08-21-2003, 11:24 AM
மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது. இதற்குள் ஏன் அரசியலுக்கு வந்தது என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். அரசியலில் நீங்கள் இன்னமும் நிறையப் படிக்க வேண்டியுள்ளது. குப்பை அரசியலை விட்டு விட்டு யதார்த்தமர்ன நிலைமைகளைப் படியுங்கள். அதை விடுத்து நீங்கள் எதிர்க் கருத்துக்களை வைத்ததாகவும், அதை நான் தணிக்கை செய்ததாகவும் அனுதாப வாக்கு (களத்தில் இச் சொல் அதிகம் நீங்களே பாவித்துள்ளீர்கள்) தேட முனைய வேண்டாம். மிக மிக பொய்யான, கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய கருத்துக்களை மீளவும் பார்த்தீர்கள் என்றால் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய எத்தனை கருத்துக்கள் இங்கு தணிக்கை செய்யாது விடப்பட்டுள்ளன என்று புரியும். எத்தனையோ கருத்துக்களை திசை திருப்பிய பெருமையும் உங்களையே சேரும். எழுதும் கருத்துக்கள் பலவற்றில் அரசியல் என்று கொச்சைப்படுத்தல்களைப் புகுத்தி கருத்துக்களைத் திசை திருப்பியிருக்கின்றீர்கள். எந்தக் கருத்தை எடுத்தாலும் அதற்குள் போரட்டத்தை இணைத்து அதை கொச்சைப்படுத்திய பெருமை உங்களுக்கு சாரும் என்பதை உங்கள் கருத்துக்களை மீள பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்து நீங்கள் "பிரியாவிடை" தொடங்கி அதற்குள் 77ம் ஆண்டுக் கதைகள் எண்டு நீள்கின்றது. நீங்கள் இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாரிடமே சலுகைபெறுவதற்காகவே இந்த "சலாம்" போடுதல் நடக்கின்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன்.
ஒருவர் செய்த நல்லவற்றையும், தவறுகளையும் சுட்டிக் காட்டலாம். ஆனால் நீங்கள் எப்போதோ, எங்கொ, எதற்காகவே நடந்தவற்றை அரைத்த மாவை அரைப்பது என்பது போல திரும்பத்திரும்ப ஒரு நான்கு வரிகளை மட்டும் சுத்தி, சுழட்டி எழுதிவிட்டு எதிர்க்கருத்து என்கின்றீர்கள். மற்றும் அன்று நடைபெற்றவை அந்தந்த காலங்களில் தேவையானவையாக இருந்தவைதான். உங்கள் கருத்துக்களில் புதிதாக எதுவும் இருந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அரசியல் அறிவு என்பது கிடையாது. ஒரு விடயத்தை ஆழ நோக்கும் பக்குவம் கிடையாது.
சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops: