Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
தம்பி உம்முடைய ஒரு வித கைவண்ணம் அங்கு அறிந்தேன் மற்றதை இங்கு காண்கிறேன்
__________________________________
''கம்பன் தறியும் கவிபாடும்''
__________________________________
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
உம்மையும் நான் அறிவேன் என்னையும் நீர் அறிவீர்
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>... பட்டால்தான்...</span>
கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவையாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான்.
எட சண்முகநாதன் நான் ஆரோ கள்ளர் கள்ளதிறப்பு போட்டு கதவை திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன் எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி அதுக்குபிறகு நாலுநாளா ஆளை காணேல்லை உன்ரை கான் போனுக்கும் அடிச்சுபாத்தன் வேலை செய்யேல்லை என்னடா உன்ரை கோலம் தலைமயிருக்கு கலரும் அடிச்ச காதிலை தோடு கோலம் மாறிப்போய் வந்திருக்கிறாய். எங்கை போனனி??
இல்லைமச்சான் சிவா ஒருகிழைமை லீவுதானே அதுதான் நானும் இவள் நத்தாசாவும் கொலண்டுக்கு போனனாங்கள்.இப்பதான் வந்தனாங்கள். அதுதான் என்ரை கான் போனையும் நிப்பாட்டி வைச்சிருந்தனான் .அதுசரிநீயென்ன எழுதிகொண்டிருக்கிறாய்?.
அதுஆர் நத்தாசா
அதுதான் மச்சான் அண்டைக்கு என்னேடை பஸ்சிலை கண்டாய் அவள்தான்
ஓ சண்முகநாதா அந்த ஊதினா பறந்து போற மாதியொருத்தி உயரமா வெள்ளை தலைமயிர் அவளோ
ஓம் அவள்தாண்டா சிவா
அது சண்முகநாதன்....
நிப்பாட்டுமச்சான் எத்தினைதரம் சொல்லியிருக்கிறன் என்ரை முழுப்பெரை சொல்லி கூப்பிடாதையெண்டு சண் எண்டு சுருக்கமா கூப்பிடு.உன்னாலை என்ரை பிரெஞ்சுகார சினேகிதர் எல்லாம் என்னை நக்கல் அடிக்கிறாங்கள். உன்க்கு எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டாய்.
சரி சரி சண் கேவிக்காதை பழகிப்போட்டுது அதுதான்ரா சின்னனிலையிருந்து நீயும் நானும் சினேகிதம் கூப்பிட்டுபழகிப்போட்டுது.அதுசரி பிரெஞ்சுகாரனும்தான் கல்லு .மண். முட்டாள் எண்டு பேர் வைச்சிருக்கிறான் அதை நாங்கள் நக்கலடிக்கிறமா? அதைவிடுநானும் நீ ஏதோ பொழுது போக்கா உந்த வெள்ளையளோடை சினேகிதமா திரியிறாய் எண்டுதான் நினைச்சனான். ஆனா உன்ரை போக்கு பிழையாய் தெரியிது.சொல்லுறனெண்டு கோவிக்காதையடா.ஊரிலை உன்ரை மனிசி பிறந்து இன்னமும் நேரை உன்ரை முகத்தை பாக்காத உன்ரை பிள்ளை. உதுகளை விட்டிட்டு நீ வெள்ளைக்காரிக்கு பின்னாலை திரியிறாய் அதுகள் பாவமல்லோ.
ஆஆ தொடங்கிட்டான்ரா மச்சான் சிவா உன்ரை புத்திமதியை கொஞ்சம் நிப்பாட்டு ஏதோ அந்த நேரம் வீட்டுகாரர் கலியாணம் செய்ய சொன்னதாலை தெரியா தனமா கட்டிப்போட்டன்.அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்லுறாய்.மனிசிபிள்ளையை இஞ்சை கூப்பிடசொல்லுறியா?.உனக்கே தெரியும் என்ரை மனிசி ஒரு சுத்த பட்டிக்காடு அதுக்கு இஞ்சத்தைய நாகரீகங்கள் சரிவராது அதை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்.அதுமட்டுமில்லை பிரெஞ்சுகாரியை பிடிச்சாத்தான் மச்சான் பாசையும் கெதியா பிடிக்கலாம்.வேணுமெண்டா நீயும் ஒண்டு பிடியன்
அண்டைக்கு படம் அனுப்பியிருக்குதுகள்.மனிசி எண்ணைவைச்சு தலையைவழிச்சிழுத்து.பிள்ளைக்கு நெத்தியிலை கன்னத்திலை முக்கிலையெண்டு பொட்டு வைச்சு வாழைப்பாத்திக்கை நிண்டு படம் எடுத்து அனுப்பியிருக்கிதுகள்.என்னெண்டு கேட்டா கதலிவாழை குலைபோட்டு வடிவாயிருக்காம் அதுதான் பட மெடுத்தவையாம்.அப்ப இதுகளை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்
அடேய் சண் உன்ரை கதையைபாத்தால் எங்கடை அரைவாசிப்பேர் வெளிநாட்டுக்கு வந்திருக்கேலாது. ஏன் நீகூடத்தான் ஊரிலை நீ எப்பிடி திரிஞ்சனியெண்டு கொஞ்சம் நினைச்சு பாத்தனியே. ஏதோ எங்கடசனம் இங்கை வந்து இந்த நாடுகளிற்கும் ஏத்தமாதிரி தங்களை கொஞ்சம் மாத்திகொண்டுதானே வாழுதுகள்.நான் முடிஞ்சா பாசையை படிச்சு பிடிக்கிறன் இல்லாட்டி தெரிஞ்சதை கதைச்சு போட்டு போறன் உப்பிடித்தான் பாசை பிடிக்கவேணுமெண்டில்லை
உன்ரை மனிசிபட்டிக்காடு என்டுறாய் அந்தபட்டிக்காட்டாள் தந்த சீதன காசிலைதான் நீ வெளிநாடு பாத்தனி அதைவிட உனக்கு ஒண்டரை வயசிலை ஒரு பொம்பிளைப்பிள்ளையும் இருக்கு. உன்ரை மனிசிஉன்னினை எவ்வளவு அன்பிருந்தபடியா உன்ரை பேரையே சுருக்கி உன்ரை மகளுக்கும் சண்முகி எண்டு பேர்வைச்சிருக்கும். கொஞசம் யோசி மச்சான்.
சிவா எனக்கு உன்ரை புத்திமதி கேக்க நேரம் இல்லை உன்ரை மனிசி வரப்போகுதெண்டு சொன்னனி அதாலை நானும் உன்னோடை இனி வீட்டிலை இருக்கேலாது.நானும் நத்தாசாவும் ஒரு வீடு எடுத்திருக்கிறம்.நேரம் கிடைக்கேக்கை நான் வந்து என்ரை சமான்களை எடுக்கிறன். அதை சொல்லத்தான் வந்தனான் போட்டுவாறன்.
டேய் சண் கோவிக்காதை ஏதோ நல்ல சினேதன் எண்ட உரிமையிலை கனக்க கதை;ச்சுப்போட்டன்.வந்தனி பங்குஆட்டிறைச்சி வாங்கி கறிவைச்சிருக்கிறன் சாப்பிட்டு போவன்.ஏதோ உன்ரை புத்திக்கெட்டினபடி நட.
