Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#41
Quote:அதைச் செய்யத் திராணி அற்ற பெண்களும் ஆண்களும் போடும் கூச்சலே சினிமா எதிர்ப்பு பெண்களைக் கேவலம் பண்ணுறாங்க என்பதெல்லாம்..பெண்களை கேவலம் பண்ணுறாங்க என்று தெரிந்தால் பிறகெதற்கு விழுந்தடிக்கிறீங்க சினிமா பார்க்க....!

குருவிகள்.. இப்படி பட்ட படங்களில் வாறதுகளைப்பாத்து அதுகளை பின்பற்றுற நிலைமையிலும் நாங்கள் இல்லை.. அதுகளை பின்பற்ற திராணி அற்ற நிலையிலும் நாங்கள் இல்லை.. நமக்கு தெரியும் நாங்கள் எப்படி எந்த வழியில் போகவேணும் என்று. இப்ப நாங்கள் நாம் அந்த வழியில போக முடியல என்ற ஆதங்கத்திலையோ.. அல்லது போய்விடுவோமோ என்ற பயத்தில பேசவில்லை. நாளை வருகின்ற சந்ததி என்ன..?? இன்றைக்கு இருக்கிறதுகளே.. அன்னம் பாலைக்குடித்து விட்டு தண்ணியைத்தவத்திற மாதிரி விலக்கி விடாமல் அதையே பின்பற்றுகிறார்கள் பின்பற்ற வெளிக்கிடுகிறார்கள். அப்படி பட்ட நிலமையை அழிக்கிறது என்றால். இதை சினிமா எடுக்கிறவை கருத்தில கொள்ள வேணும் என்று தான் கூறுகிறோம்.

சினிமாவை நம்மைப்பொறுத்தவரை பொழுது போக்கு ஊடகமாக தான் நாங்க நினைக்கிறம். அதைப்பாக்கிறதுக்கு விழுந்தடிச்சு திரியவில்லை. நம்மை மாதிரி எல்லாரும் இருப்பாங்களா..??

சினிமா நடிகைக்கு கோவில் கட்டிற அளவுக்கு அதி முட்டாள்கள் வாழ்கிற சழூகம் தான் இது... சைபடர் மான்.. சூப்பர் மான் வந்து காப்பத்துவார்கள் என்று.. பல கூத்தடிச்ச.. சமூகம் தான் இது... அப்படிப்பட்ட சனத்திட்ட.. நல்லதை எடுத்துவிட்டு கெட்டதை விடு என்று சொல்கிறது எந்த அளவிற்கு பிரியோசப்படும் என்றதை நீங்களே புரிந்து கொள்ளுங்க.. சினிமாவிற்கு விளம்பரமாய் தான் கவர்ச்சி போடுறாங்க என்றால்.. அந்த கலைக்கு என்ன மரியாதை.. சொல்லுங்க.. அதில் பாக்க.. வேறை படங்களே எடுக்கலாம் தானே.. இப்ப பாருங்க.. ஆங்கிலப்படங்களில் இந்த காட்சிகள் சாதாரனமாய் இருந்தாலும்.. சில படங்களில் அவங்களே போடுறாங்க.. சின்னப்பிள்ளைகளிற்கு ஏற்ற படம் இல்லை இது என்று... ஆனால் தமிழ்ப்படங்களில.. என்ன நடக்கிறது.. கடவுளே.. அதுக்கு வேறை வக்காலத்தோ.. ??? அப்படி பட்ட கலாரசிகர்களிற்கு வேணும் என்றால்.. காசு தான் முக்கியம் என்று நினைக்கிறவை.. அப்படி செய்யலாம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
வணக்கம் நண்பர்களே,


[ பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....! ]

நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகின்றது. அதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஏன் திரைப்படங்கள் சொல்வதில்லை. பெண்கள் புடவை கட்ட வேண்டும் என்று சொல்லும் ஆண்கள், ஏன் அவர்கள் வேட்டி கட்டுவதில்லை என்று ஏதாவது ஒரு திரைப்படம் கேட்டதுண்டா? காரணம் தமிழ் திரைப்படத்துறையில் ஆண்களின் அதிக்கம் அதிகமிருக்கின்றமயால் டானெ.

சூழலுக்கு ஏற்றவாறு உடை அணிவதில் தவறில்லை. குளிர் பிரதேசங்களில் அதர்க்குரிய ஆடைகளை தான் அணியவேண்டும். ஆனால் மிகவும் வெப்பம் கூடிய இந்தியா, இலங்கை ஈழம் போன்ற பிரதேசங்களில், ஒவ்வாத உடைகளை அணிவது அசௌகரியங்களையே தோற்றுவிக்கும். இதனை மக்களிற்கு ஏதாவது ஒரு திரைப்படம் எடுத்து சொல்லியது உண்டா?

தகவல் ஊடகம் என்பது திரைப்படதுறையை குறிக்காதா? அப்படியாயின் எனக்கு இதை கொஞ்சம் தெளிவாக விள்க்கமுடியுமா உங்களால்?

அன்புடன்
விதுரன்[/quote]
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#43
Quote:பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு...

இது எங்கை நடந்தது.. நாங்கள் பாக்கவும் இல்லை கேள்விப்படவும் இல்லை.. நாம் கண்ட சோசல் பாட்டிகளில் எல்லாம்.. நல்லாய் தான் நடந்தது..உண்மையை சொல்லனும் என்றால் நாங்கள்.. ஒரளவுக்கு நம்ம பாடசாலை வாழ்கையில் பெரும் பகுதியை இலங்கையில தான் கழிச்சம்.. ஆனால் நாங்க பாத்தவரை.. ஆண்கள் பெண்கள் என்று தேவை ஏற்படும் போது.. சகஜயமாக தான் கதைப்பார்கள்.. வெளியில கதைக்கிறதற்கு தேவையும் இல்லை சந்தர்ப்பமும் கிடைக்கிறதில்லை.. அதனால் கதைக்கிறதும் கிடையாது.. அப்படி அண்ணாமாரும் அக்காமாரும் போறதைக்கண்டிருக்கம்.. இதில காதலர்கள் விதிவிலக்கு.. அவங்க றோட்டு றோட்டா கதைச்சுக்கொண்டு போவாங்க.. :wink: அதைவிட நாங்க நிறைய இடங்களில் பட்டி மன்றங்கள் பாக்கிறதுக்கு போய் முன்னால இருக்கிறது.. அங்க.. பேசிற ஆண்களும் சரி பெண்களும் சரி.. தோல்வியையும் வெற்றியையும் சமனாய்.. எடுத்து கடைசில கைகுழுக்கி ஒற்றுமையாய் தான் போவங்க.. இதெல்லாம் 3 மணிநேர சோசலிலா வந்தது.. அங்க எப்பவும் ஒற்றுமையாய் சோசலிசமாய் தான் இருக்காங்க.. றோட் றோட்டா கதைச்சுக்கொண்டு போனால் தான் சோசலா..??? இந்தப்பாடசாலைகளில் றாக்கீங் பண்ணுறவங்க.. எல்லாம் கிட்டத்தட்ட.. ஒரு மனநிலை சரியில்லாததுகள் தான்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
வணக்கம் நண்பர்களே,

சரியாக சொன்னியள் தமிழினி, ஆனால் குருவிகளின் கருத்திலும் சில ஞாயங்கள் இருக்குது. ஆனால் அது சமூகத்தில் நடப்பவை. அவற்றினை ஒரு சமூக தலைப்பில் ஆராய்வதே சிறப்பாக இருக்கும். இது ஆகையினால் திரைத்துறையினரின் கடமை பற்றிய கருத்தாடல் ஆகயால், அவரின் கருத்துடன் ஒத்து போக முடியவில்லை.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#45
தமிழினி நாங்கள் உங்களை தனிப்பட்ட ரீதியில் சொல்லவில்லை... உங்கள் சார்பு வாதத்தைக் குறிக்க உங்களைச் சுட்டுவது போல் சொன்னம்..தவறாக எண்ணாதீர்கள்...!

நீங்கள் தொடர்ந்தும் ஒன்றைத்தான் சொல்கிறீர்கள் கவர்ச்சி வேண்டாம் என்று...நாமும் அதைத்தான் சொல்கிறோம்...ஆனால் சினிமாவால்..ஒரு வர்த்தக் கலையால்...அதை இழக்க முடியாது எனும் போது அதற்காக சினிமா முற்று முழுதாகக் கூடாது கெட்டதையே தருகிறது என்பது போலான கருத்தையே மறுதலிக்கின்றோம்...!

