கவிதைக் களம்

"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"

7 hours 13 minutes ago
"அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான்
அநியாயம் கேட்க புத்தனும் இல்லை
அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன்
அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
 
441542721_10225195604899979_5261980079276126688_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nxrFYErBG0QQ7kNvgG7kBr0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCgojNd8fNRRHi36ErmmQnELk2ltLSuxrSdSmf3oxWSmg&oe=664EAF5A 443843268_10225195633100684_3383196391363132688_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ApbUuzcOjmUQ7kNvgHAyYKt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDgXLzSbghd5WqMmw31Vu9aRfN41Rm6l-KzOgjR09xSMQ&oe=664EA0FA

"சிலுவையை மீண்டும் சுமப்போம்!"

10 hours 10 minutes ago
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!"
 
 
"உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன்
சிலுவையில் நீ நின்றாய்!
அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்
சிலகாசுக்கு விலை போனான்!
அன்று முளைத்த இந்த வஞ்சகன்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்
சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"
 
"உன்னை நேசித்த உன் தொண்டர்கள்
சிலுவையை தோலில் சுமந்தனர்!
அன்னை பூமி முழுவதும் உன்
சிந்தனையில் வழி காட்டினர்!
அன்று கண்ட மனித நேயம்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று நாம் உரிமையாய் வாழ
சிலுவையில் எம்மை அறைகிறோம்!"
 
"உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம்
சிலுவையின் பெருமை உணர்ந்தோம்!
அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம்
சிறந்த பண்பு கண்டோம்!
அன்று நம்பி மோசம் போனதால்
சிதைந்து மதிப்பு இழந்தோம்!
இன்று படும் துயரம் போக்க
சிலுவையை மீண்டும் சுமப்போம்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
321509661_1796822707350976_6075352548449230763_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=F7Qr4UgVN7UQ7kNvgFDUKVk&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBfsOOudGO4FLbuSpkisunp_Z6iAzQlvGOK4VH0uE76Fw&oe=664E9FF2 321650875_6022833167748718_2969620695368225796_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hwuqVPmG5hkQ7kNvgHS4spS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDkwNV7C8rN5xF7gUOFA_9Lg1w1Q0loh_9lAKhBxVrM7w&oe=664E7E08
 
 
 

"சமாதானம்" [அந்தாதிக் கவிதை]

1 day 10 hours ago
"சமாதானம்"
[அந்தாதிக் கவிதை]
 
 
"சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர்
போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்!
கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர்
மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!"
 
"தலைகுனிந்து உலகமும் கண் மூடியது
மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்!
சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான்
தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. 394293565_10224200890392738_750020505758437484_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fRS7p-ae7HcQ7kNvgGfyzL_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAwDRr1ApATybTmwmzjDa1t9fzBH8MtrZk7tjODzbRoaw&oe=664D3D5E
 

"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"

2 days 9 hours ago
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
 
 
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம்
இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்!
இளிச்ச வாய்கள் இனி வேண்டாம்
இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!"
 
"காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது
காலம் கடத்தி நீதி ஏமாற்றியது
காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது
காணும் இனி விலகி நில்!"
 
"முரசு முழங்கு தானை மூவருங்கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்
தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால்
சிறைகள் எங்கே வெற்றி எமதே! "
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
[முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி]
315277729_10222006781301382_5887448745389397766_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xK6Pt8fFiL4Q7kNvgF2cSie&_nc_oc=AdgZ2OamhqUB_R7zIFltXjiLTYWLkmVx6HDjqx44N1VVNc9KK71bHPsG43cvXIEaqjw2dU3n4jOzOZ2HWGv56b8p&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAJSwBLX-eor0zsYIZ4ePwjs_FG_GtrQ66tS94S88blNQ&oe=664BDED8 315316735_10222006783301432_8545528478206963048_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PGl5DbtCMTkQ7kNvgHLdC8T&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA6c6mPSuQBU3dO4IkCsAkSAlbtVdQNponDecxOjd1TpA&oe=664C001C
 
 
 

"கார்த்திகை தீபம்" [கவிதை]

3 days 6 hours ago
"கார்த்திகை தீபம்" [கவிதை]
 
 
"கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து
காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது!
கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!"
 
"காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான்
காசுக்கு தன் இனத்தையே விற்கிறான்!
காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான்
காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!"
 
"காணும் காட்சிகள் இருளை கொடுக்குது
காது கேட்பதும் பொய்யாய் தெரியுது!
காதல் புரிந்தே கொலையும் செய்கிறான்
கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!"
 
"ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை!
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"
 
"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம்!
நீதி வேண்டி சிலம்பை உடைத்தோம்
நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!"
 
"ஒன்றாய் கூடு உண்மையை உரை
நியாயம் நிறுத்து விசாரணை எடு!
கவலை மறக்க தீர்வைத் தா
கேள்வி கேட்டு நடுக்கல் முழங்குது!”
 
"வேலி நோக்கிய விளக்கு நிலையும்
போலித் தலைவரைக் சுட்டிக் காட்டட்டும்!
நீலிக் கண்ணீர் வடிப்பவரைச் சொல்லட்டும்
வாலிப உள்ளங்களுக்கு உற்சாகம் கொட்டட்டும்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
'வேலி நோக்கிய விளக்கு நிலையும்' [தொல்.பொருள்.புறத்திணை இயல்-35] – என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
317069000_10222084234197656_1672444827187816687_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FuhIY_2yq9EQ7kNvgGVarcZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAbXkARRnldtZzIDRHcJeMCySIGL9cEMrWhJbXCaJ_VbA&oe=664ACE11 316957511_10222084234597666_2111994945108095677_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fXbjMe7UrTUQ7kNvgFh0Zbe&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCCgVuZ_hd7UtXQEsL5CxFlKIO7Z4rvABhAh4zJIGKE5w&oe=664AC5BF
 

"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும்

3 days 23 hours ago

"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும்

 


"தர்மம் வகுத்த வழியில் நின்று   
கர்வம் மறந்து ஆசை துறந்து
ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி 
அர்த்தம் உள்ள உதவி செய்யின் 
ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!"


"தாய் தந்தை இருவரையும் மதித்து 
வாய்மை என்னும் பண்பு கொண்டு 
ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் 
மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால்  
செய்த நன்மை  தலை காக்கும்!" 
 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be an image of 3 people and text that says 'முதல் முடிவு கவிதைப் போட்டி B மிழரசி பதல்- தர்மம் படிவு- - தலை காக்கும் வரிகள்: 10, சொற்கள்: 40'

 

"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking"

4 days 9 hours ago
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking"
 
 
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்-
இமைகள் மூடி பல நாளாச்சு
மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்-
வரிசையாய் வருங்கள் பல சடலங்கள்
தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்-
கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன
 
நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்-
நங்கை இவள் உண்மை உரைத்ததால்
முலையை சீவினான் கொடூர படையோன்-
வஞ்சி இவள் காமம் சுரக்காததால்
கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்-
அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க
 
வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்-
இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம்
முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்-
விசாரணை எடு - உண்மையை நிறுத்து
கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்-
படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது"
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
 
 
"I am not able to sleep
Somebody Please help me
When I close my eyes
Only many corpses come
And unable to answer the questions
arise by the corpses that come
I am not able to sleep
Those who have the answers Please help
 
To bury the innocent corpses within my eyes
Is an impossible task for me.
I leave this to you, itself.
One by one all the Corpses…
 
Look closely the tongue of one has been sliced away
For having told the truth
For another the breast has been sliced off
For refused to make love with notorious groups
The corpses that come
Every one of them Scream with questions
 
In the line of these corpses ,
I found many kids
The voices of those Who became corpses
by fighting against 'Genocide'
Are destroying My sleep
‘Bring the truth.
expose the truth.
Take action ... Now… Now…’
From now I cannot sleep
Those with answers Come and Help me "
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
No photo description available.
 