சிவா இதுதான் இதுதான் பங்காடு மாதகடைசியிலை சீட்டு வட்டி கலியாணம் காதுகுத்து எண்டு இப்பிடியே வாழ்ந்து கொண்டிருங்கோ.நான்போட்டுவாறன்.
சண் கோவமாக வெளியேறுகிறான். கடவுளே நீதான் இவனுக்கு நல்வபுத்தியை கொடுக்கவேணும் என்று நினைத்தபடி தான் மனைவிக்கு எழுதிகொண்டிருந்த கடிதத்தை தெடர்கிறான்.
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு திருமணவரவேற்பு வீட்டில். காய் சிவாஎன்று ஒரு குரல்
சிவா திரும்பிபாத்தான்.
டேய் சண் எப்பிடியடா இருக்கிறாய். உன்னை கண்டு கனகாலம்என்ரை மனிசி வந்ததுக்கு மற்றது பிள்ளை பிறந்ததுக்கு எண்டு உனக்கு சொல்லுவமெண்டு உன்ரை கான் போனுக்கு அடிச்சனான் வேலை செய்யேல்லை வேறை ஆக்களை விசாரிச்சனான் நீ வேறை இடத்தை போட்டாயெண்டு சொன்னாங்கள்.எப்பிடியிருக்கிறாய் எங்கை உன்ரை நம்பரைதாவன்.உன்ரை வீட்டுகாரரும் உன்னை தேடி என்னட்டை அடிக்கடி விசாரிச்சபடி.
வீட்டுகாரரின்ரை துன்பம்தாங்கேலாமைதான் சிவாநான் நம்பரை மாத்திப்போட்டன்.என்ரை நம்பரை தந்தா நீகட்டாயம் வீட்டுகாரரிட்டை குடுத்துடுவாய்.உன்ரை நம்பர் என்னட்டையிருக்குதானே ஏதும் தேவையெண்டால்நான் அடிக்கிறன்.மற்றது தற்செயலா அண்டைக்கு இவன் ரவி கண்டிட்டு தன்ரை கலியாணத்திற்கு கட்டாயம் வரவேணுமெண்டு அடம் பிடிச்சான்.
நத்தாசாவும் எங்கட கலியாணத்தை பாக்க வேணுமெண்டு கேட்டாள் அதுதான் வந்தனான்.
என்கூறிக்கொண்டிருக்கும்போதே நத்தாசா அங்கு வந்தாள். சிவா தன்னையும் தன்மனைவி பிள்ளையையும்அவளிற்கு அறிமுகம்செய்து வைத்தான்.
விருந்து தொடங்கியது பலவகை மதுக்களும் பரிமாறப்பட்டது.இசை மெல்லமெல்ல உயரதெடங்க கொஞ்சம் கொஞ்சமாக பலரும் நடனமாட தொடங்கினர்.நத்தாசாவும் சண்ணும் ஆடதொடங்க அவர்களே அந்த விருந்தில் முக்கிய பாத்திரமானார்கள்.
பலரின் கண்களும் அவர்களையே பார்த்தபடியிருந்தன.
என்ன சொன்னாலும் சண் மச்சகாரண்டா பார் பிடிச்சாலும் பிடிச்சான் புளியம் கொம்பா பிடிச்சிருக்கிறான்.என்று ஒருவர் கூறியது சண்ணின் காதில் விழுந்தது.
இன்னெருவர்.அங்கைபார் என் வளவளவெண்டுஉடம்பு என்னமா ஆடுறாள் நீயும் இருக்கிறியே சோத்தை திண்டு திண்டு அரிசி ழூட்டை மாதிரி ம்ம்ம்..சண் குடுத்து வைச்சவன் என்றார்.
சண்ணிற்கோ தலைகால் புரியாத மகிழ்ச்சி மட மடவென்று விஸ்கியை உள்ளே இறக்கிகொண்டு வீழுந்து பிரண்டு ஆடிக்கொண்டிருந்தான்
மறுநாள் மதியம் நத்தாசா சண்ணை நித்திரையிலிருந்து எழுப்பினாள்.
சண் எழும்பு வெளியிலை போய் ரெஸ்ரோரண்டிலை சாப்பிட்டிட்டு இரவுக்கு நாங்கள் வழமையா போற கிளப்பிற்கு போகலாம்.
சண் தலையை நிமிர்த்திபாத்தான்.ஆஆ தலையிலை கல்லை வைச்சமாதிரி பாரமா இருக்கு ராத்திரி கனக்க அடிச்சிட்டன் சரியா தலையிடிக்கிது. நத்தாசா கட்டாயம் இரவுக்கு கிளப்பிற்கு போகத்தான் வேணுமோ??.
சண் என்ன கேள்வி ஒவ்வொரு சனிக்கிழைமையும் வழமையா போறதுதானே மருந்து குளிசை இரண்டை போடும் எல்லாம் சரியாயிடும். நாளைக்கும் லீவுதானே நல்லா படுத்து நித்திரை கொள்ளலாம்.
சொன்னா இவள் கேக்கவா போறாள் என நினைத்தவாறே போய் சில குளிசைகளை வாயில் போட்டு தண்ணிகுடித்து கொண்டு தயாரானான்.
இருவரும் ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு உலாவி விட்டு இரவு 11 மணியளவில் வழக்கமாக செல்லும் இரவுவிடுதிக்குள் நுளைந்தனர்.
சண்ணிற்கு தலைவலி தீராமல் நெற்றியை கையால் பிடித்தபடியே உள்ளே நுளைந்ததும்.ஒரு விஸ்கி ஐஸ் சொன்னான்.
நத்தாசா உன்க்கு என்ன வேணும் நான் திருப்பி விஸ்கி குடிச்சாத்தான் தலையிடி நிக்கும். நத்தாசா சம்பெய்ன் என்றாள்.இருவரும் தங்கள் குடிவகைகளை பொற்றுக்கொண்டதும் கிளாசோடு கிளாசை முட்டி அளவு சரியாக இருக்கிறதா எனப்பார்த்து விட்டு(சின் அல்லது சியஸ்)மதுவை அருந்தினர்.
வா சண் ஆடலாம் நத்தாசா சண்ணின் கைகளை பிடித்தாள் .
இல்லை நத்தாசா எனக்கு இண்டைக்கு ஆடுற மனநிலையில்லை உடம்பு சரியில்லை நீ போய் ஆடு நான் பிறகு வாறன் .
நத்தாசா ஆடப்போய்விட்டாள்.சண் இன்னெரு விஸ்கிக்குசொல்லிவிட்டு நத்தாசாவின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு கறுப்பினத்தவன் (ஆபிரிக்கன்) நத்தாசாவிடம் வந்து நான் உன்னுடன் ஆடலாமா என்றான். தாராளமாக என்று நத்தாசா அனுமதித்தாள். இருவரும் பக்கம் பக்கமாக நின்று ஆடிக்கொண்டிருந்தனர்.நிமிடங்களை மணித்தியாலம் விழுங்கிக்கொண்டிருந்தது.
சண் தனது எட்டாவது கிளாசை முடித்து விட்டு ஒன்பதாவதிற்குள்நுளைந்தான் இப்போ அவனிற்கு தலைவலி போய் போதை தலையில் கிறுகிறுத்தது.நிமிர்ந்து நத்தாசாவை பார்த்தான். அவளிற்கும் அந்த கறுப்பனிற்குமான இடைவெளி குறைந்து கறுப்பன் நத்தாசாவை பின்புறமாக கட்டிபிடித்தபடி காற்று கூட புகமுடியாத நெருக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தான்.
