வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும்.

அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார்.

பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images

படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார்.

அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார்.

"நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது.

பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார்.

எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார்.

ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது.

தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images

படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார்.

அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது,

அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.

"எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன்.

எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா?

சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார்.

என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார்.

72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன்.

பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo

'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

2 weeks 2 days ago

'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

கங்கை அமரன்

பட மூலாதாரம்,x

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே.

1. செந்துாரப்பூவே...

'16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது.

முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், 'செந்தூர பூவே செந்தூர பூவே…ஜில்லென்ற காற்றே…' என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும்.

செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது.

"உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்" என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. 'செந்தூரப்பூவே' எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது.

கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

பட மூலாதாரம்,gangaiamaren

2. பூவரசம் பூ பூத்தாச்சு

கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக 'பூவரசம் பூ பூத்தாச்சு' பாடல்.

ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது.

3. புத்தம் புது காலை

அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.

கங்கை அமரன், இளையராஜா

பட மூலாதாரம்,gangaiamaren/Instagram

படக்குறிப்பு,இளையராஜாவுடன் கங்கை அமரன்

4. ஆசையை காத்துல துாதுவிட்டு

கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் 'ஆசையை காத்துல துாதுவிட்டு' . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது.

5. சின்ன மணி குயிலே

அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

அம்மன் கோவில் கிழக்காலே

பட மூலாதாரம்,Youtube

6. நித்தம் நித்தம் நெல்லு சோறு

மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா - ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார்.

7. பூங்கதவே தாள் திறவாய்

நிழல்கள் படத்தில் வரும் பாடல் 'பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்' இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள்.

8. என் இனிய பொன் நிலாவே

மூடு பனி படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பாடுவதாக அமைத்திருப்பார்.

9. என் ஜோடி மஞ்சக்குருவி

விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன்.

10. விளையாடு மங்காத்தா

மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25nk4yg50o

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

3 weeks ago

New-Project-53.jpg?resize=750%2C375&ssl=

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன்.

நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். 

இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது.

சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். 

இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால்  காலமானார். 

அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். 

இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது.

1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின்  பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். 

தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார்.

அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார்.

சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. 

அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார்.

அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம்.

https://athavannews.com/2025/1455129

இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்?

3 weeks 5 days ago

ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்?

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,Mythri Movie Makers

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன?

ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் படக் குழுவால் பயன்படுத்தப்பட்டன.

'ட்யூட்' படம் குறித்த சர்ச்சை என்ன?

'ட்யூட்' படத்தில், 'புது நெல்லு புது நாத்து' படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' பாடல், ரஜினி நடித்த 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, 'தனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு ட்யூட் படக்குழு அனுமதி பெறவில்லை' என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, 'அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம்' என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, 'ட்யூட்' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதித்துப் பாடல்களை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் தனது பாடல்களை படக் குழு பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,@Keerthiswaran_

படக்குறிப்பு,இளையராஜாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவரது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

'இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?'

படக் குழு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமையை எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. எக்கோவிடம் இருந்து சோனி நிறுவனம் வாங்கியது. நாங்கள் சோனி நிறுவனத்திடம் அனுமதியைப் பெற்று பாடல்களைப் பயன்படுத்தினோம்" எனக் கூறினார்.

ஆனால், "பாடல்களின் உரிமை தன்னிடம் உள்ளது. தனது பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி செந்தில்குமார், "30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்களைத் தற்போதும் மக்கள் ரசித்துக் கேட்கின்றனர். இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிப்படைகிறார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் படம் வெளியான பிறகு அமைதியாக இருந்துவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏன்?" எனவும் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

வெள்ளிக்கிழமையன்று வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தியதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும், 'ட்யூட்' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வார காலம் அவகாசம் தருமாறு படக்குழு கோரியது. ஆனால் நீதிபதி அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.

சிக்கலை சந்தித்த 'குட் பேட் அக்லி'

முன்னதாக, அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்திலும் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தப் படத்தில், 'இளமை இதோ...இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்' ஆகிய பாடல்களை படக்குழு பயன்படுத்தி இருந்தது. இந்தப் பாடல்களை சோனி நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு தெரிவித்தது.

வழக்கின் தீர்ப்பில், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து பாடல்களை நீக்கியதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.

இளையராஜா

பட மூலாதாரம்,Getty Images

காப்புரிமை பிரச்னை - எஸ்.பி.பி சொன்னது என்ன?

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார்.

'தன் இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி மேடைகளில் பாடக்கூடாது' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளப் பதிவு ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதைத் தெரிவித்திருந்தார்.

'முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதோடு, "இளையராஜா தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியுள்ளேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.

"சட்டம் பற்றிய அறியாமை காரணமாக இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடினேன். இனி சட்டத்தை மதித்து அதை ஏற்கப் போகிறேன். அதேநேரம் இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் விவாதங்களையும் எவரும் மேற்கொள்ள வேண்டாம்" எனவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, திரைப் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இண்டஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தினார்.

'இந்த நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது' என எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த ஆண்டு (2018 செப்டம்பர் மாதம்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், "என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடவுள்ளேன்," எனத் தெரிவித்தார்.

"தனது எந்தப் பாடலுக்கு உரிமை உள்ளது என்பதை இளையராஜா கூற வேண்டும். அப்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

இளையராஜா காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Getty Images

சிக்கலை சந்தித்த 'ராத்திரி சிவராத்திரி'

"கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுத்து வருகிறோம்" எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்.

"முன்னதாக, காப்புரிமை தொடர்பாக எக்கோ மற்றும் இண்ட்ரிகோ (INDRECO) நிறுவனங்களிடமும் பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது மேல்முறையீட்டில் உள்ளன" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, "பல்வேறு இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தது போலவே திரைப்படங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்."

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராசன்' படத்தில் 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியின்றி வனிதா விஜயகுமார் பயன்படுத்தியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை மாதம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.

'படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்கப்படும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சோனி நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று பாடலைப் பயன்படுத்தினோம்' என, வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு படத்தில் இருந்து பாடலை மட்டும் எடுப்பது என்பது இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை சட்டத்தில் வருவதாகக் கூறும் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், "கேசட்டுகளை வெளியிடும் உரிமையை எக்கோவுக்கு இளையராஜா வழங்கியிருந்தார். அவர்கள் அதை வேறு வகையில் பயன்படுத்தியதால் எக்கோ மீது வழக்கு தொடரப்பட்டது" எனக் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட போஸ்டர்

பட மூலாதாரம்,instagram

படக்குறிப்பு,இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

'மஞ்சுமல் பாய்ஸ்' படக் குழுவுக்கு நோட்டீஸ்

கடந்த 2024ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2008ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

கேரளாவை சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, 'குணா குகை வரை சென்று பார்க்கலாம்' என்ற முயற்சியில் அப்பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது குகையில் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை எவ்வாறு மீட்டனர் என்பதே கதை.

அதில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்தில் இடம் பெற்றிருந்த 'கண்மணி அன்போடு' பாடலை படக் குழு பயன்படுத்தியிருந்தது.

இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவரே அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டது.

"மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளோம். மிஸ்டர் அண்ட் மிஸஸ், குட் பேட் அக்லி, ட்யூட் ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது" என பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

இளையராஜா பாடல் காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Facebook

படக்குறிப்பு,இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்

காப்புரிமை சர்ச்சை தொடங்கிய பின்னணி

தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை இளையராஜா தொடங்கினார். தற்போது வரை இந்திய மொழிகளில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியில்லாமல் அகி, எக்கோ ஆகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் அவற்றுக்குத் தடை விதிக்குமாறு 2018ஆம் ஆண்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், "படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்த தடை இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். வழக்கின் முடிவில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் வழக்கு தொடர்வதில்லை?

இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு காப்புரிமை மற்றும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தரும் வகையில் இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டி (IPRS) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சட்டபூர்வமாக இசையைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை சங்கமாக இசையமைப்பாளர்களுக்கு உதவி வருவதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.