 
 

"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்]

6 days 2 hours ago

"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!"
[எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்]


"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!
நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ
காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?"  


"வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே 
தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம்
ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!"


"மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி
கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ 
வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி" 


"கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே
அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே 
கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!" 
  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

436306295_10225160973354212_3323193699876707198_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=dWrn29lJqboQ7kNvgGkSk07&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBIdH9nI6iVD_uufxC9VmB2M82L0xK5tOMSbGR_h9fk7Q&oe=664715F2 436364480_10225160972994203_4224414375147599150_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xwiVORZD1Q4Q7kNvgFeGa1T&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCEsPJPmCCFSZ3S5TkMbbC9nizjiTYCb-cEUB9_LJsPrA&oe=6647246B 435963554_10225160973034204_9195377338929164158_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jHbRYa7h8YQQ7kNvgEgR1A2&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDoqLSVnC_Nr5mja9JQUtMTKuxadI84tLLSpFe52TI2YA&oe=664709F9

"தாய்" [12 மே 2024]

6 days 8 hours ago
"தாய்" [12 மே 2024]
 
 
"அன்பின் இலக்கணம் அன்னை ஆகி
அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்!
அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி
அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!"
 
"பாதிக்கும் இடர்களை தானே தாங்கி
பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்!
குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்
குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!"
 
"நடைதவறி வீழ்கையில் துணை நின்று
நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்!
கடையன் என்று பிறர் சொலினும்
கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!"
 
"வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை
வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை
வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை
தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
321208633_1211161826420729_7157779593602397621_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=D1sVKY7aOwIQ7kNvgF4s2Uj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAzmXH5TUC5B6qzuUEEJ2cE5cddg3SoLhAym0sxdnTplw&oe=6646C526 321026529_1633224933746870_4286717943230040333_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=OvVRx635Rj8Q7kNvgEGHxVf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAgTRSO-BGSWfWf0XNKnkPCNmBYSZv6aLvAhBrQDDE27w&oe=6646AE34 

"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!"

6 days 22 hours ago

"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!"

 

"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே 
ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே!
அழகான என்னுடலும் உனக்கே தருவேனே 
அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே
ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!"    

  

"காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல 
காலம் முழுவதும் அன்பின் நாளே! 
காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம்  
காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு
கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
436227681_10225154830480644_3669771065103385359_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ll3Gu8t_ukkQ7kNvgEJHp-y&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCX_khaIgApS5uEX7ZKZEgidBgZBPNLJr-qJ_6Fxt5eEQ&oe=664601CF 436227938_10225154830800652_6529440945092291861_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FeoPi2xTTDsQ7kNvgFgaQAI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD3HPG9RcDSlDoo5jX3lt7f5u_NmlknXXu-_zzpLZih8w&oe=6645FDC3

புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"

1 week ago

புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"

 

"பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய
சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக
உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர
காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள
மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில்
தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!"
 
 
"மாலைக் காற்று மெதுவாய் வீச
பாடும் குயில்கள் பறந்து செல்ல
வானவில் ஜாலங்கள் புரிய
மனதை நெருடி மகிழ்ச்சி தர
நாணம் கொண்ட என்னவளை நினைத்து
என் எண்ணத்தின் பெரு வெடிப்பில்
சிதறிய அவள் அழகுத் துகள்களை
பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து
ஓவியம் ஆக்கினேன்!"
 
 
"அகன்ற மார்பும் சிறுத்த இடையும்
ஒரு பக்கம் சரிந்த கார் குழலும்
இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும்
இதழில் மலரும் புன்னகையும்
தோளில் சரிந்து விழுந்து
முழங்காலை துப்பட்டா கொஞ்ச
அந்த அழகு சிலை
என் இதய பெரு வெடிப்பின்
அழகு துகள்களே!"
 