சண்எழுந்தான் சற்று தடுமாறியவன் சதாகரித்துக்கொண்டு நத்தாசாவிடம் போய். வா நத்தாசா வீட்டிற்கு போகலாம்.
என்ன சண் இப்பதானே இரண்டுமணி என் அவசரம் கொஞ்சம் பொறு போகலாம்.
இல்லை நத்தாசா என்னாலை நிக்கேலாது போவம் வா. என்று அவளின் கையை பிடித்த இழுத்தான்.
அப்போ அவளுடன் ஆடிக்கொண்டிருந்த கறுப்பன்சண்ணிடம்.ஏய் என் அவளை இடஞ்சல் செய்கிறாய். என்று கேட்க. சண் அவனை தள்ளிவிட. விழப்போனகறுப்பன் தட்டுதடுமாறி எழந்து கைவிரல்களை மடக்கி ஓங்கி சண்ணின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
அம்மா...... சண் தன்னையறியாமல் தமிழில் கத்தியபடி கீழேவிழ.நத்தாசாவும் கத்த விடுதி வாசல் காவலாளி வந்து முவரையம் வெளியேற்றினான் வெளியே வந்த சண்ணிற்கு உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது ஒரு கடதாசியினால் வாயை பொத்தியபடி போய் காரில் ஏற நத்தாசா காரை ஒட்டியபடி. சண் நீயேன்......
நத்தாசாஇப்ப ஒண்டும் கதைக்காதை என்னாலை கதைக்க ஏலாதுவீட்டை போய் கதைப்பம்.
வீட்டிற்கு வந்ததும் கண்ணாடியில் போய்பார்த்தான் கீழ் உதடு வெடித்து வீங்கியிருந்தது. பாவிப்பயல் தன்ரை சொண்டுமாதிரியே எனக்கும் வீங்கவைச்சிட்டான். என்றவாறு போய் ஒர ஐஸ் கட்டியை எடுத்து உதடுகளில் ஒற்றியடி இன்னொரு ஐஸ் கட்டியை கிளாசில் போட்டு கொஞ்சம் விஸ்கியை ஊற்றினான்.
சண் போதும் நிப்பாட்டுநீகனக்க குடிச்சதாலைதான் கிளப்பிலையும் பிரச்சனை.
என்ன என்னாலை பிரச்சனையோ நான்வரச்சொல்லேக்கை வந்திருந்தா ஒருபிரச்சனையும் வந்திருக்காது உனக்கு அந்த கறுப்பனோடை ஆடவேணும்அதுதான் பிரச்சனை.
இருவருக்குள்ளும் வார்த்தைகளில் வன்முறை முற்றி அசிங்ககங்களாய் வந்து விழுந்தன.
என்னடி சொன்னனி என்ரை பிறப்பையா கேவலமாய் பேசிறாய் என்றபடி சண் கையை ஓங்க.
என்ன அடிப்பியா அடிபாப்பம். வெளியே போடா தமிழ்நாயே என்றுநத்தாசா கத்த சண்ணிற்கு அப்போதான் ரோசம் பொங்க அவளின் கன்னத்தில் ஓங்கியறைந்தான்.
அவளும் கத்தியபடி சண்ணை நகங்களால் கீறித்தள்ள. இவர்களின் சத்தத்தில் அக்கம் பக்கத்தவர்கள் விழித்து கொள்ள வீட்டின் அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டு சண் கதவை திறந்தான்.
பக்கத்து வீட்டுக்காரர். இப்ப நேரம் என்ன நாங்கள் நித்திரை கொள்வதில்லையா??சத்தத்தைநிறுத்துகிறீர்களா அல்லது பொலிசுக்கு போன்பண்ணவா என்று கேபமாய் கேட்க அந்த தருணம் பார்த்து நத்தாசா சண்ணை வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டாள்.
நத்தாசா கதவை திற கத்திப்பார்த்தான் அந்த கட்டிடத்திலிருந்த மீதிப் பேரும் விழித்துக்கொள்ள நிலமை மேசமாவதை உணர்ந்த சண் கதவிற்கு காலால் ஓங்கி உதைந்து விட்டு கீழிறங்கி வந்து கட்டிடத்தின் படிகளில் அமர்ந்தவாறு காற்சட்டைபைக்குள் கைவிட்டான் அப்பாடா நல்லவேளை சிகரற்றாவது பொக்கற்றுக்கை கிடக்கு.என்றவாறு ஒருசிகரற்ரை பற்றவைத்து ஒரு இழுவை இழுத்துவிட காவல்துறை வாகனமொன்று அவனருகில் வந்து நின்றது.
போச்சுடாவந்திட்டாங்கள். பக்கத்துவீட்டுகாரன் ஆரோ அடிச்சிட்டாங்களா? இல்லை இவள் நத்தாசா தான் அடிச்சு கூப்பிட்டாளோ தெரியாது என்று நினைத்தபடியிருக்க ஒரு அதிகாரி அவனிடம் வந்து .வணக்கம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்றார்.
என்ரை அடையாள அட்டை மேலை வீட்டிலை இருக்கு எனக்கும் என்ரை நண்பிக்கும் ஒரு சின்னப் பிரச்சனை அதுதான் ..... என்று இழுக்கஒருஅதிகாரி அவனை சுவருடன் சாத்தி வைத்து காலிலிருந்து தலைவரை தடவி சோதனை போட்டுவிட்டு
நத்தாசா என்று ஒருபெண்தான் எங்களை வரவழைத்தார் அவரா உங்கள் நண்பி வாருங்கள் மேலே உங்கள் வீட்டிற்கு போகலாம் என்றவாறு
அவனையும்கொண்டு வீட்டிற்கு போனார்கள் நத்தாசா அழுதழுது அடித்ததாக முறையிட்டாள்.அவர்கள் ஒரு கடதாசியில் விபரங்களை எழுதிக்கொண்டு நாளை ஞாயிற்றுகிழைமை விடுமுறைநாள் எனவே திங்கட்கிழைமை காலை நத்தாசாவை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு சண்ணிற்கு விலங்கடித்து கொண்டு போய் விட்டார்கள்.திங்கள் காலை ஒரு காவலதிகாரி வந்து சண்ணை அழைத்தகெண்டு போய் ஒருமேலதிகாரிமுன் இருத்தினார்.மேலதிகாரி சில சம்பிரதாய பெயர்விபர கேள்விகளை கேட்டுவிட்டு உங்கள் நண்பி காலை வந்தார் உங்களிற்கு நல்ல காலம் அவர் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் நீங்கள் இனி அவர் இருக்குமிடத்திற்கு போகவோ வேறு வழிகளில் அவரிற்க தொந்தரவு கொடுக்கவோ கூடாது உங்கள் கைத்தெலை பேசியும் பணப்பையையும் அவர் கொண்டு வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறார் மேலதிகமாக ஏதும் உங்கள் உடமைகள் அவரிடம் இருந்தால் நீங்கள் எங்களின் உதவியுடன் தான் அவற்றை பெற்று கொள்ளலாம்.உங்களை எச்சரித்து விடுவிக்கிறேன் நீங்கள் போகலாம் என்றார்.
