Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
ஊமை Wrote:கடவுள் நம்பிக்கையற்ற கண்ணாதாசன் கூட கடைசியில் கடவுள் இருக்கிறார் என தான் இறுதியில் சொன்னார். என்ன அவருக்கு இறுதியில் புத்தி பேதலித்துவிட்டதா ? இல்லை இல்லை அவர் உண்மையைத்தான் சொன்னார்.

"கண்ணதாசனுக்கு புத்தி பேதலித்து விட்டதா?" என்ற கேள்வியை கேட்டுவிட்டு பிறகு பதிலாக "இல்லை இல்லை அவர் உண்மையைத்தான் சொன்னார்." என்பதையும் நீங்களே, அதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் தராமல் சொன்னால் எப்படி?

கண்ணதாசன் ஒரு கவிஞ÷. அதுவும் சினிமாவுக்கு பாட்டெழுதும் கவிஞ÷. சினிமாவுக்கு படத்தின் கதைக்கு தேவையான மாதிரி, அல்லது பணம் புரட்ட மக்களிடம் எடுபடத்தக்க மாதிரி சினிமாப்பட இயக்குன÷ கேட்க அப்படியான பாடல்களை எழுதிக்கொடுத்த கவிஞ÷ கண்ணதாசன். கண்ணதாசன் கவ÷ச்சியாக எழுதக்கூடியவருமாவா÷. அவ÷ எழுதிய "அ÷த்தமுள்ள இந்துமதம்" 13 பாகங்களாக வந்தது. படித்தீ÷களா? அவற்றில் கண்ணதாசன் தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து இந்து மதத்தில் விளக்கம் காணப்பா÷க்கிறா÷. அவரது விளக்கங்கள் மதப்பற்று உள்ளவ÷களுக்கு ஆதரவான ஆதாரங்களாக தோன்றலாம். ஆனால் அவற்றில் உண்மையில்லாத பல தகவல்கள் இருக்கின்றன. கண்ணதாசன் வேண்டுமென்றே அப்படி எழுதவில்லை. அவ÷ தனக்கு தெரிந்ததை கவ÷ச்சியாக எழுதிவிட்டா÷, அவ்வளவு தான். அவ÷ அறிஞ÷ அல்ல, எதையும் தீர ஆராய்ந்து, தெளிவு பெற்று, அன்றைய அறிவுக்கு சரியென ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதை எழுதுவதற்கு. அவ÷ ஒரு கவிஞ÷. கவ÷ச்சியாக எழுதத்தெரிந்தவ÷. நாட்டில் பகுத்தறிவு புரட்சி எழுச்சிபெற்ற நேரம் பகுத்தறிவு வாதியாகவும், நோயும், துன்பமும் துரத்திய வேளை ஆத்திகனாகவும் வாழ்ந்த தெளிவான அறிவோ, அதன்வழி பிறந்த கொள்கையோ இல்லாதவ÷ கண்ணதாசன்.

ஊமை Wrote:பகவத்கீதை. திருக்குர்றான், பரிசுத்தவேதாகமம் என்பவற்றை மனிதர்கள் தான் எழுதியது அதனால் அதை நம்படுடியாது என்று கூறுகிறீர்களே..... விஞ்ஞான சம்பந்தமான விளாக்கத்தையும் மனிதனே சொல்லுகிறான் அதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள் ?


