கவிதைக் களம்

"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"

2 weeks 3 days ago
"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"
 
 
"அரை குடத்தின் நீர் அலைகள்
தரை காண ததும்பி வடியும்
அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு
கூரை ஏறாமல் வானம் ஏறும் !"
 
"நிறை குடம் அமைதி கொண்டு
முறையாக கசடு அறக் கற்று
பாறை போல் தன்னைத் திடமாக்கி
பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !"
 
"குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி
பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி
கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று
தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !"
 
"கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும்
கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும்
மஞ்சள் கிழங்கென தோற்றத்தை கண்டு
இஞ்சிபிடுங்கி தின்ற குரங்கு கதையாகும் !"
 
"வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின்
கள்ளம் கபடமற்ற ஞானப் பார்வையில்
உள்ளம் நிறைவு கொண்ட இளைஞர்கள்
கேள்விஞானம் பெற்று சிக்கலையும் நீக்குவார்கள் !"
 
"ஆழமற்ற குறுகிய மேலோட்ட பார்வைகள்
பலமரம் கண்டதச்சன் ஒருமரமும் வெட்டானாகிறது
ஆழமான தெளிவான எமது அறிவியல்
குழப்பம்நீக்கி அறிவியல் எல்லைகளைத் திறக்கிறது!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
 
கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope, 1688-1744) 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில அறிஞராவர். இவர் தனது திறனாய்வுக் கட்டுரைகள் ['essay on criticism'] என்பதில், அற்ப அறிவோடு எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும் என சில எடுத்துக் காட்டுகளுடன் கவிதையாக குறிப்பிட்டு இருந்தார். அதை வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், ஆனால் அவரின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன். அத்துடன் கிரேக்க புராணங்களில் கலை அல்லது அறிவியலின் பாதுகாவலரான 'மூஸ்' அல்லது 'மியூஸ்' [Muse] தெய்வம் 'சரஸ்வதி'யால் பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கிரேக்க புராணத்தின் படி, பியரியன் ஊற்று [Pierian spring] என்பது பண்டைய கிரேக்கத்தில் இருந்த மாசிடோனியா ( Macedonia] என்ற ஒரு இராச்சியத்தில் காணப்படட தெய்வீக ஞான ஊற்று ஆகும். படிப்பு என்பதற்கு குறியீடாக, அந்த பியரியன் ஊற்றை போப் பயன்படுத்துகிறார்.
 
Alexander Pope, a translator, poet, was born in London in 1688. He wrote “An Essay on Criticism” when he was 23. In Part II of this Essay on Criticism includes a famous couplet: 'A little Learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian Spring ' . Translation of this in Tamil is given here.
Here's the line in its original habitat from Alexander Pope's An Essay on Criticism (1709):
 
 
"A little learning is a dangerous thing;
drink deep, or taste not the Pierian spring:
there shallow draughts intoxicate the brain,
and drinking largely sobers us again.
Fired at first sight with what the Muse imparts,
In fearless youth we tempt the heights of Arts
Short views we take, nor see the lengths behind,
But, more advanced, behold with strange surprise
New distant scenes of endless science rise !"
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 
85147009_10216049753899420_1458604059459059712_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sLgfjPRa1skQ7kNvgEeblnJ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB9Y3RwlzDWKFoZqk6OKeZWVfbu8uRZbff9aizfcYQgoQ&oe=6659C673 84455201_10216049754619438_1181394620928491520_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=P9BERPoI2tEQ7kNvgFgRvyl&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB4Wxwo_TZ0S6B8CJ3COr-YE5kitF76gKVIvCInwxB_-g&oe=66599FAE
 
 
 

"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]

2 weeks 4 days ago

"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]

 

"காதல் தந்தாய் 
காத்திருந்தேன் நாள் முழுவதும்!
வேதனை படுத்தி 
சோதனை செய்யவா 
எங்கு சென்றாய்?"


"அழகிய உடல் 
ஆனந்தம் தந்தது! 
அருகில் இல்லாமல் 
தூர விலகினாயே  
எங்கு சென்றாய்?"
  