சண் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். நல்ல வேளை அவள் வழக்கு போடேல்லை தப்பிட்டன் இனி அவள் இருக்கிற பக்மே போகூடாது எல்லாத்திற்கும் ஒரு கும்பிடு என்று நினைத்த கொண்டு இப்பை எங்கை போறது கைத்தெலைபேசியை எடுத்து சிவநாதனின் இலக்கத்தில் அமத்தினான்.
கலோ நான் சண் எங்கை வேலையிலையே நிக்கிறாய் கொஞ்சம் பிரச்சனை மச்சான்.இப்ப றோட்டுக்கு வந்திட்டன் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை அதுதான் உன்க்கு அடிச்சனான்.
உதெல்லாம் நான் எதிர்பாத்ததுதான்டா சண் சரிசரி எனக்கு இன்னும் ஒருமணித்தியாலத்திலை வேலை முடிஞ்சிடும் எங்கை நிக்கிறாயெண்டு சொல்லு நான் வந்து உன்னை ஏத்துறன்
சிவா போய் சண்ணை தனது வண்டியில் ஏற்றிதனது வீட்டிற்கு கூட்டிப்போனான். போகும் வழியில் சண் நடந்தவைகளை சிவாவிற்கு கூறிக்கொணடே வீடுபோய் சேர்ந்தனர்.
சண் இரண்டுநாளாய் நீ பொலிசிலை வடிவா சாப்பிட்டோ நித்திரையோ கொண்டிருக்கமாட்hய் போய் குளிச்சுட்டுவா நேற்று பங்குஆடுவாங்கின்னான் மனிசி அந்தமாதிரி கறி வைச்சிருக்கு சாப்பிட்டு வடிவா நித்திரையை கொள்ளு.இந்தா துவாயும் உடுப்பும்.
சண் நன்றாக குளித்து உடை மாற்றிகொண்டு கண்ணாடியில் ஒரு முறைபார்த்தான்.காதிலும் நாக்கிலும் குத்தியிருந்தவையெல்லாத்தையும் கழற்றி குப்பை கூடைக்குள் எறிந்து விட்டு வெளியே வந்தான்.
சண் வா மச்சான் சாப்பிடுவம் நான் இனியும் உனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை உன்னிலை மாற்றம் தெரியிது இனியெண்டாலும் யோசிச்சு நட.
ஓம்சிவா நான் கன பிழை விட்டிட்டன் சாப்பிட்டு முதல் வேலையா வீட்டிக்கு போன் அடிக்க வேணும்.
சண் வீட்டு இலக்கத்தை அழுத்த மறுமுனையில் அவனின்தாயார். தம்பி உனக்கு என்னடா நடந்தது இரண்டு வருசமா ஒரு தகவலும் இல்லை நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை வைக்காத நேத்தியில்லை நல்லாயிருக்கிறியே அப்பு பாவமடா உன்ரை மனிசி ஒவ்வொரு நாளும் கண்ணீரும் சோறும்தான் திண்டபடி இந்தா அவளோடை முதல்லை கதை.தெலை பேசி கை மாறியதுஅவளின் குரல்விம்மியபடி எப்பிடியப்பா இருக்கிறியள் உங்களுக்கு ஒண்டும் இல்லையே நாங்கள் எல்லாரும்சரியா பயந்து போய் இருந்தநாங்கள் . என்று அழுகையும் கதையும் மாறிமாறி வந்தது
எனக்கு ஒண்டும் இல்லை நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ இனி நான் அடிக்கடி ரெலிபோன் எடுப்பன் அம்மா அப்பாவையும் கவலைப்பட வேண்டாமெண்டு சொல்லு.பிள்ளை சண்முகி என்ன செய்யிறாள்.
அவள் இப்ப நல்லா கதைக்கிறாள் அடீக்கடி உங்களை எங்கையெண்டு கேப்பாள் இந்தாங்கோத கதையுங்கோ சண்முகி ஓடியா அப்பா கதைக்கிறார்.
அப்பா எங்கையப்பா இருக்கிறீங்கள் ஏன் என்னை பாக்க வாறேல்லை.அம்மாட்டை உங்களை கேட்டால் அம்மா அழுவா ஒண்டும் சொல்லுறேல்லை ஏனப்பா.??
அந்த குழந்தையின் மழலையில் தத்தி தத்தி வந்து விழுந்த கேள்விகளிற்கு பதில்சொல்த்தெரியாமல் சண்ணின் கண்கள் கலங்கியது.
பிள்ளை அப்பா உங்களையும் அம்மாவையும் கெதியா அப்பாட்டை கூப்பிடுறன் என்ன அப்பாவை கெதியா பாக்கலாம்.அம்மாக்கு இனி கரைச்சல் குடுக்கூடாது என்ன நல்ல பிள்ளை. தொலை பேசி கதை;தது முடித்து விட்டு படுக்கப் போனான்.
அவனது குழந்தையின் குரல் அவனது காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது 'அப்பா எப்ப எங்களை பாக்க வருவீங்கள்...."கெதியாய் அவர்களை கூப்பிடுற அலுவல்களை பார்க்க வேண்டும் என நினைத்தவாறே நித்திரையாகிப் போனான்..
பிற்குறிப்பு:சண் இப்பொழுது வேறொரு நகரத்தில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். நத்தாசா ; நான் வேலைசெய்யும் இரவு விடுதிக்கு இடை யிடை வந்து போவாள் ஒவ்வொரு தடைவையும் ஒவ்வொருத்தருடன். இன்னமும் பல சண்முக நாதன்கள் எம்மிடையே புலத்தில் உள்ளனர் அவர்களும் திருந்துவார்களா?? மீண்டும் உங்களை உண்மை கலந்த கற்பனையுடன் சந்திக்கிறேன்.
; ;
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சியாம் நீங்கள் எழுதிய கதையா? வாழ்த்துக்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புல வாழ்க்கையை தொடர்ந்து கதைகளாக தாருங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கதை நல்லாயிருக்கு ஆனா நம்மாக்கள் தான் திருந்திற மாதிரி இல்லை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கதையின் எழுத்துநடை நன்றாக இருப்பதோடு அதனை எடுத்துச் செல்லும் முறையில் முன்னேற்றம் தெரிகிறது சியாம்.
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
நன்றிகள் அனைவருக்கும் சண்முகி நீங்களே சொல்லிட்டீங்க இனி பாருங்க பிச்சு உதறிடுறன் :mrgreen:
; ;
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
shiyam Wrote:நன்றிகள் அனைவருக்கும் சண்முகி நீங்களே சொல்லிட்டீங்க இனி பாருங்க பிச்சு உதறிடுறன் :mrgreen:
கவனமப்பூ.. கதையை பிச்சு உதறெண்டுப்புட்டு கதையை எழுதின பேப்பரை பிச்சுப்போடாதீர்,, பிறகு கஸ்ரப்பட்டு எழுதினதெல்லாம் வேஸ்ட்டாபோடும்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ஆசை வேகம் மணிக்கு 240 கி.மீ
ஆயிரத்து நூறு. ஆயிரத்து இருநூறு. ஆயிரத்து இருற்நூறைம்பது. ஆயிரத்து முன்நூறு. யாரும் கேக்கேல்லையோ. ஆயிரத்து முன்நூறு ஒருதரம் .ஆயிரத்து முன்நூறு இரண்டுதரம். ஆயிரத்து முன்நூறு முண்றுதரம்.சரி முடிஞ்சுது றமணி உனக்குத்தான் சீட்டு. என்றபடி ழூன்று கைத்தெலை பேசியிலும் ஒருவீட்டு தொலைபேசியிலும் ஏதோ உலக பங்கு சந்தை வியாபாரிபோல ராணி சீட்டு கூறிக்கொண்டிருந்தாள்.