இப்போ இராமயனத்திலும் சரி மகா பாரதத்திலும் சரி மணிமேகலையிலும் சரி... எமது பாரம்பரிய விழுமியங்களுக்கு... சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருக்கு...அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறோமா...இல்லையே..அதை ஒரு உதாரணமாகக் கொண்டு இப்படி இப்படி செய்வது இன்ன இன்ன கேடுகளை விளைவிக்கும் என்று காட்டுவதற்கு பயன்படுத்தவில்லையா...! இப்போ இராமாயனத்தில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கே இப்படிச் சொல்லப்பட்டிருக்கே நானும் அப்படி இருந்தால் என்ன என்று மாற்றான் மனைவியைக் கடத்திப் போய் திருமணம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியுமா...??! (சமூகத்தில் சில இடங்களில் இதை விடக் கேவலாமா எல்லாம் நடக்குது..அது வேற விசயம்...!)...! இல்லையல்லவா...அதுபோலத்தான் சினிமாவிலும் சென்சாருக்குப் பின்னரான காட்சிகள்தான் எமக்கு அளிக்கப்படுகிறது....அதற்குள்ளும் எமது அளவுகோலுக்கு ஏற்ப மிஞ்சிய கவர்ச்சியோ அருவருப்புக் காட்சியோ இருக்கலாம் (மற்றவர்களுக்கு அது அருவருப்பில்லாமலும் இருக்கலாம்) அதை நாம் தான் தவிர்க்க வேண்டுமே தவிர எமக்காக சினிமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது...அவர்களுக்கு அது முக்கியமாக இருக்கலாம்...!

அவர்கள் சமூகத்தில் அனைத்துத் தரப்பையும் திருப்திபடுத்தினால் தான் பிழைப்பு...! நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க மாட்டார்கள்..மட்டமாகச் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்...அதிமட்டமாகவும் சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள்...மிக உயர்வாகவும் சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று...இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு சினிமாக்காரன் தனது இலாபம் கருதி எப்படி ஒரு படத்தை தயாரித்து இலாபம் ஈட்ட முடியும்...??! சினிமாவில் வியாபாரம் தான் முக்கியம்...அதற்குப் பிறகுதான் அதன் சமூகத்தாக்கம் பற்றிய சிந்தனைகள்... ஆய்வுகள்...!

அவன் என்ன செய்ய முனைவான் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தனது படத்தின் மூலம் தீனி போட்டுத்தான் தனக்குத் தேவையான அளவு வருவாயை ஈட்டமுயல்வான்...அது வியாபார நோக்கம் கொண்ட சினிமாக் காரனின் தவறா....இல்ல சமூகத்தில் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் தங்கள் வேறுபட்ட பார்வைகளின் தவறா...???!

இப்படிச் சமூகத்தில் உள்ளவர்கள் மத்தியில் தோன்றும் வேறுபட்ட பார்வைகள்.. பழக்க வழக்கங்கள்... நடத்தைகள் வரக் காரணம் என்ன...??! அதை சினிமா மட்டும்தான் வழங்குகிறது என்பதைத் தான் நாம் நிராகரிக்ககின்றோம்... அதை நோக்கியதே எமது வாதமும்...! இது சினிமாவுக்கான வக்காளத்தல்ல...! அதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்...!

கலாசாரம் என்பது எல்லோருக்கும் பொதுவான விடயம்...இப்படியான மாறுப்பட்ட சிந்தனை உள்ள சமூகத்தில் எப்படி ஒரு பொதுவான விடயத்தில் எல்லோரும் ஒருமித்திருக்க முடியும்...??! சாதாரண கணவன் மனைவிக்குள்ளேயே இல்ல காதலன் காதலிக்குள்ளேயே...இல்ல நண்பர்களுக்கிடையேயே...ஒரு ஒருமித்த எண்ணப்பாடு வருமுடியாத சந்தர்ப்பங்கள் பல இடத்திலும் நடக்கிறது...இப்படியான ஒரு சமூகத்தில் திரைப்படம் மட்டும் இதுதான் சமூகத்தின் தேவை என்று எப்படி வரையறுப்பது...???!

இப்போ நாங்கள் சிகரட் குடிக்கவில்லை...மதுபானம் அருந்தவில்லை...அவை கலாசார சீர்கேடு மட்டுமன்றி...உடல்நலத்துக்கும் கேடானவை...என்று எண்ணும் போது அதையே மற்றவர்கள் என்ன என்று எண்ணி அவற்றிற்கு அடிமையாகிறார்கள்....! இதைப் பற்றி சினிமாவில் என்ன ஒவ்வொரு வீட்டுக்கு அறிவித்தும் ஒவ்வொரு சிகரட் பெட்டியில் அறிவித்தும் என்ன மாற்றம் ஏற்பட்டது....புகைப்பிடிப்போர் வீதம் அதிகரித்ததுதான் மிச்சம்....! இதே விளைவைத்தான் சமூகம் சினிமாவுக்குள்ளும் தேட சினிமாக்காரர்கள் அவர்களுக்கு தீனி போடுகிறார்கள்....! இப்போ சொல்லுங்கள் சினிமாக்காரன் தீனி போட யார் காரணம்...நீங்களா...அவர்களா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

சோஷல் என்றும் ராக்கிங் என்றும் நம்மவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவித்த பலர் இருப்பார்கள்...அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்...நாம் இந்த இரண்டையும் ஆரம்பம் முதலே எதிர்க்கின்றோம்...! அவை எம்மை அணுகவும் அனுமதிக்கவில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
இப்ப நாங்களும் தான் சொல்லுறம்.. சினிமா கலாச்சார சீரழிவுக்கு முற்று முழுதான காரணம் அல்ல ஆனால்.. மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. சிகரட் பற்றி சொல்லும் போது தான் இது நினைவுக்கு வந்திச்சு.. இந்த படங்களில வாற மாதிரி ஹீரோக்கள் சிகரட்டை ஸ்ரைல வாயில எறிற மாதிரி சின்னனுகளே எறிஞ்சு பாக்குதுகுள்.. பேனையை பென்சில.. நாளைக்கு இந்தப்பழக்கம் சிகரட்டாக மாறும்.

நம்மளப்பொறுத்த வரை.. கலை என்றது என்னத்துக்கு பயன்படுத்தப்பட்டது.. சமூகத்துக்கு நாலு கருத்தை சொல்லுறதுக்கு.. ஊடகமாய் பயன்படுத்தப்பட்டது. அதைக்கொண்டு நல்லதை நல்ல முறையில சொன்னால் அதனை வரவேற்கலாம். அது தான் சொல்கிறம். அப்படி வியாபார நோக்கத்துடன் ஆபாசத்துடன் வாற படங்களை.. ஏன் நிராகரிக்க கூடாது... சினிமா எடுக்கிறவைகள் கவர்ச்சியையும்.. ஆபாசத்தையும் போட்டால் தான் தயாரித்தவைக்கு லாபம் என்றால்.. ஆபாசங்கள் இன்றி வந்த படங்கள் வெற்றி பெறவில்லையா..?? இந்த ஆபாசங்களை ஆரம்பிச்சவர்கள் யார் இவர்கள் தானே..??

கருத்து வேறுபாடுகள் சமூகத்தில இருக்கிறது சகஜம் தான். ஏன் சினிமா அந்த கருத்து வேறுபாடுகளை நீக்கிறதுக்கு நல்ல ஒரு ஊடகமாக இருக்கக் கூடாது. சினிமா தான் மக்களை மிக இலகுவில சென்றடையக் கூடிய ஊடகம். மதம் சாதி. அது இது என்று சமூகத்தில இருக்கிற வேறு பாடுகளை கலையம்சங்களுடன் எடுத்து சொல்லலாம் தானே... கவர்ச்சி மூலம் தான் கருத்தைச்சொல்ல முடியும் என்றால்.. அதற்குப்பெயர் கலையா...???? வேறை நல்ல பெயர் ஒன்றை வைக்கலாமே..??

இப்போ உங்கள மாதிரி பகுத்தறிவாளர்களுக்கு புரிந்து கொள்ள முடியும் உடலுக்கு நலனுக்கு என்ன கூடாது என்ன நல்லது.. என்று நீங்கள் உங்களை வடிவாய் பாத்துக்கொள்ளுவியள் சரி.. ஆனால் ரசிகர் மன்றங்கள் வைத்து.. ரசிகர்களாய் அலைகிற பயித்தியங்கள் என்ன செய்யுங்கள்.. ஒரு புதிய படம் வந்திச்சுன்னா..?? அதில அந்க்ஹீரோ எப்படி புகைப்படிக்கிறார் எப்படி மதுக்குடிக்கிறார் என்று அவர்களும் அதனை பின்பற்ற வாய்ப்பிருக்கு இல்லையா..?? உதாரணத்திற்கு பாருங்க.. இப்ப நம்ம இலங்கையில.. அதுவும் யாழ்ப்பாணத்தில.. ரெட் குறூப்.. கில்லி குறூப்.. அந்த குறூப் இந்த குறூப் என்று திரியிறாங்களாம் அதுவும் அடி தடியாம்( ஆனால் அதற்கு முதல் இருந்திருக்கலாம். இப்படி பெரிய அளவில இருந்திச்சா.. இப்படி அடாவடித்தனத்துடன்) இவங்களே இப்படி திரியும் போது.. மற்றவர்கள் என்ன செய்வார்கள்.. இது கூட சினிமாவின் பாரிய தாக்கம் தான்.

