Yarl Forum
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி) (/showthread.php?tid=5857)

Pages: 1 2 3 4 5


தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி) - Mathuran - 01-10-2005

பந்து இப்போது எங்களின் கைகளில். புரியவில்லையா? தமிழ்ச் சினிமாவின் போக்கைத் தீர்மானிக்கும் சக்திகளாக தற்போது ஈழத் தமிழர்களாகிய நாமும் இருக்கிறோம். அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது கவனித்த முக்கிய பதிவிது. தமிழகத்தில் தோன்றியுள்ள சில அக புற காரணிகளின் விளைவாய் இந்நிலை தோன்றியிருக்கிறது.

குறுவட்டுக்களின் (ஏஊனுஇ னுஏனு) வருகைää சின்னத்திரைகளின் ஆக்கிரமிப்பு பணம் விழுங்கிகளாக மாறியுள்ள நடிகர்கள்ää அரசியல்வாதிகளின் தலையீடு எல்லாம் தமிழ்ச் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கிறது. திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும்ää உணவு விடுதிகளாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றன. எஞ்சியுள்ள திரையரங்குகளில் ~தோழி| சகிலா சிரித்தபடி வரவேற்கிறார். இருந்தும் திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றனவே...எப்படி?

ஈழத்தமிழர்களை மையப்படுத்தி சர்வதேச சந்தையொன்றை தமிழ்ச் சினிமா உலகம் திறந்திருக்கிறது. நாடு நாடாகப் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் மூலம் தமது உற்பத்திச் செலவின் பாதியை சரிக்கட்டி விடுகிறார்கள். ஒலிää ஒளி குறுவட்டுக்கள் எனத் தனித்தனியாக உரிமங்கள் விற்கப்படுகின்றன.

ஈழத்தமிழர் வாழ்விலும் பிரிக்கமுடியாக ஒரு அங்கமாக மாறிவிட்ட தமிழ்ச் சினிமாவை சரியான முறையில் வழிநடாத்த கடமைப்பட்டுள்ளோம். தமிழ்ச் சினிமா உலகில் ஒரு மாற்றுச் சினிமாவின் தேவை உருவாகி நீண்ட நாட்களாகிவிட்டது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் சினிமா நிறுவனங்களிடையே தமிழ்ச் சினிமா உரிமைகள் வேண்டுவது தொடர்பாக நிலவும் கடும்போட்டியை தமிழக சினிமா உலகம் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

நாம் விழித்துக்கொள்வோமானால் தமிழ்ச் சினிமாவை சரியான முறையில் வழி நடாத்திய பெருமை எமக்கு வந்துசேரும். அதற்கு முதலில் ஈழத்தமிழ் நிறுவனங்கள் தம்மிடையே நிலவும் போட்டிகளைக் களைந்து நட்புறவு ரீதியில் இணையவேண்டும்.
தமிழ்ச் சமூகத்தில் கலைää கலாச்சாரம்ää பண்பாடுää வாழ்வியல் சார்ந்த தரவான திரைப்படங்களைத் தரச்சொல்லி அழுத்தம் கொடுக்கவேண்டும். ஈழத் தமிழர் வாழ்வியலைப் பேசும் திரைப்படங்களைத் தரச்சொல்லியும் அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கச்சொல்லி வற்புறுத்தவேண்டும்.

தற்போதுள்ள சூழலில் தமிழக சினிமா உலகம் இதைப் புறக்கணிக்க முடியாது. மறுத்தால் நாம் தமிழக சினிமாவை பார்ப்பதை நிறுத்துவோம்-புறக்கணிப்போம். எம்மால் முடியும். எமக்குத் தேவை எமக்கான சினிமா. அதைத் தரமுடியாத சினிமா எமக்குத் தேவையில்லை. ஈழத்தமிழ் சினிமா நிறுவனங்களும்ää மக்களும் மனது வைத்தால் இதை சாத்தியமாக்கமுடியும்.

முழுமையான செயற்பாட்டிற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆகையால் முதற்கட்டமாக தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டச்சொல்லி வற்புறுத்தலாம். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் தலைமையில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இந்தக் கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி வருகிறது. அவருக்கு நாம் தோள்கொடுப்போம்.

தமிழர் பாதுகாப்பு இயக்கம் கொடுத்த அறிவிப்பையும் மீறி நடிகர் கமல் தனது திரைப்படத்திற்கு ~மும்பை எஸ்பிரஸ்| என ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ளார். நாமேன் இந்தத் திரைப்படத்தைப் புறக்கணிக்கக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட புலம்பெயர் நாடுகளிலுள்ள ஈழத் தமிழ்ச் சினிமா நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளுமா? ஈழத்தமிழ்ச் சினிமா ரசிகர்கள் விழித்துக்கொள்வார்களா?

சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணமிது.


நன்றி: ஈழமுரசு





--------------------------------------------------------------------------------


- tamilini - 01-10-2005

இது நல்ல விடயம் தான்.. ரசிகப்பெருமக்கள் நினைத்தால் சாதிக்கலாம். அட இன்னொன்றைக்கவனிங்க. கதாநாயகிகளின் ஆடைகளையும் தான்.. படம் பாக்க முடியல.. :wink: :oops: :evil:


- வெண்ணிலா - 01-10-2005

tamilini Wrote:இது நல்ல விடயம் தான்.. ரசிகப்பெருமக்கள் நினைத்தால் சாதிக்கலாம். அட இன்னொன்றைக்கவனிங்க. கதாநாயகிகளின் ஆடைகளையும் தான்.. படம் பாக்க முடியல.. :wink: :oops: :evil:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-10-2005

திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...தென்னிந்தியச் சினிமா...தென்னிந்திய சார்ப்பு நடமுறைக் கலாசாரம் சார்ந்தே பெரிதும் எழுகிறது....தமிழக பல கோடி மக்களில் ஒரு வீதம் சினிமா பார்த்தாலே போதும் ஈழத்தமிழர் பார்க்கைத் தேவையில்லை...அப்படியும் நோக்கலாம் பாருங்கோ...! அதுமட்டுமன்றி அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை ஒட்டிப் படம் எடுக்கும் போது அவர்களின் சமூக நடமுறைகளை பாதிப்புக்களை படத்தில் நுழைத்துத்தான் ஆக வேண்டும்...இதற்கு அண்மையில் பாரதிராஜா பேட்டி ஒன்றில் சொன்னது பெருந்தும்.." இன்று தமிழக கிராமப் பெண்ணை தாவணி சட்டையில் காட்ட முடியாது...சுடிதாரில் காட்ட வேண்டிய கட்டாயம்..கலாசார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது... அதே போல் தான் நகரங்களைப் பிரதிபலிக்கும் போதும்...நடைமுறைகளைக் காட்டும் போதுதான் ரசிகனை கதைக்குள் இழுக்க முடியும்"...அப்படி என்பதாகச் சொல்லி இருந்தார்...! அதை தவிர்த்தால் கதாசிரியரும் தயாரிப்பாளரும் இயக்குனரும் தான் படம் பார்க்க வேண்டி வரும்...! Idea

நடிகைகளின் ஆடையை ஏன் பாக்கிறீங்க... நீங்கள் அணியும் உடைகளை முதலில் பாருங்கள்...பின்னர் நடிகைகளை நோக்கலாம்... தமிழ் பெண்களின் அழகான நெளிந்த நீண்ட கூந்தல் இன்று கம்பியாகி இல்லையா..சவுக்குப் போல... நாட்டிலேயே பெண்களும் ஆண்களும் நடிக நடிகைகளாக உலாவரும் போது படத்தில் மட்டும்...நடிகைகள் என்னத்தப் பெரிசா உடுத்திட்டாங்க என்றீங்க...என்னத்தை பிறம்பா நடிச்சுக்காட்டீட்டாங்க என்றீங்க...ஒன்றும் வேணாம் சுத்த ஆங்கிலப் படம் பார்க்க வேணுமா...லண்டன் வீதிகளில் நடந்து போனாலே மொடேன் மல்ரி கல்சர் படம் பார்க்கலாம்....அப்படி இருக்கு நாட்டு நிலமை..இதுதான் உண்மை நிலை... எங்கும் இதுதான் நிலை....! :wink: Idea


- tamilini - 01-10-2005

படங்களில் காட்டுவது போன்று.. கல்லூரி மற்றும் பாடசாலைப்பெண்கள் ஆடை அணிவது இல்லையே.. அவர்கள் நாகரீகமாய் தான் ஆடை அணிகிறார்கள். அதை விட பாடல் காட்சிகளில் வருவது போன்று எங்கையும் ஆடை பெண்கள் அணிவது இல்லையே.. நன்னா இருக்கே உங்க கதை.. சொல்லப்போனால்.. இந்த சினிமாவில நடிகை மார் அணிகிற ஆடைகளைப்போல அணிய வேண்டும் என்று தான் நினைக்கிறாங்களோ என்னவே.. சினிமா ஒரு கலையுங்க மக்களுக்கு நாலு கருத்தை நல்ல படி சொல்லனும்.. அதை விட்டு விட்டு தமிழ் கலாச்சாரத்தையே சீரழிக்கிறதற்கு தான் அவங்க வழி வகுக்கிறாங்க.. .. சினிமாவில கு}ட அதிகம் கவர்ச்சியாய்.. தமிழ் பெண்கள் நடிப்பது குறைவு.. ஏனுங்க..????????? முப்பை இற்க்கங்கள் தான்.. றொம்ப இற்க்கம் பண்ணுறாங்க.. நடைமுறையை படம் பிடிக்கிறது என்றால்.. இந்திய பெண்கள் சாதாரணமாக நடைமுறை வாழ்வில இருப்பதை படம் பிடிச்சாலே போதுமுங்க....

