![]() |
|
பிரியாவிடை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: பிரியாவிடை (/showthread.php?tid=8206) |
பிரியாவிடை - Mathivathanan - 08-20-2003 எச்சரிக்கை 7 வந்துள்ள நிலையில் என்நேரமும் வெளியேற்றப்படலாம்.. என்ற நிலையில் முன்கூட்டியே என்னுடன் கருத்தாடிய அத்தனைபேருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. தரப்படுத்தல் என்பதன் பதம் விளங்காமல் அவத்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு திரு மோகன் அவர்கள் இதுதான் தரப்படுத்தல் என சுட்டிக்காட்டியமைக்கு அவருக்கும் நன்னியுடையவனாகிறேன். மேலும் எனது கருத்தை எனது கருத்தாக எடுத்து நேர்மையுடன் ஒருபெயரில் கருத்தாடிய அனைவருக்கும் நன்றி. "என்ன தலையைச் சொறியுறியள்" எனது கருத்துக்கள் அனைத்தும் அடி மனதிலிருந்து வந்தவையேயன்றி நுணிநாக்கிலிருந்து வரவில்லையென்பதையும் வலியுறுத்திக்கூறுகிறேன்.. போராட்ட மோகன் இன்னும் 10 வருடங்களில் நான் இக்களத்தில் எழுதியவற்றை இரைமீட்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. செய்த தணிக்கைகளுக்கும் மனம்வருந்துவார்.. சிந்திப்பார் என இப்போது கூறி தொடர்ந்து வெளியேற்றப்படும்வரை எனது சொந்தக் கருத்துக்களை பயப்படாமல் எழுதுவேன் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். - nalayiny - 08-20-2003 மதி..!!!!!?????????????????????? :? - sOliyAn - 08-20-2003 அடடா.. இன்னும் மூன்று இருக்கா.. யாரை மன்னிச்சாலும் துக்ளக் 'சோ"வை மன்னிக்க முடியாது. வாழ்க தமிழீழம். - Kanani - 08-21-2003 தாத்தா போகாதீங்கோ... நீங்கள் இல்லாட்டி யார் கேள்விகள் சந்தேகம் கேட்கிறது? பிறகு எப்படி மக்களைத் தெளிவு படுத்துவது? நில்லுங்கோ தாத்தா - Paranee - 08-21-2003 அது சரி தாத்தா போய்வர வாழ்த்துக்கள்(G.mathivathanan) இருக்குத்தானே !!! தாத்தா எல்லோருமே ஒரு பக்கமாக சொல்லிக்கொண்டிருந்தால் மறுபக்கத்தைப்பற்றி நமக்கு அறிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அந்த வகையில் நீங்கள் இங்கு எமக்கு பாரிய உதவி செய்துள்ளீர்கள். அதற்கு நன்றி. பயப்படவேண்டாம் சுதந்திர தினம் அமாவாசை தீபாவளி பொங்கல் என வைத்து மோகன் அண்ணாவிடம் சொல்லி தண்டனையை குறைக்கச்சொல்றன். அப்ப நீங்கள் எழுதலாம்தானே - sethu - 08-21-2003 தாத்தா என்ன உங்காவது புது வீட்டுவேலை தொடங்கியாச்சோ கஸ்ரப்பட்டு உளைக்காதையுங்கோ - kuruvikal - 08-21-2003 தாத்தா நீங்கள் கேட்பது பிரியாத இடம் தானே...? 7 என்ன 10ம் கடந்தும் நீங்கள் உங்கள் கருத்தை சுதந்திரமாக நாகரிகமாக கலப்படங்கள் அற்று உண்மைகள் மறைக்காது வெளியிட தடையேதும் இருக்காது என்றுதான் எண்ணுகிறோம்....அது மோகன் அண்ணாவின் சிந்தனையையும் பொறுத்ததே....! கடந்த காலங்களில் உங்கள் ஆழ் மனதில் இருந்த வந்த பல எண்ணங்கள் தப்பான முடிவுகள் அல்லது தப்பான சிந்தனைகளிலிருந்தும் அல்லது தப்பான மூலங்களைக் கொண்ட ஆய்வுகளின் மூலமும் வந்திருக்கின்றன என்பதும் உண்மை....சில யதார்த்தமான எண்ணக்கருக்களும் தங்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன என்பதும் உண்மை....! அதற்கும் மேலாக சில தடவைகள் தவிர பெரும்பாலான தடவைகளில் ஏனைய கள அங்கத்தவர்களுடன் நாகரிகமாக கருத்தாடியுள்ளீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற விடயம்....குருவிகளைப் பொறுத்தவரை இக்களத்தில் எழுதத் தூண்டியது ஜிமதிவதனன் என்பவரின் அரசியல் கருத்துக்கள் தான் என்றால் அதுதான் உண்மை.....! அந்த வகையில் குருவிகளை இக்களத்திற்கு அழைத்து வந்தவர்களில் தாத்தாவும் ஒருவர் என்பதால் தாத்தாவின் வெளியேற்றம் என்பதற்கு எதிராகவே எமது குரல் என்றும் ஒலிக்கும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sethu - 08-21-2003 தாத்தா நீங்கள் போறது யாழுக்கு கோடி புண்ணியம் - sethu - 08-21-2003 தாத்தா போய் சம்மந்தன் எண்டு வரலாம் வந்தால் நல்லதுதானே, - kuruvikal - 08-21-2003 தாத்தா சம்பந்தனாக (தாத்தா உங்கட உண்மையான பெயர் அதுதானே....!) முதல் ஜிமதிவதனன் பிறகு மதிவதனன் எண்டு வந்திட்டார்...எப்படி வந்தாலும் எழுத்துக் காட்டிக் கொடுத்திடுமே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Guest - 08-21-2003 மதி ஒருமாதிரி சனத்தை குழப்பியாச்சு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-21-2003 kuruvikal Wrote:தாத்தா நீங்கள் கேட்பது பிரியாத இடம் தானே...? 7 என்ன 10ம் கடந்தும் நீங்கள் உங்கள் கருத்தை சுதந்திரமாக நாகரிகமாக கலப்படங்கள் அற்று உண்மைகள் மறைக்காது வெளியிட தடையேதும் இருக்காது என்றுதான் எண்ணுகிறோம்....அது மோகன் அண்ணாவின் சிந்தனையையும் பொறுத்ததே....!நன்றி குருவிகள் உங்களை து}ண்டியது நானென்கிறீர்கள் என்னை அரசியலுக்குத் துர்ண்டியது விபு களின் இரண்டு முக அரசியல்.. தப்பானமுடிவு தப்பான மூலம் தப்பான ஆய்வு என்று சொல்லியிருக்கிறீர்கள்.. நான் எடுத்து காரசாரமாக எழுதியவை அத்தனையும் இவர்கள் கூறிய முன்னுக்குப்பின் முரணாண பேச்சு கட்டுரை ஆய்வுகளை வைத்தே.. சில விடயங்கள் பலருக்கும் புரியாது 72-75 காலப்பகுதி தற்போதும் பசுமையாகப் பதிந்திருக்கிறது.. அதனாலதான் மீண்டும் சொல்கிறேபான் பாதியில் பள்ளிக்கூடம்விட்டு மூண்டுசத வடை பிளெய்ன் ரீ பிறிஸ்ரல் வெத்தலைக்காக காசுவேண்டிக் கல்லுஎறிந்தவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.. மேலும் 10 எச்சரிக்கையின் பின் வெளியேற்றப்படுவர் என விதிமுறையிருக்கும்போது 5 உடன் திரு மோகன் என்னை வெளியேற்றலாம் (ஏற்கெனவே தளத்துக்கு வரமுடியாதபடி தடைசெய்தும் வந்ததற்கான காரணம்)ஆனால் விதிமுறை (10 எச்சரிக்கை)கடந்த பின் இங்கு எழுத என்னால் முடியாது. விதிமுறையை மீறி சம்பந்தப்பட்ட கருத்தை குறிப்பிட்டு எழுதிய பதில்கருத்தை நீக்கவும் முதல்கருத்தை அப்படியே விடவும் திரு மோகனுக்கு உரிமையிருக்கலாம். அதை சுட்டிக்காட்ட 4 எச்சரிக்கைகூடத் தரலாம் அதற்கான உரிமை அவரிடமிருக்கலாம் அது அவர் பிரச்சனை.. போராட்டம் கொச்சை என்ற பதத்தினுள செய்யப்பட்ட தரங்கெட்ட செயல்களைப் பார்த்தும்.. இதுவரை கட்டுப்பாட்டுடன் எழுதவைத்த ஆண்டவனுக்கு நன்றிகூயிறி தயவுசெய்து எனக்காக குரல்கொடுக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி குருவிகாள்.. - Mathivathanan - 08-21-2003 சுரதா/suratha Wrote:மதி ஒருமாதிரி சனத்தை குழப்பியாச்சு<!