இப்ப படங்களை தயாரிக்கிறவங்களுக்கு புரியனும். சினிமா எந்தளவு பங்கு வகிக்குது சமூக நடத்தைகளில என்று. அதனை பின்பற்றுற முட்டாள்களும் இருக்கிறார்கள் என்று புரியனும். அதன் படி படம் எடுக்கனும். அதைத்தான் சொல்லுறம் நாங்கள். எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்றால்.. ஏன் நாங்கள் முயலக்கூடாது நம்ம சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்கிற ஒரு சிறந்த கலையாய் மாத்திறதுக்கு என்று சொன்னம். மற்றப்படி சமூகத்தில நடக்கிற.. சீர் கேடுகளுக்கு சினிமா தான் முழுக்காரணம் என்று நாங்க சொல்லவில்லை.. அது சரி.. நாலு பாட்டு நாலு சண்டை.. நாலு காதல் காட்சி நாலு கொமடி.. அதில ஹீரோ ஹீரோயினிக்கிள்ள சண்டை இதோடையே முடியுதே மூன்று மணிநேரம் இதுக்க என்ன கருத்தைச்சொல்ல.. ???? ஆபாசத்திற்காகவே படம் பாக்கிற ரசிகர்கள் இருக்கும் போது அவர்கள் என்ன பண்ண.. :wink: Idea புலம்பெயர் சினிமா என்றாலும் இப்படி பட்ட கூத்துகுகளை செய்யமல் ஒழுங்கா வந்தால் சரி...! ..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
இன்னொரு விடயம் என்னவென்றால் நகைச்சுவைக்காட்சிகளில் தான் இது கூட இருந்தாலும் மற்றதுகளுக்கும் குறைவில்லை.. என்னவென்றால்

பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுறது.. பெரிய வயது போனவர்களை வாடா போட டேய்... அதெல்லாம் என்ன.. இவைகளும் பாவித்தால் தான் படம் ஓடுமா..?? அதுவும் கவுண்ட மணி செந்திலின் நகைச்சுவைக்காட்சிகளில்.. சுத்த மோசம்.. பெரியவர்களை மதிக்கிறது நமது தமிழ்பண்பாடு.. ஆனால் அதை எத்தனை சினிமாவில கொல்லுறாங்க..?? ஏன் இப்ப விவேக் வடிவேலு போன்றோர் கூட அப்படி தான் பேசுறாங்க.. இதெல்லாம். சின்னப்பிள்ளைகள்.. அப்படியே அதைப்பின்பற்ற கூடியவாறு தான் அமையும். ஏதோ ஒரு படத்தில பார்த்தீபன்.. மற்றும் விஜய் போன்றவர்கள் கூட தகப்பனை வாடா போட வா போ என்று பேசினதை பாக்க கூடிய மாதிரி இருந்தது...??? இதுக்கு என்ன சொல்லுறியள்.. காதலன் காதலி கணவன் மனைவி போன்றோர் வா போ வாடா போடா அது ஓகே.. ஆனால் பெரியவர்களை அழைப்பதை என்ன என்று சொல்வது.. இதன் மூலம் என்னத்தை சொல்ல முயுல்கிறார்கள் சமூகத்திற்கு.. பெரியோரை மதியாதை என்பதையா...???? Idea Idea :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
தமிழினி..உங்க ஆசை ஆர்வம் எமக்குப் புரியுது...ஆனா சினிமா ரசிகர்களுக்குப் புரியுதில்லையே...சினிமாக்காரங்கள் சொல்லுறாங்க...ரசிகர்களின் எதிர்பார்ப்பைத்தான் தாங்கள் நிறைவு செய்ய விரும்புவதாக...!
நாங்களும் சொல்லுறம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வில்லங்கத்தனமாக அமைவதால்தான் சினிமா வில்லங்கத்தனமாகப் படைக்க முயல்கிறது என்பதையே...!

இப்போ சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடாக தனது படைப்பை, கலைய வழங்காட்டி ரசிகர்கள் வேறு மார்க்கத்தைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்...கள்ளமா இதுகளை விட கேவலங்களைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்..! (புலிகள் 90 இல் சினிமாவைத் தடை செய்து பின்னர் அதை நீக்கியதை இங்கு உதாரணமாகக் கொண்டால்..இந்த உண்மை புரியும்...!) அது பின்னர் சமூகத்தில் இதைவிடக் கேவலமான சீரழிவை உண்டு பண்ணவும் முனையலாம்...!

சினிமா நல்லதையே காட்ட வேணும் அதுதான் எங்கள் எதிர்பார்ப்பும்...ஆனால் சினிமாவைப் புறக்கணிப்பத்தால் மட்டும் இது சாத்தியம் என்று எண்ணுவது தவறு...ரசிகர்களின் தேடல்கள்...தேவைகள் நல்லவையாக அமையும் போது...சினிமாவே நல்லதத்தைதான் வழங்க வேண்டி இருக்கும்...அப்படி இல்லை என்றால் சினிமா ரசிகர்களிடம் எடுபடாமல் போய்விடும்...இப்போ புலத்தமிழர்களின் படங்களைவிட தென்னிந்திய சினிமாதான் இன்னும் ஈழத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்துகிறது...புலத்தமிழர்களின் படைப்புக்கள் நல்ல காட்சிகளுடன் வருகின்ற போதும்...ஏன் ரசிகர்கள் அதையே நாடிப் போகவில்லை...ஏன் தென்னிந்திய சினிமாவையே தேடிப் போகின்றனர்...! காரணம் ரசிகர்களின் தேவையை எதிர்பார்ப்பை புலத்தமிழர்களின் படம் வழங்கவில்லை....தென்னிந்திய படம் வழங்குவதாகவே கொள்ள வேண்டி இருக்கிறது...! Idea

மற்றைய விடயம்...

பெரியவங்கள மதிக்கோணும் என்றீங்க...இப்ப பெரியவங்கள் சின்னவங்களை மதித்தால்தான் அவங்களுக்கு மதிப்புக் கிடைக்கும்...அதில என்னங்க தப்பிருக்கு...நீங்க சின்னவங்கள மதிக்காம எப்படி அவங்களிட்ட மதிப்பை எதிர்பார்க்க முடியும்...! ஒரு பிள்ளையை அன்பாக அழைத்து வாருங்கள்..அது வளர்ந்து எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் அன்பாகத்தான் அழைக்கும்...டேய் வாடா போடா என்றா...அது வளர்ந்து உங்களையும் டேய் வாடா போடா என்றுதான் சொல்லும்..இது கொடுத்து வாங்கிறது போல...!

சினிமாவில் சிகரட் அடிப்பதை பார்க்கிறீர்கள் சரி...ரசிகருக்கு சிகரட் கிடைப்பதை..கிடைக்க அவசியமானவற்றைத் தவிர்த்தால்....பார்க்கும் ரசிகர் சிகரட் அடிக்க முடியுமா...???! இல்லைத்தானே...! அதைச் செய்யுங்கள்...! அதுதான் அவசியம்...! சினிமாவிடம் அதைக்காட்டாதே என்று கெஞ்சுவதிலும் பார்க்க இதுவே பலன் மிக்கது...! இப்படித்தான் ஆடை விசயங்களும்...பெற்றோர் இல்ல பெரியவர்கள் சொல்லலாம்..இந்த ஆடை சினிமாக்குத்தான் சரி உனக்குச் சரியில்லை என்று...அல்லது அதை வாங்க தடை போடலாம்...நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைச் செய்யலாம்...!

இப்போ உலகில் சிகரட் விற்க... பிடிக்கத் தடை வந்தால் ரசிகர்கள் சினிமாவை பார்த்துச் சிகரட் அடிக்க முடியுமா....இல்லையல்லவா...காலப் போக்கில் சினிமாவும் அந்தக் காட்சிகளை கைவிட வேண்டி வரும்...காரணம் சமூகத்தில் அது வழக்கில் இல்லாத ஒன்றைக் காட்ட முனையாது...!

<b>எங்கள் வாதம் சினிமாவை சமூகம் தான் சீரழிக்கிறதே தவிர சமூகத்தைச் சினிமா சீரழிக்கிறது என்பது வேண்டாத குற்றச்சாட்டு....!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
வணக்கம்,

என்னோட பங்கிற்கு நானும் ஏதாவது சொல்லுவம், குருவிகள் மன்னிக்கணும் இங்கே எனது கருத்து உங்கள் கருத்தோடு முறன்பட்டு நிற்கின்றது.