அப்போ லண்டன் அவங்கட கலாச்சாரம் என்ன என்று தெரியும் தானே.. நம்மாக்கள் கு}ட அப்படி மாறிட்டு வாறாங்க என்று எல்லோரும் குற்றம் சாட்டுறாங்க... :wink: Idea


- kuruvikal - 01-10-2005

ஏங்க நாங்க கொழும்பிலேயே கண்டிருக்கிறம்...படத்தில வாறத விட கேவலமா யூனிபோம் போடுற பெண்கள..நீங்க வேற...தமிழ் பெண்கள் நாகரிகத்தோட இருந்தது ஒரு காலம்..இப்ப அப்படின்னா என்ன என்கிற காலம்... அப்படி என்று ஒரு பெரியவர் சொன்னது ஞாபகத்துக்கு வருகுது... ஆண்களும் தான்...அவங்களும் இப்ப ரெம்ப மாறிட்டாங்க...! தாங்களாவே நாய்ச் சங்கிலி மாட்டி நாயா அலையுறம்ன்னு சிம்போலிக்கா காட்டுறாங்க.. இதுக்கு மேல என்னங்க வேண்டிக் கிடக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நடிகைகளை ஊரப்பார்த்துத்தான் அலங்காரப்படுத்துறாங்க... ஊர் மற்ற ஊரப் பார்த்து பழகுது...மேற்கு உடையலங்காரம் இப்ப கிழக்கில கொடிகட்டிப் பறக்கேக்க...அது தப்பில்ல...! எங்க பார்வைகள் தான் மாற வேணும்...பெண்கள் என்ன ஆண்கள் என்ன எப்படியாவது உடுத்தட்டும்...படத்தில நடிப்பப் கதையப் பாத்தமா... ரசிக்க முடிஞ்சா ரசிச்சமா எண்டிட்டு நம்ம பாட்டில போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்...இதைய்யெல்லாம் விவாதித்து விவகாரமாக்கி என்னத்தைக் கண்டார்கள்...காலம் காலமாய்...நத்திங்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 01-10-2005

கொழும்பில எந்த தமிழ் பாடசாலையில அப்படி அநாகரிகமாய்.. யுனிபோர்ம்ஸ் போடுறாங்க..??? சிங்கள பாடசாலைகளே நல்லத்தான் போடுறாங்க.. ஒரு சில ஆங்கில சிங்கள தமிழ் பாடசாலைகளில்.. அப்படி இருந்திருக்கலாம்.. ஏன்க.. நாங்க.. சில காலம் அந்த ஏரியாவில குப்கை கொட்டினாங்க.. இந்தியாவிற்கு கு}ட நாங்க ஒரு முறை சென்றிருந்த போது பாத்தம்.. நன்றாக தான் அவர்களும்..
யு}னிபோம் போடுறாங்க..??? ஏன்க பிற ஊர் பெண்களை கொண்டுவந்து.. நம்ம கலாச்சாரத்தை சீரழிக்க வேணும்.. அதை விட படங்களில் கு}ட ஆண்கள்.. பறவாய் இல்லாமல் தான் உடுத்திறாங்க.. ஆனால் பெண்களை தான் அப்படி உடுத்த வைக்கிறாங்க.. இது ஏன்.. இன்றைக்கு இந்த நிலையில போனால் இனி வரும் காலங்கள்.. எப்படி.. என்னமோ போங்க.. இதுகள் எல்லாம் ஒரு காலத்தில தமிழர்க்கும் கலாச்சாரத்திற்கும்.. வினையாக மாறப்போறவை தான்.. இதே நிலையில போச்சுது என்றால்.. நன்றாய் உருப்படத்தான் போறம்..


