Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
இதுவரை முதல் ஐயம் விதையாய் மனத்தில் விழுந்த விதத்தையும், அதை நான் வளர்த்த விதத்தையும் எழுதினேன். முதலில் நம் மதத்தைப்பற்றி ஐயம் எழுப்புகிறோமே என்ற குற்ற உணர்வு; அதனால் 'ஜெபம்'; அது தோற்றதால் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது என்ற மனச்சமாதானமும், தைரியமும் வர மேலும் மேலும் கேள்விகளை எனக்கு நானே கேட்க ஆரம்பித்தேன். அதனால் 'விசுவாசம் என்று கிறித்துவர்கள் சொல்லும் 'மத நம்பிக்கை' படிப்படியாகக் குறைந்தது. இந்த நிகழ்வுகளை மூன்று நிலைகளாகப்(Phases) பிரித்துத் தருகிறேன்.


PHASE: I

பள்ளியில் பயிலும்போது வருடத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியின் கத்தோலிக்கக் கிறித்துவ மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்கு 'தியானம்' கொடுப்பார்கள். இந்த நாட்களில் நாங்கள் கடவுளைப் பற்றியும், மதக்கருத்துக்களைப் பற்றியும் தியானிக்கவேண்டும். ஆனால், எங்களுக்கு ஒத்த வயதினரோடு ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி நாட்களைக் கழிப்பதில் தனி மகிழ்ச்சி. குதித்து கும்மாளத்தோடு வருவோம். ஆனால், முதல் நாள் முதல் 'பிரசங்கத்திலேயே' தியானம் கொடுக்க வரும் குரு (சாமியார்) , 'பாவம்' (sin) என்பது பற்றியும், இந்தப் பாவத்தின் சம்பளமான சாவு பற்றியும், சாவுக்குப்பிறகு கிடைக்கக் கூடிய 'மோட்சம்-நரகம்' (heaven & hell) பற்றிக் கூறுவார். இதில் மோட்சம் பற்றிக் கூறுவதை விடவும், நரகம், அதன் கொடுந்தண்டனைகள் பற்றியும், அது எப்படி 'நித்தியம் (eternal) , என்பது பற்றியும் சொல்லுவார். நன்கு நினைவில் இருக்கிறது; அந்தச் சின்ன வயதில் இந்த சேதிகள் எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்று. எல்லோருமே பயந்து நடுங்கியிருப்போம். அன்று இரவு தூக்கத்தில் அவனவன் பயந்து உளறுவது சர்வ சாதாரணம். ஆட்டமெல்லாம் இரண்டாம் நாளிலிருந்துதான் !

1 *** பைபிளில் என்னவோ ஒரே ஒரு 'வசனம்' மட்டுமே வருகிறது (Math. 14:50). ஆனால் அது போதும் - பயங்கரமான ஒரு oral and visual effect கொடுப்பதற்கு!! ஒரு மனிதன் மிஞ்சிப்போனால் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருப்பான். நூறு ஆண்டுகள்? அதில் அவன் என்ன தவறு செய்தாலும் 'நித்தியத்திற்கும்' அவனுக்குத் தண்டனை என்பது எனக்கு ஒரு பெரிய முரண்பாடாகத் தோன்றியது. கடவுள் கருணை நிரம்பியவர் என்று ஒரு புறம்; ஆனால், மறுபுறமோ eternal punishment! ஒத்து வரவில்லை. இப்படித் தண்டனை அனுபவிப்பதற்கு என்னைப்பொறுத்தவரை மூன்றே மூன்று மனிதர்களுக்கு மட்டுமே தகுதியுள்ளதாகப் பட்டது: ஹிட்லர், போல்பாட், இடி அமின் ! ஆனால், இந்தத் தண்டனை எனக்கும், உனக்கும் என்பது பொருந்தியதாகத் தெரியவில்லை. இதைப் பார்க்கும்போது நீ செய்த 'கர்ம வினை'களுக்கு ஏற்றாற்போல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறுதியில் 'முக்தி' பெறு என்று சொல்லும் இந்து மதக் கோட்பாடில் 'மனித தர்மம்; மனித நீதி' இருப்பதாகப் பட்டது. (அதற்காக அம்மதக் கோட்பாடுகள் அனைத்தும் எனக்கு உடன்பாடு என்று பொருள் கொள்ள வேண்டாம்.) கடவுளின் தர்மமும், நீதியும் நம் தர்மத்தையும், நீதியையும்விட மேலானதாக இருக்கவேண்டாமோ?

2 *** அடுத்ததாக, நாம் நம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து கற்பிக்கப்பட்ட காரியங்களை எந்தவித ஐயமும் இன்றி, தொட்டிலில் தொடங்கியதைக் கடைசிவரை முழுமையாக நம்புகிறோம். அது ஒரு முழுமையான உண்மைதானா என்று நமக்கு நாமே எப்போதாவது கேள்வி கேட்பதுண்டா; இல்லவே இல்லை. பைபிளில் யேசுவால் சொல்லப்பட்ட பல சிறுநீதிக்கதைகள் (parables) மிகவும் பிரசித்தம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பகுதிகள். இப்போது இவைகளில் எனக்கு ஐயம். எல்லோருக்கும் தெரிந்த 'ஊதாரிப்பிள்ளை" (prodigal son) கதையில் தறுதலையாகச் சுற்றி, சொத்தையெல்லாம் அழித்து வந்த சின்ன மகன் திரும்பிவந்து மன்னிப்பு கேட்டதும் தடபுடல் விருந்து - கொளுத்த ஆட்டை அடித்து விருந்து; அப்பாவோடேயே இருந்து கஷ்டப்பட்டு உழைத்த மகன் தன் நண்பர்களோடு விருந்துண்ண தடை. இது கதை. நம் வாழ்க்கையில் இது போல் நடந்தால் பெரியவன் புதிதாகக் கெட்டுப் போவான்; சின்னவன் மீண்டும் கெட்டுப்போவான். தந்தை இருவரையுமே இழப்பதே நடக்கும். நடப்புக்குச் சரியாக வருமா இந்தக்கதை?