நீங்கள் பார்க்கும் பார்வை தவறு. தண்ணீரில் ஒரு துளி விசத்தை கலந்தாலும் அருந்துபவருக்கு கேடானதே. அது போலவே நீங்கள் நல்ல படத்தில் ஒரு கெட்ட கருத்தை சொன்னால் அந்த கெட்ட கருத்தினை தான் பாமரன் எடுத்துக்கொள்வான். ஏனெனின் பல நல்ல கருத்துக்களில் அந்த கருத்தே தனித்து வேறு பட்டு நிற்பதனால். உங்கலுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

மகாபாரதம் இராமாயணம் போன்ற புராண கதைகளும் தமிழர்களுக்கு தவறிளைத்திருக்கின்றன என்று நான் சொன்னால், நீன்கள் என்னை தவறாக நினிக்க கூடும். இந்த புராண கதைகளிலும் கூட, பல தவறான உண்மைக்கு புறம்பான புனைகதைகள் உண்டு.

உதாரண்த்திற்கு.இராமயமணத்தில் இறவனன் என்னும் தமிழரசனுக்கு பத்து தலை என்றும், இந்த தமிழரசனை கொடுமைகாறனை போல சித்தரிக்கப்பட்டதும். வடநாட்டு அரசனான இராமனை நல்லவன் போல சித்தரித்தமையும், அந்த புனை கதை ஒரு வட நாட்டவராலேயே எழுதப்பட்டமயும். அதனை தமிழர்கள் தங்களின் காவியமாக கொண்டாடுவதும் துர்ப்பாக்கியமானது. அதனால்தான் சொல்கின்றோம் யாராக இருந்தாலும் ஒரு படைப்பினை சரியாக கொடுங்கள், எந்த திரிபுகளும் உள்செருகல்களும் இல்லாமல் சரியான முறையில் கொடுங்கள் என்று.

அடுத்து தணிக்கை துறையை பற்றியும் சொன்னீர்கள். தமிழ்திரையினர் எடுக்கும் குப்பய இவர்கள் தங்களுக்கு உட்படுத்துகின்றனர். தமிழ் விரோதப்போக்குடய சில தணிக்கை துறையினர் தமக்கு பிடிக்காத ஆரோக்கியமான கருத்துக்களை அகற்றி விட்டு தமிழ்பண்பாடுகளை சிதைக்கின்ற விடயங்களை மட்டுமே இவர்கள் வரவேற்கின்றார்கள். தமிழின் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் இவர்களுக்கு அக்கறை இல்லை, அப்படி இருந்திருக்குமானால், இவர்கள் தூய தமிழில் மட்டுமே தமிழ் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து இருக்கலாம். அதை விடுத்து இவர்கள் செய்வதுதான் என்ன? இளஞ்ஞர்கள் (போய்ஸ்) இருவர் போன்ற படங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டது. தணிக்கை துறையினர் பாகுபாட்டுடன் நடப்பதினால் சரியான கருத்துக்கள் சில வேளைகளில் சொல்ல படாமல் இருக்கலாமோ? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#50
அண்மைக்காலமாக தமிழ் இலக்கியங்களில் அரக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்ற கருத்து இங்கு முன்வைக்கப்படுகிறது...இவற்றை நீங்கள் எந்த ஆதாரத்துடன் முன்வைக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா...?! :?:

விதுரன்...இராமாயணத்தை ஒரு உதாரணத்துக்குத் தான் காட்டினோம்...அதைவிட தமிழ் காப்பியங்களிலும் இப்படி இருக்கு... உதாரணமாக மணிமேகலையில் மணிமேகலை மாதவியின் மகள்...மாதவி யார்..??! எப்படி எல்லாம் நாம் வாழக்கூடாது... எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லத்தானே அவற்றை உருவாக்கிக் இலக்கியப்படைப்புக்களாகத் தந்துள்ளார்கள்...! அது தவறா...??!

தவறென்பது...தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதை...தவறென்று தெரிவதை மீண்டும் செய்வதுதான் தவறு...! சினிமாவில் வாறது தவறென்றால் அதைச் சினிமாவோடு விடுங்களேன் அதையேன் சமூகத்துக்குள் எடுத்து வருகிறீர்கள்...! அதே தவறை ஏன் புதுப்பிக்க அல்லது மீண்டும் செய்ய முயல்கிறீர்கள்...!

உண்மையில் தவறைத் தவிர்க்க விரும்பினால்...சுட்டிக்காட்டப்படும் தவறை இனங்கண்டு...தவறைப் தவிருங்கள்..அதற்காக...சினிமாவை முழுதாகப் புறக்கணிக்கச் சொல்லவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...!

இல்லை... தவறு எங்கு எந்தளவில் வரினும் புறக்கணிக்கத்தான் வேண்டும் என்றால்... தமிழ் காப்பியங்களையும் தான் புறக்கணிக்க வேண்டும்....அதற்கு நாம் தயாரா....???! அப்போ எம் தமிழ் இலக்கியங்கள் தொன்றுதொட்டு எம்மைத் தவறாகத்தான் வழிநடத்தியது எங்கிறீர்களா..??! அப்போ அதன் வழி வந்த கலாசாரம் என்பது எம்மைத் தவறாகத்தான் வழிநடத்துகிறது எங்கிறீர்களா...????! இப்படியே சென்றால் வினாங்களே தொகுதிகளாக இறுதியில் மிஞ்சும்...!

கலாசாரச் சீரழிவுக்கு நாமும் எமது சிந்தனைகளும் அது சார்ந்தெழும் நடத்தைகளும் தான் காரணமே தவிர சினிமாவில் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை...! இது பரீட்சையில் பெயிலாகிவிட்டு உடனயே ஆசிரியரில் குறை சொல்வதற்கு ஒப்பானதாகவே தென்படுகிறது...!

வேண்டும் என்றால்...இப்படிச் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வோம்.. நாம் சமூகத்தை கலாசாரத்தைச் சீரழிக்க சினிமா எமக்குப் போடும் தீனியும் நாம் சினிமாவுக்குப் போடும் தீனியும் காரணம் என்று...அதை ஏற்றுக்கொள்ளலாம்...ஆனால் சினிமாவே தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...!

