Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாநிதியும் குள்ளநரித்தனமும்.
#21
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->சிறி
நீங்கள் சொன்னது போல் சில இந்திய பத்திரிகைகளை நானும் பார்த்தேன். ஆனால் நீங்கள் சொன்ன கருணாநிதியின் விடயத்தைக் காணவில்லை. சிலவேளை உங்களுக்கு மட்டும் ஒரு பத்திரிகை அச்சிட்டுள்ளார்களா???
ஒரு விடயத்தை எழுதும்போது அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டியது செய்தியைத் தருபவரது கடமை. ஆனால் நீங்கள் எப்படி அந்தச் செய்தியை அறிந்தீர்கள் என்பதைச் சொல்லாமல் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். எனியாவது சரியான பதிலைத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கருணாநிதி தமிழில் எழுதிய குறளோவியம் என்ற நூலை இந்தியில் வெளியிடுகின்றனர்.

இந்த இணைப்பின் இறுதியில் ஒலி வடிவில் நீங்கள் கேட்கலாம்.
http://www.ibctamil.net/audio/INDIA_1611.smil
" "
Reply
#22
<b>வணக்கம் து}யவன்</b>
நான் ஏற்கனவே சொன்னதைத்தான் நீங்கள் மறுபடியும் சொல்கின்றீர்கள். ஏதோ வேறு ஆதாரத்துடன் வந்து நிரூபிப்பதாகச் சொல்லிச் சென்றீர்கள். நான் நினைக்கின்றேன் பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வந்ததென்று. கருணாநிதி அவர்களின் பல பழைய திரைப்படங்களை வீடியோவில் நானும் பார்த்திருக்கின்றேன். எல்லாத் திரைப்படங்களிலும் கதைச் சுருக்கத்தை கருணாநிதி அவர்களே அவரது குரலில் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வழங்குவார். அதனை ஙீங்களும் கேட்டுப் பாருங்கள். அடுத்து நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ரமேஷ் குடும்பத்தாரின் கொலை. ஜெயலலிதா கருணாநிதியையும் மகன் ஸ்ராலினையும் எப்படியாவது உள்ளே போடுவதற்கு மேம்பால ஊழல் என்று முதலில் கூறி கருணாநிதியை முதலில் கைது செய்தார். அந்த முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. மேம் பால வழக்கில் இன்றுவரை(4 வருடமாகியும்) முதல்த் தகவல் அறிக்கை கோர்ட்டில் சமர்பிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பின்பு ஜெயலலிதா ரமேஷ் குடும்பத்தாரின் கொலையை ஸ்ராலினுடன் தொடர்பு படுத்தி அவரைக் கைது செய்ய முயற்ச்சித்தார். அம்முயற்ச்சியுமஇ பலனளிக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி ஸ்ராலின்தான் கொலை செய்வித்தார் என்று உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஒரு குற்றச் சாட்டே ஒருவரை குற்றவாளி ஆக்கிவிடுமா?? அது உண்மையாக இருந்திருந்தால் இதுவரை ஜெயலலிதா சும்மா இருப்பாரா???

