01-10-2005, 07:41 AM
பந்து இப்போது எங்களின் கைகளில். புரியவில்லையா? தமிழ்ச் சினிமாவின் போக்கைத் தீர்மானிக்கும் சக்திகளாக தற்போது ஈழத் தமிழர்களாகிய நாமும் இருக்கிறோம். அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது கவனித்த முக்கிய பதிவிது. தமிழகத்தில் தோன்றியுள்ள சில அக புற காரணிகளின் விளைவாய் இந்நிலை தோன்றியிருக்கிறது.
குறுவட்டுக்களின் (ஏஊனுஇ னுஏனு) வருகைää சின்னத்திரைகளின் ஆக்கிரமிப்பு பணம் விழுங்கிகளாக மாறியுள்ள நடிகர்கள்ää அரசியல்வாதிகளின் தலையீடு எல்லாம் தமிழ்ச் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கிறது. திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும்ää உணவு விடுதிகளாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றன. எஞ்சியுள்ள திரையரங்குகளில் ~தோழி| சகிலா சிரித்தபடி வரவேற்கிறார். இருந்தும் திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றனவே...எப்படி?
ஈழத்தமிழர்களை மையப்படுத்தி சர்வதேச சந்தையொன்றை தமிழ்ச் சினிமா உலகம் திறந்திருக்கிறது. நாடு நாடாகப் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் மூலம் தமது உற்பத்திச் செலவின் பாதியை சரிக்கட்டி விடுகிறார்கள். ஒலிää ஒளி குறுவட்டுக்கள் எனத் தனித்தனியாக உரிமங்கள் விற்கப்படுகின்றன.
ஈழத்தமிழர் வாழ்விலும் பிரிக்கமுடியாக ஒரு அங்கமாக மாறிவிட்ட தமிழ்ச் சினிமாவை சரியான முறையில் வழிநடாத்த கடமைப்பட்டுள்ளோம். தமிழ்ச் சினிமா உலகில் ஒரு மாற்றுச் சினிமாவின் தேவை உருவாகி நீண்ட நாட்களாகிவிட்டது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் சினிமா நிறுவனங்களிடையே தமிழ்ச் சினிமா உரிமைகள் வேண்டுவது தொடர்பாக நிலவும் கடும்போட்டியை தமிழக சினிமா உலகம் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
நாம் விழித்துக்கொள்வோமானால் தமிழ்ச் சினிமாவை சரியான முறையில் வழி நடாத்திய பெருமை எமக்கு வந்துசேரும். அதற்கு முதலில் ஈழத்தமிழ் நிறுவனங்கள் தம்மிடையே நிலவும் போட்டிகளைக் களைந்து நட்புறவு ரீதியில் இணையவேண்டும்.
தமிழ்ச் சமூகத்தில் கலைää கலாச்சாரம்ää பண்பாடுää வாழ்வியல் சார்ந்த தரவான திரைப்படங்களைத் தரச்சொல்லி அழுத்தம் கொடுக்கவேண்டும். ஈழத் தமிழர் வாழ்வியலைப் பேசும் திரைப்படங்களைத் தரச்சொல்லியும் அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கச்சொல்லி வற்புறுத்தவேண்டும்.
தற்போதுள்ள சூழலில் தமிழக சினிமா உலகம் இதைப் புறக்கணிக்க முடியாது. மறுத்தால் நாம் தமிழக சினிமாவை பார்ப்பதை நிறுத்துவோம்-புறக்கணிப்போம். எம்மால் முடியும். எமக்குத் தேவை எமக்கான சினிமா. அதைத் தரமுடியாத சினிமா எமக்குத் தேவையில்லை. ஈழத்தமிழ் சினிமா நிறுவனங்களும்ää மக்களும் மனது வைத்தால் இதை சாத்தியமாக்கமுடியும்.
முழுமையான செயற்பாட்டிற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆகையால் முதற்கட்டமாக தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டச்சொல்லி வற்புறுத்தலாம். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் தலைமையில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இந்தக் கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி வருகிறது. அவருக்கு நாம் தோள்கொடுப்போம்.
தமிழர் பாதுகாப்பு இயக்கம் கொடுத்த அறிவிப்பையும் மீறி நடிகர் கமல் தனது திரைப்படத்திற்கு ~மும்பை எஸ்பிரஸ்| என ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ளார். நாமேன் இந்தத் திரைப்படத்தைப் புறக்கணிக்கக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட புலம்பெயர் நாடுகளிலுள்ள ஈழத் தமிழ்ச் சினிமா நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளுமா? ஈழத்தமிழ்ச் சினிமா ரசிகர்கள் விழித்துக்கொள்வார்களா?
சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணமிது.
நன்றி: ஈழமுரசு
--------------------------------------------------------------------------------

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->