தாங்கள் உருவாக்கும் இசைக்கு நியாயமான ஊதியத்தை இசையமைப்பாளர்கள் பெறுவதை தாங்கள் உறுதி செய்வதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இளையராஜா அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனது அனைத்துப் பாடல்களின் உரிமையையும் நான் வைத்திருக்கிறேன். ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் எனது பாடல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் காப்புரிமைத் தொகை சினி இசைக் கலைஞர்கள் சங்கத்திற்குச் செல்லும்" எனக் கூறியிருந்தார்.

சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டியில் இருந்து இளையராஜா வெளியேறியதால், அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டது என்கிறார் சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

"ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறிய பிறகே காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன" என்கிறார், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட இசையமைப்பாளர்கள் பலரும் ஐபிஆர்எஸ் அமைப்பில் உள்ளனர். உலகில் எங்கு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதைக் கண்டறிவதற்கான மென்பொருளை இந்த அமைப்பு வைத்துள்ளது" எனக் கூறுகிறார்.

"இசையைப் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான ராயல்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இசையமைப்பாளர்களுக்கு அந்த அமைப்பு வழங்கி வருகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறியதால், தனது பாடல்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஆர்.எஸ்.அந்தணன்.

"தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ஐபிஆர்எஸ் அமைப்பே சட்டரீதியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருகிறது. இதனால் அவர்களின் பெயர்கள் நேரடியாக வெளியில் தெரிவதில்லை" எனவும் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20kggpenm8o

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன்

1 month 1 week ago

தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும்  உண்டாவுவதாக.

நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது.....

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன்

வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டியலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்து நினைவில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந்தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). 

01.bmp

மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் ஷா க்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும் ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவே பார்க்காத அவர், இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குநர் ஆனார்.

இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.

வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார்.

அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமா’ நூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வமாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்’ படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார்.

02.JPG

படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார்.

நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது.

''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை’ என்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!''

''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்’ என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!''

03.JPG

''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள்?''

''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்’ எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார்.

''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம்.

இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடு’ என்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்’ படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர்களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார்.

04.JPG

''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!''

''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார்.  ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.

''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன்.  

''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை.

எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்’ படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம்.

05.JPG

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும்.

என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம்.

இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது.

என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!''

''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.


''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்’ சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார்.

விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது  சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!''

வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார்.

மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார்.

மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார்.

''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?''

''ஒன்றுகூடப்  பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடா’ இரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார்.

''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார்.

விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது.

இடுகையிட்டது யாஸிர் அசனப்பா.

இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

4 கருத்துகள்:

  1. blank.gif

    Kumaran3 ஏப்ரல், 2012 அன்று 7:53 AM

    என்னை ஆழமாக சிந்திக்க வைக்க மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களது பகிர்வு..ஒரு உலகத்தர கலைஞனை பற்றியும் உண்மையான சினிமா மீதான அவரது பார்வையையும் தெரிந்துக்கொள்ள வழிவகுத்தது..தங்களை எத்தனை பாராட்டியும் தகும்.மிக்க நன்றி சகோ.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:57 PM

      @குமரன்,

      மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகனாக வேண்டும் என்றால் பிச்சை எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு இயக்குனர், நம் தமிழ் சினிமாவில் வந்தால் எந்த நடிகரின் மகனும், இயக்குனரின் மகனும், தயாரிப்பாளரின் மகனும் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது.

      அது மாதிரியான ஒரு இயக்குனருக்காக காத்திருக்கும் ஒரு சினிமா ரசிகன்.

    2. பதிலளி

  2. blogger_logo_round_35.png

    aravintraj3 ஏப்ரல், 2012 அன்று 10:28 AM

    இந்த பதிவினை நமது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பொறியியல் கல்லுரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவை எப்படி வணிகமயமாகி விட்டதோ அதைவிட அதிகமாக நமது திரைப்படத்துறை வணிகமயமாகியுள்ளதை இப்பதிவை படித்தபோது தான் புரிகிறது. இவரை போன்றவர்களைத் தான் திரைப்பட கலைஞர்கள் என கூற வேண்டும். நம் கோலிவுட், பாலிவுட் அனைத்தும் கூத்தாடிகள் என்று தான் கூற வேண்டும்.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:59 PM

      @ அரவிந்த் ராஜ்,

      மறுமொழியிட்டமைக்கு நன்றி,

      கோடி, கோடியாக பணம் சொரிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், என் நடிகனுக்கு நான் ஒரு சிறியதாக வீடு கட்டிக் கொடுத்தேன், அது தான் நான் அவனுக்கு கொடுத்த ஊதியம் என்று சொல்லும் இந்த இயக்குனர் எனக்கு வித்தியாசமாக தெரிகின்றார்.

https://civilyasir.blogspot.com/2012/04/blog-post.html

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு.

1 month 2 weeks ago

16-11-2025-11-11-17-43-06.jpg

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கலை இயக்குநராக வலம் வருபவர் தோட்டா தரணி. இந்தியாவை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன், தளபதி, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களின் கலை அமைப்புகள் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நாயகன் மற்றும் இந்தியன் படத்திற்காக தேசிய விருதை இவர் வென்றிருந்தார். மேலும் இவரது பணியை கௌரவித்து 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு கொடுத்தது. 

https://www.nakkheeran.in/cinema/thotta-tharani-to-get-chevalier-award-10648012

அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்

1 month 2 weeks ago

அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்?

அபினய், நடிகர், துள்ளுவதோ இளமை

பட மூலாதாரம், @abikinger/Instagram

10 நவம்பர் 2025

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார்.

செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'.

2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள்.

நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது.

பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.

இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார்.

ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது.

அபினய், நடிகர், துள்ளுவதோ இளமை

பட மூலாதாரம், @abikinger/Instagram

இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார்.

அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார்.

அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர்.

அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர்.

ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg4p7y0dkqo

கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்

1 month 2 weeks ago

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது.

96 நடிகை கெளரி கிஷன்

96 நடிகை கெளரி கிஷன்

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது.

அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம்.

அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்.

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்?

இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது.

OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்.

அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்

அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்

இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம்.

எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை.

இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை.

ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்.

இயக்குநர் பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார்

இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி!

இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Gouri Kishan: ``செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்" - இயக்குநர் பிரேம் குமார் | Gauri Kishan: ``Action determines our worth'' - Director Prem Kumar

எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….

1 month 4 weeks ago

yugabarathi.jpg?w=300&h=142

ஒரு முன்குறிப்பு :
=========
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு கதைக்கப்போகிறேன்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் முன்னரே தமிழ் திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாசங்கள்…. வக்கிரங்கள்… பகுத்தறிவற்றதனங்கள் குறித்தெல்லாம் எனது ”வாலி + வைரமுத்து = ஆபாசம்” என்கிற நூலில் துவைத்துக் காயப்போட்டு விட்டபடியால் மீண்டும் அவற்றுள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.
.
இங்கு பேசப்போவது தம்பி யுகபாரதியின் நூல்குறித்து மட்டுமே. இந்நூல் குறிப்பிடும் பாடலாசிரியர்களில் மகத்தான பாடல்களைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்…. கெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

எனவே இது இப்பாடலாசிரியர்களின் பாடல்களைக் குறித்த யுகபாரதியின் பார்வையினூடே பயணிக்கும் ஒரு பயணம்தான்.
.
இனி….