--emo&சுரதா/suratha குழப்புவது நானல்ல அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. உங்கள் ஆள்மனதைத் தெட்டுச் சொல்லுங்கள 87 ஆம் ஆண்டு சமஸ்டியமைப்பு இடைக்காலநிர்வாகம் கொடுக்கப்படவில்லையென.. பணயம் வைத்துப் பேரம் பேசியதும் அவர்களை பலிகொடுத்ததும் உண்மைக்கதை.. இருந்ததை அழித்துவிட்டு அழிந்ததைக்காட்டி வயிறு வளர்க்கும் பிச்சைக்காரன்.. பேச்சு எனக்குச் சரிப்பட்டுவராது.. நன்றி சுரதா.. - Mathivathanan - 08-21-2003 sethu Wrote:தாத்தா நீங்கள் போறது யாழுக்கு கோடி புண்ணியம்சொல்லுற பொய்யை சுட்டிக்காட்டுறவன் இல்லாமல்ப்போனால் பொய்சொல்ல வசதியாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarlmohan - 08-21-2003 மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது. இதற்குள் ஏன் அரசியலுக்கு வந்தது என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். அரசியலில் நீங்கள் இன்னமும் நிறையப் படிக்க வேண்டியுள்ளது. குப்பை அரசியலை விட்டு விட்டு யதார்த்தமர்ன நிலைமைகளைப் படியுங்கள். அதை விடுத்து நீங்கள் எதிர்க் கருத்துக்களை வைத்ததாகவும், அதை நான் தணிக்கை செய்ததாகவும் அனுதாப வாக்கு (களத்தில் இச் சொல் அதிகம் நீங்களே பாவித்துள்ளீர்கள்) தேட முனைய வேண்டாம். மிக மிக பொய்யான, கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய கருத்துக்களை மீளவும் பார்த்தீர்கள் என்றால் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய எத்தனை கருத்துக்கள் இங்கு தணிக்கை செய்யாது விடப்பட்டுள்ளன என்று புரியும். எத்தனையோ கருத்துக்களை திசை திருப்பிய பெருமையும் உங்களையே சேரும். எழுதும் கருத்துக்கள் பலவற்றில் அரசியல் என்று கொச்சைப்படுத்தல்களைப் புகுத்தி கருத்துக்களைத் திசை திருப்பியிருக்கின்றீர்கள். எந்தக் கருத்தை எடுத்தாலும் அதற்குள் போரட்டத்தை இணைத்து அதை கொச்சைப்படுத்திய பெருமை உங்களுக்கு சாரும் என்பதை உங்கள் கருத்துக்களை மீள பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்து நீங்கள் "பிரியாவிடை" தொடங்கி அதற்குள் 77ம் ஆண்டுக் கதைகள் எண்டு நீள்கின்றது. நீங்கள் இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாரிடமே சலுகைபெறுவதற்காகவே இந்த "சலாம்" போடுதல் நடக்கின்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன். ஒருவர் செய்த நல்லவற்றையும், தவறுகளையும் சுட்டிக் காட்டலாம். ஆனால் நீங்கள் எப்போதோ, எங்கொ, எதற்காகவே நடந்தவற்றை அரைத்த மாவை அரைப்பது என்பது போல திரும்பத்திரும்ப ஒரு நான்கு வரிகளை மட்டும் சுத்தி, சுழட்டி எழுதிவிட்டு எதிர்க்கருத்து என்கின்றீர்கள். மற்றும் அன்று நடைபெற்றவை அந்தந்த காலங்களில் தேவையானவையாக இருந்தவைதான். உங்கள் கருத்துக்களில் புதிதாக எதுவும் இருந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அரசியல் அறிவு என்பது கிடையாது. ஒரு விடயத்தை ஆழ நோக்கும் பக்குவம் கிடையாது. சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops: - kuruvikal - 08-21-2003 தாத்தா உங்களின் விரிவான பதிலுக்கு நன்றிகள்...! ஆனால் ஒரு விடயம் சர்வதேச அரசியலிலும் சரி ஈழத்து அரசியல் களத்திலும் சரி அரசியல் சாணக்கியம் என்பதை எல்லோருக்கும் எடுத்து விளக்க முடியாது....ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஈழத்து விடுதலை வீரர்களால் தான் ஈழத்தமிழருக்கு நிலையான அரசியல் சமூக விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்...அதற்கான மன உறுதியும் கொள்கைப்பிடிப்பும் அவர்களிடம் காலத்துக்கு காலம் வெளிப்பட்டுள்ளன....படித்தவர்கள் பலர் செய்யாததைத்தான் கிராமத்தான் காமராஜர் தேவகெளடா பிரேமதாச என்று பலரும் கீழத்தேய அரசியலில் சாதித்துள்ளனர் என்பது அரசியல் வரலாற்று உண்மை....