 
"அவள் அழகில்
தென்னை மரமும் குனிந்து ரசிக்க
ஞாயிறும் மயங்கி துயில் போக
தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட
அவள் கயல் விழிகள் இமைத்தன
என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!"
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
281161591_10221031847648650_674991457962821184_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=RKJLS6WlnYIQ7kNvgECbfvS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCzHzJ0letiTpUCVio7T70AkgldT21jBMBlcjJjlJ-t0A&oe=664585DE 281430594_10221031848728677_9015384990684833992_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VpnstiRfJBIQ7kNvgEmUZdp&_nc_oc=AdgAQ301K-YjHSmV58e50nw5U2RbrgDCkHY5hBsUVCzKYYOrz0oMjvbU5_-IGekKqZvPMjvuBTsbHedolx7xTEu1&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC59oqbg9d7CDXUYEgtCqwqd1jPtAxfinFVgppf8JtD8A&oe=66459709 
 

 

புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து"

1 week 2 days ago
புதுக் கவிதை / நவீன கவிதை:  "விடுதலையின் வித்து"
 
 
"சரியான நேரத்தில், சரியான மண்ணில்
சரியான விதை போட்டு, உரம் இட்டு
கிருமி நாசினி தெளித்தால்,
மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்!
ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக
போய்விடும்!!"
 
"நாம் வாழ்ந்தோம் இருந்தோம்
என்று இல்லாமல்,
எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம்,
எப்படி வாழ்கிறோம் சற்றுச் சிந்தி
உன் வரலாறு புரியும்
உன் பெருமை தெரியும்
உன் இன்றைய வாழ்க்கைக்கான
விடுதலையின் வித்து அறிவாய்!"
 
"உலகத்தை தூக்கத்திலிருந்து
ஒரு வித்து கிழித்தெறிந்தது
அனைத்து உண்மை இதயங்களிலும்
இரத்தம் சிந்தியது
ஒருமுறை போராடி
உலகுக்கு கொண்டு சென்றான்
விதையை விதைத்தான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
இவன் தான் மாண்டு
தன் இனத்துக்கு  தினை கொடுத்தான்!
விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!"
 
"ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய
அனைத்தையும் கொடுத்தீர்கள்,
பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள்
அது தேர்தல் காலம்!
ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும்
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்
அது நீங்கள் தன்னாட்சி அமைத்த காலம்!!
அச்சமும் பசியும் இன்று கூத்தாடுகிறது!
விதை விதைக்க
விடுதலையின் வித்தாக
இனி யார் வருவார்?"
 
"நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம்
அது கனவாகி விட்டது!
நாங்கள் முடிக்கவில்லை இடையில் தடுமாறிவிட்டது
இன்னும் சிலர் எரிகின்றனர்
இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!"
 
"நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன்
ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது?
என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக
பசியோடு வருகிறேன்
ஆன்மீக அம்சங்களுக்காக
திறமையான வாழ்க்கை முறைக்காக
விடுதலை உணவுகளுக்காக
துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன்
இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும்
விதையாக
விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!"
 
"சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக
சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக
உடைந்த இணைப்புகளுக்கு பூணாக
உங்கள் இதயத் துடிப்பை என் காது கேட்கிறது
உங்கள் வேதனையும்
உங்கள் கண்ணீரும்
என்னை மண்ணுக்கு இழுக்கிறது
விடுதலையின் வித்தாக!!"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
278646507_10220883336735970_3270250879201127653_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Vvg8tK1lGrIQ7kNvgGK9mJ3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBohF6W-Gk2q4Zu00Gm5KcB7bLC06GZDTp5f0E6nMpv9w&oe=66429025 278650255_10220883337255983_2753122145277033010_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=myMDuoBs0z4Q7kNvgHsbC9S&_nc_oc=Adj7YBC9u-2_6k-nxa46dNT2iQ0IYhV073hdkaL76esG1df52vTS-P9a87lFekeUVIINCAomXx9lXyjJRYm3DmKV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDNjOGEg3t2g6dUZyxCsfOQiijUS5dzgxCre9QZO7dRqw&oe=6642B5B6 278640460_10220883337775996_3172079906064231560_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LR0l-FG0v8gQ7kNvgGIxlga&_nc_oc=Adin4JhxlQYhrZ17AuQkc6a17dHcfOdwMZ_xyWv3vFlqssV3hrplXQU1TRE492tjRDSaeJ7kAGXzzM84c7c9hXnr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCtRwGE2BIh0CYjBGhvWfaPh5WLZhj0KplR2n8F79RuSA&oe=6642AABF
 