.
neetraiya-kaarru-wrapper.jpg?w=219&h=300

சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கவிஞர் யுகபாரதி எழுதிய தொடர் ஒன்றின் நீட்சிதான் இந்த “நேற்றைய காற்று.”
.
வார இதழ்களுக்கே உரிய பக்க நெருக்கடியால் சொல்லாமல் விட்டவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அளித்திருக்கிறார். அதுவும் ஐநூறைத் தொடும் பக்கங்களோடு.
.
இதைப் பற்றி எழுத உட்காரும்போதெல்லாம் யுகபாரதி குறிப்பிடும் பாடல்களைச் சுற்றியும்… கவிஞர்களைச் சுற்றியும் வட்டமிட ஆரம்பித்துவிடும் மனம்.
.
அப்புறம் சும்மாவா இருக்க முடியும் ?
.
யுகபாரதி ஒரு பாடல் குறித்துக் குறிப்பிட்டால் உடனே அதைக் கேட்டாக வேண்டும் என்கிற ஆவல் எழுந்து யூடியூப்பில் பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
.
மனம் அந்தப் பாடல்வரிகளில் மிதக்கத் தொடங்கிவிடும். இப்படியே யூடியூப்பில் மூழ்கிக் கிடந்தால் அப்புறம் எப்போதுதான் எழுதுவது? ச்சை…. முதலில் இதை நிறுத்தித் தொலைக்க வேண்டும் என முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பதற்குள் மூன்று நான்கு வாரங்கள் கடந்தோடி விட்டது.
.
வெறுமனே பாடல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல்…

அந்தப் பாடலாசிரியர் பயணித்த பாதை எது…?

எந்த சித்தாந்தம் அவரை இப்படிப் பயணிக்க வைத்தது…?

அந்த வேளையில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்தாந்ததிற்கு அவர்கள் எப்படி உரமூட்டினார்கள் என்பது குறித்தெல்லாம் விரிவாக…. மிக விரிவாகப் பேசுகிறது “நேற்றைய காற்று”.
.
யுகபாரதி முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல “மொழியறியாத ஒருவர் இசையமைப்பாளர் ஆகலாம்…
.
இனமறியாத ஒருவர் இயக்குநராக ஆகலாம்…
.
ஆனால், தமிழைப் பிழையற அறியாதவர்களோ, தமிழினத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களோ பாடலாசிரியராக ஆக முடியாது.”
உண்மைதான்.

.
ஆனால், இப்போது பாடல் எழுதிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இந்த மொழி குறித்தும், இனம் குறித்தும் புரிதல் உள்ளவர்கள்? என்கிற கேள்வியும் யுகபாரதிக்குள் எழமலில்லை.
.
ஆனால் அவற்றுக்குள் தலையை நீட்டி சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர்.
.
திரைத்துறைக்கு வெளியில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அடித்து ஆடலாம். ஆனால் தம்பியைப் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டால் அது பொறாமையின் நிமித்தமும், போட்டியின் நிமித்தமும் எழுந்ததாகவே பொருள் கொள்ளப்படும்.
.
ஆயினும் அவ்வப்போது நாசூக்காகச் சுட்டியும் செல்கிறார்.
.
யுகபாரதி தேர்ந்தெடுத்து எழுதியுள்ள இருபது பாடலாசிரியர்களில் கண்ணதாசனோ, கல்யாணசுந்தரமோ, வாலியோ, வைரமுத்தோ இடம்பெறவில்லை.
.
பரவலாக அறியப்பட்ட இவர்கள் குறித்து எழுதுவதை விட…. இன்னமும் விரிவாக அறிந்தாக வேண்டிய கவிஞர்களின் மீது கவனம் குவித்திருக்கிறார்.
.
நா. காமராசன் / புலமைப்பித்தன் / கவி. கா.மு. ஷெரீப் / உடுமலை நாராயணகவி / அறிவுமதி / மருதகாசி / பஞ்சு அருணாசலம் / ஆலங்குடி சோமு / கங்கை அமரன் / மு. மேத்தா என நீளுகிறது அப்பட்டியல்.
.
இவர்களில் திராவிட இயக்கச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு…
.
பொதுவுடைமைச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு….
.
தமிழ்த் தேசிய சிந்தனை மரபில் வந்தவர்களும் உண்டு.
.
.
தனது “கருப்பு மலர்கள்” கவிதைத் தொகுப்பால் அதிரவைத்த நா. காமராசனை ”சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என “நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் பாடலைச் சொன்னால் சட்டெனப் புரியும் பலருக்கு.
.
அறுபதுகளில் பிறந்தவர்களுக்கோ நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடலும் அதில் வரும்….
.
“நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ” என்கிற வரிகளும் வந்துபோகும்.

na-kamarasan.jpg?w=300


வானிலே தேனிலா பாடுதே / வெளக்கு வெச்ச நேரத்திலே / பாட்டுத் தலைவன் பாடினால் போன்ற பாடல்களைக் கொடுத்த நா. காமராசனின் பாடல்களில் என்னை இன்னமும் இதமாக வருடும் பாடலும் ஒன்றுண்டு.
.
அதுதான் :
.
’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும்…. “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்கிற பாடலும்….
.
அதில் வரும்
”புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ / சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ “ என்கிற வரிகளும்தான்…
.
நா. காமராசனின் பாடல்களோடு நிற்காது அவருக்கும் கலைஞருக்கும் இருந்த தொடர்பு…

அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு…

அவரது அதிரடி பேச்சு என பல்வேறு சுவையான செய்திகளையும் சொல்கிறார் யுகபாரதி.
.
.
”எனக்கு வியாபார புத்தியும் இல்லை. விளம்பர யுக்தியும் தெரியவில்லை.” என வருந்திய புலமைப்பித்தன் கோவை சூலூரில் மரத்தடி பள்ளியில் தமிழ் பயின்று தமிழாசிரியராய் உயர்ந்து எழுதிய பாடல்கள் ஏராளம்.
.
”பழுதுபார்த்து ஒதுக்க முடியாத பாடல்களை மட்டுமே எழுதிய பாடலாசிரியர்களாக இருவரைக் கொள்ளலாம்.
.
ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மற்றொருவர் புலமைப்பித்தன்” என்கிறார் யுகபாரதி.
.
1966 இல் வெளிவந்த ’குடியிருந்த கோயில்’ திரைப்பட்த்தில் வரும் “நான் யார், நான் யார் நீ யார்?” பாடலில் தொடங்குகிறது புலமைப்பித்தனின் திரையுலகப் பயணம்.

pulamaipithan.jpg?w=624
.
அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள பாடல்களின் பட்டியல் நீளமானது.
.
”நாயகனில்” வரும்…
”நீயொரு காதல் சங்கீதம் / வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…”
.
”நீதிக்குத் தலை வணங்கு” படத்தில் வரும் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்….”
.
”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”யின் “உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி…”
.
’அடிமைப்பெண்’“ணின் “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…” என ஏராளம் எழுதிக் குவித்திருக்கிறார் புலவர்.
.
தம்பி யுகபாரதி ”ஜோக்கரில்” எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” பாடலுக்கான உந்துதலே புலவர் எழுதிய ”நீதிக்குத் தண்டனை” திரைப்படத்தில் வரும் “ஓ மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்” பாடல்தான் என்பது யுகபாரதியின் கருத்து.
.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கலைஞரின் படங்களுக்குப் பாடல் எழுதும் துணிச்சல் புலவர் புதுமைப்பித்தனுக்கு இருந்திருக்கிறது.
.
திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவரது “புரட்சிப் பூக்கள்” கவிதை நூல் குறித்து…
.
தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் இருந்த நேசம்
.
குறித்தெல்லாம் விரிவாகச் சிலாகிக்கிறார் யுகபாரதி.
.
எனது மனதைத் தொட்ட பாடல்கள் வரிசையில் அவர் அழகன் திரைப்படத்தில் எழுதிய “சாதி மல்லிப் பூச்சரமே” பாடலுக்கு பிரதான பங்கிருக்கிறது.
.