<b>வணக்கம் சிறி</b>
உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. கருணாநிதி தான் எழுதிய குறளோவியத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பையே வெளியிட்டு வைக்கின்றார். இதில் என்ன தவறு. இது அவருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு தானே. எங்களது தாயகத்தில் சிங்கள மொழியையும் சிங்கள ஊடகங்களையும் எதிர்ப்போர் யாழில் அதே சிங்கள ஊடகத்தின் கிளையை திறந்து வைத்துள்ளார்களே. அதனுடன் ஒப்பிடும்போது இது பறுவாயில்லை.
Reply
#23
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வணக்கம் சிறி  
உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. கருணாநிதி தான் எழுதிய குறளோவியத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பையே வெளியிட்டு வைக்கின்றார். இதில் என்ன தவறு. இது அவருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு தானே. எங்களது தாயகத்தில் சிங்கள மொழியையும் சிங்கள ஊடகங்களையும் எதிர்ப்போர் யாழில் அதே சிங்கள ஊடகத்தின் கிளையை திறந்து வைத்துள்ளார்களே. அதனுடன் ஒப்பிடும்போது இது பறுவாயில்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தனக்கு விளம்பரம் தேட ஒருவன் ஆக்கிய ஆக்கம் சிறந்தது ..தங்கள் கருத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு புரியவக்கும் தொடர்பாற்றல் ஊடகமுயற்சியை கேவலம் என்னும் அரசியல் கத்துக்குட்டித்தனமுடையவர்....... கருத்து இப்பிடித்தான் இருக்கும்...
::
Reply
#24
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எங்களது தாயகத்தில் சிங்கள மொழியையும் சிங்கள ஊடகங்களையும் எதிர்ப்போர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வணக்கம் அதிபுத்திஜீவியான வசம்பு அவர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தங்களது மேற்கூறிய அரிய செப்பலுக்குரிய ஆதரங்களை எடுத்துவர முடியுமா :?: :?:

ஆதாரங்கள் இல்லாமல் கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்ற கொள்கையுடைய அதிபுத்திசாலியே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> , எங்கே இடக்கு முடக்காக கேட்டு விட்டேன் என நினைக்கிறீர்களா :?: :?:

யாழ் களத்துக்கு வந்தோம் Arrow பார்த்தோம் Arrow ஏதோ ஒன்றை எழுதினோன் Arrow என்றில்லாமல் அதைவிடுத்து அதிமேதாவித்தனம் :wink: வேண்டாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
" "
Reply
#25
ஏன் வசம்பு

இந்திய நீதிமன்றங்களில் அரசியல்வாதிக்கு எதிராகப் போடப்பட்ட எவ்வழக்கு மூலம் அவ் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டான். பேபர்ஸ் ஊழல் வழக்காயினும் சரி, மாட்டுதீவன ஊழலில் மாட்டுப்பட்ட லல்லுபிரசாத் யாதேவ்வும் சரி, சொத்துசேர்ப்பு வழக்கில் மட்டுப்பட்ட ஜெயலலிதாவும் சரி. எவர் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை அனுபவித்தனர்? இன்று அரசாங்கமே சோனியா முதல் எல்லாத் திருடர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றது. ஆக ஏழைகள் தான் தண்டிக்கப்பட்டனர். இந்திய சட்டங்களில் எழுதப்படாத விதிகள் இவை.


ரமேஸ் அப்படி நஞ்சு குடித்து சாகவேண்டிய நிலை என்ன? அந்த நேரத்தில் பொருளாதாரரீதியில் கூட அவருக்கு கஸ்டம் ஏற்படவில்லை. ஏனென்றால் ரமேஸ்சுக்கு இந்த கொள்ளை தொடர்பான சகல ஆதாரங்களும் தெரியும். அவர் அரசாங்க சாட்சியாக மாறிவிடக்கூடும் என்ற எண்ணத்தில் தான் கொல்லப்பட்டார்.
குற்றச்சாட்டு என்பது குற்றவாளி ஆக்காது தான். ஆனால் நெருப்பில்லாமல் புகைவராது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
[size=14] ' '
Reply
#26
து}யவன்