- kuruvikal - 01-10-2005

ஏங்க சினிமாவை பாத்து எத்தின பேர் உடுத்துக்கிறாங்க...விளக்கம் இல்லாதவங்க தவிர... உங்கட சுயத்தோட நீங்க இருக்கனும் என்று திடமா முடிவு கட்டிட்டிங்கன்னா...சினிமா என்ன எதுவும் உங்கள ஒண்ணும் பண்ண முடியாதுங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 01-10-2005

இப்பவே நம்ம ஈழத்தமிழர்களில் இந்த தாக்கம் இருக்கிறதாய்.. எங்கையோ படித்த நினைவு.. எது எப்படியோ.. நான் இப்படி இருக்கிறன் என்கிறதை விட.. நாம் எப்படி இருக்கிறோம் என்கிறது தானே நல்லது.. நம்ம சமு}கத்தில்.. இப்படி பட்ட சீரழிவுகள் வருவதை தடுக்கனும் அதைத்தான் சொன்னம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-10-2005

அந்த "நான்"கள் சேர்ந்ததுதானே சமூகம்...நாங்கள்..!

ஒவ்வொரு நானும் விழி/ளிச்சுக் கொண்டால் நாங்கள் திருந்தும் சமூகம் திருந்தும்... ஏட்டுச்சுரக்காயாக் கொட்டத்தேவையில்லையேங்க...! அதுக்குத்தானே குறைச்சலே இல்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 01-10-2005

Quote:அந்த "நான்"கள் சேர்ந்ததுதானே சமூகம்...நாங்கள்..!

ஒவ்வொரு நானும் விழி/ளிச்சுக் கொண்டால் நாங்கள் திருந்தும் சமூகம் திருந்தும்... ஏட்டுச்சுரக்காயாக் கொட்டத்தேவையில்லையேங்க...! அதுக்குத்தானே குறைச்சலே இல்ல...!

நான்களை தானுங்க விழிக்கச்சொல்லுறம்.. அதை எதிர்க்கச்சொல்லுறம்.. :wink: Idea


- Nitharsan - 01-10-2005

என்ன தமிழினிக்கும் குருவிகளுக்கும் விவாதம் குறைஞ்சிட்டு எழுதுங்க எழுதின தானே நல்ல கருத்தெல்லாம் வரும்...
தமிழ் சினிமாவைப் பற்றி கதைப்பதென்றால் நிறையச் சொல்லலாம் ஆனால் இங்கு நீங்கள் எடுத்திருப்பது தமிழ் சினிமா வும் தமிழ்கலாச்சாரமும் நல்ல தலைப்புத்தான் என்ன பண்ணிறது உண்மையை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராய் இல்லை (நான் உட்பட)
அது ஏனென்றால் நாம் தமிழ் சினிமாவில் ஊறி விட்டோம் இது தான் சினிமா என்று மூடிவுக்கு வந்து விட்டோம். தமிழ் சினிமா என்றால் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்து குட்டிச் சுவராக்க செய்யப்படும் ஒரு வியாபார ரீதியான கலை ஊருவாக்கம் என்று மூடிவை எடுக்க முடியும். அத விடுங்க குருவிகள் சொல்லும் சில கருத்துக்களுடன் எனக்கு முறண்பா இருக்கிறது தென்னிந்திய தமிழர்களுக்கும் எமக்கும் மிகவும் நேர் எதிரான கலாச்சார உணர்வு இருக்கிறது. அங்கு கலை கலாச்சாரம் என்று பேச பலருக்கு விருப்பம்... சினிமாவிற்க்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு விருப்பம் ஆனால் அங்கு அவர்கர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. அதே நேரம் தென்னிந்தியாவிலிருந்து எமது கலாச்சாரத்திற்க்கு பாதிப.;பு வ்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்i.
குருவிகள் கூறியது போல் எங்கள் பெண்கள் ஊடைகளில் பிழை இருக்கலாம் எங்கள் இளைஞர்கள் நாய் சங்கிலியுடன் அலையலாம் அல்லது தலை தலை என்று சொல்லித்திரியலாம். ஆனால் இவற்றிற்கு மூல காரணம் எது?
அது தமிழ் சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியுமா? நாங்கள் பேசிக் பேசிக் கொண்டிருப்பது தமிழ் நாட்டையும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் அதற்க்குமு; லண்டன் எங்கு வந்தது லண்டனில் இருக்குமு; ஒரு பெண்னை ஜீன்ஸ் போடாதே என்று சொல்ல முடீயாது சுடீதாhர் போட்டுக் கோண்டு அல்லது சாறியைக்கட்டிக் கொண்டு வீதியில் அல்லது லண்டனில் பாடசாலைக்கோ செல்ல முடியாது...(இது தடையல்ல ஆனால் தவிர்க்கமுடியாதது) அனால் தமிழ் நாட்டிலோ தாயகத்திலோ அப்படியில்லை. தமிழ் பெண்கள் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டில் மும்பாய் நடிகைகளை விட திறமையான நடிகர்கள் இல்லையா? ரசிகர்களின் விருப்பம் என்று பாரதிராஜா சொல்லலாம் சங்கர் சொல்லலாம் ஏன் அந்த இறைவனே சொல்லலாம் ஆனால் ரசிகர்களை இப்படியான படங்களை ரசிக்க வைத்தது யார்? இப்படியான சினிமா தான் வேணும் என்று யார் கேட்டார்கள்? தாமே முடிவெடுத்து கவர்ச்சியை புகுத்தி அதற்க்குள் கற்பனை செய்ய முடியாத கற்பனைகளை புகுத்தி படம் எடுத்தது யார்? குருவிகள் சொன்னது நாங்கள் நாங்களாக இருந்தால் சரி என்பது நாங்களாக இருக்க முடியுமா? குழந்தை குழந்தையாக இருக்க முடியுமா? அ என்று சொன்னால் ஆ என்று யாரும் இன்றைய சழறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவiயில்லை ஒரு பாட்டன் சொன்னாhர் "ஆங்கிலப்படங்களைப் பார்க்காதே என்று தனது பேரனுக்கு சொல்ல முடியவில்லை காரணம் எங்கள'; படங்கள் என்ன அவற்றை விட் கேவலமாகவல்வர் வருகிறது" புகலிடத்தைப் பொறுத்த வரை தமிழ் சிறுவர்களுக்கு கலைகளை கற்றுக் கொடுக்க இருக்கும் ஒரு ஊடகம் சினிமா அது கலை களைக் கொல்லும் போது எதை வைத்து கலையை சொல்லிக் கொடுப்பது.

நேசமுடன் நிதர்சன்


- Mathuran - 01-10-2005

வணக்கம் குருவிகளே!

தமிழினி அக்கா உங்கள் கருத்து 99% சரியானது. துணிந்து நில்லுங்கள். செல்லும் பாதை சாரியானதே ஊர் வந்துவிடும்.

குருவிகளே நீங்கள் சொல்வது போல எழுத்தாளர் பரணி அவர்களும் அதனைதானே சொல்லுகின்றார். அதாவது தமிழ்ர்களின் வாழ்வியலின் கூறுகளை சீரளிக்கின்ற திரைப்படங்களைத்தானே எதிர்க்க சொல்லுகின்றார். நான் வாழ்கின்ற நாடு நோர்வே. இந்த நாட்டில் கிரைப்படம் எடுக்கின்றார்கள். ஆங்கில படங்களும் திரையிடப்படுகின்றன. ஆனால் அவர்களின் நோர்வேஜிய திரைப்படங்களில் எந்த மொழிகலப்பும் இருக்காது. சிலவேளை சொர்ரி என்னும் ஆங்கில வார்த்தையினை பாவிப்பார்கள். அப்படி அவர்கள் தங்கள் மொழிமீது பற்றுகொண்டவர்கள். ஆனால் தமிங்கல திரப்படங்களைத்தானே தமிழ்ர்களால் பார்க்க முடிகின்றது. பெண்ணடிமை போக்கும், பெண்களை இளிவுபடுத்தும் காட்சி அமைப்பு. இரட்டை அர்த்த வசன்ங்கள். ஒருவரை (குரிப்பாக ஏழைகளை) தழ்தி மட்டம் தட்டும் நகற்சுவை. போதாமைக்கு தமிங்கலத்தை வெரவேற்று துதிபாடல்.

பாரதிராஜ அப்படி சொன்னது என்னமோ உண்மைதான், அன்று தாவணி போட்ட மயிலு, இன்று சுடிதார் போட யார் காரணம். சினிமா துறையினரான நீங்களும் தானே. தாவணி போட்ட மயிலுவுக்கு, சுடிதாரை போட்டு காட்டியவர்களே நீங்கள்தானே. அதனை பார்த்து தானே மக்கள் சுடிதாரே போட்டார்கள். நதியா வளயல், நதியா பொட்டு, நதியா சாறி என சினிமாகாறன் தானே வியாபாரம் பண்ணினான். இப்படி செய்தால் மைலு நதியா வள்யல்தான் போடுவாள். கோவணம் கட்டிய சப்பாணி நீண்ட காற்சட்டை தான் போடுவான்.

கமல் போடுற கூத்த தாங்க முடியல்ல. ஆங்கில பெயரில் அப்படி அவருக்கு என்ன ஒரு மோகம். கமலை போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். மும்பை எக்ஸ்பிரஸ் திரைபடத்தினை நான் பார்பதில்லை என முடிவு செய்துள்ளேன். தூய தமிழ் பெயருடன் தமிழ் திரைப்படங்கள் எனிவரும் காலங்களில் வராதுவிடின். இங்குள்ள தமிழ் இள்ஞ்னர்கள் அத் திரைப்படங்களை பார்காது புறக்கணிப்போம்.


- kuruvikal - 01-10-2005

உடை விசயத்தைக் கொண்டு சினிமா காட்டுறது தவறென்று சொல்ல முடியாது...பழைய ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் அழகாக உடல் முழுவதும் மூடி உடை அணிந்து நடித்திருப்பதைக் கணலாம்...அதேபோல் அந்தக் காலச் சமூக நடைமுறைகளும் அப்படித்தான் இருந்ததாம்...!

இன்று மேற்குலக உடை அலங்காரங்கள், தலை அலங்காரங்கள், உடலரங்காரங்கள் எல்லாம் உலகெங்கும் வியாபித்து அதிகாரம் செய்யும் இவ்வேளையில் நாமும் எமது நாகரீக வளர்ச்சி, ஆணுக்குப் பெண் சமன், நடைமுறைக்கு இலகு என்று பல காரணங்கள் சொல்லி எமது பாரம்பரிய கலாசார விழுமியங்கள் பலவற்றைத் தூக்கி எறிந்துவிட்டோம்...அதற்கு முழுக்க முழுக்க சினிமாதான் காரணம் என்று சொல்ல முடியாது...!

முஸ்லீம் பெண்களும் சரி ஆண்களும் சரி அவர்கள் மேற்கில் இருந்தால் என்ன... எத்தனை சினிமா பார்த்தால் என்ன... தங்கள் மதம் போதிக்கும் வழியில் உடை அணிவதையே பெரிதும் ஊக்கிவிக்கின்றனர்...! எவரும் பெரியளவில் அதை மாற்றி அமைக்கவும் முயலவில்லை...! அவர்கள் தங்கள் நாகரிகத்தை தங்களுக்கு உரிய முறையில் காட்டுவதிலேயே குறியாக நிற்கிறார்கள்...( இளைய சந்ததி மாற முற்படுகிறது..மாறியும் வருகிறது அதுவேறு கதை....!) எதையும் கண்டு மரட்சி உற்று ஆதிக்கத்துக்கு உட்படாத வகையில் அவர்களை மதம் கட்டிப்போட்டுள்ளது...அதனால் அவர்களுக்கு பெரிய அளவு தீமை என்றில்லை..மாறாக ஒரு ஒற்றுமையை பேண முடிகிறது...!

ஆனால் எங்கள் கலாசார நடைமுறைகள் சமூக, பொருளியல், வாழ்வியல்,வாழ்விட மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுவதையும் அதற்கு நாமே நம்மைத் தேற்றி நியாயம் கற்பிப்பதையும் காணலாம்...! நாம் பெண்களின் உடை விசயத்திலோ இல்ல அவர்களின் சுயவிருப்பங்களிலோ செல்வாக்குச் செலுத்துவதை விரும்பவில்லை... அது அவர்களின் சிந்தனையின் பாற்பட்ட விருப்பத்துக்குரிய ஒன்று...!
ஆனால் லண்டனிலோ நியோர்க்கிலோ சேலை கட்டி வாழ முடியாது என்பதை மறுதலிக்கின்றோம்...பல வங்காளதேச முஸ்லீம் பெண்மணிகள் மேற்கில் கூட எந்தக் குளிருக்குள்ளும் சேலை உடுத்தி வருவதைக் கண்டிருக்கின்றோம்...! அதை அவர்கள் தங்கள் சாதாரண நடமுறையாகவே பின்பற்றுகின்றனர்...!

திரைப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தான் எழுகிறது...அதற்காக ஏதோ திரைப்படம் வந்த பிந்தான் சமூக அநாகரிகங்கள் வந்தன என்று சொல்வது போல் எழுதுவது தவறு...!
பெரும்பாலான திரைப்படங்கள் சமூக அநாகரிகங்களைக் காட்டி அதில் இருந்து விலகி இருக்கக் கோருகின்றனவே தவிர அவை அவற்றைத் தொடரச் சொல்லவில்லை...!

திரைப்படங்கள் கூட சமூக கலாசார மாற்றங்களை உள்வாங்கித்தான் உடை முதற்கொண்டு காட்சிகளின் பின்னணிகள் வரை வடிவமைக்கின்றன...! அதில் இருந்து விலக முடியாதபடி சமூக மாற்றம் அவர்களையும் விஞ்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது...! உங்கள் கருத்துக்களின் படி... வேணும் என்றால் அதற்கு திரைப்படம் மேலதிக விளம்பரம் அளிக்கிறது என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம்...! ஆனால் கலாசாரச் சீரழிவுக்கு சினிமாவே முழுக்க முழுக்கக் காரணம் என்பது தவறு...தங்கிலீஷ் பேசச் சொல்லி சினிமா சொல்லவில்லை...சமூகத்தில் உள்ளதை சினிமா காட்டுகிறது...அவ்வளவும் தான்...!

திரைப்படங்கள் பல.. வர்த்தக நோக்கோடும்.. சில.. சமூக நலன் கருதியும் வரும் பொழுதுபோக்கு அமசங்கள் என்று வரையறுக்கலாம்...! அவை நடைமுறைச் சமூகத்தோடு சென்றுதான் தாங்கள் சொல்லவருவதைச் சொல்ல, காட்ட முடியும்...! உதாரணமாக பல நகைச்சுவைக் காட்சிகளில் அரைகுறை ஆடைகளோடு செல்லும் பெண்களை பையன்கள் கிண்டல் அடிப்பது போல் காட்டுவார்கள்..அதை வெறும் கிட்டலாக பெண்களை இழிவுபடுத்துவதாகப் பார்ப்பதிலும் அதில் கூட ஒரு செய்தி சொல்லப்படுவதை ஏன் கவனிக்கத் தவறுகிறீர்கள்..."பெண்களே நீங்கள் அரைகுறையாகப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை...போனால் இதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வாருங்கள்" என்று சொல்வதுதான் அந்தச் செய்தி...!

இப்படி அவர்களின் ஒவ்வொரு காட்சிக்கும் அர்த்தம் காட்டலாம்...ஆனால் அந்தளவுக்கு திரைப்படத்தை பார்ப்பவர்கள் அர்த்தம் கொள்ளத் தயாரா என்றால்... இல்லை என்பதே பதில்...! உண்மையில் திரைப்படம் சமூக கலாசார மாற்றத்தை உள்வாங்கி அதை தனது ஊடக மெருமைக்காகச் சேர்க்க நாம் அதை எமது பெருமையாக உள்வாங்கிக் கொண்டு திரைப்படத்தைக் குறை சொல்வதில் பயன் இல்லை...!

நான் எது வந்தாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிலையிலின்றும் மாறமாட்டேன்...வருவது வந்துவிட்டுப் போகட்டும்..நல்லதென்றால் உள்வாங்குவேன் தேவையற்றது என்றால் தவறவிடுவேன் என்ற கொள்கை உள்ளவனை திரைப்படம் என்ன எந்த அநாகரிக அலங்கோலங்களும் (எமக்கு அலங்கோலம் மற்றவர்களுக்கு அலங்காரமாகவும் இருக்கக் கூடும்) எம்மில் மாற்றத்துக்கு இடமளிக்காது என்பது உறுதி....! இதற்குச் சாட்சி...சுவாமி விவேகானந்தர் போன்ற சமூகப் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள்...முதியவர்கள் அல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 01-10-2005

இந்த விடயம் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களிற்கு முன்னர் நினைச்சேன். இன்று தான் முடிந்தது. அண்மையில ஒரு TV யில் மின்னல் 2004 என்கிற நிகழ்ச்சி பாக்கக்கிடைத்தது. உங்களில் பலரும் பாத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நிகழ்ச்சியைப்பாத்த பொழுது மிகவும் கவலையாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரது நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியைப்பார்த்த பொழுது நமது சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி தான் எனக்கு தோன்றியது. அந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு சில பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் சினீமா நடிகைகள் கிரன், சிம்ரன் போன்றோர் பாடல் காட்சிகளிற்கு அணியும் உடைக்கு ஏறக்குறைய சமனாய் இருந்தது. [இந்த எண்ணிக்கை அடுத்த நிகழ்ச்சியில் பலதாக மாறக்கூடும்]. அவர்கள் தாயகத்து பெண்கள் என்று நினைக்கிறேன். இந்திய சினிமா கலைஞர்களைப்போல் ஓரளவுக்கு நடனம் ஆடினார்கள். ஆனால் அவர்களது உடைகள் நமது சமுதாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றியது.

சினிமாவில கூட ஆண்கள் அதாவது கீரோக்கள் சாதாரணமாக ஆடை அணிவார்கள், பாடல்காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் கீரோயின்கள் தான் மிக மோசமாக ஆடை அணிவார்கள். அதுவும் சமீபகாலமாய் வருகிற படங்களில் மிக மோசமாய் இருக்கும். இது கூட பெண்களை இன்னும் போகப்பொருளாய் தான் சினிமா சமூகம் பார்க்கிறது என்கிறது புரிகிறது. இந்த தாக்கம் நமது சமூகத்திடம் நன்றாக தெரிகிறது.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுக்க தயங்கிறியே என்று பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். சேலை வேண்டாம் சுடிதார் வேண்டாம். குறைந்த பட்சம் எமது கலாச்சாரத்தை காப்பாற்றுகிற அளவில ஏனும் ஆடை அணியக்கூடாதா? சினிமாவில கூட அதிக கவர்ச்சியாக தமிழ் பெண்கள் நடிப்பது குறைவு என்று தான் கூற வேண்டும்.