.
”ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” என நம்மைக் கேட்ட கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
.
போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.
.
கலைஞரின் நண்பராயினும் தமிழரசுக் கட்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தவர். மதத்தைத் தாண்டிய மனிதநேயத்தை முன்னிறுத்தியதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம் கவிஞர் கா.மு. ஷெரீப்பை.

ka.mu_.sheriff.jpg?w=624
.
“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற கவிஞர் “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
.
”ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” பாடல் தந்த உந்துதலே தன்னை ”ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கு போட்டு” என எழுத வைத்ததென்பது யுகபாரதியின் வாக்குமூலம்.
.
திரைத்தமிழை எதார்த்த தத்துவத் தளத்திற்கு இழுத்து வந்ததில் கவிஞர் கா.மு. ஷெரீப்பிற்கு பெரும் பங்குண்டு.
.
”கவிஞன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைமாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடன் எழுத வேண்டும்.”
.
என்ற கா.மு. ஷெரீப்பை இத்துறையில் இருந்து சந்நியாசம் வாங்க வைத்ததே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் / அவன் மாம்பழம் வேண்டுமென்றான்” என்கிற வாலியின் பாடல்தான்.
.
“என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் அது” என்று 1986 பத்திரிகை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
.
இந்நூலில் பாடலாசிரியர்களது திரையுலக அனுபவங்களை மட்டுமல்லாது அவர்களது அரசியல் அனுபவங்களையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் யுகபாரதி கா.மு. ஷெரீப்பிற்கு ஏற்பட்ட ஒரு சோகத்தையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறார்.
.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழரசுக் கழகத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்ட அவருக்கு அதன் தலைவர் ம.பொ.சி. கொடுத்த ”அல்வா” பற்றிய சம்பவம்தான் அது.
.
ம.பொ.சி. யின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டிற்கு ஐம்பது பவுன் தங்கம் வழங்கத் திட்டம் போடுகிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஐம்பது பவுனுக்கான தொகை வசூலாவதில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
.
இத்தனைக்கும் அப்போது மோடி கிடையாது.
.
அதைப் பார்த்த அக்கழகத்தின் பொதுச் செயலாளரான கா.மு. ஷெரீப் தன் மனைவி கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றி அவரது தலைவர் ம.பொ.சி. கழுத்தில் போடுகிறார்.
.
அதில்தான் அத்தலைவருக்கான காரே வாங்கப்படுகிறது. ஆனாலும் ”தலைவர்” தான் எழுதிய “எனது போராட்டம்” என்கிற போராட்ட காதையில் கா.மு. ஷெரீப் அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வரிகூட குறிப்பிடவில்லை என்பதுதான் அதிலுள்ள சோகம் என்கிறார் தம்பி யுகபாரதி.
.
.
பராசக்தி படத்தில் ”கா… கா… கா…” பாடலில் வரும் ”எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே / வலுத்தவன் இளைத்தவன் இனச்சண்டை பணச்சண்டை / எத்தனையோ இந்த நாட்டிலே “ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஐம்பதுகளிலேயே இப்படியொரு கருத்தாழம்மிக்க பாடலை யார் எழுதியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
.
பிற்பாடுதான் தெரிந்தது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது.
.
திராவிட இயக்கக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு இவரையே சாரும்.

udumalai-narayana-kavi.jpg?w=624
.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணகவிக்கு தமிழையும் கலையையும் கற்றுத் தந்தவர் முத்துசாமிக் கவிராயராம்.
.
பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுக் கொண்டவர் நாராயணகவி.
.
சோவியத்து ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்த பெரியாருக்கு கலைத்துறையினர் பாராட்டுவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய… வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார் பெரியார்.
.
ஆனால் அவசியம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என நாராயணகவி வேண்டுகோள் விடுக்க…
.
”யாருக்காக இல்லாவிட்டாலும் நாராயணகவிக்காகக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி கலந்து கொண்டிருக்கிறார் பெரியார்.
.
திரைத்துறை மீது அவ்வளவு நல்ல எண்ணம் இருந்ததில்லை பெரியாருக்கு என்பது ஊரறிந்த ரகசியம்.
.
ஆனால் அவரையே யோசிக்க வைத்த பாடல் உண்டென்றால் அது ”டாக்டர் சாவித்திரி” படத்தில் இடம்பெற்ற “காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு” என்கிற நாராயணகவியின் பாடல்தான்.
.
அவருக்கும் கலைவாணருக்கும் இருந்த உறவு….
.
அவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் இருந்த உறவு என இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யுகபாரதி.
.
இதில் சுவாரசியமான ஒரு தகவல் உண்டென்றால் அது உடுமலையார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கன்னத்தில் விட்ட அறைதான்.
.
தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான “உலகே மாயம், வாழ்வே மாயம்” பாடல் பதிவின் போது நடந்த சம்பவம்தான் அது.
.
நாராயணகவி எழுதிய அப்பாடலை பாடிய கண்டசாலா தமிழையும் தெலுங்கு போல உச்சரித்து “உல்கே மாயம், வால்வே மாயம்” எனப் பாட ”தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்?” என்று விழுந்திருக்கிறது அறை எம்.எஸ்.வி.க்கு.
.
இதைச் சொல்லிவிட்டு ஆனால் அதற்குப் பிறகு தம்பி யுகபாரதி சொல்வதுதான் உச்சகட்டமான சமாச்சாரம். அதை அவரது வரிகளிலேயே சொல்வதானால்….
.
“காலத்திற்கேற்ப பாடுவதாகச் சொல்லிக் கொண்டு, என்னுடைய பலபாடல்களை இந்தப் பாடகர்கள் கொன்று புதைத்திருக்கின்றனர்.
.
இசையமைப்பாளரை அறையக்கூடிய கவிராயர்கள் இப்போதில்லை என்பதல்ல, எழுதக்கூடிய கவிராயர்கள் பலருக்கே தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை.” என்கிற யுகபாரதியின் ஆதங்கத்துக்கு யார் ஆறுதல் சொல்வது?
.
.
என்னடா இவன் இன்னும் அறுபதுகளையே தாண்டவில்லையே எப்போது இவன் நம்ம காலத்துக்கு வந்து சேரப் போகிறான் என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது.
.
என்ன செய்வது…. நேற்றைய செய்திதானே நாளைய வரலாறு…?
.
.
இசைஞானியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் பக்கம் வருவோம். 1962 இல் அவர் எழுதிய “மணமகளே மருமகளே வா வா” என எழுதிய அந்தப் பாடல்தான் தமிழக மக்கள் மத்தியில் அவரைப் பிரபலப்படுத்தியது.
.
இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று. நமது நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிடும் பாடல்களில் ஏகப்பட்ட பாடல்கள் பஞ்சு அருணாசலத்தினுடையவைதான்.
.
panchu-arunachalam.jpg?w=300&h=187
.
”சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” /

”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” /

“கண்மணியே காதலென்பது” /

“அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” /

“பருவமே புதிய பாடல் பாடு” /

“விழியிலே மலர்ந்தது” /

“ராஜா என்பார் மந்திரி என்பார்” /

“குயிலே கவிக்குயிலே” /

”தூரத்தில் நான் கண்ட உன்முகம்” என எண்ணற்ற அற்புதமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
.
அவர் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்றால் 1965 இல் வெளிவந்த ”கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” என்கிற பாடல்தான்.
.
இளையராஜாவின் ஆளுமையைப் புகழ்வதற்கென்றே எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
.
ஆனால் அவர் வசனம் எழுதிய இயக்கிய படங்களில் சிலவற்றில் பெண்கள் பற்றிய பார்வை பிற்போக்கானவைதான் என்பதை யுகபாரதியும் ஒப்புக் கொள்கிறார்.
.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இங்கு நூல் குறித்து மட்டுமே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதால் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறேன்.
.
அதை வேறொரு தளத்தில்… வேறொரு தருணத்தில் பார்ப்போம்.
.
.
அடுத்ததாக யுகபாரதி சிலாகித்து எழுதியிருக்கிற ”அண்ணன்” எனக்கும் அண்ணன் தான்.
.
அதுதான் பாவலர் அறிவுமதி.
.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ”சிறைச்சாலை” படத்தின் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போயிருக்கிறேன் நான்.
.
அதிலும் அதில் வரும்…

ஆசை அகத்திணையா /

வார்த்தை கலித்தொகையா /

அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா… என்கிற வரிகளாகட்டும்….

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ /
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ?

என்கிற வரிகளாகட்டும்….
.

”நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ?

பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ…?” என வளைய வரும் வரிகளாகட்டும் இன்றும் என் பொழுதுகளை இனிமையாக்கக் கூடியவை.

arivumathi.jpg?w=300&h=185
.
பலநாட்கள் யார் எழுதியது என்பதை அறிந்து கொள்ளாமலேயே “முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன” பாடலை ரசித்திருக்கிறேன்.
.
பாலு மகேந்திரா இயக்கி இளையராஜா இசையில் வெளிவந்த ”ராமன் அப்துல்லா” படப்பாடல் அது.
.
அதில் வரும் ”நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை….”
.
“உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்… “ என்கிற அறிவுமதியின் வரிகள் கிறக்கம் வரவழைப்பவை.
.
”சேது”வில் வரும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை”யாகட்டும்…
.
”மாலை என் வேதனை கூட்டுதடி…”யாகட்டும் எல்லாம் அறிவுமதியின் சாதனையைக் கூட்டும் பாடல்கள்தான்.
.
அவரது பாடல்களை விடவும் நாம் கொண்டாட வேண்டிய குணாம்சம் ஒன்று இருக்கிறதென்றால் அது அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றம்தான்.
.
எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூற்று உரைக்கான மறுப்பாகட்டும்….
.
மணிரத்னத்தின் ”இருவர்” படத்துக்கான எதிர்ப்பாகட்டும்….
.
எல்லாமே அவரது அறச்சீற்றத்தின் அடையாளங்கள்தான்.

”மதுரை வீரன் தானே”….

“அழகூரில் பூத்தவளே”…

“தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்”…

”பொய் சொல்லக்கூடாது காதலி”… என நீண்டுகொண்டே போகும் பாவலர் அறிவுமதியின் பட்டியல்.
.
.
அரசவைக் கவிஞர் பதவியைப் பெற்ற கடைசிக் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய

மாஞ்சோலைக் கிளிதானோ /

muthulingam.jpg?w=300&h=225

பொன்மானத் தேடி /

இதயம் போகுதே /

சங்கீதமேகம் என பலபாடல்களைக் குறிப்பிடுகிறார் “நேற்றைய காற்றில்.”
.
.
.
இந்த நூலைப் படிக்கும் வரையில்கூட “மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே” பாடலை எழுதியவர் நிச்சயம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
.
ஆனால் 1956 இல் வெளிவந்த ”தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி.
.
அதைப் போலவே “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” பாடலை எல்லோரும்கண்ணதாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை எழுதியவரும் மருதகாசிதான் என்கிற செய்தியை உரக்கச் சொல்கிறார் யுகபாரதி.

maruthakasi.jpg?w=300&h=170
.
மருதகாசி அவர்களின் ”சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா….”

”காவியமா நெஞ்சின் ஓவியமா…”

”மணப்பாற மாடுகட்டி….”

”சமரசம் உலாவும் இடமே…” போன்ற அற்புதமான பாடல்கள் தோன்றிய விதம்…

அதன் பின்னே ஒளிந்திருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என நம்மை அழைத்துக் கொண்டு போகிறது ”நேற்றைய காற்று.”
.
.

ஆலங்குடி சோமுவின்…

”உள்ளத்தின் கதவுகள் கண்களடா”

alangudi-somu.jpg?w=202&h=300

“பொன்மகள் வந்தாள்”

”மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சு” போன்ற பாடல்கள் குறித்தும்….
.
.

கு.மா. பாலசுப்ரமணியத்தின்…

”அமுதை பொழியும் நிலவே”
.
”சிங்கார வேலனே தேவா”
.
”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே”
.
”இன்பம் பொங்கும் வெண்ணிலா” போன்ற நினைவை விட்டு அகலாத பாடல்கள் குறித்தும்….
விலாவாரியாகச் சொல்கிறது தம்பி யுகபாரதியின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு.
.
.
இங்கு சொன்னதை விடவும் நான் சொல்லாமல் விட்டதே அதிகம்.
.
உண்மையில் இந்தநூல் ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கான சகல தகுதியும் கொண்ட ஆய்வேடு என்றுகூட சொல்லலாம்.
.
அவ்வளவு சுவாரசியம்மிக்க தகவல்கள்.
.
தன் சமகாலத்துக் கவிஞர்கள் குறித்தும் இதில் விடுபட்ட முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் குறித்தும் அடுத்தடுத்து வரும் தனது தொகுப்பில் சேர்க்க இருக்கிறார் யுகபாரதி. அதன் பொருட்டு அவற்றை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறார்.
.
வரிக்கு வரி…. பக்கத்திற்குப் பக்கம்… சுவாரசியமூட்டும் இந்நூல் எனது பல பொழுதுகளை இனிமையாக்கியது.
.
எனது காலக்குதிரையை பின்னோக்கி பயணிக்க வைத்ததில் தம்பி யுகபாரதியின் இப்புத்தகத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது.
.
எனவே….. யான் பெற்றதை நீங்களும் பெற…
.
“நேற்றைய காற்றை”…

https://pamaran.wordpress.com/2019/12/04/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்..!

2 months ago

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 02:51 PM

image

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய சபேஷ், மற்றொரு சகோதரரான முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனியாக இவர் 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அத்துடன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

இவருடைய மகன் கார்த்திக் சபேஷ், திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய், சபேஷின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று (அக்.23) உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்கு நடிகர்கள், இசைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/228460

இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்

2 months ago

இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்

Mohanraj ThangavelPublished: Wednesday, October 22, 2025, 18:29 [IST]

சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது.

Dude Movie Director Notable Speech At Thanksgiving Meet Dude Success

Also Read

Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே!

Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே!

அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது.

கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

Dude Movie Director Notable Speech At Thanksgiving Meet Dude Success

Recommended For You

Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர்

Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர்

பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

https://tamil.filmibeat.com/news/dude-movie-director-keerthishwaran-notable-speech-at-thanksgiving-meet-dude-success-165641.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards

பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

2 months 1 week ago

திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது.

இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன.

இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்!

இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது.

நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி.

சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள்.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன்.

தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே.

குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு. 

சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை.

‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம்.‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது.

நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான். 

பைசன் விமர்சனம்; துரூவ் விக்ரம், அனுபமா, பசுபதி, அமீர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் எப்படி இருக்கு? | Bison Review; How is Bison directed by Mari Selvaraj starring Dhruv Vikram, Anupama and Ameer?

‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?

2 months 1 week ago

‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?

1380083.jpg

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், தனது ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்தார். தொடர்ந்து ஜென் ஸீ தலைமுறையினரின் வரவேற்பை பெற்று வரும் பிரதீப், ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தாரா என்பதை பார்ப்போம்.

பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார்.

இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘டியூட்’ படத்தின் திரைக்கதை.

முன்பே சொன்னது போல ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து கொடுத்து வருகிறார் பிரதீப். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி, நடிக்கும் படமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த ‘டியூட்’ படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகளும் அதனூடே டைட்டிலை அறிமுகம் செய்த விதமும் பக்கா தியேட்டர் மெட்டீரியல். அதிலும் மாப்பிள்ளையிடம் பிரதீப், “தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ?” என்று கேட்கும் இடமெல்லாம் அரங்கம் அதிர்கிறது.

இதுபோல படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் ஸீ தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் சரத்குமாரிடம் மமிதா பைஜு பேசும் இடம் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு. பல இடங்களில் நகைச்சுவை நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் பெரும் பலமும் அதுதான்.

17606837881138.jpg

பிரதீப் ரங்கநாதனின் மேனரிசத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். அது படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ ‘ரொம்ப நல்லவர்’ என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஹீரோயினும், அவரது காதலரும் பிரதீப் குறித்து பேசுவதாக வரும் காட்சியும், அதை திராவிட் செல்வம் செல்வம் கேட்பதும் 90-களின் டெக்னிக்.

ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்.

இந்த வெகு சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாக சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது இந்த ‘டியூட்’.

‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? | Dude Movie Review - hindutamil.in

'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

2 months 1 week ago

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல் இல்லை'. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?" எனக் கேட்டார்.

அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, "நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் 'ஹீரோ மெட்டீரியல்' என்பதை நீங்கள் சொல்ல முடியாது. 'ஹீரோவாக' இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை" என்றார்.