"கொஞ்சும் பேச்சில் 
நெஞ்சைப் பறித்தவளே!  
வஞ்சக மனத்துடன் 
கஞ்சத்தனம் வேண்டாம்    
எங்கு சென்றாய்?" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

440963206_10225095456916342_8976362083009039558_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=egG8TT3im4gQ7kNvgF-vZxv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDzcbWScBzXG-Z0vl1N_CiU8aTIxE1e2g2gU7a5a9dpZA&oe=6636F55B 440810724_10225095456876341_7881579265424458551_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bBNZczHR6icQ7kNvgH_Nphf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCUWNusRStaJOTSUFBNQog3kw44GkMVg83Gmj0_POWCJA&oe=66370DF9 440958772_10225095457836365_4117981883805556032_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PqeRDR6NKXoQ7kNvgF84jIX&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAiGo00wmU12kWlU15OY1RS_UoQROCdsXyHA364t-5Zgw&oe=6636E773

 

"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!"

2 weeks 4 days ago

"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!"

 

"கொடூரமாக இருக்காதே
திமிர் பிடிக்காதே
உரிமைகளை மதி
குரல்களை மதி"

 

"இங்கு வேலையாட்கள் இல்லை
இங்கு முதலாளிகள் இல்லை
இங்கு குடும்பமே உண்டு 
இனி நட்பாகக் கவனி"


"கஷ்டங்களைக் கேளு
துயரங்களைக் கேளு
கடவுள் சிவாவாக இரு
இயேசு கிறிஸ்துவாக இரு"

 

"ஆதாயத்தைப் பகிரு 
லாபத்தைப் பகிரு
ஒரு தந்தையைப் போல
ஒரு தாயைப் போல"

 

"அடிமை ஆக்காதே
ஏழைகளை உருவாக்காதே
ரோமாக இருக்காதே
நீரோவாக இருக்காதே"

 

"எல்லோரையும் இணை 
தொழிலாளர்கள் பங்கேற்கட்டும்  
அனைவரையும் உள்ளடக்கு 
முடிவெடுப்பதில் கலந்தாலோசி"

 

"ஆர்வத்தைக் கொடு 
நம்பகத்தன்மை வளரட்டும்  
ஒரு கணவனைப் போல
ஒரு மனைவியைப்  போல"

 

"ஒழுக்கத்தைக் கடைப்பிடி
நீதியைக் கடைப்பிடி
நல்ல குருவாக
நல்ல அரசனாக "


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


"MY MAY DAY SLOGANS!"

"DON'T BE CRUEL 
DON'T BE ARROGANT
RESPECT THE RIGHTS
RESPECT THE VOICES"

"NO MORE WORKERS 
NO MORE BOSSES
CARE AS FAMILY 
CARE AS FRIENDS"

"LISTEN THEIR PLIGHTS
LISTEN THEIR SORROWS
BE A GOD SIVA 
BE A JESUS CHRIST"

"SHARE THE BENIFIT
SHARE THE PROFIT
LIKE A FATHER 
LIKE A MOTHER"

"MAKE NO SLAVE 
MAKE NO POOR
DON'T BE ROME
DON'T BE NERO"

"KEEP QUALITY CIRCLE IN MANAGEMENT
KEEP WORKERS PARTICIPATION IN MANAGEMENT
INCLUDE EVERYONE IN MANAGEMENT 
INCLUDE EVERYONE IN DECISION MAKING"

"CULTIVATE INTEREST IN WORK 
MOTIVATE DEPENDABLE BEHAVIORS
LIKE A HUSBAND 
LIKE A WIFE"

"KEEP THE DISCIPLINE 
KEEP THE JUSTICE
BE A GOOD GURU 
BE A GOOD KING"

 

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

18198757_10209158602624945_3030558033909160365_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UOXCea2LAcYQ7kNvgH1Tz4z&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDkpflZlu1Aoh6WcCcBffGnNXIpffLva4OoyGf2R0MPyA&oe=6658855F 18157988_10209158601424915_2273680070932977608_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EniDSqk6KDgQ7kNvgGCQCB6&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCy8VynY7TRHJUXcMfgFo7S-0e2r97OtPfa_0ecYuUEPA&oe=665879F1 18199498_10209158617825325_8137136390105872374_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rUE828-5rZwQ7kNvgFC54up&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDdbpLhfjZ2718ZUYzi0NxUQQzf737vXW4xWi-lu7HY8w&oe=6658633E 18222280_10209158605825025_5060294392446600753_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cSXmT_tEDHkQ7kNvgFY2pFy&_nc_oc=Adhqal8GSK9mdshQImhglhkzBsQAHEsAcWg1zD32gLb-HmcFpN1vEfs0d4ZnSd83BY61OlkuCgR2jsQdxXpLzW4-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCti5kr3E1HR8O-9XB_1olmR-Z2W4lHUy2DlLSOKN89gw&oe=6658573C

 

 

 

 

'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'

2 weeks 5 days ago
'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'
 
 
"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நினைவில் அகலா நெல்லுச் சோறு
நிறைவு கொள்ளும் நெல்லுச் சோறு
நிலா ஒளியில் நெல்லுச் சோறு !"
 