தேவையான அளவுக்கு எமது பக்கக் கருத்துத் தொடர்பில் விளக்கிவிட்டோம் என்று கருதுவதால் இத்தோடு எமது கருத்து முன்வைப்பை முடித்துக் கொள்கின்றோம்..! இவை தொடர்பில் யாராவது வினாக்கள்/ சந்தேகங்கள் தொடுத்தால் இயன்ற பதில் அளிப்போம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
கொஞ்சம் வேலையில இருந்திட்டன் மன்னிக்கனும்..
குருவிகள் உங்கள் கருத்துக்கள் சில வற்றை என்னால் மட்டு மல்ல எமது சமூகத்ததாலும் ஏற்றுக் கொல்ல முடியாது. மக்களுக்காகவே சினமா எடுக்கப்படுகிறது சினிமாவிற்காக மக்கள் அல்ல.. அவர்கள் காட்டுவதை பார்ப்பதற்க்கு நாமொன்றும் அரிவரி படிக்கும் பாலகர்கள் அல்ல. அவர்கள் எமது கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர் அவர்களை நாம் தட்டிக் கேட்கிறோம் அவ்வளவு தான்.. சினிமாவைப் பார்த்து புகைப்பிடிப்பவர்கள் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது...அதே போல ஆடை குறைப்புக்களை சினிமா குறைக்கும் வரை அவர்கள் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும் பல படங்களை இயக்கியவர்கள் தமது கருத்தில் இது பற்றிக் கேட்டால்.. இது இளைஞர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள் ஏன் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இவர்கள் ஆபாசப்படத்தை எடுக்கலாம்; தானே! சமூகத்தில் பல்வேறு பட்ட வயதுப்பிரிவினர் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் எடுக்க முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டியது தானே பின் எதற்க்கு இந்த கவர்ச்சி.... கவர்ச்சி காட்டித்தான் சினிமா வாழும் என்றால் அதற்க்கு அந்த கவர்ச்சியே வீழ்ச்சியில் ஊன்று கோலாகவும் இருக்கும் என்பதை தமிழக் சினமா காரார்கள் கவனிக்க வேண்டும்...பணத்திற்காக கை;ககுட்டையுடனும் படம் நடிக்க மும்பாய் பெண்கள் தயாராய் இருக்கின்றனர்..அதற்காய் இவர்கள் அப்படி படம் எடுக்க முடியுமா? சமூக வாழ்வியலோடு ஒன்றித்து அது பற்றி யதார்த்தங்களை படமாக்க வேண்டும். அதற்காய் பாடல் வேண்டாமென்றே அல்லது வேட்டியுடனும் சால்வையுடனும் அல்லது சாறியுடன் தான் படம் நடிக்க வேண்டும் என்று இல்லை.. ஆனால் இப்படியான படங்களும் ஒரு காலத்தில் வெற்றிப்படங்களானது என்பது உண்மை... சினிமா இப்போது மேற்க்குலக பார்வையுடன் எடுக்கப்படுகிறது.. அவர்கள் ஆபாசத்தை காட்டும் போது நாம் கவர்ச்சியை காட்டினால் என்ன தப்ப என்று இயக்குனர்கள்நினைக்க ஆரம்பித்து விட்டனர்.. இவர்கள் செந்தப்புத்தியில் தயாரித்த படங்கள் எல்லாம் நல்லாகவே இருந்தது... மக்களுக்காய் இவர்கள் மாறவேண்டுமே தவிர மக்கள் இவர்களுக்காய் மாறவேண்டிய அவசியமே தேவையோ இல்லை. மக்கள் பணத்திலே தான் அவர்கள் வாழ்கிறார்கள். மக்களின் உணர்வகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும்.. இல்லையேல் மற்ற வேலையை பார்த்து சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டும்...குருவிகள் சொல்ல வரும் கருத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் ஆனால்... நாங்கள் சினிமாவை பார்த்து வாழ்கையை அமைப்பவர்கள் அல்ல .. அப்படியான முட்டாள்களாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம்.. அவர்கள் நாங்கள் செய்வதை படம் எடுக்கும் காலம் ஒன்று இருந்தால்..... அவர்களுக்கு நன்றி சொல்லும் முதல் ஆள் நான் தான்..
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
எங்கள் சமூகத்தைப் பற்றி எமக்கு ஓரளவு தெரியும்...கல்லில் கொண்டு போய் காலை அடித்துவிட்டு கல்லடித்து விட்டது என்று கூச்சல் போடும் சமூகம் தான் எமது...! கணவன் இறந்துவிட்டதற்காய் பூவையும் பொட்டையும் கலைத்து பெண்ணை அமங்கலியாக்குவதாகச் சொல்லி அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வேதனைகளை கூட்டும் சமூகம் தான் எமது...! பெண் பூப்படைந்துவிட்டாள் என்பதை பரலோகம் எங்கும் அறிவித்து பரதேசி தேடும் சமூகம் தான் எமது...! தலைப்பிள்ளை ஆண் பிள்ளையாக வேண்டும் என்று கோயில்களில் சாமியாரிடத்தில் தவங்கிடக்கும் சமூகம் தான் எமது..! சொந்த மண்ணைவிட்டு தலைதெறிக்க ஓடி அங்கிருந்து பெருமை பேசும் சமூகம் தான் எமது...! உள்ள கழிவுகளை எல்லாம் உள்வாங்கிச் செய்துவிட்டு மற்றச் சமூகங்கள் மீது பழிபோடும் சமூகம் தான் எமது....! இப்படி எமது சமூகம் பற்றிய "சிறப்புகள்" பலவற்றை அடிக்கிக் கொண்டே போகலாம்..! எமது சமூகம் திருந்த நிறைய இருக்கிறது...சினிமா திருந்த முதல்...எனவே சினிமாவைப் பார்த்து திருந்து என்று கேட்கும் அருகதை எமக்கு உண்டா என்பதே இப்போ கேள்விக் குறிதான்...!

சினிமாவைத் தயாரிப்பவனுக்கும் தனது சிந்தனைகளை கருத்துக்களை பொதுவிதி ஒன்றுக்கூடாக வெளியிட சுதந்திரம் உண்டு...! மாறுபட்ட கலாசாரப் பின்னணிகளை வெளிவிட அவனுக்கு சுதந்திரம் உண்டு..! அதை நெறிப்படுத்தி வகைப்படுத்தத்தான் திரைப்படங்களைக் கண்காணிக்கும் தணிக்கைக் குழு இருக்கிறது..! அவர்கள் திரைப்படங்களுக்கு இன்ன படம் இன்ன மாதிரி என்று வகைப்படுத்தல் வழங்கி எச்சரிகைகளும் தரச் சான்றிதழ்களும் வழங்குகின்றனர்...!

வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் தென்னிந்திய திரைப்பட தணிக்கைக் குழுவுக்கு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்...அதில் நியாயம் இருந்தால் அதை நிச்சயம் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்...அல்லது ஏற்றுக்கொள்ள நிர்பந்தியுங்கள்...! இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுங்கள்...! அதுவும் திருப்தி தரவில்லை என்றால் ஈழத்தமிழர்களுக்காக படம் இறக்குபவர்கள் மூலம் ஒரு தணிக்கைக் குழுவை ஈழத்தமிழர்கள் கொண்டே நியமித்து படங்களை மீள் தணிக்கை செய்து வெளியிடுங்கள்..! இப்போ சிங்கப்பூர் செய்வது போல...! அதுவும் பிடிக்கவில்லை என்றால் சினிமா பார்ப்பதை அடியோடு தவிருங்கள்...உங்களை சினிமா பார்க்கச் சொல்லி யாரும் திணிப்பதில்லையே....! இவற்றை எல்லாம் விட்டுவிட்டு சினிமாவைப் புறக்கணிக்கச் சொல்லும் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கோ அதே அளவு சுதந்திரம் சினிமாவை பொதுவிதிகளுக்கு உட்பட்டு வெளியிடுவதற்கு அவனுக்கும் இருக்கிறது என்பதை உணரத்தவறாதீர்கள்...!

எது அவசியமோ அதைச் செய்யாமல் சும்மா சினிமா மீது குறை சொல்லி உங்களை மேலானவர்கள் போலக் காட்டிக் கொள்ள முனையாதீர்கள்...! நீங்கள் மேலானவர்களாகக் கூட இருந்தாலும் அது உங்களோடு இருக்கட்டும் அதற்கு விளம்பரம் அவசியமில்லை...! உங்களுக்கு உங்கள் சமூகத்தின் மீது கலாசாரத்தின் மீது உண்மையான அக்கறையிருந்தால் சினிமா தொடர்பில் மேலே சொன்ன ஏதாவது ஒன்றை அல்லது பலதையும் செய்ய முயலுங்கள்...! இன்றேல் மெளனமாக உங்களுக்கு சரியென்றதை உங்களளவில் கடைப்பிடித்து சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முயலுங்கள்...அதுவே சமூகம் திருந்தப் பேருதவியாக இருக்கும்...!

வெறும் ஏட்டில் எழுதுவதையோ இல்ல இப்படி வெறும் கூச்சல்கள் இட்டுவிட்டு ரகசியமாய் திரைப்படம் பார்ப்பதையோ செய்யாமல் ஏதாவது சாத்தியமானதைச் சொல்லுங்கள் செய்யுங்கள்...!காரணம்...சினிமா முதல் பல இலக்கியங்கள் வரை தோன்றமுதலாய்
2000 ஆண்டுகளுக்கு முதலே வாழ்வியலுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதல் தந்த திருக்குறளைப் படித்து அதன் வழி ஒழுக முடியாத ஒரு சமூகம்... இப்போ சினிமா மீது குற்றம் சுமத்துவது....தாகதது என்றே எமக்குத் தெரிகிறது...! இது எமது சொந்தப் பார்வை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
Quote:கணவன் இறந்துவிட்டதற்காய் பூவையும் பொட்டையும் கலைத்து பெண்ணை அமங்கலியாக்குவதாகச் சொல்லி அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வேதனைகளை கூட்டும் சமூகம் தான் எமது...! பெண் பூப்படைந்துவிட்டாள் என்பதை பரலோகம் எங்கும் அறிவித்து பரதேசி தேடும் சமூகம் தான் எமது...! தலைப்பிள்ளை ஆண் பிள்ளையாக வேண்டும் என்று கோயில்களில் சாமியாரிடத்தில் தவங்கிடக்கும் சமூகம் தான் எமது..! சொந்த மண்ணைவிட்டு தலைதெறிக்க ஓடி அங்கிருந்து பெருமை பேசும் சமூகம் தான் எமது...! உள்ள கழிவுகளை எல்லாம் உள்வாங்கிச் செய்துவிட்டு மற்றச் சமூகங்கள் மீது பழிபோடும் சமூகம் தான் எமது....! இப்படி எமது சமூகம் பற்றிய "சிறப்புகள்" பலவற்றை அடிக்கிக் கொண்டே போகலாம்..! எமது சமூகம் திருந்த நிறைய இருக்கிறது...சினிமா திருந்த முதல்...எனவே சினிமாவைப் பார்த்து திருந்து என்று கேட்கும் அருகதை எமக்கு உண்டா என்பதே இப்போ கேள்விக் குறிதான்...!