நெருப்பில்லாமல் புகையாது என்றீர்கள். இது எல்லாவற்றிக்கும் பொருந்துமா?? எமது வசதிக்கேற்றவாறு கதைப்பதில் எவ்வித நன்மையுமில்லை. ஜெயலலிதா ஆட்சியில் எத்தனை பேருக்கு கஞ்சா வழக்குப் போட்டார். தனது வளர்ப்புமகன் சுதாகரனையே அவர் விட்டு வைக்கவில்லையே. அதைவிட அவரை பல வழக்குகளில் கண்டித்த நீதிபதி அசோக்குமாரையே பொய்யாக ஒரு பெண்ணை தயார் செய்து ஆசோக்குமாருடன் தொடர்பு என்று கதையளந்து நாறடிக்கப் பார்த்ததும் அசோக்குமாரின் மருமகன் கஞ்சா வைத்திருந்தததாக கைது செய்து பின் விடுதலையானதும் உயர் நீதிமன்றத்தினாலேயே ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கப் பட்டதும் தற்போது காஞ்சி ஜெயேந்திரரின் வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டதும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையா??சரி மேம்பால ஊழலில் ரமேஷ் குடும்பத்தை மட்டும் தீர்த்துக்கட்டி ஸராலின் தப்பி விட முடியுமா?? இது மாநகரசபை சம்பந்தமான விடயம் எப்படியும் மறைக்க முடியாது. அது போக நீங்கள் சுட்டிக்காட்டியது அனைத்தும் அரசியல் வாதிகளின் ஊழல் வழக்குகள் ஆனால் இது கொலை வழக்கு.
Reply
#27
நான் சுட்டிக்காட்டியது ஊழல் வழக்கு என்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியது மட்டும் என்னவாம். அரசியல்வாதி சார்பற்ற வழக்குகள் தானே. முதலே சொல்லியிருக்கின்றேன். அரசியல்வாதிக்கும் மற்றவர்களுக்கும் நீதிமன்றம் வௌ;வேறான பார்வைகளைத் தான் வைத்திருக்கின்றது என்று.

சரி. சிவசேனைத் தலைவர் பால்தாக்ரே,(மும்பாய் கலவரங்கள் மற்றும் தென்னிந்திய மக்களை துரத்தியடித்தமை) நரேந்திரமோடி,(கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னான வன்முறை) பாஜக தலைவர் லால் கிருஸ்ண அத்வானி(அயோத்தி பாபர் மசூதி உடைப்பும் அதன் பின்னான வன்முறைகளுக்கும்) ஆகியோர் கொலைக்குற்றமும், அதற்கான து}ண்டுதலுக்கும் காரணிகளாக இருந்தவர்கள் என்று. இவர்களில் யார் தண்டனை அனுபவித்தனர் என்று காட்டமுடியுமா?

ரமேஸ் மட்டுமே இக் கொலை தெரிந்த ஒருவர். உங்களுக்கு தெரியும் எக் கொலையும் உறுதியாகத் தெரிந்தாலும் அதற்கான ஆதாரம் இல்லாவிட்டால் நீதிபதியால் கூட ஒன்றும் செய்யமுடியாது. இவ் ஊழல் வழக்குக்கு சிமேந்து குழைத்தவனா வந்து சாட்சி சொல்லமுடியும்? மற்றும் இக் கொலை மூலம் சாட்சி சொல்லவிரும்பியவர்களின்தும் வாய்கள் முடக்கப்பட்டிருக்கும்.

வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.
[size=14] ' '
Reply
#28
நன்றி தூயவன், பல உண்மைகளை இங்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆரை மட்டும் கட்சியிலிருந்து வெளியேற்றவில்லை! நாவலர் நெடுஞ்செழியன் உட்பட பல மூத்த தலைவர்கள் வெளியேறக் காரணமாக இருந்தார். இதே போன்றுதான் தி.மு.கவில் அடுத்த தலைவராவதற்குரிய தகுதிகளைக் கொன்டிருந்த வை.கோ அவர்கள் மிக கேவலமான முறையில் குற்றஞ்சாட்டப்ப்ட்டு வெளியேற்றப்பட்டார். வை.கோ அவர்கள், தன்னை விடுதலைப் புலிகளின் துணையுடன் கொலை செய்ய முற்பட்டார் என்று கூட குற்றஞ் சாட்டியிருந்தார். தனது மகன் ஸ்ராலினுக்காக வை.கோ பலிக்கடாவாக்கப்பட்டிருந்தார். அதன் மூலம் வை.கோவின் வை.கோவின் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமனமாக்க முற்பட்டார். ஆனால் அதன் பின் வை.கோ புது சகாப்தம் படைத்தது யாமறிந்ததே! ஆனால் எவ்வளவுதான் கருணாநிதி, தனது குடும்ப உருப்பினர்களை தி.மு.கவில் தலைமைக்கு கொண்டுவர முற்பட்டாலும், கருணாநிதிக்குப் பின் தி.மு.கவின் தலைமை வை.கோவிடம் செல்வது தவிர்க்க முடியாதது. அதுதான் நிதர்சனமும்.

