Kanakkayanaar Wrote:இதை நீங்கள் பிற, புலம்பெயர்ந்த நாட்டு ஊடகங்களுக்கும் குறிப்பாக இலங்கை ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் அனுப்பலாமே. அவர்கள் தரும் (ஏமாற்றாவிடில் ) காசு உங்கள் அடுத்த குறும்படத்துக்கோ நெடும் படத்துக்கோ உதவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்கள் பரவி வாழும் இடங்களெல்லாம் (இலங்கை உட்பட) புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்கள் புகழ் பரவ வாய்ப்புண்டல்லவோ?
எமது குறும்படங்கள் ஆரம்பத்தில் TRT தமிழ் ஒளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன் பின்னர் TRT தொலைக்காட்சியின் சுவிஸ் கலையக பொறுப்பாளராக சுவிஸ் முழுவதும் வீட்டுக்கு வீடு சென்று உங்கள் நேரம் என்ற கலையகத்துக்கு வெளியே செய்யும் நிகழ்ச்சியை செய்து வந்தேன். அத்தோடு மாலை நேரங்களில் TRT தமிழ் ஒலி வானோலிக்காக சுவிஸ் செய்திகளை தொகுத்து வாசித்து வந்தேன்.இவை பொழுது போக்கு போலவே எனக்கு இருந்தது.பின்னர் நானாகவே சொல்லி விட்டு நின்று விட்டேன். சிறிது காலத்துக்கு பின்னர் TRTயில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
கனடாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளிலும் என் குறும்படங்கள் ,என் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டு ஒளிபரப்பப் பட்டதாக அறிந்தேன். அதுபற்றி எதுவுமே, குறைந்தது நன்றியென்று கூட ஒரு மெயில் போடவில்லை. குறும்படத்தில் நடித்தவர்கள் கனடா போன போதுதான் அவர்கள் தொலைக்காட்சியில் வந்தவர்களாக அறியப்பட்டிருந்தார்கள்.
தீபம்,TTN போன்ற தொலைக் காட்சிகளில் என் சந்திப்புகளின் போது என் குறும்படங்களின் சில பகுதிகள் காட்டப்பட்டன.இவர்கள் வசம் என் குறும்படங்கள் இருக்கின்றன.
சுவிஸின் சில மாநில தொலைக் காட்சிகளிலும்,ஜேர்மனியில், நாச்சிமார் கோயிலடி ராஜன் மற்றும் முருகவேல் ராஜன் ஆகியோர் பங்கு கொள்ளும் ஒரு ஜேர்மன் தொலைக்காட்சி நிகழ்விலும் ஒளிபரப்பியுள்ளார்கள்.
தவிர,கனடா,ஜேர்மனி,பிரான்ஸ்,லண்டன்,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் எனது குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
அனைத்து தமிழ் வானோலி ஊடகங்கள் அதாவது TRT தமிழ் ஒலி,IBC,TBC,UTBC,ETBC,நடாமோகன் நடத்தும் வானோலி.......................இப்படி..........பேட்டிகளும்,விமர்சனங்களும் இடம் பெற்றன.
ஈழநாடு,ஈழமுரசு,நிழல்,இந்தியா டுடே, தினக்குரல்,வீரகேசரி,தேசம்,உதயன்,அஞ்சல்,புதினம்...........................இப்படி பல பத்திரகைகள் எழுதின.
யாழ்,திண்ணை,பதிவுகள்...........இப்படி சில இணையதளங்களும்..................எழுதின.
தவிர எனது படைப்புகளை ஒரு ஒளிநாடாவாக கொண்டு வந்த போது,அதை விநியோகிக்க என்னிடம் பணம் கேட்டது எங்கள் தமிழர் நிறுவனமொன்று. பின்னர் நானாகவே வெளியிட்டேன் Video Cassetteகள் கடைகளில் அழகாக சில காலம் காட்சிப் பொருளாக இருந்தது.விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே வாங்கினார்கள்.விற்பயைான கசெட் காசு வாங்குவதற்கு கசெட் போட்ட கடைகளுக்கு செல்ல என் காசுதான் மேலும் செலவாகும் என்பதால் நான் விற்ற காசை வாங்கவே போகவேயில்லை........................(இதை என் குழுவினர் கேலியாக சொல்வார்கள்,அஜீவன், ஒரு கட்டு கருவேப்பில வித்த கணக்கு பார்க்க பென்சில (BENZ CAR) போற மாதிரி வேலை பார்க்காதேங்கோ........என்று.) இப்போதும் என் செலவில்தான் சிலருக்கு குறும்படங்களை அனுப்புகிறேன்.நான் பணம் கேட்பதேயில்லை. எனக்கு பழகிவிட்டது.கேட்பதே வெட்கமாக இருக்கிறது.எனது படங்களுக்கு copy rights கிடையாது.போட்ட பணத்தில் ஒரு சதம் கூட என் கைக்கு வந்ததில்லை. இது கோயில் சொத்து போன்றது.....................இது தவிர கூத்தாடிகள் என்று வேறு, சிலர் சொல்ல விழைகிறார்கள்..................... கொடுமை.
ஒரு படைப்பை செய்வதை விட அதை வெளியில் கொண்டு வருவதற்கு அதிக பணம் எமக்குத் தேவை என்பதும்,அதை பார்வையாளர்களுக்கு ரசிக்க வைப்பதற்கு அதைவிட அதிக பிரயத்தனம் தேவை என்பதையுமே நான் நம்மவரிடம் காண்கிறேன்.
என் சொந்த பணத்தில் லண்டன் சென்று தமிழர்களுக்கு குறும்பட பயிற்ச்சி பட்டறையொன்றை நடத்தினேன்.அத்தோடு சரி,பின்னர் அவர்கள் எதையுமே செய்யவில்லை.................
சுவிஸ் சில மாநில தொலைக் காட்சியொன்றில் ,ஜேர்மன் மொழி படைப்புகளில் (TV Programme & films)பணிபுரிகிறேன்.அவர்களிடமிருந்து உழைப்புக்கான ஊதியமும் , நல்லதை பாராட்டும் குணமும் இருக்கிறது,
பாராட்டு மட்டுமே ஒரு கலைஞனை வாழ வைக்காது.அவனது வீட்டு பானை எரிய பணமும் தேவை.என் வாழ்வில் அதிக இழப்புகள் கலைக்காகவே நடந்துள்ளது.இது என் கலை வாழ்வில் ஒரு சிறு துளி மட்டுமே................... இந்நிலை ஏனைய கலைஞர்களுக்கு வராமல் தடுக்க வேண்டும்.இல்லையானால்.........................உம்.............
<span style='color:red'>அதற்காக,உண்மையான ஓர் கலைஞன்,தன் சுயநலத்துக்காக அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிறைப்பட்டு விடக் கூடாது.
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட,
உப்பாகி,நீரோடு சுதந்திரமாய் கரைவதே மேல்............
யாழ் நல்ல நேரத்தில் நல்லது செய்திருக்கிறது.நன்றிகள்...........
இன்னும் நம்பிக்கை, எனக்குள் அற்றுப் போகவில்லை என்று எனக்குள்ளேயே ஓர் அசாத்திய நம்பிக்கை.
லட்சங்களுக்காக வாழும் மக்கள் மத்தியில் லட்சியங்களுக்காக வாழும் ஒரு சிலராவது இல்லாமலில்லை.........-அஜீவன்</span>