________________ தெரியுமா கற்பூர வாசனை ?

ஊமை

பல தவறுகள்.
<ul>
<li> மதவாதிகள் எல்லோரும், தமது சமயத்தின் புனித நூரல்கள் கடவுள்களால் அருளப்பட்டவை என்பா÷கள். பகவத்கீதை, கடவுளான கிரூஷ்ண÷ அருச்சுனனுக்கு தேரோட்டியாக வந்து அருளிய உபதேசம் எனப்படுகிறது. குரான் முஸ்லிம்களின் அல்லாவின் தூதரான நபிகளால் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறப்படும் போதனையாகவும், வேதாகமம், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவ÷களின், குறிப்பாக கடவுளின் மகனான கிறிஸ்துவின் போதனைகளையும் வாழ்வையும் கொண்டதாகவும் கொள்ளப்படுகின்றது. இந் நூல்களில் உள்ளவையெல்லாம் வரலாறும், அந்த நாட்களில் வாழ்ந்த சிலரால் கூறப்பட்ட தத்துவங்களுமே. இந்த தத்துவங்களை ஒருவ÷ நம்பலாம், அல்லது நம்பாமல் விடலாம்.
வரலாறுகள் எழுதப்படும் போது அதை எழுதியவ÷ தான் அறிந்த வரலாறை, தான் தெரிந்து கொண்டபடி எழுதியுள்ளா÷. அவற்றின் உண்மைத்தன்மையை இன்றைக்கு ஆதாரத்துடன் நிறுவுவது கடினமானது.
<li> விஞ்ஞான நூல்கள் பரிசோதனைகள் மூலமும், ஆராயச்சிகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு, உலகில் மற்றப்பாகங்களிலுள்ள விஞ்ஞானிகளால் கூட திரும்பத்திரும்ப உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களையே கூறுகின்றன. நீங்கள் கூட இவற்றை செய்து உறுதிப்படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக இந்த கணணி எப்படி வேலை செய்கிறது? அதற்கான விஞ்ஞான விளக்கங்களை படித்த பொறியிலாள÷கள் தாம் புத்தகங்களில் படித்தபடி இவற்றை செய்து, இவற்றை எப்படி இயக்குவது என்பதையும் நூல்களில் எழுதித்தர, நீங்கள் அவற்றை படித்து இந்த கணணிகளை இயக்குகிறீ÷கள் இல்லையா? இதனால்தான் விஞ்ஞானத்தின் விளக்கங்கள் நம்பப்படுகின்றன.

ஆனால் நாயன்மாரும் கிறிஸ்துவும் இறந்தவ÷களை உயி÷ப்பித்திருக்கிறா÷ என்று சமய நூல்களில் எழுதியிருக்கிறது என்ற காரணத்துக்காக நீங்கள் இறந்தவ÷களை உயி÷ப்பிக்க முடிகிறதா? அல்லது இந்துக்களின் காஞ்சி சங்கராச்சாரியாரோ, அல்லது கிறிஸ்தவ÷களின் போப்பாண்டவரோ இறந்தவ÷களை உயி÷ப்பிக்க முடிகிறதா? இவ÷களெல்லாம் தாமே நோய்வாயப்பட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருந்துகளில் தங்கியிருக்கிறா÷கள்.
<ul>

<img src='http://www.thatstamil.com/images25/sankara-arrest1-300.jpg' border='0' alt='user posted image'>
Reply
கடவுள் இல்லை என்று வாதிடுவோரே....

மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?

அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?
<b> </b>
Reply
Meera Wrote:கடவுள் இல்லை என்று வாதிடுவோரே....

மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?

அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?
தேவாலயம் வந்தற்காக பின்பக்கம் திரும்பும் அவர் இருந்த இடத்திலிருந்து வெறும் இருநூறு மீட்டர் தூரத்திலுள்ள வியாபர நிலையம் மீது எறிகணை வீழ்ந்து வெடித்து மக்கள் சிலர் உடல் சிதறிப் பலியானவேளை எங்கோ போனார்??
முன்னே தேவாலயத்தைப் பார்க்காமல் மறுக்கம் திருப்பிய பிள்ளையாருக்கு திரும்பியதிலிருந்து முன்னால் என்ன இருக்கிறது எண்டு தெரியுமா உங்களுக்கு? நாள் தோறும் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்களை எரிக்கும் மயானம் "பிப்பிலிச் சுடலை". மருதடிப் பிள்ளையார் பிணங்கள் சரியாக எரிகின்றனவா எண்டு கண்காணிக்கத் திரும்பினாரோ தெரியாது.