இது குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "ஒல்லியாக, கருப்பாக இருக்கிறேன் போன்ற உருவக்கேலிகளை சிறு வயதிலிருந்தே கேட்டுள்ளேன். அவை பழகிவிட்டன. 'லவ் டுடே' திரைப்பட நிகழ்வுகளிலும் இதை எதிர்கொண்டேன். மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார்? உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு 'ஹீரோ மெட்டீரியல்' அல்லது 'கதாநாயக பிம்பம்' தேவையா, பிற இந்திய திரைப்படத் துறைகளில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

தியாகராஜ பாகவதர் மற்றும் பியூ சின்னப்பா

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், @NFAIOfficial

படக்குறிப்பு, எம்.கே. தியாகராஜ பாகவதர்

"தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என விவரிக்கப்படும் தியாகராஜ பாகவதராக இருக்கட்டும் அல்லது பிரபல நடிகர் பியூ சின்னப்பாவாக இருக்கட்டும், இருவருமே அவர்களது பாடும் திறனால் பிரபலமானவர்கள். அப்போது இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற விஷயமே இல்லை" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.

பாம்பின் கண்- தமிழ் சினிமா ஓர் அறிமுகம், திரையில் விரியும் சமூகம், சித்திரம் பேசுதடி போன்ற தமிழ் சினிமா குறித்த நூல்களை இவர் எழுதியுள்ளார்.

"இந்தி சினிமா மற்றும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் தொடக்கம் முதலே ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பம் இருந்தது. காலப்போக்கில் அது தமிழ் சினிமாவிலும் பரவியது, குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில். ஹீரோ என்பவர் அழகாக, கட்டுமஸ்தாக இருக்க வேண்டும், படத்தின் இறுதிவரை மரணிக்கவே கூடாது, பெண்கள் பின்னால் போகக்கூடாது, பெண்கள் தான் அவர் பின்னால் வர வேண்டும் என எழுதப்படாத விதிகள். இன்றுவரை எம்ஜிஆரை நினைவுகூறுபவர்கள் அவரது 'அழகைப்' பற்றி தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்" என்கிறார் தியடோர் பாஸ்கர்.

இதே கருத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜா. தீபா, "எம்ஜிஆருக்குப் பிறகு 'ஒரு ஹீரோ' என்றாலே அழகாக, குறிப்பாக 'வெள்ளை தோலுடன்' இருக்க வேண்டுமென்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவானது. சிவாஜி சில திரைப்படங்களில் அதை உடைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் ரஜினியின் வருகை ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தது." என்கிறார்.

சிவாஜியின் 'ஹீரோ மெட்டீரியல்' அல்லாத வித்தியாசமான முயற்சிகளுக்கு சிறந்த உதாரணம், 1954இல் வெளியான 'அந்த நாள்' எனும் திரைப்படம். அதில் படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவாஜியின் கதாபாத்திரம் (ராஜன்) இறந்துவிடும். யார் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் கதை.

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Dwarakish

படக்குறிப்பு, 1984இல் ரஜினி நாயகனாக நடித்து இந்தியில் வெளியான 'கங்வா' திரைப்படம்.

இருப்பினும் சிவாஜியைப் போல அல்லாமல், ரஜினி தொடக்கத்தில் சில திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகன், வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த பின்பே 'ஹீரோவாக' வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் ஜா. தீபா, "உருவத்தைத் தாண்டி தனக்கான திறமையை சில 'கதாபாத்திரங்களில்' நிரூபித்த பின் தான் ரஜினியால் அந்தக் கேலிகளை கடந்துவர முடிந்தது." என்கிறார்.

ஆனால், தமிழில் ஒரு கதாநாயகனாக பிரபலமான பின்பும் கூட, 1980களில் இந்தியில் அறிமுகமானபோது, உருவக்கேலிகளை எதிர்கொண்டதாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார்.

"கங்வா (1984இல் வெளியான இந்தித் திரைப்படம், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் (1983) படத்தின் மறுஆக்கம்) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 'கருப்பு ஹீரோ' என காதுபடவே பேசுவார்கள். 'அந்தா கானுன்', 'கங்வா' திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகே, என்னை பாலிவுட்டில் 'ஹீரோவாக' மதிக்கத் தொடங்கினார்கள்" என்று ரஜினி பேசியிருப்பார்.

ரஜினி பாலிவுட்டில் எதிர்கொண்ட ஒன்றை தான், பிரதீப் தெலுங்கு சினிமாவில் எதிர்கொள்கிறார் எனக் கூறும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கர், "'அழகாக இல்லை' என்ற காரணத்திற்காக சினிமா ரசிகர்கள் எந்த நடிகரையும் ஒதுக்கியதில்லை. 'ஹீரோ மெட்டீரியல்' என்ற ஒன்று உருவாக சினிமாதுறையினரே காரணம். குறிப்பாக 'க்ளோஸ்-அப் ஷாட்களில்' (Close-up shot) ஹீரோ 'சிவப்பாக, அழகாக' இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்தார்கள்." என்கிறார்.

ஹைதராபாத்தில் 'டியூட்' பட நிகழ்வில் நடந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆந்திராவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜி.ஆர். மகரிஷி, "அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி நிச்சயம் கண்டத்திற்குரியது. தெலுங்கு மக்கள் மட்டுமல்ல எந்த மொழி மக்களும், உருவத்தை வைத்து ஒரு நடிகரை ஒதுக்க மாட்டார்கள். திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்" என்று கூறினார்.

பாலிவுட்டில் என்ன நிலை?

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Colour Yellow Productions

படக்குறிப்பு, ராஞ்சனா (2013) என்ற பாலிவுட் படத்தில், 'குந்தன் சங்கர்' என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருப்பார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தான் எதிர்கொண்ட உருவக்கேலிகள் குறித்து பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.

"நடிக்க வந்த புதிதில், முகத்திற்கு நேராகவே 'இவனெல்லாம் ஹீரோவா?' எனப் பேசுவார்கள். ஒருமுறை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, என் காருக்குள் சென்று சிறிது நேரம் அழுதேன். இன்றும் கூட உருவக்கேலிகள் என்னை துரத்துகின்றன" என்று ஒருமுறை தனுஷ் பேசியிருந்தார்.

2021இல் 'லிட்டில் திங்ஸ்' என்ற இந்தி மொழி இணையத் தொடரில், 'நீ என்றாவது உன் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? தனுஷ் போல இருக்கிறாய்' என ஒரு கதாபாத்திரம் தனது நண்பனைப் பார்த்து கேலி செய்யும். இந்தக் காட்சிக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

"பாலிவுட்டில் ஒரு ஹீரோ 'வெள்ளை தோலுடன்', கட்டுமஸ்தாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. திரைத்துறையினர் தான் அவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சத்யம் சிங்.

"தனுஷ் பாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஆனால் அவர் நடித்த பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என காட்டியுள்ளார்கள். அதேபோல, ரஜினிக்கும் லுங்கிக்கும் என்ன சம்மந்தம், ஆனால் 'லுங்கி டான்ஸ்' என்று ரஜினிக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பாடல் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் உள்ளது. மேலும், அதில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகாவின் உறவினர்களாக வரும் கதாபாத்திர சித்தரிப்புகளைப் பார்த்தால், நான் சொல்வது புரியும். எனவே இது நிறம், உருவம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் பாலிவுட் செல்ல வேண்டிய தூரம் அதிகம்." என்கிறார் சத்யம் சிங்.

மலையாள சினிமாவில் என்ன நிலை?

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Thriveni Productions

படக்குறிப்பு, 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) மலையாள திரைப்படத்தில் கலாபவன் மணி.

மலையாளத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஃபஹத் பாசில், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்று கூறப்படும் பிம்பத்தை உடைத்தவர்களே.

"பரத் கோபி, திலகன், முரளி, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவர்கள். முக்கியமாக கலாபவன் மணி பிற மொழிகளில் வில்லனாக பிரபலமடைந்தாலும், மலையாளத்தில் அவர் 'ஹீரோவாக' பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்" என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த துணை இயக்குநர் மற்றும் துணை நடிகர் தாரிக் கலாம்.