சீட்டு ராணி என்றால் அந்த நகரத்தில் தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது சின்னன் பெரிசு என்று பல சீட்டுக்களை நடத்துபவள். சீட்டுநடத்தி சமபாதித்ததாலலும் உழைப்பினாலும் சொந்த வீடு கணவனுக்கும் அவளிற்குமென தனி தனியான சொகுசு கார்கள் என்று வசதியான வாழ்க்கை.
சீட்டு கூறிமுடிந்ததும்.அப்பாடா ஒருமாதிரி முடிஞ்சுது மாதத்திலை முதல் ஞாயிறு எண்டாலே ஓரே தலையிடி இந்த சீட்டாலை என அலுத்துக்கொண்டு சீட்டு கணக்கு கொப்பியை மடித்தவாறே
இந்தாங்கோ உங்டை கான்போன். நான் இஞ்சை தனிய இருந்து புலம்பிறன் நீங்கள் கொம்பியுட்டருக்கை தலையை குடுத்து போட்டு இருங்கோ. மனிசிபாவமெண்டு ஒரு தேத்தண்ணி வைச்சு தருவமெண்டில்லை. ஒரு தேத்தண்ணி போடுங்கோ இண்டைக்கு பிறந்தநாள் பாட்டிக்கு போகவேணுமல்லோ எழும்புங்கோ என்று கணவனிற்கு கட்டளைகள் பிறந்தன.
இஞ்சை பார் ராணி நான் எத்தனை தரம் உனக்கு சொன்னனான் உந்த சீட்டுகளை விடு எண்டு. எங்களுக்கென்ன குமர் பிள்ளையா இருக்கு கரைசேர்க்க இருக்கிறது இரண்டும் பெடியள். நானும் நீயும் வேலை செய்யிறம் பிறகேன் வேண்டாத தலையிடி. நான் சொன்னாலும் நீ கேட்கமாட்டாய் அதாலை நானும் உன்ரை சீட்டு அலுவலுக்கை தலை போட மாட்டன். ஆனா ஒண்டு நாளைக்கு ஒரு பிரச்சனையெண்டு என்னட்டை வந்து நிக்காதை
அதுஒருபிரச்சனையும் வராது நான் யார் ராணி சீட்டுக்கேராணியாக்கும். எல்லாம் நான் வெட்டியாடுவன். நீங்கள் பயப்பிடாதையுங்கோ. அதுசரியப்பா உவன் மதன் தன்ரை BMWகாரை விக்கபோறானாம். ஏதோகாசு அவசரமாம். நானும் என்னை காரை மாத்தவேணும். எனக்கப்பா அவன்ரை காரை வாங்குவமெண்டு யோசிக்கிறன்.
என்ன ராணி விளையாடுறியே அது ஸ்போட்ஸ் மொடல் கார் இப்பதான் எடுத்தவன் அவனே பெற்றேல் ஊத்திகட்டுபடியாகாமல் விக்கபோறான் நீவாங்கி என்ன கார் ரேசே ஓடப்போறாய்.அதோடை சரியான விலையும் வரும்.
அதில்லையப்பா எனக்கு கனநாள் ஆசை காரிலை ஹைவேயிலை ஒரு நாளைக்கெண்டாலும் 240லை ஒடிப்பாக்க வேணும்.அதோடை அவன் அவசரத்திலை விக்கிறதாலை நாப்பதாயிரம் யுரோக்கு தாறானாம்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் எடுக்கிறதுதான்.
சரி நான் சொல்லி நீ கேக்கவேபோறாய் நீ சீட்டுக்குமட்டுமில்லை வீட்டுக்கும் நீதானே ராணி நான் சொல்லி எங்கை எடுபடுது.நீ இப்ப நாப்பதாயிரம் யுரோ வைச்சிருக்கிறியே??.
அதெல்லாம் சின்னபிரச்சனையப்பா உவங்கள் ரவியும் ரமணணும் சீட்டு போடேக்கையே சொன்னவங்கள் தாங்கள் கடைசியிலை தான் எடுப்பமெண்டு அதைவிட தனிப்பெடியள் அவங்களுக்கு காசுதேவையும் வராது அதாலை அவங்கடை சீட்டை எடுத்து போட்டு அவங்களிற்கு கடைசியிலை குடுப்பம்.
அடீயே உப்பிடித்தான் போனமாதம் ஒரு சீட்டை எடுத்து உன்ரை தங்கச்சிக்கு கடை போட குடுத்தனி இதையெண்டாலும் அவங்களை கேட்டுப்போட்டு செய். சீட்டுகாரர் நம்பிக்கையிலை தான் வீட்டுக்குவராமல் ரெலிபோனிலையே கேக்கிறவை அதோடை நீ சொல்லுற கழிவு தொகையையும் நம்பி காசு தாறவை உன்ரை போக்கு இப்ப வரவர சரியில்லாமல் போகுது எங்கை போய் முடிய போகுதோ பாப்பம்.
நீங்கள் எதுக்கெடுத்தாலும் அபசகுனமா கதையுங்கோ நான் அவங்களிட்டை கேக்கபோக பிறகு ராணி இப்பிடித்தான் மற்றவையின்ரை சீட்டிலை வசதியா வாழுது எண்டுகதைக்க எரிச்சல் பிடிச்ச கனபேர் கதைப்பினம்.அதை நானே பாத்துகொள்ளுறன் நீங்கள் பேசாமல் இருங்கோ.
இரண்டுவாரத்தில் ராணி தான் நினைத்தபடியே மதனிடம் அவனதுBMWகாரை வாங்கிவிட்டாள். அவளது கணவன் வேலையிலிருந்து வீடுவந்ததும். இஞ்சையப்பா மதனிட்டை கார் வாங்கிட்டன். ஓடிப்பாத்தனான் நானும் பிள்ளையளும் அப்போதை ஒரு ரவுண்ட் அடிச்சனாங்கள் சும்மா பறக்குதப்பா நீங்களும் ஓடிப்பாருங்கோ. ஓருநாளைக்கு இரவு நாங்கள் இரண்டுபேருமா ஹைவேயிலை 240 வரைக்கும் ஓடிப்பாப்பம் என்று மகழ்ச்சி தாங்கமுடியாமல் சொன்னாள்.
ம்........பறக்குதோ அப்ப அடுத்த வருசம் ஊருக்கு போகேக்கை உன்ரை காரிலையே போகலாம் பிளேன் ரிக்கற் செலவு மிச்சம். பாத்தடி கனக்க பறக்காதை பொலிஸ் பிடிச்சா லைசென்சை பிடுங்கி போடுவான்.பிறகு உன்ரை காரை தள்ளிகொண்டுதான் திரியவேணும்
இருண்டுமாதங்களின் பின்னர் ராணியின் வீட்டில் தொலைபேசி அடித்தது.கலோ நான் ராணிதான் அட ரவியே என்ன அலுவல் திடீரெண்டு சொல்லும்
மறுமுனையில் ரவி. என்னண்டா ராணியக்கா இந்தமுறை ஆரும் சீட்டு எடுக்கிற மாதிரியிருக்கோ? ஏனெண்டால் ஊரிலை இருந்து தம்பி ரெலிபோன் எடுத்தவன். அம்மாக்கு சுகமில்லையாம். யாழ்ப்பாண ஆசுப்பத்திரியிலை காட்டினதாம்.பரிசோதிச்சு போட்டு கான்சர் வருத்தம் உடனை மகரகமைக்கு கொண்டுபோக சொன்னவங்களாம் உடனை ஒப்பிறேசன் சொய்ய வேணுமாம். அதுதான் கொஞசம் காசு வேணும்.