தேவாலயத்தைப் பார்ப்பதிலும் பார்க்க பிணங்கள் எரிவதைப் பார்த்து ரசிக்க பிள்ளையார் விரும்புகிறார். வாழ்க் பிள்ளையார்! இவரைப் போன்ற கடவுள்கள் வாழ்க!

மீரா தொடர்ந்து அந்த யானைத் தலையனைக் கும்பிடுங்கள் விகாரையோ அல்லது பள்ளி வாசலோ அவருக்கு முன்னால் கட்டினால் உடனே திரும்புவார். ஆனால் அவருக்கு அவருக்கு அருகில் அவரின் பக்தர்கள் செத்து மடிந்தால் கண்ணை மூடுவார்.

இதை எழுதும் போது இந்த கோயிலில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 1993-1995 ஆண்டுக்கிடையில் திருடர்கள் இந்தக் கோயிலுக்குள் இருந்த பெருந்தொகைப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். அப்போது இந்தப் பிள்ளையார் என்ன செய்தார். உனது வாழ்விடத்திலேயே திருட்டை ஊக்குவிக்கும் பிள்ளையாரே நீ வாழ்க!
<b>
?
- . - .</b>
Reply
Meera Wrote:மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?

அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?

இதை மட்டுமில்லை மீரா
செல்வசந்நிதியிலிருந்து முருகனின் வேல் கதிர்காமம் போவதையும் அறிந்திருக்கிறம்.

ஆயிரம் மனைவிகளை வைச்சிருந்த கண்ணன் கதையும் அறிந்திருக்கிறம்.
2 மனைவி வைச்சிருக்கிற முருகன் கதையும் திருமணம் செய்யாமல் இரண்டு வப்பாட்டி வைச்சிருக்கிற யானைத் தலையன் பிள்ளையாரின் கதையும் அறிஞ்சிருக்கிறம்.

ஆபத்தில்போய் சிவனின் காலில் வீழ்ந்து அவனின் வரம் பெற்று அவனின் தலையில் வாழும் பிறை(சந்திரன்) பற்றியும் அறிந்திருக்கிறம்.

இராவணனுடன் போர் புரிய இராமனுடன் துணைக்குச் சென்ற குரங்குகள் கரடிகள் பற்றி அறிஞ்சிருக்கிறம்.

பூமியில் முதல் தோன்றிய உயிரினம் முதல் தற்கால மனிதர்கள் வரை வழிபட்டுவரும் சைவசமயம் பற்றி அறிந்திருக்கிறம். மன்னிக்கவும் சைவம் கல்தோன்றி மண் தோன்றாக கலத்துக்கு முன் தோன்றியதல்லவா?

இதைவிட நிறைய அறிந்திருக்கிறம். இன்னும் வேணும் எண்டா எழுதிறம்.
<b>
?
- . - .</b>
Reply
MEERA Wrote:அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?

ஏற்கனவே இதுபற்றி இந்த தொடரில் விவாதிக்கப்பட்டு விட்டது.
இந்த இணைப்பில் பாருங்கள்.