இந்தக்காலத்தில விதவைகள் வெள்ளைச்சாறி.. கட்டுறது குறைவு என்றதை கவனத்தில எடுஞ்கள்.. இந்த பிரச்சனை இன்னும் தமிழக்கதிதில தான் அதிகமாய் இருக்கிறது.. உண்மையை சொன்னால் இந்த வெள்ளைச்சாறி எதற்காக கட்டினார்கள் என்றால்.. அந்தப்பெண் விதவை.. என்பதை மற்றவர்களிற்கு சொல்லத்தான்.. காரணம்.. அவள் விதவை என்று தெரிந்து அவளை இன்னொரு ஆடவன்.. மணக்கலாம்.. அவ்லது.. அந்தப்பெண் மீதான தவறான பார்வைகளை விலக்கலாம் என்று.. அதனைப்பெண்கள்.. பெரிதும் விரும்பாததனால்... அது இப்ப குறைந்து கொண்டு வருகிறது..?? ஏன் சினிமா.. இப்படி பட்ட விடயங்களை நல்ல விதமாய்.. சகு}கத்திற்கு சொல்லக்கு}டாது..??

பெண் வயதடைந்த விடயத்தை நம்மாக்கள்.. நாலு பேருக்கு சொல்லிச்செய்தாங்க.. காரணம் என்ன..?? அந்தக்காலத்தில பெண்கள் வெளியில போறது குறைவு அதனால்.. அந்தப்பெண் வயதடைந்து திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதை சுற்றத்தாருக்கு தெரிவிப்பதற்காய்.. அதனை செய்தார்கள்.. ஆனால் இப்ப நிலைமை மாறிட்டுது.. பெண்கள் படிக்க வேலைக்கு அங்க இங்க என்று போறாங்க.. இப்ப அந்த முறைமைகளும்.. குடிய பாகம் அருகிக் கொண்டு வருகிறது.. ஆனால்.. தமிழகத்தில சில கிராமங்களில இன்னும் இந்த முறை.. முற்று முழுதாக.. அப்படியே இருக்கு.. அவர்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திற மாதிரி.. மக்களை இலகுவில சென்றடையக்கு}டிய ஊடகமான சினிமா ஏன் இதை சனத்திற்கு சொல்லக் கு}டாது.. இப்ப பாருங்க.. சேரனின் பாரதி கண்ணாம்மா படம். என்ன அருமையா.. சாதியை வைச்சு சொல்லியிருந்தார்.. ஒரு விழிப்புணர்வாய்.. எடுத்திருந்தார்.. எப்படி ஓடிச்சு.. இன்னும் பலபேர் அந்தப்படத்தை மறக்கலங்க.. இப்படி ஏன் சமு}கத்தில இருக்கிற... குறைகளை நிறைகளை படமாய் எடுக்க கு}டாது...???

இன்னொரு படம் மின்னலே படத்தில பொம்பே யெசிறி பாடிய வசிகரா பாட்டு அந்தப்பாட்டை தனியா கேளுங்க.. ஒரு காதலியோ..?? ஒரு மனைவியோ.. தன்ர துணைவனை காதலனைப்பற்றி.. வைத்திருக்கும்.. எதிர்பார்ப்பை எண்ணத்தை.. குசியில வாற பாடல் மாதிரி.. அசிங்கமாய்.. சொல்லாமல்.. அழகாய்.. மென்மையாய்.. சொல்லியிருக்கு... ஆனால் பாடல் காட்சிகளை.. பார்க்கும் போது.. அதில எப்படி சொல்லியிருந்தாங்க..?? நல்லாவா.. இருந்திச்சு.. ஒருக்கா அந்தபாடலைப்பாத்த.. மறுபடி பாக்கவே மாட்டாங்க.. அந்த நிலையில எடுத்திருக்கு..

Quote:உண்மையில் தவறைத் தவிர்க்க விரும்பினால்...சுட்டிக்காட்டப்படும் தவறை இனங்கண்டு...தவறைப் தவிருங்கள்..அதற்காக...சினிமாவை முழுதாகப் புறக்கணிக்கச் சொல்லவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...!
இப்ப நாங்க யாருமே.. சினிமாவை புறக்கணிக்கச்சொல்லி சொல்லவே இல்லை.. சகலரும் பாக்கக் கு}டிய மாதிரி.. கலையம்சத்துடன்.. சினிமாவை சினிமாவா.. ஏன் அவர்கள் தர முயற்சியாவது செய்யக்கு}டாது என்று கேக்கிறம்..

Quote:கலாசாரச் சீரழிவுக்கு நாமும் எமது சிந்தனைகளும் அது சார்ந்தெழும் நடத்தைகளும் தான் காரணமே தவிர சினிமாவில் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை...! இது பரீட்சையில் பெயிலாகிவிட்டு உடனயே ஆசிரியரில் குறை சொல்வதற்கு ஒப்பானதாகவே தென்படுகிறது...!
மேலையே நாங்க சொல்லியிருக்கம்.. சினிமா மட்டும் தான்.. கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று நாங்க கு}றவில்லை.. அது முக்கிய காரணியாய் இருக்கிறது என்று...?? இப்ப பாருங்க.. ஒரு விடயத்தை.. சும்மா வாயால சொல்லுறதை விட.. அதை செயல் முறையில.. செய்யும் போது எப்படி மற்றவர்களால் உடனை அதைப்புரிந்து கொள்ள முடிகிறது.. அப்படி தாங்க சினிமா..?? நாட்டுக்கு}த்து தெருக்கு}த்து.. வில்லுப்பாட்டு.. இப்படி என்று.. சமு}கத்திற்கு தகவலை சொல்லுறதுக்காக உருவாக்கப்பட்ட கலைகளின் வளர்ச்சியின்.. நிலையே சினிமா.. அதை சரியாய் பயன்படுத்தச்சொல்லிச்சொல்லுறம்.. நாடகங்கள் மு}லம்.. அபினயங்கள் மு}லம் சொல்லப்பட்ட கருத்தை கவர்ச்சியின் மு}லம் சொல்ல வேணும் என்று நினைத்தால்.. என்னவென்று சொல்வது..??? குறைந்த பட்சம் இவற்றைக்குறைக்கலாம் தானே..???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
Quote:மற்றைய விடயம்...

பெரியவங்கள மதிக்கோணும் என்றீங்க...இப்ப பெரியவங்கள் சின்னவங்களை மதித்தால்தான் அவங்களுக்கு மதிப்புக் கிடைக்கும்...அதில என்னங்க தப்பிருக்கு...நீங்க சின்னவங்கள மதிக்காம எப்படி அவங்களிட்ட மதிப்பை எதிர்பார்க்க முடியும்...! ஒரு பிள்ளையை அன்பாக அழைத்து வாருங்கள்..அது வளர்ந்து எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் அன்பாகத்தான் அழைக்கும்...டேய் வாடா போடா என்றா...அது வளர்ந்து உங்களையும் டேய் வாடா போடா என்றுதான் சொல்லும்..இது கொடுத்து வாங்கிறது போல...!
ஆக நீங்கள் பேசவேணும் என்றதுக்காக தான் பேசுறீங்க என்று இதில இருந்து புலனாகிறது.. என்ன என்ன.. அவர்கள் பெரியவர்கள் மதிச்சால் தான் அவர்களை மதிக்க வேணுமா..???? திருக்குறளை..?? பின்பற்றினால்.. எந்தப்பிரச்சனையும் இல்லை என்றீங்களே..?? அந்த திருக்குறளில.. இதுபற்றி இப்படியா..?? சொல்லியிருக்கு மதித்தால் மதி பெரியவர்களை.. என்று.. ?? நல்லாய் போகுதுங்க உங்க கதை.. உங்களோட எல்லாம் கதைச்சு என்ன பிரியோசனம்.. இதுபற்றி.. :wink:

இன்னொரு விடயம்.. பாடல் காட்சிகளிற்கு ஆடப்படுகின்ற.. நடனம்.. அதில என்னங்க பண்ணுறாங்க.. கையை காலை கண்டபடி இழுக்கிறாங்க.. காக்கா வலி வந்த மாதிரி.. இழுக்கிறாங்க..?? கேட்டால் வெஸ்டென்.. என்கிறாங்க.. வெள்ளைக்கார படங்களை பாருங்கு எத்தனை படத்தில.. இப்படி பாட்டிருக்கு... அவங்க ஆடுற நடனம் இப்படியா இருக்கு.. என்ன அருமையா.. சோடி போட்டு ஆடுவாங்க.. சடனம்.. கருத்தைச்சொல்லுது என்றால்.. அந்த அசைவுகளின் மு}லம் என்ன கருத்தை உங்களுக்கு சொல்லுது..?? ஒன்றில்.. நல்ல புரியக்கு}டிய அசைவுகள்.. பாவனைகளை பயன்படுத்தி.. நல்ல அபிநயங்களை பயன்படுத்தி சொல்லனும்.. இல்லாட்டால் இருக்கு பரத நாட்டியம்.. அதன் மு}லம் ஏதாவது சொல்ல முயற்சிக்கிறது.. அவங்கட கலையையும் சரியா பாவிக்கிறதில்லை.. நம்ம கலையையும் சரியா பாவிக்கிறதில்லை.. இடையில நின்று.. தமக்கு.. ஏற்றாற் போல ஏதே ஏதோ செய்யுறாங்க.. கலைகளின் பிறப்பிடம் பாரதம் என்றால்.. அதன் அழிவிடமும் பாரதம் தான்.. அப்படி என்கிற.. ஒரு நிலை மெல்ல அரங்கேறிக்கொண்டிருக்க.. ???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
தமிழினி...