"அத்தான் அறுவடை செய்த நெல்லு
அத்தை வேகவைத்த கூட்டாஞ் சோறு
அழகாய் பாத்தியால் சுமந்த சோறு
அன்பாய் இருவரும் உண்ணும் சோறு!"
 
"வேப்பமர குச்சியால் பல் விளக்கி
வேக தண்ணியில் வாய் கொப்பளித்து
வேட்டி தலைப்பில் வாய் தொடைத்து
வேங்கை நிழலில் பரிமாறிய சோறு!"
 
"ஓடும் நீரில் கால் நனைத்து
பாடும் குயிலின் இன்னிசை ரசித்து
சுடும் சோறை தயிரில் பிசைத்து
கடும் காற்றில் ஊட்டிய சோறு !"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. 
 
 

“ஆனந்தம் ஆனந்தமே”

2 weeks 6 days ago
“ஆனந்தம் ஆனந்தமே”
 
 
"புருவம் உயர்த்தி புன்னகை பூத்து
அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே!
பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி
நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே!"
 
"விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி
பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே!
உருகி பேசி நெஞ்சில் சாய்ந்து
வருடி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தமே!"
 
"பருவ எழிலில் பெண்மை பூரிக்க
நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே!
பருத்த மார்பும் சிறுத்த இடையும்
கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே!"
 
"பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில்
உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே!
திரும்பி பார்த்து வெட்க்கப் பட்டு
விருப்பம் என்றால் ஆனந்தம் ஆனந்தமே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
83758038_10216001186685270_2956800214079373312_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=pxnlyAd95VIAb7XemD4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCVTwr6ka-8kQVNIDQ7Ngky6aPT39rsZ1pTAKRum3xaTw&oe=6655F4E2 84345793_10216001188325311_1534625105152311296_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=2oBOancYdRAAb6Dloya&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBABLKYczWwM39HD0EKJLGAfNWYm79jdYTLhbAkG2Do9A&oe=6655DE48 
 
 

'மாற்றம் மாறாதது'

3 weeks ago
'மாற்றம் மாறாதது'
 
 
"காதல் தந்த பார்வையும் மங்கும்
காமம் தந்த உடலும் கூனும்
காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும்
காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது"
 
"காலியான குளமும் நிரம்பி வடியும்
காசுகள் தொலைந்து வறுமை வாட்டும்
காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர்
காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது"
 
"உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும்
அற்புதமான உடலும் கருகிப் போகும்
முற்றத்து துளசியும் வெறிச் சோடும்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது"
 
"ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும்
ஒற்றுமை குலைத்து பகையைக் கூட்டும்
குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.
 
 

மறக்க முடியாத மற்றுமொரு நாள்

3 weeks ago

நம் வாழ்வில் நாம் 
மறக்க முடியாத பலநாட்களை  
பலமுறை நாம் கடக்கின்றோம்
 
சில நாட்கள் 
நம் வாழ்வில் - நாம் 
மறக்கவே முடியாமல்
சிதளூரும் காயங்கள் போல் 
நித வருத்தம் தருவன  

2009, சித்திரை 27
கடற்கரை மணலில் 
குளிரூட்டப்பட்ட திடலில் 
காலைச் சிற்றுண்டிக்கும் 
மதிய உணவுக்கும் 
இடைப்பட்ட விடுமுறையில் 
மூன்று மணி நேரம் 
கலைஞரின் நாடகம் 
அரங்கேறிய நாள் 

தியா காண்டீபன் 

 

கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்🥲🥲🥲

https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/

https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26

"சந்தேகம்"

3 weeks 1 day ago
"சந்தேகம்"
 
 
"சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு
சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை
சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள்
சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்"
 
"எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள்
எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள்
எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள்
எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்"
 
"சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள்
சில தனி நபருடைய குணாதிசயங்கள்
சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை
சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்"
 
"தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல்
தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல்
தருணம் அறியாமல் சினந்து பேசுதல்
தம்பதியை குழப்பும் காதலரை பிரிக்கும்"
 
"கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் அதிகமாகி
கொலை வெறியாக மனதை ஆட்டி
கொடும் எண்ணங்கள் மனதில் வெளிப்பட
கொழுந்து விட்டு எரியும் சந்தேகம்"
 
"மன அழுத்தம் கவ்விக் கொள்ளும்
மகிழ்ச்சி இழந்து கண்கள் சுழரும்
மடையார் மாதிரி அறிவைத் துறப்பர்
மனதை குழப்பி வாழ்வை இழப்பர்"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.  No photo description available. 
 
 
 

"எந்தன் உயிரே"

3 weeks 6 days ago

"எந்தன் உயிரே"

 

"அள்ளி அரவணைத்து   அன்பு பொழிந்து  
ஆரத் தழுவி                      ஆசை தூண்டி
இதயம் மகிழ்ந்து             இதழைப் பதித்து  
ஈரமான நெஞ்சம்            ஈர்த்துப் பிணைத்து 
எழுச்சி கொள்ளும்         எந்தன் உயிரே!"

 

"அக்கறையாய் பேசி    அன்பு ஊட்டி 
ஆதரவு கொடுத்து         ஆர்வம் ஏற்படுத்தி
இடுப்பு வளைவு             இன்பம் சொரிய 
ஈவு இரக்கத்துடன்            ஈருடல் ஓருயிராக 
உரிமை நாட்டும்           உத்தம உயிரே!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

437947395_10225050936163351_7603531585548177679_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QFnzijXRHh4Ab4bpbGH&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDkKdvQKgWhhNlMqt03R_CjpGx8c3mdD6JavgjcfS_Bkg&oe=662B4CEE May be an image of 1 person and smiling

"தேடும் கண்களே"

4 weeks ago

"தேடும் கண்களே"


"தேடும் கண்களே
ஓடும் உலகில் நீயோ 
நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே!


காடும் மலையும் பெரிதல்ல 
வாடும் கொக்காய் இரவும் பகலும்
ஆடும் நெஞ்சே பெரிது!


சிறுத்த இடையும் செவ்விதழும்  
உறுத்தும் பார்வையும் 
அறுத்து எடுக்குதே என் இதயத்தை!


கருத்த கூந்தல் காற்றில் ஆட 
ஒருத்தி அருகில் வந்தால் 
குருத்து ஆசை விழிகளில் மலருதே!" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be a doodle of 1 person and text that says 'தேடும் கண்களே' May be a doodle of 1 person May be an illustration of 1 person

 

"Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு 

4 weeks 1 day ago

"Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு 


கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன். 

 

"உலக நாடுகளின் அன்பு இரட்சகர்
உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை
குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க
கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"
 
"வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட
மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து
அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"
 
"காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட
மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர்
பாலகன் மேலே விண்மீன் நிற்க
இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"
 
"ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து
கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி
உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"
 
 
[தமிழ் மொழி பெயர்ப்பு:
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
"Jesus, devoted redeemer of all nations,
has shone forth,
Let the whole family of the faithful
celebrate the stories
The shining star,
gleaming in the heavens,
makes him known at his birth and,
going before,
has led the Magi to his cradle
Falling down,
they adore the tiny baby hidden in rags,
as they bear witness to the true God
by bringing a mystical gift"
 
 
[Translation by Kevin Hawthorne, PhD]
No photo description available. No photo description available. 
 

 "பேராசை"

1 month ago
 "பேராசை"
 
 
"பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.
 
நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!
 
காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!
 
 "தெருவோர   மதகில்  இருந்து
ஒருவெட்டி   வேதாந்தம் பேசி
உருப்படியாய் ஒன்றும்   செய்யா
கருங்காலி   தறுதலை  நான்"
 
"கருமம்      புடிச்ச     பொறுக்கியென
வருவோரும் போவோரும் திட்ட
குருவும்     குனிந்து    விலக
எருமை     மாடு       நான்" 
 
இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!
 
நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!
 