3 *** அடுத்து - இன்னொரு கதை. (Math: 20: 1-16) காலையில் வேலை கேட்டுவரும் ஒருவனுக்கு முழுநாள் வேலைக்கு ஒரு பணம் என்று பேசி வேலை பார்க்கச் சொல்லுகிறார் ஒரு முதலாளி. நேரம் கழித்து வேறு சிலரை தாமே அழைத்து வந்து வேலை தருகிறார். அதன் பின்னும் வேறு சிலருக்கு; மதியம் இன்னும் சிலருக்கு; கடைசியாக வேலை முடியப்போகும் மாலையில் வருபவனுக்கும் வேலை. எல்லாம் சரி. வேலை முடிந்ததும் எல்லோருக்கும்ஒரே கூலி! இது நியாயப் படுத்தப்படுகிறது ! முதலில் வந்து வேலை செய்து முறுமுறுப்பவனுக்குக் கொடுக்கப்படும் பதில்: "என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?" மிக மோசமாக தேர்வு எழுதிய என் மாணவன் ஒருவனையும், நன்கு எழுதிய மாணவன் ஒருவனையும் நான் ஒரேமாதிரியாக மதிப்பிடலாமா? இருவருக்குமே பத்துக்குப் பத்து என்று மதிப்பெண் அளித்தால் என்ன நியாயம்? தொழிலாளி - முதலாளி என்ற உறவை வைத்தே பார்த்தாலும், அந்த முதலாளிக்கு நல்ல தொழிலாளிகளே கிடைக்காதுதான் போகும்! பைபிளில் சொல்லப்பட்டதாலே இக்கருத்துக்கள் சரியாகுமா?

4 *** அடுத்ததாக வந்த ஐயம் ஆழ்ந்த கிறித்துவர்களுக்குக் கோபம் வரவைக்கும் ஐயம்' ஆனால், நானென்ன செய்வது? யேசு இரண்டே இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்.
Math 10;5, 6:"....பிற இனத்தாரின்எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்....மாறாக, வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்
John 17;6 "நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
John 17;9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். ...
இந்த வசனங்கள் தரும் செய்தி என்ன? அவர் தன்னை ஒரு சாதியினரோடு - இஸ்ரயேலரோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையா?

இதைவிட, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று பேய் பிடித்த தன் மகளைக் காப்பாற்ற வேண்டி,தன் முன்னே வந்து நின்ற கானானியப் பெண்ணிடம்(வேற்று ஜாதியைச் சேர்ந்தவள்) "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று சொல்ல (Math 15:25) அந்தப் பாவப்பட்ட பெண் மேலும் இரந்து நிற்க, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" (Math 15:26)(Mark 7:26)என்று ஒன்றல்ல இரண்டு இடங்களில் தேவகுமாரன் சொன்னதாகச் சொல்கிறது விவிலியம். இந்தப்பகுதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் விளக்கம் இன்னமும் வேதனையாக இருக்கும். கடவுள் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்கவே அப்படிப் பேசினாராம். எனக்கு இதில் எந்தவித நியாயமோ, லாஜிக்கோ தெரியவில்லை. 'விசுவாசம்' என்ற 'கறுப்புக் கண்ணாடி'யைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் எனக்குத் தெரிவது "ஜாதித் துவேஷமே".

மேலும், வேற்று ஜாதியினரை ஒதுக்கிவைக்கும் யேசு, தன் உறவினர்களான மார்த்தா, மரியாவின் சகோதரனான லாசர் இறந்தது அறிந்து ...யேசு உள்ளங்குமுறிக் கலங்கி...அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்...யேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்." John 11:33, 35, 38

Rev: 7:4-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.


மொத்தத்தில், ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார். அவ்ர் நல்லவர் என்பதையோ, சொன்ன கருத்துக்களில் பல கருத்துக்கள் நல்லவை என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.


5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு kid stuffபோலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180

7. யேசுவின் வாழ்க்கையில் 12 வயதிலேயே ஆலயத்தில் உள்ள பெரிய குருமார்களிடம் தர்க்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தன் 33-வது வயதில் மறுபடி வெளி வாழ்க்கைக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 'மறைந்த ஜீவியம்' என்று சொல்லப்படும் காலத்தின் தேவை என்ன?

8. "கடவுளின்மேல் பயமே ஞானத்தின் ஆரம்பம்" (Prov. 1:9 )
"ஞானிகளின் ஞானத்தைஅழிப்பேன்;அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்"(Cor. 1:19 )
"ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என் ஆண்டவர் அறிவார்" (Cor. 3:20) இந்த மேற்கோள்கள் ஒரு வினாவை என்னுள் எழுப்புகின்றன: ஏன் (பொதுவாக எல்லா மதங்களுமே ) கிறித்துவம் 'ஞானத்தை', அறிவை (fruit of wisdom was forbidden) ஏன் புறந்தள்ளுகின்றன?

அன்பை மையப் புள்ளியாகவைத்தே கிறித்துவம் இயங்குவதாகக் கூறப்படுகிறது' ஆனால், அன்பு அல்ல கடவுளின் மேல் 'பயமே' ஞானத்தின் ஆரம்பம் என்று விவிலியத்தில் கூறப்படுகிறது. ஏனிந்த முரண்பாடு?


ஏற்கெனவே சொன்னது போல இந்த ஐயங்கள் வர வர ஜெபம் செய்தேன் - ஐயங்கள் விலகட்டும் அல்லது பதில் கிடைக்கட்டுமென்று. இரண்டும் நடக்கவில்லை. அதனல், அடுத்த நிலைக்குச் சென்றேன். அது - கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் உரசிப்பார்ப்பது என்ற நிலை.


அந்த இரண்டாம் நிலை இனி வரும்...

http://dharumi.blogspot.com/2005/09/59-4.html
Reply
Quote:லக்ஷ்மியையும், சரஸ்வதியையும், பிள்ளையாரையும் வழிபடும் தமிழர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் இந்துக்கள். பிள்ளையாரை கடவுளாக கொண்ட கணபதியம், சைவம் போல, ஆறு இந்து மதப்பிரிவுகளில் வேறு ஒன்றாகும்.

<b>இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள் எல்லாம் ஒன்று பட்டுத்தான் இந்து மதம் என்று இன்று அழைக்கப்படுகிறது. ஆதி சங்கரர் காலத்திலேயே பல பிரிவுகள் இணைக்கப் பட்டு விட்டன. சைவ, வைணவச் சண்டைகள் முடிந்து பல நூற்றாண்டுகளகி விட்டன.

நான் கூறியதெல்லாம் யாழ்ப்பாணத்து சைவத்தைப் பற்றி, காஷ்மீர சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல யாழ்ப்பாணத்துச் சித்தாந்த சைவமும், தனக்கேயுரித்த சில சிறப்பான விடயங்களைக் கொண்டுள்ளது. கணபதியை வணங்கும் காணபத்தியமும், சக்தியை வணங்கும் சாக்தமும், முருகனை வணங்கும் கெளமாரமும் சேர்ந்த ஒரு கலவை தான் யாழ்ப்பாணத்துச் சைவம்.

ஆறுமுக நாவலர் சைவமும், தமிழும் ஈழத்துச் சிவபூமியின் இருகண்கள் என்ற சொன்ன வாயாலேயே யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என்றும் சொன்னார்.
பிள்ளையார், லக்ஸ்மி, சரஸ்வதி வழிபாடு, ஈழத்தின் சைவ சித்தாந்த பாரம்பரியத்துக்கு ஒப்பானதே என சுத்த ஈழத்துச் சைவனாகிய ஆறுமுக நாவலரே ஒப்புக்கொள்கிறார். அவரே தன்னுடைய சைவப் பிரகாச வித்தியா சாலையில் நவராத்திரி விழாவை நடத்தியுமிருக்கிறார்.

இதெல்லாம் நவீன மிஷனரிமாரின் விதண்டாவாதம், பெண்தெய்வ வழிபாடு(mother Goddess) பற்றியோ அல்ல்து கன்னி மேரியைக் கடவுள் என்றோ, உருவ வழிபாடு பற்றியோ பைபிளில் எதுவுமில்லை, யேசுநாதர் கூறியதுமில்லை. Pagan வழிபாட்டில் பழக்கப் பட்ட ரோமர்களை Apostle Paul கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிய போது அவர்களிடமிருந்து கத்தோலிக்க சமயத்தில் நுழைந்தது தான் இந்த தாய்க் கடவுள் ( Mother Goddess) வழிபாடு. அதன் பின்பு தான் கன்னி மேரி கடவுளாகக் கருதப்பட்டார், கத்தோலிக்கத்திலுள்ள சடங்குகளும், புனிதர்கள் வழிபாடும் பைபிளில் இல்லை. எல்லாம் ரோமர்களின் pagan religion இலிருந்து வந்தவை தாம்.

அதனால் நாங்கள் எவரும் கன்னி மேரியைக் கடவுளாகக் கருதும் எவரும் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லை. காலத்திற்கேற்ப மதங்களில் மாற்றம் ஏற்படுவதும், வழிபாட்டு முறைகள் மாறுவதும் சாதாரண விடயம்.



Quote:இந்து மதம், சைவம், மட்டுமல்ல கிறிஸ்தவமும், இஸ்லாமும், புத்த சமயமும் கூட தமிழுடன் பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்டன. ஏதோ சைவமும், இந்து சமயமும் தமிழுடன் சிறப்பான உறவு இன்றும் கொண்டிருப்பதாக காட்டுபவர்கள், மற்ற சமயத்தவரை இரண்டாம்தர தமிழர் என்று காட்டுவது போல அமைகிறது. தமிழரிடம் சைவமும், இந்து சமயமும், காலத்தால் முற்பட்டு வந்திருந்தாலும், மற்ற சமயங்களும் இன்று தமிழுடன் கலந்து விட்டன

[b]தமிழர்கள் பலரும் பல்வேறு சமயத்தைத் தழுவிக் கொண்டார்கள். சில தமிழர்கள் ஜெகோவாவின் சாட்சிகளாகவும், ஈரானில் உருவான பஹாய் சமயத்தைக் கூடக் கடைப்பிடிக்கிறார்கள். அதற்காக தமிழரின் பாரம்பரியத்தைப் பாரசீகப் பாரம்பரியம் என்றோ பைபிளின் பாரம்பரியம் என்றோ கூறமுடியுமா?

உதாரணமாக SPAIN நாட்டை எடுத்துக் கொள்வோம், தமிழருக்கும், கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்பை விட துருக்கர்களுக்கும், இஸ்லாம் மதமும் ஸ்பெயின் நாட்டுடன் நெருங்கிய நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தன. ஸ்பெயினின் கட்டிட, கலை,கலாச்சார வளர்ச்சிக்கு துருக்கர்களினதும் , இஸ்லாத்தினதும் பங்களிப்பு கணக்கிட முடியாது. யாராவது ஸ்பானியரிடம் ஸ்பெயினின் பாரம்பரியம், இஸ்லாமும், துருக்கியரின் கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா? எந்த ஸ்பானியராவது அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா? அவர்கள் சொல்வதெல்லாம் ஸ்பெயின் கிறிஸ்தவப் பாரம்பரியம் கொண்ட கிறிஸ்தவ நாடு என்பது தான், பல நூற்றாண்டுகளான துருக்கத் தொடர்பையும், இஸ்லாமியப் பங்களிப்பையும்அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை.

பிரான்சில் 10% இஸ்லாமியர்கள், முழு ஐரோப்பாவிலும் 20% முஸ்லிம்கள் (with Albania, Turkey and Bosnia), அமெரிக்காவில் முஸ்லிம்களின் தொகை 12% இன்னும் வளர்ந்து வரும் மதம், இன்னும் ஐரோப்பாவின் கலாச்சாரப் பாரம்பரியமும், அமெரிக்காவின் பாரம்பரியமும் கிறிஸ்தவப் பாரம்பரியமும், பைபிள் கலாச்சாரம் தானே தவிர இஸ்லாமியப் பாரம்பரியமோ, குரான் கலாச்சாரமோ அல்ல.

அமெரிக்காவில் Bible belt என்று தான் என்று சில மாநிலங்களைக் குறிப்பிடுகிறார்கள், சிக்காகோவில் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் அதற்காக South side Chicago வை யாரும் QURAN BELT என்று அழைப்பதில்லை.


தமிழர்கள் பல மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள், மாறிக்கொண்டிருக்கிறார்கள், மாறுவார்கள் ,ஆனால் தமிழரின் பாரம்பரியம் சைவம் என்பதை மறுப்பவர்கள், ஐரோப்பியருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதி சொல்பவர்கள்.

இத்தாலி நாட்டில் பல இன, பல மத மக்கள் வாழ்கிறார்கள், இத்தாலியின் அரசியலமைப்பு இத்தாலி ஒரு கிறிஸ்தவ நாடு, இத்தாலியின் பாரம்பரியம் கிறிஸ்தவ பாரம்பரியம், என்று சொல்லா விட்டாலும் அது கிறிஸ்தவ நாடு தான், அது கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட கிறிஸ்தவ நாடில்லை என்று யாரும் வாதாடுவதில்லை. ஏனென்றால் இந்த விதண்டாவாதத்துக்கு தமிழரிடையில் நவீன மிஷனரிமார் உள்ளது போன்று அவர்களிடம் இல்லை. யாராவது லத்தீனும் கிறிஸ்தவமும் பிரிக்க முடியாதென்று சொன்னால் யாரும் மூச்சுக் காட்ட மாட்டார்கள், சைவமும், தமிழும் பிரிக்க முடியாதென்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்




Quote:தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் குத்துக்கள், கால்தரிப்பு, அரைத்தரிப்பு, முழுத்தரிப்பு போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய பாதிரி பெஸ்கி, முதல் தமிழ் கிறிஸ்தவ இலக்கியமான தேம்பாவணியை இயற்றினார். கண்ணதாசனின் யேசு காவியம் அண்மைக்கால கிறிஸ்தவ இலக்கியமாகும். தமிழின் ஐம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, புத்தசமயத்து இலக்கியமாகும். மணிமேகலை ஒரு புத்த துறவியாவார். இதே போல தமிழில் இஸ்லாமிய இலக்கியங்களும் உள்ளன. உமறுப்புலவர் 13 ம் நு}ற்றாண்டில் இயற்றிய 5000 பாடல்களை கொண்ட சீறாபபுராணம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


[b]வீரமாமுனிவரைப் பற்றி நானும் வாசித்துள்ளேன். (Inernet is amazing <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ). வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் காதல் கொண்டு தமிழனாக மாறி, மேல் நாட்டுப் பாதிரியார்களின் ஆடையைத் துறந்து காவியுடுத்தி ஒரு சைவத் துறவி போல் வாழ்ந்தார். அவருடைய பரமார்த்தகுருவும் சீடர்களும், தேம்பாவணியும், மற்றும் உமறுப் புலவரின் நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், சீறாப் புராணம் எல்லாமே, தமிழில் முன்பேயிருந்த வழக்கத்தை தழுவி அவரவரின் மதத்துக்காக எழுதப்பட்டதேயல்லாமல் அவர்கள் தமிழில் எதும் புதிதாகக் கண்டு பிடித்தவையல்ல.

தேம்பாவணியின் செய்யுள்களில் தேவார வாசம் நிறைய உண்டு. உமறுப் புலவரின் புராணமும், பிள்ளைத் தமிழும் சைவத்தில் முன்பே உள்ள பிள்ளைத் தமிழ் வழக்கையும், புராணங்களின் வழக்கையும் தழுவி எழுதப்பட்டது.

அவர்களின் தமிழ்ப் பற்றையும், தமிழ்த் தொண்டையும் நான் ஒன்றும் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் தமிழரின் தொனமையான பாரம்பரியத்தில் தமிழரின் எந்தவொரு பிற்கால, பரதேசிகளின்( Foreigners) மதங்களையும் விட தமிழரின் வைணவமும், சைவமும் தமிழுடன் இரண்டறக் கலந்து விட்டன, அவை பிரிக்க முடியாதவை என்பது தான் என்னுடைய வாதம்.

புத்த சமயத்துக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது, இன்று ஈழத்தில் தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாதிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்த வரையில் புத்த சமயத்துக்கும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் உள்ள தொடர்பு கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமுக்குமுள்ள தொடர்பை விட அதிகமானதாகும்.


இன்று பல இந்தியர்கள் ஆங்கில இலக்கியத்தில் வல்லமையுள்ளவர்களாக, ஆங்கில எழுத்துத் துறையில் ஓளிவீசுகிறார்கள். வீரமாமுனிவர் தமிழில் கொண்ட காதலால் தேம்பாவணி இயற்றியது போன்று அவர்களும் ஆங்கிலத்தில் உள்ள புலமையால். ஆங்கில இலக்கியத்தில் நோபல் பரிசு கூட வாங்குகிறார்கள், அதற்காக இந்தியக் கலாச்சாரத்துக்கும் அல்லது இந்தியர்களுக்கும், ஆங்கிலத்துக்குமுள்ள தொடர்பு பிரிக்கமுடியாது என்று சொன்னால் எப்படியோ அப்படித் தான் இறக்குமதி செய்யப் பட்ட மதங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தில் சம உரிமை கொண்டாடுவது.

தமிழர் என்ற முறையில் சாதி, சமய வேறுபாடற்ற முறையில எல்லாத் தமிழர்களுக்கும் தமிழ்க் கலாச்சாரத்தில் பங்குண்டு அதை நான் மறுக்கவில்லை. ஆனால் யாரும் தமிழுக்கும் சைவத்துக்கும் உள்ள பிணைப்பைக் கேள்வி கேட்பது நியாயமற்றது மட்டுமல்ல வெறும் சிறு பிள்ளைத்தனமான குறும்புச் செயலும் கூட.


Quote:ஈழத்து இந்துக்கள் ஐயர்களை ஐயா என்று மதிப்புடன் அழைப்பார்கள். அவர்கள் மனம் புண்படும்படி தாங்கள் எழுதியதெல்லாம் போதாதா என்று கேட்கிறீர்களா


[b]நான் இந்து சமயத்தைப் பிராமணர்களின் ஏக சொத்தாக நினைக்கவில்லை. அதை விட நான் எதிர்ப்பதெல்லாம் ANTI TAMIL பிராமணரைத் தான். தமிழை வெறுக்கும், தமிழைத் தமிழன் கட்டிய கோயிலுக்குள் விடாமல், தமிழை இகழ்ந்து கொண்டே தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கும் பிராமணர்களைத் தான் நான் எதிர்த்தேன், இனியும் எதிர்ப்பேன். பலர் அந்த \"ஐயா\" என்ற மரியாதைக்கு அருகதையற்றவர்கள், இனிமேலாவது அவ்ர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானியுங்கள் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.</b>





Quote:இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற வழக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பலரும் .இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற பாதிப்புகளை பற்றி
எழுதுகிறார்கள். சாதிமுறையை இஸ்லாம் தமிழருக்கு அறிமுகப்படுத்தவில்லை. கிறிஸ்தவம்அறிமுகப்படுத்தவில்லை. புத்த சமயமோ, சமண சமயமோ அறிமுகப்படுத்தவில்லை. இந்து சமயம் அறிமுகப்படுத்தியது. சமயம் மாறியவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை. அதனால் இந்து சமயத்தை குறை கூறுகிறார்கள். ஈழத்து இந்து சமய பெரியார்கள், சாதிமுறையை எதிர்த்து \"அதை கைவிடுங்கள்\" என்று கேட்கவில்லை. மாறாக ஆறுமுகநாவலர் போன்றவர்கள், வெளிப்படையாகவே முதலாம் சைவவினாவிடை போன்ற சமய நு}ல்களில், சாதிமுறை தீண்டாமையை ஆதரித்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

<b>சாதி முறை தமிழரின் சைவ சமயத்தில் இருக்கவில்லை. அது பிராமணர்களாலும் அவர்களின் மனு சாஸ்திரத்தாலும் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது.

\"சங்கநிதி பதுமநிதியிரண்டும் தந்து தரணியொடு
வானாளத் தருவரேனும், மங்குவாரவர் செல்வம் மதிப்போமல்லோம்,
மாதேவர்க் காந்தரல்லாராகில்

\"அங்கமெலாம் அழுகொழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்பராகில்,
அவர் கண்டீர் நாம் வணங்கும் கட்வுளாரே\"

என்ற நாவுக்கரசர் தான் உண்மையான சைவத்தின் சாதி வெறியற்ற முகத்தைக் காட்டுகிறார். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பல சித்தர்களின் சமயமும் சைவம் தான்.


நாவுக்கரசர் சொல்கிறார் \"உடலெல்லாம் அழுகும் தொழு நோயுள்ளவர்களாக, மாட்டை வெட்டித் தின்னும், புலையராக இருந்தாலும் கூட, கங்கையைச் சடையில் சூடிய சிவபெருமானை வழிபடுபவர்களாக இருந்தால் அவர்கள் தான் எங்களுக்குக் கடவுள். இது தான் சாதி வெறியில்லாத சைவம்.

சைவத்தில் சிவனுக்குச் சமமாகப் போற்றப்படும் 63 நாயன்மார்களில் எல்லா சாதியினரும் அடங்குவர். சைவமும் சிவனும் சாதிப் பாகுபாடு காட்டியதில்லை.அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெற்றான் சாம்பன் (நந்தன்) பிறப்பினால் புலையர் சாதி. அதேபோல் கண்ணப்பன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த வேடன். திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர், திருநீலகண்ட நாயனார் குயவர், சுந்தரமூர்த்தி நாயனார் பரத்தையர் குலத்தில் பிறந்த பரவையாரைத் திருமணம் செய்தவர். அதிபத்த நாயனார் நுளையர் (மீன் பிடிப்பவர்) திருமூல நாயனார், ஆனாய நாயனார் இருவரும் இடையர், ஏனாதி நாயனார் சான்றார், கலிய நாயனார் செக்கார். எஞ்சியவர்கள் அரசர், அந்தணர், ஆதிசைவர், வேளாளர் என வெவ்வேறு வகுப்பினராக இருந்தார்கள்.


சைவத்தில் சாதியுண்டென்று பரசமயம் மாறியவர்களால் ஏன் இன்னும் சாதியைத் தங்களிடமிருந்து விட்டொழிக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் சமயம் மாறிய கிறிஸ்தவர்கள் இன்னும் தங்களிடையிலுள்ள சாதிப் பாகுபாட்டிற்குச் சைவத்தைக் குறை கூறுவது தான். அப்படியென்றால் இந்து சமயத்தை விட்டுப் போகத் தெரிந்தவர்களால் இந்து சமயம் அறிமுகப் படுத்திய சாதியை மட்டும் விட முடியவில்லையா?.

பல கிறிஸ்தவர்கள் இந்துக்களை விட சாதி வெறியர்கள். இந்து சமயத்தின் சாதியைக் குற்றம் சாட்டி, புத்த சமயத்துக்குப் போன இந்தியாவின் தாலித்துகள் இன்னும் வெறும் புத்த சமயத் தாலித்துகள் தான் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. அக்கரைக்கு இக்கரைப் பச்சை அவ்வளவு தான்.