யேசு இறக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டவ÷கள் இறப்பதற்கு சில நாட்கள் ஆகும். அப்படி துன்பப்பட்டு இறக்கும்படி தான் சிலுவையில் அறைவது. அடுத்தநாள் யூத÷களின் சபாத் என்பதனால், சிலுவையில் யாரும் காணப்படக்கூடாது என்ற வழக்கப்படி யேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட மற்றவ÷களின் கால்கள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டன÷. யேசுவின் நண்ப÷கள் சதி செய்து அவரை கொல்லவிடாமல் இடுப்பில் ஒரு ஈட்டி காயத்துடன், அவரை பொறுப்பேற்று ஒரு குகைக்குள் அடைத்துவிட்டன÷. பைபிளை படித்து பாருங்கள். இவ்வளவும் அதில் உண்டு. பிறகு அவரை கடத்தி சென்று மருந்து கட்டி காப்பாற்றி விட்டன÷. அரசை அவருக்கு பின்னால் வரவிடாமல் தடுக்க "அவ÷ உயி÷த்துவிட்டா÷","விண்ணுலகம் போய்விட்டா÷" என்றெல்லாம் கதைகட்டிவிட்டன÷. யேசு இடம்பெய÷ந்து தனது தயாயுடனும் நண்ப÷ தோமாசுடனும் ரோம ஆட்சிக்கு அப்பால் தற்போதைய காஷ்மீ÷ பிரதேசத்தில் நீண்டகாலம் வாழ்ந்து முதியவயதில் இறந்ததாக கருதப்படுகின்றது. அகமதிய÷கள் என்ற மதத்தினரும் பல ஆய்வாளரும் இவற்றை ஆராயந்து பா÷த்துள்ளன÷. யேசுவின் சமாதியும் அங்கே இருக்கிறது. யேசுவின் நண்ப÷ தோமாசு பின்ன÷ கேரளா சென்று யேசுவின் கொள்கைகளை அங்கு பரப்பினா÷. . இவையெல்லாம் முன்னரே இந்த தொடரில் விவாதிக்கப்பட்டு விட்டன
Reply
ஒவ்கவாருவரும் கடவுள்...உனக்குள்...கடவுள்...கட-உள்=கடவுள்
Reply
மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?


மானிப்பாயில் ஒண்டும் திரும்பேல்லை பழையபிள்ளையார் தேவாலயத்தை பாத்தபடிதான் இருக்கிறார் பிறகு கோயிலை பெரிப்பிக்கேகை மற்றப்பக்கம் வீதியும் தேவாலயமும் இருந்ததால் கோயிலை மேற்கு பக்கமாய் பெரிப்பித்து அந்த பக்கமும் ஒரு பிள்ளையாரை வைத்தவை மானிப்பாயில் லரலாறு தெரியாவிட்டால் என்னை கேட்கவும்
Reply
சபாஸ் சிறீரமணன் சரியாக சொன்னீங்க. வாழ்த்துக்கள்.

சியாம் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நானும் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் தான் பிறந்தேன்.

ஜூட் சொல்லுறேன் என்று குறை நினைக்காமல் ஒருக்கா The Passion of christ என்ற படத்தை தவறாமல் பாருங்கள் ஜேசுநாதரின் வரறலாறு அங்கே சொல்லப் படுகிறது. நீங்அள் சொன்ன மாதிரி அங்கு சொல்லபடவில்லையே ?

ஜூட்
நான் ஏதோ தவறாக எழுதியதாக குறிப்பிடு இருக்கிறீர்கள் என்ன அது ?


ஊமை
Reply
ஐயோ

நீங்கள் இங்கு கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என்று வாதாட அங்கே இலங்கையில் உங்க அம்மாமார் உங்களுக்குகாக சாப்பிடாமல் விரதம் இருக்கிறார்கள். Ha Ha Ha
Reply
ஊமை Wrote:ஜூட் சொல்லுறேன் என்று குறை நினைக்காமல் ஒருக்கா The Passion of christ என்ற படத்தை தவறாமல் பாருங்கள் ஜேசுநாதரின் வரறலாறு அங்கே சொல்லப் படுகிறது. நீங்அள் சொன்ன மாதிரி அங்கு சொல்லபடவில்லையே ?