அந்த வகையில் எமது இளைஞர்களும் தமது இலட்சியத்தை சாதிப்பர் என்றுதான் தமிழ் மக்கள் தங்கள் புதல்வர்களின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர்....அதை அவர்கள் வீணடிக்க மாட்டார்கள் என்றுதான் நாம் நம்புகின்றோம்...! உங்கள் கருத்துக்களால் நீங்கள் வெறும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது ஒருவரின் தவறைத்திருத்த உதவியளிக்க முடியாது....! அது வெறுமனவே காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே வழி செய்யும்...அதுதான் நீங்கள் இக்களத்தில் செய்த மாதவறு...! அதை நீங்கள் ஒரு படித்த ஆரோக்கியமான அரசியல் விமர்சகனாக செய்ததாகத் தெரியவில்லை...வெறும் காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே செய்ததாகப்படுகிறது...அதுதான் உங்கள் விமர்சங்களின் பலவீனமும் கூட...! எதிர்காலத்தில் இதை தவிர்ப்பீர்களா....?????! :roll: அரசியலில் தவறு என்பது எங்கும் நடக்கத்தான் செய்கிறது....ஆனால் தவறின் தன்மை தேவை அதனால் வரும் எதிர்கால அரசியல் வெற்றி ஸ்திரம் என்பனவற்றைக் கவனித்தால் தவறுகளும் தந்திரங்களாகும்....! எங்கள் குரல் எங்கும் நியாயத்தின் பக்கம் இருக்கும்...அதை யாரும் தடுக்கவோ கேட்டுப் பெறவோ முடியாது ஏனெனில் அவை நிலயானவை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: நன்றி குருவிகள்....! - Mathivathanan - 08-21-2003 ஐயா குருவியாரே காழ்ப்புணர்ச்சி காழ்பபுணர்சியென்று தப்பித்துக்hகள்ளாதீர்.. இருந்த தமிழரில் மூன்றிலிரண்டுபங்குகூடு இல்லை.. பேரினவாதம் பேரினவாதம் என்று சொல்லுகின்றீர்களே தற்போதுதமிழ்ப்பகுதியிலுள்ள தமிழரைவிட சிங்களப்பகுதியில் உள்ள தமிழர்கள் தொகை கூட அதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தணிக்கை செய்யுமளவிற்கு தரங்கெட்டுப்போன அரசியல் சுரண்டுமட்டும் சுரண்டி தந்தவர்களை து}ற்நும் அரசியல் ஐந்தறிவு நாய்கூடச் செய்யாது.. அவர்கள் அப்படிச்செய்தார்கள் இப்படிச்செய்தார்கள் என்றுகூற்றம்சொல்லி - Paranee - 08-21-2003 போச்சுடா பிரியாவிடை என்று தொடங்கி இங்கேயும் அரசியலா தாத்தா உங்கள் பெயர் விலாசம் எல்லாவற்றையும் தாருங்கள். எனது சொந்த செலவில் உங்களை தாயகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்து அங்குள்ள தற்போதைய நிலைமைகள் மக்களின் உணர்வுகள் என்பனவற்றை படிப்பதற்கு அனுப்புகின்றேன். அதன்பின்பாவது நீங்கள் சிறிதாவது இந்த குழப்பத்தை விலக்குவீங்கள். - Mathivathanan - 08-21-2003 Mathivathanan Wrote:ஐயா குருவியாரே காழ்ப்புணர்ச்சி காழ்பபுணர்சியென்று தப்பித்துக்hகள்ளாதீர்.. இருந்த தமிழரில் மூன்றிலிரண்டுபங்குகூடு இல்லை.. பேரினவாதம் பேரினவாதம் என்று சொல்லுகின்றீர்களே தற்போதுதமிழ்ப்பகுதியிலுள்ள தமிழரைவிட சிங்களப்பகுதியில் உள்ள தமிழர்கள் தொகை கூட அதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தணிக்கை செய்யுமளவிற்கு தரங்கெட்டுப்போன அரசியல் சுரண்டுமட்டும் சுரண்டி தந்தவர்களை து}ற்நும் அரசியல் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.. ஐந்தறிவு நாய்கூடச் செய்யாது.. அவர்கள் அப்படிச்செய்தார்கள் இப்படிச்செய்தார்கள் என்றுகூற்றம்சொல்லி - Mathivathanan - 08-21-2003 Karavai Paranee Wrote:போச்சுடாஐயா பரணி.. போய் ஒருமாதம் தங்கியிருந்த வந்த முன்னாள் ஆதரவாளர்களை சந்தித்தபின்னர்தான் எழுதுகிளேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|