என்னதம்பி உங்கடை அம்மாக்கு கான்சராமோ அட கடவுளே....
ஓமக்கா அதுதான் இனி யாருட்டையும் கோட்டுகொண்டு நிக்காமல் சீட்டு இருக்குதானே யாரும்போட்டிக்கு ஏத்தாட்டி எடுத்து பிரச்சனையை முடிப்பம் எண்டு பாத்தனான்.அதுதான் அடிச்சனான். ஆரும் எடுக்கிற மாதிரியிருக்கே???
சற்று தடுமாறிய ராணி அதுவந்து ம்......ரமணணும் கேக்கிற மாதிரி கதைச்சவன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை எதுக்கம் கேட்டுபாப்பம்..
என்னக்கா ரமணன் தானே போன சீட்டு எடத்ததெண்டு சொன்னனீங்கள் ஆரு அந்த மொட்டை ரமணன்தானே இல்லாட்டி வேறை ரமணன் எண்டு ஆரும் இருக்கினமோ??
இல்லை ரவி அது வேறை சீட்டு அண்டைக்கு மாறி சொல்லிபோட்டன் சரி பிரச்சனையில்லை நீர் வந்து சிரமப்படாமல் ரெலிபோனிலையே கேளும் வேறையென்ன ஞாயிறு போன் அடியும் சந்திப்பம் என்று தொலை போசியைவைத்து விட்டு திரும்ப அவளது கணவன் என்னப்பா யாரது போனிலை
இல்லையப்பா அது ரவி தன்ரை தாய்க்கு சுவமில்லையாம் அதுதான் இந்தமுறை சீட்டு எடுக்கபேறானாம் எண்டு அடிச்சவன்..........என்று கைகளை பிசைந்தபடியே கூற
இப்ப என்ன செய்யபோறீர்; காசு வைச்சிருக்கிறீரே குடுக்க எனக்கு தெரியும் எண்டைக்காவது உது நடக்குமெண்டு என்றவாறே குளியலறைக்குள் நுளைந்தான்.
சிறிது யேசித்த ராணி சரி இனியொண்டும் செய்யேலாது வேறு யாருடைய சீட்டையாவது எடுத்து இப்போதைக்கு ரவியின்ரை பிரச்சனையை முடிப்பம் பிறகு மற்றதை யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் தற்சமயம் உவன் ரவி ரமணணை சந்திச்சு ஏதும் கேட்டானெண்டால்?? கடவுளே சீ சீ ரவிக்கு ரமணணை பெரிய பழக்கம் இல்லை அவனைபோய் கேக்கமாட்டான் . எங்கையும் தற்செயலா சந்தித்தால் ?? அப்படியெதுவும் நடக்காது . என்றுதானே கேள்விகள் கேட்டு தானே பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
எது நடக்ககூடாது என்று ராணி நினைத்தாளோ அதுநடந்து விட்டது அன்று ஒரு ஞாயிற்று கிழைமை ரவி கொஞசம் சாமான்கள் வாங்கவென தமிழ் கடையொன்றிற்கு போன பொழுது தற்செயலாக ரமணனை கண்டு விட்டான். ரமணனிடம் வழமையான விசாரிப்புகளின் பின்னர் ரவிகேட்டான் ரமணன் நீங்கள் உவா ராணியக்காட்டையல்லோ சீட்டு போடுறனீங்கள்.என்று கேட்டு விட்டு ரமணனை உற்று பார்த்தான்
ஓம் ரவி அவவிட்டைதான்ஏன் கேக்கிறிர் நீரும் அவவிட்டை சீட்டு போடுறதெண்டு எனக்கு தெரியும் நீர்தானே போன சீட்டு எடுத்தனீர் எண்டு சொன்னவா ஏன் உப்பிடி கழிவிலை எடுத்தனீர் ஏதும் அவசரமோ நான் கடைசியிலை எடுப்பம் எண்டு விட்டிட்டன்
ரவி திடுக்கிட்டவனாய் என்ன நானோ சீட்டு எடுத்தனான். நான் நினைச்சது சரியாதான் போச்சுது உவ ராணி சுத்துறா
என்ன சொல்லுறீர் ரவி எனக்கொண்டுமா விழங்கேல்லை என்று கூற ரவியோ தனக்கும் ராணிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை அப்படியே ரமணணிடம் விபரித்தான் ரமணன் நம்ப முடியாதவனாய். நான் நினை;க்கேல்லை ராணியக்கா சுத்துவாஎண்டு கனகாலமா சீட்டு பிடிக்கிறா மனிசனும் நல்ல மனிசன் எனக்கெண்டா குழப்பமா கிடக்கு என்ன செய்யலாம்.
சரிரமணன் எதுக்கும் அவசரபட்டு முடிவெடுக்க கூடாது நான் ஒரு யேசனை சொல்லுறன் அடுத்த சீட்டு எப்பிடியும் நான்தான் எடுக்க போறன் அண்டைக்கு நிங்கள் சீட்டு கேக்க அவவின்ரை வீட்டை வருவீங்கள் எண்டு சொன்னவா நானும் நீங்களும் அவவின்ரை வீட்டுக்கு கீழை போய்நிண்டு நான் வழமைபோலை கான் போனிலை; சீட்டை கேக்கிறன். நீங்கள் அங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லி சீட்டை ஏத்தினா வெண்டா அவவின்ரை களவு பிடிபடும்.அல்லது வேறு யாரும் ஏத்தினதெண்டா அதையும் யாரெண்டு விசாரிச்சு பாப்பம். வாற ஞாயிறு சந்திப்பம் என்று கூறி விடை பெற்றான்
அன்று சீட்டு நாள் ரவியும் ரமணனும் ராணியின் வீட்டிற்கு பக்கத்தில் மறைவாக நிண்டு கொண்டு ரவி ராணியின் வீட்டு இலக்கத்தை அழுத்தினான்.
கலோ ராணியக்காவொ நான் ரவி சீட்டு தொடங்கீட்டுதோ ஆ தொடங்கிட்டுதா கனபேர் நிக்கினமோ? ஒம் கனபேர் நிக்கினம் என்று ராணியின் பதில்வர. ரமணனும் நிக்கிறாரே அவர்தான் கேக்கிறமாதிரி யெண்டு சொன்னனீங்கள்........ஓம் அவரும் நிக்கிறார் முதல் கேள்வி 1800 நீங்கள் கெளுங்கோ என்று ராணி சொல்ல ரவி ரமணனை பாத்து கண்ணடித்தவாறே கேட்க தொடங்கினான். கேள்வியின் முடிவில் ரவிக்கு சீட்டு என்று ராணி சொல்ல தொலை பேசி இணைப்பு துண்டிக்கபட்டது.ரவியும் ரமணனும் சிறிது நேரம் அங்கேயே நின்றுபார்த்தார்கள் யாராவது அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்களா என்று ஒருவர்மட்டும் வெளியே வந்தார்.