இல்லை, சொல்லப்படவில்லை. காரணம், அந்த படத்தை எடுத்த மெல் கிப்சன் ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாத கிறிஸ்தவ சமயத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவ÷. அந்த சமயத்தின் பாதிரியா÷ ஒருவரின் வழிகாட்டலிலேயே அந்த கதையை அமைத்திருந்தா÷. கத்தோலிக்கரும் யூதரும் இந்த படத்துக்கு கடும் எதி÷ப்பு தெரிவித்திருந்தன÷.
Last Temptation of Jesus Christ என்ற படத்தை நீங்கள் பா÷க்கவில்லையா? இந்த கதைக்கும் கடும் எதி÷ப்பு இருந்தது.

சினிமா படம் எடுப்பவ÷கள் கதை உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதும் இல்லை, அக்கறை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சினிமா மக்களை கவ÷ந்து, அதனால் பணம் பெருக வேண்டும் என்ற நோக்கிலேயே சினிமா படங்களும் அவற்றின் கதைகளும் அமைந்திருக்கின்றன.

இதற்கு மாறாக, விஞ்ஞான ஆராய்ச்சிகள் உண்மையை அறிந்து உலகுக்கு தெரியப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை. இங்கே கண்டுபிடிப்புகள் உண்மை என்பதற்கு ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும். மற்ற விஞ்ஞானிகள், மண்டபம் நிறைய இருக்கும் விஞ்ஞானிகள் முன்னால் கேள்வி கேட்பா÷கள். தவறான கண்டுபிடிப்பாக இருந்தால் மானம் போய்விடும். புதிய ஆராயச்சிகளுக்கும். பல சந்த÷ப்பங்களில் சம்பளத்துக்கும் கூட நிதி கிடைக்காமல் போய்விடும். ஆகவே விஞ்ஞானிகள் தீர ஆராய்ந்து தான் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டும். நான் எழுதிய கிறிஸ்துவின் வரலாறு இவ்வாறாக பல விஞ்ஞானிகளால் அண்மையில் வெளியிடப்பட்டதகவல்களில் இருந்து பெறப்பட்டதை, இணைப்புகளை தொட÷ந்து செல்லும் போது நீங்களும் காணமுடியும்.

ஊமை Wrote:ஜூட்
நான் ஏதோ தவறாக எழுதியதாக குறிப்பிடு இருக்கிறீர்கள் என்ன அது ?
ஊமை

கிழே தொட÷ந்து படிக்கவில்லையா? படியுங்கள், புரியும்.
Reply
கீழே தொடர்ந்து படிக்கவா ?
ஏதும் இல்லையே.....................

Ha ha Ha
Reply
Sriramanan Wrote:இதைவிட நிறைய அறிந்திருக்கிறம். இன்னும் வேணும் எண்டா எழுதிறம்.

தொடர்ந்து எழுதுங்கள்.
Reply
Quote:தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களை கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை...

ஆனால் அவர் முன்னம் கனக்க எழுதிட்டார் வாசித்து முடிக்க தான் கன நாள் எடுக்கும்
[b][size=18]
Reply
எல்லா நன்மைகளும் பெற்றிட தெய்வ வழிபாடு தெய்வ அன்பு முதலியவைகளைப் பயன்கருதிச்செய்வது உயர்ந்த இலட்சியமாகாது. செல்வ வசதிக்காகவும் பதவிக்காகவும் உத்தியோகத்திற்காகவும் சந்ததிக்காகவும் நோய்தீர்வதற்காகவும் இப்படிப்பலர் பலவகையான பயன்களைக் கருதிக் கோவிலுக்குப் போய் வழிபடுகின்றார்கள். எந்த எந்தப் பயனை நினைக்கின்றார்களோ அந்த அந்த பயனை இறைவனும் அவர்களுக்குத் தருகின்றான். ஆனால் அந்தப்பயனுடன் அது நின்று விடுகிறது. இறைவன் திருவருளை வேண்டி வழிபட்டால் அந்தத் திருவருளால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைந்து இனிமேல் பிறவாத நலமும் உண்டாகும்.