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காசி (2001), மலையாளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) என்ற திரைப்படத்தின் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகனாக நடித்தவர், கலாபவன் மணி.

"நிச்சயமாக இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற பிம்பம் மொத்தமாக உடைய வேண்டும். ஒரு நாயகன் என்பவன் 'அசகாய சூரன்' என்று திரைப்படங்களில் காட்டுவதால் தான், அதை நம்பி, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகின்றன. நடிகர்களை அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கத் தொடங்கினால், அனைத்தும் மாறும்" என்று கூறுகிறார் தியடோர் பாஸ்கர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gkm07yrzlo

நடிகர் வரிந்தர் சிங் குமன் 42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்

2 months 2 weeks ago

42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர்

உடற்ப்யிற்சி கூடத்தில் அரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார்

7 மணி நேரங்களுக்கு முன்னர்

சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார்.

அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார்.

அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில் (Lyallpur Khalsa College) எம்பிஏ படித்தவர். அவரது தந்தையின் பெயர் உப்பிதிந்தர் சிங். அவரது தாய் உயிருடன் இல்லை.

சல்மான்கானுடன் வரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் குமன் டைகர் 3 திரைப்படத்தில் நடித்தார்

வரிந்தரின் சகோதரர் பக்வந்த் சிங் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.

வரிந்தர் குமனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் (இரண்டு மகன்கள், ஒரு மகள்) உள்ளனர்.

தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவர் வியாழக்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மாலை 6 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

வரிந்தர் சிங் குமன் விவசாயம் மற்றும் பால் பண்ணைத் தொழிலும் செய்து வந்தார்.

உடற்கட்டமைப்பின் மீதான ஆர்வம்

வரிந்தர் குமன் சிறுவயதிலிருந்தே உடற்கட்டமைப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது வீட்டிற்கு அருகில் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தையும் (Gym) தொடங்கினார்.

2024 இல் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு முழுமையான சைவ உணவுப் பிரியர் என்றும், தான் ஒரு நாம்தாரி குடும்பத்தைச் (Namdhari family) சேர்ந்தவர் என்பதால் முட்டை கூடச் சாப்பிடுவதில்லை என்றும் வரிந்தர் கூறியிருந்தார்.

அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

வரிந்தர் 2009 ஆம் ஆண்டில் 'மிஸ்டர் இந்தியா' பட்டத்தை வென்றார். மேலும், உடற்கட்டமைப்பில் ஆசிய அளவிலும் அவர் புகழ் பெற்றார். அதன் பிறகு, 2012 ஆம் ஆண்டு 'கபடி ஒன்ஸ் அகைன்' (Kabaddi Once Again) என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்பு உலகில் நுழைந்தார்.

அதன் பிறகு, அவர் பல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார்.

வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்

ஆனால், திரைப்படங்களைப் பற்றிப் பேசுகையில், அவர் தன்னைத் திரைக்கு ஏற்றவராகக் கருதவில்லை என்று கூறியிருந்தார். இதற்குக் காரணம் கூறுகையில், பல இயக்குநர்கள் தன்னை எடையை குறைக்கும்படி கூறியதாகவும், ஆனால் தனக்குள்ளே இருக்கும் விளையாட்டு வீரனை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

"நான் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன், 2-4 படங்கள் குறைவாக நடித்தாலும் அது எனக்கு முக்கியமில்லை. திரைப்படங்களில் கிடைக்கும் அதே புகழ் இந்த விளையாட்டிலும் எனக்குக் கிடைக்கிறது. நான் உயிரோடு இருக்கும் வரை, இந்த அடையாளத்தில்தான் இருப்பேன். நான் இறந்த பிறகும் மக்கள் என்னை ஒரு விளையாட்டு வீரராகவும், உடற்கட்டழகராகவும் (Bodybuilder) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

வரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் செய்ய விரும்புவதாகக் கூறி, அரசியலில் நுழைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

உடைகளைப் பற்றிப் பேசிய அவர், தனது உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பாளர்கள் மும்பை மற்றும் ஜலந்தரில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று ஜலந்தரில் நடைபெறும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg6mlmnmrzo

திருக்குறள் (திரைப்படம்)

2 months 2 weeks ago

வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி

Ramana Communications presents

Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள்
விமர்சனங்கள்

தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5]

இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருப்பதற்காகவே இப்படத்தைக் குடும்பத்துடன் காணலாம்" என்று எழுதினர்.[6]

தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருவள்ளுவர் காலத்தை கண்முன் நிறுத்தி, அதில் காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருக்குறள் - பெருமை." என்று எழுதினர்.[7]

விமர்சனம் : இட்லி கடை!

2 months 3 weeks ago

விமர்சனம் : இட்லி கடை!

2 Oct 2025, 1:18 PM

idly-kadai-rview.jpg

இது ‘பீல்குட் மூவி’யா?!

தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ்.

பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. மூன்றாவது படம் தவிர மற்றனைத்திலும் அவர் நாயகனாக அல்லது ஒரு பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறார்.

‘இட்லி கடை’ திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஒருசேரத் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா?

’சிம்பிள்’ கதை!

image-3-1024x576.png

‘இட்லி கடை’ படத்தின் கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி; மிக எளிய வார்ப்பில் அமைந்திருக்கின்றன.

அமைதியும் இனிமையும் மிக்க கிராமத்திலேயே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வெளியூருக்குப் புறப்படுகிறார் ஒரு இளைஞன். சென்னை, பாங்காக் என்று அவரது பயணம் அமைகிறது.

அந்த இளைஞனின் தாய் தந்தையோ ‘தாங்கள் நடத்தி வரும் இட்லிக்கடையைத் தங்களுக்குப் பின்னர் மகன் நடத்த வேண்டும்’ என்று பிரியப்படுகின்றனர். ஆனால், அவரோ அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார்.

பாங்காக்கில் அவர் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஒரு மகன், மகள். அந்தப் பெண் இந்த நபர் மீது காதல் கொள்கிறார்.

இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

அந்த இளைஞர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரது பெற்றோர் கிராமத்திலிருந்து விமானம் ஏறி பாங்காக்கில் நடைபெறுகிற திருமணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இல்லை.

இந்த நிலையில், அவரது தந்தை திடீரென்று மரணமடைகிறார்.

அதனைக் கேட்டதும், ‘கல்யாணத்தை தள்ளி வைப்பது முடியாத காரியம். எப்படியாவது இறுதிச்சடங்குகளை முடிச்சுட்டி திரும்ப வந்துருங்க’ என்று மருமகனாக வரப் போகிறவரிடம் சொல்லி அனுப்புகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளர். தங்களிடம் வேலை செய்கிற நபரை அவருடன் அனுப்பி வைக்கிறார்.

image-5-1024x426.png

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபிறகு, அந்த இளைஞரை இன்னொரு இடி தாக்குகிறது. அவரது தாயும் மரணிக்கிறார்.

அடுத்தடுத்தாற்போல நிகழ்ந்த இரண்டு துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறபோது, ‘இப்போ பாங்காக் வரப்போறியா இல்லையா’ என அந்த நபரை அடித்து இழுத்துச் செல்லத் தயாராகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன்.

சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவருக்கு, இதர மனிதர்களைப் பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ துளியும் அக்கறை கிடையாது. அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞர் என்ன செய்தார்?

தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அவர் வெளியேறினாரா? அந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகளும் இந்தியா வந்தனரா? அந்த கிராமத்தினர் அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்றார்களா என்று சொல்கிறது ‘இட்லி கடை’ படத்தின் மீதி.

image-4.png

இந்தக் கதையில் பிரதான பாத்திரங்கள் அனைத்துமே தெளிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. நாயக பாத்திரம் மட்டுமே சிறிது குழப்பமானதாகக் காட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரொம்பவே சுயநலமானதாகத் தெரிகிறது. அதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருந்தால், இந்த ‘இட்லி கடை’ இன்னும் சுவையானதாக மாறியிருக்கும்.

இயக்குனராக ஜெயித்த தனுஷ்!

தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் வழியே, ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’, ‘இதுதான் நானா’, ‘இவ்வளவு சகிப்புத்தன்மைக்குப் பின்னால் இருப்பது பணம் மீதுள்ள வேட்கையா’ என்கிற கேள்விகளைத் தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார் தனுஷ். ஆனால், படம் முடிந்தபிறகே அந்த பாவனைகளுக்கான பொருள் பிடிபடுகிறது.

போலவே, நித்யா மெனனின் இருப்பு தொடக்கத்தில் செயற்கையாகத் தெரிகிறது. மெதுவாக, அவர் திரைக்கதையில் ஒரு அங்கமாக மாறுகிறார். திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி போன்ற படங்களில் தொடக்கம் முதலே தனது இருப்பை அவர் நிலைநாட்டியிருப்பார்.

இது போன்ற குறைகள் இப்படத்தின் நாயகன், நாயகி பாத்திரங்களில் தென்படுகின்றன.

image-7.png

இன்னொரு நாயகியாக இதில் ஷாலினி பாண்டே வருகிறார். அவரது பாத்திர வார்ப்பில் குறைகள் இல்லை என்றபோதும், திரைக்கதையில் போதுமான இடம் அவருக்குத் தரப்படவில்லை.

இந்த படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம் பாத்திரங்கள் மிக எளிமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர்களும் படத்தின் அங்கமாக மாறியிருக்கின்றனர்.

அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஓரம் கட்டுவது போன்று ‘கிளாஸ் பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார் சத்யராஜ். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் இதுவே ‘பெஸ்ட்’

image-9.png

.

இவர்கள் போக இளவரசு, இந்துமதி, நரேன், சமுத்திரக்கனி, போலீஸ்காரராக வரும் பார்த்திபன், இட்லி கடைக்கு வரும் தாத்தா, ஊர்காரர்களாக வருபவர்கள் என்று பலர் இதிலுண்டு.

கீதா கைலாசம், ராஜ்கிரண் பாத்திரங்களின் இளம்பிராயத்தைக் காட்ட பிரிகிடாவும் ஒரு இளைஞரும் நடித்துள்ளனர். அவர்களோடு வடிவுக்கரசியும் இடம்பிடித்திருக்கிறார். அவர்கள் வருகிற காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்டியிருக்கலாம்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ்.

நீண்ட காலம் கழித்து தனது குடும்பத்தினரை இளவரசு பாத்திரம் சந்திக்கிற காட்சி, கன்றுகுட்டியாய் தந்தையே பிறந்திருப்பதாக தனுஷ் உணரும் காட்சி, வில்லனிடம் காசு வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பாத்திரம் தனுஷ் கடையை காலி செய்ததா இல்லையா என்பதைச் சொல்லும் காட்சி என ‘இட்லி கடை’யில் வரும் சில காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நம்மையும் அறியாமல் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன.

அந்த வகையில், சுமார் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிவைத்து ஒவ்வொரு பிரேமையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

image-6.png

வில்லன் வசிக்குமிடத்தைச் சுற்றி வளைத்த ஊர் மக்கள் ‘நாங்க உள்ள வந்தமா, உள்ள வந்தமா. அதே நேரத்துல நீங்களும் வெளியே போக முடியாது’ என வில்லனின் அடியாட்களை மிரட்டுகிற இடத்தில், தியேட்டரில் விசில் சத்தம் அள்ளுகிறது.

இப்படித் தேவையான இடங்களில் ‘ஹீரோயிசம்’ புகுத்தியிருக்கிறார் இயக்குனர். பெரும்பாலான இடங்களில் ‘ட்ராமா’ தான் நல்லது என்று பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் காட்டியிருக்கிறார்.

அதனை ரசிப்பவர்களுக்கு ‘இட்லி கடை’ ரொம்பவே பிடிக்கும். அதனை ரசிக்காதவர்களுக்கு இது கேலி கிண்டலுக்கான ஒரு வஸ்து.

படம் பார்ப்பவர்கள் திரையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு, ஒவ்வொரு பிரேமையும் எப்படி அளவெடுத்தாற்போல வடிக்க வேண்டும்; ஒவ்வொரு காட்சியையும் நூல் கோர்த்தாற் போலத் திரைக்கதையில் அடுக்க வேண்டுமென்பதில் ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் தனுஷ்.

பாங்காக்கின் பரபரப்பு, சங்கராபுரம் எனும் கிராமத்தின் நிதானம் இரண்டையும் திரையில் திறம்படக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக்.

பிரேமுக்குத் தேவையான பின்னணியை ‘செட்’ செய்து தருவதில் ‘ஜித்தன்’ஆக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி.

இந்தக் கதையில் ராஜ்கிரண், கீதா கைலாசம், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலரது இருப்பு குறைவாகவே உள்ளது. அவற்றை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்ப்பதே திரைக்கதையைத் தொய்வானதாக ஆக்காமல் இருக்க உதவும் என்று நினைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா. அது சில இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை.

ஆடை வடிவமைப்பு பெரிதாகக் கண்களை உறுத்தாவிட்டாலும், அந்தந்த காட்சிகளின் தன்மையோடு பொருந்தி நிற்கவில்லை.

மற்றபடி ஒப்பனை, சண்டைக்காட்சி வடிவமைப்பு, நடனம், ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

image-8.png

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ‘எஞ்சாமி தந்தானே’, ‘என்ன சுகம்’, ‘என் பாட்டன் சாமி வரும்’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. திரைக்கதையோடும் பொருந்தி நிற்கின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை அள்ளித் தந்திருக்கிறார் ஜி.வி.பி. உணர்வுமயமான காட்சிகளில் கண்களின் தளும்பும் நீரைக் கீழே தள்ளிவிடுவதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெல்டன்!

‘உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடும்’ என்று ’கவித்துவமாக’ ரசிகர்கள் உணர்கிற வகையில் பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார்.

ஒரு நாயகன் இயக்குனர் ஆகும்போது, தனது பாத்திரத்தை முன்னிறுத்துகிற கதையமைப்பையே தேர்வு செய்வார். ‘இட்லி கடை’யும் அப்படிப்பட்டதுதான். ஆனால், இதில் இதர பாத்திரங்கள் ‘ஸ்கோர்’ செய்ய நிறைய இடமிருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் அசத்தியிருக்கின்றனர்.

அனைத்துக்கும் மேலே, ஒரு எளிமையான உள்ளடக்கம் சிறப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. கூடவே, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வின் மாண்புகளைச் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

இந்த படத்தைப் பார்த்துவிட்டு, ‘இட்லிக் கடை வச்சிட்டா அவங்க வாரிசுகளும் அதையே தான் பின்தொடரணுமா’ என்கிற விதமான கேள்விகள் எழக்கூடும். குலக்கல்வி போன்று குலத்தொழில் என்கிற முத்திரையைக் குத்த இது உதவுகிறதா என்ற சந்தேகம் எழலாம்.

image-10.png

அவற்றைத் தீர்க்க, இப்படத்தில் போதுமான விளக்கம் இல்லை. அது ஒரு பலவீனம் தான்.

ஆனால், அப்படியொரு காரண காரியத்தோடு இப்படம் உருவாக்கப்படவில்லை என்பதனை தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் உணர முடியும்.  

அந்த ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டால், நல்லதொரு ‘பீல்குட் மூவி’ பார்த்த திருப்தியை ’இட்லி கடை’யில் நிறையவே தருகிறார் இயக்குனர் தனுஷ். 

https://minnambalam.com/dhanush-movie-idly-kadai-review/#google_vignette

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

2 months 3 weeks ago

1378327.jpg

கோப்புப் படம்

சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழி, சினிமா பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பிரிய முடிவு செய்த அவர்கள் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இருவரும் மனமொத்து பிரிவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்திருந்தார். ஆறு மாத காலம் முடிந்த நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகியிருந்தனர். இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக நீதிபதி முன் தெரிவித்தனர்.

குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் குமார் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம் | Court grants divorce to G.V. Prakash - Saindhavi - hindutamil.in

Checked
Thu, 12/25/2025 - 12:15
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed