காதல் திருமணம் என்பதெல்லாம் வாழ்வில் ஒரு தடவை என்பது கட்டாயம் இல்லை என்றாலும் மனித மன அளவில் அவை ஒரு தடவை என்று அமைவதுதான் மகிழ்ச்சிக்குரியது...! அந்த நிலையை இழக்கும் நிலை மனிதர்களுக்கு வரக்கூடாது வர வைக்கக் கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனையும் வேண்டுதலும்....!
இப்போ இத்தலைப்புக்குரிய விடயத்துக்கு வந்தால் மறுமணம் எனும் பதம் கூட முதல் மணத்தை - திருமணத்தை நினைவு கூறுவதாகவே இருக்கிறது இந்நிலையில் எப்படி ஒரு மனித மனம் மறுமணத்தால் பூரண மகிழ்வுறுகிறது என்று கணக்கிட முடியும்...! வெறும் உடல் தேவைகளுக்காக மறுமணம் என்பது விலங்கிலும் கேடான நிலை...அது பகுத்தறிவுள்ள மனிதனுக்கு அவசியமா...??! இல்லை என்பதே மனித சமூகத்தில் ஒழுக்கத்தை உயர் விழுமியங்களை நிலைநாட்டுவோரின் விருப்பமாக இருக்க முடியும்...!
சமூகத்தில் தன் துணையை இழந்த ஆணோ பெண்ணோ தனித்து வாழ முடியாது எனும் நிலையை தவிர்க்க சமூகம் தான் மாற வேண்டுமே தவிர அவரவர் மனங்கள் கொள்ளும் ஆத்மார்த்தமான நிலைகளைக் கெடுக்க சமூகம் உதவக் கூடாது...! தன் துணையை இழந்த பறவைக்குக் கூட அதன் நினைவோடு வாழ வழி இருக்கும் போது மனிதனுக்கு....??! மனிதன் பிறக்கும் போது தனித்துதான் பிறக்கிறானே ஒழிய இன்னொருவரோடு ஒட்டிக் கொண்டல்ல...எனவே மனிதன் தனித்து இந்த உலகில் வாழ முடியாது என்பதிலும் பார்க்க சமூகமாக இல்லாவிட்டால் வாழ்வது கடினம் என்பதே சரியாக இருக்கும்...!
சமூகம் அந்தத் தனித்த மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கி அவர்களுக்கு முன்னுரிமையும் வசதிகளும் வாய்ப்புக்களும் பாதுகாப்பும் மகிழ்ச்சிகரமான சூழலும் அமைத்துக் கொடுத்தால்...அதுவே போதும் அவர்கள் தங்கள் வாழ்வை தரமாக்கி வாழ உதவியளிக்கும்...! மேற்கு நாடுகளில் சிங்கிள் மதர்...சிங்கிள் பாதர் என்றிருக்கிறார்கள்...அவர்களுக்கு அரச சலுகைகள் அளிக்கப்படுகின்றன...சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவுக்கரம் இருக்கிறது...அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு இணங்க தங்கள் வாழ்க்கையை மறுசீரமைக்க வழி இருக்கிறது...அந்த நிலையை எமது சமூகமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமே தவிர மனித வாழ்வில் குறித்த ஒரு காலத்துக்கு மட்டுமான உடல் இச்சைகளுக்கு மட்டும் தீனிபோட வழி தேடிக் கொடுக்க முனையக் கூடாது...அது துணையை இழக்காதவர்களும்...தறிகெட்டுப் போகவே வழிகாட்டும்...!