 

"மனித மனம் திருப்தி அடையாது"

1 week 3 days ago
"மனித மனம் திருப்தி அடையாது"
 
 
"மனித மனம் திருப்தி அடையாது
மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது
மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது
மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!"
 
"கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான்
கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் 
கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான்
கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!"
 
"இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது
இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும்
இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை
இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!"
 
"சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை
சிலருக்கு வைக்க இடமே இல்லை
சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு
சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை!"
 
"பணக்காரன் மூட்டை முடிச்சை பதுக்குகிறான்
பஞ்சம் பிடித்தவன்போல் என்றும் அலைகிறான்
பட்டினி கிடந்தாலும் சாதாரண மனிதன்
பங்கிட்டு அதையும் கொடுத்துச் சாப்பிடுகிறான்!"
 
"உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல
உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம்
உலோபியாக சேர்த்து வைப்பதை விட
உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
240792855_10219786570797507_6787313053288664334_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=tmAG6ypRIFUQ7kNvgF-q0KU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBcl7h5SyaVdU9tZNg2E4n5Fa7SwsTKI-u53D4CQBIr7Q&oe=66413666 240785787_10219786571157516_8075786961198824570_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=iNySCHSojZwQ7kNvgEKBmV7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCfdsUyyXOf38zVhh-i5conZBDkVccGZ88dWVzuCwg-Rw&oe=66413D13 240800959_10219786571597527_3342207447057755334_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TDLw08QvuHIQ7kNvgE86Kmn&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBXRIYD6JIeyPZCwnLU6F1ljpoH4jH_M3npXqE-1gPmkg&oe=664141AF
 
 

"தளிராடும் தூறலில்"

1 week 4 days ago

"தளிராடும் தூறலில்"

 

"தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில் 
துளிர்விடும் இன்பக் காதல் நினைவில் 
ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில் 
எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்!   
குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!"

 

"எண்ண முடியா உடல் கவர்ச்சியும் 
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும் 
மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே! 
விண்ணில் உன் முகம் தெரிகிறதே!" 


  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

441317470_10225131057846343_6425866561417554245_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Cnzxg7FgshAQ7kNvgGEDXMZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBSK6JnzwWQeSrT_i-OQ0oI8awgZ6fS4QYbwoIN0vBjoA&oe=66404D5E 441404982_10225131057966346_3503881566058659489_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PBLzmW0y3qwQ7kNvgGDmend&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDCFgZbu0goTc_1Mlu39c28Z4n6-be3iOSmzKA0tzZsog&oe=66405F4D 


 

"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"

1 week 5 days ago
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IliwO05j0gwQ7kNvgFdJYiO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACVO_Dr4h1tS2yBnMWzNymn7Y9jw4PnhZUFhI2yalb3A&oe=663ED0F6 289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LkFD9Wz2UDwQ7kNvgF_58s0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDZDDaJ59ygn_A5rXFvKwL8DoP_8AIfkvXFSB4tsbBTKw&oe=663EE024
 
 
 

"அன்பே ஆருயிரே"

1 week 6 days ago
"அன்பே ஆருயிரே"
 
 
"அன்பே ஆருயிரே அழகான மயிலே
கன்னம் இரண்டும் சிவந்தது எனோ?
சின்ன இடை ஆசையத் தூண்டுதே
அன்ன நடையில் அருகில் வாராயோ?
இன்பக் கடலே என்னைத் தழுவாயோ?"
 