எம்.ஜி.ஆர், தனது கடைசி காலங்களில் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த முற்பட்டாரென்றும், அ.தி.மு.கவை தி.மு.கவில் இணைக்க முற்பட்டாரென்றும் சில வந்திகள் வந்தன. அ.தி.மு.கவை தனக்குப் பின்னம் தலைமை தாங்க சரியான ஆளில்லை என்பதாலும், ஜெயலலிதா போன்றோரின் கைகளில் சிக்கி விடக்கூடாதென்பதாலுமே அப்படி முயற்சித்தாரென்று கூறுகிறார்கள்.
" "
Reply
#29
து}யவன் எழுதியது:
வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.

இந்த விடயம் என்னைவிட உங்களுக்கே நிறைய பொருந்துகின்றது. ரமேஷின் தற்கொலையை ஸராலின்தான் நஞ்சூட்டிக் கொலைசெய்வித்தாரென்று நீங்கள் தான் எழுதினீர்கள். ஆனால் தமிழ்நாடரசோ ரமேஷின் தற்கொலையை உறுதிசெய்து ஸராலின்தான் ரமேஷை தற்கொலைக்கு து}ண்டினார் என்றே வழக்கைத் திசை திருப்பியது. கருணாநிதியின் குரல் விடயத்திலும் நான் ஏற்கனவே அவர் திரைப்படங்கள் பற்றிச் சொன்ன பின்னும் வேறு ஆதாரங்களுடன் வருவதாகச் சொல்லிவிட்டு நான் சொன்னதையே மீண்டும் சொன்னீர்கள். எனவே சில விடயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை விட நீங்கள் கைக் கொள்வதே சாலச்சிறந்தது. களத்தில் எதையும் கௌரவமாகவே விவாதிக்க விரும்புபவன் நான். இங்கு சிலபேர் தாம் வாழும் பச்சோந்தி வாழ்க்கைக்கு வலுச்சேர்க்க கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு மற்றவர்களை கேவலப்படுத்துவதாக நினைத்து தம்மையே கேவலப்படுத்துகின்றார்கள். இதுவரை அந்த நிலையை நீங்கள் அடையவில்லை. ஆனால் பலவேளைகளில் ஆக்ரோசப்பட்டு நீங்களும் அந்த நிலையை அடைந்து விடுவீர்களோ என்ற கவலையையும் எனக்கு ஏற்படுகின்றது. எனவே முடிந்தவரை பொறுமையாக கருத்துக்களைக் கருத்தாலேயே எதிர் கொள்ளுங்கள். பதில்க் கருத்து எழுதமுடியாதவர்களுக்குத் தான் அந்தநிலையென்றால் உங்களுக்கு ஏன்??
Reply
#30
கருணாநிதி நல்லவரா திமுக நல்லாதா இரண்டும் சமுச்சீராய் வளர்ந்திச்சு...திமுக வளர்ந்ததாலாய் தமிழ் நாடு முழுதும் இருந்த அய்யர் அய்யங்கார் ஆதிக்கம் ஒழிந்து புதியவடிவம் வளர்ந்திச்சு...மறு புறத்திலை கருணாநிதியாலை திமுக வளர்ந்த மாதிரி நிருபராக இருந்த தனி மனித கருணாநிதி கோடிஸ்வரராகி விட்டார் இதையும் மீறி அவருடைய அக்கா மகன் மாறன் குடும்பம் தமிழ் நாட்டின் முக்கியமான மேட்டுக்குடியாக மாறி விட்டது...கருணாநிதி யாருடைய நலனில் அக்கறை காட்டுவார் தனது பொக்கிசம் நலம் சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டுவார்...மற்ற எல்லாம் வெற்று அரசியல் கோசங்களே