ஆறுமுக நாவலர் இருந்த கால கட்டம் வேறு, அதையறியாமல் அவரைச் சாடுவது அபத்தம். அவருக்கு சாதியை விடப் பெரிய எதிரியுடன் போராடி சைவத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மிஷனரிமாரின் மதமாற்றங்களிலிருந்து சைவத்தை காப்பாற்ற வேண்டியது தான் அவரது முக்கிய நோக்கம், அவர் அதில் ஒரளவு வெற்றியும் கண்டார். ஆறுமுக நாவலர் பைபிளை மொழி பெயர்த்தார், பைபிளில் உள்ள நம்பிக்கையில் இல்லை.
அவருடைய ஆங்கில திறமையைக் கண்ட பீட்டர் பேர்சிவல் பாதிரியார் அவரிடம் கேட்டுக் கொண்டார். பைபிளை மொழி பெயர்த்ததால் தான் அவருக்கு அதிலுள்ள மூடத்தனங்கள் தெரிய வந்தன

Quote:கிறிஸ்தவம் கேவலமான சமயம். அதன் அட்டகாசமெல்லாம் ஐரோப்பாவிலேதான் பெரும்பாலும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்திலும் தன்னினசேர்க்ககைக்கு சிறுவர்களை வன்புணர்வு செய்த பாதிரிகளும், ஆலயங்களில் பாட்டுப்பாட வந்த இளம் பெண்களுடன் ஓடிப்போன பாதிரிகளும் இருந்தார்கள். சலுகைகளுக்காக மதமாற்றம் நடந்தது. ஆனால் ஒழுக்கம் தவறிய பாதிரிகளை கிறிஸ்தவம் \"இது எமது சமய பண்பாடு\" என்று ( சாதி தீண்டாமையை இந்து பெரியார்கள் செய்தது போல) மூடி மறைக்கவில்லை. மக்கள் பாதிரிகளை கலைத்து விட்டார்கள். சமயம் அவர்களை ஒதுக்கி விட்டது.


[b]எந்த இந்துப் பெரியார்கள் இந்து மதக் குருமார்கள் செய்ததை மூடி மறைத்தார்கள். இந்து சமயம் ஒரு திறந்த சுதந்திரமான மதம். இந்து சமயத்தில் ஒரு பாப்பாண்டவரோ, பிஷப்போ இல்லை மூடி மறைப்பதற்கு. இந்து மதக்குருமார் ஏதும் பாதிரிமார் செய்யும் பாலியல் அட்டூழியம் போல் இங்கு செய்தால் கள்ளப் பிராமணியென்று கழுத்துக்குள் இரண்டு கொடுப்பதற்கும் இந்துக்கள் தயங்குவதில்லை.
கடந்த வருடம் BOSTON BISHOP அமெரிக்காவிலுள்ள homosexual and child molesting priests ஐ மூடி மறைத்து இறுதியில் தான் Resign பண்ணினாரே அது எப்படி. இலங்கையில் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் Child molestation and homosexuality வெளியே வருவதில்லை</b>.



Quote:சலுகைகளுக்காக மதம் மாறிவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதைக்கண்டுதான் இந்து போர்ட் உருவாக்கப்பட்டு இந்து கல்லு}ரி இந்துக்களுக்கு கட்டப்பட்டு இந்துக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. இதனால் மக்களுக்கு நன்மையே விழைந்தது. அதை ஏன் மக்கள் எதிர்க்க போகிறார்கள்
.


<b>அன்னியர்கள் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்திய போது. எங்களுடைய பண்பாட்டுச் சின்னங்களாகிய கோயிலகளை இடித்தழித்த போது, தமிழர்களைக் கேவலமாக நடத்திய போது சலுகைகளுக்காக தங்களுடைய சமயம் மாறி அன்று அன்னியர்களுக்கு பந்தம் பிடித்தவர்களுக்கும் , இன்று சலுகைகளுக்காக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் தமிழர்களுக்குமிடையில் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை</b>.
Reply
preethi Wrote:நான் கூறியதெல்லாம் யாழ்ப்பாணத்து சைவத்தைப் பற்றி, காஷ்மீர சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல யாழ்ப்பாணத்துச் சித்தாந்த சைவமும், தனக்கேயுரித்த சில சிறப்பான விடயங்களைக் கொண்டுள்ளது. கணபதியை வணங்கும் காணபத்தியமும், சக்தியை வணங்கும் சாக்தமும், முருகனை வணங்கும் கெளமாரமும் சேர்ந்த ஒரு கலவை தான் யாழ்ப்பாணத்துச் சைவம்.
ஆறுமுக நாவலர் சைவமும், தமிழும் ஈழத்துச் சிவபூமியின் இருகண்கள் என்ற சொன்ன வாயாலேயே யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என்றும் சொன்னார்.
பிள்ளையார், லக்ஸ்மி, சரஸ்வதி வழிபாடு, ஈழத்தின் சைவ சித்தாந்த பாரம்பரியத்துக்கு ஒப்பானதே என சுத்த ஈழத்துச் சைவனாகிய ஆறுமுக நாவலரே ஒப்புக்கொள்கிறார். அவரே தன்னுடைய சைவப் பிரகாச வித்தியா சாலையில் நவராத்திரி விழாவை நடத்தியுமிருக்கிறார்.

தமிழன் என்று சொன்ன பிராமணனை காட்டு என்றீர். பாரதியை காட்டினேன்.

நான் பாரதியை பிராமணனாக பார்க்கவில்லை என்று பிதற்றினீர்.

தமிழர் சைவர் என்றீர். ஈழத்து தமிழர் இந்து கடவுள்களான சரஸ்வதியையும் லக்ஷ்மியையும் வழிபடுகிறார்களே என்றால் உடனேயே எங்கள் யாழ்ப்பாண சைவத்தில் நாங்கள் எல்லாப் பரதேசி கடவுள்களையும் கும்பிடுவோம் என்கிறீர்.