"காதலே காவியம் படைக்கும் உறவே
மோதலைத் தவிர்த்து புன்னகை பூக்காயோ?
ஆதரவாய் என்றும் நான் இருப்பேனே
இதயத்தில் வலியை ஏன் தருகிறாய்?
சாதல் வருமுன் என்னை அணைக்காயோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
441533929_10225120855151282_1795832398488831403_n.jpg?stp=dst-jpg_p228x119&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=X7fuHSr0AtwQ7kNvgH8eTaF&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAWkAgVORI7eL0tKq3SCWeTOgRQWiqzY2WY2d5A6hz3hw&oe=663DC739 441457713_10225120854911276_8497508958783534082_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5Eutb3YQB4QQ7kNvgHCKTVI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBwQ-5NlzU2kzC98PKgY2T9a3yc9t-QQGaF159TrkPFCA&oe=663DB5EE 441457759_10225120854791273_1761546838574103329_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5kSKrxNNIIMQ7kNvgGM7Mho&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCpJuBowEJEA_d48DXIjVowjhCwVabnvVGIg2aUA8yCag&oe=663DBE4A

கண்ணீர்க் கோலம்.

1 week 6 days ago

தடம்புரண்டோடும் மனித வாழ்வில்

தடம்புரளா வண்டி போல் அவன்

தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில்

தபுதாரனற்ற ஒருத்தன்

தவிப்பில் அவள்

தவிர்க்க முடியாது

தவித்த அவன் விழிகள்

தத்தை அவள்

தகிக்கும் வதனம் காண......

 

தண்ணீர் போல் கண்ணீர்

தத்தளிக்கும் துளிகள்

தரவரிசையாய் சரிகின்றன.

தவிக்கிறது அவன் மனசு

தரமறியாது

தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க..

தவிர்த்த விழிகள்

தகர்ந்து போகின்றன

தகரடப்பா போல் போனுக்கு

தத்தை அவள் கண்ணீர் கோலம்

தரவாகிறது

தகவலாய் மறுமுனை தாவ

தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...!

 

தகர்கிறது

தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில்

தகரும் அவள் வதனப் பூச்சொடு 

தத்தை மேல் வைத்த காருணியம்.

தவித்தே போகிறது அவன் மனம்

தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!

 

"உயிரின் உயிரே!"

1 week 6 days ago
"உயிரின் உயிரே!"
 
 
"அன்பு கொண்டு .... அருகில் வந்தேன்
ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ?
இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம்
ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே
உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!"
 
 
"ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று
எழுச்சி கொண்ட .... எம் காதலே
ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ?
ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே
ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
440582468_10225115677861853_807707175072408078_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4sRH5gEt_IgQ7kNvgGNIr61&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCxjxjO_RILjEFjdDOx2DZt99BnBQe118ApPH4WeMyELw&oe=663C87D0 441450302_10225115678061858_4049666798247257531_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HJ20ft3tzbMQ7kNvgE-Rem0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBvVV_8BjK8vwMsWG6RdzzECFL9EPr0rNYPHVTSNI0oFQ&oe=663C8CBC

ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு

2 weeks 1 day ago
கடந்த இரண்டு வாரங்களாக
இருமல் இருமல் இருமல்
 
தொண்டை கழுத்து
முதுகு தலை
நுரையீரல் இதயம்
எல்லா உறுப்புக்கும்
இப்போது வேலை
 
இருமல்
இப்போது எனக்குக் கிடைத்த
ஒரு நுட்பமான
வார்த்தை விளையாட்டு
 
நித்திரை தொலைந்தது
மேல் மூச்சு வாங்குகிறது
 
பகலை நீட்டிக்க
இருமல்
தகுதியானவர்களுக்கு மட்டுமே
பரிசளிக்கப்படுகிறது
 
தியா - காண்டீபன்

"வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring"

2 weeks 2 days ago
"வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring"
 
 
 
"தோப்பின் நிழலில் சாய்ந்து இருக்கையில்
தோன்றின மனதில் ஆயிரம் எண்ணங்கள்
தோரணமாய் தொங்கிய இன்ப சிந்தனையில்
தோய்ந்து சில சோகத்தையும் தந்தன!"
 