கருணாநிதியென்ற தனிமனிதன் மிகவும் பலவினமானவரே...குள்ள நரி புத்தி தனத்தால் அண்ணாத்துரை பின் நெடுஞ்செழியனுக்கு வரவேண்டியதை எம்ஜிஆர் மூலம் தனதாக்கி அந்த எம்ஜிஆருக்கே பிறகு வோட்டு வைத்தவர்

கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் எழுதியதில் ஒன்று....கண்ணதாசனும் கருணாநிதியும் மாஜாவுக்கு சென்றார்களாம்..கருணாநிதி அந்த பெண்ணிடம் திருப்தி படுத்தினது காணாது பணத்தை refund பண்ணு என்று நின்று கொண்டாராம்...கருணாநிதி என்ற நபர் சிறந்த ராஜதந்திரி ஜேஆரைப்போல..... ஆனால் நல்ல சுயலமற்ற வழிகாட்டியான தலைவரல்ல..
Reply
#31
வணக்கம் ஸ்ராலின்

அண்ணாத்துரைக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வராக வந்திருக்க வேண்டும் எனச் சொன்னீர்கள். அப்படிப்பார்த்தால் அ தி மு க விலும் ஜெயலலிதாவை விட நெடுஞ்செழியனே எல்லாவற்றிலும் மூத்தவர். அதனால் எம் ஜி ஆருக்கு பின்னால் நெடுஞ்செழியன் அல்லவா முதல்வராக வந்திருக்க வேண்டும். அங்கும் கருணாநிதியா சதி செய்தார். எம் ஜி ஆர் தி மு கவை விட்டு வெளியேறியபோது அவருடன் வந்து இணைந்த நெடுஞ்செழியனை முன்னுக்கு கொண்டு வர எம் ஜி ஆர் என்ன செய்தார். வெறும் அரசியல் அனுபவம் மட்டும் ஒருவரைத் தலைவராக்க போதுமானதல்ல. அதைவிட
ஜெயலலிதா நெடுஞ்செழியன் அவர்களை எவ்வளவு கேவலமாக நாயென்றும் அதில் ஒட்டிவாழும் உண்ணியென்றும் விமர்சித்தாரென்பதும் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். ஆனால் எந்தக் காலத்திலும் கருணாநிதி நெடுஞ்செழியனை தரக்குறைவாக விமர்சித்தது இல்லை. அதுபோல் அண்ணாத்துரைக்குப் பின் வந்த எந்த முதலமைச்சர் நேர்மையாக பணம் சம்பாதித்தார் என்று உங்களால்ச் சொல்ல முடியுமா??? காமராஜர் அறிஞர் அண்ணா போன்று நேர்மையாக வாழ்ந்தவர்களை இன்று எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றார்கள்.
Reply
#32
இப்படி வழிக்கு வாங்க வசம்பு.
மறைமுகமாக நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சுயநலத்தை. இதைத் தான் நாமும் சுட்டிக் காட்டுகின்றோம். அவர்கள் முழுச்சுயநலவாதிகள். அவ்வாறே கருணாநிதி காட்டும் ஆதரவு என்பது கபடத்தனமானது என்று. இதற்காக நாங்கள் ஜெயலலிதாவை சுத்தமானவர் என்று அடையாளப்படுத்தவே இல்லை. ஜெயலலிதா என்பது கூட அக் கபட அரசியல்வாதிகளின் அடையாளங்களில் ஒன்று தானே.
[size=14] ' '
Reply
#33
வணக்கம் வசம்பு.....அண்ணாத்துரைக்கு பின் நெடுஞ்செழியன் பதவிக்கு வருவதற்க்கும்...அரசியலில் நொந்து கெட்டு பேய் போவதற்க்கு புகலிடமின்றி போன அதிமுகவில் பதவி வருவதற்க்கும் இரண்டு கோணங்கள்...கருணாநிதியை அரசியல்வாதியாக பார்த்தளவுக்கு ஜெயலிலாதாவை அரசியல்வாதியாக பார்த்து ஒப்பிடுவது பொருத்தமற்றது.... திமுக வலும் சரி அதிமுகவுமிலும் சரி கீழ் மட்ட உறுப்பினர்களில் இன்றும் போராட்ட குணாம்சவுள்ளவர்கள் இருக்கிறார்கள்.....நெடுஞ்செழியனை விடுவம் எந்தவித அரசியல் ஆளுமையற்ற ஸ்டாலினை பதவிக்கு கொணர முனைவது எந்தவிதத்தில் நியாயம்.............
Reply
#34
<b>து}யவன்:</b>