இளைஞர்கள் என்ன யுவதிகள் என்ன...சமூகத்தில் உள்ள அனைவருமே மறுமணம் என்பதற்கு மாறாக துணை இழந்தவர்களின் வாழ்வின் மறுசீரமைப்புக்கு பல வழிகளிலும் உதவலாம்...உதாரணத்துக்கு...அவர்களுக்கு என்று ஒரு நிதியத்தை ஆரம்பித்து அதன் மூலம் அவர்கள் தங்கள் பிள்ளைகளை குடும்பத்தைப் பராமரிக்க உதவியளிக்கலாம்..அல்லது சுய தொழில் பெற முதலீடிட உதவியளிக்கலாம்...அல்லது வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி அளிக்கலாம்... அவர்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையில் வளமான பொழுது போக்கம்சங்களை நிறுவிக் கொடுக்கலாம்..இப்படிச் செய்வது அவர்கள் மறுமணம் எனும் மனதளவில் சொல்ல முடியாத வேதனை மிக்க முடிவை எடுக்காமல் சொந்தச் சமூகம் தன் உணர்வுகளுக்கும் தன் நிலைக்கும் மதிப்பளிப்பதாக எடுத்துப் சாதாரணமானவர்கள் போல வாழ வழிகாட்ட முடியும்...!
மாறாக மறுமணம் என்ற போர்வையில்.. உடல் இச்சைகளைத் தீர்க்கவும் முதல் மணமானவன் அல்லது மணமானவள் என்ற காரணத்தை வைத்தே குடும்பப் பிரச்சனைகளை வளர்த்து அதன் மூலம் பயன்பெறவும்... குடும்ப, சமூக அமைதி ஒழுக்கம் குலைக்கப்படவும்... பெற்றோரின் தவறான நடவடிக்கைகளால் பிள்ளைகள் மன, உடல் ரீதியாகப் பாதிக்கப்படவும் என்று பல புதிய பிரச்சனைகளுக்கு வழிகாட்டாமல்... துணையிழந்தவர்களின் ஆத்மார்த்தமான மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து ( ஒரு மாணவனால் எப்படி ஒரு பரீட்சையைத் தாண்டி வருவதை மறக்க முடியாமல் இருக்குமோ அதைவிடப் பலமடங்கான நினைவுகளால் மனிதனை ஆழக்கூடியது அவனுடைய முதல் அனுபவங்களுக்கான நிகழ்வுகள்...அந்த வகையில் முதற் திருமண நினைவுகளையும் அந்த வாழ்வின் சந்தோசம் அன்புப் பகிர்வு ஒரு மனிதன் இழகுவில் இழப்பான் என்று எதிர்பார்ப்பது நடமுறைக்குச் சாத்தியம் குறைந்ததே..) அவர்களுக்கு ஆரோக்கியமான பாதையை அவர்கள் விரும்பும் வழியில் காட்ட வேண்டும்...! அதைவிடுத்து புறஞ்சொல்லி தூற்றி புறக்கணித்து அவர்களின் உணர்வுகளை கேவலப்படுத்தாமல்...அவர்களுள் ஒருவராக மனதளவில் மாறி அவர்களைப் புரிந்து கொள்ளச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முனைய வேண்டும்...அதுதான்.. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் துணையை இழந்து துன்பப்படுபவர்களுக்கு ஓரளவேணும் ஆறுதல் அளிக்கும்...மனத்துணிவையும் பலத்தையும் தரும்...!
உங்களில் சிலர் கேட்கலாம் ஏன் ஒருவரும் மறுமணம் செய்து சந்தோசமாக வாழவில்லையா என்று..உங்கள் பார்வைக்கு அந்த வாழ்க்கை சந்தோசமாகத் தெரியாலம்...ஆனால் அவர்களின் மன உணர்வுகளை எப்படி எடை போட்டு உங்கள் முடிவை எடுத்தீர்கள்...குறிப்பாகப் பெண்கள் பெரிதும் தங்கள் மன உணர்வுகளை தியாகம் செய்து மற்றவர்களின் சந்தோசத்துக்கு உதவுவதை கண்டிருக்கிறோம்...இருந்தாலும் அது இப்போ அருகி வருகிறது.... அதுபோக இப்படியான தியாக உணர்வுள்ள ஆண்களும் இல்லாமல் இல்லை... அப்படியானவர்களின் உண்மையான உணர்வுகளுக்கு சமூகம் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வதே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்...மறுமணத்தை விட....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>