 "வருடம்    உருண்டு    போக
வருமாணம் உயர்ந்து    ஓங்க
கருணை   கடலில்     மூழ்க
மிருக - மனித அவதாரம்  நான்"
 
"தருணம்   சரியாய்      வர
இருவர்   இரண்டாயிரம் ஆக
ஒருவர்   முன்         மொழிய  
தரும - தெய்வ அவதாரம்   நான்"  
 
என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!
 
"ஊருக்கு    கடவுள்     நான்
பாருக்கு    வழிகாட்டி  நான்
பேருக்கு    புகழ்       நான்
பெருமதிப்பு கொலையாளி  நான்"
 
"குருவிற்கு  குரு       நான்
குருடருக்கு கண்      நான்
திருடருக்கு பங்காளி   நான்
கருவிழியார் மன்மதன்  நான்" 
 
என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!  
 
"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து
கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு
குடை பிடித்து பதவி உயர்ந்து
குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"
 
கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!    
 
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்
ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது
ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி 
ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"
 
மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது! 
 
"நீர்க்கோல வாழ்வை நச்சி நான் 
நீதியற்ற வழியில் நித்தம் சென்று
நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து
நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"
 
பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:
 
"ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!
 
நன்றி 
 
அன்புடன்
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. ttttt111111.jpgMay be an image of text that says 'பேராசை பெரும் வியாதி.. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான் புத்தர் புத' 
 
 
 

"குழலூதும் இவனை பார்த்து"

1 month ago
"குழலூதும் இவனை பார்த்து"
 
 
"மழலையின் மொழி கேட்டு
நான்பேசும் மொழி மறந்தேன்
மழலையின் மொழி பேசி
என்னையே நான் மறந்தேன்!"
 
"மழலையின் குறும்பு கண்டு
துன்பங்கள் ஓடி மறைந்தன
மழலையின் புன்னகை பார்த்து
இதயமே வானில் பறந்தன!"
 
"குழலூதும் இவனை பார்த்து
குறும்பு கண்ணனை மறந்தேன்
குழந்தை காட்டும் நளினத்தில்
குமரி ஊர்வசியை மறந்தேன்!"
 
"குழவி தளர்நடை கண்டு
குதூகலித்து நான் மகிழ்ந்தேன்
குழவியின் கொஞ்சிக் குலாவுதலில்
குரத்தி வள்ளியை மறந்தேன்!"
 
"தரணியில் ஓர்நிலவு கண்டேன்
மழலையில் பலநிலவு கண்டேன்
தரணியில் இவள் ஆடுகையில்
மயிலும் மலைத்து நிற்கக்கண்டேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.Abp nadu krishna jayanthi contest baby photos in Krishna costume | குழலூதும்  குட்டி கிருஷ்ணர்களின் ஸ்வீட் போட்டோஸ்!
 
 
 

"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"

1 month ago
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"
 
 
"இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
இரவு மெல்ல கீழே இறங்க
இனிய விடியலில் நானும் எழும்ப
இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"
 
"சிறிய கால்களின் காலடி ஓசை
சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க
சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி,
சித்தம் குளிர என்னைத் தழுவுது!"
 
"கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன்
கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம்
கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை
கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"
 
"அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி
பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா'
பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து
எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"
 
"அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி
குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான்
என் மடியில் படுத்து சிரிக்கிறான்
ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"
 
"சில கிசுகிசு, பின்னர் மௌனம்
சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து
சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள்
சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"
 
"படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து
பதுங்கி இரண்டு கதவால் வந்து
பகலோன் நேரே வந்தது போல
பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"
 
"மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு
மற்றவர் நாற்காலியின் கையில் எற
மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை
மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"
 
"முத்தங்களால் என்னை விழுங்கி விட
முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள
முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க
முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an illustration of 2 people and child May be an image of 1 person, baby and indoor May be an image of 2 people, child, people standing, grass and sky
 
 

"நீராடும் நிலா"

1 month ago
"நீராடும் நிலா"
 
 
"வானத்து மதியாய் என்னுடைய காதலியாய்
கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய்
மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே!
ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன்
அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!"
 
"கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது
கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது
சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே!
நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே
நீராடும் நிலா நீதானோ என்னவளே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an image of temple and text that says 'V நீராடும் நிலா' May be an illustration of 1 person
 

"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்"

1 month ago
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்"
 
 
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்
இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய்
வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம்
வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள்
நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய்
யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய்
கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே
லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை
இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம்
கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய்
ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய்
இருளிற்கு ஒளிவிளக்காய் இருண்டாருக்கு மகா காளியாய்,
ராகத்தில் மோகனமாய் ராமனின் சீதையாய்
சாதனையில் வெற்றி மகளாய் சாந்தோர்க்கு உறுதுணையாய்
இத்தனைக்கும் ஒரு வளாய் இறுமாப்பாய் இருந்தாயே
திருடியது உன்னை யாரோ? தீயில் சங்கமித்தது ஏனோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.
 
 
 

"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஜலாலுத்தீன் முகம்மது ரூமியின் கவிதையின் தமிழாக்கம்]

1 month ago
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை"
 
 
[ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.]
 
 
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை
மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால்
 
நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை
தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால்
 
நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை
தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால்
 
நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை
காற்று உதடைவிட மென்மை என்பதால்
 
நான் கனவில் அணைக்கிறேன் உன்னை
கனவில் உனக்கு முடிவேயில்லை என்பதால்"
 
"I choose to love you in silence…
For in silence I find no rejection
I choose to love you in loneliness…
For in loneliness no one owns you but me,
I choose to adore you from a distance…
For distance will shield me from pain,
I choose to kiss you in the wind…
For the wind is gentler than my lips,
I choose to hold you in my dreams…
For in my dreams, you have no end".”
 
 
[தமிழாக்கம் :
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.
 
 
 

"போனால் போகட்டும் போடா"

1 month ago

"போனால் போகட்டும் போடா"

 

"போனால் போகட்டும் போடா மனிதா
போதை போனதும் தெரியுது உலகமடா 
ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே   
ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!"


"ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே 
ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே 
ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே  
இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" 


"ஊடல் கொண்டு சென்ற மனைவியை 
கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் 
தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே
ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!"


"உண்மை இல்லா பற்றில் பாசத்தில் 
உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி 
உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து 
ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

India Reports Shortage of Wood Needed for Funeral Pyres as COVID Deaths  Surpass 234K

 

 

 

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 

1 month ago

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 


காலை:


"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் 
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் 
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் 
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில்  மெல்ல சுடுகுது  
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"


நண்பகல் [மத்தியானம்]:


"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் 
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்  
சந்தனப் பொட்டு பள பளக்குது    
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்  
வெந்திய குளம்பு  அடுப்பில் கொதிக்குது 
சிந்திய முத்துகள்  பொறுக்கி எடுத்து   
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" 


மாலை:


"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு 
வந்தனம் கூறி வசந்தி போறாள் 
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் 
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் 
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் 
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் 
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி  
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" 


இரவு:


"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் 
கந்தப்பு விராந்தையில்  பாய் விரிக்கிறான் 
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் 
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்  
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் 
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்  
தந்தன தந்தன  தாளம் போட்டு 
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   

குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!! 

"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"

1 month ago
"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"
 
 
"கிள்ளை மொழி பேசும் மரகதமே
கிளியே எங்கள் குலக் கொடியே
கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட
கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?"
 
"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே
மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு
மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி
மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?"
 
"சின்ன பூவே சிங்கார பூவே
சிஞ்சிதம் காதில் தேனாய் விழ
சித்திரம் பேசும் கண்ணும் ஓய
சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?"
 
"வடந்தை உன்னை தழுவாது இருக்க
வண்ண மலர்களால் தூளி கட்டி
வஞ்சகர் கண் படாது இருக்க
வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?"
 
"பச்சை இலுப்பை அளவாய் வெட்டி
பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி
படுக்க இதமாய் கம்பளி விரித்து
பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?"
 
"யாழ் எடுத்து ராவணன் இசைமீட்க
யாவரும் ஒன்றுகூடி கானம் கேட்க
யானை துதிக்கையால் ஏணை ஆட்ட
யாழ் மொழியாளே கண் உறங்காயோ?"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
[கிருத்திகை - கார்த்திகை,
குதலை - மழலைச் சொல்,
சிஞ்சிதம் - அணிகலவொலி,
தூளி - ஏணை,
வடந்தை - வாடை]
Checked
Sun, 05/19/2024 - 00:35
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/