இந்திய சினிமா தமிழை தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்கிற கருத்து தற்பொழுது பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மையாகிறது என்பது இப்படி பட்ட TV நிகழ்ச்சிகளில் நமது சந்ததியினர் பாடல் காட்சிகளிற்கு படங்களில் வருவது போன்று ஆடை அணிய நினைக்கும் போது புலனாகிறது. நமது தமிழ் சமூகம் உடை நடையில கட்டுப்பாட்டுடன் இருந்ததனால் தான் எயிட்ஸ் நமக்கு சற்று எட்ட நிக்கிறது என்பது என்னவோ உண்மை தான். அதற்காக எயிட்ஸ்க்கும் நமக்கும் தொடர்பே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறது ஆனால் அரிதாக இருக்கிறது.

உணர்ச்சிகளிற்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன். நடை உடை பாவனை போன்றவை உணர்ச்சிகளை கிளப்பி விடக்கூடியவாறு அமைகிற நிலையில். பல சமூகப்பிரச்சனைகளை நாம் எதிர் நோக்க வேண்டி வரப்போகிறது. இன்று மேடையில் அரை குறை ஆடையுடன் ஆரம்பம் இதுவே தொடர்கதையாக போனால் நாளை நமக்கு கலாச்சாரம் என்ற ஒன்று இல்லாமலே நாம் போகலாம். பெண்களிற்கு மட்டும் அல்ல ஆண்களிற்கும் தான் ஆடைகளில் அடக்கம் தேவை. ஆனால் ஆண்கள் ஆடை விடயங்களில் மோசமாக நடந்து கொள்வது குறைவு. மேலை நாடுகளில் வாழ்கின்ற எமது இளைய சமூகத்தினர் இதனை பெரிதாக எடுக்காவிடினும். பெற்றோர்கள் கூட இதனை அப்படியே கண்டுக்காமல் கண்டிக்காமல் விடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. வளர்ந்து வருகின்ற சமுதாயம் இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் நமது சந்ததிகள் பல பிரச்சனைகளை தாங்கியவாறு இந்த உலகத்தில் பிறக்க வேண்டி வரலாம். இப்படி பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் எனினும் ஒளிபரப்புவதை தவிர்க்கலாம். இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் எனினும் இப்படி பட்ட விடயங்களை கருத்தில் எடுக்கலாம். இது இன்று சிறிய விடயமாக தெரிந்தாலும் நாளை நாம் சிந்திக்க வேண்டி வரலாம்.

நன்றி
கயல்விழி

www.kajazvizi.blogspot.com


- tamilini - 01-10-2005

Quote:திரைப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தான் எழுகிறது...அதற்காக ஏதோ திரைப்படம் வந்த பிந்தான் சமூக அநாகரிகங்கள் வந்தன என்று சொல்வது போல் எழுதுவது தவறு...!

திரைப்படத்தில வாற பாடல் காட்சிகளும் சமூகத்தில நடக்குதா..??? அந்த பாடல்காட்சியில நடிகைகள் எப்படி வாறாங்க.. அப்படி யாரையாவது கண்டிங்க.. பாடி ஆடுறதை.. :wink:


- kuruvikal - 01-10-2005

நீங்க ஒருக்கா எங்கை என்றாலும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்ப் பாருங்க...குறிப்பா பாட்டிகள்...படம் தோத்திடும்...அப்படி நிஜக்காட்சிகள் அரங்கேறும்...இலங்கையிலும் தான்...! என்ன டூயட் மட்டும் தான் இருக்காது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-10-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழ் சினிமா தொடரட்டும்


- tamilini - 01-11-2005

Quote:நீங்க ஒருக்கா எங்கை என்றாலும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்ப் பாருங்க...குறிப்பா பாட்டிகள்...படம் தோத்திடும்...அப்படி நிஜக்காட்சிகள் அரங்கேறும்...இலங்கையிலும் தான்...! என்ன டூயட் மட்டும் தான் இருக்காது

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea :wink:


- kavithan - 01-11-2005

tamilini Wrote:
Quote:நீங்க ஒருக்கா எங்கை என்றாலும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்ப் பாருங்க...குறிப்பா பாட்டிகள்...படம் தோத்திடும்...அப்படி நிஜக்காட்சிகள் அரங்கேறும்...இலங்கையிலும் தான்...! என்ன டூயட் மட்டும் தான் இருக்காது

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea :wink:

என்ன இப்படி சிரிக்கிறியள்