Quote:கடவுள் நம்பிக்கைஇ இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள்இ ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள்இ கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள்.
இவர்களை அல்லது இவர்கள் சார்ந்த மனநிலையை ஒழிப்போம்
_________________
கடவுள் சொன்னாரா முயற்சி செய்யாது என்னை நம்பிக்கொண்டிருங்கள் என்று.. ஒரு சில முட்டாள்கள் முயற்சி செய்வதில்லை அப்படி முயற்சி இன்றி தேற்கிற காரியங்களுக்கு கடவுள் உதவி செய்யவில்லை கடவுள் இல்லை என்டு சொல்லுவார்கள்....
உண்மையாக கடவுளை மனிதனிலும் ஒவ்வொரு உயிருலும் பார்த்தால் மற்றவர்களை துன்புறுத்த ஒருவுரும் முயல மாட்டார்கள்.. முன்னயை காலங்களில் எல்லாம் ஒருவர் மற்றவரை விழிக்கும் போது கடவுள் பெயரை சொல்லி விழிப்பார்களாம் ஏன் என்றால் எல்லாரிலும் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள் அப்பொழுது இப்ப நடக்கிற மாதிரி வெட்டுக்குத்து எல்லாம் கிடையாது.. அன்பு வளர்வதற்கு ஒரு மு}லமாக கடவுளும் மதங்களும் துணையாக இருந்தன...எல்லாரையும் கடவுளாக பார்த்து எல்லாருடனும் அன்பாக வாழ்ந்தால்.. பிரச்சனைகள் குறையும்... மனிதனை வழிப்படுத்த வந்தவைகள் தான் மதங்களும் கடவுளும்... அதன் படி பார்த்தால் எமது முயற்சிக்கு உரிய பலனை நாம் அடைவோம்... அதைவிட்டு விட்டு கடவுள் தருவார் என்று சம்பாதிக்காமல் இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பதனால் என்ன பலனை அனுபவிக்க முடியும்.. நாம் வாழ்ந்ததற்கே உரிய அர்த்தமே இல்லாமல் போய்விடும்....!கஸ்டப்பட்டு உழைக்கும் போது தான் அதனால் ஏற்படுகின்ற பலனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும்
Quote:அப்போ நீங்கள் ஐயரிடம் காசு கொடுத்து ஏமாறுவது எந்த வகையில் சேரும்..?
ஏன் தியாகம் ஆலயங்களிக்கு சென்று தான் கடவுளை விழிபட வேண்டுமா.... ஆலயம் என்பது ஆண்மாக்களை லயப்பட வைப்பது.. அங்கு சென்றால் மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தியனையலாம் என்று தான் நாம் அங்கு செல்கிறறோம்... ஆனால் எங்கு நின்று கொண்டும் எமது புலன்களை அடக்கி வணங்கினால்.... அது கடவுளை வணங்கியதற்கு சமம்.... ஏன் என்றால் கடவுள் தான் எங்கும் இருக்கிறாரே....!
அதைவிட பாண்டியன் கு}றிய காரணங்களிற்காக தான் நாம்; அர்ச்சனை செய்கிறோம்... ஒரு அர்ச்சனை செய்யும் பொழுது.. ஒரு குடும்பத்திற்கு அது ஏதொ ஒருவகையில் உதவுகிறது.. அதைவிட ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு செருப்புக்களை பாதுகாக்கிறவர்களிற்கு காசுகிடைக்கிறது.. அர்ச்சனைப்பொருட்கள் விற்பவர்களிக்கு அடுப்பு எரிக்க காசு வருது... இவைகள் எல்லாம் கடவுளுக்காக நாம் செய்யும் போது ஏற்படுகின்ற சில நல்ல காரியங்கள்... அவற்றை நாம் செய்யும் போது எமது புண்ணியம் கு}டுது... தானே...
நீங்கள் வறுமை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்... வறுமை கவலை யாவும் வாழ்க்கையில வருகின்ற ஒரு சில துன்பகரமான நிகழ்வுகள்.. வறுமையில் ஒருவன் வாழ்ந்தால் தான் வறுமையின் கொடுமையை அவன் அறிய முடியும் அவனைப்பார்த்து மற்றவர்கள் வறுமை எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளமுடியும்... காலம் ஒரே மாதிரி இருப்பதில்லை அப்படி கடவுள் விட்டு வைத்ததும் இல்லை இன்றைக்கு ஏழையாக இருப்பவன் நாளைக்கு வசதிபடைத்தவன் ஆகலாம் வசதி படைத்தவன் ஏழையாகவும் மாறலாம் யாவும் எமது முயற்சிலும் நாம் செய்யும் காரியங்களி|லும் தான் இருக்கிறது... இவற்றுக்கு எம்மை வழிகாட்டுவதும்.. வழிநடத்துவதும் தான் கடவுள்... மதங்களின் வேலை.... அதைவிட வறுமையில் வாடிய ஒருவனால் தான் வசதி வந்தவுடன் அதை புரிந்து.. அதன்; முழுபயனையும் அடையமுடியும்... கடவுளே கு}றியாதாக ஒரு கதையுன்டு... அனுபவம் தான் கடவுள் என்று அதை அறிந்திருப்பீர்கள்
இந்த நாடுகளில் நடக்கின்ற கோயில்களை விடுங்கள்... அவர்கள் இப்படி வளர்வதற்கு ஒருவிதத்தில் பக்தர்கள் தான் காரணம் அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் சிலர் மீண்டும் மீண்டும் சென்று தமது வசதியையும் மற்றவர்களிக்கு தாங்கள் பெரிய இவர்கள் என்று காட்டுவதற்கு தான் ஏட்டிக்கு போட்டியாக.. நடக்கிறார்கள்... ஏமாற்றுபவர்களிக்கு அதுவும் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களிக்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைக்கும் அவர்கள் தப்ப முடியாது.. ஆனால் இலங்கையில் நடக்கின்ற ஆலயங்கள் முலம் எத்தனையோ அறக்கட்டளைகள் முலம் ஏழைக்குடும்பங்கள் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்..