கணவனை இழந்த பெண் வெள்ளைப் புடவை கட்ட விரும்புவதும் பூ வைக்க விரும்புவதும் பொட்டு வைக்க விரும்பிறதும் இல்ல அவற்றைச் செய்யாமல் விடுவதும் அந்தப் பெண்ணின் விருப்புக்குரியதே அன்றி...சமூகத்திற்காக அவள் அதைச் செய்யத் தேவையில்லை என்றே சொல்கின்றோம்...! கலாசாரம் என்ற போர்வைக்குள் அது அவசியமில்லை என்றே சொல்கிறோம்..!

பெண்கள் வீட்டுக்குள் இருந்தது மனிதப் பரினாம வளர்ச்சியல் ஒரு கட்டத்தில் அனைத்துச் சமூகத்திலும்தான் நடந்தது...! அங்கெல்லாம் பூப்புனித நீராட்டு விழா நடத்தி பெண்ணை விளம்பரம் செய்து விநியோகித்தார்களா...விநியோகிக்கிறார்களா...! ஏன் இன்றும் நம் சமூகத்தில் பல லட்சங்கள் செலவு செய்தும் பூப்புனித நீராட்டு விழாக்கள் நடப்பதையும்...அவற்றை ஒளி ஒலிப்பதிவு செய்து விநியோகிப்பதும் நடக்கவில்லையோ...???! உள்ளதை உள்ள படி சொல்லுங்கள்...!

சேரனுக்குத் தோன்றிய கருத்தின் பிரகாரம்...கதையில் வரும் சமூகக் கலாசாரம் சார்பாக அவர் கிராமிய நடையில் காட்சிகள் அமைத்திருக்கலாம்..இப்போ கதையில் ஒரு கிளப் டான்ஸ் வைக்கும் போது வேட்டி உடுத்தி ஒருவரை ஆட வைக்க முடியுமா...கிளப் டான்ஸ் என்ற மேற்கத்தேய நாகரிகம் இன்று மூலை முடுக்கெல்லாம் முளைவிட்ட நிலையில் அது சினிமாவுக்குள் கதை சார்ந்து வரும் போது அதைக் காட்டித்தான் ஆக வேண்டும்...அதற்காக கிளப் டான்ஸை சினிமாதான் சமூகத்துக்கு அறிமுகம் செய்கிறது என்பதல்ல பொருள்...!

இன்னும் ஒரு உதாரணம்...காதலர் தினம் என்பது என்பதும் மேற்கில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டாலும் இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் அது பட்டிதொட்டி எங்கும் வந்தது... இணையத்தில் சற் என்பது கூட இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் வந்தது..இவை அனைத்தும் சமூகத்துள் ஆதிக்கம் செய்த பின் தான் சினிமாவுக்குள் வந்தது...இவற்றைச் சினிமாதான் தந்ததென்றால்...உங்களை என்னென்பது...!

சினிமா பெரிதும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறதே தவிர...சமூகத்தில் இல்லாததை அவர்கள் சொல்லவில்லை என்றே சொல்லலாம்..சினிமா சீரழிவைக் காட்டுகிறது என்றால் அந்தளவுக்கு சமூகம் சீரழிந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம்...! நீங்கள் அதை மறைக்க நினைத்தாலும் நாம் மறைக்கத் தயார் இல்லை...! உங்கள் குற்றம் குறைகளை சினிமா மீது சுமத்துவதில் பயனில்லை...நீங்கள் (சமூகம்) தான் எப்படி அதை உள்வாங்கியதோ அதேபோல் அவற்றைக் களைய முற்பட வேண்டும்...அப்போ சினிமாவும் அதைத் தவிர்த்துக் கொள்ளும்...! இவற்றைச் சினிமாவில் தவிர்க்கச் சொல்லி சமூகத்தில் அவற்றைத் தொடர்வதால் சமூகச் சீரழிவுக்கு இம்மியளவும் பாத்திப்பு நிகழாது...நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் நிகழாது...!

சினிமா சிறுவர்களுக்குள் தாக்கம் ஏற்படுத்துவதாகச் சொன்னால்..நாமும் தான் சிறுவர்களாக இருந்த போது இதே கவுண்டமணி செந்தில் வடிவேல் நகைச்சுவைகள் கண்டுதான் வந்தோம்..அதற்காக அதைப் போல செய்ய முற்பட்டோமா...நகைச் சுவையை நகைச்சுவையாகக் கண்டோமே தவிர சமூகத்துக்குள் காவ முனையவில்லை...! ஏன் அதே போல் மற்றவர்களும் செய்ய முடியாது...குறிப்பாக ஜோதிகா அப்படி உடுத்துறாங்க என்பதற்காக நீங்கள் ஏன் உடுத்த முனையுறீங்க...உங்களுக்கென்று ஒரு குடும்ப வழக்கம் இல்லையா இருக்கும் தானே அதைத் தொடர வேண்டியதுதானே...! இப்போ சிநேகா தண்ணி அடிச்சா நீங்களும் அடிப்பீங்களா....இல்லைத்தானே...ஆம் என்று சொன்னால் அது உங்கள் சிந்தனைப் பலவீனமே அன்றி சினிமாவினதல்ல...! அதற்காக சமூகத்தில் தண்ணி அடிக்கும் பெண்கள் இல்லை என்றால்...அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது...! பெண்கள் புகைப்பிடிப்பதில்ல என்றுதான் ஊரில் சொல்வார்கள்...அதே ஊரில் பெண்கள் சுருட்டடிப்பதை நாமே கண்டிருக்கின்றோம்...படித்த பணக்காரப் பெண்மணிகள் கூட சுங்கான் என்று ஒன்று வைத்து புகைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறோம்...அதை அவர்களுக்கு சினிமாவா கற்றுக் கொடுத்தது...??! ஆனால் சினிமா அதைக் கண்டு தானும் உள்வாங்கிக் காட்ட முனைந்திருக்கலாம்...அது அதன் தவறல்ல...! அதை நன்மையாக்கிக் கொள்வதும் தீமையாக்கிக் கொள்வதும் ரசிகனைப் பொறுத்ததே அன்றி...சினிமாவினதல்ல..!

பெரியவர்களை மரியாதை செய்வது என்பது..ஒரு முக்கிய விடயம்...அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை...ஆனால் சிறுவர்களாக நாங்கள் இருந்த போது எங்கள் சிந்தனையில் எழுந்ததையே இப்போ இங்கே தருகின்றோம்...பெரியவர்கள் சில பேர் எங்களை சிறுவர்கள் என்று ஒரு மட்டமாகக் கருதி அவமதிப்பது போல பேசிய வேளைகளில் கூட.. தாங்கள் பெரியவர்கள் என்ற தோறணையில் எங்களிடம் மரியாதையை எதிர்பார்த்தனர்...அது தவறு என்று அப்போ அவர்களுக்குச் சொல்லக் கூட முடியாத நிலையில் எங்கள் கருத்தை வெளியிட முடியாத நிலையில் நாம் இருந்திருக்கின்றோம்...! உண்மையில் அப்படியான பெரியவர்களுக்கு மரியாதை செய்யத்தான் வேண்டுமா...என்பது இன்று கூட எமக்குள் ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது...! உருவத்தில் பெரியவர் அல்லது வயதால் பெரியவர் என்பதற்காக ஒருவருக்கு மரியாதை அளிப்பதிலும் பண்பால் குணத்தால் அன்பால் பெரியவராக உள்ள ஒருவருக்கு மரியாதை அளிப்பதே சிறந்தது...அதையே சிறுவர்களாக நாம் இருந்த போதும் எதிர்பார்த்தோம்...இன்றைய சிறுவர்களும் அதையேதான் எதிர்பார்க்கின்றனர் என்பதை மாரியாதை விரும்பும் பெரியவர்கள்...தமிழினி..உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
Quote:தமிழினி..உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...!