கோயிலுக்குள்ள சிறப்பு
மற்ற இடங்களில் இறைவனை நினைத்து தியானிப்பதாலும் துதிப்பதாலும் வழிபடுவதாலும் வினைகள் வெதும்புகின்றன. கோவிலில் இறைவனை வழிபட்டால் வினைகள் வினைகள் வெந்து எரிந்து கரிந்து நீராகிவிடுகின்றன. கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால் அந்தத்துணி வெதும்புமே தவிர சாம்பலாகாது. சூரிய காந்தக்கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழ்வரும் மற்றொரு வெயிலில்(ஒளியில்) துணியை வைத்த உடனே அது சாம்பலாகி விடுகிறது. நேர்வெயிலுக்கு இல்லாத ஆற்றல் சூரிய காந்தக்கண்ணாnயின் கீழ்வருகின்ற வெயிலுக்கு உண்டு. பரந்து விரிந்து இருக்கின்ற சூரியனுடைய வெப்பத்தை ஒன்றுபடுத்தி தன்கீழே சூரியகாந்தக்கல் பாய்ச்சுகிறது. பிறஇடங்களில் இறைவனை வழிபடுவது வெயிலில் வேட்டியை வைப்பது போலாகும். திருக்கோவிலில் இறைவனை வழிபடுவது சூரியகாந்தக்கண்ணாடியின் கீழ் வேட்டியை வைப்பது போலாகும்.

வாரியார்
----------
Reply
Sriramanan Wrote:செல்வசந்நிதியிலிருந்து முருகனின் வேல் கதிர்காமம் போவதையும் அறிந்திருக்கிறம்.

ஆயிரம் மனைவிகளை வைச்சிருந்த கண்ணன் கதையும் அறிந்திருக்கிறம்.
2 மனைவி வைச்சிருக்கிற முருகன் கதையும் திருமணம் செய்யாமல் இரண்டு வப்பாட்டி வைச்சிருக்கிற யானைத் தலையன் பிள்ளையாரின் கதையும் அறிஞ்சிருக்கிறம்.

ஆபத்தில்போய் சிவனின் காலில் வீழ்ந்து அவனின் வரம் பெற்று அவனின் தலையில் வாழும் பிறை(சந்திரன்) பற்றியும் அறிந்திருக்கிறம்.

இராவணனுடன் போர் புரிய இராமனுடன் துணைக்குச் சென்ற குரங்குகள் கரடிகள் பற்றி அறிஞ்சிருக்கிறம்.

பூமியில் முதல் தோன்றிய உயிரினம் முதல் தற்கால மனிதர்கள் வரை வழிபட்டுவரும் சைவசமயம் பற்றி அறிந்திருக்கிறம். மன்னிக்கவும் சைவம் கல்தோன்றி மண் தோன்றாக கலத்துக்கு முன் தோன்றியதல்லவா?

இதைவிட நிறைய அறிந்திருக்கிறம். இன்னும் வேணும் எண்டா எழுதிறம்.


செல்வச்சந்நிதி வேல் கதிர்காமம் போவதில் ஆச்சரியமில்லை... இரண்டு கோவில்களுக்கும் இடையே பக்தர்கள் போய் வருகிறார்களே...அப்ப எடுத்துப் போவார்கள்...!

கண்ணன் கடவுளாக சித்தரிக்கப்பட்டு அவருக்கு ஆயிரம் மனைவிகள் என்பது கதை... ஆக பெண்கள் நினைத்தால் கூட கடவுளின் வரத்தைப் பெறலாம்... அவர்கள் கடவுளால் தீண்டப்படாத பிறவிகள் அல்ல என்பதைச் சொல்ல....! ஒரு காலத்தில் பெண்கள் கடவுளை (ஞான நிலையை - சக்தியின் ஒரு நிலையை) அடைய முடியாத பிறவிகள் என்ற சமூகக் கோட்பாடு இருந்தது அதைத் தகர்க்க இப்படி ஒரு கதை புனையப்பட்டிருக்கலாம்...!