சில நிமிடங்களில் ராணியின் வீட்டு அழைப்பு மணி ஒலித்து ராணி கதவு துவாரத்தின்வழியாக பார்தாள் அவளையுமறியாமல் அய்யோ ரவி இவன் ஏன் இஞ்சை வந்தவன் என்று நினைத்வாறு கதவை திறந்தாள். பின்னால் ரமணனும் நிண்டு கொண்டிருந்தான்.அவளின் இதயதுடிப்பும் நாடித்துடிப்பும் போட்டி போட்டுகொண்டு வேகமெடுத்தது. வார்த்தைகளை உச்சரிக்க நா மறுத்தது. வா வாங்கோ என்ன திடீரெண்டு இரண்டு பேருமா முடிந்தளவு நடுக்கத்தை கட்டுப்படுத்தியவாறு இயன்றளவு சிரிப்பை வரவழைக்க முயன்றாள்.
இருங்கோ என்ன குடிக்கிறியள் என்றவாறு கணவனை என்னப்பா வந்து இவையோடை கதைச்சு கொண்டிருங்கோ நான் கோப்பி ஊத்தி கொண்டு வாறன்.என்று கணவனை அழைக்க. கணவனே ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்தவாறே அவர்களை நோக்கி வாங்கோ தம்பியவை இருங்கோ என்றார்.
ரவி பேச தொடங்கினான் அண்ணை முதல் இதிலை இருங்கோ ராணியக்கா கோப்பி வேண்டாம் நீங்களும் இதிலை இருங்கோ நான் கொஞசம் கதைக்க வேணும். நாங்கள் நம்பிக்கையிலைதான் உங்களோடை இவ்வளவு நாளும் Pட்டு போடுறனாங்கள் ஆனால் நீங்கள் என்னெண்டா சுத்துமாத்து விடுறியள். கனபேர் கேக்க வந்திருக்கினமெண்டியள் ஒரு ஆள்தான் வெளியிலை போறார் ரமணன் கேள்வியை ஏத்திது எண்டியள் ரமணன் என்னோடை நிக்கிது..
எனும்போது ராணி குறுக்கிட்டு தம்பி உமக்கு வேறை கதை தேவையில்லை நிர் சீட்டு எடுத்தனீர் உமக்கு சொன்ன திகதிக்கு காசு வரும் பயப்பிடாதையும் நான் ஒண்டும் சும்மா சீட்டை ஏத்தேல்லை ஆக்கள் கேட்டதை தான் சொன்னனான்.என்று கூற
ரமணனோ ஆவேசமாய் நான் சீட்டை ஏத்துறன் எண்டு ஏன் பொய் சொன்னனீங்கள் எனக்கு உங்கடை சீட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்ரை கட்டின காசை திருப்பி தாங்கோ இல்லாட்டி நடக்கிறதே வேறை.என்று தொடங்கி அவர்களின் பேச்சுக்கள் மரியாதையாய் பன்மையில் தொடங்கி மரியாதை கெட்ட ஒருமையில் நடந்து கொண்டிருந்தது
ரமணனே உடனடியாக காசை வைக்க சொல்லி அடம்பிடிக்க ராணி காசு தந்ததற்கான அத்தாட்சி எதுவுமில்லை காசுதரமுடியாத போய் செய்யிறதை செய் வெளியே போடா என்று கத்த ரமணனனே உன்ரை ஊத்தையை ஊர்முழுக்க இப்ப சொல்லுறன் பார் கள்ளி என்று கத்த ரவி ரமணனை சமாதான படுத்தி அழைத்து கொண்டு போய்விட்டான்.போன ரமணன் ராணியிடம்சிட்டு பிடிக்கும் எல்லோருக்கும் நடந்ததை தொலைபேசி எடத்து சொல்லிவிட்டான்
அவர்கள் போனதும்ராணியின் கணவன். என்னப்பா உன்கு விசர் பிடிச்சிட்டுதே ஏன் அப்பிடி பேசினனீ இனி அவன் ரமணன் சும்மாயிருக்க மாட்டான் எல்லாருக்கும் பரப்ப போறான் நல்லவேளை பிள்ளையள் இல்லை இல்லாட்டி பயந்திருக்குங்கள் எங்கை போய் முடிய போகுதெண்டு தெரியேல்லை உன்ரை கூத்து.
நிப்பாட்டுங்கோ இப்ப என்ன அவை இரண்டு பேற்றை காசும் குடுத்தா சரிதானே நான் ஒழுங்கு பண்ணுறன்.என்ற சொல்லி கொண்டிருக்கும்போதே வீட்டு தொலை பேசி அடித்தத தொலை பேசியில் ஒருவர் என்ன ராணி கதையொண்டு கேள்விப்பட்டன் உண்மையோ என்று கதைத்து கொண்டிருக்கும் போதே கைத்தொலை பெசியும் அடித்தது. சீட்டு போட்டவர்கள் எல்லோருக்கும் கதை பரவி ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு துனைக்க தொடங்கிவிட்டனர்
ஒவ்வொரு சீட்டிலும் சில சீட்டுகளை உரியவருக்கு தெரியாமல் ராணியே எடுத்தது அம்பல்த்துக்கு வரவே எல்லோரும் ஒரேயடியாக தங்களிற்கு சீட்டு வேண்டாம் கட்டிய காசை திருப்பி தர சொல்லி பணிவு கெஞ்சல் மிரட்டல் என்று கேட்டு பிரச்சனை கூடிக்கொண்டிருந்தது. சிலர் நேரிலேயே வந்து கேட்டு விட்டு போனார்கள் எல்லோருக்கும் ராணி 2 3 நாட்களில் பிரச்சனை முடிப்பதாக உறுதிமெழி கொடுத்தே களைத்து போய் விட்டாள்.
இப்போ ராணியின் கோபம் முளுவதும் ரமணனிடம் திரும்ப ரமணனிற்கு தொலை பேசியில் எடுத்து மீண்டும் திட்டிவிட அவன் இரவு தனது வேறு இரண்டு நண்பர்களுடன் மதுபோதையில் வந்து கண்டபடி மிரட்டி விட்டு போயிருந்தான் இதை பார்த்த ராணியின் குழந்தைகளும் பயந்து போயிருந்தனர் ராணி குழந்தைகளிற்கு உணவை கொடுத்து படுக்கவைத்து விட்டு வந்து அமர்ந்தள்.
நடந்து முடிந்த எல்லா பிரச்சனையையும் பாத்து வெறுத்து போய்
தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருந்து யோசித்து கொண்டிருந்த ராணியின் கணவன் மெல்ல மௌனத்தை கலைத்து ராணி எதுக்கு நான் பயந்தனோ எல்லாம் நடந்து முடிஞ்சிது இனியென்ன முடிவு எடுக்க போறீர் வீட்டிலை எல்லா முடிவும நீர்தான் எடுக்கிறனீர் இதுக்கும் ஒரு முடிவை எடும் மானம் மரியாதையெல்லாம் போட்டுது.
ராணி கணவனின் முகத்தை பார்க்க முடியாதவளாய் என்னப்பா நீங்களும் போய் இந்த நேரத்திலை இப்பிடி சொன்னா நான் என்ன செய்ய??