"இயற்கை மனித குலத்தின் ஆன்மாவுடன்
இறுக்கமாக தொடர்பை பிணைக்கும் பொழுது
இதயம்வருந்தி என்னை சிந்திக்க வைத்தது
இவனேன் மனிதகுலத்துடன் பிணையவில்லை என்று?"
 
"பசுமை வனப்பகுதியில் காட்டுச்செடிக் கூட்டத்தில்
பஞ்சுச்செடி அழகிய மாலையை சூட்டிட
பல்லாயிரம் மலரும் தாம்சுவாசிக்கும் காற்றை
பரவசத்துடன் அனுபவித்து இன்பம் கண்டன!"
 
"என்னைசுற்றி பறவைகள் துள்ளி விளையாடி
எண்ண முடியா கற்பனையில் மகிழ்ந்து
எக்களித்து இன்பத்தில் மூழ்கி எழுந்து
எட்டிஎட்டி மெல்லத் தாவி திரிந்தன!"
 
"அரும்பிய கிளைகள் தென்றலை பிடிக்க
அகண்டு விரிந்து விசிறியாய் மலர்ந்து
அழகு சேர்த்து இன்பம் கொட்டும்
அதிசயக் காட்சியில் நானும் மகிழ்ந்தேன்!"
 
"அழகிய இயற்கையின் புனிததிட்டமே இதுவென
அறிவுப்பு ஒன்றைச் சொர்க்கம் அனுப்ப
அவனின் அழிவைநிறுத்த புனிததிட்டம் என்னவென்று
அவனைப் பார்த்து நான் புலம்பினேன்!"
 
 
[தமிழாக்கம்:
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
குறிப்பு :
 
காட்டுச்செடி - primrose
பஞ்சுச்செடி - periwinkle
அவனின் அழிவைநிறுத்த - மனிதனின் அழிவைநிறுத்த
அவனைப் பார்த்து - கடவுளை / சொர்க்கத்தை பார்த்து
 
 
'Lines Written in Early Spring'
"I heard a thousand blended notes,
While in a grove I sate reclined,
In that sweet mood when pleasant thoughts
Bring sad thoughts to the mind."
 
"To her fair works did Nature link
The human soul that through me ran;
And much it grieved my heart to think
What man has made of man."
 
"Through primrose tufts, in that green bower,
The periwinkle trailed its wreaths;
And ’tis my faith that every flower
Enjoys the air it breathes."
 
"The birds around me hopped and played,
Their thoughts I cannot measure
But the least motion which they made
It seemed a thrill of pleasure."
 
"The budding twigs spread out their fan,
To catch the breezy air;
And I must think, do all I can,
That there was pleasure there."
 
"If this belief from heaven be sent,
If such be Nature’s holy plan,
Have I not reason to lament
What man has made of man?"
 
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் / William Wordsworth (7 ஏப்ரல் 1770 - 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கிய ஆங்கில காதல் கவிஞர் ஆவார். தி பிரிலூட் [The Prelude] வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். / William Wordsworth was one of the founders of English Romanticism and one its most central figures and important intellects. Born in England in 1770, poet William Wordsworth worked with Samuel Taylor Coleridge on Lyrical Ballads (1798). Wordsworth also showed his affinity for nature with the famous poem "I Wandered Lonely as a Cloud." He became England's poet laureate in 1843, a role he held until his death in 1850.]
No photo description available. 275906203_10220739389537380_8184846380068115970_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IRFlD6r9zSEQ7kNvgGiLGld&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDLuTkby2UPYhgQBLkjGKUDJEAfz9jKTVd6wktKkiFa6g&oe=6639E49B 
 
Checked
Sat, 05/18/2024 - 21:33
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/