முருகனுக்கு இரு மனைவிகள் என்று பார்ப்பது தவறு... பெண்கள் சக்தியின் வடிவங்கள்... உண்மைதானே உடலும் தந்து இயங்க உயிரும் தருவது யார் பெண்கள் தானே... முருகனை இயக்க இரண்டு சக்திகள்... அதேபோல் தான் விநாயகரை ஞானத்தின் முதல்வனை இயக்க இரண்டு சக்திகள்... சித்தி மற்றும் புத்தி... (சித்தி - செல்வம் (பணமல்ல அனைத்து வகை செல்வங்களும்) புத்தி...அறிவு)

இன்று நாய்கள் கண்ணி வெடி அகற்ற முடியுது இன்னும் எத்தனையோ பணிகள் ஆற்ற முடியுதென்றால் அன்று குரங்குகள் ஏன் மனிதருக்காக போரிட பயிற்சி அழிக்கப்பட்டிருக்க முடியாது...ஒருவேளை சூழல் மாற்றங்களால் அந்த வகைக் குரங்குகள் அழிந்திருக்கவும் கூடும்...!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடிகளும் மொழியும் என்று சொல்வது சைவத்தையோ இல்ல இந்து மதத்தத்தையோ அல்ல தமிழையும் தமிழர்களையும்...!

அகிலத்தின் தோற்றமே விளங்கமுடியாப் புதிர்...அதை மனித சிந்தனை அவிழ்க்குமா... மனிதன் கற்றதே கைமண் அளவு கல்லாதது முடிவிலி அளவு.... சிவபெருமாந்தான் ஒருவேளை முடிவிலியின் முடிவோ.... உங்களிடம் ஒரு கேள்வி சூரியன் சந்திரன் பூமி...இவை இல்லையோ பிறை கண்ணுக்குத் தெரியாது...ஏன் இன்னும் இன்னொரு சந்திரன் தோன்றவில்லை.....???!

பிரபஞ்சத்தின் வயதோடு ஒப்பிடும் போது மனிதனின் தோற்றமும் அழிவும் சில மைக்கிரோ வினாடிகள் போன்றதாகவே இருக்க முடியும்... அதற்குள் எத்தனை ஆட்டங்கள் போடப் போறான் மனிதன்....அதற்குள் எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!

சிறீரமணன் அப்படி எழுத எங்களுக்கு இப்படித்தான் பதில்கள் வந்தன..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நீங்கள் எல்லாம் கடவுளை இப்படி ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறியளே.. உங்களை இப்படி ஆராய்ச்சி செய்ய வைத்த சக்தி தான் கடவுளா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
kuruvikal Wrote:எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!

ஆமாம் சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல் மற்றனவெல்லாம் 'ஆண்டவன் அருட்செயல்' அப்படித்தானே........ 8) 8)
Reply
manimaran Wrote:
kuruvikal Wrote:எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!

ஆமாம் சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல் மற்றனவெல்லாம் 'ஆண்டவன் அருட்செயல்' அப்படித்தானே........ 8) 8)

மனிதனின் அறிவுக்கு இதுவரை எட்டாத சக்தியின் நிலை...! தொடர்ந்து தேடினால் அதையும் அறியலாம்... மனிதனின் தேடல் தொடரும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:மெய்க்காதலை ஒன்று சோ்க்வே எங்கள் சதையை அறுத்துக்கொடுப்போம்!
சாி.. இவ்வளவு நாளும் மதத்துக்கு சதையை அறுத்தக் கொடுத்தியள். இனி காதலுக்கோ? பிறகும் சதை அறுக்கிறதிலேயே நில்லுங்கோ!

..
Reply
கல்லை கண்டால் நாயை காணோம்..
நாயை கண்டால் கல்லை காணோம்! :roll: :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)