iniyaval Wrote:ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.
சரி நண்பிகளே <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதுதான் அந்தப்பாட்டு.
பெண் -
வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா நிண்டு உருகுவான்
துளியா இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்
கோடை வெயில் வரும் கோரமழை வரும் விதைநெல் இருந்தா விளையும் போடு
ஆம்பள ஒருவன் வலைய விரிச்சா முடிஞ்சாத் தலையில துண்டப்போடு
ஆண் -
போகும் நாள்வரை பொண்ணுடன் வாழப் புறப்பட்ட பொண்ணு இவளப் பாரு
ஆம்பள உள்ளம் உண்மைக் காதல் சொல்லத் துடிப்பவன் என்னப் பாரு
பெண் -
வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா அவன் உருகுவான்
துளியாத இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்
ஆண் -
வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்
துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்
--------------------------------------------------------------------------------
பெண் -
பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து
கருடா நீயும் சௌக்கியமா
ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா
ஆண் -
சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில
உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா
பெண் -
அறுவடை வளமா வேணுமிண்ணா உரமா உருமும் போடணுமா
இதுபோல் ஆயிரம் கதை சொன்ன மறுமுறை ஒருமுறை பொய் சொன்னா
ஆண் -
(அடட) இவதான் பாரதி புதுப்பொண்ணு தெரியுமெ மனசில இருக்கண்ணு
நிஜமாய் நடிக்கிற உயிர்ப்பொண்ணு விருதுகள் தரணும் உனக்கெண்ணு
--------------------------------------------------------------------------------
ஆண் -
மழை நீர் வருமென பலமுறை பாத்து தனியே தனியே தவிக்குது இவ்விள நாத்து
மனசில மழையது பொழியாதோ
உன்மேல் காதலாய் வந்தது நேத்து பல நூற்றாண்டுகள் ஒடியா போட்டு நிமிசங்கள் வருசங்கள் ஆகிறதோ
பெண் -
பள்ளிக்குட வாசலில கள்ளிச்செடி மீதினில உன்தன் சின்னப் பெயரோடு எம்பெயரைப் பாக்கயில
பறந்தது வானில் நெஞ்சம் உனக்குத் தெரியுமா பொம்பிள நான் அக்கம் பக்கம் சொல்லிட முடியுமா
ஆண் -
அடியே அழகிய பூச்செண்டு எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு
உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு தருவேன் என்னையே உனக்கெண்டு
பெண் -
உன்னையே தந்தாய் எனக்காக உயிரையே தருவேன் உனக்காக
வாழ்நாள் வரையில் சுகமாக வாழ்வோம் இன்பக் கடலாக
ஆண் -
வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்
துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>