ராணி எனக்கு இப்ப இரண்டு வளிதான் தெரியிது வடிவா கேளும் முதலாவது பிள்ளையளும் பயந்து போச்சுதுகள் நாளைக்கும் ஆரும் வந்து சத்தம் போடுவாங்கள் அதாலைபிரச்சனை முடியிறவரை பிள்ளையளை உம்மட தங்கச்சி வீட்டிலை கொண்டு போய் விட்டிட்டு நீர் நாளைக்கு வேலைக்கு போகாமல் நிண்டு உம்மடை தங்கச்சிக்கு கொடுத்த காசு மற்றது வேறை யாரிட்டையெண்டாலும் மாறி
பிரச்சனையை முடிக்க பாரும் இல்லாட்டி இரண்டாவது என்று சற்று தொண்டையை செருமியவாறு சொல்ல ராணி எவ்வித உணர்ச்சியின் வெளிப்பாடுமின்றி கோட்டுகொண்டிருந்தாள்.
மறுநாள்காலை வேலைக்கு புறப்பட்டுகொண்டிருந்த ராணியின் கணவன் ராணியை அழைத்தான் ராணி பின்னேரம நான் வேலையாலை வரேக்கை நான் சொன்ன இரண்டு முடிவிலை எது எண்டு தீர்மானிச்சு வைச்சிரும் நான் போட்டு வாறன் என்று சொல்லி விட்டு போய்விட்டான்.
ராணி தொலை பேசியை எடுத்து தெரிந்தவர்கனின் இலக்கத்திற்கொல்லாம் உதவி கேட்டு இலக்கங்களை அழுத்த தொடங்கினாள்.........
மாலை ராணியின் கணவன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்துபார்த்தான் என்ன ஒரே இருட்டாயிரக்க என்றபடி மின் விளக்கை போட்டான். கதிரையில் அழுதழுது வீங்கிய கண்களுடன் ராணி பிள்ளைகள் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தான் மெல்ல அவளருகில்போய். என்ன மாதிரி என்ன முடிவெடுத்தனீர் என்றவும் ராணி அடக்கி வைத்திருந்த அழுகையை அணை உடைத்த வெள்ளம்போல ஓவென அழுதபடி
அப்பா நான் பாவி நீங்கள் படிச்சு படிச்சு சொன்னனீங்கள் நான் கேக்கேல்லை தங்கச்சி கூட உடனை ஒண்டும் செய்யேலாது எண்டு கையை விரிச்சிட்டாள். தெரிஞ்சாக்களும் பிரச்சனை கேள்விபட்டதாலை சீட்டு காசையே சுத்திட்டியாம் கடனா என்னெண்டு நம்பி காசு தாறது எண்டு முகத்திலை அடிச்ச மாதிரி கேக்கினம் என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ என்று குழந்தையை போல விக்கி விக்கியழுதாள்
ராணி இனியழுது பிரயேசனமில்லை காலம் கடந்து ஞானோதயம் உனக்கு வந்திருக்கு இனி அதாலை எந்த பிரயோசனமும் இல்லை எனக்கு தெரியும் கொஞச காசே உடடை பிரட்ட கிட்டத்தட்ட ஒரு லச்சம் யுரோக்கு எங்கை போறது
ராணி கண்களை துடைத்தவாறே அப்பா நீங்கள் சொன்ன இரண்டாவது யோசனையே எனக்கு சரியெண்டு படுது நீங்கள் குளிச்சிட்டு வாங்கோ நான் சமைக்கிறன் எனறவாறு விறு விறுவென சமைக்க தொடங்கினாள்.
இருவருமாக சாப்பிட்டு விட்டு உடை மாற்றி கொண்டார்கள் ராணி திருமணத்தன்று கணவன் பரிசாக வாங்கி கொடுத்த சேலையை எடுத்து உடுத்தி கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொண்டு நான் ரெடி போவமே எந்த காரிலை போவம் என்று கணவனை பார்த்து கேட்டாள்.
உம்மன்ரை BMWவிலை போவம் என்றவாறே அதன் சாவியை எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். வெளியே வந்த இருவரும் விட்டை ஒரமுறை திரும்பி பார்த்து விட்டு வண்டியிலேறிகொண்டனர்.
அவர்களின் வண்டி ஒரு மலைப்பாதையில் வளைந்த வளைந்து மேலேறிகொண்டிருந்தது. இருவரிடமும் ஒருவித மௌனம் ராணி அடிக்கடி கண்ணீரை துடைப்பதும் வண்டியோடிக்கொண்டிருந்த கணவனை பார்ப்பதுமாயிருந்தாள். வண்டி ஓரிடத்தில் நின்றது.
இந்தாரும் உமக்கு தானே கனநாள் ஆசை கார் 240லை ஓடவேணுமெண்டு இதிலையருந்து ஒரு 2 கிலோ மீற்றருக்கு நேர் றோட்டு முடிவிலை ஒரு பெரிய வழைவு வரும பாத்து ஓடும் என்று அவன் கூற புரிந்து கொண்ட ராணியும் இருக்கை மாறி வண்டியை ஓட தொடங்கினாள்.
வண்டி வேகமெடுத்து ஓட தொடங்கியது ராணி விசை மாற்றியினை(கியர்)கடைசி நிலைக்கு தட்டி விட்டு மேலும் வேகத்தை அதிகரித்தாள். வேகமானியின் முள் 200. 210.220 என்று ஏறிகொண்டு போனது பாதை வளைவு நெருங்கி விட்டது ராணி வேகமுளஇளை பார்த்தாள் 240 காட்டியது அவளையுமறியாமல் சிரித்து கொண்டு ஒருகையால் கணவனின் கைகளை இறுக பற்றியபடி கண்களை முடிகொண்டாள்.
அவர்களின் வண்டி வீதியின் வேக தடை சுவரை உடைத்துகொண்டு பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது
உறவுகளே மீண்டும் ஒர்கற்பனை கலந்த உண்மை சம்பவத்துடன் சந்திப்போம் அதுவரை அன்புடன் சியாம்
; ;
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
சும்மா சொல்லக்கூடாது எம்மவர்களின் இயல்புவாழ்க்கையை தத்துருவமாக வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பணி ''வாழ்க தமிழ் வளர்க வையகம்''
____________________________________________________________________
[size=18]'' கம்பன் தறியும் கவிபாடும் '' ___________________________________________________________________
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றாக எழுதிகிறீர்கள் சியாம். சமுதாயத்தில் நடப்பவற்றை படம் போட்டு காட்டுகின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
இந்த கதை யாழ் முற்றம் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது
http://www.yarl.com/?itemid=1046[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உண்மையாவே இருவரும் இறந்திட்டினமா அல்லது கடைசி கற்பனையா..??
செய்யிறதெல்லாம் செய்யதிட்டு கடைசியில பிள்ளைகளை இப்படி நடுத்தெருவில விட்டிட்டு போறது என்ன நியாயம். நம்பினவைக்கு இப்படி கம்பி நீட்டிவிட்டு. செத்து என்ன பண்ண. படிக்க விறுவிறுப்பாய் இருந்திச்சு நன்றி அண்ணா. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
உண்மையாகவே இருவரும் இறந்திட்டினம் தமிழ் ஆனால் சில சிக்கல்களை தவிர்க்க சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன் :oops:
; ;