குருவிகள். யாருடனும்.. நாம் பழகிற.. விதத்தில பழகினால் நமக்கு மரியாதை வரும் என்கிறது... சரி.. ஆனால்.. கவுண்டமணி செந்தில் போன்றவர்களின் நகைச்சுகைக்காட்டியில பாருங்க.. தங்களை மதிக்கினம் மதிக்கவில்லை என்ற கதையில்லை.. யாரையுமே மரியாதையில்லாமல் தான் பேசுவார்கள்... ,இப்போ உஙக்ளுக்கு ஒன்று தெரியுமா..?? நீங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருக்கும் போது.. உங்களுக்கு சினிமா பார்க்கிற வசதி.. பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை..சினிமாவில வாற வசனங்கள் காட்சிகள் உங்களினுள் தாக்கம் ஏற்படுத்த வசதியில்லை.. ஆரம்பத்தில இருந்தே நல்ல வார்த்தைகளை பேசி.. மரியாதை அப்படி இப்படி என்று தெரிந்திருப்பீர்கள்.. (உண்மையை சொன்னால்.. 10 வயது மட்டும் எkக்கு சினிமா என்றால் என்ன என்றே தெரியாது.. எப்பவாவது.. இருந்திட்டு.. கோவில் திருவிழாக்களில் படம் போடுவார்கள் அதுவும் பக்திப்படம்.. அதுவும் இரவில போடுவாங்க பாதிப்படத்தில நாங்க நித்திரையாய் போடுவம் ) ஆனால் இன்றைக்கு இருக்கிற பிள்ளைகள்.. கு}டிய நேரம் சினிமாவை தான் பாக்கிறார்கள்.. சில பிள்ளைகள் பேசத்தொடங்கும் முன்னமே சினிமாவில ஊன்றி போய்விடுவார்கள் அவர்கள் பேசக்கற்றுக்கொள்ளும் போது.. அந்தப்பிள்ளை.. மரியாதை குறைவாய் பேசினதால் கு}ட அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் குழந்தை பேசுது என்ற மகிழ்வில். இதுவே அந்தபிள்ளை வளர்ந்த உடன் அப்படியே பேச வெளிக்கிடுகிறது... சோ நீங்கள் வளர்ந்த சு}ழ்நிலையிலையோ.. நாங்கள் வளர்ந்த சு}ழ்நிலையிலோ இன்றைய குழந்தைகள் இல்லை.. நகைச்சுவை பாடல் காட்சிகளைத்தான் பிள்ளைகள்.. தெரிதும் விரும்பிப்பாக்கிறாங் க.. அப்ப அவைகள்.. இப்படியிருந்தால் வளர்கிற சமு}கத்தில் இந்த தாக்கம் ஊடுருவுமா இல்லையா..?? இன்றைய குழந்தைகளின் மனநிலையை தான் பெரியவர்களை மரியாதை எல்லாமல் பேசி எடுத்துக்காட்டுகிறார்களா..???அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்களா..???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
Quote:இன்னும் ஒரு உதாரணம்...காதலர் தினம் என்பது என்பதும் மேற்கில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டாலும் இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் அது பட்டிதொட்டி எங்கும் வந்தது... இணையத்தில் சற் என்பது கூட இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் வந்தது..இவை அனைத்தும் சமூகத்துள் ஆதிக்கம் செய்த பின் தான் சினிமாவுக்குள் வந்தது...இவற்றைச் சினிமாதான் தந்ததென்றால்...உங்களை என்னென்பது...!
இப்ப பாருங்க.. இலங்கையில இருக்கிற அல்லது இந்தியாவில இருக்கிற எத்தனை பேர் இணையம் பாவிக்கிறார்கள்..??? எல்லோரும் பாவிக்கிறார்களா..??? இல்லையே.. ஆனால் பலபேருக்கு.. காதலர் தினம் பற்றி தெரியும்.. எப்படி சினிமாவில கு}டிய பேர் பாக்கிறாங்க.. மற்றவங்களுக்கு சொல்லுறாங்க.. அப்படி அந்த செய்தி பரவுது.. இணையம் என்பது.. இப்ப தாங்க நம்ம நாட்டில வsர்ந்து வருது.. நீங்கள் கிளிநொச்சியில வன்னியில இருந்திருக்கிறீங்களா..?? அங்க காதலர் தினம் எத்தனை பேர் கொண்டாடுறாங்க..??? கொழும்பில எத்தனை பேர் கொண்டாடுறாங்க..?? இப்ப யாழ்பாணத்திலையும் கன பேர் கொண்டாடலாம்..?? சினிமா என்கிறது.. ஒரு பெரியி விரிந்த ஊடகம்.. அதை நல்ல முறையில மக்களை வழி நடத்திற விதமாய் பாவிக்க சொல்லித்தான் நாங்கள் சொல்லுறமே தவிர.. அதை நிப்பாட்டச்சொல்லி சொல்லவில்லையே..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#58
தமிழினி...சில பெரியவர்களுக்கு தங்களை சிறுவர்கள் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கே ஒழிய தாங்களும் சிறுவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது...! பாடசாலைகளிலேயே சில ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தாம் மதிக்க வேண்டும் என்பது தெரியாது..! மாணவன் ஆசிரியர் மீது மரியாதை பண்பு ஒழுக்கத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாடசாலை ஆசிரியர் சமூகம் தாம் அதற்குப் பிரதியீடாக மாணவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருப்பதில்லை...ஆனால் மாணவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள்...!

நாமே சில ஆசிரியர்கள் பாடம் எடுத்துவிட்டுச் சென்றவுடன்...அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருக்கின்றோம்.. பாடம் படிக்காமல் அல்ல...அவர்களின் நடத்தைகள் கண்டு....!

மீண்டும் சினிமாவுக்குள் வந்தால் சினிமாவை ஒரு ஊடகம் என்று கருதினாலும் கூட அது எத்தகைய ஊடகம் என்பது தெளிவில்லாதது...காரணம் சினிமா பெரிதும் பொழுதுபோக்கம்சங்களைத் தாக்கி வருகின்ற ஒரு வர்த்தக ஊடகம்...!

இப்போ பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலே...தினசரிப்பத்திரிகைகளுக்கும் ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளுக்கும் இடையே வேறுபாடு உண்டு...! அதேபோல்தான் தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் இடையே வேறுபாடு உண்டு...! சினிமா தூய்மையான செய்திகளை சமூகத்துக்குக் காவி வரும் ஒரு ஊடகம் என்று வரையறுக்க முடியாது..அப்படிச் சொல்வதும் தவறு...! இப்போ ரஜனி காந் கூரைகள் விட்டு கூரைகள் தாவி சண்டை பிடிப்பதை ஒரு செய்தியாகக் கொண்டு யாராவது செய்ய முயல முடியுமா...??! இல்லைத்தானே...ஆனால் சினிமா சமூகத்தில் நிகழும் நிஜங்களையும் பிரதிபலிப்பதாக இருப்பதால் அது ஒரு பகுதிநிலை ஊடகம் எனலாமே அன்றி தூய மக்கள் ஊடகம் அல்ல....!

அது சமூகத்தில் நிகழும் சீரழிவுகளைக் காட்டி இதை செய்யாதே எனும் போது...சமூகம் அந்தச் சீரழிவுகளைத் தொடர்வது பற்றியே சிந்திக்கிறது...!

இப்போ காதலர் தினம் மற்றும் இணையம் பற்றி எமக்குச் சினிமா சொல்லித் தருவதற்கு முதலே சமூகத்தில் வியாபார நிலையங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகள்...பத்திரிகைகள்..சஞ்சிகைகள்...பாடசாலைக் குறிப்புக்கள் என்று பலதும் கற்றுத்தந்த பின் தான் சினிமா சொன்னது...இது பற்றி...! சினிமாக்காரன் புதிய உலகப் பிரஜை அல்ல...அவனும் எம்மோடுதான் வாழ்கிறான்...அவனுக்குள்ளும் சமூகத்தாக்கங்கள் இருக்க வாய்ப்புண்டு...அவற்றைப் பிரதிபலிப்பனவாகத்தான் அநேகம் சினிமாக்கள் படைக்கப்படுகின்றன...!

நாங்கள் சொல்லக் கூடியது இதுதான் சினிமா சமூகத்தில் உண்டு பண்ணும் தாக்கம் என்பது சமூகத்தில் எங்கேயோ நடக்கும் சமூகச் சீரழிவென்றை எல்லோருக்கும் அறியத்தருவதும்....அது துரிதமாக தாழ் நிலை சிந்தனை கொண்டவர்களை சென்றடைய உதவுவதும் தான்....! அதனால் சமூகச் சீரழிவு என்பது கொஞ்சம் விரைபு படுத்தப்படலாமே அன்றி அதுதான் சமூகத்தைச் சீரழிக்கிறது என்று கூறமுடியாது..சினிமா இல்லாவிட்டாலும் சமூகச் சீரழிவு நிகழத்தான் செய்யும்..என்ன வேகம் குறைவாக இருக்கலாம்...அதற்கு முக்கிய காரணம் சினிமாவைவிட சமூகத்தில் உள்ள தாழ்நிலை சிந்தனை உள்ள மனிதர்களே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
என்ன இதை வைத்தே ஒரு மெகாசீரியல் தயாரிக்கலாம் போலை இருக்கு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#60
Quote:என்ன இதை வைத்தே ஒரு மெகாசீரியல் தயாரிக்கலாம் போலை இருக்கு.....
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)