துணைக்கு வேறு ஆறுமுகநாவலரையும் இழுக்கிறீர். ஆறுமுகநாவலர் லக்ஷ்மியை கும்பிட்டிருந்தால் அவர் இந்து. அவர் தன்னை சைவர் என்று சொன்னதன் அர்த்தம் சைவமும் இந்து சமயத்துள் அடக்கம் என்பதனாலாக இருக்கலாம். அவர் பிள்ளையாரை வழிபட்டிருந்தால் அவர் கணபதியரும் கூட. யாழ்ப்பாண சைவம் கலவை என்கிறீர். <b>அந்த கலவைக்கு பெயர் தான் இந்து மதம். </b>


போதாதற்கு வந்தேறு சமயமான இந்து சமயம் (பிராமணரால் கொண்டுவரப்பட்டது) தமிழோடு ஒன்றிக்கலந்தது. மற்ற சமயத்தவரெல்லாம் சிங்களவருக்கு துணைபோகும் துரோகிகள் போன்றவர்கள் என்கிறீர்.


preethi Wrote:அன்னியர்கள் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்திய போது. எங்களுடைய பண்பாட்டுச் சின்னங்களாகிய கோயிலகளை இடித்தழித்த போது, தமிழர்களைக் கேவலமாக நடத்திய போது சலுகைகளுக்காக தங்களுடைய சமயம் மாறி அன்று அன்னியர்களுக்கு பந்தம் பிடித்தவர்களுக்கும் , இன்று சலுகைகளுக்காக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் தமிழர்களுக்குமிடையில் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உங்களுக்கு கள்ளிறக்கவும், குப்பை அள்ளவும், மலம் கழுவவும் தான் மூன்றில் ஒரு பங்கு ஈழத்தமிழர் தேவை. ஆறுமுகநாவலர் தான் கட்டிய பள்ளிக்கூடங்களுக்கு இவர்களை விடமாட்டார். கிறிஸ்தவன் பள்ளிக்கூடத்துக்கும் விட்டு, அரசாங்க வேலையும் கொடுத்தான். உங்களுக்கு கைகட்டி, வாய் பொத்தி, மலம் கழுவி, குப்பை அள்ளா விட்டால், துரோகிகள்! இது தான் ஆறுமுகநாவலரின் முதலாம் சைவவினாவிடை உங்களுக்கு சொல்லிக் கொடுத்த சைவ சித்தாந்த மரபு!.

தமிழில் கிறிஸ்தவன் இயற்றிய காவியமான தேம்பாவணியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணமும் காவியங்களாக (கதைகள்) போற்றப்படுகின்றன. நீர், ஏதோ நீர் தான் பெரிய பண்டிதர் போல, இவை ஒன்றும் தமிழை மேம்படுத்தவில்லை. தமிழர் மதம் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் காவியம் எல்லாம் தமிழாகாது என்று பிதற்றுகிறீர். புத்தகாவியம் மணிமேகலை, தமிழின் ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. எந்த சைவ, இந்து காவியமும் இந்த சிறப்பு பெறவில்லை. சிவபுராணமோ, பெரிய புராணமோ இந்த சிறப்பை பெறவில்லை. ஆகவே தமிழும், சைவமும் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக சொல்பவர்கள் சமய சாதி வெறி தடித்த ஆறுமுகநாவலரின் வாரிசுகளே அன்றி மற்றவர்கள் அல்ல.

<b>
மொன்றியலில் (இரண்டாவது பெரிய ஈழத்தமிழர் தொகையை கொண்ட கனேடிய நகரம்) வாழ்ந்தாலும் தமிழரோடு சேர்வதில்லை வடஇந்தியரோடு தான் சேர்ந்து வாழ்கிறேன் என்கிறீர்.</b>

<b> ஈழ பிராமணரை சாதி சொல்லி பிரிக்கப்பார்த்தீர்.
இப்போது சமயத்தை காட்டி ஈழத்தமிழரை பிரிக்கப்பார்க்கிறீர்.</b>


<b>
என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம் நீர் இந்திய புலனாய்வு பிரிவுக்கு (றோ) தெரிந்தோ தெரியாமலோ வேலை செய்கிறீர் என்பதாகும்.. மற்றவர்கள் கவனிக்க.</b>
Reply
[b]என்னுடைய பதிலிலிருந்து இதைத் தான் உம்மால் கிரகிக்க முடிந்ததென்றால் இதற்கு மேலும் உம்முடன் என்னுடைய நேரத்தை வீணாக்குவதில் ஏதும் பயன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உம்மைப் போன்ற பலர் விரும்பாது விட்டாலும், இன்றும் பெரும்பாலான ஈழத்தமிழரின் சமயம் ஆறுமுக நாவலரின் சைவசமயம் தான். அந்த இந்து சமயம் என்ற "கலவையை" எல்லா ஈழத்தமிழர்களும் விட்டு, விடத் தயாராக இல்லை. ஈழத்தமிழர்களின் சைவம் இன்றைய இந்து சமயத்தின் ஒரு பகுதி, Sub group என்பதை நான் முன்பே சொன்னேன்.

இந்து சமயம் தமிழோடு ஒன்றிக்கலந்தது என்பதில் எந்தப் பண்டிதர்களுக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர. என்னுடைய முன்னோர்கள்,அன்னியராட்சிக் காலத்தில் அவர்களின் சலுகைகளுக்காக தங்களுடைய கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும், தங்களின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், அதைப் பற்றி நான் பெருமைபடுவதில் என்ன தவறு.


உம்முடைய பதிலிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, நீர் சைவ வெள்ளாளத் தமிழர்களுக்கு மட்டும் தான் பறையடிக்கத் துடிக்கிறீர் என்று. நான் வீரமாமுனிவரினதும், உமறுப்புலவரினதும் தமிழ்த்தொண்டையோ, தமிழ்ப்பற்றையோ மறுக்கவில்லை. ஆனால் நீர் நாயன்மார்களினதும், ஆள்வார்களினதும் பக்தி இலக்கியங்கள் முழுவதையும் மூடி மறைக்கிறீர்.


வண. பிதா. தனிநாயகம் அடிகளார் தமிழைப் பக்தியின் மொழியென்று சொன்னது, தேம்பாவணியையும், உமறுப்புலவரின் சீறாப் புராணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டல்ல. தமிழுக்கு பக்தியின் மொழி என்று பெயர் கிடைத்ததற்குக் காரணம் நாயன்மார்களின் பக்தி கனிந்துருகும் தேவாரங்களும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களும் தான். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை நீர் நீச்சயமாக அறிந்திருப்பீர் என்று நம்புகிறேன்.


மாணிக்க வாசகர் பாடிய சிவபுராணமும் திருவாசகம் தான். சேக்கிழாரின் பெரிய புராணத்தினதும், திருவாசகமாகிய சிவபுராணத்தின் செழுமையும், இனிமையும், பக்தியும் தேம்பாவணிக்கோ, சீறாப் புராணத்திற்கோ சளைத்தவையல்ல. உமக்கு இந்துக்களிடமுள்ள காழ்ப்புணர்ச்சி அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.


தமிழில் கிறிஸ்தவன் இயற்றிய காவியமான
தேம்பாவணியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணத்தையும் யாரும் மற்றப் பக்தி இலக்கியங்களை விடச்
சிறந்தவையென்று கூறியதை நீரூபியும்.தேம்பாவணியும், சீறாப் புராணமும் பிற்காலப் பக்தி இலக்கியங்கள், முன்னைய பக்தி இலக்கியங்களை மருவி முறையே கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மேல் பாடப்பட்டவை. நான் அவற்றைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தமிழுக்குப் பக்தியின் மொழியென்று பெயர் வந்தது இந்த இரண்டு நூல்களாலும் மட்டுமல்ல.


"If Latin is the Language of Law and of Medicine
French the Language of the Diplomacy
German the Language of Science
And English the Language of Commerce
Then Tamil is the Language of Bhakti
The devotion to the sacred and the holy."

~Rev. Fr. Thaninayakam~




(Only the losers தான் வேறு context இல் சொன்ன தனிப்பட்ட விடயங்களைச் சம்பந்தமில்லாத விடயத்துடன் இணைத்துக் கதைப்பார்கள். எனக்கு வட இந்திய நண்பர்கள் மட்டுமல்ல பன்னாட்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.

உம்முடைய கருத்தின் படி நான் FBI, ISI , சீனர்களின் Secret Service எல்லாவற்றுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ வேலை செய்ய வேண்டும், உம்முடைய கற்பனையைக் கண்டபடி அலைய விடாதேயும். நான் தமிழன் என்பதால் தமிழர்கள் தான் எனக்கு நண்பர்களாக இருக்க வேண்டுமென்பது ஒரு விதியல்ல. நண்பர்களாக யாரும் அமையலாம். ஒருவரும் நண்பர்களை விபரங்களுடன் தேடித் திரிவதில்லை. அது அமைவதைப் பொறுத்தது. எவரும், எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவும் முடியாது.

நான் ஒரு ஈழத்தமிழன் தான் எனக்கு ஈழத்தமிழர்களைப் பிரிக்க வேண்டுமென்ற தேவை கிடையாது இது உம்முடைய புலம்பல், ஆனால் உம்மைப் போன்றவர்கள் தான் ஈழத்தில் இன்றுள்ள நிலையைப் பாவித்து, யாரோ வெள்ளாளர் என்றோ செய்த அநீதிகளுக்காக ஈழத்து இந்துக்களை அதிலும் இன்னும் இந்து சமயத்தை ஈழத்தமிழரின் பாரம்பரியமாகக் கருதும் வெள்ளாள இந்துக்களைப் பழிவாங்கத் துடிக்கிறீர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

நான் சாதியைப் பற்றிக் கதைக்க இங்கு வரவில்லை. எனக்குப் பிராமணச்சாதியுடன் எந்தப் பிரச்சனையுமில்லை. அவர்கள் தமிழைத் தமிழர் கட்டிய கோயிலில் எதிர்த்ததை நான் நேரில் பார்த்ததால் தான் அவர்களை எதிர்க்கிறேன், ஆனால் நீர் தான் வெள்ளாளருக்கு எந்த நேரமும் பறையடிக்கத் துடிக்கிறீர்.
<b>
?</b>
--
Reply
[quote=Nitharsan][quote]தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்[/quote]


தமிழன் கனக்க பெற்று விட்டான் நண்பரே!

தமிழன் கனக்கப் பெற்று விட்டானா? கொஞ்சம் விளக்கமா சொல்லுறீங்களா அன்பரே? இளந்த வரலாற்றையா இல்லை. அன்றாடம் காச்சிகளாய் இருக்கும் நிலையா?. இல்லை கடவுளின் பெயரால நடக்கிற இனவெரித்தனத்தையா?..

என்ன சொன்னீர்கள் கடவுளின் பெயரால மனிதந்தான் தவறு செய்கிரானா? அதை எல்லம் உருவாக்கியவன் கடவுள் தானே அதத்தானே சொல்ல்கிரீர்கள் கடவுள் காப்பார் எண்று. இதைத் தட்டிக்கேக்க கடவுள் வரமாட்டார் எண்ட நம்பிக்கைதான் எல்லாரையும் அப்பிடிச் செய்ய வத்திருக்கிறது. இது தான் மதம் சொல்லவிலை என்கிரீர்களா?.

நீங்கள் கேட்டதெல்லம் இந்து சமயம் செய்ததா என்கிரீர்களே. அது செய்ய வில்லை மனிதர்கள் செய்தார்கள். அப்ப அதைப் பார்த்துக்கொண்டு எல்லாம் வல்ல இரைவன் பிரம்மாவும் விஸ்னுவும் இல்லை விநாயகரும் முருகனும் பேசமல் இருந்து தூண்டினார்கள். கடவுள்களாக அவர்கள் செய்தது அதுதான். அது மட்டும் தான்..
:::::::::::::: :::::::::::::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)