நான் எவரின் வழிக்கும் வரவில்லை. யதார்த்தங்களை எழுதுகின்றேன். நீங்கள் சுற்றிச் சுற்றி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளைச் சாடுவதில் மட்டுமே நிற்கின்றீர்கள். நமது நாட்டில் மட்டும் என்ன வாழுதாம். நாம் மற்றையவர்களைக் குறை சொல்வதாயின் அவர்களைவிட நாம் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். நமது நாட்டில் தற்போதுள்ள ஒழுக்கமான அரசியல்வாதியொருவரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா??? அத்துடன் நீங்கள் ஆரம்பத்தில் ஏதோ ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு ஒருவித கொடுமையும் செய்யவில்லை என்று எழுதியதை நீங்கள் மறைத்தாலும் நான் மறக்கவில்லை.


<b>ஸ்ராலின்:</b>

நீங்கள் சொல்லும் இரண்டு கோணங்கள் விந்தையாகவுள்ளது. என்ன காரணத்திற்காக அண்ணாத்துரைக்குப் பின் நெடுஞ்செழியன் முதலமைச்சராகியிருக்க வேண்டுமென்று எண்ணுகின்றீர்களோ அதே காரணம் தான் எம் ஜி ஆருக்கு பின் நான் சொல்வதும். நெடுஞ்செழியன் ஒன்றும் இடையில் வந்து சேர்ந்து விடவில்லை. ஆரம்பத்திலிருந்தே எம் ஜி ஆருடனிருக்கின்றார். சரி ஜெயலலிதாவை விடுங்கள் எம் ஜி ஆர் என்ன செய்தார். வாரிசு அரசியலைப் பற்றிப் பார்ப்போம். மத்திய காங்கிரசில் ராஜீவின் மரணத்தின் பின் அவரது வாரிசுகளே தலைமைப் பதவிக்கு வரலாம். தமிழ் நாட்டுக் காங்கிரசில் மூப்பனாருக்குப் பின் தலைவராக வாசன் வந்துள்ளார். இவர் எந்தத் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்.அவரை விட ஸ்டாலின் எந்த விதத்தில் குறைந்தவர். ஒருவருக்கு ஆளுமை இருக்கா இல்லையா என்பது அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் போதுதான் தெரியவரும அதைவிட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்த்தான் ஸ்டாலின் முதலமைச்சராக முடியும். அங்கே வில்லங்கமாக திணிக்கமுடியாது. உதாரணமாக எம் ஜி ஆருக்குப் போட்டியாக கலைஞர் மு.க.முத்துவை கொண்டு வந்தாரென்று சொல்லப்பட்டது. அப்படியாயின் அவர் இப்போ எங்கே??? எனவே மக்களின் அங்கீகாரத்தைப் பெறாத எவராலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே கருத்துக்கள் என்பது நேர்மையாக இருக்க வேண்டுமேயொழிய எமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அல்ல.
Reply
#35
சாக்கடை அரசியல் தமிழ்நாட்டு அரசியல். வாள், அரிவாள், குண்டர் கூட்டத்துடன் ஆட்சி செய்யும் மாபியா நாய்களை தமிழக விடுதலைப்படைதான் கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் எமது போரட்டத்திற்கு பூரண ஆதரவு தந்தார், அதே போல் வை.கோ, நெடுமாறன், திருமாளவளன் தமிழ்பற்றுள்ள அரசியல்வாதிகள் ஆதரவு தருகிறார்கள். தமிழ்நாடு பார்ப்பணர்களால் தூங்ககிக்கொண்டிருக்கிறது, இவர்களின் தூக்கத்தை நாம் தான் கலைக்க வேண்டும்.
Reply
#36
<b>அடிதடி</b>

<b>நீங்கள் அடுத்தவர்களின் து}க்கத்தைக் கலைப்பதற்கு முதல் நம்மவரின் து}க்கத்தைக் கலையுங்கள். நம்மவருள் வளர்ந்து விட்ட வன்முறைக் கலாச்சார்த்தை ஒளிக்கப் பாருங்கள்</b>.
Reply
#37
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>அடிதடி</b>

<b>நீங்கள் அடுத்தவர்களின் து}க்கத்தைக் கலைப்பதற்கு முதல் நம்மவரின் து}க்கத்தைக் கலையுங்கள். நம்மவருள் வளர்ந்து விட்ட வன்முறைக் கலாச்சார்த்தை ஒளிக்கப் பாருங்கள்</b>.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அய்யா என்ன சொல்லூறீங்க? புரியவில்லையே! எமது போரட்டம் அகிம்சையில் ஆரம்பித்து வன்முறைக்கு எங்களை தள்ளிவிட்டார்கள். தழிழீழ போரட்ட வரலாற்றை நான் சொல்லி நீர் அறிய வேண்டியதில்லை.

கருணாதியின் அரசியல்பற்றி தான் விவாதம். உண்மையிலே குள்ள நரி கருணாநிதி, ஜெ.ஜெ பற்றி என்ன கூறலாம், ஆ எந்த நடிக்கையை தனது நலன்களுக்காக தாரவார்க்கலாம் என்பதை பற்றிதான் பேசலாம்.
Reply
#38
வசம்பு
இங்கே கருணாநிதியின் குள்ளநரித்தனம் பற்றியே ஆனா விவாதமே தவிர, மற்றவர்களை பற்றியல்ல. எனவே நீங்கள் மற்றவர்களில் குறை காணும் பட்சத்தில் தனியான தொடக்கத்தை ஆரம்பியுங்கள். அதை விட்டுவிட்டு விவாதத்தின் கருப்பொருளில் இருந்து நழுவும் போக்கை ஆதரிக்காதீர்கள்.
[size=14] ' '
Reply
#39
<b>மன்னிக்க வேண்டும் து}யவன்</b>

கருத்துக்களை எழுதும் போது நன்றாக கவனித்து எழுதுங்கள். அதுபோல் பலதடவை உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன் மற்றவர்களுக்கு புத்தி சொல்வதை விட நீங்களே நடந்து காட்டுவதே புத்திசாலித்தனமென்று. ஆனால் நீங்களே கருணாநிதி அவர்களைப் பற்றி விமர்சித்த பக்கத்தில் அவரின் மகன் ஸ்ராலினையும் பற்றி வந்து எழுதினீர்கள். இப்போ மற்றவர்களுக்கு புத்தி சொல்கின்றீர்கள். அடுத்து அடிதடி எழுதிய கருத்திற்குத் தான் நான் பதில்க் கருத்து எழுதியுள்ளேன். நீங்கள் அவருக்கல்லவா புத்திமதி சொல்லியிருக்க வேண்டும். மற்றவர்கள் மீது சேறு புூசுவதாக எண்ணிக் கொண்டு உங்கள் கையிலல்லவா புூசிக் கொள்கின்றீர்கள். பறுவாயில்லை உங்களை நான் கோபிக்கவில்லை மாறாக பரிதாபம் தான் படுகின்றேன்.
Reply
#40
என்ன வசம்பு சார்...சும்மா அடி கொடுத்து கொண்டேய் ....இருக்கீஙக..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)